அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/9/15

Loud Speaker ...24

இன்றைய ஒலிபெருக்கியில் .

centenarian 100 வது பிறந்தநாள் கொண்டாடும் வின்னி பாட்டி ,
லிட்டில் சன்  /சின்ன சூரியன் ,இரவில் ஒளிரும் பாடப்புத்தக பை , இரண்டு பூனை செய்திகள் ,தல டேவிட் கமரூன் வீட்டு பூனை ,மற்றும் மாஜிக் பூனை  ..


Winnie Blagden

மே மாதம் முகப்புத்தக வாயிலாக ஒரு விண்ணப்பம் பகிரப்பட்டது 
//வின்னி எனும் பெண்மணி sheffield முதியோர் இல்லத்தில் வசிப்பவர் 31 ஆம் தேதி 100 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார் ,அவருக்கு குடும்பம் உறவினர் யாருமில்லை ஆகவே இயன்றோர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து மடல் அனுப்பி அவரை சந்தோஷபடுத்துவோம் //
அப்பகுதி பிபிசி ரேடியோ ஸ்டேஷனுக்கு வாழ்த்து மடல்களை அனுப்ப சொன்னார்கள் ..இங்கே இங்கிலாந்து   மகாராணி 100 ,105 வயது கொண்டாடும் நபருக்கு தனது கைப்பட வாழ்த்து மடல் அனுப்பி வைப்பார் ..60,70 ஆவது மண விழா கொண்டாடும் தம்பதிகளுக்கும் வாழ்த்து மடல் அனுப்புவார் ..
மூன்று வாரங்கள் முன்பே ஆதாரத்துடன் விவரங்கள் அனுப்பனும் ...
முக புத்தக தகவல் பார்த்து வின்னி பாட்டிக்கு என் பங்குக்கு நானும் அனுப்பி வைத்தேன் ..
31 தேதி பாட்டிக்கு கிடைத்த கார்ட்ஸ் ..16,000 ! .அதுமட்டுமின்றி மலர்கள் சிறு பரிசுபொருட்கள் என அன்பர்கள் பாட்டியை திக்குமுக்காட வைத்துள்ளார்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------------

லிட்டில் சன்  /சின்ன சூரியன்.இதன் ஸ்பெஷாலிட்டி சூரியனை நாம் போகுமிடத்துக்கு தூக்கி செல்லலாம் :)
இதனை கண்டுபிடித்தவர்கள்  Olafur Eliasson and engineer Frederik Ottesen
சூரிய ஒளி விளக்கை அனைவருக்கும் எளிதில் பயன்படுமாறு டிஸைன் செய்தது பிரேசில் நாட்டு மாணவர்கள் Arando, (22 years old), and Fondello, (23 years old)

மின்சார வசதியின்றி உள்ள 1.2 பில்லியன் மக்களுக்கு இது பயன்படும் என்கிறார்கள் .

 ரோட்டோர கடைகள் ,விளக்கொளி இன்றி பாடம் படிக்க இயலா பிள்ளைகள் ,சமையல் செய்யும் குடும்ப தலைவிகள் ,இயற்கை அழைப்புக்கு  (கழிப்பறை )நள்ளிரவில் செல்லும்போது ,விளக்கொளி இல்லா பாதைகளில் என எங்கும் இந்த ! சூரியன் உதவும் ..

இந்த மினி விளக்கை கழுத்தில் பென்டன்ட் போல அல்லது வாகனங்களின் முகப்பில் கடைகளின் வெளிப்புறம் ,வீட்டருகே மரத்தில் ,கொடியில் மாட்டி விட்டால் போதும் ,5 மணிநேரம் சூரிய ஒளியை சேமித்து 10 மணி நேரத்துக்கு ஒளிரும் .
மிக மிக சந்தோஷமான விஷயம் ..இதனால் சுற்று சூழலுக்கு பாதிப்பே இல்லை .
நம் தமிழ் நாட்டிலும் {ஓம் பிரணவ ஆசிரமம் தென்காசி, நெல்லை மாவட்டம்என்ற தொண்டு நிறுவனத்தில்.}
http://www.hopeabides.org/ உதவியுடன் ஆங்குள்ள சிறுவர் சிறுமியருக்கு இந்த குட்டி சூரியனை வழங்கியுள்ளார்கள் ..அக்குழந்தைகளின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் !
விரிவான தகவல்   இங்கே ...


