அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

4/25/15

Loud Speaker ..21முக புத்தக பகிர்வுகள்

இன்றைய ஒலிபெருக்கி செய்திகள் ..அனைத்தும் முக புத்தக பகிர்வுகள் ..


மனதை தொட்ட படம் !
இது முகபுத்தகத்தில் பார்த்தது ..
https://www.facebook.com/imaigalindia?fref=nf
இமைகள்!! - முடியாதவர்களுக்கு முடிந்த வரை உதவி செய்கின்ற ஒரு அமைப்பு.இயலாதோருக்கு உணவளித்து அவர்களுடன் ஒரு செல்பியும் எடுத்து நண்பர்களை  tag செய்வது. ஏழைகளுக்கு உணவளிக்கும் இக்குழுவினரை பாராட்டுவோம் ..

...........................................................................................................................................

இந்த காணொளி கண்ணில் நீர் வரவைத்தது (ndtv )


இதுவும் முக புத்தக பகிர்வு ...
ஒரு குழந்தை சிறுமி பொறுப்பற்ற அவசர புத்தி தந்தையின் வாகனத்தை 
ஸ்டார்ட் செய்து விழுகிறாள் ..அங்கே யார் முதலில் உதவிக்கு ஓடி வரான்னு பாருங்க ..


https://www.facebook.com/logical.indian/videos/706670912795964/?pnref=storyhttps://www.facebook.com/logical.indian/videos/706670912795964/?pnref=story


சக உயிர்களை நேசிக்கும் அசோக் நகர் சேகர் தம்பதியினர் போன்ற அரிய ஜீவன்களும் நம்மிடையே வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். தனது தலை மேலேயே தினமும் ஒரு பறவை வந்து உட்காருகிறது. அதற்கு திராட்சை முதலான பழங்களை தானியங்களைத் தந்து தனது விருந்தினரைப் போல உபசரிக்கிறார் இந்தப் பழக்கடை சேகர்.
மேலும் வாசிக்க ...இங்கே ...மற்றும் இங்கே 
சுற்றுச்சூழலையும் மாந்தநேயத்தையும் நினைத்துப்பார்க்க இந்த வீடியோ பகிர்வு மேலும் தூண்டுகிறது. இத்தகைய பசுமை துளிர்க்கும் நற்செயலோடு நம்மைப் பிணைத்த ஜாக்கி சேகருக்கு ஒரு ஹாண்ட்ஷேக்.


.................................................................................................................................................................
நேபாள நாட்டில் நில நடுக்கத்தால் பாதிக்கபட்ட அனைத்துயிர்களுக்கும்  பிரார்த்திப்போம் இந்நிலநடுக்கத்தால் 758 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் எனவும் அஞ்சப்படுகிறது.

அன்புடன் ஏஞ்சலின் 

4/17/15

LOUD SPEAKER 20...bio-reactive food expiry label , கூந்தலை புற்று நோயாளிகளுக்கு தானமளித்த தங்கமான கல்லூரி பெண்கள் ,WELLO WATER WHEEL

ஒலிபெருக்கியில் இன்று ... Designer Solveiga Pakstaite,  bio-reactive food expiry label called Bump Mark, கூந்தலை புற்று நோயாளிகளுக்கு தானமளித்த தங்கமான கல்லூரி மாணவியர்  ,WELLO WATER WHEEL..

