அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/19/15

தொடாதீங்க ! தொடரும் ..குடி குடியை கெடுக்கும்நீண்ட நாட்களாக தம்பி சரவணனின் //தொட்டால் தொடரும் குறும்படத்தை பார்த்தது முதல் ..மதுவின் தீமை பற்றி எழுத யோசித்துகொண்டிருந்தேன் ..இப்போதான் நேரம் கிடைத்தது ..
குறும்படத்தை இது வரை  பார்க்காதவங்க இந்த காணொளி  பார்க்கவும்


 சம்பவம் 1...

//என்னை விட்டு தூர போவீங்களா  // மிக மெல்லிய குரலில் கண்களில் பயத்தை தேக்கி வைத்து கணவரை பார்த்து நிறை மாத கர்ப்பிணி பிரமிளா கேட்டதற்கு கணவன் செல்வம் சொல்கிறார்  //சே சே இதோ பக்கத்துக்கு தெரு கடை  வரைக்கும் தான் போவேன் !..எப்பவும் விளையாட்டு என்று செல்ல கோபத்துடன் நகர்கிறாள் ..
பிரமிளாவுக்கு பல குழப்பங்கள் அதன் காரணம் இரண்டு வாரங்களாக ஒரு கெட்ட கனவு ..எதோ கெட்ட சம்பவம் நடக்கபோகுது என்று உள்ளுணர்வு ,கணவர் கையில் ஒரு குடி பான மது வகை !இருப்பது போல கனவு..
 பிரமிளாவின் கணவருக்கு குடி சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இல்லை ..ஆனால் எதற்கு இப்படி ஒரு கனவு?வெளிநாட்டு வாழ்வில் பார்ட்டி ,கும்மாளம் எதிலும் கலக்காத தம்பதிகள் இவர்கள் .. 
..இவர்களுக்கு மணமாகி 5 வருடம் கழித்து தவமாய் தவமிருந்து முதல் குழந்தை உண்டாகியிருக்கிறாள் .டெலிவரி நெருங்குவதால் கணவர் விடுமுறை எடுத்து விட்டார் அன்று கடைசி நாள் வேலை ..அதிக குழப்பத்துடன் இருந்த பிரமிளா தேம்பி அழுது //இன்னிக்கு என்னுடன் இருங்க வேலைக்கு போக வேண்டாம் என்று கெஞ்சினாள் ..கனவு பற்றி மூச்சு விடவில்லை எவ்வளவோ கெஞ்சியும் செல்வம் ஒரே நாள் வேலைக்கு போயிட்டு வரேன் என்று செல்கிறார் ..இரவு அவர் வரும் வரை கடவுள் படம் முன்னே பிரமிளா அமர்ந்திருந்தாள் .பல சந்தேகம் அவளுக்கு குழந்தை பிறந்து 5 நாட்கள் மருத்துவமனையில் இருக்கணும் அநேரம் யாரும் உறவினர் குழந்தை பிறப்பு கொண்டாட்டம் என்ற இவரை மது அருந்த வற்புருத்துவாரோ .என்று கலக்கம் வேறு .  (சில வெளிநாட்டு வாழ் நம்மூர் மக்களிடம் இது ஒரு வழக்கம் சாபக்கேடு )...என்ன ஆனாலும் இவளுக்கு ஏற்றுகொள்ள இயலா விஷயம் மது பழக்கம் ..பிரமி 3 சகோதரர்களுடன் பிறந்த பெண் அவர்கள்  குடும்பத்தில் வெற்றிலை பாக்கு கூட போடாதவர்கள் ....
சிகரெட் மது மணமே பிடிக்காது ..10 மணிக்கு வீடு திரும்பிய செல்வம் பிரமீளாவிடம் //இன்று பாதி வேலை நேரத்தில் ரகசியமாக உணவு இடைவேளை நேரத்தில் மதுவருந்திய 4 பேரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க  ஒருவனுக்கு பிறந்த நாள் என மது  குடித்து உள்ளனர் ..எனையும் கேட்டாங்க இன்று கடினமான வேலை வேறு ...கொஞ்சம் டெம்ப்டேஷன் ஆக இருந்தது ..ஆனா நான் எக்காலமும் மதுவை தொட மாட்டேன்  வேணாம்னு மறுத்து விட்டேன்  ..
மானேஜர் என்னை கூப்பிட்டு அவர்களால் வண்டி ஓட்ட முடியாது என  வீட்டுக்கு கொண்டு போய் விட சொன்னாங்க ..நான் நீ தனியாக எனக்காக காத்திருப்பாய் என்று சொல்லி மறுக்க வேறொருவர் அந்த குடி மக்களை அழைத்து சென்று விட்டார் ..// என்றான் ..
வாய் பிளந்து கேட்டுகொண்டிருந்த பிரமிளா இறைவனுக்கு நன்றி செலுத்தி உறங்க சென்றாள் ...