--------------------------------------------------------------------------------------------------------------------------இரவில் ஒளிரும் பாடப்புத்தக பை இதை பற்றி ஏற்கனவே சகோதரர் வெங்கட் நாகராஜ் எழுதியிருக்கிறார் 
என்று நினைக்கிறேன் :)
என் பங்குக்கு இங்கும் பகிர்கிறேன் ..பள்ளி விட்டு வீடு திரும்பும் ஏழை மாணவர்களுக்கு படிப்பது வீட்டுப்பாடம் செய்வது மிக கடினம் .ஒரு நாள் டெல்லியைச் சேர்ந்த அனுஷீலா சஹா தன்வீட்ட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு ஏழைகள் வசிக்கும் குடிசை பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சிந்தனை அவரின் மூளையில் உதித்தது. சீல் இந்தியா நிறுவனத்தின் புதுமை உருவாக்கத்திறன் தலைவரான அனுஷீலா, ‘’ டெல்லியிலுள்ள பெரும்பாலான குடிசைப்பகுதிகளில் தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் அங்குள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மெழுகுவர்த்தி அல்லது மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் படிக்கிறார்கள். அசைந்து எரிந்து நின்றுவிடுவது போல் எரியும் சுடரின் ஒளியில் படிப்பது மிக கடினமான காரியம் என்பதோடு, படிப்பின் மீதான ஆர்வமும் வடிந்துபோய், பள்ளியை விட்டு நிற்கிற நிலைவரை செல்கின்றதும் உண்டு ‘’ என்று விரிவாக பேசுகிறார் அனுஷீலா.

இரவில் ஒளி தரும் விளக்குகளைக் கொண்ட ஒரு பையை உருவாக்க வேண்டும் என்பது இவரின் ஆவல் . சூரிய சக்தியை சேமிக்கும் தகடுகளை பையின் முன்பகுதியில் அமைத்து LED விளக்குகளை அதன் எதிர்புறமாக அமைத்திருக்கிறார். இதன் மூலம் பகலில் சாதாரணமான பை போல இருக்கும் இது, இரவில் விளக்குகளைக்கொண்ட மேஜை விளக்கு போல செயல்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதும் பள்ளியில் இருக்கும்போதும்,நடக்கும்போதும் விளையாடும்போதும் சூரிய சக்தி தொடர்ந்து சேமிக்கப்படுகிறது . 

நீரினால் பாதிப்பு ஏற்படாதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளின் எடை 620 கி. ஆகும். எளிமையாக பயன்படுத்த முடியும் இந்தப்பை மாணவர்களுக்கு தன் ஒளிமூலம் வழிகாட்டுகிறது.

இந்த ஒளிதரும் பைகளை உருவாக்க பை ஒன்றுக்கு ரூ. 1500 செலவாகிறது. சீல் இந்தியா தனது நிதியின் மூலம் உருவாக்கித்தரும் இப்பைகளை தி சலாம் பாலக் டிரஸ்ட்  

எனும் அமைப்பு பள்ளிகளுக்கு செல்லும் ஏழை குடிசைவாசி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.

சலாம் பாலக் அறக்கட்டளை ...
சலாம் பாம்பே பட வெற்றிக்குப் பிறகு 1989-ல் சலாம் பாலக் அறக்கட்டளை என்ற அமைப்பை மீரா நாயர் நிறுவி சாலையோரச் சிறுவர்களுக்குத் தொடர்ந்து பணியாற்றிவருகிறார் 

(இது நலம் முக புத்தகத்தில் நான் பகிர்ந்தது )

--------------------------------------------------------------------------------------------------------------------------

இது எங்க பிரதமர் டேவிட் கேமரூன் வீட்டு பூனை ..
வீட்டில் நிறைய எலி இருப்பதால் 10 ,டவுனிங் ஸ்ட்ரீட்டுக்கு எலி பிடிக்க வரவழைக்கபட்டவர் ..எலி வேட்டையாடுவதை தவிர இவர் எல்லாவற்றையும் செய்கிறார் அங்கு :)

--------------------------------------------------------------------------------------------------------------------------

மேஜிக் பூனை :)
இந்த பூனையின் மூக்கை தொட்டா , touch lamp ஒளிர்கிறது ,மீண்டும் பூனை மூக்கை தொட விளக்கு அணைகிறது :)

பூனை விளக்கின் மீது அமரும்போது (base of the lamp) அதன் உடலில் மின்ஆற்றல்  தேக்கி வைக்கப்படுகிறது ..capacitance,மின் தேக்கம் என்பார்கள் 
நாம் பூஸ் மூக்கை தொடும்போது ஏற்படும் மாற்றத்தை விளக்கினால் இனங்காண முடியும் ஆகவே பூனை மூக்கை தொட்டா விளக்கு எரியும் :)


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .

