அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/17/15

LOUD SPEAKER 20...bio-reactive food expiry label , கூந்தலை புற்று நோயாளிகளுக்கு தானமளித்த தங்கமான கல்லூரி பெண்கள் ,WELLO WATER WHEEL

ஒலிபெருக்கியில் இன்று ... Designer Solveiga Pakstaite,  bio-reactive food expiry label called Bump Mark, கூந்தலை புற்று நோயாளிகளுக்கு தானமளித்த தங்கமான கல்லூரி மாணவியர்  ,WELLO WATER WHEEL..

4 மில்லியன் டன்  உணவுப்பொருள் ஆண்டு தோறும் வீணாக குப்பையில் கொட்டப்படுகிறது எங்க இங்கிலாந்தில் !ஃபிரிட்ஜ் என்பது தேதி காலாவதி ஆகும்வரை உணவுப்பொருட்களை  வைக்க பயன்படுகிறது. ஆனால், அவற்றில் வைக்கும் பொருட்களையும் கொட்டுவது தான் அதிகமாக உள்ளது. இங்கே இங்கிலாந்தில் முதியோர் பார்வை குறைபாடுள்ளோர் பலர் இறைச்சி வகைகளை வாங்கீ குளிர்சாதன பெட்டியில் வைக்கின்றனர் தேதி காலாவதி ஆவது லேபிள் பார்த்தால்தானே தெரியும் ? இப்படி எவ்வளவோ பயன்படுத்தாமலே குப்பைக்கு செல்கிறது இதற்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ளார் 
Designer Solveiga Pakstaite,  


இவர் Brunel பல்கலைகழகத்தின் 22 வயது 
டிஸைன் டெக்னாலஜி மாணவி..இம்முறையின் பெயர் பம்ப் மார்க் டெக்னிக் .உணவு பாக்கெட் மீது தேதி மற்றும் பிற  விவரங்கள் இருக்கும் அதன் முனையில் இருபக்கம் நடுவில் ஜெலட்டின் மூடிய பிளாஸ்டிக் தாள் ஒட்டீடுவார்கள் .
ஜெலட்டின் கரிமப்பொருள் இறைச்சியில் மற்றும் சீஸ் பொருட்களில் உள்ள புரத கரிமமும் ஒரே தேதியில் சிதைந்து காலாவதி ஆகும் தன்மையுடையவை ..
உணவின் freshness குறைய குறைய ஜெலட்டினும் 
மென்மையாகும் பாக்கெட் முனை யில் bump மார்க் பகுதியை விரலால் தடவ சமமா இருந்தா உணவு பழுதடையல்ல ஆனா புடைத்து இருந்தா அது உண்ண உகந்ததல்ல ....
இதில் ஒரு மைனஸ் பாயின்ட் இருக்கு ஜெலட்டின் விலங்கு எலும்பு மற்றும் பிற உறுப்பில் இருந்து தயாரிக்கபடுவதால் சைவ விரும்பிகள் இதனை விரும்ப மாட்டார்கள் ஆகவே அதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்க முற்பட்டுள்ளார் இம்மாணவி 
..............................................................................................................................................
தண்ணீர் சக்கரம் !!!.....


வெல்லொ( Wello ) எனும் அமெரிக்க சமூக சேவை தன்னார்வ நிறுவனத்தின் முயற்சியால் உருவானது இந்த தண்ணீர் சக்கரம் /உருளை 
இவர்களின் நிறுவனம் உலகெங்கும் உள்ள ஏழை நாடுகளில் சுகாதாரமான நீர் அனைவருக்கும் கிடைக்கணும் குறிக்கோள் கொண்டது 
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களும் சிறு பிள்ளைகளும் மண் /பிளாஸ்டிக் குடங்களை தலையிலும் தோளிலும் சுமந்து பல மைல்கள் வெயிலில் சென்று தண்ணீர் கொண்டுவருவதை பார்த்த இவர்கள் இந்த பிளாஸ்டிக் நீர் சக்கரத்தை உருவாகியிருக்கின்றார்கள்
இது 50 லிட்டர் கொள் அளவு கொண்டது . விலை $25-$30, டாலர்கள் //1500 ரூபாய் முதல் 1800வரை இதன் விலை வரும் .
நீருக்கென அல்லல்படும் பெண்களை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தண்ணீர் சக்கரம் இப்போது ராஜஸ்தான் /குஜராத் மாநிலங்களின் கிராமபுரங்களில்
ஆண்களிடம்!! மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாம் :)
இந்த WELLO WATER WHEEL...
.................................................................................................................................................
எங்க ஆலயத்தில் ஒரு பஞ்சாபி பெண் 24 வயது இருக்கும் அழகிய நீண்ட கூந்தல் அவருக்கு போன வாரம் பார்த்தப்போ தோள் வரை வெட்டி இருந்தார் ..பிறகுதான் கேள்விபட்டேன் கேன்ஸர் நோயாளிகளுக்கு விக் செய்ய அவ்வளவு நீண்ட கூந்தலை டோநெட் செய்திருக்கார் ..