அடுத்த நாள் அதிகாலை தொலை பேசியழைத்தது 
செல்வத்தின் நண்பர் சொன்னது ///முந்தைய இரவு பணியில் குடித்த நால்வரும் அவர்களை வாகனத்தில் அழைத்து சென்ற ஒருவரும் ஆக்சிடண்டில் மரணம் //

இறந்த அனைவருக்கும் 2,3 வயதில் பிள்ளைகள் ஒருவரின் மனைவி 3 மாத கர்ப்பிணி 

இந்த கேடுகெட்ட ஜென்மங்களை கொண்டு விட சென்றவருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது ..


..............................................................................................................................................................................................................................விளையாட்டாய் பொழுதுபோக்காய் ஆரம்பிப்பதுதான் போதை பழக்கம் ..இங்கே ஒரு  நம்மூர் மாணவனை அவன் நண்பர்கள் இடைவெளிவிடாம டிரிங்க்ஸ் கொடுத்து அதற்கு அடிமையாக்கி உள்ளனர் ..குடிக்க வச்சிட்டு அவன் உளறுவதை ரசிப்பார்களாம் :(..
மொடா குடியன் இல்லை நான் ஒரு பெக் தான் குடிப்பேன்   சும்மா டைம் பாஸ் ஜாலி என்றால் ..தயவுசெய்து உங்களுக்கு திருமணமே வேண்டாம் ..ஒரு பெக் தான் அனைத்துக்கும் காரணம் ...
இங்கே வெளிநாட்டில் ரோட்டில் புரளும் குடி மகன்களை அதிகம் பார்க்கிறேன் ..இவர்களுக்கு குடி பழக்கத்தை மறைத்து ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணை மணமுடிக்க  வைக்க எப்படித்தான் மனம் வருதோ தெரியவில்லை ..

ஒரு நாள் //நான் கமல்ஹாஸன் என்று சொல்லிக்கொண்டே ஓர் இள வயது மனிதன் நடு ரோட்டில் ஆடுகிறான் //அருகில் அவனது மனைவி சின்ன பெண் 20 வயதுதான் இருக்கும் கையில் 3 வயது குழந்தை ..குழந்தை வீரிட்டு அழுகிறது ...இந்த கூத்து இங்கிலாந்தில் நான் பார்த்தது ..
நான் தமிழ் என்பது அவருக்கு தெரியாது ..ஆனால் பின்பு ஒரு நாள் லைப்ரரியில் தமிழ் புக்ஸ் எடுக்கும்போது என்னை பார்த்து அவமானத்தில் குறுகினாள் ..மூன்று வருடம் கழித்து போன வாரம்  நடு ரோட்டு டான்சர் கமல் ஹாசனை பார்த்தேன் 30 வயதில் 60 வயது தோற்றம் :(  கடையில் கடனுக்கு மது பாட்டில் தருமாறு கெஞ்சிகொண்டிருந்தான் . இவரும் நண்பர்களால் அழிந்தவர்தான் ..