ஏஞ்சலின் ..

21 comments:

 1. இந்தப்பதிவினில் கொடுத்துள்ள அனைத்தும் அபூர்வமாக அதிசயத்தக்க விஷயங்கள். எல்லாக் காணொளிகளும் மிகவும் அருமை.

  லிட்டில் சன் / சின்ன சூரியன் + சூரிய சக்தியில் இயங்கும் மாணவர்களின் பைகள் + அவற்றை இலவசமாகவே வழங்கும் தொண்டு நிறுவனங்கள் என அனைத்தும் பாராட்டத்தக்கவைகளே.

  பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் வலைசரத்தில் அறிமுகம் செய்ததற்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 2. வின்னி பாட்டிக்கு வாழ்த்துக்கள்....

  இரவில் புத்தகபை...உபயோகமானது குழந்தைகளுக்கு...ஆனால் போதிய வெளிச்சம் வருமா...? பார்த்தால் குறைவாக வருகிறது மாதிரி இருக்கிறது...

  சின்ன சூரியன் அருமையான. எல்லோருக்கும் உபயோகமானது. அடிக்கடி மின்தடை...இருக்குமிடங்களுக்கு வசதியான ஒன்று....

  மேஜிக் பூனை சூப்பரா இருக்கே......க்யூட்

  நன்றி ஏஞ்சலின்


  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உமையாள் ..ஆம் பாக் லைட் கொஞ்சம் மங்கலாத்தான் இருக்கு போட்டோவில் ..தெருவோர குழந்தைகளுக்கு மெழுகு ,கெரொசின் விட இது கூடுதல் safety

   Delete
 3. வின்னிப்பாட்டிக்கு எவ்வளவு சந்தோஷமாக, மறக்கமுடியாத தினமாக இருந்திருக்கும். பாட்டிக்கு வாழ்த்துக்கள்..!

  சூப்பர் ஐடியா சூரிய விளக்கு..!!
  எங்க ஊர்ல கரண்ட் இல்லாம இருந்தபோது இது இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் என நினைக்கத்தோன்றியது.
  புத்தகப்பை அந்த மாணவர்களுக்கு எவ்வளவு பேருதவியாக இருக்கும் என்பது காணொளியில் தெரியுது. மிகவும் அருமையான
  ஐடியா.
  பிரதமர் வீட்டுப்பூனை க்யூட் ஆ இருக்கு. மேஜிக் பூசார், மற்றும் தகவல்கள் எல்லாமே அருமையாக இருக்கு அஞ்சு. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா ..ஜெர்மன் செய்தியில் தான் சின்ன சூரியன் பற்றி பார்த்தேன்

   Delete

 4. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (10/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு:
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete

 5. அன்புடையீர்! வணக்கம்!
  இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (10/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  வலைச்சர இணைப்பு:
  http://www.blogintamil.blogspot.in/2015/06/6.html

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 6. வின்னிப் பாட்டிக்கு உங்கள் மூலமாக எங்கள் வாழ்த்துகளும்.

  சூரிய விளக்கு ஒரு வரம்!

  பூனைகள் சுவாரஸ்யம்.

  ஒளிரும் பாடப்புத்தகங்கள் பை பற்றி நாங்களும் பகிர்ந்திருந்தோம்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .எங்கள் ப்ளாக் மற்றும் சகோ வெங்கட் ரெண்டு பேர் தான் இப்படிப்பட்ட நல்ல விஷயங்களை பகிர்வீர்கள் ..இனி உன்னிப்பா கவனிக்கணும் நானும் :)

   Delete
 7. அன்புள்ள சகோதரி ‘காகிதப் பூக்கள்’ ஏஞ்சலின் அவர்களுக்கு வணக்கம்! உங்களுடைய வாசகர்களில் நானும் ஒருவன். இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்கள், தங்களின் வலைத்தளத்தினை இன்றைய (10.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து பேசியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  வலைச்சர இணைப்பு இதோ:
  வலைச்சர ஆசிரியராக கோபு - 10ம் திருநாள்
  http://blogintamil.blogspot.in/2015/06/10.html

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் தகவல் தந்தமைக்கும் மிக்க நன்றி அண்ணா

   Delete
 8. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார். தங்களது பதிவுகளைக் கண்டு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 9. சின்ன சூரியன் மிகவும் உபயோகமாக இருக்கும்...

