அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/5/15

Loud speaker :) 28

நீண்ட நாட்கள் கழித்து ஒலிபெருக்கி செய்தி சேவை மீண்டும் துவங்குகிறது :)தலைப்பு செய்தி முக்கிய செய்தி :))

வாசகர்க்கான விமரிசனப் போட்டி! யாவரும் கலந்துகொள்ளலாம்! 
பரிசு ரூ.10,000வலைபதிவர் சந்திப்பு வாசகருக்கான விமரிசன போட்டி  யில் நானும்  பங்கு பெற போகின்றேன் ..


சரி இந்த ஒலிபெருக்கியில் முதலில் ..அன்பு ,..இதை அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே நமக்கு அது புரியும் .இந்த காணொளி சேகர் என்பவர் பற்றியது .ஒரு சாதாரண கேமரா மெக்கானிக் தினமும் தனது சம்பாத்தியத்தில் 40%சிறிய உயிர்களுக்கு உணவிட செலவழிக்கின்றார் .ஏற்கனவே எங்கள் ப்ளாக் மற்றும் வெங்கட் சகோவின் வலையில் போட்டுட்டாங்களான்னு தெரியல்லை ஆனாலும் பரவாயில்லைஇன்னொரு முறை  நீங்களும் கண்டு ரசியுங்கள் .
அவரை தொடர்பு கொள்ள ..
Camera House, No. 242, Second Floor, Pycroft's Road or 94444-64967அடுத்த செய்தியும் அன்பு தான் :) இது எங்க ஊர் zoo வில் நடந்த சம்பவம் .

நிறை மாத கர்ப்பிணி மனைவியுடன் ஒருவர் zoo சென்றார் அங்குள்ள orangutan கண்ணாடி கூட்டின் அருகே சென்று பார்த்துக்கொண்டிருக்கும்போது ராஜாங் என்ற orangutan அந்த கர்ப்பிணியின் வயிற்று பகுதியை  அன்புடன் முத்தமிட்டதாம் :)
அப்பெண்ணின் கணவர் தனக்கும் முத்தமிடுகிறதா என டெஸ்ட் செய்ய தனது வயிறை கண்ணாடி மேல் அழுத்த :) ஓரங்குடன் முறைத்து பார்தததாம் ..


தாய்மை அன்பு parental care எல்லா உயிர்களுக்கும் பொதுவானது !அடுத்த செய்தியும் அன்புதான் ...Hanabiko "Koko" என்ற கொரில்லா அக்கா 
பற்றிய செய்தி ..அக்கா வயசில் என்னைவிட பெரியவ :)
இந்த கோகோ அக்காவுக்கு அமெரிக்கன் சைகை மொழி நன்கு தெரியும் .
கடந்த 43 ஆண்டுகளில் இந்த அக்கா 1000 சைகை மொழிகளை கற்றுள்ளது ! இது முதலில் செய்து காட்டிய சைகை //நான் அரசி // கைகளை குறுக்கு வாட்டில் மகராணி அணியும் sash போல செய்து காட்டியுள்ளது ..தனக்கான தனித்தன்மையை காட்டியதாம் !! இதற்கு பூனை குட்டிகள் மிகவும் பிடிக்குமாம் .
இந்த கோகோ அக்காவுக்கு ராபின் வில்லியம்ஸ் மிகவும் பிடிக்குமாம் .அவர் இதை விசிட் செய்த பொது எடுத்த காணொளி இங்கே 
அவர் இறந்த செய்தியை கேட்டு அன்று முழுதும் இந்த கோகோ துக்கத்துடன் இருந்துள்ளது ..

என் சமையல் :)
வரகாளி தோசை ! நான் சூட்டிய பெயர் :)வரகு அரிசி ..1 கப் 
இட்லி அரிசி.... 1 கப் 
உளுந்து .1/4 கப் 
ஆளி விதை ....ஒரு ஸ்பூன் 
வெந்தையம் 1 தேக்கரண்டி .
உளுந்து ஆளி ஒன்றாக ஊறவைத்து அரைக்க வேண்டும் .


ஆளி விதை பற்றிய எனது போஸ்ட் இங்கே 


...................................................................................................................................................................
10 comments:

 1. விமரிசனப் போட்டிக்கு நீங்கள் இறங்கியாச்சா?..
  சூப்பர்!. வெற்றி உங்களுக்கே! வாழ்த்துக்கள் அஞ்சு!

  விலங்கினங்களுக்கும் பாசம் அன்பு மிகவே உண்டு.
  மனம் நெகிழ்ந்தேன் காணோளிகள் கண்டு!

  வரகாளி புது வழி..:) அனைத்தும் கிடைத்தால் செய்து பார்க்கலாம்..:)) நல்ல பகிர்வு!

