அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

7/25/15

ஜெஸ்ஸி .....

 ஜெஸ்ஸி .......எனக்கு ரொம்ப பயம்ம்மா இருக்கு ... இவ்ளோ நேரம் வீட்ட விட்டு வெளியே தனியா இருந்ததில்லை நான்  :(  நான் அப்பா அம்மா அக்கா கூடவேதான் எல்லா இடத்துக்கும் போவேன்  .. இன்னிக்கு அப்பா தான் கதவை திறந்து என்னை வெளியே அனுப்பினாங்க ..அம்மா கூட திட்டினாங்க அப்பாவை எதுக்கு மழைல வெளில விடரீங்கன்னு ..நான் ஓடிப்போயிட்டேன் ! எனக்கு கிட்டு அண்ணா ,கருவாச்சி, கருவண்டி ,மணி கூட எல்லாம் விளையாடனும் ..


அம்மா வச்சிருக்க bird feeder கிட்ட வரும் பறவைங்கள துரத்தனும் பட்டாம்பூச்சி பிடிச்சி அம்மாவுக்கு கொடுக்கணும் அந்த குளத்துல இருக்கும்  மீனுங்களை பிடிக்கணும் ..அதான் ஓடிட்டேன் ..இப்போ எனக்கு வீட்டுக்கு போக முடியல :(
போக ஆசைதான் ஆனா wuf என்ற சத்தம் என்னை நோக்கி வருது !

இதுவரைக்கும் நான் இந்த மாதிரி ஒரு பயங்கர உருவத்தை பார்த்ததில்லை ...பயம்மா இருக்கு ஜீசஸ் ..நான் செஞ்ச தப்பெல்லாம் கண் முன்னே தெரியுது ..


நாலு கார்ன் பிளேக்ஸ் bowl தள்ளி விட்டு உடைச்சிருக்கேன் ..அப்பா சாக்ஸ் ஒளிச்சு வச்சிருக்கேன் ..என் சாப்பாட்டை தள்ளி விட்டிருக்கேன் அம்மாவை quilling செய்ய விடாம தொல்லை செஞ்சிருக்கேன் ..wall பேப்பரை கிழிச்சிருக்கேன் scratch போஸ்ட் என்னிக்குமே தொட மாட்டேன் சுவற்றில் நகத்தை கீறி வைச்சிருக்கேன் :(
அம்மா கூப்பிடும்போது ஓடியிருக்கேன் ..

வீட்டுக்கு வந்த ஆப்ரிக்கன் ஆன்டியின் பின்னலை சேர் அடியில் உக்காந்து நைசா வலிக்கிறமாதிரி இழுத்து விட்டிருக்கேன் .

அக்கா ஸ்கூல் நெட்டைட்ஸ் (opaque tights )மேலே நகம்
 வச்சி கிழிச்சிருக்கேன் ..
கிறிஸ்மஸ் மரத்தையே 3 டைம்ஸ் பிரட்டி விட்டேன் ,வீட்டுக்கு வரவங்களை சோபா கீழே ஒளிஞ்சி அடிச்சிருக்கேன் !அப்பா டிவி பாக்கும்போது மறைச்சிருக்கேன் .

அம்மா சொல்லுவாங்க ப்ரே பண்ணும்போது அமைதியா இருக்கணும்னு .நான் அப்பத்தான் எல்லா சத்தமும் செய்வேன் ,அக்கா  ஷூ லேஸ் அப்பா ஷூ லேஸ்லாம் கழட்டி விட்ருக்கேன் ..கடவுள் என் அழுகைய இப்போ எப்படி கேட்ப்பார் :(  


கத்தி அழணும்னு தோணுது ஆனா முடியலை ..அம்மா குரல் கேக்குது ஆனா வேலி கிட்ட போனா ஏதோ பயங்கர சத்தம் கேக்குது ..


ரொம்ப பசிக்குது இன்னிக்குபார்த்து வெயில் 30 டிக்ரீஸ் ..தண்ணி தாகமா இருக்கு 
அய்யோ அம்மா என்னை கூப்பிடற சத்தம் தூரத்தில் கேக்குது ..இருட்டிடுச்சு எனக்கு மயக்கமா வருது :(

அம்மா ப்ளீஸ் சுவர் ஏறி குதிச்சு வாங்க நான் இங்கதான் இருக்கேன் 
இப்போ 11 மணி இருக்கும் அம்மா வாசனை அடிக்குது டார்ச் வச்சி தேடறாங்க அக்காவும் அப்பாவும் கூட தேடறாங்க ..ஹையோ நான் இங்க இருக்கேன் மரம் மேலே ஏறி பாருங்க ..நான் இங்கேதான் இருக்கேன் ...
அம்மா அழுதிட்டே போறாங்கன்னு நினைக்கிறேன் ..மிட்னைட் 2,மணிக்கு இருட்டில் வந்து ஜெஸின்னு // கூப்பிடறாங்க அடுத்த பக்கம் wuf சத்தம் கேக்குது எப்படி போவேன் நான் ..அப்பா அம்மா கால் கிட்ட இந்த நேரம் தூங்கிட்டிருப்பேன் இங்கே மாட்டிக்காம இருந்தா .

