அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/22/15

காதல் .....பதின்ம வயதில் தேவையா ?



காதல் .....பதின்ம வயதில் தேவையா  ?






சகோதரர் துளசி ,மற்றும் கீதா அவர்களின் சமீபத்து பதிவில் படித்திருப்பீங்க ..
பரீட்சை கூட முடிவடையா நிலையில் அச்சிறுபெண்ணை காதலித்தவனுடன் ஓடவைத்தது எது ?
இயல்பாகவே 12 முதல் 20 வரை வாலிப வாசல் நுனியில்  நிற்கிற அவர்களுக்கு துணை என்கிற பெயரில் ஒருவர் அவசியம் என நினைக்கிறார்கள். அவர்கள் பார்க்கிற திரைப்படங்களும், அவர்களதுபிரிய சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை முறையும் அதையே மேடை போட்டு காண்பிக்கின்றன..
இந்த இள  வயதில் வருவதுஜஸ்ட்infatuation ,இதெல்லாம் ஹார்மோன்களின் 
தூண்டலின் விளைவே தவிர வேறில்லை. இந்த உணர்வுகள் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது  .ஆண்களுக்கு இந்தத் தூண்டுதல், எந்தவிதமான உணர்வுப் பிணைப்பும் இல்லாமல் செயல்படும்.ஆனால் வாலிப வயது பெண்களிடம் கொஞ்சம் இதன் சீற்றம் அதிகமாகவே இருக்கும் .....வயதுக்கு வந்ததும் தான் தனிமைபடுதத்தபட்டு விட்டதாகவும் ஒரு துணை! இன்றியமையாதது எனவும் சில பெண்குழந்தைகள் நினைக்கிறார்கள் ..



பெற்றோர் அதிக நேரம் பதின்ம வயது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் ..இப்பெல்லாம் நம் நாட்டிலும் ,ஸ்மார்ட் போன் ,தனி ரூம் அதில் டிவி ,மினி FRIDGE என்ற  வாழ்க்கை முறை வந்தாச்சு ..உங்கள் மகனோ மகளோ யாருடன் நித்தம் உரையாடுகிறார்கள் என்பதை ..தாய்மாரே ..தொல்லைகாட்சி பெட்டியில் இருந்து வெளியே வந்து கவனியுங்கள் ..
அப்பாக்களே உங்கள் பிள்ளைகளுடன் குறைந்தது சிறிது தொலைவேனும் 
தினமும் வாக்கிங் செல்லுங்கள் ..உங்களுக்கு நிறைய புதிய விஷயங்களை பிள்ளைகள் அறியத்தருவார்கள் ..வெளிநாட்டில் வாழும் தகப்பனாக இருப்பின் ஸ்கைப்பில் தினமும் பிள்ளைகளுடன் உரையாடுங்கள் ..நாம் செய்ய வேண்டியவற்றை செய்வோம் அதையும் தாண்டி இனக்கவர்ச்சியால் தடம் மாறினால் /..........அன்புடன் பொறுமையாக எடுத்து கூறுங்கள் ,கல்வி வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை .காதல் எப்பவும் வரும் கல்வி முடித்து மன முதிர்ச்சிக்குபின் வருவதே நிலையான காதல் என்று விளக்குங்கள் .




மேலும் எல்லா சந்தேகமும் வரும் வயது டீனேஜ் ..அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தயங்காமல் பதில் கூறுங்கள் .including sex .
பிள்ளைகள் முன்பு கவனமுடன் இருங்கள் ..பெண் பிள்ளைகள் தாயுடன் உறங்க விரும்பினால் அவர்களுடன் உறங்குங்கள் ..பல வித உணர்சிகளின் குவியல் .அவர்கள் பயம் நீக்கி .பக்குவப்படுத்துங்கள் தன்னம்பிக்கையூட்டுங்கள் ..கலைகள் ,பொழுதுபோக்கு என பயனுள்ள விஷயங்களில் ஈடுபட வையுங்கள் ...தோட்டமிடல் ,மீன்வளர்த்தல் என சொல்லிகொடுங்கள் ..உங்க பிள்ளைகளின் நட்புக்களை மாதம் ஒரு முறை வீட்டிற்கு அழைத்து வர சொல்லுங்கள் ..நட்புக்களை அப்படியே மறைமுகமாக கண்காணிக்கவும் வசதியா இருக்கும் ..

இது போல வீட்டை விட்டு ஓடுவதெல்லாம் ஆங்காங்கு தினம் நடக்கும் நிகழ்வுதான் ..ஆனாலும் பெற்றோர் ஆகிய நாம் கொஞ்சம் கவனம் செலுத்தினா இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுக்கலாம் .......