  நன்றியுடன் வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி :) நீங்களும் போட்டியில் கலந்துக்கறீங்களா ? வாசகர் விமர்சன போட்டியில் .
   வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி .ஆளி விதை மிகவும் நல்லது சும்மா மிக்சில வெறுமனே அரைச்சி சூப் கார குழம்பில் இறக்கும்போது சேர்க்கலாம் .ருசியும் நல்லா இருக்கும் ..

   Delete
 2. விமரிசனப் போட்டிக்கு உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்!

  ஹை நம்மவங்க! நீயூஸ்! ஆமாம் கொரில்லா ஒராங்குட்டன் எல்லாமே நிறைய மனிதர் போலத்தான்...அவை மனிதரைப் போல கணக்கு எல்லாம் கூட சால்வ் செய்யும் உங்களுக்கும் தெரிந்திருக்கும்...பார்க்கப் போனால் நாலு கால் இரண்டு கால்களை விட நேர்மையானவை, பாசமுள்ளவைதான்...அழகான செய்திகள் காணொளிகள் அதுவும் தலைப்பு அன்பு!!!! அருமை அது இருந்தால் உந்த உலகமே பூத்துக் குலுங்குமே..

  சேகர் வாழ்க....

  கீதா: சேம் ரிசிப்பி...செய்வதுண்டு. ஆளி விதையை பல விதங்களிலும் நானும் உபயோகிக்கின்றேன்...பேக்கிங்க்ல எக் சப்டிட்யூட்டா, இட்லி, சப்பாத்தி கலக்கும் போது, தோசை இப்படி....வெந்தயமும் சேர்த்துக் கொள்வேன் இந்த ரிசிப்பியில் பெரும்பாலும் தோசை இட்லியானாலும் ஆளி அண்ட் வெந்தயம் சேர்ப்பது உண்டு...

  வெகு நாட்கள் கழித்து வருகின்றோம் ..உங்கள் பதிவுகள் சில விடுபட்டுவிட்டன...
  இனிதான் உங்கள் பழைய பதிவுகள் வாசிக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா அண்ட் கீதா :) ..நான் முகபுத்தகத்தில் டென்ட் போட்டு இருந்திட்டேன் :)
   ஆனாலும் இதுதானே சொந்த வீடு :) மீண்டும் வலை பக்கம் அனைவரையும் சந்திக்கணும் ..
   சேகர் மற்றும் பறவைகள் உண்மையில் மனதை வருடிய காணொளி ...ஆளி விதை மிகவும் நல்லது சும்மா மிக்சில வெறுமனே அரைச்சி சூப் கார குழம்பில் இறக்கும்போது சேர்க்கலாம் .ருசியும் நல்லா இருக்கும் .மீன் சாப்பிடாத மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு ஆளி விதை சிறந்தது ..
   ரிச் இன் ஒமேகா 3.முன்னோரை பார்த்தா எனக்கு குதூகலம்தான் :)
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..அந்த வரதட்சினை உரையாடல் இன்னும் பதிவிடவில்லை
   விரைவில் எழுதுகிறேன்

   Delete
 3. வாசகர் விமர்சனப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  சேகரைப் பாராட்ட வேண்டும்.

  உராங் உடான் போலவே டால்பின்களும் செய்யும் இல்லையா?

  மற்ற செய்திகளையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி ஸ்ரீராம் .ஆமாம் டால்பின்ஸ் செய்யும் அவங்க 5 .1/2
   அறிவு ஜீவன்கலாச்சே

   Delete
 4. ராஜாங் முத்தம் ஸோ டச்சிங்! :) கோக்கோ அக்கா ஜூப்பரு!
  நல்ல பகிர்வு அக்கா!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மஹி :)நாலு கால் செல்லம்ஸ் என்றால் நான்குதூகலமாயிடுவென் :) வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றீஸ்

   Delete
 5. விமர்சனப் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
  விழாச் சிறப்புற இடம்பெற வாழ்த்துகள்!

  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 6. கோகோ பற்றிய தகவல்கள்,காணொளி அருமை. ராஜாங் அன்பின் நெகிழ்ச்சி.!!! சேகரோட அன்பை என்னவென்பது?
  இங்கும் ஒரு சானலில் விலங்கினங்கள் பற்றி போடுவாங்க. பார்க்க நல்லாயிருக்கும்.கொரில்லா,ஓராங்குட்டான் டால்பின்,பறவைகள் இவர்களின் ப்ரோக்ராம் இன்ரஸ்டிங்.
  ஆவ்வ் நீங்களும் விமர்சன போட்டியில் கலந்துக்கிறீங்களா?
  வெற்றி பெற்று, பரிசும் பெற வாழ்த்துக்கள் அஞ்சு...!!!

  ReplyDelete