அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/19/15

சில மருந்துகளும் ஒவ்வாமையும் ..பகீர் விளைவுகளும் ,TENS, Toxic Epidermal Necrolysis Syndrome,

சில மருந்துகளும் ஒவ்வாமையும் ..பகீர் விளைவுகளும் 
Spontaneous Human Combustion (SHC)இப்படியெல்லாம் கூட நோய் இருக்கிறதா என்று எனக்கு இந்த தானாக பற்றி எரியும் மனிதர்கள் பற்றி கேள்விப் பட்டபோது தோன்றியது .உலகில் சுமார் 200 பேர்கள் இருக்கிறார்களாம் இப்படி தன்னிச்சையாக பற்றி  எரியும் தன்மையுடையோர் !..சில மாதங்கள் முன் நம்ம நாட்டில் ஒரு குழந்தை இப்படி தானாக பற்றிக்கொண்டது என்று செய்தி படித்தேன் ..அதன் விவரம் எனக்கு அப்புறம் தெரியவில்லை ..
இப்போ நேற்று நான் சந்தித்த ஒரு சிறு பெண்ணுக்கும் இதே விதமான ஒரு நோய் .முதலில் அந்நோய் பற்றிய சிறு குறிப்பு 
Epidermal Necrolysis Syndrome - இங்கிலாந்தில் பத்து இலட்சத்தில் ஒருவர் இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
கீழே உள்ள சுட்டியில் இந்த நோயின் விவரங்கள் உள்ளன 

a horrific condition which affects less than one in a million people in the UK

https://en.wikipedia.org/wiki/Toxic_epidermal_necrolysis

நேற்று ஆலயத்துக்கு ஒரு பஞ்சாபி கிறிஸ்தவ குடும்பத்தினர் வந்திருந்தனர் .அவர்களுக்கு 7 பிள்ளைகள் ..ஆறு மகன்கள் ஏழாவது 

ஒரே பெண் குழந்தை பெயர் லிடியா ..அந்த பிள்ளை மூக்கில் ஒரு டியூப் 
செருகப்பட்டிருந்தது .எனக்கு எந்த குழந்தையும் இப்படிப்பட்ட நிலையில் காண நேரிட்டால் மனம் வலிக்கும் .அழகாய் பூப்போல சிரித்தாள்  அப்பெண் ..பிறகு அப்பெண்ணின் தாய் ஆஷா தனது குழந்தையின் நோய் பற்றி அனைவர் முன்பும் பேசினார் ...
(image thanks http://www.expressandstar.com/)

அவர் கூறியது ..கடந்த வருடம் மே  மாதம் இந்த குழந்தை லிடியாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது temperature மிக அதிகமாக இருந்ததால் மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார்கள் .மருத்துவரும் காய்ச்சல் குறைய பெனிசில்லின் antibiotic கொடுத்திருக்கார் .குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கா  என்று கேட்டுள்ளார் ..அதை பற்றி தெரியாது என்று தாய் சொல்லியிருக்கார் ..ஆனா ஆஷா ..குழந்தையின் தாய்க்கு பெனிசில்லின் ஒவ்வாமை உண்டு என்பதை சொல்லியும் மருத்துவர் அதை பொருட்படுத்தவில்லை ..மூன்று டோசெஜ் பெற்றோர் அக்குழந்தைக்கு மருந்தை கொடுத்துள்ளனர் .திடீரென குழந்தை உடலில் வித்தியாசம் ஏற்ப்பட்டதாம் தோல் கன்றி சிவந்து கொப்புளங்களுடன் தீய்ந்த நிலை ஆகியிருக்கு ..உடனடியாக பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர் ..அங்குள்ள மருத்துவர்களுக்கே இந்நோய் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிபோனார்களாம் .....உட்புறத்தில் இருந்து எரிந்து கொண்டு வருவது அவர்களுக்கே புதிராக இருந்திருக்கும் .பல்வேறு மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டு இறுதியில் கண்டுபித்தார்கள் இது 

