அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/1/15

Loud Speaker ..19 ,kids craft,Daffodil bulbs,the guardian of Fukushima’s abandoned animals’ மற்றும் சாலட் டிரெஸ்ஸிங்

இன்றைய ஒலிபெருக்கி செய்திகள்....

kids craft,Daffodil bulbs,the ‘guardian of Fukushima’s  abandoned animals’
மற்றும் சாலட் டிரெஸ்ஸிங் .

இது முக புத்தகத்தில் பகிர்ந்தது ..kids craft ,Art chain என்று பள்ளி பிள்ளைகள் சுலபமா செய்யும் கிராப்ட்ஸ் முக நூலில் நான் ,அதிரா ,பிரியா ,faiza ,கிரேஸ் ,ஆச்சி (திருமதி b .s .ஸ்ரீதர்)rama ravi ,ஆதி  அனைவரும் ஒரு தொடர் சங்கிலி போஸ்ட் செய்தோம் ..
இது அதில் ஒன்று ..இது ஒரு recycled பென்சில் /பென் ஹோல்டர் ..



வாசனை மெழுகு candle ,இப்படி கண்ணாடி ஜாடிகளில் கடைகளில் கிடைக்கும் ..மெழுகு உருகி தீரும் நிலையில் இருந்த ஜாடியை சுடுநீரில் ஊறவைத்து கழுவினேன்.பிறகு நன்கு துடைத்து double sided sticky  டேப் ஆங்காங்கு ஒட்டி ஒரு லேயர் உரித்து அதன் மேல் சணல் கயிற்றால் சுற்றிக்கொண்டே வந்தேன் ..இறுதியில் க்ளூ வைத்து ஒட்டினேன் .
சனலுக்கு பதில் எந்த வண்ண கயிறும் பயன்படுத்தலாம் ..

பிறகு ஒரு quilled மலரும் இலையும் அழகுக்கு ஒட்டிவிட்டேன் .

...................................................................................................................................................................


Daffodil bulbs ..The daffodil is the international symbol of hope in the fight against cancer.எங்க ஆலயத்தில் அக்டோபர் மாதம் புற்று நோயால் மரித்த ஒரு சிறு (19 வயது )பெண்ணின் இறுதி பயணம் நடந்தது :(  
நான் வாலண்டியர் என்பதால் பல நிகழ்வுகளில் பங்கேற்கனும்  ..சர்வீஸ் முடிந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறு காகித பையில்  daffodil பல்ப் தோட்டத்தில் விதைக்க கொடுத்தார்கள் .உடனே நட்டு வைத்தேன் இந்த வாரம் மலர்ந்திருக்கு ..


நம்ம ஊரில் இறந்தவங்க வீட்டில் சொல்லிக்காம போவாங்க ..வெளி நாட்டில் எல்லாம் புதுமையே ..
.................................................................................................................................................................
fukushima பேரழிவு கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தினால் ஜப்பானில் சுனாமிப் பேரழிவு ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணு உலையும் தப்பவில்லை.இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அறிவியளாலர்கள் கூறுகிறார்கள்.வார்த்தையால் விவரிக்க இயலா ,கண்ணால் பார்க்க முடியா காட்சிகள் :(மக்கள் radioactive exclusion zone என்று அந்த சுற்று வட்டாரத்தில் இருந்து வெளியேறினர் :(
தங்களை காப்பதற்க்கு ..அப்படி போகுபோது அவர்களை வாழவைத்த 
மாடு கோழி ,பண்ணை விலங்குகள் ,நாய் பூனை என பல ஜீவன்களை அவிழ்த்து கூட விடாமல் அப்படியே சென்றனர் :(  ..  அப்படி இவர்கள் விட்டுப்போனவற்றை ஒரு நல்ல இதயம் கொண்ட  55-வயது  Naoto Matsumura, அவ்விடம் விட்டு போனாலும் மீண்டும் வந்து அந்த ஜீவன்களை 
பராமரிக்கிறார் ..அணுக்கதிர் வீச்சு பாதிப்பு தன்னை தாக்க 40 ஆண்டு (இவறுக்கு 95 ஆகிடும் )..ஆகவே அதனை பற்றி கவலை கொள்ளாமல் அனாதரவா விடப்பட்ட ஜீவன்களை அங்கே சென்று பராமரிக்கிறார் !
Naoto Matsumura is the only human brave enough to live in Fukushima’s 12.5-mile exclusion zone

the ‘guardian of Fukushima’s  abandoned animals’



