அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/9/15

பழங்களில் பூச்சி கொல்லி மருந்துகள் ,உடல் நலம் காப்போம் ...நாடாப்புழு பாதிப்புக்கள் .....

பழங்களில் பூச்சி கொல்லி மருந்துகள் நீக்கும் வழிமுறைகள் 
மூன்று மடங்குக்கும் அதிக அளவு இராசயன பூச்சி மருந்து கலவையில் அத்தியாவசிய உணவு பொருட்களை முக்கி எடுத்து பின்னர்தான் அங்காடிகளில் விற்பனைக்கு அனுப்புகிறார்களாம் ..ஏன் தெரியுமா ...எளிதில் அழுகினால் இவர்களுக்கு நஷ்டமாச்சே !!


ஆப்பிள் சாப்பீட்டா நோய் அண்டாது என்றதெல்லாம் அந்தகாலம் ..இந்த பூச்சி கொல்லிகள் தடை செய்யப்பட அளவினை விட 140% அதிகம் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களிலும் இருக்காம் .
திராட்சை மற்றும் காலி ப்ளவரில், பறிக்க சில மணி நேரம் முன்பு பூச்சி மருந்து இடுகிறார்கள். பல மணிநேரம் நீரில் ஊறவைத்தால் 90% போகும். இல்லையெனில் நம் உடலில் தான் போகும் ..

திராட்சையில் பூப் பூக்கும் சமயம் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை அடிக்கிறார்கள் .. அதைச் சரியாகக் கரைக்காமல் செய்வதால் சில துகள்கள் பூவினுள்ளேயே தங்கிவிட , பூ காயாகிப் பழமாகும்போது இத்துகள்கள் உள்ளேயே இருந்துவிடுகிறது..

ஆப்பிள் பழத்தில் மேலே சுரண்ட மெழுகு தூள் போல் வரும் அது ஒன்றுமில்லை ஒரு வருடமுந்தைய தயாரிப்புக்கு wax டிங்கரிங் ,பட்டி போட்டதன் விளைவே அது ..

காய்கறிகளையும் பழங்களையும் அகன்ற பாத்திரத்தில் வைத்து குளிர்ந்த நீரை ஊற்றி மூழ்க வைத்து 5 நிமிடம் தேய்த்து நன்றாக அலம்பினால் 75%ரசாயன பூச்சி கொல்லிகள் நீருடன் போய் விடும்
இந்த நீரில் 1 tbs உப்பை சேர்த்து அலம்பினால் 80-90% சதவீத ரசாயன பூச்சி கொல்லிகள் நீங்கிவிடும்

apple cider வினிகர் திரவம் (Vinegar) 10% ,நீர் 90% சேர்ந்த திரவத்தில் காய்கறிகளையும் பழங்களையும் சிறிது நேரம் ஊற வைத்து அலசினாலும் பயன் கிடைக்கும்
ரசாயன பூச்சிகொல்லிகள் கத்திரி, திராட்சை மற்றும் மடிப்பு உள்ள காய்கறிகளான வெண்டை, ஆப்பிள் போன்றவற்றில் மற்றும் காலிப்லவரிலும் இருக்கும் அவற்றின் தோல் இடுக்குகளையும் நன்கு அலச வேண்டும்
வாஷ் பேசின் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் வெது வெதுப்பான நீர் ஊற்றி அதில் 1 மேசைக்கரண்டி பேக்கிங் சோடா +1மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து ஆப்பிள் பழங்களை 5-10 நிமிடம் வைத்து பாருங்கள் நீரின் நிறம் கலங்கலா  மாறி இருக்கும் ..பூச்சி மருந்து மெழுகு எல்லாம் வர ஆரம்பிக்கும் இப்போ பிரஷ் வைத்து ஆப்பிளை தேய்த்தா மெழுகு பூச்சு நீங்கி சுத்தமாகும் ..
தகவல் படம் ..கூகிள் 

................................................................................................................................................................