4 மில்லியன் டன்  உணவுப்பொருள் ஆண்டு தோறும் வீணாக குப்பையில் கொட்டப்படுகிறது எங்க இங்கிலாந்தில் !ஃபிரிட்ஜ் என்பது தேதி காலாவதி ஆகும்வரை உணவுப்பொருட்களை  வைக்க பயன்படுகிறது. ஆனால், அவற்றில் வைக்கும் பொருட்களையும் கொட்டுவது தான் அதிகமாக உள்ளது. இங்கே இங்கிலாந்தில் முதியோர் பார்வை குறைபாடுள்ளோர் பலர் இறைச்சி வகைகளை வாங்கீ குளிர்சாதன பெட்டியில் வைக்கின்றனர் தேதி காலாவதி ஆவது லேபிள் பார்த்தால்தானே தெரியும் ? இப்படி எவ்வளவோ பயன்படுத்தாமலே குப்பைக்கு செல்கிறது இதற்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ளார் 
Designer Solveiga Pakstaite,  


இவர் Brunel பல்கலைகழகத்தின் 22 வயது 
டிஸைன் டெக்னாலஜி மாணவி..இம்முறையின் பெயர் பம்ப் மார்க் டெக்னிக் .உணவு பாக்கெட் மீது தேதி மற்றும் பிற  விவரங்கள் இருக்கும் அதன் முனையில் இருபக்கம் நடுவில் ஜெலட்டின் மூடிய பிளாஸ்டிக் தாள் ஒட்டீடுவார்கள் .
ஜெலட்டின் கரிமப்பொருள் இறைச்சியில் மற்றும் சீஸ் பொருட்களில் உள்ள புரத கரிமமும் ஒரே தேதியில் சிதைந்து காலாவதி ஆகும் தன்மையுடையவை ..
உணவின் freshness குறைய குறைய ஜெலட்டினும் 
மென்மையாகும் பாக்கெட் முனை யில் bump மார்க் பகுதியை விரலால் தடவ சமமா இருந்தா உணவு பழுதடையல்ல ஆனா புடைத்து இருந்தா அது உண்ண உகந்ததல்ல ....
இதில் ஒரு மைனஸ் பாயின்ட் இருக்கு ஜெலட்டின் விலங்கு எலும்பு மற்றும் பிற உறுப்பில் இருந்து தயாரிக்கபடுவதால் சைவ விரும்பிகள் இதனை விரும்ப மாட்டார்கள் ஆகவே அதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்க முற்பட்டுள்ளார் இம்மாணவி 
..............................................................................................................................................
தண்ணீர் சக்கரம் !!!.....


வெல்லொ( Wello ) எனும் அமெரிக்க சமூக சேவை தன்னார்வ நிறுவனத்தின் முயற்சியால் உருவானது இந்த தண்ணீர் சக்கரம் /உருளை 
இவர்களின் நிறுவனம் உலகெங்கும் உள்ள ஏழை நாடுகளில் சுகாதாரமான நீர் அனைவருக்கும் கிடைக்கணும் குறிக்கோள் கொண்டது 
ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்களும் சிறு பிள்ளைகளும் மண் /பிளாஸ்டிக் குடங்களை தலையிலும் தோளிலும் சுமந்து பல மைல்கள் வெயிலில் சென்று தண்ணீர் கொண்டுவருவதை பார்த்த இவர்கள் இந்த பிளாஸ்டிக் நீர் சக்கரத்தை உருவாகியிருக்கின்றார்கள்
இது 50 லிட்டர் கொள் அளவு கொண்டது . விலை $25-$30, டாலர்கள் //1500 ரூபாய் முதல் 1800வரை இதன் விலை வரும் .
நீருக்கென அல்லல்படும் பெண்களை கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தண்ணீர் சக்கரம் இப்போது ராஜஸ்தான் /குஜராத் மாநிலங்களின் கிராமபுரங்களில்
ஆண்களிடம்!! மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளதாம் :)
இந்த WELLO WATER WHEEL...
.................................................................................................................................................
எங்க ஆலயத்தில் ஒரு பஞ்சாபி பெண் 24 வயது இருக்கும் அழகிய நீண்ட கூந்தல் அவருக்கு போன வாரம் பார்த்தப்போ தோள் வரை வெட்டி இருந்தார் ..பிறகுதான் கேள்விபட்டேன் கேன்ஸர் நோயாளிகளுக்கு விக் செய்ய அவ்வளவு நீண்ட கூந்தலை டோநெட் செய்திருக்கார் ..

