அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/20/15

Loud Speaker ..29...ரசித்து ருசித்த குறிப்புக்கள்,மட்கும் விதை தட்டு,

ஒலிபெருக்கியில் இன்று ...ரசித்து ருசித்த குறிப்புக்கள் .. மற்றும் முக நூல் பதிவுகள் ,வீட்டுத்தோட்ட குறிப்புகள் ..


செய்தாச்சு இரண்டு முறை எங்கள் ப்ளாக் குறிப்பு தேங்காய் சாதம் :)மிக அருமையான சுவையுடன் இருந்தது ..அடுத்த குறிப்பு பூண்டுபொடியும் இங்கு விரைவில் வரும் :) 

இது வரகரிசி பொங்கல் நம்ம ஜலீலா  குறிப்பு பார்த்து செய்தது .அவங்க மஞ்சள் தூள் சேர்த்திருந்தாங்க நான் சேர்க்கவில்லை .

அப்புறம் பொங்கல் கூட இருக்கிற எலுமிச்சை ஊறுகாய்    மேனகா குறிப்பு பார்த்து செய்தது :) ..
எனக்கு இப்படி குறிப்புக்களை எளிய முறையில் செய்றமாதிரி தரும் சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி ...

மட்கும் விதை தட்டு /biodegradable seed tray
=======================================

Avocado /butter fruit அல்லது சிறிய பப்பாளிபழம் வாங்கி குறுக்கு வாட்டில் வெட்டி சதை பகுதி எடுத்தபின் கிடைப்பது ஓர் bio degradable விதை தட்டு ..அவகாடோ கோப்பையில்  கொஞ்சம் முளைத்திருந்த சேப்பங்கிழங்கை வைத்து மண் மூடி தொட்டியில் நட்டேன் ...மற்றொரு அவொகடொ கோப்பை தோலில் பாகற்காய் விதை நட்டேன் .

இதோ கிழங்கு மற்றும் பாகற் செடி ..இதே போல் இந்த தோல் கிண்ணத்தை தக்காளி ,அவரை ,பட்டாணி விதை நட பயன்படுத்தலாம் ...
seed starters ஆக இத்தோல் கோப்பைகளை பயன்படுத்தலாம் .


கசட தபற யரல வழள ...
=======================எங்கள் மகளுக்கு இரண்டு வயதிருக்கும் போது நடந்த சம்பவம் .முதல் முறை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்றபோதே அவர் மிகவும் கண்டிப்பாக கூறினார் வீட்டில் தாய்மொழியிலேயே குழந்தையுடன் உரையாடுங்கள் .பாலர் பள்ளி சென்றதும் அவள் அங்கு தானாகவே ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்வாள் .தாய் மொழி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியம் .ஆகவே நாங்கள் அவர் சொற்படியே நடந்தோம் .ஊரிலிருந்து அரிச்சுவடி புத்தகமெல்லாம் வரவழைத்து வீட்டிலேயே தமிழ் பாடம் ஆரம்பித்தாகி விட்டது .ஒவ்வொரு படத்தை காட்டி சொல்லி கொண்டே வந்தேன் .அம்மா ஆடு இலை ......அனைத்தும் சிறப்புற வந்தன மகளின் பவள செவ்வாயிலிருந்து   :) .

ஒரு புத்தகத்தில் மாம்பழம் ..மகளுக்கு மா-ம்-பழம் என்று சொல்லி கொடுத்தேன் அவள் மாம்பளம் என்று சொன்னாள் விடா முயற்சியுடன் பழம் ப. ழ .ம் என்று சொல்லி முடிக்க முன் பளம் என்று சொன்னாள் .எனக்கு மயக்கம் வராத குறை .மழை ,மளை, அழகு அளகு இப்படி எவ்வளவோ முயன்றும் ழ மட்டும் வரவில்லை எங்கள் சீமந்தபுத்திரிக்கு :)

