அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/20/15

Loud Speaker ...25 , candy poster ,வீட்டுத்தோட்டத்தில் துணை நடவு

இன்றைய ஒலிபெருக்கியில் ..
பள்ளி சுவரில் தொங்கும் தோட்டம் ,வீட்டுத்தோட்டம் டிப்ஸ் ,candy poster ..
இது தமிழ் முரசு பத்திரிகையில் வந்த செய்தி ,முகநூலில் கலா குமரன் அய்யாவும் பகிர்ந்திருந்தார் ..

பூஜ்ஜியம் சதுர அடியில் பள்ளியில் பூந்தோட்டம்
========================================
அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி 

===============================

தேனி மாவட்டம் காக்கிவாடன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் பூஜ்ஜியம் சதுர அடியில் பள்ளியில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இப்பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பள்ளியில் போதுமான கட்டிடங்கள், காம்பவுண்டு சுவர், கழிப்பறைகள் இருப்பினும் பள்ளியில் போதுமான காலியிடம் இல்லை. பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கும், வழிபாட்டுக்கூட்டம் நடப்பதற்கும் 600 சதர அடி மட்டுமே காலியிடம் உள்ளது. எனவே பள்ளியில் தோட்டம் அமைப்பதற்குப் போதுமான இடம் இல்லை. இந்த நிலையைக் களைவதற்கு பள்ளியின் 8-ம் வகுப்பு படிக்கும் கார்த்திக், அழகர், சன்னாசி, அழகர்ராஜா, சந்திரசேகர், யாசின் அராபத், சுவேதா, புவனேஸ்வரி ஆகியோர் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து தங்களின் கணித ஆசிரியர் பாலகிருஷ்ணகுமார் அவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு வழிமுறையைக் கண்டறிந்துள்ளனர்.

பள்ளியில் நீளமானதொரு காம்பவுண்டு சுவர் உள்ளது. அதில் மக்காத பிளாஸ்டிக் கூல்டிரிங்ஸ் காலி பாட்டில்களை லாவகமாக சரம் சரமாக தொங்கச் செய்து, அதில் மண் நிரப்பி செடி வளர்ப்பது என திட்டமிட்டுள்ளனர். இதற்காக தீங்கு தரும் பிளாஸ்டிக் பாட்டில்களின் கேடுகளை எடுத்துரைத்து பொதுமக்களிடம் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்துள்ளனர்.
அதனை வெட்டித் தொங்கச் செய்து அரைக்கீரை, பாலாக்கீரை, பசலிக்கீரை, கம்பு போன்ற விதைகளை நட்டு பரிசோதைனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது வெற்றிகரமாக முளைத்து வரவே, மேலும் சில பாட்டில்களின் துணை கொண்டு பூச்செடி நாற்றுகளையும், அழகுச்செடிகளையும் நட்டுவைத்து பராமரித்து வருகின்றனர். பார்ப்பதற்கு மிக அழகாக காட்சிதரும் இந்த செடிகளை மண்ணில் நட்டு பராமரித்திருந்தால் சுமார் 200 சதுர அடி நிலம் தேவைப்பட்டிருக்கும். தற்போது பள்ளி காலியிடத்திற்கு எவ்வித குறைபாடும் இல்லாமலேயே பூஜ்ஜியம் சதுரடியில் பள்ளித்தோட்டம் அமைப்பதில் பள்ளி மாணவர்கள் வெற்றி கண்டுள்ளனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு வழி ஒன்றும் கண்டறிந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டிய இக்காலகட்டத்தில் மாணவர்களின் இதுபோன்றதொரு முயற்சி ஊக்குவிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


வாழ்த்துக்கள் பாராட்டுவோம் இதனை செயல்படுத்திய ..
கணித ஆசிரியர் பாலகிருஷ்ணகுமார்
https://www.facebook.com/m.balakrishnakumar?pnref=story
========================================================================கணவரின்  பிறந்த நாளுக்கு செல்ல மகள் செய்த birthday 


candy poster message இதை தமிழிலும் எழுதி செய்யலாம் .. you are a  gem என்று எழுதிவிட்டு gems பாக்கெட்டை ஒட்டலாம் .இல்லை லட்டு என்று எழுதி லட்டுக்கு ஒரிஜினல் லட்டையே பாக் செய்து ஒட்டலாம் .விரும்பிய மெசேஜ் எழுதிவிட்டு அந்த வரிக்கேற்ற 
ஸ்வீட்ஸ் /சாக்லேட்ஸ் ஒட்டணும் .. :) இது தான் candy poster message ..மேலும் இதை போன்ற போஸ்டர்களை pinterest இல் காணலாம் .

