அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

10/4/15

என் வீட்டு தோட்டத்தில் .......

என் வீட்டு தோட்டத்தில்

சின்ன குழந்தைங்க கிட்ட நடக்கும்போது ரோட் கிராஸ் செய்யும்போது அப்பா/ அம்மா கை பிடிச்சிக்கோ என்று சொல்லி கொடுப்போம் ..

நேற்று இந்த பாகற்காய்  செடியின் கொடிச்சுருள் கொஞ்சமா நீண்டு அங்குமிங்கும் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது இன்னிக்கு காலை பார்த்தப்போ ! பக்கத்தில் உள்ள கோங்குரா செடியை சென்று சுத்தி இருக்கு :)
இத்துனூண்டு செடிக்கு எவ்ளோ அறிவு !அம்மா அப்பா இல்லாத தனியே வளரும் பாகற்க்காய் செடியும் அதிசயமே :)
................................................................................................................................

இந்த வீட்ட வாங்கும்போது வெறும் ரோஜா செடிகள் மட்டுமே இருந்தது ..ஒவ்வொன்றும் பல நிறங்கள் ..மிக வயதான செடிகள் ..முள் குத்தினா கத்தி போல கிழிக்கும் .அதனால் கணவர் நான் வீட்டில் இல்லாதப்போ weed க்ளீநிங்க்னு எல்லாத்தையும் தோண்டி எடுத்து விட்டார் ...முன் பக்கமிருந்த ரோஜா செடி மட்டும் தப்பித்து சம்மருக்கு பூத்து குலுங்கும் ..அதை கட்டிங் எடுத்து ஒரு கிளை ரோஜா உருளைகிழங்கில் குத்தி வைச்சி வேர் பிடிச்சு வளர ஸ்டோர் ரூமில் வைத்தேன் ..


.........................சிறு விளம்பர இடைவேளை 

..........................

இப்போ உருளை கிழங்கு செடி பசேல்னு வளருது ! ஆஆஆவ் 

///ஸ்டோர் ரூமில் வைத்தேன்// 

ஒரு 10 நாள் முன் தொட்டியில் நடுவதாக நினைச்சு மறந்து போய் தரையில் நட்டுட்டு வந்திருக்கேன் :)
இயற்கை பூச்சி விரட்டிகள் .
=========================வீட்டுதோட்டத்தில் பெரும் தொல்லையே அசுவினி பூச்சி மற்றும் சில வண்டுகள் மற்றும் இலைப்பேன் ஆகியன .

இவற்றை எளிதில் துரத்த தோட்டத்தில் செடிகளிடையே சாமந்தி (marigold ) ,பூண்டு வெங்காய செடிகளை நட்டு வையுங்க .

சாமந்தி (marigold )பூச்செடி தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. 
இது ஒரு சிறந்த கொசுவிரட்டி.

பூண்டானது எல்லாவித செடிகளில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் நூற்புழுவை எதிர்த்து திறமாக செயல்படக்கூடியது. அதை தனியாகவோ அல்லது வேம்பு பொருட்கள், மிளகாய், பெருங்காயம் மற்றவையோடு கலந்து பயன்படுத்தலாம்.

..............................................................................................................................

வீட்டுத்தோட்டம் ..சில பயன்தரும் குறிப்புகள்.

1.தொட்டி கண்டெயினரில் வளரும் செடிகளுக்கு மண்புழு உரம் +வெல்லம் சேர்த்த கம்போஸ்ட் டீ நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .
2.பூக்கள் வரும் பருவத்தில் சிறிது பெருங்காயமும் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
3.தக்காளி ,கத்திரி மற்றும் சில செடிகளில் பூக்கள் மலருமுன் விழுந்திடும்.பாஸ்பரஸ் குறைபாடே இதற்கு காரணம் .பாஸ்பரஸ் சத்து உள்ள சாம்பலை கரைத்து தெளிப்பது சிறந்தது.
4.பொட்டாசியம் சத்து குறைந்தா இலைகள் சுருண்டு நிறமிழக்கும் அதற்கு ஆரஞ்சு எலுமிச்சை பழ தோல்களை செடியினருகே மண்ணில் புதைப்பது உடனே பலன் தரும் .
வாழை பழதோலையும் புதைக்கலாம் .
5.நீரில் கரைத்த மோர் அல்லது வாழை தண்டு /பூக்கள் ஊறவைத்த மோர் நீர் இவற்றை வீணாக்காமல் செடிகளில் தெளித்தால் பூ காய் விளைச்சல் செழிப்புடன் இருக்கும்.
6.மீன் செதில்களை ஒரு மூடிய கண்டெய்னரில் நீர் ஊற்றி வைத்து 4 நாள் கழிச்சி அந்நீரை செடிகளுக்கு ஊற்றினால் நைட்ரஜன் குறைப்பாட்டை தவிர்க்கலாம் .
7,தக்காளி போன்ற செடிகள் வளர வளர நீரூற்றும்போது வேர்களை நீர் சென்றடைய செடிக்கு அருகில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் அடிப்புறம் வெட்டி நிலத்தில் குத்தி நட்டு
அதில் நீர் ஊற்றவும் . 
                                                   ..............................