தமிழில் இலக்கண பிழை இருந்தாலும் ழ ள ல போட வேண்டிய இடத்தில ஒழுங்கா உச்சரித்து எழுதுவேன் எப்படி இவளுக்கு ழ வரவில்லை ?.எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கும் இந்த பிரச்சினையே இல்லையே ஏ ஏ என்று காலசக்கரத்தை உருட்டி பின்னோக்கி சென்றபோது விடை கிடைத்தது .அது.....................
என் பொண்ணுக்கு ஏன் வரவில்லை என்று காலச்சக்கரத்தை உருட்டி இரண்டு கொசுவர்த்தியும் கொளுத்தி நிதானமாக யோசித்தேன் ..
இப்போது அனைவரும் புஷ்பக விமானத்தில் அமர்ந்துள்ளீர்கள் . இருக்கைப் பட்டி அணிந்துகொள்ளுங்கள் இல்லாவிடில் சில உச்சரிப்பு ஒலி சப்தத்திற்கு தடுமாறி விழ நேரிடும் .  :)
சில பல வருடங்கள் பின்னோக்கி செல்கிறோம் .ஒரு தேவாலயம் அங்கு ஒரு இளவரசிக்கும் ,இளவரசனுக்கும் திருமண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .அது ஆங்கிலிக்கன் protestant திருமண சடங்கு .அவர்கள் தமிழில் திருமண உறுதிமொழி எடுத்துக் கொன்டிருக்கிரார்கள் .

ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுப்பதில் பெண்ணின் தகப்பனாருக்கு உடன்பாடில்லை .தாய்மொழியில் தான் திருமண வைபவம் நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .ஆகவே மாப்பிள்ளை பெண்ணிடம் ரகசியமாக ஆங்கிலதில் wedding vows சொல்வோமே என்று கேட்டுகொண்டாலும் மணமகள் தந்தையிடம் நாசுக்கா கெஞ்சியும் அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை ....
இங்கே ஆங்கிலத்தில் இப்படி வரும் 
Groom: I,____, take thee,_____, to be my wedded Wife, to have and to hold from this day forward, for better for worse, for richer for poorer, in sickness and in health, to love and to cherish, till death us do part, according to God's holy ordinance; and thereto I plight thee my troth.
அதை தமிழில் மணமகன் முதலில் கூறுகின்றார் (அவர் கூறும்போது மணமகள் veil இற்குள் இருந்தவாறே சிரித்து விட்டார் )

இன்பத்திலும் துன்பத்திலும், ///வாள் விலும் தாள் விலும் //////உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருந்து , வாள் நாளெல்லாம் நேசிக்கவும் மரண பரியந்தம் சாகும்வரை மதிக்கவும் உறுதியளிக்கிறேன் . 
..அந்த மணமகள் இந்த ழ உச்சரிப்பை கணவர் குடும்பத்தினர் அனைவரிடமும் பரிசோதித்துள்ளார் ..மணமகன் அண்ணன் தங்கை /கள்  ழ வை ள என்றே உச்சரிச்சதும்தான் இது பரம்பரை வளக்கு :) என்பதை அறிந்துக்கொண்டார் .
அந்த மணமகள் பெயர் ....ஏஞ்சல் :)


இப்போது தெரிந்திருக்குமே மகளுக்கு //ழ //உச்சரிப்பு வராத காரணம் :)))))))))))))))


18 comments:

 1. வணக்கம்

  உணவு சமையல் முறையும் விதை உற்பத்தி பற்றியும் இலக்கண விளக்கமும் நன்று பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. அருமையான சமையல் குறிப்புகள் அதனைத் தந்த பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  மட்கும் விதைத்தட்டு நல்ல யுக்தி!.. அடுத்த சம்மர் வரட்டும் ஒரு கை பார்த்திடலாம்!..:)

  ”ழ” படும்பாடு.. பட்டபாடு.. சிரித்துக்கொண்டேன்.:))

  அருமையான பதிவு + பகிர்வு! வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி ..ழ இன்னும் பாடுபடும் எங்க வீட்டில் :))) சம்மருக்க்காகதான் மீயும் வெயிட்டிங் இங்கே குளிர் துவங்கியாச்சு ......வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 3. நன்றி.... நன்றி... நன்றி... முக நூலில் பகிர்வேனே...!!