இதே போன்ற செய்தி சென்னை மகளிர் கல்லூரி மாணவிகளும் செய்துள்ளார்கள் !  
http://www.thebetterindia.com/21121/natural-hair-wigs-cancer-patients-chennai-tangled/


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129422கொடிய நோயான புற்றுநோயால் உருக்குலைந்து மொத்த தலைமுடியையும் இழந்து எங்கோ இருக்கும் யாரோ முகம் தெரியாதவர்களுக்காக இளம்பெண்கள் தங்களது நீண்ட தலைமுடியை அர்ப்பணித்து இருக்கிறார்கள். இந்த முடி கொடை கொடுக்கும் உணர்வு உள்ளப்பூர்வமாக உருவான விதம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. இந்த கல்லூரியில் மாணவியர் ரோட்டரி சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் மாணவிகளில் சிலர் ‘யு டியூப்’ பார்த்த போது அதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம் செய்யலாம் என்ற தகவலை அறிந்து இருக்கிறார்கள். அதற்காக சில மாணவிகள் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்கள். அப்போது அங்கு புற்று நோய்க்கு சிகிச்சை பெறும் சிறுவர்கள், இளம்பெண், இளைஞர்கள், முதியவர்கள் என்று பல தரப்பினரும் தலைமுடியை இழந்து பார்க்கவே பரிதாபமாக அமர்ந்திருந்தார்கள். புற்று நோய் சிகிச்சைக்கு ‘கியூமோதெரபி’ சிகிச்சை கொடுக்கும் போது தலையில் உள்ள முடி கொத்துக் கொத்தாக கீழே விழுந்து விடுகிறது. தலை மொட்டையாக காட்சியளிக்கிறது.


இந்த கஷ்டத்தை அனுபவிக்காமல் இருப்பதற்காக நோயாளிகள் சிலருக்கு முன்னதாகவே மொட்டையடித்துவிட்டு கியூமோ தெரபி சிகிச்சை அளிக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் படிக்கவும், பணிகளுக்கும் செல்லும் போது தலைமுடி இல்லாமல் வெளியே செல்ல கூச்சப்படுகிறார்கள். வசதி படைத்தவர்கள் ‘விக்’ வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஒரு விக் விலை ரூ.20 ஆயிரம் வரை இருக்கிறது. இதை எல்லோராலும் வாங்க முடியவில்லை.


எனவே, நலிந்த 16 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, தங்கள் தலை முடியை கொடையாக கொடுத்து விக் தயாரித்து வழங்க இந்த கல்லூரி மாணவிகள் முடிவு செய்தார்கள். அதற்காக கிரீன் டிரண்ட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முடி கொடை வழங்கும் முடிவை எடுத்தனர்.எத்தனை மாணவிகள் இதில் சேர்ந்து முடியை துறக்க தயாராக இருப்பார்கள் என்ற சந்தேகத்துடனேயே, ரோட்டரி மாணவிகள் இந்த பணியை தொடங்கி உள்ளனர். ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக... அதுவும் 2,500 மாணவிகள் தங்கள் அழகிய தலை முடியை தானமாக கொடுக்க முன் வந்தார்கள். அவர்களிடம் இருந்து 50 கிலோ முடி பெறப்பட்டது. இதன் மூலம் சுமார் 200 ‘விக்’குகளை தயாரிக்க முடிந்தது. மூன்று அளவுகளில் விக்குகள் தயாரித்தனர்.
நன்றி .தினத்தந்தி செய்தி 

அன்புடன் ஏஞ்சல் ...

12 comments:

 1. வணக்கம்
  ஒவ்வொரு தகவலும் புதுமையாக உள்ளது தேடலுக்கு எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. தண்ணீர் சக்கரம் எங்க ஊருக்கும் தேவை...

