அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

7/4/15

அன்பு தோழி இளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு

அன்பு தோழி இளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு 
நேற்று தம்பி கஸ்தூரி மற்றும் தங்கை கிரேஸ் பதிவை பார்த்ததும் எப்படியாவது இளமதியை தொடர்பு கொள்ளணும்னு இறைவனை வேண்டி மெசேஜ் அனுப்பினேன் ..இன்று பதில் வந்தது அவரிடமிருந்து 
////

எனைத்தேடும் உங்கள் அன்பினையும், 

வலையுலக நட்புகளின் ஆதங்கமும் கண்டு பேச்சிழந்து போனேன்.
வலையுலகினர் என்னைத் தேடிப் பதிவிட்டமை பற்றிக் கூறியமைக்கும் மிக்க மிக்க நன்றி அஞ்சு! 
அவர்கள் என்மீது கொண்ட அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றியாக 
உளத்தில் தோன்றியதை எழுதிப் பாக்களாகத் தருகிறேன்.
நீங்கள் விரும்பினால், முடிந்தால் என் நன்றியறிதலைக் கூறி நலமாகிடும்போது நன்றி கூறவேனும் வலைக்கு வருவேன் என்பதனையும் அவர்களுக்குக் கூறிவிடுங்கள்.


வலையுலகில் எனைத்தேடிய நட்பினருக்காக எழுதிய வெண்பாக்கள் இவை..

என்னைத் தேடிடும்நல் இதயங்களே! உங்களன்பைப்
பொன்னெனப் பொக்கிசமாய்ப் போற்றுகிறேன்! - இன்றே
இறக்கை இலாமலே பறக்கிறேன்! மேலும்
சிறப்பதைக் காண்பீரே சேர்ந்து!

நல்லதும் கெட்டதும் நம்முடைய வல்வினையே!
அல்லது வேறுண்டோ அன்புடையீர்! - சல்லடை
போட்டே சலித்தெம்மைச் சூழும்!.இதைப் புந்தியில்
ஊட்டுவீர்! என்றும் உணர்ந்து!

பிறர்வாழ வேண்டுமென எண்ணும் பெருங்குணம்
உறவாய் இணைக்குதே உம்மை! - மறவாது
கூறினேன் நன்றி! குவித்தேன் கரங்களையும்!
தேறிடுவேன் அன்பால் தெளிந்து!உளமார்ந்த நன்றியுடன்
அன்பு மறவாத
இளமதி .....

===================================================================
தோழி விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் நட்புக்களே ..

பட உதவி ..கூகிள் ..
15 comments:

 1. வணக்கம்

  விரைவில் வலைக்கு வர இறைவனைப் பிராத்திப்போம்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. என் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தை இல்லை ஏஞ்சல். இளமதியின் தகவல் அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். நன்றியை பாக்களில் எழுதி அனுப்பியிருகிறாரே...மிகவும் அருமையான பாக்கள். இளமதி விரைவில் நலமுடன் வரட்டும். பகிர்விற்கு நன்றி ஏஞ்சல்.

  ReplyDelete
 3. மிகுந்த மகிழ்ச்சியான செய்தி தந்தீர் கேக்கவே புல்லரிக்கிறது இந் நிலையிலும் நமக்காக நன்றி சொல்லி வெண்பா தந்தாரே. மிக்க நன்றி டாம்மா இதை நாம் அறியத் தந்தமைக்கு. எல்லோரும் பிரார்த்திப்போம் நலம் பெற வாழ்க நலமுடன் ...!

  ReplyDelete
 4. இளமதியின் நட்பு வெண்பாக்கள் அருமை அஞ்சு :)

  ReplyDelete
 5. இளமதி அவர்கள் விரைவில் குணமடைய எங்கள் பிரார்த்தனைகளும்

  ReplyDelete
 6. பிரார்த்தனை செய்கிறேன்... விரைவில் வருவார்கள்...

  ReplyDelete
 7. இளமதி அவர்கள் நலமுடன் வருவதற்கு வேண்டுகின்றேன்..

  ReplyDelete
 8. இளமதி நலமுடன் மீண்டும் வலையுலகில் வலம்வர என்னுடைய வேண்டுதல்களும் !

  ReplyDelete
 9. நீண்ட நாட்களாக சகொவின் உடல்நிலை குறித்து மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது,
  மேலும் இவர் நிலை குறித்து அறிந்த தமிழ் பதிவர் ஒருவர் மிகுந்த மனவருத்தத்துடன் பேசினார்
  அன்பு என்பது பெயர்ச்சொல் அல்ல அது வினைச்சொல் என்பார்கள் ...
  மனதில் இருப்பதை செயலில் பதிவதும் முக்கியம் எனவே பதிந்தேன்.
  நன்றி சகோ
  நன்றி இளமதி சகோ.
  பிரார்த்தனைகளுடன்
  மது

  ReplyDelete
  Replies
  1. புரிகின்றது தம்பி ..நானும் தேடாத இடமில்லை ...அன்று மெசேஜ் அனுப்பிட்டு 10 மணி நேரம் கழித்து இவர் பதில் பார்த்ததும் சொல்லொணா ஆனந்தம் ..உங்க போஸ்ட் பார்க்கலைனா நானும் தீவிரமா முயற்சித்திருக்க மாட்டேன் ....

   Delete
 10. இளமதி விரைவில் நலமுடன் வரட்டும். .....அருமையான வெண்பாக்கள்...!

  ReplyDelete
 11. இளமதி அக்கா விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்...

  ReplyDelete
 12. இளமதி அவர்களுக்காக பிரார்த்தனைக்ளைத் தொடர்வோம் நா. நேர்மறை எண்ணங்கள் பாசிட்டிவ் எனர்ஜியை உண்டாக்கும். பிரார்த்தனைகள் வலுவாகும். நிச்சயமாகத் திரும்பி வருவார். மீண்டு வருவார். எல்லாம் வல்ல இறைவன் அதை நடத்திக் காட்டுவார். மனம் உண்மையாகவே அதை நினைத்து, அவருக்கு என்ன உடல் நிலை என்று தெரியவிட்டாலும், மனது வேதனித்தது ...பிரார்த்திப்போம் நாம் அனைவரும்...எல்லோரது கூட்டுப் பிரார்த்தனைகளும் இறைவனைச் சென்றடையும் தானே?!!! செய்வோம்...நம்பிக்கையுடன்....அருமையான பா....

  ReplyDelete
 13. சகோதரி! நீங்களும் பிசியா? வெகுநாட்கள் ஆயிற்றே..காணவில்லை?!!

  ReplyDelete
  Replies
  1. மகளுக்கு எக்ஸாம்ஸ் அண்ணா .இப்போ முடிந்துவிட்டது ..அடுத்தது இங்கே சம்மரில் வரும் pollen allergy எனக்கு வந்திருக்கு ..இங்கே வெயிலுக்கு pollen இப்போ ரொம்ப பறக்குது ..antihistamines உண்பதால் அதற்கும் drowsiness..அதான் கொஞ்சம் சரியானதும் வரேன் எல்லார்பக்கமும்

   Delete