அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/23/15

Loud Speaker ...23

இன்றைய ஒலிபெருக்கியில் 

உயிர் காக்கும் பொட்டு ,என் வீட்டு தோட்டம் ,
அயோடின் குறைபாடும் உயிர் காக்கும் நெற்றி பொட்டும் ... jeevan  bindi 

அயோடின் சத்து இயற்கையாகவே  பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை நிரம்பிய  மண்ணில் வளரும் தாவரங்கள உண்பதின் மூலம் மற்றும் அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.
ஆனால் சமீப காலமாக ,மனிதனின் பேராசையால் கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற   அளவுக்கதிகமான  ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

தைராய்டு சுரப்பியிலிருந்து, தைராக்ஸின் ஹோர்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன் கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் ( Goitre ) முதலிய குறைபாடுகள் தோன்றும்.ஆகவே, அயோடின் மிக மிக அவசியம்.

அயோடின்  குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை நோய் ,புத்திக் கூர்மை இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி இன்மை . பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப்போதல், மாதவிலக்குப் பிரச்சினைகள் ,fibrocystic breast cancer ஏற்படும் என்பது பலர் அறியாத விஷயம்.மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக் கலைதல், 
குறைப் பிரசவம், எடை குறைந்த குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. அயோடின் பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தினமும் . ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கிவிடுவதால் நன்மை கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதனால் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப்படுகிறது.

அயோடின் supplement மற்றும் அயோடின் சேர்த்த உப்பு அனைத்தும் நகர்ப்புற மக்களுக்கு எளிதில் கிடைக்கும் ..ஆனால் கிராமப்புற மக்களுக்கு அயோடின் குறைபாடு பற்றிய விழிப்புணர்வு இல்லை ..அயோடின் உப்பு மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பூஜ்ஜியம் :(..அப்படி வழங்கப்படும் மாத்திரைகள தினமும் உண்ண மறக்கிறார்கள் பலர் .
ஆகவே சிங்கப்பூர் தன்னார்வ நிறுவனம் grey foundation  மற்றும் அரசு சாரா மருத்துவ  நிறுவனம் நீல் வசந்த் ஆகியவை இணைந்து உத்திர பிரதேச  பகுதியில் பழங்குடி மக்களுக்கு குறிப்பா மகளிருக்கு  எளிதில் அயோடின் சக்தி கிடைக்க வழி கண்டுபிடித்துள்ளார்கள் ..
அது.........உயிர் காக்கும் பொட்டு  ..jeevan bindi ..பொட்டு அணியா கிராமப்புற பெண்கள் காண்பது அரிது ..அவர்களுக்கு பிரத்யேகமாக  iodine patch சேர்த்த வட்ட பொட்டுக்களை வினியோகித்துள்ளார்கள் ..ஒவ்வொரு பொட்டின் பின்பக்கம் அயோடின் சேர்க்கப்பட்டுள்ளது .அணிபவர் உடலில் தோல் வழியே உடலில் அன்றாட தேவையான 150–200 microgramஅயோடின் உறியப்பட்டு சேர்ந்துவிடும் ..தற்சமயம் மகளிர் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை அடிப்படையில்  30 அயோடின் பொட்டுக்களை விநியோகித்து உள்ளார்கள் ..தோலின் தன்மை ,வியர்த்தல்  ஆகியவற்றை பொறுத்து இதன் உட்கிரகிக்கும் தன்மையும் இருக்கும் .குறைந்தபட்சம் 8 மணிநேரம் இப்பொட்டு அணிய வேண்டும் .கர்ப்பிணிகளும் இதனை அணியலாம் ..
(பசுமை விடியலுக்கு எழுதிய பதிவு )

........................................................................................................................................................................
என் வீட்டு தோட்டத்தில் தொட்டியில் வளர்த்த வெந்தயக்கீரை ..

மற்றும் கொத்தமல்லி 
நன்றி வணக்கம் அடுத்த பதிவில் சந்திப்போம் :)

******

24 comments:

 1. உப்புச்சப்புள்ள பதிவு. பொட்டான தகவல்களை பொட்டில் அடித்தது போலச்சொல்லியுள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா உப்பு அதிகம் வேண்டாம் கீரை காய்கறிகள் இலுள்ள உப்பே போதுமானது ..என் வீட்டுதோட்டத்தை ரசித்ததற்கு நன்றி அண்ணா

   Delete
 2. காட்டியுள்ள காணொளியும் விளக்கங்களும் வெகு அருமை.

  ReplyDelete
 3. உங்கள் வீட்டுத் தோட்டத்தில் தொட்டியில் வளர்த்த பசுமையான வெந்தயக்கீரையும், கொத்தமல்லியும் ... ஆஹா, பார்க்கவே ஜோராக்கீதூஊ. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 4. கடல் நீரிலிருந்து எடுக்கப்படும் - உப்பில் அயோடின் இல்லையா?!..

  இயற்கையாகவே கடல் நீரில் இருந்து கிடைக்கும் உப்பில் அயோடின் இருக்கின்றது.

  அதை தனியார் உப்பு நிறுவனங்கள் சுத்திகரிப்பு என்ற பெயரில் நீக்கி விடுகின்றனர்..