பின் குறிப்பு ..நான் கணவர் மகள்  மூவரும் இங்கே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அழைப்புக்களை முற்றிலும் தவிர்ப்போம் ..
ஒரே ஒரு முறை சென்றோம் .கணவருக்கு ஒரு கோப்பை எனக்கு அரை கோப்பை நீட்டப்பட்டது ..
நாங்கள் வேண்டாம்  என்றோம் அடுத்த கேள்வி//ஏன்  குடிக்க மாட்டீங்க ? (கேட்ட ஆளை  கற்பனையில்மனசுக்குள்ள  கட்டையால் அடித்து நொறுக்கி விட்டேன் )  .இப்படிபட்டோரால்தான் குடிமக்கள் உருவாகிறாங்க .  பிறந்தநாள் 2 வயது பிள்ளைக்கு ..அந்த விழாவை சாக்கிட்டு இதுங்க குடிக்க ஒரு விழா தேவையா ?
அது வெளிநாட்டினராக இருந்தால்கூட மன்னிப்புண்டு ..அது நம்ம ஊர் கூட்டம் ..  அதிலும் நம்மூர் அம்மணிகள் மது கோப்பையை ஸ்டைலா ஏந்திக்கொண்டு என்னை ஒரு நக்கல் பார்வை வேறு பார்த்தார்கள் ..
சிறு சபலம் மீண்டுமீண்டும் ஒரு கெட்ட பழக்கத்துக்கு அடிமையாக்கும் 
குடிகார சமூகத்தை எப்படி யார் திருத்துவது ?
சுய கட்டுப்பாடு மனிதருக்கு  மிக அவசியம்...
ஆகவே தொடவே தொடாதீங்க ..சாராயத்தை தொட்டால் ...அவமானம் ,சீரழிவு ,கடன் தீரா நோய்  இறுதியில்  அகால மரணம்  எல்லாம் உங்களை இன்ஸ்டன்டா தொடரும் .

23 comments:

 1. முதல் சம்பவம் சோகம்... பொறுப்பில்லாமல் குடித்தால் ..
  ஒ குடிப்பதே பொறுப்பற்ற வேலைதானே..
  அவா உள்ஸ்வட்டர் போடாமல் இருக்க மாட்டா..
  அவா கலாச்சாரம் அது..
  நம்ம அவாளுக்கு டப் பைட் கொடுக்கனுமா இல்லையா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ :) இன்னிக்கு உங்க பின்னூட்டம் பார்த்து மட மடன்னு எழுதிட்டேன் ...முதல் சம்பவம் நிஜ சம்பவம் ...
   wine கூட அருந்தாத பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மாநியரையும் நான் அறிவேன் ..நம் மக்களுக்கு கொஞ்சம் பணம் வந்ததும் சில ஹை GLASS பழக்கமும் தொடருகிறது ...அற்ப சந்தோசம் அற்பாயுசில் கொண்டு விடுத்தது

   Delete
 2. //நான் கணவர் மகள் மூவரும் இங்கே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அழைப்புக்களை முற்றிலும் தவிர்ப்போம் ..//

  மிகவும் நல்ல கொள்கை. வாழ்த்துகள்.

  //ஒரே ஒரு முறை சென்றோம் .கணவருக்கு ஒரு கோப்பை எனக்கு அரை கோப்பை நீட்டப்பட்டது .. நாங்கள் வேண்டாம் என்றோம்//

  இதைக் கேட்கவே மிக்க மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது. தங்களின் மன உறுதியைப் பாராட்டுகிறேன். நல்லதொரு பயனுள்ள விழிப்புணர்வுப்பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா ..இன்று முகபுத்தகத்தில் ஒரு செய்தி வாசித்தேன் மாணவன் தந்தை குடிப்பதை எதிர்த்து சூஸைட் செய்தானென்று :(
   எனது தூரத்து உறவினர் ஒரு அக்காவின் கணவர் லாரி மோதி இறந்தார் ..லாரி டிரைவர் குடித்து வண்டியோட்டியுள்ளார் .
   அக்கா அப்போ 2 மாத கர்ப்பிணி ,அவர்களை அந்த குடும்பத்தின் துக்கத்தை பார்த்து வளர்ந்தேன் ..
   .ரொம்ப நாலா எழுதனும்னு இருந்த பதிவு இன்று எழுதி விட்டேன்

   Delete
 3. படத்தேர்வுகளும் காணொளிக்காட்சிகளும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அண்ணா

