அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/4/15

pro choice versus pro life மற்றும் இங்கிலாந்து பள்ளி கல்விமுறை

pro choice versus pro life இங்கிலாந்து பள்ளி கல்விமுறை ...

வன்புணர்வு   ,கர்ப்பம்.கருகலைப்பு........80-90 களில் பள்ளிகூடத்தில் படிக்கும்போது நாமெல்லாம் இதை பற்றி பேசக்கூட தயங்குவோம் !! அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் 
15 வயது மாணவர்களின் பார்வையில் "!!

இங்குள்ள பள்ளிகள் மூன்று வகை COFE Church of England பள்ளிகள் ,கவுன்சில் பள்ளிகள் மற்றும் கத்தோலிக்க பள்ளிகள் 

மகள் படிப்பது Church of England பள்ளி இதில் மட்டுமே கிறிஸ்தவ சீக்கிய இஸ்லாமிய ஆகிய மும்மதங்களை பற்றி சொல்லித்தருவாங்க ..அட்மிஷன் வேண்டுமென்றால் ..ஆலயம் ,கோவில் மசூதி இவற்றுக்கு ரெகுலராக செல்பவர்கள் தங்கள் ஆயர் ,குருக்கள் ,இமாம் இவர்களிடமிருந்து கடிதம் பெற்று வர வேண்டும் .இவர்களுக்கே முன்னுரிமை ..ஆனால் இவ்வருடத்திலிருந்து இந்த முறை சற்று மாறியுள்ளது ..ஸ்பெஷல் நீட்ஸ் பிள்ளைகளுக்கு முதல் 60 இடங்கள் மற்ற இடங்கள் நான் சொன்ன ஹிந்து கிறிஸ்தவ இஸ்லாமிய பிள்ளைகளுக்கு .

கத்தொலிக்க பள்ளிக்கூடங்களில் கிறிஸ்தவம் மட்டும் அதுவும் ரோமன் கத்தொலிக்க வழிமுறைகள் மட்டும் கற்பிக்கப்படும் ,
கவுன்சில் பள்ளிகளில் எதுவுமே இல்லை .பெரும்பாலான பிரிட்டிஷார் கவுன்சில் பள்ளிகளையே  விரும்புகிறார்கள் காரணம் ..எவ்வித மத நம்பிக்கையையும் பிரதிபலிக்காத கல்விமுறை தான் தங்கள் பிள்ளைகளுக்கு உகந்தது என்பதால் ..

இங்கு இப்போது என் மகள் படிக்கும் cofe பள்ளியில்  சர்ச்சைக்குரிய பாடம் என்ற வரைமுறையில் வரும் சப்ஜெக்ட் சொல்லித்தரும் முன்பே பெற்றோருக்கு ஒரு கடிதமூலம் தெரிவித்து விடுவார்கள் ..
உதாரணத்துக்கு பாலியல் கல்வி பற்றி ஏழாம் வகுப்பிலேயே ஹையர் செகண்டரி போனவுடன் முதல் வகுப்பே  puberty ,preventing unwanted pregnancy ,preventing measures ..இதில் பாதுகாப்புக்கான பொருட்கள் மருந்துகள் பற்றிய விரிவான விளக்கங்களும் உண்டு ..
மேலும் எந்த டாபிக்காக இருந்தாலும் அது சம்பந்தமாக விரிவா விளக்கபடுத்தி அது குறித்த ஒரு திரைப்படத்தையும் சிடியில் வகுப்பில் காட்டுவார்கள் ..
வேர்ல்ட் war பற்றிய படங்கள் ,jewish camp பற்றிய படங்கள் பார்த்து மகள் மிகவும் வருத்தமடைந்தாள் .(boy in striped  pyjamas )மற்றும் my sister's keeper 
 மூத்த குழந்தைய காப்பாற்றவென ivf முறையில் இன்னொரு குழந்தை பெறும் பெற்றோர் .சகோதரிக்கு கிட்னி தர விரும்பாத அந்த குழந்தை  என பல வித்தியாசமான டாபிக்ஸ் ! 

