அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/29/15

Confession ..!!

நேற்று  ஆலயத்துக்கு எப்பொழுதும்போல  சென்றேன் ஒவ்வொரு புதனன்றும் ஒரு கம்யூனியன் சர்வீஸ் நடக்கும் ..9 டிகிரி ..கடும் குளிர் ..மழை வேறு தூவிக்கொண்டிருந்தது .வார நாட்களில் கதவை திறப்பது எனது வேலை .அங்கு வாசலில் கைக்குழந்தையுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார் ..களையான முகம் ஏதோ உலக பாரத்தை சுமப்பது போன்ற ஒரு துக்கம் அவர் முகத்தில் ..இந்த குளிரிலும் சல்வார் கமீஸ் ஜம்பர் மட்டும் அணிந்திருந்தார் மேலே .எனக்கு அவர் கையில் இருந்த பையை பார்த்ததும் புரிந்து விட்டது  ,போத்தீஸ் சென்னை பை ..நீங்க தமிழா என்றேன் ..திடுக்கிட்டார..அவர் பெயர் எலிசபெத் இலங்கை மலையகம் பகுதியில் இருந்து இந்தியா சென்று இங்கே வந்திருக்கிறார் ..தட்டுதடுமாறி ஆங்கிலம் பேசினார் ..நான் தமிழா என்று கேட்டு முடிக்குமுன் அவரிடமிருந்து 
ஒரே அழுகை :( சிஸ்டர் எனக்கு உதவி செய்யுங்க நான் பாவ மன்னிப்பு கேட்கணு ம் ஆயரிடம் ..நான் பாவம் செஞ்சிட்டேன் .பாவம் செஞ்சிட்டேன் ..நம்புங்கள் மக்களே அவர் குறைந்தது 10 தடவை விடாமல் அதையே சொன்னார் எனக்கு ஒன்றும் புரியவில்லை ,,அதற்குள் ஆலயத்தின் ஆயர் வந்துவிட்டார் ..அவரிடம் சொன்னேன் ..உடனே அடுத்து அவர் செய்த காரியம் ..//ஸ்டாப் க்ரையிங்// என்றார் அப்பெண்ணை பார்த்து ..அதட்டலுக்கு பயந்து அப்பெண் அழுகையை நிறுத்தினார் ..கிட்ட சென்று அப்பெண்ணை அணைத்து சொன்னார் உனக்கு தேவை அன்பும் ஆதரவுமன்றி பாவ மன்னிப்பில்லை ..யார் உன்னை பாவி பாவம் செய்தவள் என்று சொன்னது ?நோ ஒன் இஸ் பெர்பெக்ட் ...முதலில் உன்னை வருத்திகொள்வதை நிறுத்து ..உன் மனசாட்சியிடம் மட்டும் நீ  செய்த தவறுக்கு மன்னிப்பை கேட்டால் போதும் .இனி அத்தவறை செய்யாதே ...தவறு செய்ததாக நினைத்து வருந்தினாயெ அந்நொடியே உன் தவறுக்கு நீ மன்னிக்கப்பட்டாய் ..ஊரெல்லாம் நான் பாவி என்று அழுது புலம்ப வேண்டிய அவசியமில்லை என்றார் ..உன் பாவங்களு க்காக நீ வருந்திய நொடியே நீ சுத்த மனதுள்ளவளாகிவிட்டாய் ..மேலும் உனக்கு பண உதவி எதேனும் தேவைப்பட்டால் சொல் //என்றார் ....மேலும் 

தவறே செய்யாத மனிதர் ஒருவருண்டா? ..யார் மீதாவது அனாவசிய கோபம் காட்டினாலும் அதுவும் தவறுதானே என்றார் ..
அந்த பெண்மணி சந்தோஷமாக சென்றார் ...சிலரின் அரைகுறை உபதேசம்  இப்படிப்பட்ட கொஞ்சம் மன திடமற்றோரிடம் என்னவோ அவர்கள் பாவிகள் என்ற மனபோக்கை ஏற்படுத்துகிறது  ..என்னை பொறுத்தவரை நம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தாலே போதும் வேண்டுமென்றால் நேரடியாக தனியறையில் அமர்ந்து இறைவனிடமே மன்னிப்பு கேட்கலாம் ..இடைத்தரகர்கள் தேவையில்லை யாருக்குமே .. ..