அதிகாலை  3 மணி இருக்கும் wuf சத்தம் இல்லை ..பார்க்கிறேன் மெல்ல சுவர் ஏறி குதிச்சு பின் கதவு cat flap மூடியிருக்கே :(  அம்மா ப்ளீஸ் வாங்க..குளிருது பசிக்குது எனக்கு .....

ஆஅஹ் அம்மா வாசனை .கதவு திறக்கக்....

ஜெசீஈஈஈ ..அம்மா கத்தி என்னை தூக்கீட்டு ஓடறாங்க .எவ்ளோ ஹாப்பி அம்மாவுக்கு ..தண்ணி சாப்பாடு உடனே கொடுத்தாங்க ..
அம்மா சாரி இனி வெளியே போக மாட்டேன் ..ம்ம் அப்புறம் இப்பெல்லாம் நான் தனியா வெளில போறதே இல்லை ..ஒன்லி விண்டோ வாட்சிங்க் ..அந்த பக்கத்து வீட்டுக்கு sharpei என்ற வெரைட்டி நாய் வந்திருக்காம் .பேரு டைகர் .


கருவண்டி சொன்னான் ..விளையாட கூப்பிட்டான் ..நான் வர மாட்டேன்னு சொல்லிட்டேன் .சாப்பாடு முக்கியம் எனக்கு ..
உங்களக்கு அவன அந்த பக்கத்து வீட்டு நாயை பார்க்கணுமா ..இதான் அவன் .......................................அன்புடன் ஜெஸ்ஸிக்காக எழுதியது ஏஞ்சல் ..

7/15/15

Loud Speaker ...27 ரம்ஜான் வாழ்த்துக்கள் ... ஒரு கீரையின் பயணம் , என் வீட்டு தோட்டத்தில் . .மஞ்ச சட்டை /பச்சை சட்டை ...

இன்றைய ஒலிபெருக்கியில் ரம்ஜான் வாழ்த்துக்கள் ...
ஒரு கீரையின் பயணம் , என் வீட்டு தோட்டத்தில் .
.மஞ்ச சட்டை /பச்சை சட்டை ...
ரம்ஜான் கொண்டாடும் நட்புக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல் வாழ்த்துக்கள்.

ஒரு கீரையின் பயணம் 
======================

சுமார் ஒரு வருடம் முன்பு நம்ம ரோஜாவின் ராணி :) அவங்களேதான் 
சித்ரா சுந்தர் ..ப்ளாகில் மீள்சுழற்சி முறையில் புளிச்ச கீரை வளர்த்து படம் எடுத்து போட்டிருந்தாங்க ..

http://chitrasundars.blogspot.co.uk/2014/07/blog-post_8140.html


அங்கே பின்னூட்டத்தில்

//நான் .... //அநியாயத்துக்கு புளிச்ச கீரையை மிஸ் பண்ணிட்டேன் ஒரு மாதமுன் ..அதுதான் புளிச்ச கீரைன்னு அப்போ தெரில :)//

சித்ரா ......புளிச்ச கீரையை மிஸ் பண்ணினா பரவால்ல விடுங்க, உங்க வீட்டுக்குத்தான் ரெண்டு தொட்டியையும் அனுப்பி இருக்கேன். இந்நேரம் வந்திருக்கணுமே !!///  

சித்ரா சொன்ன மாதிரியே கீரைதொட்டிய அனுப்பி வச்சாங்க :)  கப்பலில் அனுப்பினதால் ஒரு வருஷமாச்சு இங்கிலாந்து வந்து சேர ஹாஆ ஹாஆ :)


இதோ நானும் புளிச்ச கீரை நட்டு வளர்க்கிறேன் ..:).

===============================================================================

மஞ்ச சட்டை /பச்சை சட்டை ...