Toxic Epidermal Necrolysis Syndrome, or TENS 

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய புதிய மருந்துகள் சாப்பிடும்போது பத்து இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுமாம் இந்நோய் :(
பல மாதங்கள் மருத்துவமனை வாசம் ..ஒவ்வொர்நாலும் மருத்துவர்கள் சொல்வார்களாம் பெற்றோரிடம் ..எங்களால் உறுதி கூற முடியாது ..எதையும் ஏற்க தயாராய் இருங்கள் என்று.
பெற்றோரும் சரி பிள்ளையும் சரி தீவிர இறை  நம்பிக்கையுள்ளோர் .
.அதற்க்கு கூடவே அன்பான அனுசரனையான மருத்துவ சிகிச்சை கவனிப்பு ..அந்த பெண்ணின் மன உறுதி இறை நம்பிக்கை எல்லாமாய் சேர்ந்து இப்போ அந்த குட்டி பெண்ணை நடமாட வைத்துள்ளது .
இன்னும் டிஊப் வழியாகத்தான் உணவு செலுத்தப்படுகிறது ..உல் உறுப்புகள் இன்னும் காயம் ஆறவில்லை இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம் .கழுத்தில் தோல் தீய்ந்து பொய் காணப்பட்டது நேற்று பார்த்தப்போ .98% தோல் எறிந்த பெண்ணா இது என்று எனக்கே வியப்பாக  இருந்தது ..வெளிநாட்டில் பல வசதிகள் இருந்ததால் பிழைத்தால் அப்பெண் .
ஹ்ம்ம்ம்ம்ம் ..இவ்வளவுக்கும் காரணம் அந்த மருத்துவர் கொஞ்சம் அச்சிறுமிக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்று தீர விசாரித்து மருந்தை பரிந்துரைத்திருந்தால் இவ்வளவு  கஷ்டம் ஏற்பட்டிருக்காதே :(..இன்னும் பூரண குணமாகவில்லை குளிர் காலத்திலும் சண் க்ரீம் போடணுமாம் .வெயில் படவே கூடாதாம் .

இங்கே பேப்பர் தொலைகாட்சி எல்லாம் அப்பெண்ணை பற்றிய விவரங்கள்http://www.expressandstar.com/editors-picks/2014/10/28/miracle-child-returns-home-after-toxic-reaction-to-antibiotics/

..இந்த சுட்டிகளில் படங்களுடன் வெளியிட்டுளார்கள் 

http://www.mirror.co.uk/news/real-life-stories/miracle-girl-who-survived-horrific-4510884http://www.expressandstar.com/editors-picks/2014/10/28/miracle-child-returns-home-after-toxic-reaction-to-antibiotics/


அன்புடன் ஏஞ்சல் .
14 comments:

 1. அஞ்சு க்கா இந்த பதிவு படிச்சதும் ரொம்ப கஸ்டமாக இருந்தது,
  ஆமாம் நிறைய இந்த மாதிரி சின்ன தப்புனால பெரிய அளவுல குழந்தைங்க பாதிச்சிராங்க, ஊர்ல எனக்கு நல்லா தெரிந்த பொண்ணு 6th படிச்சா, அப்போ கால்ல முள் குத்திடிச்சுனு டாக்டர் கிட்ட காட்டி செப்டிக ஆகாம இருக்க இஞ்செக்சன் போட்டாங்க , அது அந்த பாப்பாவுக்கு ஏனோ சேராம அதிக காய்ச்சல் வந்து ஒரு கை, கால் வராம போயிடுச்சு, கண்கள் ஓரமா போய்டுச்சு, என்னம்மோ செய்தும் இப்ப வரை சரி ஆகவே இல்ல, அவளைப் பார்த்தாலே நான் அழுதுருவேன் அழகான தேவதை இருப்பா அந்த பொண்ணு இப்ப ரொம்ப கஸ்டபடுறா, அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு அவ. டாக்டர் மேல கேஸ் போட்டாங்க பட் நோ யூஸ்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சுபிதா ..எனக்கு நேரில் அந்த குட்டிபிள்ளையை பார்த்து மனசு வலிச்சிபோச்சு .
   படங்கள் ஒரு படம் மட்டும் கஷ்டத்தோடு சேர்த்தேன் பதிவில் ..இப்படி கவனக்குறைவால் மரணமே ஏற்ப்பட்டிருக்கு .என்கூட படிச்சா ஒரு பெண் கையில் ஒரு கட்டி போன்ற க்ரோத் வந்ததற்கு ஆயுர்வேத மருந்து எடுத்து ரொம்ப கஷ்டபட்டா ..நடக்க முடியாம நரம்பு எல்லாம் ப்ராப்ளம் ஆகிப்போனது .
   எல்லா மருந்துகளும் எல்லாருக்கும் ஒத்துக்காது :( .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

   Delete
 2. மனத்தை உலுக்கும் செய்தியும் நோயும்!
  அதிர்ச்சியாக இருக்கின்றது அஞ்சு!..
  விரைவினில் அந்த்ச் சிறுமி குணமாக வேண்டுகிறேன்!

