அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

8/21/15

நலமா நட்புக்களே :)

நலமா நட்புக்களே :)
எங்களுக்கு இப்போ சம்மர் விடுமுறை .wild park ஒன்றுக்கு சென்றோம்.அங்கு எடுத்த படங்கள் இவை.

வெள்ளை மயில் :)

குட்டி Babes :)


அம்மா வாத்தும் குட்டி பாப்பாங்களும் :)
அம்மா அப்பா கூட நடந்துபோன கினி கோழி குட்டி 
பாப்பா 
அப்பா சைடில் இருந்தார் காமராவில் பிடிக்க முடியல 

முகத்தை நக்கி பாசத்தை பொழிந்த கோமாதாஸ் :)நம் permission இல்லாம படமெடுக்கராங்கனு 
யோசிக்கறாங்க :)Asian Short-clawed otter family


இவங்க விளையாட்டை சிறை பிடித்தேன் ..


இது தாய்லாந்து கத்திரிக்கா 
ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் பாருக் என்பவர் சமையல் குறிப்பு பார்த்து செய்தது 
இதை முகநூலில் பகிர்ந்தேன் .ரெசிப்பி இங்கே 

கல்லால் /பூரிக்கட்டையால் கத்திரிக்காயை ஓங்கி ஒரு போடு போட்டா பிளந்து விதைகள் சிதறி விடும் ..பிறகு குட்டி கத்திரி கப்ஸ் கிடைக்கும் அதை வெட்டி சமைக்கணும்.
அவர் செய்முறையில் maldives தூள் சேர்த்தார் .நான் அதற்க்கு பதில் வறுத்து அரைத்த ஆளி விதை பவுடர் (flax seed )சேர்த்தேன் ..
ஒரு சிறு விளம்பர இடைவேளை ..ஒரு பழைய நினைவு 
ஒன்றுமில்லை :):)
இதே கத்தரிக்கா ஜெர்மனில இருந்தப்போ இலங்கை தமிழ் கடையில் கணவர் வாங்கி வந்தார் ..நான் நாலா வெட்டி அதில் சா -ம் -பா -ர் செஞ்சேன் ................
கிக்க்கிக்கீஈஈஈஈ............எவ்ளோ கசப்பா இருந்திச்சோ !
ஒரு விஷயம் சொல்லியே ஆகணும் .நான் சமைக்கக் ஆரம்பிச்சப்போ ஒன்லி டெஸ்டிங் நோ டேஸ்டிங் .அந்த சாம்பார் நான் சாப்டிருந்தா கசப்பு தெரிஞ்சிருக்கும்!

அடுத்தது எங்கள் ப்ளாக் குறிப்பும் செய்தாச்சு 

சேனை மசாலா :)

அன்புடன் ஏஞ்சல் .


26 comments:

 1. பார்க்கில் எடுத்த படங்கள் எங்களுக்கும் பார்க்கக் கிடைத்தது
  மிக்க மகிழ்ச்சியே அஞ்சு!
  காணொளியும் சுவாரஸ்யம்! அதுங்க படுறபாடு திரும்பத் திரும்பப் பார்த்துச் சிரித்தேன்!

  ஹைய்.. வட்டுக்கத்தரிக்காய்!..:)
  அது கசப்பா? சுண்டங்காய் கோலி உருண்டைய விட சின்னதா இருக்குமே அதை சொல்லுங்க கசப்புன்னு..
  ஆனா இது அப்படிக் கசப்பதில்லை! ஒருவேளை நன்றாக முத்தியது என்றால் கசக்கும்! நல்ல ரெஸிப்பி!

  சேனைக் கிழங்கு வறுவல்..!
  அப்படியே அள்ளிச் சாப்பிடத் தோணுது அஞ்சு!
  கண்ணைப் பறிக்கிறது!

  சூப்பர் மா எல்லாம்!
  பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இளமதி .செய்முறையில் அப்படிதான் சொல்லிருக்கு .காணொளி ரசித்தீர்களா .நான் ரொம்பவே நேரிலும் ரசித்தேன்

   Delete
 2. வணக்கம்
  நலம்தானே சகோ

  ReplyDelete
  Replies
  1. நாங்க மிக்க நலம் சகோ .விடுமுறையை enjoy செய்றோம் :)

   Delete
 3. நலமே அஞ்சு !

  படங்களும், முக்கியமா காணொளியும் ரொம்பவே பிடிச்சிப் போச்சு.

