அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/10/15

என் வீட்டு தோட்டத்தில் மணத்தக்காளி ,பச்சை தக்காளி அவியல் .முளைக்கீரை விதை

என் வீட்டு தோட்டத்தில் ...மணத்தக்காளி ,பச்சை தக்காளி அவியல் .முளைக்கீரை விதை .
தோட்டத்தில் இருந்து உணவு மேஜைக்கு :)

பச்சை தக்காளி அவியல் மற்றும் மணத்தக்காளி சாம்பார் !
படத்தில் நான் வற்றல் தூவி வளர்த்த மணத்தக்காளி செடிகள் ..
தரையோ தொட்டியோ அல்லது கண்டேய்னரோ மணத்தக்காளி செடி வளர்ந்து காய்கள்  பழுத்த நிலைவரும்போது ஒன்றிரண்டு பழங்களை பறித்து ஒரு டிஸ்யூ காகிதத்தில் சற்று அழுத்தி காய வைத்து பத்திரப்படுத்தி விட்டால் தேவையான நேரம் விதைகளை பயன்படுத்தலாம் .ஒன்றிரண்டை செடியில் விட்டு வைத்தால் அவை தரை /தொட்டியில் விழுந்து அடுத்த சீசனுக்கு மீண்டும் முளைக்கும் ..

மணத்தக்காளி தண்டுகளை நட்டு வைத்தாலும் வளரும் சித்ரா சொன்னாங்க . முயற்சித்து பாருங்களேன் நீங்களும் .

பச்சை தக்காளி அவியல்
========================
இம்முறை வெயில் ஸ்ட்ரைக் செய்வதால் தோட்டத்தில் இருந்து பழுக்க முன் அவியல் செய்தாச்சு :)
நன்றி மேனகா 
http://sashiga.blogspot.co.uk/2015/10/green-tomato-aviyal-thakkalikaai-aviyal.html


முளைக்கீரை ..அடித்தண்டை வெட்டி தொட்டியில் நட்டேன் துளிர்க்குது.கீரை வாங்கி சமையலுக்கு வெட்டும்போது நன்கு முற்றிய தண்டுகளை கணுக்களோடு வெட்டி தொட்டியில் நட்டால் சிலநாட்களில் இலை துளிர்த்து செடி வளரும் .இந்த கீரை இலை அவ்வளவு பெரிதாக வளராது ஆனால் பூக்கள் கொத்தாய் வளரும்.

இப்போ விதைகள் தெரியும் முற்றி மஞ்சள் நிறம் ஆகும்போது ஒரு நியூஸ் பேப்பரில் பரப்பி காய வைக்க வேண்டும் .விதைகள் 

அன்புடன் ஏஞ்சல் .24 comments:

 1. சூப்பர்பா... வீட்டுத்தோட்டத்தில் விளைவதைக் கொண்டு சமைத்து சாப்பிடும்போது வரும் ருசியும் மனநிறைவும் தனிதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா ஆமாம்பா பணம் கொடுத்தா பொருள் கிடைக்கும் ஆனா இந்த சந்தோசம் கிடைக்காது ...உங்க ஊர் க்ளைமேட்டுக்கு நிறைய வளர்க்கலாமில்லையா .இங்கே குளிர் தவங்கி ..தோட்டத்தை February வரைக்கும் மூடிவைக்கணும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

   Delete
 2. பிரமாதம் பிரியசகி! நம் வீட்டுத்தோட்டத்தில் பறித்த காய்கறிகள், கீரையுடன் செய்யும் சமையலுக்கு ருசி அதிகம்! மணத்தக்காளி இலையை சாம்பாரில் போட்டு செய்யலாமா?" இப்போது தான் கேள்விப்படுகிறேன்! எப்போதும் போலத்தானே சாம்பார் வைக்க வேண்டும்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா . வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .ஆமாம் சாம்பார் எப்பவும் போலதான் ஆனா மணத்தக்காளி கைகளை கழுவி உப்பு மஞ்சள் சேர்த்து வேகவச்சி மத்தால் தட்டி பருப்புடன் பிறகு கலந்து விட்டேன்

   Delete
 3. நான் புளிச்ச கீரை அனுப்புன மாதிரி எனக்கு தண்டுகீரை விதையை அனுப்பி விடுங்க அஞ்சு. இப்பவும் குச்சி நட்டு வச்சு துளிர்த்து இரண்டிரண்டு இலைகளுடன் அப்படியே இருக்கு.

  பரவாயில்லையே தேடிக்கண்டு பிடிச்சு அவியல் பண்ணியாச்சு.