நமது விருப்பமிலாமல்  எதையும் சொல்லிதர மாட்டார்கள் மகள் பள்ளியில் .
இங்கே அனைத்து மதங்களும் பிள்ளைகளுக்கு தெரிஞ்சாதான் நல்லது போன மாதம் மசூதி இன்று சீக்கிய கோவில் போனாங்க அடுத்த வாரம் ஹிஸ்டோரிகல் lincoln சர்ச் செல்கிறார்கள்  .சகிப்புத்தனமை மற்றும் அனைத்து நம்பிக்கைகளையும் including atheism,ஓரின சேர்க்கை தற்பாலினம் அனைத்து கொள்கைகளை பின்பற்றுவோரையும்  மதிக்கணும் என்று கற்பிக்கிறார்கள்.

pro choice versus pro life



pro choice...பெண்ணுக்கு தனது கருவை கலைக்க அல்லது வளர்க்க அல்லது பெற்று அடாப்ஷனுக்கு கொடுக்க முடிவெடுக்கும் உரிமையுண்டு 

 pro life..கருக்கலைப்பே தவறு அது பாவம் ஒரு நாள் கருவாக இருப்பினும் அது உயிரே ..



இது பத்தாம் வகுப்பு மாணவர்களின் RE ..பாடத்தில் ஒரு பகுதி  .மாணவர்கள் அவர்கள் கருத்தை REASONS TO BE  PRO CHOICE அல்லது PRO  LIFE  என்பதனை பிரதிபலிக்கும் வண்ணம் படம் வரைந்து ஒரு பக்க அளவில் போஸ்டரும் கட்டுரையும் எழுத வேண்டும் ..அதற்க்கு PRO CHOICE சார்பாக மகள் வரைந்த படம் .அந்த இரண்டு க்ரூப்பை சேர்ந்தவங்க வந்து பிள்ளைங்க முன்னாடி பேசினாங்களாம் .
இதை பற்றிய விரிவான தகவல்கள் பல மாணவர்களின் சாட்டையடி கருத்துக்கள் படங்கள் அனைத்தும் பள்ளியில் இருந்தது ..

வன்புணர்வுகுள்ளான ஒரு மாணவி கன்சீவ் ஆகிட்டா என்ன முடிவை எடுக்கணும் என்பதை மற்றும் எதிர்பாரா சூழ்நிலையில் உருவான கருவை சுமப்பதா இல்லை அழிப்பதா என்பதை விளக்கும் ஒரு போஸ்டர்  வரைந்து ..அதை பற்றிய சில கருத்துக்களை எழுத வேண்டும் .
பல மாணவர்களின் சாட்டையடி கருத்துக்கள் அங்கிருந்தன ..
இது மகள் வரைந்த போஸ்டர் ...........



அங்குள்ள பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த போஸ்டர் ஓவியங்கள் மற்றும் கட்டுரைகளை படம் எடுக்க இயலவில்லை .உள்ளே நுழையுமுன் கைப்பேசியை off செய்து விட வேண்டும் ..
பிள்ளைகளின் பெயர்களும் கட்டுரைகளில் மறைக்கபட்டிருந்தன ..

மகள் மற்றும் 80% பிள்ளைகள் pro choice சார்பாகவே தங்கள் கருத்தை தெரிவித்திருந்தார்கள் கட்டுரை வாயிலாக .

ஆசிரியர்கொடுத்த கேள்வி  .வன்புணர்வால் ஒரு பெண் கர்ப்பமடைந்தால் அந்த குழந்தையை என்ன செய்வீர்கள் 
.இளங்கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள் !

ஒவ்வொரு பதிலும் பளார் பளார் ரகம் தான் ..

