அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/15/15

Loud Speaker ...27 ரம்ஜான் வாழ்த்துக்கள் ... ஒரு கீரையின் பயணம் , என் வீட்டு தோட்டத்தில் . .மஞ்ச சட்டை /பச்சை சட்டை ...

இன்றைய ஒலிபெருக்கியில் ரம்ஜான் வாழ்த்துக்கள் ...
ஒரு கீரையின் பயணம் , என் வீட்டு தோட்டத்தில் .
.மஞ்ச சட்டை /பச்சை சட்டை ...
ரம்ஜான் கொண்டாடும் நட்புக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.

ஒரு கீரையின் பயணம் 
======================

சுமார் ஒரு வருடம் முன்பு நம்ம ரோஜாவின் ராணி :) அவங்களேதான் 
சித்ரா சுந்தர் ..ப்ளாகில் மீள்சுழற்சி முறையில் புளிச்ச கீரை வளர்த்து படம் எடுத்து போட்டிருந்தாங்க ..

http://chitrasundars.blogspot.co.uk/2014/07/blog-post_8140.html


அங்கே பின்னூட்டத்தில்

//நான் .... //அநியாயத்துக்கு புளிச்ச கீரையை மிஸ் பண்ணிட்டேன் ஒரு மாதமுன் ..அதுதான் புளிச்ச கீரைன்னு அப்போ தெரில :)//

சித்ரா ......புளிச்ச கீரையை மிஸ் பண்ணினா பரவால்ல விடுங்க, உங்க வீட்டுக்குத்தான் ரெண்டு தொட்டியையும் அனுப்பி இருக்கேன். இந்நேரம் வந்திருக்கணுமே !!///  

சித்ரா சொன்ன மாதிரியே கீரைதொட்டிய அனுப்பி வச்சாங்க :)  கப்பலில் அனுப்பினதால் ஒரு வருஷமாச்சு இங்கிலாந்து வந்து சேர ஹாஆ ஹாஆ :)


இதோ நானும் புளிச்ச கீரை நட்டு வளர்க்கிறேன் ..:).

===============================================================================

மஞ்ச சட்டை /பச்சை சட்டை ...

இது முகபுத்தகத்தில் ஏற்கனவே பகிர்ந்தது :)

இன்னிக்கு ரெண்டு சிறுமிகள் பற்றி சொல்லபோறேன் அதில் ஒன்று நான் ..முதலில் மஞ்சள் ட்ரெஸ் ..
========================

.இந்த பொண்ணு கொஞ்சமில்ல ரொம்பவே நேர்மை கடைப்பிடிக்கும் டைப் 
யாரோ யாரையாவது மறைமுகமா கிண்டல் செய்தா கூட உணர்ச்சிவசப்பட்டு இது கண்ண கசக்கிட்டு நிக்கும் 
சரியான ஏமாளி ..யாரும் பஸ்ஸில் போக காசில்லைன்னா தன காசை கொடுத்திட்டு நடந்து வரும் .கொடுத்த பணத்தை திரும்ப கேக்காது !அழுக்கு அசிங்கம் இதெல்லாம் அறியா பெண் ..ஒரு நாள் முகமெல்லாம் கட்டியுடன் ஒருவர் சக்கர நாற்காலியில் காபிகடைக்க்கு வந்தார் அங்கிருந்த அனைவரும் மெதுவாக நகர்ந்து விட்டனர் ...இதை பார்த்து ரொம்ப கோவம் அந்த மஞ்ச சொக்காக்கு ..அந்த பெரியவர்கிட்ட போய் //உங்களுக்கு வேண்டியதை சொல்லுங்கள் ,நான் எடுத்து வருகிறேன் //என்றது ..

ஒரு நாள் நர்சரில இவங்கம்மா பாக்கும்போது இன்னோர் சின்னபிள்ளையின் வழியும் மூக்கை தனது புது ட்ரெஸ் வைத்து துடைச்சி //அழாதே பாப்பான்னு //சொல்லி தேத்திக்கிட்டிருக்கு ...

பச்சை டிரெஸ் 
=============
சரியான பயந்தாங்கொள்ளி ..ஆனா லேடி ஜேம்ஸ் பாண்ட் மாதிரி நடிக்கும் !
அவசரக்குடுக்கை ..{இது ஒண்ணே போதுமே நாந்தான்னு கண்டுபுடிச்சிருவீங்க :)..}
ஒருநாள் அவங்கம்மா பார்க்கும்போது கூட படிக்கிற பையன் கிட்ட foot ruler வச்சி மிரட்டிக்கிட்டிருக்கு 
ஒண்ணுமில்லை அந்த பையன் மூக்கொழுக்கிட்டு அழுக்கு கோலத்தில் நிக்கிறான் ..இது ரெண்டுபேருக்கும் நடுவில் foot ruler போட்டு சம்சாரம் அது மின்சாரம் விசு பாணியில் கோட்டுக்கு இந்தபக்கம் வந்துடாதேன்னு மிரட்டுது !
கூட //ஏண்டா உங்கம்மா உனக்கு க்ளீனா இருக்க சொல்லி தரல்லியானு சத்தம் வேற //  :)


இதில் நான் யார் ? .நான் மஞ்ச சொக்காவா இல்லை பச்சை சொக்காவானு கண்டு பிடிங்க  — feeling nostalgic.  
(மஞ்ச சொக்கா  ...என் மகள் )..


