அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/27/15

Loud Speaker 18..


இன்றைய ஒலிபெருக்கி செய்திகள் .கா .கா .கா :)

காக்கா பற்றிய சில தகவல் 


காதல் ஜோடியை காப்பாற்றிய காக்கா செல்லம் :)  ஸ்வெட்டர் போட்ட பென்குயின் குட்டீஸ் ..தொட்டியில் வெங்காய செடி வளர்த்தல் ...

தேவர் , இராமநாராயணன் அவர்களின் படங்களில நாய் ,ஆடு யானை பாம்பு போன்றவை சாக போறவங்கள காப்பாற்றும் காட்சியை நாம் நிறைய பார்த்திருப்போம்! 

அதுபோல இது சீக்கியர் வார இதழில் படித்த செய்தி ..கடந்த வாரம் ஒரு காதல் ஜோடி அகமதாபாத் சபர்மதி ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்து கொள்ள சென்றார்களாம் .அங்கு பாலம் அருகில் இருக்கும் போது இந்த விஷயத்தை கண்டவுடன்  ..அங்கு ரெகுலரா சுற்றும் .ஹீரோ காக்கா அங்குள்ள ரெஸ்க்யூ தீயணைப்பு நிலையம் அருகில் சென்று சத்தமிட்டிருக்கு அவர்கள் விரைந்து ஆற்றுக்கு கிட்ட வரும்போது அவசரகுடுக்கைகள் நீருக்குள் குதித்திருக்காங்க ..ஆனால் காக்கா உபயத்தால் தீயணைப்பு படையினர் உடனே அவர்களை காப்பாற்றி விட்டனர் .....பொது மக்கள் செய்தி தெரிவிக்குமுன் காக்கா   ரெஸ்க்யூ டீமை அலெர்ட் செய்கிறதாம் ..!
ரெஸ்க்யூ குழுவை சார்ந்த பாரத் மங்கலா சொல்கின்றார் இதுபோன்று பல நேரங்களில் காக்கா தீயணைப்பு படை ஆபீஸ் வாசல் வந்து கத்தி இருக்கு .அப்போதெல்லாம் இவர்கள் விரைந்து ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றியுள்ளார்கள் ..சிலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம் ஆனால் இந்த ஐந்தறிவுகளுக்கு அத்தகைய QUICK ACTION எடுக்கும் உள்ளுணர்வு உண்டு ..


காக்கா பற்றிய சில தகவல் (thanks கூகிள் )  
காக்கையை பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புகளை பார்ப்போம்
 “Teamwork” என்று சொல்லப்படும் குழுவாக சேர்ந்து பணியாற்றுவதை திறமையுடன் வெளிப்படுத்தும் கூட்டம் காக்கை தான். ஒரு காக்கை காயப்பட்டிருந்தால், மற்ற காக்கைகள் ஒன்று சேர்ந்து இருப்பிடம் வரை வந்து சேர உதவுமாம்.
ஒரு செயலை திறம்பட, எளிதாக செய்ய மனிதர்கள் கருவிகள் பயன்படுத்துவர். காகையினமும் அப்படிதான். தனக்கு கிடைக்கும் கம்பிகளை வளைத்து தானே கருவிகளை செய்து கொள்ளுமாம். இவற்றை பயன்படுத்தி எட்டா இடத்தில் இருக்கும் உணவை எடுக்குமாம்.
இனச்சேர்க்கையில் ஈடுபடும் காகங்களில் பல, வாழ்நாள் முழுவதையும்  ஒன்றாக கழிக்குமாம்.
மனிதர்களின் முகங்களை ஞாபகம் வைத்துகொள்ளும் அளவிற்கு புத்திசாலிகள். சிம்பான்சி குரங்கு அளவிற்கு காக்கைகளுக்கு மூளையின் செயற்பாடு இருக்கிறதாம்.
சில பழகிய காகங்கள் மனிதர்களின் உரையாடல்களைக் கூட புரிந்து கொள்ளுமாம்.
கடினமான கொட்டைகளை நசுக்க போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அவற்றை போட்டுவிட்டு, வாகனங்கள் நசுக்கிய பின் அவைகளை எடுத்து உண்ணுமாம்.