  ஆமாம், மணத்தக்காளி குச்சிகளை சும்மா நட்டு வச்சதுல இப்போ ஜோரா நிறைய காய்கள் காய்ச்சிருக்கு. பழுக்க ஆரம்பிச்ச‌தும் நான் புளிக்குழம்பு வைக்கலாம்னு இருக்கேன் :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா ..நானும் ரெண்டு cutting நட்டு வச்சேன் போன வாரம் துளிர்க்குதே :)
   தண்டுகீரை விதையை அனுப்பறேன் .
   அது முளைக்கீரை தண்டுகளை கணுக்கள் இருக்கும்படி ஆழமா குத்தி வைங்க ...பத்து தண்டு நட்டேன் 6 முளைத்தது விதைகளை சரியான நேரத்தில் எடுக்காமல் விட்டுட்டேன் ..அவை தொட்டியில் விழுந்தன :(

   Delete
 4. நீங்க ரொம்ப பொறுமை சாலி.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..வெயில் மட்டும் கொஞ்சம் கூட வந்ததின்னா வேர்கடலை கூட நட்டுவிடுவேன்

   Delete
 5. ஆஹா ... முளைக்கீரை ..அடித்தண்டை வெட்டி தொட்டியில் .. முயற்சி செய்யனும்

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா நட்டுப்பாருங்க அனு .நாமே வீட்டில் வளர்க்கும்போது அதன் சுவை தனிதான்

   Delete
 6. அவியலும் சாம்பாரும் அருமை ஏஞ்சல்,செய்து பார்த்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மேனகா ..வீட்டில் நிறைய காய் தக்காளி இருக்கு இன்னும் செய்வேன்ப்பா

   Delete
 7. பச்சைதக்காளி அவியல்,மணத்தக்காளியில் சாம்பார், கலக்கிறீங்க அஞ்சு. வீட்டுத்தோட்ட வெஜிடெபிள்ஸ் என்றாலே தனிதான். சூப்பர் அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா .உங்க வீட்டு தக்காளி எப்படி இருக்கு ?

   Delete
 8. தக்காளி சூப் அருமை! அக்காச்சி நலமா இப்ப எல்லாம் அதிகம் சாப்பாத்தி சுடும் வேலை அதிகம் போல அஞ்சலின் வலைப்பக்கம் எல்லாம் அதிகம் காணமுடியவில்லை ஓய்வில் போலும் [[

  ReplyDelete
  Replies
  1. பச்சைதக்காளி அவியல் தண்ணி சேர்த்தா சூப்தான் :)

   Delete
 9. மகன் சிரோன் ஜேர்மனி மொழியில் தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்! ஆனாலும் அந்த மொழி பிரெஞ்சை விட அதிக கடினம் என்று சொல்லக்கேள்வி அதைவிட சிங்களம் படிப்பது இலகு என்று என் நட்பு வட்டம் சொல்லும் கதை!புலம்பெயர்ந்த பின்[[[[

  ReplyDelete
  Replies
  1. நம்மைப்போல பெரியவங்களுக்கு கடினம்தான் நேசன் ஆனா இவள் அங்கே பிறந்து 5 வயது வரை அங்கிருந்தோம் அதனால் ஈசியா பிடிச்சிட்டா மொழியை

   Delete
 10. கணனியில் இருக்கும் நேரம் குறைவு அதனால்தான் டாஸ்போர்ட்டில் தேடல் குறைவு!தொடர்ந்து எழுங்குக நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுவாசிப்போம் வலையில்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க நேசன் ..கொஞ்சம் நாள் இடைவெளி விட்டேன் மீண்டும் இங்கே அடிக்கடி சந்திப்போம் ..முகபுததகம் கொஞ்சம் பிடிச்சி வச்சிருச்சி என்னை :)

   Delete
 11. மணத்தக்காளி ச் செடி எளிதில் வளர்ந்துவிடும்...அது போன்று முளைக் கீரைத் தண்டும் வைத்தால் வளர்ந்து விடும்...அருமை சகோ விதைகளைப் பராமரித்து வீட்டில் தோட்டம் போட்டு கெமிக்கல் கலக்காத உணவு..

  கீதா: தக்காளிக் காய் அவியல் செய்வது போல்...தக்காளிக் காய் கூட்டு செய்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். தக்காளிக்காயை கொஞ்சம் புளித் தண்ணீரில்,புளி இல்லை என்றாலும் பரவாயில்லை...வேக வைத்துக் கொள்ளுங்கள். வறுப்பதற்கு மிளகாய் வற்றல், கொத்தமல்லி விரை, கடலைப்பருப்பு, கொஞ்சம் உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை சிறிது எண்ணையில் வறுத்து, கொஞ்சம் தேங்காயுடன் வைத்து அரைத்து வெந்த காயில் கலக்கி, கடுகு, கறிவேப்பிலை தாளித்தால் கூட்டு ரெடி....

  உங்கள் தோட்டம் எங்களை மயக்குகின்றது ....

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா அண்ட் கீதா ...குளிர் ஆரம்பிச்சாச்சு இங்கே தோட்டம் இப்போ களையிழக்குது .
   தக்காளி இரண்டு மட்டுமே பழுத்திருக்கு மீதியெல்லாம் காய் ..அருமையான குறிப்பு வருது அரைததில்லை இதுவரை செய்து படமெடுத்து போடுகிறேன் இங்கே .வருகைக்கும் கருத்துக்கும் அருமையான சமையல் குறிப்பிற்கும் நன்றி

   Delete
 12. தோழிகளே கிலோ கணக்கில் கீரை விதைகள் கிடைக்குமா

  ReplyDelete
 13. ஆஹா, அருமை, இங்கே தொட்டிகள் வைக்கும் வசதி இல்லை. பால்கனியில் வைக்கக் கூடாது! அதான் பிரச்னையே! தி/கீதா சொல்லி இருக்கும் தக்காளீக்காய்க் கூட்டு எங்க அம்மா அடிக்கடி செய்வார். இங்கே காயாகக் கிடைப்பதில்லை. நாங்க புளீ சேர்க்காமல் செய்வோம்.

  ReplyDelete