அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/25/15

Loud Speaker ..21முக புத்தக பகிர்வுகள்

இன்றைய ஒலிபெருக்கி செய்திகள் ..அனைத்தும் முக புத்தக பகிர்வுகள் ..


மனதை தொட்ட படம் !
இது முகபுத்தகத்தில் பார்த்தது ..
https://www.facebook.com/imaigalindia?fref=nf
இமைகள்!! - முடியாதவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்கின்ற ஒரு அமைப்பு.இயலாதோருக்கு உணவளித்து அவர்களுடன் ஒரு செல்பியும் எடுத்து நண்பர்களை  tag செய்வது. ஏழைகளுக்கு உணவளிக்கும் இக்குழுவினரை பாராட்டுவோம் ..

...........................................................................................................................................

இந்த காணொளி கண்ணில் நீர் வரவைத்தது (ndtv )


இதுவும் முக புத்தக பகிர்வு ...
ஒரு குழந்தை சிறுமி பொறுப்பற்ற அவசர புத்தி தந்தையின் வாகனத்தை 
ஸ்டார்ட் செய்து விழுகிறாள் ..அங்கே யார் முதலில் உதவிக்கு ஓடி வரான்னு பாருங்க ..


https://www.facebook.com/logical.indian/videos/706670912795964/?pnref=storyhttps://www.facebook.com/logical.indian/videos/706670912795964/?pnref=story


சக உயிர்களை நேசிக்கும் அசோக் நகர் சேகர் தம்பதியினர் போன்ற அரிய ஜீவன்களும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தனது தலை மேலேயே தினமும் ஒரு பறவை வந்து உட்காருகிறது. அதற்கு திராட்சை முதலான பழங்களை தானியங்களைத் தந்து தனது விருந்தினரைப் போல உபசரிக்கிறார் இந்தப் பழக்கடை சேகர்.
மேலும் வாசிக்க ...இங்கே ...மற்றும் இங்கே 
சுற்றுச்சூழலையும் மாந்தநேயத்தையும் நினைத்துப்பார்க்க இந்த வீடியோ பகிர்வு மேலும் தூண்டுகிறது. இத்தகைய பசுமை துளிர்க்கும் நற்செயலோடு நம்மைப் பிணைத்த ஜாக்கி சேகருக்கு ஒரு ஹாண்ட்ஷேக்.


.................................................................................................................................................................
நேபாள நாட்டில் நில நடுக்கத்தால் பாதிக்கபட்ட அனைத்துயிர்களுக்கும்  பிரார்த்திப்போம் இந்நிலநடுக்கத்தால் 758 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

அன்புடன் ஏஞ்சலின் 

9 comments:

 1. முதலில் காட்டியுள்ள/சொல்லியுள்ள இரு செய்திகள் ஆறுதலாக உள்ளன.

  அடுத்து வருபவைகள் அனைத்துமே கண் கலங்க வைத்தன.

  நல்லவேளையாக ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சிறுமிக்கு பல அடிபடாமல் பிழைத்தாள். நாய் ஒன்று வேகமாக ஓடி வந்து உதவிட நினைப்பது ஆச்சர்யமாக உள்ளது.

  ReplyDelete
 2. //விருந்தினரைப் போல உபசரிக்கிறார் இந்தப் பழக்கடை சேகர்.//

  காக்கைகளுடன் சேகர் பதிவினையும் படித்தேன் + பார்த்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 3. முதல் படத்தைப் பார்த்ததும் வெங்கட் நாகராஜ் தளத்தில் பார்த்த காணொளி நினைவுக்கு வருகிறது.

  கீழே விழும் சிறுமி காணொளி பேஸ்புக்கில் பார்த்தேன். பழக்கடை சேகர் போல எல்லோருக்கும் மனம் வரவேண்டும்.

  ReplyDelete
 4. மனதைத் தொட்டுவிட்டது அதைப் போன்ற ஒரு காணொளி வெங்கட்ஜி அவர்கள் தனது ஃப்ரூட் சாலடில் பகிர்ந்திருந்தார்.....https://www.youtube.com/watch?v=s6v8OPX4p1A

  நம்மல் முடிந்த வரை நலிந்தோருக்கு ஏதேனும் செய்ய முடிந்தால் அதுவே நல்லதுதானே.

  அந்தக் காணொளி ஆம் நம்ம மக்கள் அதுதாங்க நாலு கால் ஜீவன் கள் அவர்களுக்கு இருக்கும் அந்த உணர்வு கூட மனிதருக்கு இருப்பது இல்லை என்பது உண்மையே. அந்த செல்லம் பாருங்கள் ஓடி வருவதை....

  மற்றவை எல்லாமே மனதைக் கலங்க வைத்து விட்டன சகோதரி.....நேபால் கொடூரம் தான் என்றாலும் னாம் ஒன்றை யோசிக்க வேண்டும். இயற்கையை மனிதனால் மிஞ்ச முடியாது ஒரு போதும். ஆனால் மனிதன் அந்த இயற்கையோடு ஒத்து வாழக் கற்றுக் கொண்டு சுய நலத்தை ஒழித்தால் இது போன்ற இயற்கையின் சீற்றத்தை கொஞ்சமேனும் தவிர்க்கலாம்.....நாம் தான் இயற்கைக்கு எத்தனை வஞ்சனைகல் செய்கின்றோம்....இல்லையா சகோதரி?!!! பிரார்த்திப்போம்...

  ReplyDelete
 5. அருமை அருமை

  ReplyDelete
 6. தங்கள் பதிவினைப் படித்து வீடியோ காட்சிகளையும் கண்ட பின்னர் மனதில் வந்த வாக்கியம் “இங்கேயும் மனிதர்கள்”.

  ஸ்கூட்டர் சாவியை வண்டியிலேயே விட்டுச் சென்ற அந்த சிறுமியின் தந்தைதான் பொறுப்பற்றவர். அறியா சிறுமி. நாயின் பதற்றம். எல்லாம் ஒரு நொடியில்.

  பகிர்வினுக்கு நன்றி.

  ReplyDelete
 7. நலிந்தோர்க்கு உதவும் இமைகள் அமைப்பு மற்றும் இதர செய்திகள் அனைத்துமே சிறப்பு! நன்றி!

  ReplyDelete
 8. முகப்புத்தக பகிர்வுகள் அனைத்தும் அருமை. ndtv காணொளி மனதை நெகிழச்செய்துவிட்டது. சேகர் மேல் காக்கைகளுக்கு இருக்கும் பாசம்,அவர் அவைகளை பற்றி சொல்லும் தகவல்கள் ஆச்சரியமாகவும், அதிசயமாக இருக்கு.
  நேபாள நாட்டின் துயரம் மனதை வருந்தவைக்கிறது. பிரார்த்திப்போம்.

  ReplyDelete