அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/2/15

Loud speaker ...17

வணக்கம் நட்புக்களே 
இன்றைய ஒலிபெருக்கியில் ,மருத்துவமனைக்கு விஜயம் புரிந்த 
சூப்பர் ஹீரோஸ் :) மற்றும் சர்வீஸ் dog ஜார்ஜ் ,ஓநாயும் கழுதையும் ,
bubby everson ,மற்றும் க்வில்லிங் ...


சூப்பர் ஹீரோஸ் !!


இவர்கள் சினிமா நடிகர்களில்லை ..ஆனால் ஒருநாள் ஹீரோக்களாக இருந்தாலும் இவர்களது மனசுக்கு கையெடுத்து கும்பிடனும் .
அமெரிக்காவில் mayo மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல்களை அன்றாடம் துடைத்து துப்புரவு செய்யும் பணியாளர்கள் மூவர் மருத்துவமனையின் சிறுவர் பகுதி நோயாளிகள் பிரிவிற்கு ஒரு நாள் batman ,சூப்பர்மேன் மற்றும் ஸ்பைடர் மேன்களாக தங்களை மாற்றி அங்குள்ள குழந்தைகளை சந்தோஷப்படுத்தி உள்ளார்கள் .பத்து வயதுக்கு கீழுள்ள பிள்ளைகளுக்கு இந்த கார்ட்டூன் காரக்டர்ஸ் ஆஸ்தான ஹீரோஸ் :) 
அன்றைய நாளில் மிகவும் சுகவீனமாக இருந்த சிறு பிள்ளை கூட மிகவும் சந்தோஷமாக இருந்ததாம் .

பின்னே நிஜ ஸ்பைடர்மேன் போல கயிறு கட்டி தொங்கி சுவறேரும்சாகசத்தை நேரில் காண்பது இச்சிருவர் சிறுமியருக்கு ஆனந்தம்தானே :)
அன்று நிஜ ஸ்பைடர் மேன் என்று நினைத்து தங்கள் நோய் விவரமெல்லாம் சொல்லி ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார்கள் குழந்தைகள்.!


http://www.myfoxboston.com/clip/11179838/dog-helps-child-with-rare-disease-walkஅடுத்த செய்தி இதுவும் அமெரிக்க செய்தி 
அபூர்வ நோய்கள் !!எனப்படும் rare disease நாளன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பினார்கள் Morquio Type A எனும் ஒரு வகை நோயினால் 
பாதிக்கப்பட்டுள்ள பெல்லா என்ற பத்து வயது சிறுமிக்கு உதவும் ஜார்ஜ் என்ற கிரேட்டேன் வகை செர்வீஸ் செல்லம் :)
கிரேட் டேன் வகை நாலுகாலார்கள்  மிக உயரமானவை கன்றுகுட்டி அளவுக்கு உயரம் அதேபோன்ற பாசமான குணமுடையவை ..
சாரு கூட கூட்டிக்கிட்டு வாக் போவாரே அந்த வகை தான் கிரேட் டேன் .
..


Morquio Type A வகை நோய் ஒரு அபூர்வமான நோய் உலகம் முழுதும் சுமார் 3000
பேர்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் .இன்னும் முறையான சிகிச்சை இதற்க்கு கண்டுபிடிக்கவில்லை ஆனால் ஒரு மருந்து நோயின் தீவிரத்தை குறைக்க மட்டும் இப்போ பயன்பாட்டில் உள்ளதாம் .
உடலில் ஒரு குறிப்பிட்டவகை என்சைம் குறைபாட்டினால் இநோய் ஏற்படுகிறதாம் ..பிறக்கும்போது பிற குழந்தைகளைப்போல இருக்கும் பிள்ளைகள் நாளாக இரண்டு வயது அடையும்போது நோய் தீவிரமடையும் 
எலும்பு வளர்ச்சியின்மை ,உடலில் வலிகள் பார்வை குறைவு ,நடக்க முடியாத தன்மை .இவர்கள் பெரும்பாலும் சக்கர நாற்காலியில் இருப்பார்கள் .
பெல்லாவுக்கு பிற பிள்ளைகளைப்போல  நடக்க ஆசை .அவளுக்கு இந்த சர்வீஸ் செல்லம் சில வாரங்கள் முன்பு அளிக்கப்பட்டதாம் ,இச்சிறுமி விழுந்தாலும் உடனே தாங்க துணை புரிகிறதாம் ஜார்ஜ் .