இனி வலைப்பக்கம் அடிக்கடி வலம் வருவேன் :) autumn arrived 
angel ........12 comments:

 1. வீட்டுத்தோட்டம்,செடி,கொடி வைத்திருப்போருக்கு மிக,மிக அருமையான பயன்மிக்க குறிப்பு அஞ்சு.
  //ஒரு 10 நாள் முன் தொட்டியில் நடுவதாக நினைச்சு மறந்து போய் தரையில் நட்டுட்டு வந்திருக்கேன் :)/// ஹா.ஹாஹா..


  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா :) நாம் பல்ப் வாங்காத இடம்னு ஒன்றுண்டா :) நம்ம கிரீடத்தில் இன்னொரு சிறகு அல்லது வைரக்கல் :)
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 2. அஞ்சு..!
  அப்பப்பா.. இத்தனை விஷயம் இருக்கா.!
  உருளைக்கிழங்கில் ரோஜா!.. அசந்து போனேன்!!.
  இப்படி மல்லிகைத் தடி ஊன்றி முளைக்க
  வைச்சு பார்க்கலாமா?..

  சின்ன சின்ன டிப்ஸ் பெரீய பலன். நல்ல பகிர்வு அஞ்சு!
  மோர் நீருக்கு வீட்டில் கொசு போல சின்ன சின்ன பூச்சி வருமே..:( எப்படி அதைத் தடுப்பது?..
  அதற்கு ஒரு பூண்டுப்பல் பக்கத்தில் சொருகிவிடவா.:)

  அருமை! நன்றியுடன் வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
  Replies
  1. //ஒரு பூண்டுப்பல் பக்கத்தில் சொருகிவிடவா.:)// YES பூண்டு வெங்காயம் தோல் கூட போடலாம் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 3. பயனுள்ள தகவல்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ சுரேஷ்

   Delete
 4. ரொம்ப நாள் ஆச்சு உங்களைப் பார்த்து.....வாங்க வாங்க...ஏஞ்சல்..சகோ!

  உருளைக் கிழங்குல ரோஜாவா...அட!!! இப்போ உருளை கிழங்கு செடி பசேல்னு வளருது ! ஆஆஆவ்

  ///ஸ்டோர் ரூமில் வைத்தேன்//

  ஒரு 10 நாள் முன் தொட்டியில் நடுவதாக நினைச்சு மறந்து போய் தரையில் நட்டுட்டு வந்திருக்கேன் :)// ஹ்ஹாஹஹ் செம போங்க..

  தகவல்கள் அனைத்தும் குறித்துக் கொண்டோம் சகோ...நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி அண்ணா And Geetha :) பல்ப் FACTORY நடத்தற ஆளாச்சே நான்லாம் :)
   இந்த மாதிரி நிறைய அசட்டுதன்கள் இருக்கு :)
   இந்த பதிவுகள் பசுமை விடியல் FB பக்கத்தில் எழுதுவது இங்கும் பகிர்கிறேன் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 5. அஞ்சு,

  பாவக்கா கொடிக்கு வேறு ஏதேனும் குச்சி நட்டு வைங்க, இல்லாட்டி புளிச்ச கீரைச்செடியை ஒரே அமுக்கு அமுக்கிடும்.

  ரோஜா வளர்ச்சி புதுசா இருக்கே. "தொட்டியில் நடுவதாக நினைச்சு மறந்து போய் தரையில் நட்டுட்டு வந்திருக்கேன்" ___ ஹா ஹா ஹா :)))))

  எனக்கும் இந்த வெங்காயம் பூண்டுதான் கைகொடுக்குது. சாமந்தி பூ வைக்கலாம், ஆனால் தொட்டியில் இட நெருக்கடி வரும், என்றைக்காவது தரையில் வைப்பதாக இருந்தால் இந்த ஐடியா உதவும்.

  கிச்சன் கழிவுகளைப் பயன்படுத்தினால் ஈக்களின் வரவு அதிகமாகிவிடும் என்பதால் ..... பெரிய தோட்டம் இருந்தால் நிச்சயம் செய்வேன். ஏகத்துக்கும் பயனுள்ள குறிப்புகள், சீக்கிரம் வலம் வாங்கோ !!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா :) ஒரு கோங்கரா கொம்பை நல்லா பிடிச்சிகிச்சு .பிரிக்க மனம்வரல்ல .இன்னும் நிறைய தோட்டம் டிப்ஸ் இருக்கு ஒவ்வொண்ணா வரும்

   Delete
 6. வீட்டுத் தோட்ட ரசிகை, கில்லாடி நீங்க! எலலாவற்றையும் பொறுமையாக முயற்சி செய்து பார்க்கிறீர்கள். எங்கள் வீட்டிலும் பாகற்காய் வளர்ந்து பக்கத்திலிருந்த செம்பருத்தி, துளசி எல்லாவற்றின் மீதும் படர்ந்து மூடிக் கொண்டது. அது காய்ப்பதே தெரியாது. திடீரெனப் பார்த்தால் காய்கள், பழுத்துக் காணக் கிடைக்கும். இப்படியே வேஸ்ட் ஆகப் போய்க் கொண்டிருந்ததும் வெட்டி விட்டோம்!

  ReplyDelete
  Replies
  1. இங்கே 4 மாதம் சம்மர் அதில் சூரியன் ஒளிஞ்சு விளையாடி வெறுபேற்றும் :)
   சென்னை வெயில் எனக்கு கிடைச்சா கும்மாளமிடுவேன்

   Delete