ஒரு பதில் ...வன்புணர்வு நிகழ வாய்ப்பேயில்லை ஏனென்றால் நான் எப்பொழுதும் அவதானமுடன் இருப்பேன் என்னை மீறி நடந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று அதற்க்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் ..

2, தன்னை விட வலிமை குறைந்த ஒரு பெண்ணை பலவந்தபடுத்தி இச்சையை தீர்க்கும் மிருகத்தின் கருவை நான் எக்காலத்திலும் சுமக்க மாட்டேன் உடனே கருகலைப்புதான் .


3, நான் எதற்கு எவனோ ஒருவனது அசிங்கத்தை சுமக்க வேண்டும் எனது வாழ்க்கைக்கு அந்த கரு ஒரு முட்டுக்கட்டையாக இருக்ககூடுமாயின் அது எனக்கு தேவையில்லை .
4,அந்த குழந்தையை பெற்றால்  ஒவ்வொருநாளும் எனக்கு நடந்த கொடுமையை அது நினைவூட்டும் அதை பார்த்து மனம் வெம்ப வேண்டுமா ? 

5,ஒரு பதில் ..கருவை கலைப்பேன் அல்லது கலைக்க முடியாத சூழ்நிலை என்றால் பெற்று உடனே பிள்ளை பேறு இல்லாத ஒரு தம்பதியருக்கு அதை கொடுத்து விடுவேன் !.

6,20 % .பிள்ளைகள் பரவாயில்லை அதுவும் உயிர்தானே பெற்று வளர்ப்பேன் என்று சொல்லியிருந்தனர் .(இந்த பதிலை கூறியோர் ஆண் பிள்ளைகளாம் ) :)


7, என் உடல் என் உரிமை எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை pro choice எனக்குண்டு .

8 ,ஒரு பதில் எனை நிலைகுலைய வைத்தது ..

வன்புணர்வு என்பது இல்லாத பட்சத்திலும் எதிர்பாராத உயிருக்கு பங்கம் நேரிடும் சூழ்நிலையில் கருக்கலைப்பிற்கு நான் யெஸ் என்றே சொல்வேன் ..
முதல் காரணம் ..அயர்லாந்து நாட்டில் சவீதா மருத்துவர் 
http://www.bbc.co.uk/news/uk-northern-ireland-20321741
இன்றும் உயிரோடிருந்திருப்பார் அன்று அவருக்கு கருக்கலைப்பு சரியான நேரத்தில் செய்யப்பட்டிருந்தால் ..
 பல வருடங்கள் முன் (ectopic pregnancy  ) கருக்குழாயில் கர்ப்பமடைந்து அவரது உயிர் போகும் நேரத்தில் அந்த கருவினை கலைக்க ஒப்புதல் அளித்திராவிடில் இன்று உங்கள் முன் இந்த கட்டுரையும் நானும் இருந்திருக்க மாட்டேன் ..ஆகவே எந்த முடிவாக இருப்பினும் அந்த முடிவை எடுக்கும் உரிமையை பாதிக்கப்பட்டு பெண்களுக்கு தர வேண்டும் ....
...

இந்த pro life குழுக்கள் பைபிள் வசனம் ஒன்றை காட்டியுள்ளனர் ..எப்படியாவது அவர்களது கொள்கையை ஏற்க வைக்க !!
//"Before I formed you in the womb I knew you, And before you were born I consecrated you; //
அதற்க்கு ஒரு மாணவி சொன்னாளாம் .. வன்புணர்வு போன்ற கீழ்தர செயல்கள இறைவன் விரும்ப மாட்டார் ...

pro choice க்ரூப் Meant to be ,in to my arms , போன்ற படங்களை போட்டு காட்டியுள்ளனர் மேலும் இவர்கள் ஒரு பெண் கருகலைப்புக்கு செல்வதை அறிந்தால் அந்த ஆஸ்பத்திரி அறையின் முன் சென்று ஷேம் ஆன் யூ  என்று திட்டுவார்களாம் ..