மனிதன் தான் வாழும் பகுதிக்கேற்ப மொழியை பேசுவது போல , ஒவ்வொரு பகுதியை சேர்ந்த காக்கைகள் ஒவ்வொரு பேச்சு வழக்கத்தை கொண்டுள்ளதாம்.


sally எனும் பூனை அதன் உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது    காணொளி பாருங்கள் ..இது ஒன்றில்லை நிறைய  சம்பவங்கள் இருக்கு ..

இதுவும் ஒரு பூனை gas leak  ஆவதை தனது உரிமையாளருக்கு உணர்த்திய சம்பவம் 

ஸ்வெட்டர் போட்ட பென்குயின் குட்டீஸ் ..

Knitted penguin jumpers பற்றி மகள் cbbc செய்தியில் பார்த்து எனக்கு சொன்னதை பகிர்கிறேன் ..ஆஸ்திரேலியாவில் உள்ள phillip island இல் ஏற்பட்ட எண்ணெய்  கசிவினால் பல பறவையினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன ..2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் கடற்கரையெல்லாம் எண்ணெய் கொட்டி பறவையினங்களை சாகடித்துள்ளது ..எண்ணையை நீக்க அலகால் பறவை முயலும்போது நச்சு உடலில் சேரும் சாப்பிட முடியாது ..அப்படியே மடியும் .இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பென்குயின் வகையில் அருகிய இனம் அதிலும் குட்டி பாப்பாஸ் ..இவை அலகால்  சுரண்டாதிருக்க்க வாலண்டியர்ஸ் இவற்றை பார்த்தவுடன் பிடித்து குட்டி ஸ்வெட்டர் மாட்டி விடுவார்களாம் ..பிறகு உடலில் உள்ள எண்ணையை நீக்குவார்கள் ..அதற்கென penguin-foundation  2013 இல்  சுற்று சூழல் ஆர்வலர்களிடம் சிறிய ஜம்பர்ஸ் தைத்து தர கேட்டுள்ளார்கள் ..நிறைய ஸ்வட்டர்ஸ் குவிந்தது ..

அதிலும் இவர் சேவை அளப்பரியது 109 வயது தாத்தா 109-year-old Australian Alfred Date has been knitting since the 1930s and his latest/most famous endeavor was making mini sweaters… for endangered penguins!

.............................................................................................................................................................

வீட்டுத்தோட்டம்

தொட்டியில் வெங்காயம் வளர்த்தல் ..

தொட்டியில் வெங்காய செடி வளர்த்தல் ...
தோட்டத்தில் பெரிய அளவு நிலப்பரப்பு இல்லாவிடினும் மண் ,பிளாஸ்டிக் தொட்டிகளில் மற்றும் உறை ,சாக்கு பைகளிலும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ,பூண்டு வளர்க்கலாம் .
1,வெங்காய விதைகள் தோட்ட மையத்தில் கிடைக்கும் அவற்றை வாங்கி seed starters என கடைகளில் விற்கும் சிறு சதுர வடிவ பெட்டிகள் அல்லது கம்போஸ்ட் தம்ளர்களில் விதை நட்டு வளர்க்கலாம் .நாற்று 5 இன்ச் உயரம் வளர்ந்ததும் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும் .

2, onion sets ...இது அனைத்து தோட்ட மையங்களிலும் கிடைக்கும் ..விதைகளை நட்டு அவை முதிர்ச்சி அடையுமுன் சிறு பல்ப் அளவு இருக்கும்போதே எடுத்து பதப்படுத்துவார்கள் ..இவை பின்பு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் .இதை நட வெங்காய செடி வளரும் .

3,வீட்டில் சில நேரம் சமையலுக்கு வாங்கிய வெங்காயம் முளைத்து துளிர் இலைகள் வளர ஆரம்பிக்கும் ..இதனை படத்தில் காட்டியுள்ளபடி கவனமுடன் வெட்டி பிரித்தெடுத்து தொட்டியில் நடலாம் .

தொட்டியில் நான் அவ்வாறு நட்ட வெங்காயம் நன்கு பிடித்து வளர்கிறது .

4,சிறிய வெங்காயமென்றால் (சாம்பார் ) ஒன்றினை தொட்டியில் நட்டால் போதுமானது அதிலிருந்து குறைந்தது 20 வெங்காயம் அறுவடை செய்யலாம் .