உடல் நலம் காப்போம் ...நாடாப்புழு பாதிப்புக்கள் .....
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சனிக்கிழமை, ஐந்து வயதான தனிஷ்க் ஜார்ஜுக்கு திடீரென உடல் தன்னிச்சையாக வலிப்பு வந்தது போன்று கட்டுப்பாடின்றி துடிக்கின்றது .சிறுவனது கண்களின் வெண்திரை மட்டும் தெரிறது (dilated ) இரண்டு கைகளையும் இறுக்கி பிடித்த நிலையில் உடல் கடினமாக மாறுகிறது ..சுய நினைவை இழக்கும் தருவாய் !!சிறுவனது நிலையை கண்டு எதோ விபரீதம் என்றுணர்ந்து உடனடியாக அவனது தந்தை அவனை மருத்துவமனை கொண்டு செல்கிறார் ..அங்கு தீவிர பரிசோதனைகளின் முடிவில் மருத்துவர்கள் கூறியது //
//உங்கள் மகனது மூளை பகுதியில் பன்றியிலிருந்து பரவும் நாடாப்புழுவின் கூட்டுப்புழுக்கள் உள்ள நீர்க்கட்டி இருக்கின்றது ..அதன் காரணமாகத்தான் நரம்புகள் பாதித்து வலிப்பு ஏற்பட்டுள்ளது !!//
இத்தகைய நாடா புழுக்களால் உண்டாகும் நீர்க்கட்டிகள் வளர்ந்து வரும் நாடுகளில் தலையாய சுகாதார பிரச்சினை .ஜப்பான் ,கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பச்சை மீனை உண்பவர்களிடத்தில் இப்புழுக்கள் அதிகம் உள்ளன.
இது ஏழைகளை மட்டும் தாக்கும் நோய் என்று நினைத்தால் அது பெருந்தவறு .
நாடாபுழுக்களால் ஏழை பணக்காரர் என இனபாகுபாடின்றி அனைவரும்பாதிக்கப்படுகின்றனர்
"நம் நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாடாப்புழு நீர்கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என இந்திய அரசின் அதிகார பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது .


முறையாக சமைக்கப்படாத இறைச்சி மீன் போன்ற உணவுகளை உண்ணும்போது அந்த இறைச்சியில் உள்ள புழுவின் முட்டைகள் மனித உடலில் நுழைந்து குடற்பகுதியில் நன்கு வளர்கின்றன ..இப்படி இவற்றை சுமப்பவர்கள் !! பிறருடன் கைகுலுக்கும்போதோ அல்லது உபயோகித்த பொருட்களை பிறர் பயன்படுத்தும்போது இரண்டாமவருக்கு நாடாபுழு முட்டைகள் பரவுகின்றன !!
நம் நாட்டில் கழிப்பறை வசதிகளற்ற பகுதிகளில் மக்கள் ஆறு குளங்களை நாடி செல்வதால் நாம் நாடாவிட்டாலும் நீர் நிலைகள் வழியே இப்புழுக்கள் நம்மை நாடி வருகின்றன:(
எந்த ஒரு குப்பையும் முறையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் ..அது நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவானாலும் ..கடலில் சென்று கலந்தால் மீன்கள் மூலம் நம்மை நாடீ வரும் ..வயல் வெளியில் கலந்தால் அதே கழிவு நாம் உண்ணும் உணவில் மீண்டும் உள்புகுந்து நம்மிடம் வரும் அனைத்துமே ஒரு சுழற்சி .
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் அக்கழிவுகள் பயிர்கள் /புற்கள் மற்றும் அவற்றை உண்ணும் ஆடு -மாடு ;பறவைகள் -காய்கறிகள் -மறுபடியும் மனிதன் என சுற்றிவரும் .
மும்பை பகுதியிலுள்ள ஒரு ரெயில் நிலையம் அருகில் சாக்கடை நீர்தேங்கும் பகுதியில் கொத்தமல்லி /பசலை போன்ற கீரைகள் விளைகின்றனவாம் ..அப்போ அந்த கீரைகளை உண்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அல்லவா !!
யமுனை நதிக்கரையின் ஓரத்தில் உள்ள விளை நிலங்களில் நாடாப்புழு முட்டைகள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர் ! 