=====================================================================================
ஏற்கனவே ஏழாம் வகுப்பிலேயே அனைத்து மாணவ மாணவியருக்கும் ரிலேஷன்ஷிப் குடும்ப வாழ்க்கை பாலியல் கல்வி என அனைத்தும் சொல்லி கொடுத்து விட்டார்கள் .

இது பற்றி எழுதும்போது கீதாவின் பதிவு நினைவுக்கு வந்தது இங்கே ..

ஆனால் அந்த செயற்கை பொம்மை முறை இங்கிலாந்தில் சிலரில் மட்டும் பாசிடிவ் விளைவு ஏற்படுத்தியது .பல டீனேஜ் மாணவிகள் இந்த பொம்மை பயன்பாட்டால் இன்னுமதிகமாக உந்தப்பட்டு இளவயதில் தாய்மையடைந்ததால் பல பள்ளிகளில் இம்முறை நிறுத்தப்பட்டது ..
பல பெற்றோர் வேண்டாம் பாலியல் கல்வி என போர்க்கொடி தூக்கினர் ..
பதின்ம வயது கர்ப்பம் /டீனேஜ் ப்ரெக்நன்சி விஷயத்தில் உலகில் இங்கிலாந்தே இரண்டாமிடத்தில் இருக்கு :( இதற்கு காரணம் சிங்கிள் மதர்சுக்கு அரசாங்கம் தரும் பல சலுகைகளே ..எத்தனை பிள்ளை பிறந்தாலும் அரசு தரும் பெனிபிட்ஸ் இலவசங்கள் சலுகைகள் பலரை தறிகெட்டு ஓட வைக்கின்றன ....
என்னை பொறுத்தவரை பிள்ளைகள் அறிய வேண்டியது சாதக பாதக உண்மை நிலைகளை அன்றி மொத்தமாக பாலியல் கல்வியே வேண்டாம் என்ற தடை அல்ல .

இங்குள்ள சில இந்திய பெற்றோர் சின்ன வயதிலேயே எவ்வித பாலியல் கல்வியும் வேண்டாமென பள்ளியில் கூறுகிறார்கள்.. சிலர் பயந்து இங்கிருந்தா கெட்டு போயிடுவாங்கன்னு நம்ம நாட்டை பார்த்து ஓடிவிட்டார்கள் :) அங்கே சின்னத்திரையும் பெரியதிரையும் இதைவிட விளக்கமா சொல்லிதருகிறார்களே அதற்கென்ன செய்வார்கள் ?
                                                        
                                                        ********************

மன்னிக்கவும் பதிவு கொஞ்சம் நீஈண்டு விட்டது :)




13 comments:

 1. ஆஹா இப்போதைய இளைய தலைமுறையினர் எவ்வளவு சார்ப்பாக இருக்கினம் என்பது முழுப் பதிவும் படித்து தெரிந்துகொண்டேன். இங்கத்தைய கல்விமுறை, யாரிலும் பிந்தங்கியிருக்காத, தன்னம்பிக்கையை, சுயமாக முடிவெடுக்கும் உறுதியைக் கற்பிக்கிறது.... இன்னமும் எனக்கு சுயமாக முடிவெடுக்கப் பயப்படுவேன், ஆனால் பிள்ளைகள் அப்படியில்லை, டக்கென தெளிவாக எந்த ஒரு விசயத்துக்கும் முடிவெடுக்கின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிரா !! இன்றைய இளைய சமுதாயம் மிக துடிப்புடன் அவர்கள் கொள்கையில் ஸ்ட்ராங்கா இருக்காங்க ..அவர்களை அழகா வழி காட்டி விட்டா போதும் .

