அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

6/22/15

Loud Speaker....26

இன்றைய ஒலிபெருக்கியில் ..wishing well,செயற்கை நீரூற்றும் நாணயங்களும் ,
வீட்டு தோட்ட கிழங்கு அறுவடை ,பாகற்காய் பகோடா ..இந்த படத்தில் இருப்பது wishing well ..ஜெர்மனி மற்றும் இங்கிலாந்தில் குறிப்பா கிராமப்புறங்களில் அதிகம் பார்த்திருக்கிறேன் ..அப்போ இதெல்லாம் ஏன் எதற்குன்னு ஆராய தோன்றவில்லை :) கிணத்துக்கு கூட கூரையான்னு நினைத்துக்கொள்வேன் :)
நேற்று தந்தையர் தினத்துக்கு ஒரு ரெஸ்டாரன்ட் சென்றோம் ..அங்கே மீண்டும் இந்த விருப்ப கிணற்றை பார்த்தேன் ..நிறைய கூட்டமிருந்ததால்  கிணற்றை போனில் சுட முடியவில்லை :)
wishing well பற்றி அங்கிருந்த நட்பு ஒருவர் சொன்ன தகவல்கள் .....

இந்த குட்டி கிணற்றில் குனிந்து நமக்கு ஆசைப்பட்ட விஷயத்தை கூறி பின்பு ஒன்றிரண்டு நாணயங்களை கிணற்றில் போடுவார்கள் அப்போது எக்கோ கேட்க்கும் அது கடவுள் காதுக்கு சென்று நாம்  நினைத்த விஷயம் நடக்குமாம்!
ஸ்னோ ஒயிட் சொன்னத போல :)முன்பு காலத்தில் நீர்நிலைகள் கடவுள்கள் தேவதைகள் வாழும் இடம் என்று மக்கள் நம்பினர் ..இன்னொரு தகவலும் உண்டு பண்டைய காலத்தில் வெள்ளி செப்பு நாணயங்களே  புழக்கத்தில் இருந்தன ..இந்த உலோகங்கள் நீரிலுள்ள கிருமிகளை தூய்மையாக்கும் எனவும் மக்கள் நம்பினராம் .


நீரூற்று ..


இவற்றை இங்கே அடிக்கடி பார்ப்பதுண்டு ..எல்லா நீரூற்றிலும் நிறைய நாணயங்கள் 1penny 2 penny குவிந்திருக்கும் ..மார்கெட்டில் உள்ள செயற்கை நீரூற்றில் அள்ளினால் சுமார் £500 இந்திய மதிப்பில் 50,000 rs கிடைக்கும் அப்பப்போ காலியாகும் மீண்டும் காயின்ஸ் சேரும் ..(யாரோ நைட்  டைமில் அபேஸ் செய்றாங்கன்னு நம்ம குறுக்கு புத்தி சொல்லிச்சு )
ஒரு நாள் ஒரு இளம் ஜோடி வந்தாங்க நீரூற்றின் எதிர்புறம் திரும்பி எதையோ முனு முணுத்து தோள் பின்புறமா சில நாணயங்களை வீசிட்டு போனாங்க :)
எனக்கு ஏன் எதற்கு என்று புரியவில்லை ..இந்த விஷயத்தையும் நெட்டில் தோண்டி துழாவியதில் :)
அறிந்தது ...இப்படி நீரூற்றுகளில் மிக பிரபலமானது trevi நீரூற்று ,ரோம் நகரில் உள்ளது .போர்  வீரர்கள் இப்படி நாணயத்தை வீசினால் விரைவில் ரோம் நாட்டுக்கு திரும்புவார்கள் என்று நம்பினர் .

Throwing coins into the Trevi Fountain has become a ritual to the thousands of tourists who come from all over the world to visit Rome. There are actually two superstitious legends to explain why people are obsessed with throwing coins:  the first says that if you throw a coin from your right hand backwards over your left shoulder, you will definitely return to Rome. The second legend inspired the film "Three Coins in the Trevi Fountain", which says you must throw three coins into the fountain: the first guarantees your return to Rome, the second leads to a new romance, while the third will lead to marriage!