35 comments:

 1. ம்.........உண்மை தான்,தவறு செய்து விட்டு வருந்தி ஆண்டவனிடம் சென்று தான் மன்னிப்புக் கோர வேண்டுமென்பதில்லை.குருக்களானவர் சொன்னது போல் மனதால் நினைத்து வருந்தினாலே போதும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பிரணவ் யோக ராசா முதன்முறை என் பக்கம் வருகை தந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி

   Delete
 2. அருமையான உபதேசம்!
  உளமாரத் தனது தவற்றை அல்லது குற்றத்தினை உணர்ந்து கொள்வதே பெரிய விடயம். வருந்தி வேண்டிடில் செய்த பாவத்திற்கு மன்னிப்புக் கிடைத்து விடும்.
  ஆக முழுமையாக உணர்தல் மிக முக்கியம்!

  நல்ல பகிர்வு அஞ்சு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இளமதி !! நாமே உணர்ந்து தெளிவடைந்தால் போதுமானது மனதுக்கு ரிலாக்ஸ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 3. அருமை, சரியாகச் சொல்லிட்டார் ஃபாதர்... உண்மைதானே.. ஊரெல்லாம் அழுது புலம்பி எதுக்கு மன்னிப்பு கேட்கோணும்.. எல்லோரும் புதினம் பார்த்திட்டுப் போய்க்கொண்டே இருப்பினம்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க அதிராவ் ..உண்மைதானே ஊரெல்லாம் எல்லா உண்மையும் கொட்டி பாவ மன்னிப்பு கேட்கனும்னில்லை ..நம்ம மனசாட்சியை விட வேறே பெரிய ஜட்ஜ் யாருமில்லை மியாவ் ..அப்புறம் உங்க வீடு அதான் என் பக்கம் ப்ளாக் ரொம்ப நாளா திறக்கபடாம இருக்கு ...ஏதேனும் திங்க்ஸ் காணாம் போயிருக்கான்னு செக் பண்ணிடுங்க ...:))

   Delete
 4. Well said!
  தவறை உணர்ந்தாலே முக்கால்வாசி பாவம் போச்!

  கேரள வாழ்க்கையில் நடந்தது இது. நம்ம ஹௌஸ் ஓனர் அன்னம்மா சேச்சி இப்படிப்பாவமன்னிப்பு கேட்கப் போயிருருக்கார். வீட்டுலே சண்டை சமாச்சாரம். அதைச் சொல்லிக்கிட்டு இருந்தப்ப... ஃபாதர் ஆர்வ மேலீட்டால்

  " ஓ. பின்னே எந்தாயி?"

  கேட்டது சிறுப்பக்கார அச்சன்:-)

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) முதலில் முழுதும் புரியலை copy சர்ச் போட்டதும் உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் காட்டிடுச்சி கூகிள் ....செம காமெடி ஹா ஹா :)

   Delete
  2. http://thulasidhalam.blogspot.co.uk/2005/12/blog-post_113504320692567112.html

   Delete
  3. ஹஹ்ஹஹ துளசி சேச்சி நந்நாயி! செம காமெடி போங்க...."அச்சன்" இல்லையா அதான் மகளின் வேதனையைக் கேக்கும் போது இப்படி உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் போலும்...

   Delete
  4. அருமை அந்த ஆயர் சொன்னது எவ்வளவு அழகு! அருமையான அறிவுரை! அந்த ஆயருக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

   Delete
  5. ஆமாம் கீதா ..அந்த ஆயர் ரொம்ப நல்லவங்க ..
   நான் ரசிச்ச காமெடியை எல்லாரும் ரசிக்கனும்னுதான் லிங்கையும் இங்கே தந்தேன் :)
   சிறுப்பக்கார அச்சனுக்கு ஆனாலும் ரொம்ப ஆர்வக்கோளாறு :))
   துளசி அக்கா சும்மாவே சிரிக்க வைப்பாங்க ..இதை படிச்சி உண்மைல விழுந்து புரண்டு சிரிச்சேன்

   Delete
 5. //என்னை பொறுத்தவரை நம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தாலே போதும் வேண்டுமென்றால் நேரடியாக தனியறையில் அமர்ந்து இறைவனிடமே மன்னிப்பு கேட்கலாம் ..இடைத்தரகர்கள் தேவையில்லை யாருக்குமே .. .// 100% உண்மை அஞ்சு.
  பாதர் அருமையான அறிவுரை சொல்லியிருக்கார். உண்மைதானே.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..உண்மைதானே ஊரெல்லாம் எல்லா உண்மையும் கொட்டி பாவ மன்னிப்பு கேட்கனும்னில்லை ..எங்க reverend ரொம்ப forward ..நான் நிறைய கற்றிருக்கிறேன் அவர்களிடமிருந்து

   Delete
 6. இதே நல்ல சிந்தனையை இப்போதுதான் கில்லர்ஜி தளத்தில் வாசித்து விட்டு வருகிறேன். அடுத்தடுத்து ஒரே கருத்தில் இரு பதிவுகள். இதன் மூலம் மேலே இருக்கும் சக்தியிடமிருந்து எனக்கு எதுவும் தகவல் வந்திருக்கிறதா என்று யோசனை வருகிறது! :))

  வாத்யார் பாட்டு நினைவுக்கு வருகிறது. "தவறு என்பது தவறிச் செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது.. தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும்.."