   Delete
 2. இங்கே பல பிள்ளைகள் சொல்லியிருப்பதுதான் சரி என நானும் சொல்வேன், குழந்தை வயதில் கன்சீவாகிவிட்ட குற்றத்திற்காக, அதை நீடித்தால் வாழ்க்கை பாழ். என்ன செய்வது ஏதோ சந்தர்ப்பம் சூழ் நிலையால் அப்படி ஆகிவிட்டது, அதைவிடுத்து படிப்பைத் தொடர்வதே வருங்காலத்துக்கு உகந்தது. கஸ்டப்பட்டுப் பெற்றெடுத்து... அக்குழந்தையையும் நடுத்தெருவில் விட்டால் அக் குழந்தையின் கதி.... அது கேட்கும் ஒரு காலத்தில் ஏனம்மா என்னைப் பெற்றாய் என...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் உண்மைதான் பதின்ம வயதினர் அனைவருமே குழந்தைகள் அவர்களுக்கு எதற்கு குழந்தை.
   வேண்டுமென்று யாரும் தவறிழைப்பதில்லை எதோ கேட்ட நேரம் சூழ்நிலை அதிலிருந்து எழும்பி வர துனையாயிருக்கனுமே தவிர மீண்டும் குழியில் தள்ளக்கூடாது ...

   Delete
 3. இங்குள்ள கல்விமுறை ரெம்ப வித்தியாசமானது. இக்கல்வியறிவு கண்டிப்பா தேவை. இங்கு எல்லாம் வெளிப்படையாக பேசமுடிகிறது. பாடசாலையில் இங்குள்ள வாழ்க்கை முறைக்கு ஏற்ப சரியான முறையில் சொல்லிக்கொடுப்பதால், இதன் சாதக,பாதகங்கள் தெரியவந்து மெச்சூர்டா சிந்திக்கிறார்கள்.
  அவர்களின் பதில்களிலிருந்து அறிய முடியுது.அத்தனைக்கும் forward ஆ யோசிக்கிறார்கள்.
  நல்லதொரு விரிவான பதிவு. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..நீங்களும் ஜெர்மன் கல்வி முறை பற்றி எழுதலாமே ...
   நான் 97 டீச்சர்ஸ் training பிரக்டிசுக்கு மூன்று மாதம் ஒரு பள்ளியில் வேலை செய்தேன் ..அங்குள்ள 11 ஆம் வகுப்பு ஆசிரியர் என்னை பயாலஜி பாடத்தில் உள்ள hiv சப்ஜக்ட் மாணவிகளுக்கு எடுக்க சொன்னார் ..அந்த அளவில் இருக்கு இத்தகைய கல்வி நம் நாட்டில் .இங்கே எல்லாம் forward

   Delete
 4. வன்புணர்வு என்பதே விபத்து! விபத்து ஏற்பட்டால் அதற்குத் தகுந்த வைத்தியம் பார்த்துக் காயத்தை மாற்றவேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டும். அதிலும் படிக்கும் பராயம் சாதிக்க வேண்டியவை உலகில் எவ்வளவோ இருக்கின்றன அவர்களுக்கு!.

  நல்ல பதிவும் பகிர்வும் அஞ்சு!
  அருமையாகப் படம் வரைந்த உங்கள் செல்ல மகளுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி அதேதான் ..முகபுதகத்தில் ஒரே ஒருவர் //முளையிலே கிள்ளி எரிக்கணும்இத்தகைய உணர்வுகள்.// என்று கூறியிருந்தார் ..அதற்கு பதில் நான் கொடுத்தேன் //யாரோ ஒரு கொடூரனால் பாதிக்கப்பட்ட பெண் அந்த குழந்தையை வளர்க்க வேண்டுமா ..அதை விட மன உளைச்சல் வேறு எதுவுமே வேண்டாம் அப்பெண்ணுக்கு ...பாதிக்கப்பட்ட பெண் தனது வாழ்க்கையை தீர்மானிக்க உரிமையுண்டு என்பதே PRO CHOICE இனரின் வாதம் .//என்றேன் ..அவர் pro life சபோர்ட்டர் என்று நினைக்கிறேன்