========================================================================
வீட்டுத்தோட்டத்தில் துணை நடவு .
===============================
.Companion Planting 
=================


இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு காய் செடிகளை அருகருகே ஒரே தொட்டி அல்லது grow bag இல் வளர்ப்பது அவற்றின் வளர்ச்சிக்கு உகந்தது .எல்லாம் கூட்டு குடும்பம் டெக்னிக்தான் .

மனிதர்களைபோலவே சில வகை பூச்சிக்களுக்கும் குறிப்பிட்ட மணம் அடர் வாசனை பிடிப்பதில்லை smile emoticon

சில பூச்சிக்களுக்கு basil எனும் சமையலுக்கு பயன்படுத்தும் ஓமம் இலையும் மஞ்சள் சாமந்தி வாசனையும் பிடிக்காது .
இவற்றை தக்காளி செடியுடன் நட்டால் கொம்பு புழுக்கள் தக்காளி செடியை அண்டாது .

வீட்டுதோட்டத்தில் அழற்சி எதிர்ப்பு மூலிகைகள்(ஓமம் ,துளசி ,இஞ்சி ,மஞ்சள் ,chamomile), நடுவே பயிரிட்டால் தீமை செய்யும் பூச்சி காய் கறி செடிகளை, விரும்பாது .

அதேபோல காரட் வெங்காயம் லீக்ஸ் இவற்றை அருகருகே நடும்போது ,வெங்காய செடியின் மணம் காரட் செடியின் மணத்தை மாஸ்க் போல மறைக்கும் காரட் root Fly/வேர் புழு காரட்டை தாக்காது .

புதினா குடும்பத்தில் உள்ள மூலிகைகளும் துணை செடிகளாக தோட்டத்தில் பயிரிடலாம் . சில துணை தாவரங்கள் நன்மை செய்யும் மகரந்த சேர்க்கை பூச்சிகளை கவர்ந்திழுக்கின்றன , சில செடிகள் நிழல் விரும்பும் செடிகளுக்கு நிழலாகவும் உதவி புரிகின்றன ..

##########################################################################################

ஒரு பழைய ஷூவை பூந்தொட்டி ஆக்கிட்டேன் :)

எங்க வீட்டு தோட்டம் ...grow bag இல் உருளை அறுவடைக்கு தயார் :)மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ..

அன்புடன் ஏஞ்சலின் ..10 comments:

 1. தங்கள் கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!..

  தந்தையின் பிறந்த நாளுக்காக மகளின் கை வண்ணம் அருமை!..

  பூந்தோட்டத்திற்குள் புகுந்து வந்த மாதிரி இருக்கின்றது..

  அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அய்யா ..

   Delete
 2. கேண்டி போஸ்டர் அருமை.
  எங்களது வாழ்த்துகளையும் தெரிவிக்கவும் ..
  லவ்லி ஸ்பீக்கர் இந்த லவுட் ஸ்பீக்கர்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ ..6 விஷயங்கள் எழுதி நாலு பப்ளிஷ் செய்தேன் :).

   Delete
 3. பள்ளி மாணவர்கள் உழைப்பை அடுத்தவார பாஸிட்டிவ் செய்திகளுக்கு எடுத்துக் கொள்கிறேன்! நன்றி.

  மகளுக்குப் பாராட்டுகள். கணவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்.

  தோட்ட செய்திகள் புதுசு. உபயோகமானவை.

  ReplyDelete
  Replies
  1. எடுத்துகோங்க ஸ்ரீராம்

   Delete
  2. http://www.tamilmurasu.org/inner_tamil_news.asp?Nid=61693

   Delete
 4. கணித ஆசிரியர் பாலகிருஷ்ணகுமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  candy poster message வித்தியாசம்... பாராட்டுகள்...

  ReplyDelete
 5. அனைத்தும் அழகோ அழகு. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  தங்களின் கணவருக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

  தங்கள் மகளின் கைவண்ணம் + இதுபோல பரிசளிக்க தாங்கள் கொடுத்துள்ள ஐடியாக்கள் சூப்பர் !

  ReplyDelete
 6. பள்ளி மாணவர்களின் முயற்சி மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று....

  மகளின் கார்ட் அசத்தல்...வாழ்த்துகள் பாராட்டுகள் குழந்தைக்கு...(மகள் எவ்வளவு பெரியவள் ஆனாலும் நமக்குக் குழந்தைதானே!

  என் வீட்டுத் தோட்டத்தில் செடி எல்லாம் கேட்டுப் பார் புழுப் பூச்சி எதுவும் அண்டாது செய்து பார்....என்று நீங்கள் பாடலாம். அருமையான டிப்ஸ் ஆர்கானிக் பூச்சி எதிர்பாளிகள்.

  பேசில் துளசி வகையைப் போன்றது இல்லையோ...அதே போல தைம் தானே ஓமம் வகையைச் சேர்ந்தது? இல்லையோ...

  அருமையான டிப்ஸ் மிக்க நன்றி!

  ReplyDelete