இதே போன்ற செய்தி சென்னை மகளிர் கல்லூரி மாணவிகளும் செய்துள்ளார்கள் !  
http://www.thebetterindia.com/21121/natural-hair-wigs-cancer-patients-chennai-tangled/


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=129422கொடிய நோயான புற்றுநோயால் உருக்குலைந்து மொத்த தலைமுடியையும் இழந்து எங்கோ இருக்கும் யாரோ முகம் தெரியாதவர்களுக்காக இளம்பெண்கள் தங்களது நீண்ட தலைமுடியை அர்ப்பணித்து இருக்கிறார்கள். இந்த முடி கொடை கொடுக்கும் உணர்வு உள்ளப்பூர்வமாக உருவான விதம் நெஞ்சை நெகிழ வைக்கிறது. இந்த கல்லூரியில் மாணவியர் ரோட்டரி சங்கம் செயல்பட்டு வருகிறது. இதில் அங்கம் வகிக்கும் மாணவிகளில் சிலர் ‘யு டியூப்’ பார்த்த போது அதில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடி தானம் செய்யலாம் என்ற தகவலை அறிந்து இருக்கிறார்கள். அதற்காக சில மாணவிகள் அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்கள். அப்போது அங்கு புற்று நோய்க்கு சிகிச்சை பெறும் சிறுவர்கள், இளம்பெண், இளைஞர்கள், முதியவர்கள் என்று பல தரப்பினரும் தலைமுடியை இழந்து பார்க்கவே பரிதாபமாக அமர்ந்திருந்தார்கள். புற்று நோய் சிகிச்சைக்கு ‘கியூமோதெரபி’ சிகிச்சை கொடுக்கும் போது தலையில் உள்ள முடி கொத்துக் கொத்தாக கீழே விழுந்து விடுகிறது. தலை மொட்டையாக காட்சியளிக்கிறது.


இந்த கஷ்டத்தை அனுபவிக்காமல் இருப்பதற்காக நோயாளிகள் சிலருக்கு முன்னதாகவே மொட்டையடித்துவிட்டு கியூமோ தெரபி சிகிச்சை அளிக்கிறார்கள். இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெறுபவர்கள் படிக்கவும், பணிகளுக்கும் செல்லும் போது தலைமுடி இல்லாமல் வெளியே செல்ல கூச்சப்படுகிறார்கள். வசதி படைத்தவர்கள் ‘விக்’ வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். ஒரு விக் விலை ரூ.20 ஆயிரம் வரை இருக்கிறது. இதை எல்லோராலும் வாங்க முடியவில்லை.


எனவே, நலிந்த 16 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு, தங்கள் தலை முடியை கொடையாக கொடுத்து விக் தயாரித்து வழங்க இந்த கல்லூரி மாணவிகள் முடிவு செய்தார்கள். அதற்காக கிரீன் டிரண்ட்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முடி கொடை வழங்கும் முடிவை எடுத்தனர்.எத்தனை மாணவிகள் இதில் சேர்ந்து முடியை துறக்க தயாராக இருப்பார்கள் என்ற சந்தேகத்துடனேயே, ரோட்டரி மாணவிகள் இந்த பணியை தொடங்கி உள்ளனர். ஆனால் எதிர்பார்த்ததைவிட அதிகமாக... அதுவும் 2,500 மாணவிகள் தங்கள் அழகிய தலை முடியை தானமாக கொடுக்க முன் வந்தார்கள். அவர்களிடம் இருந்து 50 கிலோ முடி பெறப்பட்டது. இதன் மூலம் சுமார் 200 ‘விக்’குகளை தயாரிக்க முடிந்தது. மூன்று அளவுகளில் விக்குகள் தயாரித்தனர்.
நன்றி .தினத்தந்தி செய்தி 

அன்புடன் ஏஞ்சல் ...

