அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/22/15

Loud Speaker....26

இன்றைய ஒலிபெருக்கியில் ..wishing well,செயற்கை நீரூற்றும் நாணயங்களும் ,
வீட்டு தோட்ட கிழங்கு அறுவடை ,பாகற்காய் பகோடா ..இந்த படத்தில் இருப்பது wishing well ..ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் குறிப்பா கிராமப்புறங்களில் அதிகம் பார்த்திருக்கிறேன் ..அப்போ இதெல்லாம் ஏன் எதற்குன்னு ஆராய தோன்றவில்லை :) கிணத்துக்கு கூட கூரையான்னு நினைத்துக்கொள்வேன் :)
நேற்று தந்தையர் தினத்துக்கு ஒரு ரெஸ்டாரன்ட் சென்றோம் ..அங்கே மீண்டும் இந்த விருப்ப கிணற்றை பார்த்தேன் ..நிறைய கூட்டமிருந்ததால்  கிணற்றை போனில் சுட முடியவில்லை :)
wishing well பற்றி அங்கிருந்த நட்பு ஒருவர் சொன்ன தகவல்கள் .....

இந்த குட்டி கிணற்றில் குனிந்து நமக்கு ஆசைப்பட்ட விஷயத்தை கூறி பின்பு ஒன்றிரண்டு நாணயங்களை கிணற்றில் போடுவார்கள் அப்போது எக்கோ கேட்க்கும் அது கடவுள் காதுக்கு சென்று நாம்  நினைத்த விஷயம் நடக்குமாம்!
ஸ்னோ ஒயிட் சொன்னத போல :)முன்பு காலத்தில் நீர்நிலைகள் கடவுள்கள் தேவதைகள் வாழும் இடம் என்று மக்கள் நம்பினர் ..இன்னொரு தகவலும் உண்டு பண்டைய காலத்தில் வெள்ளி செப்பு நாணயங்களே  புழக்கத்தில் இருந்தன ..இந்த உலோகங்கள் நீரிலுள்ள கிருமிகளை தூய்மையாக்கும் எனவும் மக்கள் நம்பினராம் .


நீரூற்று ..


இவற்றை இங்கே அடிக்கடி பார்ப்பதுண்டு ..எல்லா நீரூற்றிலும் நிறைய நாணயங்கள் 1penny 2 penny குவிந்திருக்கும் ..மார்கெட்டில் உள்ள செயற்கை நீரூற்றில் அள்ளினால் சுமார் £500 இந்திய மதிப்பில் 50,000 rs கிடைக்கும் அப்பப்போ காலியாகும் மீண்டும் காயின்ஸ் சேரும் ..(யாரோ நைட்  டைமில் அபேஸ் செய்றாங்கன்னு நம்ம குறுக்கு புத்தி சொல்லிச்சு )
ஒரு நாள் ஒரு இளம் ஜோடி வந்தாங்க நீரூற்றின் எதிர்புறம் திரும்பி எதையோ முனு முணுத்து தோள் பின்புறமா சில நாணயங்களை வீசிட்டு போனாங்க :)
எனக்கு ஏன் எதற்கு என்று புரியவில்லை ..இந்த விஷயத்தையும் நெட்டில் தோண்டி துழாவியதில் :)
அறிந்தது ...இப்படி நீரூற்றுகளில் மிக பிரபலமானது trevi நீரூற்று ,ரோம் நகரில் உள்ளது .போர்  வீரர்கள் இப்படி நாணயத்தை வீசினால் விரைவில் ரோம் நாட்டுக்கு திரும்புவார்கள் என்று நம்பினர் .

Throwing coins into the Trevi Fountain has become a ritual to the thousands of tourists who come from all over the world to visit Rome. There are actually two superstitious legends to explain why people are obsessed with throwing coins:  the first says that if you throw a coin from your right hand backwards over your left shoulder, you will definitely return to Rome. The second legend inspired the film "Three Coins in the Trevi Fountain", which says you must throw three coins into the fountain: the first guarantees your return to Rome, the second leads to a new romance, while the third will lead to marriage!