நான் சமீபத்தில் செய்த இரண்டு quilled வாழ்த்து அட்டைகள் முகபுத்தகத்தில் மருத்துவமனையில் உள்ள பிள்ளைகளுக்கு அனுப்ப சொல்லி நட்பு ஒருவர் கேட்டிருந்தார் இருவரும் இரண்டு வயது பிள்ளைகள் 
வாழ்க்கை முழுதும் மருத்துவமனை ..அவர்கள் பிரியமான கார்ட்டூன் காரக்டர் இந்த dave எனும் கார்ட்டூன் மற்றும் பச்சை கார் .செய்து அனுப்பி விட்டேன் .
one of the most funny characters of Despicable Me 

Dave the Minion :)
மனிதன் குணம் மட்டும் (சில மனிதரின் )மாறவே மாறாதோ !
சந்தர்ப்பம் எதிர்பார்த்து காலை வாரும் சுயநலமனிதர் மத்தியில் இந்த இரண்டு ஐந்தறிவு ஜீவன்களை பாருங்கள் ..இது அல்பானியா நாட்டில் .
பெட்டிஷன்கள் எழுதுவதால் அரசுக்கு கடிதம் எழுதுவதால் பயனில்லை என்று முடங்க வேண்டாம் சிலரின் பெட்டிஷனால் விளைந்த நன்மை பற்றிய சம்பவம் இது .//autism, cerebral palsy, epilepsy, deafness, vision impairment and has the mental ability of a child half his age//இந்த சிறுவனது பிறந்தநாள் ஆசை .தனது பிறந்தநாளுக்கு அனைவரும் தனக்கு லெட்டர்ஸ் கார்ட்ஸ் அனுப்பனும்னு கேட்டிருக்கான் .
யாஹூ வில் பார்த்ததும் இருந்த ஒரு கார்ட் மற்றும் சில ஸ்டிக்கர்களை போட்டு அனுப்பி விட்டேன் ..சிறு சந்தோசம் கிட்டட்டும் அக்குழந்தைக்கு .
உலகெங்குமிருந்து இவன் ஆசைபட்டமாதிரி கணக்கிலடங்கா வாழ்த்து அட்டைகள் குவிந்ததாம் பப்பிக்கு ..
இன்னும் மனிதம் வாழ்கிறது ..
மீண்டும் சந்திப்போம் ..
அன்புடன் ஏஞ்சல் ..
24 comments:

 1. மனித நேயம் மறைவதேயில்லை..

  அது அவ்வப்போது ஒளிந்து கொள்கின்றது.
  அல்லது ஒளித்து வைக்கப்படுகின்றது.

  மலரட்டும் .. மண்ணில் மகிழ்ச்சி பெருகட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா

   Delete
 2. மிகவும் பயனுள்ள ஆச்சர்யமான செய்திகள். படங்களும் குறிப்பாக க்வில்லிங் படங்களும் அருமை. அவை செய்து அனுப்பப்பட்டுள்ள நோக்கமும் மிகவும் பாராட்டுக்குரியவை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

   Delete
 3. மிகவும் பயனுள்ள ஆச்சர்யமான செய்திகள். படங்களும் குறிப்பாக க்வில்லிங் படங்களும் அருமை. அவை செய்து அனுப்பப்பட்டுள்ள நோக்கமும் மிகவும் பாராட்டுக்குரியவை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

