அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/25/15

ஜெஸ்ஸி .....

 ஜெஸ்ஸி .......எனக்கு ரொம்ப பயம்ம்மா இருக்கு ... இவ்ளோ நேரம் வீட்ட விட்டு வெளியே தனியா இருந்ததில்லை நான்  :(  நான் அப்பா அம்மா அக்கா கூடவேதான் எல்லா இடத்துக்கும் போவேன்  .. இன்னிக்கு அப்பா தான் கதவை திறந்து என்னை வெளியே அனுப்பினாங்க ..அம்மா கூட திட்டினாங்க அப்பாவை எதுக்கு மழைல வெளில விடரீங்கன்னு ..நான் ஓடிப்போயிட்டேன் ! எனக்கு கிட்டு அண்ணா ,கருவாச்சி, கருவண்டி ,மணி கூட எல்லாம் விளையாடனும் ..


அம்மா வச்சிருக்க bird feeder கிட்ட வரும் பறவைங்கள துரத்தனும் பட்டாம்பூச்சி பிடிச்சி அம்மாவுக்கு கொடுக்கணும் அந்த குளத்துல இருக்கும்  மீனுங்களை பிடிக்கணும் ..அதான் ஓடிட்டேன் ..இப்போ எனக்கு வீட்டுக்கு போக முடியல :(
போக ஆசைதான் ஆனா wuf என்ற சத்தம் என்னை நோக்கி வருது !

இதுவரைக்கும் நான் இந்த மாதிரி ஒரு பயங்கர உருவத்தை பார்த்ததில்லை ...பயம்மா இருக்கு ஜீசஸ் ..நான் செஞ்ச தப்பெல்லாம் கண் முன்னே தெரியுது ..


நாலு கார்ன் பிளேக்ஸ் bowl தள்ளி விட்டு உடைச்சிருக்கேன் ..அப்பா சாக்ஸ் ஒளிச்சு வச்சிருக்கேன் ..என் சாப்பாட்டை தள்ளி விட்டிருக்கேன் அம்மாவை quilling செய்ய விடாம தொல்லை செஞ்சிருக்கேன் ..wall பேப்பரை கிழிச்சிருக்கேன் scratch போஸ்ட் என்னிக்குமே தொட மாட்டேன் சுவற்றில் நகத்தை கீறி வைச்சிருக்கேன் :(
அம்மா கூப்பிடும்போது ஓடியிருக்கேன் ..

வீட்டுக்கு வந்த ஆப்ரிக்கன் ஆன்டியின் பின்னலை சேர் அடியில் உக்காந்து நைசா வலிக்கிறமாதிரி இழுத்து விட்டிருக்கேன் .

அக்கா ஸ்கூல் நெட்டைட்ஸ் (opaque tights )மேலே நகம்
 வச்சி கிழிச்சிருக்கேன் ..
கிறிஸ்மஸ் மரத்தையே 3 டைம்ஸ் பிரட்டி விட்டேன் ,வீட்டுக்கு வரவங்களை சோபா கீழே ஒளிஞ்சி அடிச்சிருக்கேன் !அப்பா டிவி பாக்கும்போது மறைச்சிருக்கேன் .

அம்மா சொல்லுவாங்க ப்ரே பண்ணும்போது அமைதியா இருக்கணும்னு .நான் அப்பத்தான் எல்லா சத்தமும் செய்வேன் ,அக்கா  ஷூ லேஸ் அப்பா ஷூ லேஸ்லாம் கழட்டி விட்ருக்கேன் ..கடவுள் என் அழுகைய இப்போ எப்படி கேட்ப்பார் :(  


கத்தி அழணும்னு தோணுது ஆனா முடியலை ..அம்மா குரல் கேக்குது ஆனா வேலி கிட்ட போனா ஏதோ பயங்கர சத்தம் கேக்குது ..


ரொம்ப பசிக்குது இன்னிக்குபார்த்து வெயில் 30 டிக்ரீஸ் ..தண்ணி தாகமா இருக்கு 
அய்யோ அம்மா என்னை கூப்பிடற சத்தம் தூரத்தில் கேக்குது ..இருட்டிடுச்சு எனக்கு மயக்கமா வருது :(

அம்மா ப்ளீஸ் சுவர் ஏறி குதிச்சு வாங்க நான் இங்கதான் இருக்கேன் 
இப்போ 11 மணி இருக்கும் அம்மா வாசனை அடிக்குது டார்ச் வச்சி தேடறாங்க அக்காவும் அப்பாவும் கூட தேடறாங்க ..ஹையோ நான் இங்க இருக்கேன் மரம் மேலே ஏறி பாருங்க ..நான் இங்கேதான் இருக்கேன் ...
அம்மா அழுதிட்டே போறாங்கன்னு நினைக்கிறேன் ..மிட்னைட் 2,மணிக்கு இருட்டில் வந்து ஜெஸின்னு // கூப்பிடறாங்க அடுத்த பக்கம் wuf சத்தம் கேக்குது எப்படி போவேன் நான் ..அப்பா அம்மா கால் கிட்ட இந்த நேரம் தூங்கிட்டிருப்பேன் இங்கே மாட்டிக்காம இருந்தா .

