அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/1/15

கொடைக்கானல் மெர்க்குரி நச்சுக்கழிவு

கொடைக்கானல் மெர்க்குரி  நச்சுக்கழிவு 

மெர்க்குரி இந்திய மருந்து ,அழகு சாதனபொருட்கள் சட்ட விதிகளின்படி 
தடை செய்யப்பட்ட ஒரு இரசாயன நச்சு பொருள் .
சிறுநீரக பாதிப்பு ,தோலில் அரிப்பு ,நிறம் மாறுபடுதல் ,தழும்புகள் 
இவையெல்லாம் ஏற்படக்காரணம் இந்த மெர்க்குரி /பாதரசம் .
இயற்கையாக நமது தோலின் மெலனின் எனும் நிறமியின் செயல்பாட்டை 
தடை செய்து தோலை வெளுப்பாக வைக்க இந்த பாதரசத்தை முக அழகு
 கிரீம்களில் பயன்படுத்துகிறார்கள் //
நான் கடந்த ஆண்டு எழுதிய பதிவு இங்கே http://kaagidhapookal.blogspot.co.uk/2014/03/blog-post_6.html


கொடைக்கானல் மலைப் பகுதியில் இந்துஸ்தான் லீவர் நிறுவனம்1983ம் ஆண்டுதெர்மாமீட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை துவங்கியது . அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு (களவாணித்தனம் ) முயற்சியாம் :(

முழுக்கமுழுக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே இங்கு தெர்மாமீட்டர்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஒன்று கூட இந்தியாவில் விற்கப்படவில்லை.


அமெரிக்காவிலிருந்து மெர்க்குரி இந்தியாவுக்கு  கொண்டு வரப்பட்டது. இங்கு தெர்மாமீட்டர்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் அவைமீண்டும் அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டு வந்தன. அங்கிருந்து ஜெர்மனி ,இங்கிலாந்து ,கனடா ,ஆஸ்திரேலியா ,ஸ்பெயின் நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன அமெரிக்காவில் இந்தத் தொழிற்சாலையை நடத்தினால் அந் நாட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இந்தியா உள்பட மற்ற நாடுகளில்வைத்துத் தான் தெர்மமீட்டர் தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டது. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் பாதரசநச்சுக்கழிவு கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது ..
2001 ஆம் ஆண்டில், கொடைக்கானல் வசிப்பவர்கள் தொழிற்சாலையில் இருந்து 7.4 டன் நொறுக்கிய நச்சு பாதரச கழிவு மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகள் கோணி பைகளில் ஸ்க்ராப் /கழிவு கொட்டும் வெளி முற்றத்தில்  இருப்பதை கண்டு பிடித்தனர் .

மேலும் HUL இற்கு சொந்தமான இடத்திலுள்ள சோலைகாடுகளிலும் மெர்க்குரி கழிவுகள் இருப்பதை கண்டு பதைத்த அப்பகுதியினர் 14 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய போராட்டம் இப்போ உயிர் பெற்றுள்ளது  

THE SCRAPYARD AT Moonjikkal in Kodaikanal where the mercury-containing waste from the factory was dumped..இங்கிலாந்து இந்திய விஞ்ஜானிகள் சமீபத்தில் அப்பகுதியில் மெர்க்குரி பாதிப்பு பற்றிய ஆய்வொன்றினை மேற்கொண்டுள்ளார்கள் ..//Hindustan Unilever Ltd (HUL) is a subsidiary of the Anglo-Dutch multinational Unilever and is being held responsible for dumping toxic mercury close to human settlements, polluting the ecosystem and placing workers’ lives in danger.// 

பெரிஜம் ஏரி மற்றும் கொடைக்கானல் ஏரிப்பகுதியிலுள்ள  பச்சை பாசி யின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அதிலும் மெர்க்குரியின் நச்சு சுவடுகள் இருந்தன .இந்த ஏரிகள் தொழிற்சாலையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளவை 
..

1983லிருந்து 2001 வரை, இதுபற்றியான விழிப்புணர்வே இல்லாமல்  தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பல போராட்டங்களுக்குப் பிறகு ஆலை மூடப்பட்டு, தெர்மா மீட்டர் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது.

ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றபடாமலேயே உள்ளது
முறையற்று சுற்றுசூழலில் வெளியேற்றப்படும்  மெர்குரி சிறுநீரகம், கல்லீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தும்,தோல் நோய்கள்  ,கண்களை சேதப்படுத்தும். ,நரம்பு மண்டலத்தையும்பாதிக்கும் .குழந்தையின்மையும் ஏற்படும்.