4/9/15

பழங்களில் பூச்சி கொல்லி மருந்துகள் ,உடல் நலம் காப்போம் ...நாடாப்புழு பாதிப்புக்கள் .....

பழங்களில் பூச்சி கொல்லி மருந்துகள் நீக்கும் வழிமுறைகள் 
மூன்று மடங்குக்கும் அதிக அளவு இராசயன பூச்சி மருந்து கலவையில் அத்தியாவசிய உணவு பொருட்களை முக்கி எடுத்து பின்னர்தான் அங்காடிகளில் விற்பனைக்கு அனுப்புகிறார்களாம் ..ஏன் தெரியுமா ...எளிதில் அழுகினால் இவர்களுக்கு நஷ்டமாச்சே !!


ஆப்பிள் சாப்பீட்டா நோய் அண்டாது என்றதெல்லாம் அந்தகாலம் ..இந்த பூச்சி கொல்லிகள் தடை செய்யப்பட அளவினை விட 140% அதிகம் ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களிலும் இருக்காம் .
திராட்சை மற்றும் காலி ப்ளவரில், பறிக்க சில மணி நேரம் முன்பு பூச்சி மருந்து இடுகிறார்கள். பல மணிநேரம் நீரில் ஊறவைத்தால் 90% போகும். இல்லையெனில் நம் உடலில் தான் போகும் ..

திராட்சையில் பூப் பூக்கும் சமயம் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தை அடிக்கிறார்கள் .. அதைச் சரியாகக் கரைக்காமல் செய்வதால் சில துகள்கள் பூவினுள்ளேயே தங்கிவிட , பூ காயாகிப் பழமாகும்போது இத்துகள்கள் உள்ளேயே இருந்துவிடுகிறது..

ஆப்பிள் பழத்தில் மேலே சுரண்ட மெழுகு தூள் போல் வரும் அது ஒன்றுமில்லை ஒரு வருடமுந்தைய தயாரிப்புக்கு wax டிங்கரிங் ,பட்டி போட்டதன் விளைவே அது ..

காய்கறிகளையும் பழங்களையும் அகன்ற பாத்திரத்தில் வைத்து குளிர்ந்த நீரை ஊற்றி மூழ்க வைத்து 5 நிமிடம் தேய்த்து நன்றாக அலம்பினால் 75%ரசாயன பூச்சி கொல்லிகள் நீருடன் போய் விடும்
இந்த நீரில் 1 tbs உப்பை சேர்த்து அலம்பினால் 80-90% சதவீத ரசாயன பூச்சி கொல்லிகள் நீங்கிவிடும்

apple cider வினிகர் திரவம் (Vinegar) 10% ,நீர் 90% சேர்ந்த திரவத்தில் காய்கறிகளையும் பழங்களையும் சிறிது நேரம் ஊற வைத்து அலசினாலும் பயன் கிடைக்கும்
ரசாயன பூச்சிகொல்லிகள் கத்திரி, திராட்சை மற்றும் மடிப்பு உள்ள காய்கறிகளான வெண்டை, ஆப்பிள் போன்றவற்றில் மற்றும் காலிப்லவரிலும் இருக்கும் அவற்றின் தோல் இடுக்குகளையும் நன்கு அலச வேண்டும்
வாஷ் பேசின் அல்லது வாயகன்ற பாத்திரத்தில் வெது வெதுப்பான நீர் ஊற்றி அதில் 1 மேசைக்கரண்டி பேக்கிங் சோடா +1மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து ஆப்பிள் பழங்களை 5-10 நிமிடம் வைத்து பாருங்கள் நீரின் நிறம் கலங்கலா  மாறி இருக்கும் ..பூச்சி மருந்து மெழுகு எல்லாம் வர ஆரம்பிக்கும் இப்போ பிரஷ் வைத்து ஆப்பிளை தேய்த்தா மெழுகு பூச்சு நீங்கி சுத்தமாகும் ..
தகவல் படம் ..கூகிள் 

................................................................................................................................................................

