அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/19/15

Loud Speaker ..30 ,பிரதமர் மோடிக்கு கடிதம்


பிரதமர் மோடிக்கு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாங்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பள்ளி மாணவிகள் எழுதிய கடிதம் .
இது 25 மாநிலங்களில் உள்ள மாணவிகளின் கடிதத்தில் இருந்த ஒவ்வொரு வரிகள் அனைத்தையும் சேர்த்து ஒருங்கிணைத்து எழுதப்பட்ட கடிதம் .
மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு ,
==================================

நான் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி .எனக்கு எழுத படிக்க இயலும் ..கிராமபுறங்களில் வசிக்கும் என்னைபோன்றவர்களுக்கு அரசு பள்ளிகள் ஒரு சிறந்த வரப்ரசாதம் என்றால் மிகையில்லை ..
எங்கள் பள்ளிக்கு செல்ல நான் பேருந்தில் பயணிக்க வேண்டும் .
நான் அதிகாலை விழித்தெழுந்து 6 மணி முதல் 7 மணி வரை நடந்து அருகிலுள்ள ! பேருந்து நிலையத்தை சென்றடைவேன் .
எனது பள்ளி மிக சிறந்த பள்ளி என்று என்னால் பெருமை பாராட்ட முடியாது ..
எனது பள்ளி ஆசிரியர்கள் பலர் பெரும்பாலும் பள்ளிக்கு வருவதேயில்லை !
எங்கள் பள்ளி எப்பவும் சுத்தமாக இருந்ததில்லை ! ஆதலால் நாங்களே குப்பை அழுக்குகளை துப்புரவுபடுத்தி விடுகிறோம் ..நீங்கள் கிளீன் இந்தியா திட்டத்தை அறிமுகபடுத்தி எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறீர்கள் ..ஆனால் நாங்களே எங்கள் வகுப்பறையை துப்புரவு செய்வதால் பெரும்பாலான நேரம் அதிலேயே கழிந்து விடுகிறது ..மேலும் இதனால் அதிக நேரம் படிக்க முடியவில்லை .என் சகோதரிக்கு 15 வயதில் திருமணமாகி விட்டது ..எனக்கும் அதே 15 வயதுதான் இப்போது ஆனால் நான் தொடர்ந்து படிக்க விரும்புகிறேன் .
பெண்களாகிய நாங்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சில பிரச்சினைகள் ..
விளையாட எங்களுக்கு பொது விளையாட்டுத்திடல் இல்லை .
தற்காலிக முகாம்களில் 50 ஆண்டுகளாக வாழ்ந்த எங்கள் குடும்பத்துடன் சேர்த்து சுமார் 350 பேர்களை எங்கள் இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வேறு ஒரு புதிய இடத்தில அதிகாரிகள் குடி அமர்த்தினார்கள் .
எங்களுக்கு இப்போது ஒரு சரியான தங்குமிடம் இல்லை.பதின்ம பருவத்தில் உள்ள இளம்பெண்கள் அனைவரும் திறந்த வெளியிலேயே தினமும் குளிக்கிறோம் .இயற்கை உபாதைகளுக்கும் அழைப்புகளுக்கும் ஆண் பெண் முதியோர் இளையோர் பாகுபாடின்றி அதே திறந்த வெளிதான் .. .எல்லாரும் அருகில் உள்ள மருத்துவமனை என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறேன் எங்களுக்கோ அருகிலுள்ள மருத்துவமனை மிக மிக மிக தொலைவில் அமைந்துள்ளது .வனபகுதியில் வசிப்பதால் மருத்துவரை தேடி நாடி தொலை தூரம் செல்ல முடியாத மக்கள் பில்லி சூனியம் ,மாந்திரீகம் ஆகிய மூட நம்பிக்கைகளுக்கு இடமளித்து விட்டனர் ..சூனியம் வைப்பது எங்கள் பகுதியில் பிரசித்தம் .இதனால் பல கைக்குழந்தைகளும் கர்ப்பிணிகளும் இறந்து போயுள்ளார்கள் .பால்ய திருமணம் எங்கள் கிராமத்தில் சர்வ சாதாரணம் .
பல பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகிறார்கள் .
சுத்தமான குடிநீர் என்பது எங்களுக்கு எட்டாக்கனி ..தண்ணீர் எடுத்து வர பல மைல் தொலைவு நாங்கள் சென்று வர வேண்டும் .இதனால் எங்களுக்கு பாடம் படிக்க நேரம் கிடைப்பதில்லை .ஒரு லாரியில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது ஆனால் அதில் fluoride இரசாயனம் கலந்துள்ளதால் அதை பயன்படுத்தும் எங்கள் அனைவருக்குமே பற்பல நோய்கள் தாக்கியுள்ளன .எங்கள் கிராமத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் நன்கு குடிக்கிறார்கள் ,சூதாடுகிறார்கள் குடிக்க பணம் கொடுக்காவிடில் மனைவியை அடித்து துன்புறுத்துகிறார்கள் ...ஆனாலும் மனதின் ஒரு மூலையில் ஒரு சிறு நம்பிக்கை ஒளிர்கிறது ..ஒரு காலம் வரும் அப்போது நிச்சயம் பெண்கள் நன்கு படிப்பார்கள் அச்சமின்றி தங்களுக்கு விருப்பமான துணையை தேர்ந்தெடுப்பார்கள் ..வன்முறையற்ற ஒரு சூழலில் வாழ்வார்கள் என்று நம்புகிறேன் .
இப்படிக்கு 