  இதே போல பெனிசிலின் ஒத்துக்கொள்ளாது என்று சொல்லியும் (இவருக்கு ஏற்பட்ட ஒருவகை இன்வக்‌ஷனுக்கு) டாக்டர் தந்தமையால் வயிறும் குடலும் பாதிக்கப்பட்டு இன்றுவரை என்னவர் வயிற்றோட்ட உபாதையுடன் படும்பாடு என் அனுபவம்!..:(

  ReplyDelete
  Replies
  1. மனதுக்கு வருத்தமா இருக்கு ,,நம்பிக்கையில் தானே மருத்துவர் கிட்டே செல்கிறோம் இப்படி குருட்டாம்போக்கில் மருந்து கொடுத்தா என்னாவது ..இங்கே கணவருடன் வேலை பார்த்த ஒருவருக்கு
   ப்ராஸ்டேட் கான்சர் என்று கண்டுபிடித்ததும் இங்குள்ள மருத்துவர்கள் அவரிடம் கையொப்பம் பெற்று ஒரு புது மருந்தை நோயாளிக்கு செலுத்தி டெஸ்ட் செஞ்சாங்க ..மருந்து தீவிரத்தால் அவர் படுக்கையில் 1 மாதத்தில் விழுந்தவர் எழும்பவில்லை :(

   Delete
 3. வாசிக்க மனதுக்கு கஷ்டமாக இருக்கு. அப்பெண் குழந்தை விரைவில் பூரணமாக குணமடைய நானும் கடவுளை வேண்டுகிறேன்.
  சில டொக்டர்மாரின் அலட்சியம் உயிரைக்கூட பறித்திருக்கு.எங்க இடத்தில் நடந்த சம்பவம்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ப்ரியா :( ..இங்கே ஒரு பெண்ணுக்கு colitis எனும் பிரச்சினை .மலத்தில் உதிரம் வந்தது .அவருக்கு அதிகம் whole grain உணவுகளை பரிந்துரை செய்தாங்க டெஸ்ட் ஏதும் செய்யாம விளைவு :( திடீரென மயங்கி விழுந்து இப்போ ஆபரேஷனுக்கு பிறகு உடலுக்கு வெளியே pouch வைச்சிருக்கு ..ஆரம்பத்தில் கவனித்திருக்க வேண்டும் மருத்துவர் ..என்ன செய்ரதின்னு புரியல ..கடவுள் தான் மக்களை காப்பாற்றனும்

   Delete
 4. பத்து லட்சம் பேரில் ஒருவருக்கு என்றாலும் மனது கனக்கத்தான் செய்கிறது. பூரண குணமாகட்டும்....

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தம்பி ..மனசுக்கு பாரமா போச்சு பார்த்தப்போ எனக்கு ..அவங்க முக்கியமா சொன்னதே பிள்ளைகளுக்கு மருத்துவம் செய்யும்போது முதலில் ஒவ்வாமை பற்றி மருத்துவரிடம் சொல்ல வேண்டும் ..எனது பிரார்த்தனைகளும் அதுவே .சீக்கிரம் அக்குழந்தை நல்லபடியாகணும்

   Delete
 5. வருத்தமான விஷயம்... பாவம்.
  விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..ஆமாம் இம்மாதிரி நேரங்களில் இறைவன்தான் துணை ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 6. ஆம் சகோ! இதைப் பற்றி வாசித்திருக்கின்றோம். அதிக ஆல்கஹால் கூட் இப்படி இதற்குக் காரணமாக அமைவதாகவும் சொல்லப்படுகின்றது. ம்ம்ம் பாவம் அந்தக் குட்டிப்பெண் பாவம்....