மார்ச் 2015 இல், ஆலையின் முன்னாள் தொழிலாளர்கள்  போராட்டம் மேற்கொண்டு சில கோரிக்கைகளை முன்வைத்தனர் ..பாதிக்கப்பட்ட நபர்களுக்கு  இழப்பீடு ,மற்றும் தொழிற்சாலையில் இருந்து  மீதமுள்ள கழிவுகள் நீக்க மற்றும் அதற்கான கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவையை வழங்க மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் பொருட்கள் புறக்கணிக்கப்பட அழைப்பு விடுத்தனர் .
அழகிய மலைவாசஸ்தலத்தின் இயற்கை அழகை மேற்கத்திய நாடுகள் துஷ் பிரயோகபடுதியுள்ளன என்பது மிகையில்லை அவங்க நாடுகளில் குப்பை கொட்டமாட்டார்கள் அங்குள்ள குப்பையை கப்பலேற்றி நம் நாட்டில் கொட்டுவது கொடுமை :(..தொழிலாளர்களது உரிமைகள் , பாதுகாப்பு, சுகாதார தொடர்பாக குறைந்த தரநிலைகள்  இதெல்லாம் நம் நாட்டில் எளிதில் அமுக்கப்படும் ..

விந்தை என்னவென்றால் இத்தகைய பெரிய நிறுவ


ங்களில் //“ is a unique company with a proud history and a bright future. We have ambitious plans for sustainable growth and an intense sense of social purpose.”//
என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள் ..சமூக பொறுப்பு பாதுகாப்பு என்று பெரும் பள பளக்கும் விளம்பரம் எல்லாம் இருக்கும் பின்னணியில் ,ஏதோ ஒரு ஏழை நாட்டின் குடிமக்களின் அறியா தியாகமும் ,உயிரை கொடுத்த உழைப்பும் இருக்கும் :(மக்களாகிய நாம் செய்ய வேண்டியது இங்கே
http://www.jhatkaa.org/unilever/
சென்று பெட்டிஷனில் கையொப்பமிட்டு நீதி கிடைக்க தோள் கொடுப்போம் ..நம் தாய்நாடு மேற்கத்திய நாடுகளின் குப்பை தொட்டியில்லை என்பதை உணர வைப்போம் .
தகவல் இணையம் 
http://homegrown.co.in/unileverpollutes-a-protest-rap-song-from-india-seeks-to-end-14-years-of-injustice/

அன்புடன் ஏஞ்சல் .


15 comments:

 1. >>> அமெரிக்காவில் இந்தத் தொழிற்சாலையை நடத்தினால் அந் நாட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் தான் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வைத்து தெர்மா மீட்டர் தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டது.<<<

  நம் கையைக் கொண்டே - நமது கண்ணைக் குத்திக் கொள்ளச் செய்தனர்..

  விளம்பரங்களால் - வியாதிகளைப் பெற்றதே மிச்சம்..

  ReplyDelete
  Replies
  1. உண்மை அய்யா ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 2. Replies
  1. .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 3. ஐயையோ..!
  நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
  நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!..
  பாரதியாரின் பாடலைத்தான் சொல்லத் தோன்றுகிறது.

  எத்தனை கொடியவர்கள். தங்களின் பாக்கெட்டை நிரப்ப
  அப்பாவிகளின் வாழ்க்கையையே தொலைக்கின்றார்களே!..

  மனம் கனக்கும் பதிவு அஞ்சு!
  விழிப்புணர்வைத் தூண்டினீர்கள். மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. உண்மை அய்யா ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி ..இதெல்லாம் சாம்ப்பிள் மட்டுமே இன்னும் கண்ணுக்கு தெரியா அக்கிரமங்கள் நிறைய இருக்கு ..வேலை வாய்ப்பு மட்டுமே நாம் நம் நாட்டில் பார்க்கிறோம் ..ஜெர்மன் இங்கிலாந்து கார் கம்பெனிகள் இந்தியாவில் கூடாராம் போடா காரணம் சீப் லேபர் ...எண்ணெய் கழிவை ஆறுகளில் திருப்பி விட்டாலும் கேட்பாரில்லை :(

   Delete
 4. //அமெரிக்காவில் இந்தத் தொழிற்சாலையை நடத்தினால் அந் நாட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இந்தியா உள்பட மற்ற நாடுகளில்வைத்துத் தான் தெர்மமீட்டர் தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டது.//

  என்ன அயோக்யத்தனம்!