  ReplyDelete
 3. Designer Solveiga Pakstaite அவர்களின் கண்டுபிடிப்பு, தண்ணீர் சக்கரம் பற்றி தெரிந்து கொண்டேன். புற்று நோயாளிகள் எப்போதுமே இரக்கத்திற்குரியவர்கள். ஒரு சின்ன விஷயமாக இருந்தாலும் அவர்களுக்காக விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு மனநிறைவுதான்.

  ReplyDelete
 4. //ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக... அதுவும் 2,500 மாணவிகள் தங்கள் அழகிய தலை முடியை தானமாக கொடுக்க முன் வந்தார்கள். அவர்களிடம் இருந்து 50 கிலோ முடி பெறப்பட்டது. இதன் மூலம் சுமார் 200 ‘விக்’குகளை தயாரிக்க முடிந்தது. //

  படித்ததும் அப்படியே ‘விக்’கிப் போய்விட்டேன். சொக்கிப்போய் விட்டேன். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. //நீருக்கென அல்லல்படும் பெண்களை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தண்ணீர் சக்கரம் இப்போது ராஜஸ்தான் /குஜராத் மாநிலங்களின் கிராமபுரங்களில்//

  குடத்தைத்தூக்கிக்கொண்டு இடுப்பொடிய நடக்கும் சிரமம் இல்லாமல் தடுத்துள்ள நல்லதொரு சுலபமாக கண்டுபிடிப்பு. பாராட்டத்தான் வேண்டும்.

  ReplyDelete
 6. //எத்தனை மாணவிகள் இதில் சேர்ந்து முடியை துறக்க தயாராக இருப்பார்கள் என்ற சந்தேகத்துடனேயே, ரோட்டரி மாணவிகள் இந்த பணியை தொடங்கி உள்ளனர். //

  மனது வைத்து முயற்சிக்க ’முடி’ந்தால் ‘முடி’யால் ’முடி’யாதது ஏதும் இல்லை என ‘முடி’வாக ’முடி’வெடுத்து ’முடி’யையே அவிழ்த்து, தங்கள் தலை பாரத்தையும் குறைத்து, ’முடி’யே போச்சு என நினைத்து ‘முடி’ தானம் செய்துள்ளவர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்களே.

  ReplyDelete
 7. தண்ணீர் சக்கரம் அருமையான கண்டுபிடிப்பு மட்டும் அல்ல! பயனுள்ளதும் கூட! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 8. இந்தியாவில் மட்டும் உணவுப்பொருள் வீனாவதில்லையா என்ன? இன்னும் நிறையவே ஆகும்! மாணவியின் கண்டுபிடிப்பு அந்த நாட்டுக்கு உதவும்!

  வெல்லொ வாட்டர் வீல்... நல்ல, மிக நல்ல முயற்சி.

  தலைமுடி தானமளித்த மாணவிகளைப் பாராட்ட வேண்டும்.

  ReplyDelete
 9. சிறப்பான தொகுப்பு ......

  ReplyDelete
 10. தண்ணீருக்குப் படும் கஷ்டமும் கூந்தலைத் தானமளித்ததும் மனதை நெகிழ வைக்கும் விஷயங்கள்..

  மனித நேயம் பசுமையாகத் தான் இருக்கின்றது..

  ReplyDelete
 11. அனைத்தும் தெரியாத விடயங்களாக இருக்கும் அதே நேரம், பயனுள்ளதாகவும்,விழிப்புணர்வுள்ளதாகவும் இருக்கு அஞ்சு.
  தண்ணீர் சக்கரம் மிகதேவையானதொன்றுதான் அங்குள்ளோருக்கு.
  நன்றி நல்ல பகிர்வுக்கு.

  ReplyDelete
 12. உணவுப் பொருள் வீணாவதைக் கண்டுபிடிக்க உதவும் மாணவியின் கண்டுபிடிப்பு நல்லதொரு விஷயம்.

  வெல்வொ வாட்டர் அருமையான சக்கரம் கண்டுபிடிப்பு.....தமிழ்நாட்டிற்கும் தேவையாகத்தான் இருக்கும்....

  கேன்சர் நோயாளிகளுக்கு முடி கொடுத்த மாணவிகள் குறித்து இங்கும் அறிந்தோம் சகோதரி....

  வழக்கம் போல் அருமை!

  ReplyDelete