உடல் நலம் காப்போம் ...நாடாப்புழு பாதிப்புக்கள் .....
இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு சனிக்கிழமை, ஐந்து வயதான தனிஷ்க் ஜார்ஜுக்கு திடீரென உடல் தன்னிச்சையாக வலிப்பு வந்தது போன்று கட்டுப்பாடின்றி துடிக்கின்றது .சிறுவனது கண்களின் வெண்திரை மட்டும் தெரிறது (dilated ) இரண்டு கைகளையும் இறுக்கி பிடித்த நிலையில் உடல் கடினமாக மாறுகிறது ..சுய நினைவை இழக்கும் தருவாய் !!சிறுவனது நிலையை கண்டு எதோ விபரீதம் என்றுணர்ந்து உடனடியாக அவனது தந்தை அவனை மருத்துவமனை கொண்டு செல்கிறார் ..அங்கு தீவிர பரிசோதனைகளின் முடிவில் மருத்துவர்கள் கூறியது //
//உங்கள் மகனது மூளை பகுதியில் பன்றியிலிருந்து பரவும் நாடாப்புழுவின் கூட்டுப்புழுக்கள் உள்ள நீர்க்கட்டி இருக்கின்றது ..அதன் காரணமாகத்தான் நரம்புகள் பாதித்து வலிப்பு ஏற்பட்டுள்ளது !!//
இத்தகைய நாடா புழுக்களால் உண்டாகும் நீர்க்கட்டிகள் வளர்ந்து வரும் நாடுகளில் தலையாய சுகாதார பிரச்சினை .ஜப்பான் ,கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பச்சை மீனை உண்பவர்களிடத்தில் இப்புழுக்கள் அதிகம் உள்ளன.
இது ஏழைகளை மட்டும் தாக்கும் நோய் என்று நினைத்தால் அது பெருந்தவறு .
நாடாபுழுக்களால் ஏழை பணக்காரர் என இனபாகுபாடின்றி அனைவரும்பாதிக்கப்படுகின்றனர்
"நம் நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாடாப்புழு நீர்கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என இந்திய அரசின் அதிகார பூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது .


முறையாக சமைக்கப்படாத இறைச்சி மீன் போன்ற உணவுகளை உண்ணும்போது அந்த இறைச்சியில் உள்ள புழுவின் முட்டைகள் மனித உடலில் நுழைந்து குடற்பகுதியில் நன்கு வளர்கின்றன ..இப்படி இவற்றை சுமப்பவர்கள் !! பிறருடன் கைகுலுக்கும்போதோ அல்லது உபயோகித்த பொருட்களை பிறர் பயன்படுத்தும்போது இரண்டாமவருக்கு நாடாபுழு முட்டைகள் பரவுகின்றன !!
நம் நாட்டில் கழிப்பறை வசதிகளற்ற பகுதிகளில் மக்கள் ஆறு குளங்களை நாடி செல்வதால் நாம் நாடாவிட்டாலும் நீர் நிலைகள் வழியே இப்புழுக்கள் நம்மை நாடி வருகின்றன:(
எந்த ஒரு குப்பையும் முறையாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் ..அது நம் உடலில் இருந்து வெளியேறும் கழிவானாலும் ..கடலில் சென்று கலந்தால் மீன்கள் மூலம் நம்மை நாடீ வரும் ..வயல் வெளியில் கலந்தால் அதே கழிவு நாம் உண்ணும் உணவில் மீண்டும் உள்புகுந்து நம்மிடம் வரும் அனைத்துமே ஒரு சுழற்சி .
திறந்தவெளியில் மலம் கழிப்பதால் அக்கழிவுகள் பயிர்கள் /புற்கள் மற்றும் அவற்றை உண்ணும் ஆடு -மாடு ;பறவைகள் -காய்கறிகள் -மறுபடியும் மனிதன் என சுற்றிவரும் .
மும்பை பகுதியிலுள்ள ஒரு ரெயில் நிலையம் அருகில் சாக்கடை நீர்தேங்கும் பகுதியில் கொத்தமல்லி /பசலை போன்ற கீரைகள் விளைகின்றனவாம் ..அப்போ அந்த கீரைகளை உண்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அல்லவா !!
யமுனை நதிக்கரையின் ஓரத்தில் உள்ள விளை நிலங்களில் நாடாப்புழு முட்டைகள் இருப்பதை கண்டுபிடித்து உள்ளனர் ! 