  கீதா: ரொம்ப அரிது என்பதால் இன்னும் இதைப் பற்றி ஆய்வுகள் நடக்கின்றன எந்று பையன் சொன்னான்...முன்பு இங்கு ஒரு குழந்தை இது போன்று ஆனதாக...ஆனால் அது பிறந்த குழந்தை...அதனால் சில நம்பமுடியாமல் ஆய்வுகள் நடக்கின்றன என்றும் சொன்னான். ஆனாலந்தக் குழந்தை அதன் பின் இறந்துவிட்டதாகத் தெரிந்தது..

  என்றாலும் பாதிப்புக்குள்ளானவர்கள் வேதனைக்குரியவர்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா அண்ட் கீதா ..அந்த குட்டிப்பெண் படத்தை போடக்கூட மனம் வரல்லை .அந்த லிங்கில் பழைய படம் இருக்கு அவ்வளவு அழகு ...நான் முன்பு பேப்பரில் படிச்சிருக்கேன் ஆனா இதுதான் முதன்முறை நேரில் பார்த்தது ..அழகாக பாடுகிறாள் அந்தப்பெண் .இந்த சிண்ட்ரோம் ஸ்டீவன் ஜான்சன் சின்றோம் என்கிறார்கள் ...ஒருவித தோல் நோய் சில வகை அன்டிபையடிக்சால் தூண்டப்பட்டு இப்படி எரியக்கூடும் என்கிறார்கள் .

   Delete
 7. இங்கு நம் நாட்டில் அந்தப் பையன் ராகுலுக்கு எப்படி அப்படி நிகழ்கிறது என்று மருத்துவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. மருத்துவமனையில் இருந்தவரை அப்படி நேராததால் இது பெற்றோரின் சதி என்ற முடிவுக்கும் வந்தார்கள். அதே பெற்றோருக்கு அடுத்துப் பிறந்த குழந்தைக்கும் இதே போல நேர்ந்தது. இப்போது பரவாயில்லை என்று நினைக்கிறேன்.

  பெனிசிலின் மருந்தை இன்னும் ஆண்டிபயாடிக்காக தருகிறார்கள என்ன? அப்புறம் எவ்வளவோ கண்டு பிடித்து விட்டார்களே.. இதய நோய், கிட்னி பாதிப்பு, ஆர்த்ரைடிஸ் பாதிப்பு போன்றவற்றில் பெனிசிலின் தருகிறார்கள்.

  சில மருந்துகளுக்குக் கட்டாயம் டெஸ்ட் டோஸ் போட்டேதான் பிறகு மருந்து தருவார்கள். உதாரணம் பி காம்ப்ளெக்ஸ் ஊசி. அது இரண்டு முறை டெஸ்ட் டோஸில் ஒன்றும் காட்டாமளிருந்து, மூன்றாம் முறை கூட ஏதாவது பக்க விளைவை உண்டாக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் :( இங்கே சில விஷயங்கள் கவனக்குறைவால் பேரிழப்பை தருகின்றன ..
   ஒருவருக்கு ஏற்கும் மருந்துகள் மற்றவருக்கு ஒவ்வாமை தருது ..இன்னுமிங்கே பெனிசில்லின் பயன்பாடு இருக்கு ..அதைவிட IBUPROFEN சர்வ சாதரணமா புழக்கத்தில் இருக்கு ..
   கடந்த வருடம் எனக்கு கைவலிக்கு கொடுத்தாங்க அதேநேரம் நான் ஒரு ஸ்ட்ரோங் ANTIHISTAMINE ,பூக்களில் இருந்து வருமே மகரந்தம் அந்த HAY FEVER அல்லேர்ஜிக்கு சாப்பிட்டுகொண்டிருந்தேன் ..பேயும் பிசாசுமா சேர்ந்து என்னை சுற்றி சுழற்றி அடிச்சு விட்டன ..ரெண்டையும் ப்ரிஸ்க்ரைப் செய்தது ஒரே மருத்துவர் .....எனக்கு கடும் பக்க விளைவுகள் .அப்புறம் உடனே நிறுத்தி விட்டேன் ..அப்புறம்தான் உடல் சரியானது ..வேடிக்கை என்னவென்றால் எனக்கு கொடுத்த அதே ANTIHISTAMINE
   என் நண்பிக்கு ஒத்துக்குது ..

   Delete