Yours lovingly
Aapki Beti

(Thanks world vision NGO )

பிற்சேர்க்கை ..இந்த கடிதத்தில் கீழுள்ள வரிகளை நானே சேர்த்துக்கொண்டேன் !

//கிளீன் இந்தியா //
இந்த கடிதத்தை நாங்கள் உங்களுக்கு வான் வழி துரித அஞ்சலில் அனுப்ப வேண்டும் பிரதமர் அங்கிள் ..இப்போது நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் .நீங்கள் இருக்கும் விலாசத்தை தர முடியுமா ? //
                                                                        .....................


முகபுத்தகத்தில் சுபிதா பகிர்ந்திருந்தார் 
இது மாத்ருபூமி செய்தி சானலில் பார்த்த ஒரு மனதை நெகிழ செய்த நிகழ்ச்சி 

http://mathrubhuminews.in/ee/ReadMore/7469/manikyamma-continues-feeding-monkeys
காசர்கோட் பகுதியிலுள்ள மாணிக்கையம்மா என்பவர் தினமும் தனது பகுதியிலுள்ள வானரங்களுக்கு உணவு சமைத்து அவற்றின் பசி தீர்க்கிறார் .
தங்க மனசுள்ள இப்படிப்பட்டவங்க நல்லா இருக்கணும் .

------------------------------------------------------------------------------------------------------------

தொடர் மழை வெள்ளம் !சென்னை நகரம் நீரில் மிதக்கும் காட்சிகள் என செய்திகள் எல்லாம் மனசுக்கு ரொம்ப வருத்தமா இருக்கு ..அனைவரும் பாதுகாப்பா  இருங்க ..இப்படிப்பட்ட இடர்கள் வராதிருக்க இனியாவது ஒவ்வொருவரும் துணிந்து சில விஷயங்களை மேற்கொள்ளனும் ..பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் ,குப்பைகளை கவனமுடன் அப்புறப்படுத்துங்க ..நீரை காய்ச்சி குடிங்க ..அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன் .

அன்புடன் ஏஞ்சல் ..
20 comments:

 1. யதார்த்தம் சொல்லும் அருமையான கடிதங்கள்
  மிகவும் இரசித்துப் படித்தேன்
  மிகக் குறிப்பாக பின் குறிப்பு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .அண்ணா ...