உடலை துப்புரவு செய்யும்போது மனித மலம் மற்றும் விலங்கு கழிவுகள் மற்றும் மாசுக்களுடன் புழுக்களும் முட்டைகளும் நீரில் கலந்து செல்வதால் பெரும்பாலானோருக்கு குடல் சம்பந்தமான நோய்கள் சர்வ சாதாரணமாம் .வீதியோரத்தில் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகள் மற்றும் துரித உணவுகள் , கவர்ச்சியூட்டுகிற மற்றும் விலை மலிவா இருக்கலாம் - ஆனால் அவற்றை உண்பதால் பின் விளைவுகள் அதிகம் .
தனிஷ்க் ஜார்ஜுக்கு சீன துரித உணவகத்தில் சாப்பிடும் பழக்கம் இருந்ததாம் ..அவர்கள் meat முறையாக சமைக்காமல் அதிக வெப்பநிலைக்கு உட்படுத்தாமல் இருந்திருக்கலாம் அல்லது அங்கு பணிபுரிவோர் சுகாதாரமின்றி உணவை சமைத்தாலும் புழுக்களின் முட்டைகள் சிறுவனது உடலை அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் மருத்துவர்கள் ..புழு முட்டைகள் நமது உடலை அடைந்ததும் குடலில் மற்றும் தசை பகுதியில் சென்று பெருகி மூளை நரம்பு மண்டலத்தை தாக்கும் .நீர்க்கட்டிகள் உடைந்து புழுக்கள் வெளியேறும்போது வலிப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் .MRI /CTஸ்கானிங் செய்தால் மட்டுமே இப்புழுக்கள் எங்குள்ளன என கண்டறிய இயலும் !
கூடுமானவரை வெளியிடங்களில் சாலட் போன்றவற்றை உண்பதை தவிர்க்கவும் .புழுக்களின் முட்டைகள் இலைகளில் ஒட்டியிருக்கும் அதை நன்கு நீரால் கழுவினால் தான் பச்சையாக உண்ணலாம் ..வீடுகளில் சமைக்குமுன் நன்கு குழாயை திறந்து கீரைகளை நீரால் கழுவுவது நல்லது .இறைச்சி வகைகள் எனில் நன்கு உயர் வெப்பநிலையில் சமைக்க வேண்டும் .வெளியில் சென்று வந்ததும் கைகளை வெது வெதுப்பான நீரில் உப்பு சேர்த்து கழுவ வேண்டும்
குழந்தைகள் நகங்களை அடிக்கடி முறையாக வெட்டி விட வேண்டும் ...
மேலும் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருந்தால் அவற்றுக்கு முறையே deworming செய்ய வேண்டும் .
எங்கு வாங்கியததோ எப்படி வளர்ந்ததோ என்று பயந்து யோசிப்பதை விட நம் வீட்டிலேயே சிறு தோட்டம் அமைத்து காய் கறிகளை வளர்ப்பது மிக நல்லது .
INFORMATION AND IMAGE SOURCE ..GOOGLE

4/1/15

Loud Speaker ..19 ,kids craft,Daffodil bulbs,the guardian of Fukushima’s abandoned animals’ மற்றும் சாலட் டிரெஸ்ஸிங்

இன்றைய ஒலிபெருக்கி செய்திகள்....

kids craft,Daffodil bulbs,the ‘guardian of Fukushima’s  abandoned animals’
மற்றும் சாலட் டிரெஸ்ஸிங் .