இப்போ புரிந்தது இளஞ்சோடிகள் //
the second leads to a new romance, while the third will lead to marriage!//இதற்குதான் நாணயங்கள வீசி இருக்காங்க..இப்படி அமெரிக்க ,ஐரோப்பிய நீரூற்றில் வீசப்படும் நாணயங்கள்  நிறைய ! அவை எங்கே போகுதாம் தெரியுமா ? caritas தொண்டு நிறுவனம் ,ஆதரவற்ற சிறுவர் மையம் ,மற்றும் பல சேவை நிறுவனங்களுக்கு செல்கிறதாம் ......
சிலர் நோயிலிருந்து குணமாக சட்டை பட்டன் ,எக்சாமில் பாசாக புத்தக காகிதம்லாம் போடுவாங்களாம் ..எல்லாம் ஒரு நம்பிக்கை!

========================================================================


எங்க வீட்டு உருளை கிழங்கு அறுவடையும் 
அதில் உடனடியா செய்த ரோஸ்ட் பொடெட்டொவும் :)

உருளை grow bag இல் வளர்த்தது ...
கிழங்கை மண் போக கழுவி ,வாயகன்ற பாத்திரத்தில் நீரில் 10 நிமிடம் வேகவைத்து potato masher இனால் லேசா அமுக்கி ..பிறகு அலுமினியம் தாளில் ஆலிவ் எண்ணெய் தெளித்து ,கிழங்குகளை பரப்பி கொஞ்சம் மிளகா ப்ளஸ் உப்பு ப்ளஸ் மிளகு தூள் சேர்த்து oven இல் 20 நிமிடம் மொறு மொருவாகும் வரை ரோஸ்ட் செய்யணும் ..கிழங்கை தோலுடன் வேக வைக்க சற்று வெடித்தாற்போல் வரும் ..தோலுடன் oven இல் பேக் செய்யணும் 

========================================================================
மிக்க நன்றி உமையாள் காயத்ரி :) க்ரிஸ்பி பாகற்காய் பகோடா .
செய்தாச்சு பலமுறை :) வடு மாங்காவும் போட்டிருக்கேன் உங்க ரெசிப்பி ..


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .
அன்புடன் ஏஞ்சல் ...
========================================================================20 comments:

 1. அனைத்துச்செய்திகளும், படங்களும், காணொளிகளும், grow bag இல் வளர்த்த உருளைக்கிழங்குகள் போல சும்மா கும்முன்னு ஜிம்முன்னு இருக்கு. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா

   Delete
 2. உலகம் முழுவதும் இது போன்ற நம்பிக்கைகள்..இருக்கிறது. பல நம்பிக்கைகள் அறிவியல் பூர்வமானதாகவும் இருப்பதாக தெரிகிறது.

  உருளைக்கிழங்கு ...சூப்பர்.

  பக்கோடா செய்து சென்னதற்கு நன்றி...

  வடுமாங்காய் ஊறவும் சொல்லுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள் உங்க ஊர் வெயில் கொஞ்சம் கடன் அனுப்புங்க நான் வேர்க்கடல கூட வளர்ப்பேன் :) மாவடு ஊறுது :)

   Delete
 3. இங்கு ஹம்பேர்க் நகரத்தில் , வெஸ்ட்பாலிகா என்ற இடத்தில் இந்த wishing well இருக்கு என தெரியும். பார்த்ததில்லை. எகிப்து நீரூற்றில் போட்டிருக்கேன் coins. இது பற்றிய தகவல்கள் புதிதாக இருக்கு. அதே சமயம் நல்ல காரியத்திற்கு பயனளிக்கிறது. நம்பிக்கைதான் வாழ்க்கையாக...
  உருளைக்கிழங்கு இம்முறை நல்ல அறுவடை உங்களுக்கு. வீட்டில் பயிரிட்டு அதன் பலனை அனுபவிப்பது என்பது எவ்வளவு மகிழ்ச்சி.
  உருளை ரோஸ்ட், பகோடா (நானும் இப்ப இதற்காகவே வாங்கிறேன் பாகற்காய்) அருமை. நல்ல பகிர்வுக்கு அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. நான் ஜெர்மனில நாலஞ்சு குட்டி கிணறுஸ் பார்த்திருக்கேன் ! அப்ப பிளாக் இல்லை ஆராய்ச்சியும் செய்யவில்ல .
   பிரியா கிழங்கு செம டேஸ்ட் ..நீங்களும் ட்ரை பண்ணுங்க

   Delete
 4. அஞ்சு,

  இந்த நாணயங்களை ஐரோப்பிய பயணங்கள் பற்றிய ஷோக்களில் பார்த்திருக்கிறேன். சான் ஃப்ரான்சிஸ்கோவிலும் பார்த்ததுண்டு. அதேபோல் வேலூரில் உள்ள தங்கக்கோவிலிலும் பார்த்தேன். எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.