மனதை உருக்கும் அன்பை காண இங்கே செல்லுங்கள் 

http://www.boredpanda.com/fukushima-radioactive-disaster-abandoned-animal-guardian-naoto-matsumura/

சில வருடங்கள் முன்பு வரை சாலட் அல்லது பச்சடி என்பது பச்சை காய்கறிகளை மெலிதாக அரிந்து அதில் உப்பு மிளகுத்தூள் அல்லது தயிர் கலந்து தயாரிப்ப்பார்கள் அது உடலுக்கும் மிக நன்மை தரும்.
இப்போ சமீப காலமாக சாலட் மட்டுமே சாப்பிட என பெரிய ரெஸ்டாரன்ட்ஸ் ஆங்காங்கே நகரெங்கும் முளைத்து விட்டது ..டெலி deli ,இத்தாலிய சைனீஸ் மெக்ஸிகன் ranch என தனியே உப்பும் அஜினமொட்டொவும் அதிகளவில் சேர்த்த சாலட் டிரெஸ்ஸிங் வகைகளும் விற்பனையாகின்றன .மிக பிரபல கம்பெனி ஒன்றின் தயாரிப்பில் ,செயற்கை சுவை / நிறமூட்டிகள் சோயா எண்ணெய், செயற்கை வாசனை, ஸ்டார்ச், பாஸ்பாரிக் அமிலம், polysorbate 60 , செயற்கை நிறம், மற்றும் disodium அதிகமான EDTA ,msg போன்றவை இருக்கின்றன .அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. .இதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இது புளிப்புதன்மைக்காக சாலட் கலவையில் சேர்க்கப்பட்டுள்ளது .மேலும் செயற்கை நிறமூட்டிகள் பல பிரச்சினைகளுக்கு அடிப்படை காரனமாகின்றன .இப்படி பலகாலமுன் தயாரித்து பாட்டிலில் அடைக்பட்டவற்றை பச்சை காய்கறிகளுடன் கலந்து உண்பதால் உடலுக்கு தீங்கு மட்டுமே ஏற்படும் . அதைவிட நாமே வீட்டில் உடனடியாக இந்த சாலட் டிரெஸ்ஸிங் தயார் செய்யலாம் .உடலுக்கு ஆரோக்கியமான எவ்வித பக்க விளைவுகள் ஏற்படாது ..

தேவையான பொருட்கள் 
பூண்டு ....... 1 பல் 
மஞ்சள் தூள் ....1/2 தேக்கரண்டி 
இஞ்சி தோல் நீக்கியது ....1/2 இன்ச் 
எலுமிச்சை சாறு ....2 மேசை கரண்டி 
ஆலிவ் எண்ணெய் ...1 மேசை கரண்டி 
உப்பு ... தேவையான அளவு 
தேன் ....1/4 தேக்கரண்டி 
இஞ்சி பூண்டை இடித்து மேற்கூறிய பொருட்களுடன் கலந்து சாலட் வகை காய் இலைகளுடன் சாப்பிட்டு பாருங்க .அதிக செலவில்லாம ஆரோக்கியமான சாலட் டிரெஸ்சிங் ..