உடலை துப்புரவு செய்யும்போது மனித மலம் மற்றும் விலங்கு கழிவுகள் மற்றும் மாசுக்களுடன் புழுக்களும் முட்டைகளும் நீரில் கலந்து செல்வதால் பெரும்பாலானோருக்கு குடல் சம்பந்தமான நோய்கள் சர்வ சாதாரணமாம் .வீதியோரத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் துரித உணவுகள் , கவர்ச்சியூட்டுகிற மற்றும் விலை மலிவா இருக்கலாம் - ஆனால் அவற்றை உண்பதால் பின் விளைவுகள் அதிகம் .
தனிஷ்க் ஜார்ஜுக்கு சீன துரித உணவகத்தில் சாப்பிடும் பழக்கம் இருந்ததாம் ..அவர்கள் meat முறையாக சமைக்காமல் அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தாமல் இருந்திருக்கலாம் அல்லது அங்கு பணிபுரிவோர் சுகாதாரமின்றி உணவை சமைத்தாலும் புழுக்களின் முட்டைகள் சிறுவனது உடலை அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் மருத்துவர்கள் ..புழு முட்டைகள் நமது உடலை அடைந்ததும் குடலில் மற்றும் தசை பகுதியில் சென்று பெருகி மூளை நரம்பு மண்டலத்தை தாக்கும் .நீர்க்கட்டிகள் உடைந்து புழுக்கள் வெளியேறும்போது வலிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் .MRI /CTஸ்கானிங் செய்தால் மட்டுமே இப்புழுக்கள் எங்குள்ளன என கண்டறிய இயலும் !
கூடுமானவரை வெளியிடங்களில் சாலட் போன்றவற்றை உண்பதை தவிர்க்கவும் .புழுக்களின் முட்டைகள் இலைகளில் ஒட்டியிருக்கும் அதை நன்கு நீரால் கழுவினால் தான் பச்சையாக உண்ணலாம் ..வீடுகளில் சமைக்குமுன் நன்கு குழாயை திறந்து கீரைகளை நீரால் கழுவுவது நல்லது .இறைச்சி வகைகள் எனில் நன்கு உயர் வெப்பநிலையில் சமைக்க வேண்டும் .வெளியில் சென்று வந்ததும் கைகளை வெது வெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கழுவ வேண்டும்
குழந்தைகள் நகங்களை அடிக்கடி முறையாக வெட்டி விட வேண்டும் ...
மேலும் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருந்தால் அவற்றுக்கு முறையே deworming செய்ய வேண்டும் .
எங்கு வாங்கியததோ எப்படி வளர்ந்ததோ என்று பயந்து யோசிப்பதை விட நம் வீட்டிலேயே சிறு தோட்டம் அமைத்து காய் கறிகளை வளர்ப்பது மிக நல்லது .
INFORMATION AND IMAGE SOURCE ..GOOGLE

27 comments:

 1. பயனுள்ள பதிவு..

  பத்தாம் வகுப்பில் படித்த - உயிரியல் பாடங்கள் மீண்டும் நினைவுக்கு வந்தன.

  சரி.. தனிஷ்க் ஜார்ஜுக்கு நோய் தீர்ந்ததா?.. அறிய ஆவல்..

  ReplyDelete
  Replies
  1. இப்போ குணப்படுத்தியிருப்பாங்க ஐயா ..
   இன்னொரு செய்தி இந்தியன் எக்ஸ்ப்ரஸில் படிச்சேன் cysticercosis....பைபாஸ் ஆபரேஷனுக்கு போன ஒரு விவசாயின் உடல் முழுதும் கூட்டமா நாடா புழு இருந்திருக்கு அவர் சாராயம் குடிக்கும்போது பன்றி இறைச்சி உண்பாராம் ..இதுங்க அவர் உடலில் கூடாரம் போட்டிருக்கு ..டாக்டர்ஸ் சிரமட்டு அவர குணப்படுதிய்யிருக்காங்க ..நாம் இறைச்சி சாப்டலன்னாலும் ..கைகளை நல்லா கழுவனும்
   வருகைக்கு மிக்க நன்றி.....

   Delete
 2. வணக்கம்
  அருமையான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.. உண்மைதான் இன்று நாம் சாப்பிடும் உணவுகள் எல்லாம் நஞ்சுத்தன்மைதான்... காலம் மாறிவிட்டது. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ரூபன் ..வருகைக்கு மிக்க நன்றி

   Delete
 3. எச்சரிக்கையூட்டும் மிகவும் பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வு.

  திருமதி. மனோ சாமிநாதன் அவர்கள், திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்கள் ஆகிய இருவரும் இதேபோல இன்று பல தகவல்களை அளித்துள்ளார்கள். மூன்றாவதாக நீங்களும் இப்போ ஏதேதோ சொல்லி பயமுறுத்துகிறீர்கள். இனி எதைத்தான் சாப்பிடுவதோ ! எதைப்பார்த்தாலும் பயமாக உள்ளது.