  இவ்ளோஓஓ உருளைக் கிழங்கு வெளஞ்சுதா ? இது திருஷ்டி இல்லை அஞ்சு , ஆச்சரியம் !! ரோஸ்ட் செய்த உருளையும் சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா ..செடி வளர வளர மண் போட்டுட்டே வந்திருக்கணும் ..ஒரு வாரம் மிஸ் பண்ணிட்டேன் அதுக்குள்ளே உயரமா வளர்ந்து compost போட்டு மூட முடியல இல்லன்னா இன்னும் கிழங்கு கிடைத்திருக்கும்

   Delete
 5. விருப்பக் கிணறு - எல்லா இடங்களிலும் நம்பிக்கைகள்!

  ஃபேஸ்புக்கிலேயே உ.கி விவரங்கள் பார்த்தேன். கூடவே சமையல் குறிப்புமா? தோல் சீவிட்டுதானே?!

  பாகற்காய் பகோடா - ம்ம்ம்....எனக்கும் பிடிக்குமே...

  ReplyDelete
  Replies
  1. கிழங்கை தோலுடன் வேக வைக்க சற்று வெடித்தாற்போல் வரும் ..தோலுடன் oven இல் பேக் செய்யணும் non stick கடாயிலும் செய்யலாம் ஆனா டேஸ்ட் கொஞ்சம் மாறுபடும் ..இங்கே பேபி பொடேட்டோஸ் ,புது new potatoes தோலுடன் சமைக்கிறாங்க

   Delete
 6. நீரூற்று பற்றிய தகவலுக்கு நன்றி... அவரவர் நம்பிக்கை என்றும் சிறக்கும்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. சுவையான தகவல் .... உருளை கிழங்கு அறுவடை அருமை....

  ReplyDelete
  Replies
  1. thanks anu வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 8. நானும் ஒரு விஷிங் நீரூற்றுப் படத்தை பார்த்தேன்.. கதாநாயகி (சரக்கைப் போட்டுவிட்டு என நினைவு) அதில் இருந்து மூன்று காயின்களை எடுக்க அவற்றைப் வீசிய மூவரும் பல்ப் எரிந்தாற்போல் அவளை காதலிக்க கடைசியில் யாரை தேர்ந்தெடுக்கிறாள் என்பதே கதை.

  ReplyDelete
  Replies
  1. The Wishing Well என்று ஒரு படம் வந்திருக்கு ..இன்னோர் பழைய படமும் இருக்கு Anita Ekberg நடிச்சது ..அவங்க மறைவின்போது ஜனவரில டிவில போட்டாங்க

   Delete
 9. இங்கே நிறைய இடங்களில் இப்படி நீரூற்றுகளில் நாணயம் போடப்படுவதை பார்த்திருக்கேன். உருளைக்கிழங்கு ரோஸ்ட் சூப்பர். சுவையான பதிவு அக்கா!

  ReplyDelete
 10. விருப்பக் கிணறு பற்றிய தகவல்கள் வியக்க வைத்தன! தோட்டத்தில் விளைந்த உருளைக்கிழங்குகள் அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 11. சகோதரி பல நாட்கள் ஆகிவிட்டன தங்கள் வலை வந்து....இப்போது மீண்டும் வருகின்றோம்...

  இந்த கிணற்றில், நீர்நிலைகளில் காயின் போடும் பழக்கம் நம்மூரிலும் இங்கு உள்ளதே....ஆச்சரியம் அங்கும் இருப்பது...ஸோ சென்ட்மென்ட்ஸ் உலகம் முழுவதும் வியாபித்து உள்ளது....என்று சொல்லுங்கள்..

  இங்கும் கூட ராமேஸ்வரத்தில் கடலில் காயின் போடுவார்கள்....சில கோயில் குளங்களில் நம்பிக்கை என்னமோ அதேதான்....தகவல் பகிர்னதமைக்கு நன்றி...

  உருளைக்கிழங்கு ம்ம்ம்ம் பார்க்கவே நாக்கில் நீர் ஊறுகின்றது....அதுவும் ஆர்கானிக்....சூப்பர்...

  ReplyDelete
 12. கிணற்றில் கல் எறியும் பழக்கம் நம்மூரிலும் சின்னவயசில் இருந்திச்சு!ஹீ இப்ப நான் அறியேன்! உருளைக்கிழங்கு அழகாய் இருக்கு.

  ReplyDelete