   Delete
 5. இன்றைய இளைய தலைமுறைக்கு சரியான வழிகாட்டுதல் இருந்தால் போதும். இந்தியாவுக்கு ஓடும் பெற்றோர்களுக்கு ஒரே நம்பிக்கை அவர்களின் எல்டர்ஸ் இந்தக் குழந்தைகளுக்கு நல்ல வழி சொல்லிக் கொடுப்பார்கள், நம்மால் இங்கு இருந்து கொண்டு முடியாது என்று நினைப்பார்களாக இருக்கும். இந்தியாவிலும் கூட்டுக் குடும்ப முறைகள் மறைந்து வரும் நிலையில் எங்கு இருந்தால் என்ன, நல்ல வழியை நாமே காட்டினால் போதும் என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 6. ஏஞ்சலின் சகோ/ஏஞ்சலின் அருமையான பதிவு! நீண்ட பதிவா?!! ஹஹஹ்ஹ்ஹ் எங்களை விடவா?!!! ஜோக்ஸ் அபார்ட்...

  ப்ரோ சாய்ஸ் தான்...சரி..அதுவும் அந்தக் குழந்தைகள் சொல்லி இருக்கும் கருத்துகள் அனைத்தும் அடி பின்னி எடுத்திருக்கின்றார்கள் என்பது மட்டுமல்ல வாழ்க்கையை நன்றாகத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள் இந்த வயதிலும் என்பது மகிழ்வாகவும் வியப்பாகவும் இருக்கின்றது. இந்த மாதிரியான கருத்துகளை நம்மூரில் இதே வ்யது குழந்தைகளுடம் எதிர்பார்க்க முடியுமா என்ற எண்ணமும் கூடவே எழுந்தது. ஆனால் வேண்டும் இங்கும் இது வேண்டும்...குழந்தைகள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் புரிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதும், அவர்கள் தெளிவாக ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கும் வர வேண்டும் அதாவது வன்முறையால் விளையும் நிகழ்விற்கன்றி தனது வாழ்க்கையைத் தெளிவாக முடிவெடுக்கும் திறனும் வளர்க்கப்பட வேண்டும் பெண் குழந்தைகளுக்கு. இங்கும் இது போன்று வந்தால் மிக நன்றாக இருக்கும்.

  உங்கள் கருத்திற்கே அதான் அந்த இறுதி வரிகள்....பாலின கல்வி ப்ளஸ் அண்ட் மைனஸ் கற்பிக்கப்பட வேண்டும் ...இங்குள்ள சில இந்திய பெற்றோர் சின்ன வயதிலேயே எவ்வித பாலியல் கல்வியும் வேண்டாமென பள்ளியில் கூறுகிறார்கள்.. சிலர் பயந்து இங்கிருந்தா கெட்டு போயிடுவாங்கன்னு நம்ம நாட்டை பார்த்து ஓடிவிட்டார்கள் :) அங்கே சின்னத்திரையும் பெரியதிரையும் இதைவிட விளக்கமா சொல்லிதருகிறார்களே அதற்கென்ன செய்வார்கள் ?// ரொம்ப சரி.....

  அருமையான பகிர்வு....

  ReplyDelete
 7. இத்தகைய கல்வி முறை இங்கு இல்லை என்றாலும் ...பசங்களுக்கு basic sexual education கண்டிப்பா கொடுக்கணும் ....

  அங்க பசங்க ரொம்ப மெச்சுர்டா சிந்திக்கிறாங்க...நல்ல வழிகாட்டல் ..

  ReplyDelete
 8. நல்லதொரு கல்விமுறை! இந்தியாவில் அதுவும் தமிழகத்திற்கு இந்த கல்விமுறை இப்போது தேவை என்றே தோன்றுகிறது!

  ReplyDelete
 9. விவரங்களை அறியத் தந்த நல்லதொரு பகிர்வு...

  ReplyDelete