..ஒருவர் என்னிடம் துளிர் விட்ட முழு வெங்காயத்தை நிலத்திலோ தொட்டியிலோ நட்டால் செடி வளருமா என கேட்டிருந்தார் ..

ஆம் இலைகள் நன்கு செழித்து வளரும் .அந்த இலைகள் சூப் ,fried ரைஸ் மற்றும் பிற சமையலிலும் சேர்க்கலாம் .இம்முறையில் வெங்காயம் கிடைக்காது ஏனெனில் ஏற்கனவே முற்றிய வளர்ந்த வெங்காயத்தில் மீண்டும் வெங்காயம் உருவாகாது ..ஆனால் கொலாஜ் படத்தில் உள்ளவாறு வெட்டி நட்டால் வளரும் .

5,சிலர் வேர் தோன்றும் வெங்காய தலை பகுதியை மட்டும் வெட்டியும் வெங்காய அறுவடை செய்து வெற்றி கண்டுள்ளனர் (grow from scraps )..

தொட்டியில் வளர்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை .

தொட்டியின் /கன்டேய்னரின் ஆழம் 10-15 இன்ச் அளவு இருக்க வேண்டும் .
அகலம் எவ்வளவு இருந்தாலும் நல்லது ..ஆனால் வளரும் வெங்காயங்களுக்கு இடையில் குறைந்தது 4 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் .

பிளாஸ்டிக் கண்டெய்னர் ,உறை ,சாக்கு பைகள் என்றால் கண்டிப்பாக அடிப்புறத்தில் துளைகள் நீர் வெளியேற வகை செய்ய வேண்டும் ..தொட்டி பைகளின் கீழ் நான்கு செங்கல் வைத்தால் நீர் வடிந்தோட வசதியாக இருக்கும் .
..
தொட்டிகளில் கம்போஸ்ட் தொழு உர மண் இட்டு நிரப்பி முற்றா வெங்காய பல்புகளை மேலாக நட்டு விட வேண்டும் குறைந்தது 7-8 மணிநேரம் சூரிய வெளிச்சம் தேவை .
தேங்காய் .கோகோ பீட் அதிக நீர் சேமிக்கும் குணமுள்ளது .

சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் மட்டுமின்றி ..முளைத்த பூண்டு பற்களையும் தொட்டியில் நடலாம் ..பூண்டு இலைகளும் வெங்காய தாள்களை போல சமையலில் பயன்படுத்துகிறார்கள் .


அறுவடை ..வெங்காயம் நிலத்தில் இருந்து வெளியே தெரியுமாறு வளர்ந்து பெரிதாக இருக்கும் இலைகளும் காய துவங்கும் நேரம் அறுவடை செய்யலாம் .நல்ல தட்பவெப்பம் இருக்கும்போது 45 முதல் 60 நாளில் முற்றிய வெங்காயம் தயாராக இருக்கும் .

...................................................................................................................................................................


அன்புடன் ஏஞ்சலின் 


.

19 comments:

 1. //ரெஸ்க்யூ குழுவை சார்ந்த பாரத் மங்கலா சொல்கின்றார் இதுபோன்று பல நேரங்களில் காக்கா தீயணைப்பு படை ஆபீஸ் வாசல் வந்து கத்தி இருக்கு .அப்போதெல்லாம் இவர்கள் விரைந்து ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றியுள்ளார்கள் ..சிலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம் ஆனால் இந்த ஐந்தறிவுகளுக்கு அத்தகைய QUICK ACTION எடுக்கும் உள்ளுணர்வு உண்டு ..//

  மிகவும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அளிக்கும் நல்ல செய்தி.

  ஐந்தறிவு உள்ள ஒரு காகம் [6+6=12 அறிவுள்ள] ஒரு ஜோடியைக் காப்பாற்றியுள்ளதே !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோபு அண்ணா ..மெயின் லின்க்கில் (fb )பலரும் இந்திய கல்ச்சரை கேலி கிண்டல் செய்திருந்தாங்க ...காக்காவை சாமியாக்குறாங்க என்றெல்லாம் அந்த சுட்டியை இணைக்கவில்லை ..காக்கும் உணர்விருக்கும் ,எந்த உயிரும் கடவுள்தான் .என்னைபொறுத்தவரை !.