இது முக புத்தகத்தில் பகிர்ந்தது ..kids craft ,Art chain என்று பள்ளி பிள்ளைகள் சுலபமா செய்யும் கிராப்ட்ஸ் முக நூலில் நான் ,அதிரா ,பிரியா ,faiza ,கிரேஸ் ,ஆச்சி (திருமதி b .s .ஸ்ரீதர்)rama ravi ,ஆதி  அனைவரும் ஒரு தொடர் சங்கிலி போஸ்ட் செய்தோம் ..
இது அதில் ஒன்று ..இது ஒரு recycled பென்சில் /பென் ஹோல்டர் ..வாசனை மெழுகு candle ,இப்படி கண்ணாடி ஜாடிகளில் கடைகளில் கிடைக்கும் ..மெழுகு உருகி தீரும் நிலையில் இருந்த ஜாடியை சுடுநீரில் ஊறவைத்து கழுவினேன்.பிறகு நன்கு துடைத்து double sided sticky  டேப் ஆங்காங்கு ஒட்டி ஒரு லேயர் உரித்து அதன் மேல் சணல் கயிற்றால் சுற்றிக்கொண்டே வந்தேன் ..இறுதியில் க்ளூ வைத்து ஒட்டினேன் .
சனலுக்கு பதில் எந்த வண்ண கயிறும் பயன்படுத்தலாம் ..

பிறகு ஒரு quilled மலரும் இலையும் அழகுக்கு ஒட்டிவிட்டேன் .

...................................................................................................................................................................


Daffodil bulbs ..The daffodil is the international symbol of hope in the fight against cancer.எங்க ஆலயத்தில் அக்டோபர் மாதம் புற்று நோயால் மரித்த ஒரு சிறு (19 வயது )பெண்ணின் இறுதி பயணம் நடந்தது :(  
நான் வாலண்டியர் என்பதால் பல நிகழ்வுகளில் பங்கேற்கனும்  ..சர்வீஸ் முடிந்ததும் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறு காகித பையில்  daffodil பல்ப் தோட்டத்தில் விதைக்க கொடுத்தார்கள் .உடனே நட்டு வைத்தேன் இந்த வாரம் மலர்ந்திருக்கு ..


நம்ம ஊரில் இறந்தவங்க வீட்டில் சொல்லிக்காம போவாங்க ..வெளி நாட்டில் எல்லாம் புதுமையே ..
.................................................................................................................................................................
fukushima பேரழிவு கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தினால் ஜப்பானில் சுனாமிப் பேரழிவு ஏற்பட்டது. இதில் புகுஷிமா அணு உலையும் தப்பவில்லை.இது 1986ல் ஏற்பட்ட செர்னோபில் விபத்தின் கதிர்வீச்சு போல் கிட்டத்தட்ட 14 மடங்கு அதிகப் பேரழிவை ஏற்படுத்தும் என்று அறிவியளாலர்கள் கூறுகிறார்கள்.வார்த்தையால் விவரிக்க இயலா ,கண்ணால் பார்க்க முடியா காட்சிகள் :(மக்கள் radioactive exclusion zone என்று அந்த சுற்று வட்டாரத்தில் இருந்து வெளியேறினர் :(
தங்களை காப்பதற்க்கு ..அப்படி போகுபோது அவர்களை வாழவைத்த 
மாடு கோழி ,பண்ணை விலங்குகள் ,நாய் பூனை என பல ஜீவன்களை அவிழ்த்து கூட விடாமல் அப்படியே சென்றனர் :(  ..  அப்படி இவர்கள் விட்டுப்போனவற்றை ஒரு நல்ல இதயம் கொண்ட  55-வயது  Naoto Matsumura, அவ்விடம் விட்டு போனாலும் மீண்டும் வந்து அந்த ஜீவன்களை 
பராமரிக்கிறார் ..அணுக்கதிர் வீச்சு பாதிப்பு தன்னை தாக்க 40 ஆண்டு (இவறுக்கு 95 ஆகிடும் )..ஆகவே அதனை பற்றி கவலை கொள்ளாமல் அனாதரவா விடப்பட்ட ஜீவன்களை அங்கே சென்று பராமரிக்கிறார் !
Naoto Matsumura is the only human brave enough to live in Fukushima’s 12.5-mile exclusion zone