  ழ விவரங்கள் முக நூலிலும் படித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..தேங்காய் சாதமும் உருளை பொரியலும் செம காம்போ ....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 4. ழ, படுத்தும்பாடு திரும்ப வாசிச்சாலும் சிரிப்புதான். உங்கள் நிலையை நினைத்தேன்.
  விதைத்தட்டு நல்ல ஐடியா...
  சமையல் குறிப்புகள் அருமை. செய்துபார்க்கனும். ஊறுகாய் பார்க்க நாவூறுது.. பகிர்வுக்கு நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா எனக்கு நிறைய தோட்டம் போட ஆசை வெயிலை காணாவே காணோம் :( அடுத்த மார்ச் தான் திரும்ப துவங்கணும் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. வாவ் இரண்டு குறீப்பும் அருமை எனக்கு சரியாக் போட்டோ எடுக்க முடியா போச்சு

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜலீ .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..பொங்கல் மிக சுவையாக இருந்திச்சி

   Delete
 6. குறிப்புக்கள் அருமை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ குமார் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 7. அருமையான, நகைச்சுவையுடனும் கூடிய ஒரு பதிவு. உங்கள் கொசுவர்த்திச் சுருள் ஆரம்பித்த போதே தெரிந்துவிட்டது அது உங்கள் வெட்டிங்க் என்றும் மகளின் உச்சரிப்பின் காரணம் மற்ற பக்கத்திலிருந்து என்பதும்..ஹஹஹஹ்ஹ்...

  தோட்டக் குறிப்புகள் அருமை...இங்கு பப்பாளிக் கோப்பை பிரச்சனை இல்லை. நாங்கள் பெரும்பாலும் கொட்டாங்கச்சியில்/சிரட்டையில் வளர்த்து...அந்த மூன்று கண்ணும் வேர்கள் மண்ணில் புதைய வழிவகுக்கும்..உங்கள் குறிப்புகளில் செய்துவிடலாம்....

  கீதா: எங்கள் ப்ளாக் சமையல் குறிப்புகள் எல்லாம் பெரும்பாலும் செய்திருப்பதால் உங்களைப் போன்று சசெய்து பார்த்து என்று குறிப்பிட்டு ஸ்ரீராமை மகிழ வைக்க முடியவில்லையே!!!!!!!!!ஹும் அவரும் ஏதாவது செய்யாத குறிப்பு தருவார் என்று பார்த்தால்...

  வரகரசி பொங்கல் செய்வதுண்டு. நானும் மஞ்சள் தூள் சேர்ப்பதில்லை. தொட்டுக் கொள்ள கொத்சு பெரும்பாலும் ...இல்லை என்றால் சாம்பார்.

  சாமையிலும் செய்யலாம்பொங்கல். நன்றாக இருக்கும் ஏஞ்சல்.

  உங்கள் பதிவுகள் எல்லாமே உங்களைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது எங்கள் இருவருக்குமே....


  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா அண்ட் துளசி அண்ணா :) சாமையிலும் செய்யலாமா பொங்கல் ..வீட்டில் இருக்கு விரைவில் செய்கிறேன் ...தேங்காய் சரட்டை தொட்டி நானும் செய்திருக்கேன் ..இளநீர் இலும் செய்யலாமாம் ..குறுக்கு வாக்கில் வெட்டி நார் மட்டுமிருக்கும்படி செய்து வெளிப்பக்கம் சணல் கையிற்றால் கட்டி தொட்டியாக பயன்படுத்துகிறார்கள் ..

   ஆமாம் உங்கள் இருவரையும் நிச்சயம் சந்திப்பேன் அடுத்த சென்னை விசிட்டின்போது

   Delete
 8. பிரபாவுக்கும் இதே நிலைமை தான்... வட மாநிலங்களில் வளர்ந்ததால் ழ வரவே வராது... இப்போது என் மகனுக்கும்..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) உங்க வீட்லயுமா !! இப்போதெல்லாம் மகள் தமிழ் புக்கை பார்த்தாலே அலறி ஓடரா :)
   அந்தளவுக்கு நான் ழ சொல்ல வச்சி பார்த்திட்டேன்

   Delete
 9. உங்கள் கணவரிடம் இதைப் பகிர்ந்து கொண்டீர்களா

  ReplyDelete
  Replies
  1. ஓ ! காண்பித்தேன் முதலில் அவருக்குத்தான் ழ ள பழக்க முயன்றேன் ..இது தொட்டில் பழக்கம் ..மாற வாய்ப்பில்லை :)

   Delete