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..அதேதான் ..வருந்தினாலே நாம் செய்த தவறு காணமா போயிடுது ..சர் தவறு என்பதை உணரும் அந்த நொடி நமக்கு தெய்வீக நிம்மதியை தந்துவிடும்

   இருக்கலாம் சிலநேரம் மேலேயுள்ள சக்தி இப்படியும் யாரோ ஒருவர் மூலமாக நமக்கு மெசேஜ் அனுப்பக்கூடும் ..எனக்கு அப்படி நிறைய நேரம் நடந்திருக்கு அப்படி ஒரு சம்பவம் விரைவில் பகிர்கிறேன் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 7. /// நம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தாலே போதும் /// 100% சரி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..அதேதான் ..நாமே உணர்ந்து மனதுக்குள் மன்னிப்பு கேட்டால் போதுமானது ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 8. //கதவை திறப்பது எனது வேலை .//

  திறந்து விட்டீர்கள் கதவினை. நாங்கள்
  தட்டாமலேயே.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுப்பு தாத்தா :) நலமா ரொம்ப நாளாச்சி உங்களை பார்த்து .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..இங்கெல்லாம் வாலண்டியர்ஸ் தான் இப்படி கோயில் கதவு திறக்க நிறைய வேலைகளுக்கு ..
   நம்பிக்கையான 5 பேரிடம் கொடுத்து விடுவாங்க சாவியை ..

   Delete
 9. பாதர் கரெக்டா சொல்லியிருக்கார் அக்கா. தவறை உணர்ந்தாலே மன்னிப்பு கிடைத்துவிடும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அபி ..அதேதான் ..நாமே உணர்ந்து மனதுக்குள் கேட்டால் போதுமானது ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 10. பாவ மன்னிப்பு என்று எதைக்கேட்பது மன ஆறுதல் முக்கியம் சும்மா அழுது மூக்குசுந்தும் ராதிகா காலம் போச்சு தாஸ்மாஹால் ரேவதி போல [[

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் உண்மைதான் நேசன் .தாஜ் மஹால் !! ஆமா ஆனா நான் படம் பார்க்கல்லை ..பாரதிராஜா படம்தானே ..சினேகா இல்லையே அந்த படத்தில் :))))))))

   Delete
 11. அஞ்சலின் மீண்டும் வலைப்பக்கம் வந்தாச்சு போல இனி சப்பாத்தி சாப்பிடலாம்[[[

  ReplyDelete
  Replies
  1. :) ஹா ஹா வாங்க நேசன் ..நலமா ..நான் சப்பாத்தி சாப்பிடறதில்லை இப்போதெல்லாம் ..ஆனா மகளுக்கு தினமும் சப்பாத்தி உங்களுக்கும் ஷேர் உண்டு ..பிரியன் எப்படி இருக்கார் ..

   Delete
 12. மிகச் சரியே! இடைத்தரகர் எதற்கு நாமே நேரில் இறைவனுடன் பேசலாமே...எல்லாமே நேரடிதான் நல்லது இல்லையா சகோ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா ..இந்த இடைத்தரகர்கள் பலரால் பல பிரச்சினைங்க வருது ! ..சிலர் இப்படி சின்ன ப்ரசினைங்களை கூட பெரிதாக்கி குடும்பத்தை பிரித்தும் விடுறாங்க ,,என் பாலிசி டைரக்ட் கான்டாக்ட் கடவுள்கிட்ட மட்டுமிருந்தா போதும் வருகைக்கும் கருத்க்களுக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 13. ந்ல்ல பதிவு சகோ....

  ReplyDelete
 14. Replies
  1. வாங்க வல்லிமா ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 15. நல்ல பதிவு ஏஞ்சல்.

  ReplyDelete
 16. தவறே செய்யாத மனிதர் ஒருவருண்டா? ..யார் மீதாவது அனாவசிய கோபம் காட்டினாலும் அதுவும் தவறுதானே என்றார் ..
  அந்த பெண்மணி சந்தோஷமாக சென்றார் ....


  உண்மையான வார்த்தைகள்....

  ReplyDelete
 17. ஆயரின் உபதேசம் அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 18. ஆழமான உபதேசம், அருமை. அவங்களுக்காக வருத்தபடுவரைக் காட்டிலும், மனதுக்குள் சந்தோச படுவரும் , நேரம் வரும் போது குத்திக் காட்டுபவருமே அதிகம் உள்ள உலகம் இது. அதனால் அவர் உணர்ந்து வருந்தினாலே போதும்.

  ReplyDelete