  //ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றபடாமலேயே உள்ளது//
  //அவங்க நாடுகளில் குப்பை கொட்டமாட்டார்கள் அங்குள்ள குப்பையை கப்பலேற்றி நம் நாட்டில் கொட்டுவது கொடுமை//

  இந்தியா போன்ற (சுயநல அரசியல் தலைவர்கள் இருக்கும்) நாட்டில்தான் இதெல்லாம் சாத்தியம். என்ன கொடுமை!


  ReplyDelete
  Replies
  1. ஜெர்மன் இங்கிலாந்து கார் கம்பெனிகள் இந்தியாவில் கூடாராம் போட்டா காரணம் சீப் லேபர் ...எண்ணெய் கழிவை ஆறுகளில் திருப்பி விட்டாலும் கேட்பாரில்லை :( இதை பற்றி ஒருவருஷமுன் காணொளி இணைத்து ட்ராப்டில் இருந்தது நேற்று ஒரு ராப் முக நூலில் பார்த்தேன் இங்கே விறுவிறுன்னு

   Delete
  2. http://www.newindianexpress.com/cities/chennai/Kodai-Mercury-Dump-Burns-in-UK/2015/05/04/article2796408.ece

   In 2003, 300 tonnes contaminated waste extracted. 280 tonnes partially-treated mercury sludge sent back to the US

   ■ Company reportedly admitted that over 3.5 tonnes of mercury remained spread all over its site

   Delete
 5. என்னவொரு கொடுமை... இணைப்பிற்கு செல்கிறேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 6. பொறுப்பான பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 7. இப்படி ஒரு தொழிற்சாலையை எப்படி கொடைக்கானலில் நிறுவ இந்திய அரசு சம்மதித்தார்கள் என்று தெரியவில்லை...விளைவு அப்பாவி மக்கள் தலையில். எனக்கு பிடித்த இடங்களில் கொடைகனாலும் ஒன்று, இந்த செய்தி (பழையது என்றாலும்) வருத்தம் அளிக்கிறது. அரசு இதை சரியான முறையில் உடனே அகற்ற வேண்டும். ஒரு பக்கம் கட்டடங்கள் இயற்கை அழகை அழித்துக்கொண்டு வர இந்த நச்சு பூதகரமாக நிற்கிறது.

  பதிவுக்கு நன்றி. நானும் மனுவில் கையெழுத்திட்டுள்ளன (came va karthik's mom blog)

  ReplyDelete
 8. நல்லதோர் பதிவு..சகோதரி! அரசு எப்படி இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அனுமதி வழங்குகின்றது? அரசு ஒரு முடிவு எடுப்பதற்கு முன் பல அறிஞர்களைக் கலந்து ஆலோசிக்காதோ?

  கொடுமை....ஒரு நாட்டின் மக்களின் நலனை மனதிற் கொண்டு அக்கறையுடன் ஆள வேண்டிய அரசே இப்படிக் கண்டும் காணாமல் இருந்தால்...மக்களுக்குத்தான் கேடு...என்ன செய்ய...நாமும் அதில்...