   Delete
 2. //109-year-old Australian Alfred Date has been knitting since the 1930s and his latest/most famous endeavor was making mini sweaters… for endangered penguins!//

  ஆஹா, இதுவும் மிக அருமையான செய்தியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள். பென்குயின்கள் சார்பில் அவருக்கு நம் நன்றிகள்.

  ReplyDelete
 3. வணக்கம்
  அசத்தலான தகவலுடன் வெங்காயம் பயிரிடும் முறை பற்றி மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் நிச்சயம் இந்த முறைப்படி செய்து பார்க்கிறோம்.. பகிர்வுக்கு நன்றி.

  விசேடமாக பென்குயின் சட்டை போட்டிருப்பது ஓரு அழகுதான்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ..வெங்காயம் எங்க வீட்டிலும் வளர துவங்கியாச்சு ..

   Delete
 4. வெங்காய அறுவடை பற்றிய பல பயனுள்ள தகவல்களும் கொடுத்து அசத்திவிட்டீர்கள். உடனே அங்கு வந்து தங்கள் அறுவடையில் கிடைத்த வெங்காய சாம்பார் சாப்பிட வேண்டும் போல ஆசையாக உள்ளது. :)

  பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 5. அதுங்களுக்கும் இருக்கும் அறிவு உண்மையில் மனிதனுக்கு இல்லை. (எனக்கு இப்ப நடந்த விமான விபத்தை யோசிக்கிறேன்).
  அவைகளுக்கு அறிவு அதிகம்தான்.
  அழகாக இருக்கு சட்டை போட்ட பென்குயின்.
  வெங்காய செய்முறை மிகவும் பயனுள்ள தகவல்.நானும் வெயிடிங். வெயிலும்,குளிரும் மாறி மாறி வருது.நல்ல காலநிலை இன்னும் வரலை.வர ஆரம்பிக்கவேணும்.
  நல்ல தகவல்கள் இன்றைய ஸ்பீக்கரில்..

  ReplyDelete
  Replies
  1. //இப்ப நடந்த விமான விபத்தை யோசிக்கிறேன்)./////

   ப்ரியா அந்த சம்பவம் முழுதும் எழதினேன் ..காக்கா பூனை செல்லங்களுடன் அந்த ஈனபிறவி பற்றி எழுத மனம் வரல்ல

   தனி பதிவா போடுவேன் அதை நெக்ஸ்ட் வீக்

   Delete
 6. வெங்காய செடி வளர்ப்பு முறைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

  வைகோ ஐயாவின் கருத்துரை அருமை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி டி .டி :) நீங்களும் தொட்டியில் முயற்சி செய்து பாருங்கள்

   Delete
 7. சுவாரஸ்யமான, நம்ப முடியாத, ஆச்சர்யமான, பயனுள்ள செயதிகள்!!

  ReplyDelete
  Replies
  1. http://dailysikhupdates.com/crow-saves-many-lives-after-foiling-suicide-attempts/

   Delete
  2. http://www.mirror.co.uk/news/uk-news/she-deserves-medal-hero-cat-5184515

   Delete
  3. அதற்க்கு ஏதேனும் உள்ளுணர்வு தோணியிருக்கலாம்:) நானும் யோசித்தேன் போடலாமா செய்தியை என்று
   magpie எனும் காகம் வெரைட்டி இங்கிருக்கு ஜெஸி ஒரு பறவைய பிடிக்க போனப்ப எங்கிருந்தோ வந்து அட்டாக் செய்தது !

   ஜெஸி வெளில தோட்டம் போனா இதுக்கு (மூக்கு)அலகில் வேர்தார்போல ஓடி வரும்:) to save its friends from jessie :)

   Delete
 8. அறிவாளி காக்கா .....
  இப்பொழுது தான் வெங்காயம் நட்டு வைத்து இருக்கிறேன் ....பயனுள்ள தகவல் ......
  சிறப்பான தொகுப்பு ...