இப்போ புரிந்தது இளஞ்சோடிகள் //
the second leads to a new romance, while the third will lead to marriage!//இதற்குதான் நாணயங்கள வீசி இருக்காங்க..இப்படி அமெரிக்க ,ஐரோப்பிய நீரூற்றில் வீசப்படும் நாணயங்கள்  நிறைய ! அவை எங்கே போகுதாம் தெரியுமா ? caritas தொண்டு நிறுவனம் ,ஆதரவற்ற சிறுவர் மையம் ,மற்றும் பல சேவை நிறுவனங்களுக்கு செல்கிறதாம் ......
சிலர் நோயிலிருந்து குணமாக சட்டை பட்டன் ,எக்சாமில் பாசாக புத்தக காகிதம்லாம் போடுவாங்களாம் ..எல்லாம் ஒரு நம்பிக்கை!

========================================================================


எங்க வீட்டு உருளை கிழங்கு அறுவடையும் 
அதில் உடனடியா செய்த ரோஸ்ட் பொடெட்டொவும் :)

உருளை grow bag இல் வளர்த்தது ...
கிழங்கை மண் போக கழுவி ,வாயகன்ற பாத்திரத்தில் நீரில் 10 நிமிடம் வேகவைத்து potato masher இனால் லேசா அமுக்கி ..பிறகு அலுமினியம் தாளில் ஆலிவ் எண்ணெய் தெளித்து ,கிழங்குகளை பரப்பி கொஞ்சம் மிளகா ப்ளஸ் உப்பு ப்ளஸ் மிளகு தூள் சேர்த்து oven இல் 20 நிமிடம் மொறு மொருவாகும் வரை ரோஸ்ட் செய்யணும் ..கிழங்கை தோலுடன் வேக வைக்க சற்று வெடித்தாற்போல் வரும் ..தோலுடன் oven இல் பேக் செய்யணும் 

========================================================================
மிக்க நன்றி உமையாள் காயத்ரி :) க்ரிஸ்பி பாகற்காய் பகோடா .
செய்தாச்சு பலமுறை :) வடு மாங்காவும் போட்டிருக்கேன் உங்க ரெசிப்பி ..


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .
அன்புடன் ஏஞ்சல் ...
========================================================================6/20/15

Loud Speaker ...25 , candy poster ,வீட்டுத்தோட்டத்தில் துணை நடவு

இன்றைய ஒலிபெருக்கியில் ..
பள்ளி சுவரில் தொங்கும் தோட்டம் ,வீட்டுத்தோட்டம் டிப்ஸ் ,candy poster ..
இது தமிழ் முரசு பத்திரிகையில் வந்த செய்தி ,முகநூலில் கலா குமரன் அய்யாவும் பகிர்ந்திருந்தார் ..

பூஜ்ஜியம் சதுர அடியில் பள்ளியில் பூந்தோட்டம்
========================================
அரசு பள்ளி மாணவர்கள் முயற்சி 

===============================

தேனி மாவட்டம் காக்கிவாடன்பட்டி அரசு கள்ளர் நடுநிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர்கள் பூஜ்ஜியம் சதுர அடியில் பள்ளியில் பூந்தோட்டம் ஒன்றை அமைத்துள்ளனர்.