மீண்டும் சந்திப்போம் ..அன்புடன் ஏஞ்சல் 



19 comments:

  1. க்வில்லிங் மலரும் இலையும் அழகாக ஒட்டப்பட்ட ரீ-சைக்கிளிங் பென் / பென்சில் ஸ்டாண்டு,

    ஊன்றிய விதை ஆறே மாதத்தில் அழகிய மலர் ஆன நிகழ்வு,

    மனதை உருக்கும் அன்புடன் பிராணிகளைப் பராமரிக்கும் நல்ல இதயத்துடன் ஒருவர்,

    நாமே நம் வீட்டில் உடனடியாக தயாரிக்கக்கூடிய சாலட் டிரெஸ்ஸிங்

    என இன்றைய ஒலிபெருக்கி செய்திகள்.... நான்கும் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா

      Delete
  2. வணக்கம்
    எல்லாம் வித்தியாசமான செயற்பாடுகள்... தகவல் நான்கும் பயனுடையவை பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ .

      Delete
  3. ஏஞ்சலின்,

    பென் ஹோல்டர் நல்ல ஐடியா.

    பூ அழகா பூத்திருக்கு. அவ்வளவு கிழங்குகளையும் நட்டுட்டிங்களா ? எல்லாமும் சேர்ந்து பூக்கும்போது ஞாபகமா ஒரு ஃபோட்டோ எடுத்துப் போடுங்க. இந்தப் பூ இங்கேயும் நிறைய வீடுகளில் பூத்திருப்பதைப் பார்க்க‌ அவ்வளவு அழகா இருக்கு.

    அன்பான மனிதர் ! விழிப்புணர்வு சாலட் ட்ரஸ்ஸிங் !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ரா ..இல்ல நான் எட்டு நட்டேன் அது ஆலயத்தில் அனைவருக்கும்

      Delete
  4. Naoto Matsumura - இவர் தான் மனிதர்...!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ .

      Delete
  5. பயனுள்ள குறிப்பு.

    பிராணிகளை நேசிப்பவர் பற்றிய தகவல் அருமை.

    ReplyDelete
    Replies
    1. .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ .

      Delete
  6. உண்மைதான் சில நடைமுறைகள் இங்கு எனக்கும் புதுமையாகவே இருந்திருக்கு.நானும் பென் ஸ்டாண்ட் செய்வதற்கு வைத்திருக்கேன். செய்யவேணும்.
    நல்உள்ளம் படைத்த மனிதரின் படங்கள் உண்மையில் மனதைஉருக்கிவிட்டது. அத்தனை செல்லங்களும் அவரிடத்தில் அன்பை செலுத்துவது போட்டோஸ்களில் தெரிகிறது.
    சாலட் செய்முறை அருமை. மஞ்சள்,இஞ்சி,பூண்டு என செய்முறை வழமையை விட வித்தியாசமாக இருக்கு. இந்த முறையில் செய்யனும்.
    எல்லாமே சிறந்த தகவல்களாக தந்திருக்கிறீங்க அஞ்சு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. .வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்ரியா .அவர் அன்பு really great !

      Delete
  7. loud speakerல் அனைத்துமே மிக அருமை.
    Naoto Matsumura, வின் மனிதாபமானம் பாராட்டத்தக்கது..
    சாலட் டிரஸ்ஸிங். அருமை..

    ReplyDelete
    Replies
    1. .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமா .அவர் அன்பு really great

      Delete
  8. ரீ சைக்ளிங் பென் ஸ்டேண்ட் முகநூலில் பார்த்தேன்! கைவிடப்பட்ட மிருகங்களுக்கு உதவும் மனிதர் உண்மையிலேயே பாராட்டுக்குரியவர். இதுதான் டெபோடில் மலரா? பள்ளிக்காலத்தில் டெபோடில்ஸ் என ஆங்கிலக் கவிதை படித்த நியாபகத்தை கிளறிவிட்டது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ சுரேஷ் daffodils இங்கே ஸ்ப்ரிங் சீசனில் பூத்து அழகா இருக்கும் .வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. க்வில்லிங்க்....பார்த்தேன் இங்கு (கீதா) துளசி முகனூலில்....ஸோ அழகு! நாலுகால் செல்லங்கள் அழகு மனதை..கொள்ளைகொண்டன அந்த மனிதர் வாழ்வாங்கு வாழ இறைவனிடம் பிரார்த்திப்போம்.....அந்த ஜப்பான் சுனாமி கதிர் வீச்சு தகர்ந்தது காணொளியில் கண்டோம்....அப்போதே...