the ‘guardian of Fukushima’s  abandoned animals’மனதை உருக்கும் அன்பை காண இங்கே செல்லுங்கள் 

http://www.boredpanda.com/fukushima-radioactive-disaster-abandoned-animal-guardian-naoto-matsumura/

சில வருடங்கள் முன்பு வரை சாலட் அல்லது பச்சடி என்பது பச்சை காய்கறிகளை மெலிதாக அரிந்து அதில் உப்பு மிளகுத்தூள் அல்லது தயிர் கலந்து தயாரிப்ப்பார்கள் அது உடலுக்கும் மிக நன்மை தரும்.
இப்போ சமீப காலமாக சாலட் மட்டுமே சாப்பிட என பெரிய ரெஸ்டாரன்ட்ஸ் ஆங்காங்கே நகரெங்கும் முளைத்து விட்டது ..டெலி deli ,இத்தாலிய சைனீஸ் மெக்ஸிகன் ranch என தனியே உப்பும் அஜினமொட்டொவும் அதிகளவில் சேர்த்த சாலட் டிரெஸ்ஸிங் வகைகளும் விற்பனையாகின்றன .மிக பிரபல கம்பெனி ஒன்றின் தயாரிப்பில் ,செயற்கை சுவை / நிறமூட்டிகள் சோயா எண்ணெய், செயற்கை வாசனை, ஸ்டார்ச், பாஸ்பாரிக் அமிலம், polysorbate 60 , செயற்கை நிறம், மற்றும் disodium அதிகமான EDTA ,msg போன்றவை இருக்கின்றன .அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. .இதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

இது புளிப்புதன்மைக்காக சாலட் கலவையில் சேர்க்கப்பட்டுள்ளது .மேலும் செயற்கை நிறமூட்டிகள் பல பிரச்சினைகளுக்கு அடிப்படை காரனமாகின்றன .இப்படி பலகாலமுன் தயாரித்து பாட்டிலில் அடைக்பட்டவற்றை பச்சை காய்கறிகளுடன் கலந்து உண்பதால் உடலுக்கு தீங்கு மட்டுமே ஏற்படும் . அதைவிட நாமே வீட்டில் உடனடியாக இந்த சாலட் டிரெஸ்ஸிங் தயார் செய்யலாம் .உடலுக்கு ஆரோக்கியமான எவ்வித பக்க விளைவுகள் ஏற்படாது ..

தேவையான பொருட்கள் 
பூண்டு ....... 1 பல் 
மஞ்சள் தூள் ....1/2 தேக்கரண்டி 
இஞ்சி தோல் நீக்கியது ....1/2 இன்ச் 
எலுமிச்சை சாறு ....2 மேசை கரண்டி 
ஆலிவ் எண்ணெய் ...1 மேசை கரண்டி 
உப்பு ... தேவையான அளவு 
தேன் ....1/4 தேக்கரண்டி 
இஞ்சி பூண்டை இடித்து மேற்கூறிய பொருட்களுடன் கலந்து சாலட் வகை காய் இலைகளுடன் சாப்பிட்டு பாருங்க .அதிக செலவில்லாம ஆரோக்கியமான சாலட் டிரெஸ்சிங் ..


மீண்டும் சந்திப்போம் ..அன்புடன் ஏஞ்சல்