======================================================================
வீட்டுதோட்டத்தில் தக்காளியும் திருநீற்றுப்பச்சிலையும்( sweet basil )
Ocimum basilicum
=====================================================
பல செடிகளில் மலர்கள் மணம் வீசும் ஆனால் சில செடிகளில் மட்டுமே இலையும் வாசமுடன் இருக்கும்.இதன் இலை, தண்டு, பூ என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மணமும், மருத்துவக் குணமும் கொண்டவை.பூச்சிகளை அகற்றும் கிருமி நாசினி .வீட்டுதோட்டத்தில் அழற்சி எதிர்ப்பு (Anti -inflammatory)மூலிகைகள்(ஓமம் ,துளசி ,இஞ்சி ,மஞ்சள் ,chamomile), நடுவே காய்கறிகள் பயிரிட்டால் தீமை செய்யும் பூச்சி காய் கறி செடிகளை, விரும்பாது ..
தக்காளி செடி,உருளை ,குடைமிளகாய் மற்றும்  பீட்ரூட் செடியுடன் திருநீற்றுப்பச்சிலையும் (Basil ) இணையாக வளரும்போது விளைச்சல் அமோகமாக இருக்கும் மண் வளமுடன் அனைத்து சத்துக்களுடன்  நிரம்பி சமச்சீர் சூழலை உருவாக்கும்  .முக்கியமாக தக்காளியின் சுவையும் நன்றாக இருக்கும் .இது வீட்டுத் தோட்டத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கு துணை நடவு மிக முக்கிய பங்காற்றுகிறது .


திருநீற்றுப்பச்சிலையின் சிறப்பு குணம் தோட்டத்தில் வண்ணத்து பூச்சிகளின் வருகை அதிகரித்து மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது..மேலும் இதன் வாசனைக்கு தக்காளியை தாக்கும் கொம்பு புழு ,அசுவினி பூச்சிகள் நெருங்காது ..
திருநீற்றுப்பச்சிலை..
இதன் இலைகளை சமையலில் பயன்படுத்தலாம்.
சிறு நாற்று தொட்டிகளில் மண் நிரப்பி விதைகளை தூவி மண்ணால் மூடி கிச்சன் ஜன்னலோரம் வெயில் படுமாறு வைக்க வேண்டும் ..தினமும் சிறிய ஸ்ப்ரே CAN இல் நீர் தெளித்து வர 10-15 நாட்களில் தட்ப வெப்ப சூழலை பொறுத்து நாற்றுக்கள் முளைக்கும் .. விதை பட்டை (seed tape ) இல் ஒட்டியும் தோட்டத்தில் நேரடியாக நடலாம் ..அல்லது சிறு தொட்டிகளில் 10 விதைகளை நட்டு 5 வாரங்கள் கழித்து பிரித்து நடலாம் ..தொட்டி ,கண்டெயினரில் வளரும் தக்காளி செடி அருகில் ஒரு சிறு நாற்றை நட்டுவிட்டால் போதுமானது ..திருநீற்றுப்பச்சிலை தக்காளி இரண்டையும் ஒன்றாக அறுவடை செய்யலாம் ...


................................................................................................................................................................

முந்தைய பதிவுக்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி .

எங்களுக்கு பள்ளி விடுமுறை வெள்ளி முதல்.மீண்டும் சந்திப்போம் பதிவுகள் வழியே ..

அன்புடன் ஏஞ்சல் ...

22 comments:

 1. நீங்க 2 பேர் மட்டும்தான் நீ...ஈ...ஈ...ளமாச் சிரிப்பீங்களோ? நாங்களும் சிரிப்பமில்ல?
  :))))))))))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. அவ்வ்வ்வ்வ்வ் :)

   Delete
 2. ஹா ஹா ஹா :)))))) (இது நீள, குறுக்கு, பக்கவாட்டில்)

  புளிச்ச கீரை துளிர்த்ததைப் பார்த்ததும் அளவிலாஆஆ சந்தோஷம். க்ம் க்ம்(தொண்டையைக் கணைத்துவிட்டு இருமல்) என் கைராசி அப்படி !!

  அதேமாதிரி நீங்க அனுப்பிவிட்ட தண்டுக் கீரையை நட்டுப் பார்த்தேன், துளிர் வந்து பின் காய்ஞ்சு போச்சு :( ஏன் ? இத்தனைக்கும் ஃபார்மர்ஸ் மார்க்கெட்டில் வாங்கிய கீரைதான்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா :) செடிதொட்டி அனுப்பிவிட்டு வெயில் அனுப்ப மறந்திட்டீங்க :) 15 குச்சி நட்டேன் 10 பிடிச்சி வளருதே
   ...தண்டு கீரைக்கு இடம் தேவைப்பா .நான் நட்டது வளருது ..nodes நிறைய இருக்கும் தண்டை நடுங்க .அப்புறம் உங்க ஊர்ல இந்த கீரை விதைகள் கிடைக்குது நான் அட்ரஸ் தரேன்

   Delete
 3. செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் உண்டு. ஆனால் அதற்கான பாதுகாப்பு வேலைகளில் கோட்டை விட்டு விடுவேன். ஒன்றரை வருடமாக மொட்டை மாடியில் கரும்பு வளர்த்தேன். அது ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வ(ள)ரவில்லை! கீழே கொண்டு வைத்தேன். அங்கும் அப்படியே!

  ReplyDelete
  Replies
  1. ஆஆ ! கரும்பா ! முன்பு சென்னையில் நாங்க வளர்த்தோம் ..இங்க 4 மாசம் வெயில் மழைன்னு mixed வெதர் ..தக்காளி உருளை ,மல்லி மேத்தி அரைக்கீரை அவரை டபிள் பீன்ஸ் போட்டு முளைச்சிருக்கு ..

   Delete
 4. ரெண்டு சொக்காய் பெண்களுமே ஜோர்..
  அப்புறம்
  பாசில் இப்படியெல்லாம் வளர்க்கலாமா?
  நன்றியம்மா

  ReplyDelete
  Replies
  1. பீட்சா PESTO டொமாடோ சூப் என்று எல்லாத்திலையும் போடலாம் இந்த பேசில் ..சுவை ஹோலி BASIL ப்ளஸ் கற்பூரவள்ளி இலை சேர்ந்த டேஸ்ட் ..மஞ்ச சொக்கா பொண்ணு பச்சை சொக்கா பொண்ண அடிக்கடி அலறி ஓட வைக்கும் :)

   Delete
 5. திருநீற்றுப்பச்சிலை தகவல் பலருக்கும் உதவும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ ..நம்மூரில் இந்தியா மார்ட்டில் கிடைக்குதாம் ..வயிற்ருக்கு ஜீரணத்துக்கு நல்லதாம்

   Delete
 6. ரம்ஜான் வாழ்த்து அட்டைக்கு அழகு, நானும் ரம்ஜான் வாழ்த்துக்களை அனைவருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.
  தோட்டம், செடிகள் பற்றிய விபரம் அருமை. ஒலிபெருக்கி செய்திகள் எல்லாம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா

   Delete
 7. என் மனைவி கூட பச்சை மஞ்சள் ரெண்டும் கலந்தவள் தான்.. :)))))

  ReplyDelete
  Replies
  1. ஹாஅஹா :) சந்தோஷமா இருக்கு ..என் நட்பு வட்டத்தில் நிறையப்பேர் கிரீன் யெல்லோ காம்பிநேஷன் தம்பி

   Delete
 8. பேசில் இங்கும் கிடைக்கும் ஆம் நீங்கள் சொல்லியிருக்கும் திருநீற்றுப் பச்சைதான்....நான் உபயோகிப்பேன்..--கீதா

  முபாரக் அனைத்து அன்பர்களுக்கும். வாழ்த்து அருமை

  புளிச்சகீரை யும்மி...உங்கல் துளிர் அழகு..கார்டன் தகவல் மிகவும் உபயோகம்...

  பச்சை மஞ்சள் கலந்த கலவை தான் இங்கும்...கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் நினைச்சபோல நட்பூஸ் எல்லாருமே என் காம்பினேஷனா :) ..பேசில் தக்காளி சூப் செய்யும்போது சேர்த்தா ருசி அபாரம்

   Delete
  2. திருநீற்றுப்பச்சிலை கேள்விப் பட்டிருக்கிறேன்...
   நல்ல செய்திகள்...

   Delete
 9. பசிலிக் அழகாய் இருக்கு இங்கு சாப்பாட்டில் அதிகம் சேர்க்கும் ஒரு வாசணையும் கூட !

  ReplyDelete
 10. தீபாவளி /அம்மாவாசை போல இப்போது ரம்ஜானும் நாட்கள் வேறுபடுகின்றது இது என்ன நிலையோ/டிசைன் என்று நான் அறியேன் இது பற்றியும் நீங்கள் எழுதலாம் அக்கா!

  ReplyDelete