இப்பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் பயின்று வருகிறார்கள். பள்ளியில் போதுமான கட்டிடங்கள், காம்பவுண்டு சுவர், கழிப்பறைகள் இருப்பினும் பள்ளியில் போதுமான காலியிடம் இல்லை. பள்ளி மாணவர்கள் விளையாடுவதற்கும், வழிபாட்டுக்கூட்டம் நடப்பதற்கும் 600 சதர அடி மட்டுமே காலியிடம் உள்ளது. எனவே பள்ளியில் தோட்டம் அமைப்பதற்குப் போதுமான இடம் இல்லை. இந்த நிலையைக் களைவதற்கு பள்ளியின் 8-ம் வகுப்பு படிக்கும் கார்த்திக், அழகர், சன்னாசி, அழகர்ராஜா, சந்திரசேகர், யாசின் அராபத், சுவேதா, புவனேஸ்வரி ஆகியோர் ஒன்றிணைந்து ஆலோசனை செய்து தங்களின் கணித ஆசிரியர் பாலகிருஷ்ணகுமார் அவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு வழிமுறையைக் கண்டறிந்துள்ளனர்.

பள்ளியில் நீளமானதொரு காம்பவுண்டு சுவர் உள்ளது. அதில் மக்காத பிளாஸ்டிக் கூல்டிரிங்ஸ் காலி பாட்டில்களை லாவகமாக சரம் சரமாக தொங்கச் செய்து, அதில் மண் நிரப்பி செடி வளர்ப்பது என திட்டமிட்டுள்ளனர். இதற்காக தீங்கு தரும் பிளாஸ்டிக் பாட்டில்களின் கேடுகளை எடுத்துரைத்து பொதுமக்களிடம் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்துள்ளனர்.
அதனை வெட்டித் தொங்கச் செய்து அரைக்கீரை, பாலாக்கீரை, பசலிக்கீரை, கம்பு போன்ற விதைகளை நட்டு பரிசோதைனை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது வெற்றிகரமாக முளைத்து வரவே, மேலும் சில பாட்டில்களின் துணை கொண்டு பூச்செடி நாற்றுகளையும், அழகுச்செடிகளையும் நட்டுவைத்து பராமரித்து வருகின்றனர். பார்ப்பதற்கு மிக அழகாக காட்சிதரும் இந்த செடிகளை மண்ணில் நட்டு பராமரித்திருந்தால் சுமார் 200 சதுர அடி நிலம் தேவைப்பட்டிருக்கும். தற்போது பள்ளி காலியிடத்திற்கு எவ்வித குறைபாடும் இல்லாமலேயே பூஜ்ஜியம் சதுரடியில் பள்ளித்தோட்டம் அமைப்பதில் பள்ளி மாணவர்கள் வெற்றி கண்டுள்ளனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கு வழி ஒன்றும் கண்டறிந்துள்ளனர்.

சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டிய இக்காலகட்டத்தில் மாணவர்களின் இதுபோன்றதொரு முயற்சி ஊக்குவிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


வாழ்த்துக்கள் பாராட்டுவோம் இதனை செயல்படுத்திய ..
கணித ஆசிரியர் பாலகிருஷ்ணகுமார்
https://www.facebook.com/m.balakrishnakumar?pnref=story
========================================================================கணவரின்  பிறந்த நாளுக்கு செல்ல மகள் செய்த birthday 


candy poster message இதை தமிழிலும் எழுதி செய்யலாம் .. you are a  gem என்று எழுதிவிட்டு gems பாக்கெட்டை ஒட்டலாம் .இல்லை லட்டு என்று எழுதி லட்டுக்கு ஒரிஜினல் லட்டையே பாக் செய்து ஒட்டலாம் .விரும்பிய மெசேஜ் எழுதிவிட்டு அந்த வரிக்கேற்ற 
ஸ்வீட்ஸ் /சாக்லேட்ஸ் ஒட்டணும் .. :) இது தான் candy poster message ..மேலும் இதை போன்ற போஸ்டர்களை pinterest இல் காணலாம் .

========================================================================
வீட்டுத்தோட்டத்தில் துணை நடவு .
===============================
.Companion Planting 
=================


இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு காய் செடிகளை அருகருகே ஒரே தொட்டி அல்லது grow bag இல் வளர்ப்பது அவற்றின் வளர்ச்சிக்கு உகந்தது .எல்லாம் கூட்டு குடும்பம் டெக்னிக்தான் .

மனிதர்களைபோலவே சில வகை பூச்சிக்களுக்கும் குறிப்பிட்ட மணம் அடர் வாசனை பிடிப்பதில்லை smile emoticon

சில பூச்சிக்களுக்கு basil எனும் சமையலுக்கு பயன்படுத்தும் ஓமம் இலையும் மஞ்சள் சாமந்தி வாசனையும் பிடிக்காது .
இவற்றை தக்காளி செடியுடன் நட்டால் கொம்பு புழுக்கள் தக்காளி செடியை அண்டாது .

வீட்டுதோட்டத்தில் அழற்சி எதிர்ப்பு மூலிகைகள்(ஓமம் ,துளசி ,இஞ்சி ,மஞ்சள் ,chamomile), நடுவே பயிரிட்டால் தீமை செய்யும் பூச்சி காய் கறி செடிகளை, விரும்பாது .

அதேபோல காரட் வெங்காயம் லீக்ஸ் இவற்றை அருகருகே நடும்போது ,வெங்காய செடியின் மணம் காரட் செடியின் மணத்தை மாஸ்க் போல மறைக்கும் காரட் root Fly/வேர் புழு காரட்டை தாக்காது .

புதினா குடும்பத்தில் உள்ள மூலிகைகளும் துணை செடிகளாக தோட்டத்தில் பயிரிடலாம் . சில துணை தாவரங்கள் நன்மை செய்யும் மகரந்த சேர்க்கை பூச்சிகளை கவர்ந்திழுக்கின்றன , சில செடிகள் நிழல் விரும்பும் செடிகளுக்கு நிழலாகவும் உதவி புரிகின்றன ..

##########################################################################################

ஒரு பழைய ஷூவை பூந்தொட்டி ஆக்கிட்டேன் :)

எங்க வீட்டு தோட்டம் ...grow bag இல் உருளை அறுவடைக்கு தயார் :)மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் ..

அன்புடன் ஏஞ்சலின் ..6/9/15

Loud Speaker ...24

இன்றைய ஒலிபெருக்கியில் .

centenarian 100 வது பிறந்தநாள் கொண்டாடும் வின்னி பாட்டி ,
லிட்டில் சன்  /சின்ன சூரியன் ,இரவில் ஒளிரும் பாடப்புத்தக பை , இரண்டு பூனை செய்திகள் ,தல டேவிட் கமரூன் வீட்டு பூனை ,மற்றும் மாஜிக் பூனை  ..


Winnie Blagden

மே மாதம் முகப்புத்தக வாயிலாக ஒரு விண்ணப்பம் பகிரப்பட்டது 
//வின்னி எனும் பெண்மணி sheffield முதியோர் இல்லத்தில் வசிப்பவர் 31 ஆம் தேதி 100 வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார் ,அவருக்கு குடும்பம் உறவினர் யாருமில்லை ஆகவே இயன்றோர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து மடல் அனுப்பி அவரை சந்தோஷபடுத்துவோம் //
அப்பகுதி பிபிசி ரேடியோ ஸ்டேஷனுக்கு வாழ்த்து மடல்களை அனுப்ப சொன்னார்கள் ..இங்கே இங்கிலாந்து   மகாராணி 100 ,105 வயது கொண்டாடும் நபருக்கு தனது கைப்பட வாழ்த்து மடல் அனுப்பி வைப்பார் ..60,70 ஆவது மண விழா கொண்டாடும் தம்பதிகளுக்கும் வாழ்த்து மடல் அனுப்புவார் ..
மூன்று வாரங்கள் முன்பே ஆதாரத்துடன் விவரங்கள் அனுப்பனும் ...
முக புத்தக தகவல் பார்த்து வின்னி பாட்டிக்கு என் பங்குக்கு நானும் அனுப்பி வைத்தேன் ..
31 தேதி பாட்டிக்கு கிடைத்த கார்ட்ஸ் ..16,000 ! .அதுமட்டுமின்றி மலர்கள் சிறு பரிசுபொருட்கள் என அன்பர்கள் பாட்டியை திக்குமுக்காட வைத்துள்ளார்கள் .
------------------------------------------------------------------------------------------------------------------------

லிட்டில் சன்  /சின்ன சூரியன்.இதன் ஸ்பெஷாலிட்டி சூரியனை நாம் போகுமிடத்துக்கு தூக்கி செல்லலாம் :)
இதனை கண்டுபிடித்தவர்கள்  Olafur Eliasson and engineer Frederik Ottesen
சூரிய ஒளி விளக்கை அனைவருக்கும் எளிதில் பயன்படுமாறு டிஸைன் செய்தது பிரேசில் நாட்டு மாணவர்கள் Arando, (22 years old), and Fondello, (23 years old)

மின்சார வசதியின்றி உள்ள 1.2 பில்லியன் மக்களுக்கு இது பயன்படும் என்கிறார்கள் .

 ரோட்டோர கடைகள் ,விளக்கொளி இன்றி பாடம் படிக்க இயலா பிள்ளைகள் ,சமையல் செய்யும் குடும்ப தலைவிகள் ,இயற்கை அழைப்புக்கு  (கழிப்பறை )நள்ளிரவில் செல்லும்போது ,விளக்கொளி இல்லா பாதைகளில் என எங்கும் இந்த ! சூரியன் உதவும் ..

இந்த மினி விளக்கை கழுத்தில் பென்டன்ட் போல அல்லது வாகனங்களின் முகப்பில் கடைகளின் வெளிப்புறம் ,வீட்டருகே மரத்தில் ,கொடியில் மாட்டி விட்டால் போதும் ,5 மணிநேரம் சூரிய ஒளியை சேமித்து 10 மணி நேரத்துக்கு ஒளிரும் .
மிக மிக சந்தோஷமான விஷயம் ..இதனால் சுற்று சூழலுக்கு பாதிப்பே இல்லை .
நம் தமிழ் நாட்டிலும் {ஓம் பிரணவ ஆசிரமம் தென்காசி, நெல்லை மாவட்டம்என்ற தொண்டு நிறுவனத்தில்.}
http://www.hopeabides.org/ உதவியுடன் ஆங்குள்ள சிறுவர் சிறுமியருக்கு இந்த குட்டி சூரியனை வழங்கியுள்ளார்கள் ..அக்குழந்தைகளின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம் !
விரிவான தகவல்   இங்கே ...


--------------------------------------------------------------------------------------------------------------------------இரவில் ஒளிரும் பாடப்புத்தக பை இதை பற்றி ஏற்கனவே சகோதரர் வெங்கட் நாகராஜ் எழுதியிருக்கிறார் 
என்று நினைக்கிறேன் :)
என் பங்குக்கு இங்கும் பகிர்கிறேன் ..பள்ளி விட்டு வீடு திரும்பும் ஏழை மாணவர்களுக்கு படிப்பது வீட்டுப்பாடம் செய்வது மிக கடினம் .ஒரு நாள் டெல்லியைச் சேர்ந்த அனுஷீலா சஹா தன்வீட்ட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு ஏழைகள் வசிக்கும் குடிசை பகுதிகளில் ஏற்படும் மின்வெட்டு பிரச்சனையைத் தீர்ப்பதற்கான சிந்தனை அவரின் மூளையில் உதித்தது. சீல் இந்தியா நிறுவனத்தின் புதுமை உருவாக்கத்திறன் தலைவரான அனுஷீலா, ‘’ டெல்லியிலுள்ள பெரும்பாலான குடிசைப்பகுதிகளில் தொடர்ச்சியான மின்வெட்டுகளினால் அங்குள்ள பள்ளி செல்லும் குழந்தைகள் மெழுகுவர்த்தி அல்லது மண்ணெண்ணெய் விளக்கின் மூலம் படிக்கிறார்கள். அசைந்து எரிந்து நின்றுவிடுவது போல் எரியும் சுடரின் ஒளியில் படிப்பது மிக கடினமான காரியம் என்பதோடு, படிப்பின் மீதான ஆர்வமும் வடிந்துபோய், பள்ளியை விட்டு நிற்கிற நிலைவரை செல்கின்றதும் உண்டு ‘’ என்று விரிவாக பேசுகிறார் அனுஷீலா.

இரவில் ஒளி தரும் விளக்குகளைக் கொண்ட ஒரு பையை உருவாக்க வேண்டும் என்பது இவரின் ஆவல் . சூரிய சக்தியை சேமிக்கும் தகடுகளை பையின் முன்பகுதியில் அமைத்து LED விளக்குகளை அதன் எதிர்புறமாக அமைத்திருக்கிறார். இதன் மூலம் பகலில் சாதாரணமான பை போல இருக்கும் இது, இரவில் விளக்குகளைக்கொண்ட மேஜை விளக்கு போல செயல்படுகிறது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போதும் பள்ளியில் இருக்கும்போதும்,நடக்கும்போதும் விளையாடும்போதும் சூரிய சக்தி தொடர்ந்து சேமிக்கப்படுகிறது . 

நீரினால் பாதிப்பு ஏற்படாதவண்ணம் உருவாக்கப்பட்டுள்ள சூரிய சக்தி தகடுகளின் எடை 620 கி. ஆகும். எளிமையாக பயன்படுத்த முடியும் இந்தப்பை மாணவர்களுக்கு தன் ஒளிமூலம் வழிகாட்டுகிறது.

இந்த ஒளிதரும் பைகளை உருவாக்க பை ஒன்றுக்கு ரூ. 1500 செலவாகிறது. சீல் இந்தியா தனது நிதியின் மூலம் உருவாக்கித்தரும் இப்பைகளை தி சலாம் பாலக் டிரஸ்ட்  

எனும் அமைப்பு பள்ளிகளுக்கு செல்லும் ஏழை குடிசைவாசி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது.

சலாம் பாலக் அறக்கட்டளை ...
சலாம் பாம்பே பட வெற்றிக்குப் பிறகு 1989-ல் சலாம் பாலக் அறக்கட்டளை என்ற அமைப்பை மீரா நாயர் நிறுவி சாலையோரச் சிறுவர்களுக்குத் தொடர்ந்து பணியாற்றிவருகிறார் 

(இது நலம் முக புத்தகத்தில் நான் பகிர்ந்தது )

--------------------------------------------------------------------------------------------------------------------------

இது எங்க பிரதமர் டேவிட் கேமரூன் வீட்டு பூனை ..
வீட்டில் நிறைய எலி இருப்பதால் 10 ,டவுனிங் ஸ்ட்ரீட்டுக்கு எலி பிடிக்க வரவழைக்கபட்டவர் ..எலி வேட்டையாடுவதை தவிர இவர் எல்லாவற்றையும் செய்கிறார் அங்கு :)

--------------------------------------------------------------------------------------------------------------------------

மேஜிக் பூனை :)
இந்த பூனையின் மூக்கை தொட்டா , touch lamp ஒளிர்கிறது ,மீண்டும் பூனை மூக்கை தொட விளக்கு அணைகிறது :)

பூனை விளக்கின் மீது அமரும்போது (base of the lamp) அதன் உடலில் மின்ஆற்றல்  தேக்கி வைக்கப்படுகிறது ..capacitance,மின் தேக்கம் என்பார்கள் 
நாம் பூஸ் மூக்கை தொடும்போது ஏற்படும் மாற்றத்தை விளக்கினால் இனங்காண முடியும் ஆகவே பூனை மூக்கை தொட்டா விளக்கு எரியும் :)


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் .

ஏஞ்சலின் ..