அதிகாலை  3 மணி இருக்கும் wuf சத்தம் இல்லை ..பார்க்கிறேன் மெல்ல சுவர் ஏறி குதிச்சு பின் கதவு cat flap மூடியிருக்கே :(  அம்மா ப்ளீஸ் வாங்க..குளிருது பசிக்குது எனக்கு .....

ஆஅஹ் அம்மா வாசனை .கதவு திறக்கக்....

ஜெசீஈஈஈ ..அம்மா கத்தி என்னை தூக்கீட்டு ஓடறாங்க .எவ்ளோ ஹாப்பி அம்மாவுக்கு ..தண்ணி சாப்பாடு உடனே கொடுத்தாங்க ..
அம்மா சாரி இனி வெளியே போக மாட்டேன் ..ம்ம் அப்புறம் இப்பெல்லாம் நான் தனியா வெளில போறதே இல்லை ..ஒன்லி விண்டோ வாட்சிங்க் ..அந்த பக்கத்து வீட்டுக்கு sharpei என்ற வெரைட்டி நாய் வந்திருக்காம் .பேரு டைகர் .


கருவண்டி சொன்னான் ..விளையாட கூப்பிட்டான் ..நான் வர மாட்டேன்னு சொல்லிட்டேன் .சாப்பாடு முக்கியம் எனக்கு ..
உங்களக்கு அவன அந்த பக்கத்து வீட்டு நாயை பார்க்கணுமா ..இதான் அவன் .......................................அன்புடன் ஜெஸ்ஸிக்காக எழுதியது ஏஞ்சல் ..

36 comments:

 1. Replies
  1. வாங்க சகோ .வருகைக்கும் ரசித்ததற்கும் நன்றி

   Delete
 2. ஹா..ஹா..ஹாஆஆஆ....:)

  இவ்ளோ பண்ணியிருக்காளா? கெட்டிக்காரக் குட்டி..;)

  ஜெஸிட பாவனையாய் எழுதிய விதம் அருமை!
  அசத்தீட்டீங்க அஞ்சு!..:)
  அங்கின போய் யார்கையிலும் மாட்டாம வீட்டுக்கு வந்தாளே..
  கடவுளுக்கு நன்றி! படு சுட்டி! நல்லா இருக்கட்டும்! இருப்பா!
  வாழ்த்துக்கள்!

  நம்ம மீராவும் இப்படி போய்த் தொலைஞ்சு நாள் பூரா வீட்டுக்கு வராம இரவு 11 மணியிருக்கும் வந்து கதவு கிளாஸ்ல காலாலை தட்டிக் தட்டிக் கூப்பிட்டா. நல்ல வின்ரர் காலம். ஸ்நோ இல்லை. ஆனாலும் செம குளிர்!..
  காலையில் 9.00 மணி போல போனவ. வரும்போது இரவு 11.00 மணி! நானும் அழுத அழுகை கொஞ்சமல்ல!

  இதுங்க மேல நாம நம்ம குடும்ப உறவில ஒன்றா நினைச்சு பாசம் வைச்சு படுறபாடு சொல்லில் அடங்காது!
  இது உங்களுக்கு எழுதும் போதும் மீரா என் மடில இருக்கா!
  ஜெஸிக்கும் அவங்க அம்மாக்கும் கிறீற்ரிங்ஸ் சொல்லச் சொல்றா!..:)

  ReplyDelete
  Replies
  1. ஹையோ ..நினைச்சா இப்பவும் பயம்மா இருக்கு .ஜெசி 5 வார குட்டி என்மடில வச்சி போட்டோ அனுப்பினேன் நினைவிருக்கா :) ,,மீராவும் காணாம் போனாளா ? ரொம்ப நாட்டி ..
   இளமதி இந்த ஜெசி கருவண்டி கருவாச்சி எல்லாம் கூட்டணி அமைச்சு மீன் குளம் சைடில் குழி தோண்டினாங்க மீன் பிடிக்க ..அதுங்க அறிவை பாருங்க :)
   அந்த நாய் பார்த்திங்களா சைனீஸ் ப்ரீட் எனக்கே நடுக்கமா இருந்திச்சி பாவம் ஜெசி :)

   Delete
  2. Hi Ilamathy... happy to see you here....