  இதைப் பற்றி பலவிதமான செய்திகள் உலவுகின்றன.

  எனினும் - பதிவிலிருந்து மேலதிகமான விவரங்களை அறிந்து கொள்ள முடிகின்றது.. மகிழ்ச்சி..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அய்யா ..கடல் உப்பில் இயற்கையாவே கிடைக்கும் அயோடின் சத்தை சுத்திகரிக்கும்போது இழக்கிறோம் ..
   refined என்ற பேரில் பல இயற்கை சத்துக்கள் வீணாகுது ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
   ...

   Delete
 5. உப்பு குறைவே என்றும் நலம்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ...மிக சரியா சொன்னீங்க .

   Delete
 6. உப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2015/04/Salt.html

  சாதாரணமானவர்களால் தான் சாதனையே...!

  ReplyDelete
  Replies
  1. இதோ வருகிறேன்

   Delete
 7. அயோடின் பிந்தி நல்ல கண்டுபிடிப்பு.


  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அந்த மகளிர் அயோடின் சத்தை பெற இது சூப்பர்ப் ஐடியா ..பெண்கள் மறவா விஷயம் பொட்டு ..ஒருத்தர் மறந்தாலும் இன்னொருவர் நினைவுகாட்டுவார் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 8. வணக்கம்

  அயடின் குறைபாடு பற்றி மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்ள் நெற்றியில் வைக்கும் பொட்டில் இப்படியா விடயம் அடங்கியுள்ளது என்பதை தங்களின் பதிவு வழிதான் அறிந்தேன் வீடியோ அசத்தல். பகிர்வுக்கு நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ரூபன் ...சமீபத்தில் யாஹூ செய்தியில்தான் படித்தேன்

   Delete
 9. அட! இந்த போட்டு மேட்டர் புதுசா இருக்கே!!! கலர்புல்லாவும் இருக்கே!! சூப்பர்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மைதிலி ..ஆமாம்பா அந்த மகளிர் அயோடின் சத்தை பெற இது சூப்பர்ப் ஐடியா

   Delete
 10. அயோடின் பற்றிய தகவல்களோடு, கூடவே அயோடின் பொட்டு பற்றிய புதிய தகவலைத் தந்தமைக்கு நன்றி. (ஒரு பக்கம் உப்பை குறையுங்கள் என்கிறார்கள். இன்னொரு பக்கம் அயோடின் குறைவு என்று உப்பை, சேர்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.)

  பாத்தி பாத்தியாக கொத்தமல்லி செடிகளைப் பார்த்த எனக்கு , தொட்டியில் உள்ள அவற்றைப் பார்த்ததும் வித்தியாசமாகத் தெரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா ..உப்பு வேண்டாம் நமக்கு ..பழங்குடியினருக்கு எந்த வசதியும் கிட்டா நிலை ..
   கொத்த மல்லி இங்கும் தரையில் போடலாம் ஒரு பிரச்சினை ..நிலம் எப்பவும் நீர்த்தன்மையுடன் இருக்கும் இங்கே .
   அதனால் slugs மற்றும் நத்தைகள் நடமாட்டம் அதிகம் ..அதற்கு தனி REPELLENTS விக்கிறாங்க ..அதில் எனக்கு உடன்பாடில்லை ..இங்கே கிச்சனில் மூலிகை வளர்க்க தனி அமைப்பே உண்டு ..

   Delete
 11. சூப்பர் ஐடியா அயோடின் பொட்டு பற்றிய பதிவு. வீட்டுத்தோட்டம் பார்க்வே நல்லா இருக்கு. வீட்டுஉற்பத்திக்கு எப்பவுமே தனி ருசிதான். அதில் சமைக்கும்போது சந்தோசம் இருக்கும். நல்ல பதிவு. நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா ..நீங்க கொத்தமல்லி போட்டாச்சா

   Delete
 12. அயோடின் டாட் அருமை
  ஆமா இந்த செய்தியெல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது

  ReplyDelete
  Replies
  1. யாஹூ நியூஸ் ,டைம்ஸ் of இந்திய எல்லாத்திலும் வந்திச்சு ..தமிழில் உடனே பகிர்ந்தாச்சு

   Delete
 13. அயோடின் பெண்களின் உடலில் சேர்வதற்க்கு ஆக்கபூர்வமாக யோசித்து செயல்படுத்தியிருப்பவர்களுக்கு நம் பாராட்டுகள். உங்கள் தோட்டத்து பசுமை கண்ணுக்கும் வயிற்றுக்கும் நல்விருந்து ஏஞ்சலின்.

  ReplyDelete
 14. அயோடின் குறித்த இன்ஃபோ புதிது. அது உடலுக்குத் தேவை என்று அறிந்திருந்தாலும் இந்த இன்ஃபோ....யாஹூ நியூஸ் பார்த்த நினைவு....

  இங்கு அயோடின் உப்பு விற்கப்படுவதால் அதற்கும் சில மருத்துவர்கள் நல்லதல்ல என்றும் சொல்லுகின்றார்கள்.

  வெந்தயக் கீரைம் கொத்தமல்லி அழகோ அழகு....ஆர்கானிக்! ஆஹா!!!

  ReplyDelete