   Delete
 2. துளசி மட்டும் பார்த்தது... முதல் செய்தி ஃபேஸ்புக்கில் பார்த்தது...என்றாலும்..

  இதோ எங்கள் ...

  ம்ம் மாற்றங்கள் வந்தால் நல்லது. அவர்கள் புத்தியில் படுமா? கண்ணில் மட்டும் பட்டுப் பிரயோசனமில்லையே..உங்கள் பிற்சேர்க்கை வரிகள் சூப்பர்!

  மாத்ருபூமி செய்தி ஆஹா அந்த மாணிக்கையம்மா மாணிக்கம்தான்....வாழ்க பல்லாண்டு!

  சென்னை பற்றி பதிவிலெயே சொல்லியாச்சே. இங்கு நாங்கள் எப்போதுமே தண்ணீர் காய்ச்சித்தான் குடிப்பது.

  கீதா: ஆர் ஓ தான் வீட்டில்...நிலவேம்புக் குடிநீரும் குடித்து வருகின்றோம். விஷக்காய்ச்சல்கள் வராமல் இருக்க...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கீதா நான் fb யில் முதலில் போட்டுட்டு பிறகு இங்கே பகிர்கிறேன் .இன்னும் சென்னையில் தண்ணீர் பல இடங்களில் வற்றலையாம் ..கஷ்டமா இருக்கு செய்தியில் பார்த்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. இயற்கையைப் பாதுகாக்கவும் மீட்டெடுக்கவும் வேண்டும்..
  அனைவருக்கும் நல்ல புத்தி வரவேண்டும்..
  அதற்காகவும் பிரார்த்திப்போம்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி yes அனைவருக்கும் ப்ரார்த்திக்கணும்

   Delete
 4. நாம் நாடு பூராவும் பரவியுள்ள, அடிப்படை வசதி வாய்ப்புகள் மிகவும் குறைவான, கிராமப்புற பெண் குழந்தைகளின் மிக முக்கியமான, நியாயமான, கோரிக்கைகளின் கடிதங்களை மிகச்சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  அனைவரும் இன்பமாகவும், ஆரோக்யமாகவும், கெளரவமாக வாழவும், நிம்மதியாகக் கல்வி கற்கவும் சீக்கரமாக நல்லவழி பிறக்க பிரார்த்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..அனைவருக்கும் ப்ரார்த்திக்கணும்

   Delete
 5. கடித வரிகள் மனதை பிசைகிறது தோழி... பின்குறிப்பு ரசிக்க வைத்தது

  இனி மழையே வேண்டாம் என்ற சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டது வேதனை. இயற்கையை குறித்த அக்கறையும் பொறுப்பும் மக்களுக்கு வேண்டும்,  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தலைவி..

   Delete
 6. வணக்கம்
  கருத்து ததும்பும் படி உணர்வு மிக்க வரிகள்... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 7. மனதைத் தொடும் பள்ளிப் பெண்ணின் கடிதம். என்னவொரு நிலைமை. அகதிகளின் வாழ்வு என்பது மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. நம் அரசியல்வாதிகள் முதலில் உள்ளூர் முகாமைச் சரியாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதை விட்டு விடுகிறார்கள்.

  வாழ்க மாணிக்கையம்மா.

  ReplyDelete
  Replies
  1. ஆமா சகோ .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
   எனக்கு யூ டியூப் லிங்க் போட முடியல்லை ..மாணிக்கையம்மா நல்லா இருக்கணும்

   Delete
 8. கடித வரிகள் மனதை நெகிழ வைத்தது...

  ReplyDelete
  Replies
  1. ஆமாமா சகோ .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 9. கடிதம் கலங்கடித்தது! தீர்வு கிடைத்தால் நன்று!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 10. எதார்த்தம்...
  பின் குறிப்பு அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete