அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/23/15

Loud Speaker ...23

இன்றைய ஒலிபெருக்கியில் 

உயிர் காக்கும் பொட்டு ,என் வீட்டு தோட்டம் ,
அயோடின் குறைபாடும் உயிர் காக்கும் நெற்றி பொட்டும் ... jeevan  bindi 

அயோடின் சத்து இயற்கையாகவே  பூமியின் மண் படிவங்களில் கலந்துள்ளது. அயோடின் சத்தை நிரம்பிய  மண்ணில் வளரும் தாவரங்கள உண்பதின் மூலம் மற்றும் அம் மண்ணில் தேங்கும் நீர் ஆகியவற்றிலிருந்து மனிதனுக்கு அயோடின் சத்து கிடைக்கிறது.
ஆனால் சமீப காலமாக ,மனிதனின் பேராசையால் கால இடைவெளி இல்லாமல் திரும்பத் திரும்பப் பயிரிடுவதால் மண் வளம் குன்றிப் போதல் போன்ற   அளவுக்கதிகமான  ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் இயற்கையில் இருந்து அயோடின் சத்து முழுமையாகக் கிடைப்பது இல்லை.

தைராய்டு சுரப்பியிலிருந்து, தைராக்ஸின் ஹோர்மோன் உற்பத்தியாவதற்கு அயோடின் தேவை. அது குறைவாக இருந்தால், உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி குறைவதுடன் கழுத்தில் தைராய்டு சுரப்பியில் வீக்கம் ( Goitre ) முதலிய குறைபாடுகள் தோன்றும்.ஆகவே, அயோடின் மிக மிக அவசியம்.

அயோடின்  குறைபாட்டால் முன் கழுத்துக் கழலை நோய் ,புத்திக் கூர்மை இல்லாமல் மந்தப் போக்கு ஏற்படும். வயதுக்கேற்ற உடல், மன வளர்ச்சி இன்மை . பெண்களுக்கு பூப்பெய்வது, கருத்தரிப்பது தள்ளிப்போதல், மாதவிலக்குப் பிரச்சினைகள் ,fibrocystic breast cancer ஏற்படும் என்பது பலர் அறியாத விஷயம்.மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கருக் கலைதல், 
குறைப் பிரசவம், எடை குறைந்த குழந்தை பிறத்தல், சிசு இறப்பு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. அயோடின் பற்றாக்குறையை ஈடுகட்ட உணவில் நாள்தோறும் அயோடின் கலந்த தரமான உப்பைச் சேர்த்துக்கொள்ளவேண்டும் என டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தினமும் . ஒரே முறையில் அயோடினைத் தூக்கி விழுங்கிவிடுவதால் நன்மை கிடையாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இதனால் அயோடின் சத்து சமையல் உப்பில் கலந்து தரப்படுகிறது.

அயோடின் supplement மற்றும் அயோடின் சேர்த்த உப்பு அனைத்தும் நகர்ப்புற மக்களுக்கு எளிதில் கிடைக்கும் ..ஆனால் கிராமப்புற மக்களுக்கு அயோடின் குறைபாடு பற்றிய விழிப்புணர்வு இல்லை ..அயோடின் உப்பு மாத்திரைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பூஜ்ஜியம் :(..அப்படி வழங்கப்படும் மாத்திரைகள தினமும் உண்ண மறக்கிறார்கள் பலர் .
ஆகவே சிங்கப்பூர் தன்னார்வ நிறுவனம் grey foundation  மற்றும் அரசு சாரா மருத்துவ  நிறுவனம் நீல் வசந்த் ஆகியவை இணைந்து உத்திர பிரதேச  பகுதியில் பழங்குடி மக்களுக்கு குறிப்பா மகளிருக்கு  எளிதில் அயோடின் சக்தி கிடைக்க வழி கண்டுபிடித்துள்ளார்கள் ..
அது.........உயிர் காக்கும் பொட்டு  ..jeevan bindi ..பொட்டு அணியா கிராமப்புற பெண்கள் காண்பது அரிது ..அவர்களுக்கு பிரத்யேகமாக  iodine patch சேர்த்த வட்ட பொட்டுக்களை வினியோகித்துள்ளார்கள் ..ஒவ்வொரு பொட்டின் பின்பக்கம் அயோடின் சேர்க்கப்பட்டுள்ளது .அணிபவர் உடலில் தோல் வழியே உடலில் அன்றாட தேவையான 150–200 microgramஅயோடின் உறியப்பட்டு சேர்ந்துவிடும் ..தற்சமயம் மகளிர் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை அடிப்படையில்  30 அயோடின் பொட்டுக்களை விநியோகித்து உள்ளார்கள் ..தோலின் தன்மை ,வியர்த்தல்  ஆகியவற்றை பொறுத்து இதன் உட்கிரகிக்கும் தன்மையும் இருக்கும் .குறைந்தபட்சம் 8 மணிநேரம் இப்பொட்டு அணிய வேண்டும் .கர்ப்பிணிகளும் இதனை அணியலாம் ..
(பசுமை விடியலுக்கு எழுதிய பதிவு )

........................................................................................................................................................................
என் வீட்டு தோட்டத்தில் தொட்டியில் வளர்த்த வெந்தயக்கீரை ..

மற்றும் கொத்தமல்லி 
நன்றி வணக்கம் அடுத்த பதிவில் சந்திப்போம் :)

******

5/19/15

தொடாதீங்க ! தொடரும் ..குடி குடியை கெடுக்கும்நீண்ட நாட்களாக தம்பி சரவணனின் //தொட்டால் தொடரும் குறும்படத்தை பார்த்தது முதல் ..மதுவின் தீமை பற்றி எழுத யோசித்துகொண்டிருந்தேன் ..இப்போதான் நேரம் கிடைத்தது ..
குறும்படத்தை இது வரை  பார்க்காதவங்க இந்த காணொளி  பார்க்கவும்


 சம்பவம் 1...

//என்னை விட்டு தூர போவீங்களா  // மிக மெல்லிய குரலில் கண்களில் பயத்தை தேக்கி வைத்து கணவரை பார்த்து நிறை மாத கர்ப்பிணி பிரமிளா கேட்டதற்கு கணவன் செல்வம் சொல்கிறார்  //சே சே இதோ பக்கத்துக்கு தெரு கடை  வரைக்கும் தான் போவேன் !..எப்பவும் விளையாட்டு என்று செல்ல கோபத்துடன் நகர்கிறாள் ..
பிரமிளாவுக்கு பல குழப்பங்கள் அதன் காரணம் இரண்டு வாரங்களாக ஒரு கெட்ட கனவு ..எதோ கெட்ட சம்பவம் நடக்கபோகுது என்று உள்ளுணர்வு ,கணவர் கையில் ஒரு குடி பான மது வகை !இருப்பது போல கனவு..
 பிரமிளாவின் கணவருக்கு குடி சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இல்லை ..ஆனால் எதற்கு இப்படி ஒரு கனவு?வெளிநாட்டு வாழ்வில் பார்ட்டி ,கும்மாளம் எதிலும் கலக்காத தம்பதிகள் இவர்கள் .. 
..இவர்களுக்கு மணமாகி 5 வருடம் கழித்து தவமாய் தவமிருந்து முதல் குழந்தை உண்டாகியிருக்கிறாள் .டெலிவரி நெருங்குவதால் கணவர் விடுமுறை எடுத்து விட்டார் அன்று கடைசி நாள் வேலை ..அதிக குழப்பத்துடன் இருந்த பிரமிளா தேம்பி அழுது //இன்னிக்கு என்னுடன் இருங்க வேலைக்கு போக வேண்டாம் என்று கெஞ்சினாள் ..கனவு பற்றி மூச்சு விடவில்லை எவ்வளவோ கெஞ்சியும் செல்வம் ஒரே நாள் வேலைக்கு போயிட்டு வரேன் என்று செல்கிறார் ..இரவு அவர் வரும் வரை கடவுள் படம் முன்னே பிரமிளா அமர்ந்திருந்தாள் .பல சந்தேகம் அவளுக்கு குழந்தை பிறந்து 5 நாட்கள் மருத்துவமனையில் இருக்கணும் அநேரம் யாரும் உறவினர் குழந்தை பிறப்பு கொண்டாட்டம் என்ற இவரை மது அருந்த வற்புருத்துவாரோ .என்று கலக்கம் வேறு .  (சில வெளிநாட்டு வாழ் நம்மூர் மக்களிடம் இது ஒரு வழக்கம் சாபக்கேடு )...என்ன ஆனாலும் இவளுக்கு ஏற்றுகொள்ள இயலா விஷயம் மது பழக்கம் ..பிரமி 3 சகோதரர்களுடன் பிறந்த பெண் அவர்கள்  குடும்பத்தில் வெற்றிலை பாக்கு கூட போடாதவர்கள் ....
சிகரெட் மது மணமே பிடிக்காது ..10 மணிக்கு வீடு திரும்பிய செல்வம் பிரமீளாவிடம் //இன்று பாதி வேலை நேரத்தில் ரகசியமாக உணவு இடைவேளை நேரத்தில் மதுவருந்திய 4 பேரை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க  ஒருவனுக்கு பிறந்த நாள் என மது  குடித்து உள்ளனர் ..எனையும் கேட்டாங்க இன்று கடினமான வேலை வேறு ...கொஞ்சம் டெம்ப்டேஷன் ஆக இருந்தது ..ஆனா நான் எக்காலமும் மதுவை தொட மாட்டேன்  வேணாம்னு மறுத்து விட்டேன்  ..
மானேஜர் என்னை கூப்பிட்டு அவர்களால் வண்டி ஓட்ட முடியாது என  வீட்டுக்கு கொண்டு போய் விட சொன்னாங்க ..நான் நீ தனியாக எனக்காக காத்திருப்பாய் என்று சொல்லி மறுக்க வேறொருவர் அந்த குடி மக்களை அழைத்து சென்று விட்டார் ..// என்றான் ..
வாய் பிளந்து கேட்டுகொண்டிருந்த பிரமிளா இறைவனுக்கு நன்றி செலுத்தி உறங்க சென்றாள் ...


அடுத்த நாள் அதிகாலை தொலை பேசியழைத்தது 
செல்வத்தின் நண்பர் சொன்னது ///முந்தைய இரவு பணியில் குடித்த நால்வரும் அவர்களை வாகனத்தில் அழைத்து சென்ற ஒருவரும் ஆக்சிடண்டில் மரணம் //

இறந்த அனைவருக்கும் 2,3 வயதில் பிள்ளைகள் ஒருவரின் மனைவி 3 மாத கர்ப்பிணி 

இந்த கேடுகெட்ட ஜென்மங்களை கொண்டு விட சென்றவருக்கு திருமணம் நிச்சயமாகியிருந்தது ..


..............................................................................................................................................................................................................................விளையாட்டாய் பொழுதுபோக்காய் ஆரம்பிப்பதுதான் போதை பழக்கம் ..இங்கே ஒரு  நம்மூர் மாணவனை அவன் நண்பர்கள் இடைவெளிவிடாம டிரிங்க்ஸ் கொடுத்து அதற்கு அடிமையாக்கி உள்ளனர் ..குடிக்க வச்சிட்டு அவன் உளறுவதை ரசிப்பார்களாம் :(..
மொடா குடியன் இல்லை நான் ஒரு பெக் தான் குடிப்பேன்   சும்மா டைம் பாஸ் ஜாலி என்றால் ..தயவுசெய்து உங்களுக்கு திருமணமே வேண்டாம் ..ஒரு பெக் தான் அனைத்துக்கும் காரணம் ...
இங்கே வெளிநாட்டில் ரோட்டில் புரளும் குடி மகன்களை அதிகம் பார்க்கிறேன் ..இவர்களுக்கு குடி பழக்கத்தை மறைத்து ஒரு அப்பாவி கிராமத்து பெண்ணை மணமுடிக்க  வைக்க எப்படித்தான் மனம் வருதோ தெரியவில்லை ..

ஒரு நாள் //நான் கமல்ஹாஸன் என்று சொல்லிக்கொண்டே ஓர் இள வயது மனிதன் நடு ரோட்டில் ஆடுகிறான் //அருகில் அவனது மனைவி சின்ன பெண் 20 வயதுதான் இருக்கும் கையில் 3 வயது குழந்தை ..குழந்தை வீரிட்டு அழுகிறது ...இந்த கூத்து இங்கிலாந்தில் நான் பார்த்தது ..
நான் தமிழ் என்பது அவருக்கு தெரியாது ..ஆனால் பின்பு ஒரு நாள் லைப்ரரியில் தமிழ் புக்ஸ் எடுக்கும்போது என்னை பார்த்து அவமானத்தில் குறுகினாள் ..மூன்று வருடம் கழித்து போன வாரம்  நடு ரோட்டு டான்சர் கமல் ஹாசனை பார்த்தேன் 30 வயதில் 60 வயது தோற்றம் :(  கடையில் கடனுக்கு மது பாட்டில் தருமாறு கெஞ்சிகொண்டிருந்தான் . இவரும் நண்பர்களால் அழிந்தவர்தான் ..

பின் குறிப்பு ..நான் கணவர் மகள்  மூவரும் இங்கே பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அழைப்புக்களை முற்றிலும் தவிர்ப்போம் ..
ஒரே ஒரு முறை சென்றோம் .கணவருக்கு ஒரு கோப்பை எனக்கு அரை கோப்பை நீட்டப்பட்டது ..
நாங்கள் வேண்டாம்  என்றோம் அடுத்த கேள்வி//ஏன்  குடிக்க மாட்டீங்க ? (கேட்ட ஆளை  கற்பனையில்மனசுக்குள்ள  கட்டையால் அடித்து நொறுக்கி விட்டேன் )  .இப்படிபட்டோரால்தான் குடிமக்கள் உருவாகிறாங்க .  பிறந்தநாள் 2 வயது பிள்ளைக்கு ..அந்த விழாவை சாக்கிட்டு இதுங்க குடிக்க ஒரு விழா தேவையா ?
அது வெளிநாட்டினராக இருந்தால்கூட மன்னிப்புண்டு ..அது நம்ம ஊர் கூட்டம் ..  அதிலும் நம்மூர் அம்மணிகள் மது கோப்பையை ஸ்டைலா ஏந்திக்கொண்டு என்னை ஒரு நக்கல் பார்வை வேறு பார்த்தார்கள் ..
சிறு சபலம் மீண்டுமீண்டும் ஒரு கெட்ட பழக்கத்துக்கு அடிமையாக்கும் 
குடிகார சமூகத்தை எப்படி யார் திருத்துவது ?
சுய கட்டுப்பாடு மனிதருக்கு  மிக அவசியம்...
ஆகவே தொடவே தொடாதீங்க ..சாராயத்தை தொட்டால் ...அவமானம் ,சீரழிவு ,கடன் தீரா நோய்  இறுதியில்  அகால மரணம்  எல்லாம் உங்களை இன்ஸ்டன்டா தொடரும் .

5/1/15

Loud Speaker ...22 ,வியக்க வைக்கும் விசாலினி !!