  ReplyDelete
 9. காக்கா செல்லம்....செல்லமே செல்லம்தான்....நிச்சய்மாக செல்லங்கள் எல்லாவற்றிற்கும் உள்ளுணர்வு உண்டு. சுனாமி வந்த போது பாயின் கால்மெர் சாங்க்ட்சுரியில் உள்ள செல்லங்கள் எல்லாம் தங்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றிக் கொண்டன, உள்ளேயே. அங்கு மாங்க்ரூவ் காடுகள் உண்டு என்பதால் சுனாமியின் பாதிப்பு குறைவு என்றாலும், தண்ணீர் தேங்கியதுதான். அது போன்று ஒரு ஏரியாவில் வாழும் செல்லங்களுக்கு அங்கு நடக்கும் நிகழ்வுகளைக் குறித்த உள்ளுணர்வு உண்டுதான். அவை அதை வெளிப்படுத்தும். ஆனால் மனிதர்கள் நாம் இயற்கையிலிருந்து விலகி வாழ்வதால் நம்மால் அதைப்புரிந்து கொள்ள முடிவதில்லை. இன் ட்யூன் வித் நேச்சர் நாம் வாழ்ந்தால் கண்டிப்பாக இயற்கையையும், செல்லங்களின் மொழிகளையும் புரிந்து கொள்ள முடியும். விவசாயிகள், அந்தக் காலத்து மனிதர்கள் ஒரு சில அறிகுறிகளை வைத்தே வெதரைக் கணக்கிடுவது போலத்தான். நாம் இயற்கையிலிருந்து மிகவும் விலகிச்செல்கின்றோம் என்பதுதான் உண்மை. காட்டில் வாழும் பழங்குடி மக்கள் காட்டைப் பற்றி, அங்கு வாழும் செல்லங்களின் மொழிகள், அவைகளின் மனனிலை, போக்குக்வரத்து எல்லாமே தெள்ளத் தெளிவாக அறிந்திருப்பர். அவர்களால் ஒவ்வொரு மரத்தின் இலையின் அசைவையும் வைத்தும் கணிக்க முடியும். ஜப்பானியர்கள் கூட வீட்டில் மீன் தொட்டிவைத்திருப்பார்களாம். நிலநடுக்கம் வருகிறது என்றால் மீன் கள் கண்ணாடிச் சுவற்றில் முட்டிக் கொள்ளுமாம். அதிலிருந்து அறிந்துகொள்வார்களாம்.... செய்தி அருமை அருமை!

  (கீதா: நாங்கல் சின்னார் சரணாலயத்தில் மரத்தின் மேலிருக்கும் வீடு, பழங்குடியினர் வீட்டில் தங்கிய போது அவர்களிடம் பேசி நிறைய தெரிந்து கொண்டோம். அவர்கள் ஒவ்வொரு செடியின் மருத்துவ குணங்களையும் சொன்னார்கள் பாருங்கள்....அப்படி என்றால் ஏன் இது மருத்துவத்தில் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்விகளும் எழுந்தன....நானும் மகனும்...நிறைய நடப்போம்...காடு, மலை, ஆறு என்றால் கேட்கவே வேண்டாம்....)

  அந்தத்தாத்தாவுக்கு வாழ்த்துக்கள்! பெங்குவின் செல்லம் பாவம்...இதுதான் நாம் இயற்கையிலிருந்து விலகித்தான் வாழ்கின்றோம் என்பதற்கான அடையாளங்கள்.. ஆனாலும் பரவாயில்லை மக்கள் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனரே அவற்றைக் காப்பாற்ற பாராட்டத்தான் வேண்டும்....பெங்குவின் அழகு!!

  வெங்காயத் தோட்டம் சூப்பர். நிறைய நல்ல விஷய்ங்கள் தெரிந்து கொண்டோம்.

  ReplyDelete
 10. காக்கைக்கு என்ன அறிவு இருக்கிறது...? வியப்பான நல்ல விஷயங்கள்...
  ஸ்வெட்டர் பென்குயின் அழகு
  வெங்காயம் சூப்பர்

  ReplyDelete
 11. ஏஞ்சலின்,

  எங்க வீட்டு ஏஞ்சல் கல்லூரி விடுமுறைக்கு வீட்டுக்கு வந்திருந்ததால் பின்னூட்டமிட முடியவில்லை. ஆனால் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டேன்.

  ஐந்தறிவு விலங்குகள் தக்க சமயத்தில் ஆறாவது அறிவுடன் செயல்படுவது வியப்பாகத்தான் உள்ளது. நானும் தூக்கிப் போடலாம்னு நினைத்த, முளைவிட்ட இரண்டு சின்ன வெங்காயங்களை நட்டு சூப்பரா தாள்கள் வந்து பறித்தும் சமைச்சாச்சு அஞ்சு.

  ReplyDelete