   Delete
 4. வாழ்த்து அட்டைகள் இரண்டும் அருமை...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 5. அந்த சூப்பர் ஹீரோஸ் நிஜமாலுமே சூப்பர் தான்.
  மனித நேயம் இன்னும் இருந்துகொண்டே தான் இருக்கிறது. சில இடங்களில் வேண்டுமானால் அது குறைந்திருக்கலாம். ஆனால் பல இடங்களில் அது வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ,அவர்கள் கிரேட் !நல்ல இருக்கணும் இப்படிபட்டோர்கள்

   Delete
 6. அருமையான செய்திகள். அனைத்தையும் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 7. ஏஞ்ச்லின்,

  கொள்ளை அழகா இருக்கே மீனியன்ஸ் க்வில்லிங். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது அவர்களின் யூ டியூப் வீடியோக்களை. காரும் அழகு.

  உதவி செய்யும் உள்ளங்கள் வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சித்ராஅந்த minion இரண்டு வயது சிறுவன் ஒருவனுக்கு மிக விருப்பமான கார்ட்டூன் நானே அடிக்கடி இம்மாதிரி கார்ட்டூன்ஸ் பார்ப்பேன்

   Delete
 8. அனைத்துமே அருமை.
  //இன்னும் மனிதம் வாழ்கிறது ..//

  உண்மைதான்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரமா .அக்குழந்தைகளை பார்த்தீங்களா .எத்தனை மகிழ்ச்சி பிஞ்சு முகங்களில்

   Delete
 9. மனித நேயமுள்ள பணியாளர்கள் ....

  கியில்லிங் CARD ரொம்ப அழகு ...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அனு ..அவர்கள் கிரேட் !
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 10. இந்த பதிவு முழுக்க மனிதநேயம் சொட்டுது!! அதிலும் அந்த ரெண்டு cards சான்சே இல்ல!!! சூப்பர் தோழி!! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மைதிலி :) அந்த minion இரண்டு வயது சிறுவன் ஒருவனுக்கு மிக விருப்பமான கார்ட்டூன் மருந்துகள் மட்டுமே அவனது வாழ்க்கை ..
   அவனுக்காக செஞ்சேன்

   Delete
 11. பயனுள்ள செய்தி...
  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 12. மிக அழகான கார்ட்ஸ் அஞ்சு. சூப்பர் ஹீரோஸ்தான் அவங்க. கார்ட்டூன்ஸ் பிடிக்காத குழந்தைகளே இல்லை எனலாம். மூவருக்கும் இப்படியொரு ஐடியா வந்து பிள்ளைகளை மகிழ்வித்திருக்கிறாங்க .தி கிரேட். ஜார்ஜ் உண்மையில் ஆச்சரியமான செல்லம். நல்லதொரு பகிர்வு.

  ReplyDelete
 13. அருமையான வாழ்த்து அட்டை . குழந்தைகளை மகிழ்ச்சிபடுத்திய சூப்பர் ஹீரோஸ் .மனிதர்களை நேசிக்கும் மனிதர்கள் உன்னதமானவர்கள். உங்கள் வாழ்த்து அட்டை குழந்தையை மகிழ்ச்சியடைய செய்து இருக்கும். உங்களுக்கும் வாழ்த்துக்கள் ஏஞ்சல்.

  ReplyDelete
 14. க்வில்லிங்க் கார்ட் அட்டகாசம் சகோதரி! அதுவும் அது மனிதம் தாங்கி நிற்பதால் இன்னும் அருமை! முதலிலிருந்து இறுதி வரை மிக மிக நல்ல விஷயங்கள்! அதுவும் இறுதிச் செய்தி அந்தக் காணொளி! ஆஹா! அட்டகாசம்! மனிதர்களும் இருக்கின்றார்களே! வாய்ஸ் இல்லாத அவற்றிற்கு வாய்ஸ் கொடுப்போம்...

  நல்ல பதிவு!

  ReplyDelete