  ReplyDelete
 9. எச்சரிக்கை..! நீங்கள் படத்தில் இருப்பது திருப்பதி லட்டு என்று எண்ணிவிடாதீர்கள்..இது அவினாசி ரோட்டில் நீலகிரி பேக்கரிக்கு பின்புறம் உள்ள சித்த வைத்திய சாலையில் கை அலர்ஜிக்காக எனது பெரியமகள் கடந்த ஜீலை மாதம் திருப்பூர் வந்த போது ஸ்கின் கேர் என்ற பெயரில் 30 நாட்களுக்கு தினம் ஒன்று வீதம் தரப்பட்ட மூலிகை உருண்டையை. ஒரு வாரம் தான் சாப்பிட்டிருப்பார்..எட்டாவது நாள் நடக்க, உட்கார முடியாமல் போனதால் சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் நரம்பியல் நிபுனரிடம் காட்டினோம்...அவர் சித்த மருந்தில் மெர்க்குரி கலக்குவாரகள்.. எனவே ரத்தத்தை எடுத்து அதில் மெர்க்குரி இருக்கிறதா எனப்பார்த்தபின்பே மருத்துவம் பார்க்கமுடியும் எனக்கூறி, ரத்தம் எடுத்து பாம்பே அனுப்பினார்கள்.. ஒரு வாரம் கழித்து பாம்பேயில் இருந்து வந்த ரிசல்டில் மெர்க்குரி 4.99 அளவு இருக்கிறது என வந்தது. மனித உடம்பில் 0.21 -1.3 வரை மட்டுமே இருக்கலாம். மகளுக்கு மெர்க்குரி அளவு 4.99 அதிகமாக இருப்பதால் நரம்புகளும், தசையும் இறுகி வலியெடுக்கும்.. நடக்க முடியாது.. முதுகெல்லாம் வலி என தொந்தரவு. மெர்க்குரியை வெளியேற்ற தினம் 22 மாத்திரைகள் சாப்பிடுகிறார்.
  ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் நிவாரனம் கிடைக்கவில்லை. டாக்டர் தாமதம் ஆகும் எனக்கூறியுள்ளார். இந்த சித்த மருத்துவ டாக்டரிடம் தங்கள் மருந்தில் மெர்க்குரி கலந்துள்ளீர்களா எனக்கேட்டேன். வெறும் மூலிகைதான்.. மெர்க்குரி கலக்கவில்லை என்றார். எனவே அவர் கொடுத்த இந்த உருண்டை மருந்தை சோதனை செய்ததில் 20 மி.கிராம் மருந்தில் 0.51 மி.கிராம் மெர்க்குரி கலந்திருப்பது தெரியவந்தது. திரும்பவும் இந்த டாக்டரிடம் இப்படி உங்கள் மருந்தில் மெர்க்குரி இருக்கிறதே என்றேன்.. எங்கள் மருந்தில் இல்லை.. மூலிகைதான் என்கிறார். சென்னையில் பிரபல நரம்பியல் டாக்டர் வி.சீனிவாசன் அவர்களிடமும் காட்டியாயிற்றும், ரத்தத்தில் கலந்துள்ள மெர்க்குரி மெதுவாகத்தான் உடம்பில் இருந்து வெளியேறும்.. அப்பல்லோ டாக்டர் எனது மாணவர்தான்,, அவர் கொடுத்த மாத்திரைகளே போதும் எனக்கூறியுள்ளார்.
  எனது துணைவியார் மகளுக்கு துணையாக கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சென்னையில்தான் உள்ளார். இந்த SKM மகரிஷி மருத்துவமனையில் நிறைய பேர்கள் மாத்திரை, சூரணம், பொடி, தைலம் என வாங்குகிறார்கள்.. ஆங்கில மருந்தில் உள்ளதை போட்டிருப்பார்கள்.. ஆனால் சித்த மருத்துவத்தில் இப்படி மருந்தில் உள்ள பொருட்கள் என்ன என்று இருக்காது.. இணைய தளங்களில் சித்த மருத்துவம் எனப்போட்டால், மெர்க்குரி கலக்காத சித்த மருத்துவ மாத்திரைகளே இல்லை என உள்ளது. எனவே பொதுமக்கள், நண்பர்கள் இந்த சித்த மருத்துவ மருந்தகத்தில் மாத்திரைகள் வாங்குவது சரியா என இரண்டுமுறை யோசித்து வாங்குங்கள்.. ஏனென்றால் மெர்க்குரி ஒரு அபாயகரமான விஷத்தன்மையுள்ள மருந்து.
  இந்த மெர்க்குரி சித்தவைத்திய மருந்தில் மட்டும் தான் இருக்கிறதா..? நாம் அழகுக்கு பயன்படுத்தும் நம் முகத்தை சிவப்பழகாக மாற்றும் கிரீம்களில் இருக்கிறது. நம் வீட்டில் குண்டு பல்பை எடுத்துவிட்டு சி.எல்.எஃப். பல்பு போட்டுள்ளோம். இதில் இருக்கிறது. தவறி இந்த பல்பு உடந்துவிட்டால் உடனே அந்த அறையை விட்டு வெளியேறிவிடவேண்டும். மெர்க்குரி திட, திரவ, வாயு வடிவில் மாறும் தன்மையுடையது.. நமது பெண்கள் பயன்படுத்தும் சிவப்பு செந்தூரப்பொட்டிலும் இருக்கிறது..எச்சரிக்கை..சித்த மருத்துவம் போகிறீர்களா.. எச்சரிக்கையாக இருங்கள்..
  Arumugam Eswaran's photo.

  ReplyDelete