  அஞ்சு, ரொம்பவே முத்தி போன கத்தரிக்காவ கையில வச்சுகிட்டு .... கசக்குதுன்னா ? அவ்வ்வ்வ் கசக்கும்தான். இதே கத்தரிக்காய்தான் உழவர் சந்தையில் குட்டிகுட்டியா கட்டைவிரல் சைஸுல பிஞ்சாக வாங்கி வருவேன். சூப்பரா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்பா ஆமா :) நான் பேராசையில் பெருசா அள்ளிட்டேன் .வருகைக்கும் கருத்துக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி .

   Delete
 4. வெள்ளை மயில் படத்தில்தான் பார்த்திருக்கிறேன்.

  இதைக் கத்தரிக்காய் என்று சொல்ல மாட்டோம். கக்கரிக்காய் என்று சொல்வோம்.

  ஐ! எங்கள்' குறிப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம் சகோ
   வருகைக்கும் கருத்துக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி .கக்கரி .! இப்படி ஒரு பெயர் இருக்கா :) உங்க செய்முறை செம டேஸ்டி அடிக்கடி செய்கிறேன்

   Delete
 5. பூங்காவைச் சுற்றிப் பார்த்ததைப் போலிருந்தது..
  அழகிய காணொளியுடன் இனிய பதிவு..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா
   வருகைக்கும் கருத்துக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி :)

   Delete
 6. நலமே தோழி! நீங்கள் நலமா??? அழகான, சுவையான படங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி மைதிலி நான் மிக்க நலம்பா .விடுமுறை முடிஞ்சி இங்கே

   Delete
 7. அழகான படங்கள்......

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி அனு

   Delete
 8. வெள்லை மயில் இருக்கிறதா? இப்போது தான் பார்க்கிறேன். அனைத்து புகைப்படங்களும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா .நானும் இப்போதான் முதல் முறை பார்க்கிறேன்
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 9. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ குமார்

   Delete
 10. நலமே நாங்கள் அனைவரும்...தாங்கள் நலமோ?!! ஸாரி ஏஞ்சலின் சகோதரி! தாமதமாக வருவதற்கு. சென்ற வாரம் கொஞ்சம் வேலைப்பளு...அதனால் உங்கள் பதிவை மிஸ் செய்திருக்கின்றோம். இனி சரியாக அப்டேட் ஆகுதானு செக் செய்து விடுகின்றோம்...

  படங்கள் செம...ரொம்ப ரசிச்சோம்....அந்தக் காணொளி அஹஹ்ஹ் செம சகோ...ஸோஓஓஓ க்யூட்...ரொம்பவே ரசித்தோம்..

  ரிசிப்பி குறித்துக் கொண்டோம்...கத்தரிக்காயை பச்சை குண்டு கத்தரிக்காய் என்போம்.

  ஹேவ் அ நைஸ் டைம்....இனி குளிர்காலம் மெதுவாக ஆரம்பித்துவிடுமே...

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா :) அண்ட் துளசி அண்ணா .மகளுக்கு ஸ்கூல் துவங்கிடுச்சி .ஸோ நானும் இனி ப்ளாக் தூசி தட்டனும் :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :) //இனி குளிர்காலம் //அதை நினைச்சாலே நடுங்குது .இன்றைக்கு கொட்டும் மழை

   Delete
 11. கண்ணுக்கு விருந்தாய் ரசனை மிகுந்த காட்சிகள். அடுத்து வயிற்றுக்கு விருந்து.. இந்தக் கத்தரிக்காயை இப்படிதான் சமைக்கவேண்டும் என்று இன்றுதான் தெரிந்துகொண்டேன். :)) நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா :) ஜூலை -ஆகஸ்ட் தான் இப்படி வெயில் காட்சி இருக்கும் .இன்றைக்கு மழை இங்கே .இந்த கத்திரி நானும் இப்போதான் முதல் முறை கரெக்டா செய்கிறேன்

   Delete
 12. வணக்கம்...

  வரும் அக்டோபர் மாதம் 11ஆம் தேதி ஞாயிறு அன்று வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு புதுக்கோட்டையில் நடக்க உள்ளது... விழாவிற்கு வரும் அனைவருக்கும் இலவசமாக “தமிழ்-வலைப்பதிவர் கையேடு-2015” எனும் நூல் தரப்பட உள்ளது... தங்களின் தளத்தையும் அதில் இணைக்கும் விவரங்கள் http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html எனும் பதிவில் உள்ளது... நன்றி...

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 13. ஆஹா..ஆஹா.. சமையல் ராணிப் பட்டமளித்துக் கெளரவிக்க வ்ந்திருக்கிறேன்ன்:) கொஞ்சம் வெளியே வாங்கோ:)

  ReplyDelete