  பயனுள்ள முக்கியமான இந்த விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா :) நீங்க தான் எதற்கும் கவலைபடாம அந்த நேந்திரம் சிப்ஸ் நொறுக்ஸ் எல்லாம் சாப்பிட போறேன் என்றீர்களே :).. பொதுவா எல்லா காய் பழங்களை நன்கு கழுவி சாப்ப்பிடுவது சிறந்தது
   ..நானும் மனோ அக்கா பதிவை படிச்சதும் ஏற்கனவே நலம் நெட் /பசுமை விடியலில் பகிர்ந்ததை இங்கே பேஸ்டிட்டேன் :)

   Delete
 4. //எங்கு வாங்கியததோ எப்படி வளர்ந்ததோ என்று பயந்து யோசிப்பதை விட நம் வீட்டிலேயே சிறு தோட்டம் அமைத்து காய் கறிகளை வளர்ப்பது மிக நல்லது .//

  :) மிக நல்ல யோசனை. கேட்கவே சந்தோஷமாக உள்ளது. ஆனால் ......... இது எல்லோருக்கும் சாத்தியப்படுமா? மிகவும் சந்தேகம்தான். :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ..சிறிய விவசாயிகளிடம் வாங்கலாம் ..அவங்களுக்கு பூச்சி மருந்து வாங்குமளவு வசதி இராது

   Delete
 5. மிகத்தெளிவாக, அழகாக எழுதியிருக்கிறீர்கள் ஏஞ்ச‌லின்! ஆப்பிள் பழங்களை சுத்தம் செய்யும் முறை நிறைய பேருக்கு பயனளிக்கும், எனக்கும் உள்பட!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மனோ அக்கா ..நான் கௌசி எல்லாம் நலம் .நெட் இல் இப்படிப்பட்ட விஷயங்களை அடிக்கடி பகிர்கிறோம் ..இது முன்பே போட்ட பதிவு அங்கு ..இப்போ உங்க பதிவை பார்த்ததும் உடனே நானும் இங்கே பகிர்ந்தேன்ஆப்பிள் எல்லாம் ஒன்லி ஆர்கானிக் வகை மட்டுமே என்னால் சாப்பிட முடியும் highly சென்சிட்டிவ் நான் சில பொருள்களுக்கு ..இது எனக்கு மட்டும் .மகளுக்கும் கணவருக்கும் எதை சாப்பிட்டாலும் பிரச்சினையில்லை. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

   Delete
 6. நாங்கள் ஆப்பிளாவது எப்போதாவதுதான் வாங்குவோம். ஆனால் காய்கறிகள்? அவற்றை நீங்கள் சொல்வது போல வாங்கி வந்ததுமே சுத்தம் செய்து பின்னர் குளிர் சாதனப் பெட்டியில் வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஸ்ரீராம் ..csir உணவு தரக்கட்டுபாட்டு நிலையம் கொடுத்த இரசானயங்கள் பட்டியலின் படம் தான் மேலிருப்பது .. இன்னும் சில செய்திகள் படங்கள் இணைக்கவே மனசுக்கு பிடிக்கல ..
   கண்டிப்பா நன்கு அலசியபின்னரே ப்ரிட்ஜில் வைங்க ..தர்பூசணி பட்டாணி மேட்டர்லாம் முன்பே வீடியோவா வந்திருச்சி .....(கொஞ்சம் நாளைக்கு பயம் காட்ட மாட்டேன் :)

   Delete
 7. வைகோ ஐயா சொன்னது போல் இன்று மட்டும் மூன்று பதிவுகள்... ரொம்பவே பயமுறுத்துகிறது...!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா :) மூணு பெரும் சேர்ந்து பயங்காட்டிடோமோ :)
   சரிங்க சகோ குறைந்தது ஐந்து போஸ்ட் கழித்துதான் இனி விழிப்புணர்வு பதிவு போடுவேன்