   Delete
 3. ஹா.... ஹா.... ஹா....

  டெரர் அனுபவம் போல.... அருமை.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :)ஆமாம் சகோ ஜெஸி பசி தாங்காது..நான் சமைக்கும்போதும் அருகில் இருப்பா ..நான் பயந்திட்டேன் அடுத்தநாள் போட்டோ ஒட்டி தேடணும்னு ..டெரர் அனுபவம்தான்

   Delete

 4. இனிமே.. வெளியே போவியா.. ஜெஸ்ஸி!..

  வெளியேவா.. அப்டினா என்னம்மா?...

  *******

  பாவமன்னிப்பு பெற்று மீண்டு வந்த ஜெஸ்ஸிக்கு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) இப்பெல்லாம் ஜெஸி மட்டுமில்ல அண்ணா எங்க சுத்து வட்டார வீட்டு பூனைங்க எல்லாம் வீட்டை விட்டு வரதில்ல ..டைகர் இப்போ ஏரியா தாதா

   Delete
 5. pinnalai iluththu viduvathu ninasaa

  ReplyDelete
  Replies
  1. ஹா :) வாங்க ஜலீ ..ஒரு ஆப்ரிகன் பெண் மாதந்தோறும் கான்சர் ரிசர்ச் கலெக்ஷன் உண்டியல் எடுத்து போக வருவார் ..நீள குட்டி ஜடை ..இதுக்கு நீளமா டேப் மாதிரி எதை பார்த்தாலும் பிடிச்சி இழுக்கும் பழக்கமுண்டு .அந்த லேடி வலியில் நெளிந்தார் பாவம்

   Delete
 6. Ha ha ha super writing... I enjoyed very much.

  ReplyDelete
  Replies
  1. இங்க பார்றா :) ஒரு பூனை இன்னோர் பூனை சேட்டையை ரசிக்குது :) /\.../\
   * *

   Delete
 7. Bull dog!!!! My neighbor has 2. Super writing.

  ReplyDelete
  Replies
  1. தாங்க்ஸ் வான்ஸ் இது புல் டாக் மாதிரி இருக்கு ஆனா sharpei ..சைனீஸ் வெரைட்டி ..

   Delete
 8. ஜெஸ்ஸி பூனையின் வெளி உலக அனுபவங்கள் சூப்பர்! பல வருடங்கள் முன்பு இதே மாதிரி ஒரு பூனை எங்கள் வீட்டில் வசித்தது. இன்னும் கொஞ்சம் புசுபுசுவென இருக்கும். அது செய்யாத குறும்புகளே இல்லை! ”பியாண்டால்” என்று தங்கைகள் அதற்கு பெயர் வைத்தார்கள். அந்த நினைவு வந்துவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சுரேஷ் ..இங்கே பூனைகள் நாய்க்குட்டி போலதான் ..ரொம்ப செல்லம்

   Delete
 9. வாவ்!!! so க்யூட் !!! இப்போ இங்க கூட ஜெஸ்ஸி, ஜெஸ்ஸி ன்னு தான் சொல்லுது. இனி சமத்தா இருடா! அம்மா வில் டேக் கேர் of u:)

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா :) வாங்க மைதிலி ...அதே படம் பார்த்து தான் ஜெஸ்சின்னு பேர் வச்சேன் .
   முதலில் பக்கத்து வீட்டு tenants //உங்களுக்கு ரெண்டு பொன்னுங்கலான்னு கேட்டாங்க //நான் சொன்னேன் யெஸ் ..ஒரு ரெண்டு கால் பொண்ணு ஒரு 4 கால் பொண்ணு ..

   Delete
 10. ஜெஸ்ஸியின் குறும்புகளை அதன் வாயாலேயே சொல்லி உயிர்களிடத்தில் உங்களுக்கு இருக்கும் அன்பை காட்டி விட்டீர்கள். பக்கத்து வீட்டு டைகர் ரொம்பவும் முரடனாகத் தெரிகிறார்; நம்ப நம்பியார் ஸ்டைலில் ஒரு பார்வை வேறு.

  எங்கள் வீட்டிலும் ஒரு பூனைக் குடும்பம். மழைக்காலத்தில், அடைக்கலம் தேடி வந்து இங்கேயே வரண்டா, வீட்டின் சுற்றுப்புறம் என்று தங்கி விட்டன.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) ஆமாம் அண்ணா ..நம்பியார் தான் .ரெண்டு நாள் முந்தி எப்படியோ வீட்டை விட்டு போயிருச்சி ..எல்லார் கதவையும் தட்டு தட்டி குரல் கொடுத்தது நான்தான் கூட்டிபோய் விட்டேன் ..அதுக்கு மனுஷர் மேல் எந்த ஆர்வமுமில்லை ..ஒன்லி பூனைஸ் அண்ட் பெர்ட்ஸ் :)

   Delete
  2. நம்ம ஊரில் வாயில்லா ஜீவன்கள் நம்மை அண்டி தான் இருக்கின்றன அண்ணா

   Delete
 11. அருமையா இருந்திச்சு.கங்கிராட்ஸ்.........

