அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/1/15

Loud Speaker ...22 ,வியக்க வைக்கும் விசாலினி !!

வியக்க வைக்கும் விசாலினி !!
திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10). பிறந்த போது வாய்பேச முடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.
இன்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயதில்  இச்சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் எனச் சொல்லப்படும் பாளையங்கோட்டையில் உள்ள சங்கர் நகரில் இருக்கிறது விசாலினியின் வீடு. இந்தச் சிறுமியின் சாதனைகளை அறிந்தால் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்பீர்கள்.

இவர் ஐந்து சாதனைகள் செய்திருக்கிறார். அதில் ஒன்று உலக சாதனை. அதென்ன? ஐ.க்யூ எனும் (IQ- Intelligent Quotient) நுண்ணறிவுத் திறன் சோதனையில் உலகிலேயே அதிக ஐ.க்யூ அளவாக 225 புள்ளிகள் பெற்று விசாலினி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

உலக அளவிலான ஐ.க்யூ வில் கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் கிம் யுங் யோங் (Kim Ung-Yong) என்ற சீனர். இவரது ஐ.க்யூ அளவு 210. அதைக் கடந்த ஆண்டு, ஐ.க்யூ. நிபுணர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பல கட்ட பரிசோதனைத் தேர்வுகளில் முறியடித்து, 225 என்ற அளவை எட்டிப்பிடித்திருக்கிறார்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் விசாலினியின் பெயர் இடம்பெற வில்லை. பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை இடம்பெற முடியும். இதனால் தற்போது கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்.(thanks hindu )

http://www.kvisalini.com/

இது தோழி கௌசல்யாவின் பதிவு ..இந்த சிறுமியின் சாதனைகள் எண்ணிலடங்கா !

http://www.kousalyaraj.com/2012/01/blog-post_03.html#.VUOLCY5Vikp

இச்சிறுமி பற்றி மேலும் வாசிக்க http://www.kousalyaraj.com/2015/05/blog-post.html#.VUMCBFKZvtlநண்பர்கள்
BTech MTech BE மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கணினி துறைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறாள். இதுவரை மொத்தம் 25 இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செமினார்கள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என நடத்தி இருக்கிறாள். கணினி நிறுவனங்களுக்கும் சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறாள். இதுவரை 127 மேடைகளில் உரையாற்றி இருக்கிறாள்.
இதுவரை 8 சர்வ தேச கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு (Keynote Address) உரையாற்றி இருக்கிறாள்.


9வது முறையாக நாளை அதாவது மே 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற இருக்கும் 'கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில்' சிறப்புரை ஆற்ற அழைக்கப் பட்டிருக்கிறாள். கணினி துறையில் Cloud Computing in Google Apps for Education என்ற தலைப்பில் காலை 10.30 - 11.30 ஒரு மணி நேரம் உரை ஆற்றுகிறாள்.
வாழ்த்துக்கள் + பாராட்டுகள் விசாலினி !!!
....................................................................................................................................................

இன்றைய தட்ஸ் தமிழ்  செய்தி 
கூகுள் மாநாட்டில் சிறப்புரையாற்றும் நெல்லையின் அறிவாளிப் பெண் விசாலினி!http://tamil.oneindia.com/news/india/nellai-girl-vislaini-participate-google-conference-225897.html
....................................................................................................................................................
இது விசாலினியின் வலைத்தளம் 


இச்சிறுமியை பாராட்டி வாழ்த்தி மென்மேலும் சாதனைகள் புரிய ஊக்குவிப்போம் .

மேலுள்ள தகவல்கள் அனைத்திற்கும் நன்றி  தோழி கௌசல்யா மற்றும் உணவு உலகம்  சங்கரலிங்கம் அண்ணா .
அன்புடன் ஏஞ்சல் ...

12 comments:

 1. பாராட்டப்பட வேண்டிய பெண் விசாலினி. எங்கள் பாஸிட்டிவ் செய்திகளிலும் பகிர்கிறேன். நன்றி.

  ReplyDelete
 2. விசாலினி அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வியக்க வைக்கும் தகவல்களுக்கு நன்றி. விசாலினிக்கு என் வாழ்த்துக்கள் மேன் மேலும் சாதனைகள் புரிய ....!

  ReplyDelete
 4. விசாலினியைப் பற்றி முகநூலில் படித்தேன்! இளவயதில் சாதனை படைக்கும் அவருக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 5. புலன்கள் நன்றாக வேலைசெய்தாலும் சோம்பியும் தளர்ந்தும் தன்னம்பிக்கையின்றியும் புலம்பித்திரிபவர்கள் மத்தியில் விசாலினியின் சாதனை வியக்கவைக்கிறது. குழந்தையின் திறமையை வெளிக்கொணர அவரது பெற்றோர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்குரியவை. பகிர்வுக்கு நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 6. சாதனைகளின் சிகரமான நம் தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்ப்பெண் விசாலினி மேலும் பல சாதனைகளை படைத்து தமிழர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென தங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

  வியப்பளிக்கும் இந்தப் பகிர்வுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  நட்புடன் கோபு

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 9. அருமையான பகிர்வு
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 10. இடைவெளி அதிகம்... வெக்கேசன் டூர்?

  ReplyDelete
  Replies
  1. இல்லை சகோ .இங்கே வெகேஷன் ஆகஸ்ட் தான் ..கொஞ்சம் பிஸி லைப்ரரியில் க்விலிங் வகுப்பு ,மகளுக்கு எக்ஸாம்ஸ் அப்புறம் சர்ச் வேலை ..சீக்கிரம் அடுத்த போஸ்ட் போடறேன் :)

   Delete
 11. உங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்! நன்றி!

  ReplyDelete