   Delete
 4. நான் பார்த்தவரை நண்பர்களின் வற்புருத்தலால், முதன் முதலாக டேஸ்ட் செய்பவர்களே மிகவும் அதிகம். சிலரால் எளிதில் அதனை வெறுத்து வெளியேறி தப்பிக்க முடிகிறது. பலரால் தப்பிக்கவே முடியாமல் அதற்கு அடிமையாக மட்டுமே முடிகிறது. :(

  ReplyDelete
 5. //எனது தூரத்து உறவினர் ஒரு அக்காவின் கணவர் லாரி மோதி இறந்தார் ..லாரி டிரைவர் குடித்து வண்டியோட்டியுள்ளார் .
  அக்கா அப்போ 2 மாத கர்ப்பிணி, அவர்களை அந்த குடும்பத்தின் துக்கத்தை பார்த்து வளர்ந்தேன் ..//

  மிகவும் வருத்தமானதோர் செய்திதான் :(

  சிறுவயதில் நம் மனதில் பதிந்துவிடும் இதுபோன்ற துயர சம்பவங்கள், நாம் அதுபோன்ற தவறினை நம் வாழ்க்கையில் செய்யக்கூடாது என்ற நல்லதொரு பாடத்தினை நமக்குக் கற்பிக்கும்.

  ReplyDelete
 6. //கேட்ட ஆளை கற்பனையில்மனசுக்குள்ள கட்டையால் அடித்து நொறுக்கி விட்டேன்//

  இந்த மன உறுதி, அதுவும் வெளிநாட்டில் எத்தனை பேருக்கு வரும்? குறும்படம் இப்போதுதான் பார்க்கிறேன். நண்பர்கள் ருபக் மற்றும் ஸ்பை நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

  //அதிலும் நம்மூர் அம்மணிகள் மது கோப்பையை ஸ்டைலா ஏந்திக்கொண்டு என்னை ஒரு நக்கல் பார்வை வேறு பார்த்தார்கள் .//

  :))))))))))))))))))))))))

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ..அந்த காணொளியில் ஸ்பை ,ரூபக் பெஸ்ட் நடிப்பு .
   இங்கு வரும்போது பெரும்பாலான நம் மக்கள் நல்ல்வங்கலாதான் வருவாங்க ..பிள்ளைகள் வளர வளர ஒரு குழப்பம் எந்த கல்ச்சரை ஏற்பதென்று ..அடுத்தது நம்மை பிள்ளைங்க உற்று கவனிகிறாங்க என்பதை பல பெற்றோர் மறக்கின்றனர் ..

   Delete
  2. ஒரு கிராப்ட் வகுப்பில் இரண்டு பஞ்சாபி பெண்கள் நடுவில் தெரியாம அமர்ந்து விட்டேன் ,,ரெண்டும் புகை வண்டி .எனக்கு மயக்கம் வந்து விட்டது ..நான் அடிக்கடி பாலசந்தர் பட ஹீரோயின் போல கற்பனையில் அடிச்சு துவைசிடுவேன் இப்படிதான் :)))

   Delete
 7. Replies
  1. அறைன்தார்போல சூப்பர் பதில் சகோ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 8. விளையாட்டாக பொழுது போக்கு என ஆரம்பிப்பது தான் - இந்த பாழாய்ப்போன மதுப்பழக்கம்..

  கண்முன்னே மதுவினால் நிகழும் தீமைகளைக் கண்டும் - திருந்தாத இழிபிறவிகளை என்னென்று சொல்வது!..