வியக்க வைக்கும் விசாலினி !!
திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10). பிறந்த போது வாய்பேச முடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார்.
இன்ஜினீயரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயதில்  இச்சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்ட் எனச் சொல்லப்படும் பாளையங்கோட்டையில் உள்ள சங்கர் நகரில் இருக்கிறது விசாலினியின் வீடு. இந்தச் சிறுமியின் சாதனைகளை அறிந்தால் ஆச்சரியத்தில் வாய்பிளந்து நிற்பீர்கள்.

இவர் ஐந்து சாதனைகள் செய்திருக்கிறார். அதில் ஒன்று உலக சாதனை. அதென்ன? ஐ.க்யூ எனும் (IQ- Intelligent Quotient) நுண்ணறிவுத் திறன் சோதனையில் உலகிலேயே அதிக ஐ.க்யூ அளவாக 225 புள்ளிகள் பெற்று விசாலினி சாதித்துக் காட்டியிருக்கிறார்.

உலக அளவிலான ஐ.க்யூ வில் கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் கிம் யுங் யோங் (Kim Ung-Yong) என்ற சீனர். இவரது ஐ.க்யூ அளவு 210. அதைக் கடந்த ஆண்டு, ஐ.க்யூ. நிபுணர்கள் மத்தியில் நடத்தப்பட்ட பல கட்ட பரிசோதனைத் தேர்வுகளில் முறியடித்து, 225 என்ற அளவை எட்டிப்பிடித்திருக்கிறார்.

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் விசாலினியின் பெயர் இடம்பெற வில்லை. பதினான்கு வயது நிறைவடைந்தால்தான் கின்னஸ் புத்தகத்தில் இவரது சாதனை இடம்பெற முடியும். இதனால் தற்போது கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கிறார்.(thanks hindu )

http://www.kvisalini.com/

இது தோழி கௌசல்யாவின் பதிவு ..இந்த சிறுமியின் சாதனைகள் எண்ணிலடங்கா !

http://www.kousalyaraj.com/2012/01/blog-post_03.html#.VUOLCY5Vikp

இச்சிறுமி பற்றி மேலும் வாசிக்க http://www.kousalyaraj.com/2015/05/blog-post.html#.VUMCBFKZvtlநண்பர்கள்
BTech MTech BE மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கணினி துறைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறாள். இதுவரை மொத்தம் 25 இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செமினார்கள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என நடத்தி இருக்கிறாள். கணினி நிறுவனங்களுக்கும் சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறாள். இதுவரை 127 மேடைகளில் உரையாற்றி இருக்கிறாள்.
இதுவரை 8 சர்வ தேச கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு (Keynote Address) உரையாற்றி இருக்கிறாள்.


9வது முறையாக நாளை அதாவது மே 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற இருக்கும் 'கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில்' சிறப்புரை ஆற்ற அழைக்கப் பட்டிருக்கிறாள். கணினி துறையில் Cloud Computing in Google Apps for Education என்ற தலைப்பில் காலை 10.30 - 11.30 ஒரு மணி நேரம் உரை ஆற்றுகிறாள்.
வாழ்த்துக்கள் + பாராட்டுகள் விசாலினி !!!
....................................................................................................................................................

இன்றைய தட்ஸ் தமிழ்  செய்தி 
கூகுள் மாநாட்டில் சிறப்புரையாற்றும் நெல்லையின் அறிவாளிப் பெண் விசாலினி!http://tamil.oneindia.com/news/india/nellai-girl-vislaini-participate-google-conference-225897.html
....................................................................................................................................................
இது விசாலினியின் வலைத்தளம் 


இச்சிறுமியை பாராட்டி வாழ்த்தி மென்மேலும் சாதனைகள் புரிய ஊக்குவிப்போம் .

மேலுள்ள தகவல்கள் அனைத்திற்கும் நன்றி  தோழி கௌசல்யா மற்றும் உணவு உலகம்  சங்கரலிங்கம் அண்ணா .
அன்புடன் ஏஞ்சல் ...