   Delete
 8. ஆரோக்கியம் பேண அளித்த மிகுந்த பயனுள்ள பதிவு மிக்க நன்றி சகோ!இனி முறைப்படி சுத்தம் செய்து கொள்வார்கள் நானும் தான் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இனியா ..கனடாவில் எப்படி எல்லா நாட்டு பொருளும் கிடைக்குதா ..அமெரிக்க ஆப்பிளில்தான் அதிக இரசாயனம் என்கிறார்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 9. அருமையான பதிவு. இப்ப வரும் காய்கறிகள்,பழங்கள் சாப்பிடவே பயமாயிருக்கு. நன்றாக கழுவிப்பாவித்தாலும் சில தன்மைகள் இருக்கத்தான் செய்கிறது. சுத்தம் செய்ய நல்ல டிப்ஸ் அஞ்சு. விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.
  விழிப்புணர்வு பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..ஜெர்மனில ஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் வெளிநாட்டு உணவை ரொம்ப ரேராக தான் பார்த்திருக்கேன் இப்போ எப்படின்னி தெரில ..ஆனா இங்கே இங்க்லன்ட் குட்டி இந்தியா :)
   குட்டி பங்களாதேஷ் குட்டி பாகிஸ்தான் அதுமட்டுமில்லை பல நாட்டு பொருளும் கிடைக்குது அதான் நிறைய ஒவ்வாமையும்

   Delete
 10. அருமையான விழிப்புணர்வு பதிவு! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ சுரேஷ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 11. நல்லதொரு பதிவு.. இதையெல்லாம் பார்க்கும் பொழுது சாப்பிடவே பயமாக இருக்கு..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரமா :) பயப்படக்கூடாது ..அப்புறம் எதை பார்த்தாலும் பயம் தான் முன்னாள் நிற்கும் .
   நான் சின்னவளா இருந்தப்போ ஒரு அரிசி வண்டை பார்த்து விட்டேன் அரிசி மூட்டையில்
   அதிலிருந்து சீரகம் பொங்கலில் இருந்தா கூட கலாட்டாதான் :) இங்கே அந்த பயமே இல்லை
   இப்பெல்லாம் புழு பூச்சி கூட அரிசியை அண்டரதில்லை .

   Delete
 12. மிகவும் பயனுள்ள எச்சரிக்கைப் பதிவு. சாலட்தான் சத்து என்று எங்கு சென்றாலும் சாலட் சாப்பிடும் என்னைப் போன்றவர்கள் முக்கியமாய்க் கவனிக்கவேண்டிய தகவல்கள். எல்லாவற்றுக்கும் மேலாய் கடைசியாய் சொன்னீங்களே... அதுதான் சாலச்சிறந்த வழி. நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
 13. பயனுள்ள பதிவு சகோ...
  தொடர்க்க
  வாட்சப்பில் போட்டுட்டேன் ..

  ReplyDelete
 14. ஆம் சகோதரி! நாங்கள் காய், பழங்கள் எல்லாவற்றையுமே தண்ணீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து நன்றாகத் தேய்த்துக் கழுவி பின்னர் உப்பு கலந்த நீரில் போட்டு அதையும் சிறிது நேரம் வைத்து விட்டு நன்றாகக் கழுவு எடுத்துத்தான் உபயோகப்படுத்துகின்றோம். பச்சைக் காய்கள் சாலட் நல்லது ஆனால் அதில் இந்த நாடாப் புழுக்களின் முட்டை நம் ரத்தைத்தில் கலந்து மூளைக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது....எங்கள் உறவினர் வீட்டில் உள்ள பெண்ணிற்கு அது நேர்ந்த அனுபவம் உண்டு. நல்ல காலம் ஒரு முட்டைதான் அதை மருதின் மூலம் நீக்கி விட்டார்கள்....ஆனால் ட்ரீட்மென்ட் சிவியர்தான்.....

  சரிதான் சகோதரி.....இத்தனை நாம் செய்யும் போது னம் மண் நல்ல மண் இல்லாமல், அதிலும் கெமிக்கல்ஸ் பிளாஸ்டிக் மூலம் கலந்து இருப்பாதால் அது அப்படியே காய், பழங்களுக்குளும் செல்கின்றதே....அதனால் தானே ஆயுர் வேத, சித்த மருந்துகள் தாயாரிக்கப் படும் செடிகள் அந்த இலைகள் பண்டு போல் அந்த மருத்துவ குணங்கள் உள்ளவையாக இப்போது இல்லை என்றும் சொல்லப்படுகின்றது.....என்னவோ போங்க....ம்ம்ம்

  ReplyDelete