    சாலட் நல்லதுதான். இப்போதெல்லாம் பயமாகவும் இருக்கின்ரது.வீட்டில் செய்யவும்..காய்களை வாங்கி நன்றாகக் கழுவி விட்டு, உப்பு நீரில் சிறிது நேரம் இட்டு வைத்ஹ்டு விட்டுக் கழுவிதான் உபயோகிக்க வேண்டும்...பூச்சி மருந்து தெளிச்சுருப்பாங்களோ என்று....ஆர்கானிக் என்று விற்கின்றார்கள் ஆனால் அதையும் நம்மூரில் நம்ப முடியய்வில்லை. பெட்டர் வீட்டில் தோட்டம் இருந்தால் வளர்ப்பது.....நல்லது...ம்ம்ம்

    ((மக்கள் radioactive exclusion zone என்று அந்த சுற்று வட்டாரத்தில் இருந்து வெளியேறினர் :(
    தங்களை காப்பதற்க்கு ..அப்படி போகுபோது அவர்களை வாழவைத்த
    மாடு கோழி ,பண்ணை விலங்குகள் ,நாய் பூனை என பல ஜீவன்களை அவிழ்த்து கூட விடாமல் அப்படியே சென்றனர் :(// இதை வாசித்ததும், "எங்கள் ப்ளாகில்" பசுபதி ஐயர் அவர்களின் அனுபவப் பகிர்வுப் புத்தகத்தில், பர்மாவிலிருந்து போரினால் புலம் பெயர்ந்து இந்தியா வரும் போது தனது செல்லம் டிக்கியை மனமில்லாமல் வண்டியிலிருந்து, மற்ற மக்களுக்கு வேண்டி இறக்கி விட வேண்டியதைக் குறிப்பிட்டு எழுதியதைப் பகிர்ந்திருக்க அதை வாசிக்க முடியாமல்....மனம் நொந்து போய் அழுகை வந்து பாவம் அந்த மனிதர், டிக்க்யும், என்று கண்ணில் நீர் வர, என் அருகில் என் கண்ணழகி அமர்ந்து கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருக்க டிக்கியின் இடத்தில் கண்ணழகி என்று நினைத்து ஐயோ அழுகை பீறிட....சத்தியமாக முடியவில்லை தோழி....கீதா

    ReplyDelete
    Replies
    1. வாங்க கீதா ...உங்க க்விலிங் பற்றி துளசி அண்ணா மூலம் கேள்விபட்டிருக்கேன் .நீங்களும் பகிரலாமே உங்க ப்ளாகில் பார்க்க ஆவல் எனக்கும் ...


      செல்லங்கள் பற்றி அவற்றின் அன்பு பற்றி நிறைய காணொளி இருக்கு ..சில மனதை பாரமாகிடும் ஆகவே நிறைய வீடியோஸ் தவிர்த்து விடுவேன் ..
      கண்ணழகி ! ஆஹா பேரே சூப்பர் ..ஜெசி என் பூஸ் செல்லம் ..போன ஆகஸ்ட் ஸ்பெயின் போக இருந்தோம் ..எங்களுக்கு இவள இங்கே வெளி ஆட்கள் பொறுப்பில் விட இஷ்டமில்ல ..அவ நாங்க சில மணிநேரம் வெளியே போய் வந்தாலே SAD face வச்சிருப்பா ......என்னை பொறுத்தவரை நம்ம நம்பி வந்த ஜீவன்கள் அதுங்கள பத்ரமா பாக்கணும் ..பாவம் பசுபதி அய்யர் அவர் நிலையும் டிக்கி நிலையும் யாருக்கும் ஏற்படக்கூடாது :(

      Delete
  10. ஆகா இது என்ன ஒரு பேரம் கலக்சன் ஆப் குட்டிப் பதிவுகள்...
    நன்றாக இருக்கிறது

    ReplyDelete