  திருந்த வேண்டும். மதுவின் பிடியிலிருந்து திரும்ப வேண்டும்!..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அய்யா ..இன்னும் எத்தனையோ சம்பவங்கள் நடக்குது ...சில சம்பவங்கள் நெஞ்சு வேடிக்குமளவு பாரமானவை ..
   அரசாங்கம் முயற்சி எடுக்கணும் .தீயவற்றை ஒழிக்க .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 9. இங்கு இதுபோன்ற சம்பவங்கள் அதிரித்திருக்கு எனச்சொல்லாம்.அதிலும் சின்னவயதிலேயே குடியை இந்நாட்டவர்கள் மாதிரி நம்மவர் பிள்ளைகள் பழகுவது கவலையாக இருக்கு. இளவயதினர் எதிர்காலம் எப்படி இருக்குமென யோசிக்கசெய்கிறது அதற்கு பெற்றாரும், இங்கிருக்கும் ப்ரீயான வாழ்க்கையும் காரணமாகின்றது. மேல்நாகரீகம் என்ற போர்வையில் எங்கட விழாக்களில் இதுதான் முதலிடம் பிடிக்கிறது. இங்கு நான் பெண்கள் கைகளில் பப்ளிக் ஆக இன்னமும் காணவில்லை. ஆண்கள் வந்ததும் அந்த இடத்துக்கே போய்விடுவார்கள். கடந்த மாதம் இக்குடியினால் எங்களுக்கு தெரிந்த யூனியில் படிக்கும் கெட்டிக்கார மாணவன் ஒருவர் பலியாகியிருக்கிறார். கண்டிப்பா எல்லாரும் உணரவேண்டும். காணொளி நான் பார்த்தேன் அருமை. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..அருமையா சொல்லியிருக்கீங்க ..ஜெர்மனில சிகரெட் டிஸ்பென்சர் மெஷின் ரோடெல்லாம் இருக்கும் ஆனாலும் புகை பிடிப்பவங்க குறைவு ..மேலும் அவங்க ஒயின் மட்டுமே அருந்துவாங்க இங்கே யூகேவில் ரொம்ப மோசம் ..14 ,15 எல்லாம் cost cutter ஷாப்பில் மதுபான வகை வாங்குதுங்க ..id இல்லாம விக்க கூடாது ஆனா மனசாட்சிய ஒளிச்சு சிறு கடைக்காரங்க விக்கிறாங்க ....இங்கே நாம் குடிக்காட்டியும் பெர்த்டே பார்ட்டி வைச்சா விருந்தினருக்கு ட்ரிங்க்ஸ் தரணுமாம்.ஆகவே நாங்க பார்ட்டி வைப்பதில்லை ..

   Delete
 10. விடாது கருப்பு....மாதிரியான பழக்கம் இது...நல்ல விழிப்புணர்வு பதிவு சகோ.

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள்..உண்மைதான் ..சிறு சபலம் ஆர்வ கோளாறுதான் விடாது தொடரும் .

   Delete
 11. பெரும்பாலான விபத்துக்களுக்கும் குடும்ப சண்டைகளுக்கும் காரணாமாய் இருக்கிறது இந்தப் பழக்கம். எப்போதாவது குடிக்கும் பழக்கம் இருந்தாலும் அதுவும் தவறு என்று உணர்த்தியிருக்கிறீர்கள்... மிக மிக அருமை... என்னுடைய குறும்படக் காணொளியைப் பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி...

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் தம்பி ..பல நேரங்களில் சண்டை சச்சரவுகள் ,கஷ்டங்களும் இப்பழக்கத்திற்கு காரணம்
   உங்க நேர்மையான பதில் ரொம்ப பிடிச்சிருக்கு ...வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி ..

   Delete
 12. இப்போதான் படித்தேன் அஞ்சு, மிகவும் மனம் வருந்தக்கூடிய நிகழ்ச்சிகள். குடியால் அநியாயமாக இழிகிறார்கள், உண்மையில் இங்கத்தைய வெள்ளைகளுக்கு அளவு தெரியும், நம்மவருக்குத்தான் அளவு கிடையாது, குடிக்க தொடங்கினால் ஒரு கை பார்த்து விடுவார்கள்.

  சரியா சொன்னீங்க, இங்கு எமக்கு நீட்டும்போது வேண்டாம் எனச் சொன்னால் நம்மவர்கள் ஏதோ கிராமத்தவரைப் பார்ப்பதுபோல பார்க்கிறார்கள்... எம் ஆர் ராதா சொன்னதுபோல கன்றி ஃபுரூட்ட்ட்ட்ட் ஆம் குடிக்காதோர்:)

  ReplyDelete