இது முகபுத்தகத்தில் ஏற்கனவே பகிர்ந்தது :)

இன்னிக்கு ரெண்டு சிறுமிகள் பற்றி சொல்லபோறேன் அதில் ஒன்று நான் ..முதலில் மஞ்சள் ட்ரெஸ் ..
========================

.இந்த பொண்ணு கொஞ்சமில்ல ரொம்பவே நேர்மை கடைப்பிடிக்கும் டைப் 
யாரோ யாரையாவது மறைமுகமா கிண்டல் செய்தா கூட உணர்ச்சிவசப்பட்டு இது கண்ண கசக்கிட்டு நிக்கும் 
சரியான ஏமாளி ..யாரும் பஸ்ஸில் போக காசில்லைன்னா தன காசை கொடுத்திட்டு நடந்து வரும் .கொடுத்த பணத்தை திரும்ப கேக்காது !அழுக்கு அசிங்கம் இதெல்லாம் அறியா பெண் ..ஒரு நாள் முகமெல்லாம் கட்டியுடன் ஒருவர் சக்கர நாற்காலியில் காபிகடைக்க்கு வந்தார் அங்கிருந்த அனைவரும் மெதுவாக நகர்ந்து விட்டனர் ...இதை பார்த்து ரொம்ப கோவம் அந்த மஞ்ச சொக்காக்கு ..அந்த பெரியவர்கிட்ட போய் //உங்களுக்கு வேண்டியதை சொல்லுங்கள் ,நான் எடுத்து வருகிறேன் //என்றது ..

ஒரு நாள் நர்சரில இவங்கம்மா பாக்கும்போது இன்னோர் சின்னபிள்ளையின் வழியும் மூக்கை தனது புது ட்ரெஸ் வைத்து துடைச்சி //அழாதே பாப்பான்னு //சொல்லி தேத்திக்கிட்டிருக்கு ...

பச்சை டிரெஸ் 
=============
சரியான பயந்தாங்கொள்ளி ..ஆனா லேடி ஜேம்ஸ் பாண்ட் மாதிரி நடிக்கும் !
அவசரக்குடுக்கை ..{இது ஒண்ணே போதுமே நாந்தான்னு கண்டுபுடிச்சிருவீங்க :)..}
ஒருநாள் அவங்கம்மா பார்க்கும்போது கூட படிக்கிற பையன் கிட்ட foot ruler வச்சி மிரட்டிக்கிட்டிருக்கு 
ஒண்ணுமில்லை அந்த பையன் மூக்கொழுக்கிட்டு அழுக்கு கோலத்தில் நிக்கிறான் ..இது ரெண்டுபேருக்கும் நடுவில் foot ruler போட்டு சம்சாரம் அது மின்சாரம் விசு பாணியில் கோட்டுக்கு இந்தபக்கம் வந்துடாதேன்னு மிரட்டுது !
கூட //ஏண்டா உங்கம்மா உனக்கு க்ளீனா இருக்க சொல்லி தரல்லியானு சத்தம் வேற //  :)


இதில் நான் யார் ? .நான் மஞ்ச சொக்காவா இல்லை பச்சை சொக்காவானு கண்டு பிடிங்க  — feeling nostalgic.  
(மஞ்ச சொக்கா  ...என் மகள் )..


======================================================================
வீட்டுதோட்டத்தில் தக்காளியும் திருநீற்றுப்பச்சிலையும்( sweet basil )
Ocimum basilicum
=====================================================
பல செடிகளில் மலர்கள் மணம் வீசும் ஆனால் சில செடிகளில் மட்டுமே இலையும் வாசமுடன் இருக்கும்.இதன் இலை, தண்டு, பூ என அனைத்துப் பகுதிகளும் மிகுந்த மணமும், மருத்துவக் குணமும் கொண்டவை.பூச்சிகளை அகற்றும் கிருமி நாசினி .வீட்டுதோட்டத்தில் அழற்சி எதிர்ப்பு (Anti -inflammatory)மூலிகைகள்(ஓமம் ,துளசி ,இஞ்சி ,மஞ்சள் ,chamomile), நடுவே காய்கறிகள் பயிரிட்டால் தீமை செய்யும் பூச்சி காய் கறி செடிகளை, விரும்பாது ..
தக்காளி செடி,உருளை ,குடைமிளகாய் மற்றும்  பீட்ரூட் செடியுடன் திருநீற்றுப்பச்சிலையும் (Basil ) இணையாக வளரும்போது விளைச்சல் அமோகமாக இருக்கும் மண் வளமுடன் அனைத்து சத்துக்களுடன்  நிரம்பி சமச்சீர் சூழலை உருவாக்கும்  .முக்கியமாக தக்காளியின் சுவையும் நன்றாக இருக்கும் .இது வீட்டுத் தோட்டத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கு துணை நடவு மிக முக்கிய பங்காற்றுகிறது .