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 12. ஹஹ்ஹஹ் ஜெஸ்ஸியின் குறும்புகளை மிகவும் ரசித்தோம்....அதை அழகாக நீங்கள் சொல்லிய விதம் சூப்பர்...ஜெஸ்ஸிக்கு எங்கள் அன்பு ஹக்ஸ்....ஜெஸ்ஸி நீ இனி ஓடக் கூடாது அம்மாவைக் கவலைப்பட வைக்கக் கூடாது ஒகேயா? சமத்தா இருக்கணும்..
  ஸோ க்யூட்...ஜெஸ்ஸி!!

  கீதா: எங்கள் வீட்டுக் ப்ரௌன் தொலைஞ்சு போனப்ப இப்படித்ஹ்டான் அதைப் பதிவா எழுதி வைச்சேன் ஏனோ போடலை....போடலாம்னு நினைச்சுருக்கேன்...பார்ப்போம்..

  அருமையா எழுதியிருக்கீங்க...

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) ஆமாம் அண்ணா .she is a cheeky kitty .அனிமல்ஸ் பற்றி எழுதும்போது மட்டும் நானும் அவங்களாவே மாறிடுவேன் ..நான் எங்கே போனாலும் பூனை நாய் என் கிட்ட வரும்ங்க :)
   பிரவுனி ..கிடைச்சிருச்சா உடனே ....நீங்களும் எழுதுங்க படிக்க ஆவல் ...ஜெஸி இப்ப என்கிட்ட தான் வெளில போகணும்னா என்னையும் கூப்பிடறா :)

   Delete
 13. அருமையாக எழுதியிருக்கீங்க... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ

   Delete
 14. ஜெஸ்ஸியின் இடத்திலிருந்து அஞ்சுவின் கதை சூப்பர் !

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) மிக்க நன்றி சித்ரா

   Delete
 15. வீட்டை விட்டு வெளியே போனால் எவ்வளவு கஷ்டங்கள்? அருமையாக எழுதி விட்டீர்கள் ஜெஸியின் அனுபவங்கள், மனபுலம்பல்களை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா ...கணவர் சொல்வார் ..ஜெஸிக்கு பேச முடியாது அந்த குறை தவிர அப்படியே சிறு பிள்ளைகளின் குறும்பு ..இப்பெலாம் அதுக்கு வெளில போகணும்னா எங்க சட்டைய கவ்வி இழுக்கறா துணைக்கு

   Delete
 16. ஹஹஹா..... ஜெஸ்ஸியின் உணர்வை அசத்தி விட்டீர்கள்

  ReplyDelete
 17. ......பாவம் ஜெஸ்ஸி....take care..

  ReplyDelete
 18. சூப்பர் அஞ்சு. ஜெஸி" சொல்வது மாதிரி எழுதியிருப்பது அருமை அஞ்சு. ஆவ்வ் ஜெஸி இவ்வளவு குழப்படியா?
  ஜெஸி இனிமே குழப்படி செய்யாமல் சமத்தா இருக்கனும். ம் அந்த dog பார்த்தாலே பயமாயிருக்கு. இங்கு இவர்களை வெளியே அழைத்துப்போனால் வாயைக்கட்டித்தான் கொண்டு போவார்கள்.
  உண்மையில் அஞ்சு இவர்களுக்கு அறிவு அதிகம். சிலநேரம் ஆச்சர்யபடுத்துவார்கள் சில செய்கைகளால். கடைசிபோட்டோக்கு முதல் போட்டோவில் அழகா போஸ் கொடுக்கிறா. க்யூட் ஜெஸி!!

  ReplyDelete
 19. ஹைய்யோ!!! சூப்பராச் சொல்லிட்டாளே ஜெஸ்ஸி.
  குழந்தை நல்லா இருக்கட்டும்.

  நம்ம ரஜ்ஜு அப்பா செல்லம். தினமும் அவர் வேலையிலிருந்து வந்ததும் மடியில் ஏறிப் படுத்துக்கணும். இப்ப ஒருவாரமா அப்பா ஊரில் இல்லை. தேடறான்...பாவம். நம்ம பக்கத்து வீட்டுலேயும் ஒரு அல்சேஷர் இருக்கார். பெயர் என்ன தெரியுமா? டிஃபார். டி ஃபார் டாக் என்றதாம்:-)

  ReplyDelete