  மற்றும் பல தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 10. படங்களும் பகிர்வும் சூப்பரா இருக்கு. வலைச்சர அறிமுகம் பார்த்து இங்க வந்தேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பூந்தளிர்

   Delete
 11. மனத்துக்கு இதமான தகவல்களின் தொகுப்பு. சூரிய ஒளி சேமிப்பை முறைப்படுத்தலால் எத்தனை ஏழைகள் பயன்பெறுகிறார்கள். கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு சல்யூட்! பகிர்வுக்கு நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 12. வின்னிப்பாட்டிக்கு எங்கள் வாழ்த்துகள்!

  ஒளிரும் பாடப்புத்தகங்கள் பற்றி வாசித்த நினைவு.

  சூரிய ஒளி விளக்குகள் மிக மிக வேண்டியவை. எங்கள் உறவினர் அமெரிக்காவில் இருந்து கொண்டு இதில்தான் ஸ்டார்ட் அப் ஆரம்பித்து அது டாப் ஸ்டார்ட் அப்பில் 8 வது இடத்தைப் பிடித்துள்ளது. அவர்களும் இந்தியா, ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற வளரும் நாடுகளில் இந்த சூரிய ஒளி மூலம் உபயோகிக்கும் பொருட்களைத் தயார் செய்து வருகின்றார்கள். அவர்களது ஒரு ப்ராடக்ட் எங்கள் வீட்டிலும் உள்ளது (உறவினர் கீதாவின் உறவினர்) அவர் பெயர் சவீதா ஸ்ரீதர். முகநூலிலும் உள்ளார். நீங்களும் தொடர்பு கொள்ளலாம்...ஒரு தோழியாக மிக மிக நல்ல மனதுடையவர். அந்த ஸ்டார்ட் அப் பெண்கள் மட்டுமே சேர்ந்து நடத்தப்படுவது. பெண்கள் தான் அதில் வேலையும் செய்கின்றார்கள். சவீதாவின் ப்ராஜக்ட் வெற்றி பெற்று அவர் ஹிலேர் க்ளிண்டனைச்/க்ளிண்டனையும் சந்தித்து, வளரும் நாடுகளுக்கான இந்த ஃப்ராஜக்டிற்கு அமெரிக்காவின் உதவித் தொகையும் பெற்று நடத்தி வருகின்றார். உழைப்பாளி. சென்னையின் அருகிலுள்ள கிராமங்களுக்கு அவருடன் சென்று டெமொவும் செய்திருக்கின்றேன். (கீதா)

  பூனைகள் அழகு, சுவாரஸ்யம்...ஹஹ்ஹா எலி பிடிப்பதைத் தவிர...........அழகு...வேணும்னா உங்க கெமரூன் கிட்ட கேட்டுச் சொல்லுங்க எங்க கண்ணழகி (நாய்) சூப்பரா எலி பிடிப்பா தெரியுமா....சத்தியமாக....எங்கள் மாமியார் வீடு தனி வீடு பெரிய வீடு தோட்டத்துடன் இருப்பதால் அங்கு காரின் அடியில் சென்று பெருச்சாளிகள் வொயரை எல்லாம் பிய்த்து வந்தன. அதற்காக எங்கள் வீட்டிலிருந்து கண்ணழகி அனுப்ப சென்ற வாரம் ஒரு பெருச்சாளியை விரட்டிப் பிடித்து மழை நீர் பைப்பிற்குள் திணித்து கொன்றுவிட்டாள். நேற்று ஒரு பெருச்சாளியை விரட்டிப் பிடித்து கழுத்தைக் கவ்வி கொன்று விட்டாள். பின்னர் மகன் அவள் வாயை எல்லாம் க்ளீன் செய்தான்....இது போல சுண்டெலி, எலி எல்லாம் விரட்டி விரட்டிப் பிடித்துவிடுவாள்.

  ReplyDelete