திருநீற்றுப்பச்சிலையின் சிறப்பு குணம் தோட்டத்தில் வண்ணத்து பூச்சிகளின் வருகை அதிகரித்து மகரந்த சேர்க்கைக்கு உதவுகிறது..மேலும் இதன் வாசனைக்கு தக்காளியை தாக்கும் கொம்பு புழு ,அசுவினி பூச்சிகள் நெருங்காது ..
திருநீற்றுப்பச்சிலை..
இதன் இலைகளை சமையலில் பயன்படுத்தலாம்.
சிறு நாற்று தொட்டிகளில் மண் நிரப்பி விதைகளை தூவி மண்ணால் மூடி கிச்சன் ஜன்னலோரம் வெயில் படுமாறு வைக்க வேண்டும் ..தினமும் சிறிய ஸ்ப்ரே CAN இல் நீர் தெளித்து வர 10-15 நாட்களில் தட்ப வெப்ப சூழலை பொறுத்து நாற்றுக்கள் முளைக்கும் .. விதை பட்டை (seed tape ) இல் ஒட்டியும் தோட்டத்தில் நேரடியாக நடலாம் ..அல்லது சிறு தொட்டிகளில் 10 விதைகளை நட்டு 5 வாரங்கள் கழித்து பிரித்து நடலாம் ..தொட்டி ,கண்டெயினரில் வளரும் தக்காளி செடி அருகில் ஒரு சிறு நாற்றை நட்டுவிட்டால் போதுமானது ..திருநீற்றுப்பச்சிலை தக்காளி இரண்டையும் ஒன்றாக அறுவடை செய்யலாம் ...


................................................................................................................................................................

முந்தைய பதிவுக்கு பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் நன்றி .

எங்களுக்கு பள்ளி விடுமுறை வெள்ளி முதல்.மீண்டும் சந்திப்போம் பதிவுகள் வழியே ..

அன்புடன் ஏஞ்சல் ...

7/4/15

அன்பு தோழி இளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு

அன்பு தோழி இளமதியின் வெண்பா ..நட்புக்களுக்கு 
நேற்று தம்பி கஸ்தூரி மற்றும் தங்கை கிரேஸ் பதிவை பார்த்ததும் எப்படியாவது இளமதியை தொடர்பு கொள்ளணும்னு இறைவனை வேண்டி மெசேஜ் அனுப்பினேன் ..இன்று பதில் வந்தது அவரிடமிருந்து 
////

எனைத்தேடும் உங்கள் அன்பினையும், 

வலையுலக நட்புகளின் ஆதங்கமும் கண்டு பேச்சிழந்து போனேன்.
வலையுலகினர் என்னைத் தேடிப் பதிவிட்டமை பற்றிக் கூறியமைக்கும் மிக்க மிக்க நன்றி அஞ்சு! 
அவர்கள் என்மீது கொண்ட அன்பிற்கும் அக்கறைக்கும் நன்றியாக 
உளத்தில் தோன்றியதை எழுதிப் பாக்களாகத் தருகிறேன்.
நீங்கள் விரும்பினால், முடிந்தால் என் நன்றியறிதலைக் கூறி நலமாகிடும்போது நன்றி கூறவேனும் வலைக்கு வருவேன் என்பதனையும் அவர்களுக்குக் கூறிவிடுங்கள்.


வலையுலகில் எனைத்தேடிய நட்பினருக்காக எழுதிய வெண்பாக்கள் இவை..

என்னைத் தேடிடும்நல் இதயங்களே! உங்களன்பைப்
பொன்னெனப் பொக்கிசமாய்ப் போற்றுகிறேன்! - இன்றே
இறக்கை இலாமலே பறக்கிறேன்! மேலும்
சிறப்பதைக் காண்பீரே சேர்ந்து!

நல்லதும் கெட்டதும் நம்முடைய வல்வினையே!
அல்லது வேறுண்டோ அன்புடையீர்! - சல்லடை
போட்டே சலித்தெம்மைச் சூழும்!.இதைப் புந்தியில்
ஊட்டுவீர்! என்றும் உணர்ந்து!

பிறர்வாழ வேண்டுமென எண்ணும் பெருங்குணம்
உறவாய் இணைக்குதே உம்மை! - மறவாது
கூறினேன் நன்றி! குவித்தேன் கரங்களையும்!
தேறிடுவேன் அன்பால் தெளிந்து!உளமார்ந்த நன்றியுடன்
அன்பு மறவாத
இளமதி .....

===================================================================
தோழி விரைவில் குணமடைய பிரார்த்திப்போம் நட்புக்களே ..

பட உதவி ..கூகிள் ..