நான் பத்தாம் வகுப்பு படித்தபோது ரம்யா  என்றொரு பெண் எங்க வகுப்பில் இருந்தாள் 6 முதல் 9 வகுப்பு வரை டாப் ரான்க் .10 ஆம் வகுப்பில் ஆரம்பித்தது இந்த காதல் ..பக்கத்து பள்ளி மாணவனுடன் ..படிப்பு அறிவு எல்லாம் இழந்தாள் .பணக்கார பெற்றோர் ..நகை கடை ஓனர் அவள் அப்பா ..இவள் விஷயம் அறிந்ததும் தினமும் அம்மா காலையும் மாலையும் பள்ளிக்கு உடன் எஸ்கார்ட் போல வருவார் ..அப்படியும் கண்ணில் மண் தூவி சந்தித்தார்கள் ..
உதவி அம்மாணவனின் தங்கை எங்கள் பள்ளியில் படிச்சா ..எதோ வேலையா வெளியே சென்ற ஒரு ஆசிரியை இக்காதலர்களை பார்க் ஒன்றில் பார்த்து தலைமை ஆசிரியை கிட்ட சொன்னதால் டிசி கொடுத்து அனுப்பிட்டாங்க .
அப்பெண்ணால் 12 ஆம் வகுப்பு பரீட்சை எழுத முடியல :( ...


பிறகு ஒரு நாள் எங்க ஏரியா கோவில் ஒன்றில் பார்த்தேன் அப்பையனுடன் நிறை மாத கர்ப்பிணியாய் ...ரம்யாவை ...நான் 12 வகுப்பு தேர்வு முடித்து ரிசல்டுக்கு காத்திருந்த நாட்கள் அது !   



இன்னும் தொடரும் ..............




30 comments:

  1. மிகவும் பயனுள்ள மென்மையான மேன்மையான பகிர்வு.

    தொடரட்டும்.......

    பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் ஊக்குவிக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி அண்ணா

      Delete
  2. உண்மைதான்ன்ன்... பெெ்்ற்்றோர் தாாாான்் நண்பர்களாா இருுுுு்்ு கவனிக்கோணும்....

    ReplyDelete
  3. உண்மைதான்ன்ன்... பெெ்்ற்்றோர் தாாாான்் நண்பர்களாா இருுுுு்்ு கவனிக்கோணும்....

    ReplyDelete
    Replies
    1. உடனடி வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி அதிராவ்வ்வ்வ்வ் :)

      Delete
    2. அதிரா முறுக்கு சாப்பிட்டுக்கிட்டே டைப்பரீங்கலா :) எழுத்துக்கள் பீஸ் பீசா இருக்கு :)

      Delete
  4. மிகவும் தேவையான, அவசியமான பகிர்வு. பதின்ம வயது மயக்கங்களைத் தாண்டி வருவதே பெரிய கொடை. என் நட்பு வட்டத்த்திலும் சில உதாரணங்கள் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்..நான் நிறைய இன்னும் பார்க்கிறேன் சுற்றுவட்டாரத்தில் இடம் பெயர் எல்லாம் மாற்றி இதை தொடராக எழுதுகிறேன் ..13-20 கம்பி மீது நடக்கும் பருவம் ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  5. இவைகளை விட பெற்றோர்களுக்கு வேறென்ன பெரிய வேலை...

    ReplyDelete
    Replies
    1. அதை சொல்லுங்க சகோ ..பிள்ளைகள் தான் நமக்கு முக்கியம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  6. //..பெண் பிள்ளைகள் தாயுடன் உறங்க விரும்பினால் அவர்களுடன் உறங்குங்கள் // ஆம். நான் என் பெண்களுடன்தான் உறங்குவேன்.12/13 வயதிலிருந்து bedtime storiesசொல்லுவது மாதிரி மெதுவாக நல்லது கெட்டது அனைத்தையும் விளக்குவேன். அது இப்பொழுது நல்ல பலன் கொடுக்கிறது.

    மிக அருமையான பகிர்வு angelin...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரமா ..மிக சரியான வழிநடத்துதல் ..கண்டிப்பா நீங்களும் எழுதணும் இதைப்பற்றி

      Delete
  7. சரியான பாயின்ட்ஸ் சகோதரி! நாங்களும் ஒரு தனி இடுகை இந்த அறியா வயதில் வரும் காதல் என்று சொல்லப்படும் இனக்கவர்ச்சி பற்றி எழுத வேண்டும் என்று, அதுவும் திரு ஜோதிஜி அவர்கள் பின்னூட்டத்தில் வேறு கேட்டுக் கொண்டிருந்தார்.

    மிகச் சரியான கருத்துக்கள் தங்களது கருத்து! எங்கள் தளத்தில் சொல்லப்பட்டிருக்கும் பெண்ணின் பெற்றோரும் சரிம் தாங்கள் சொல்லி இருக்கும் ரம்யா, மற்றும் அந்தப்பையனின் பெற்றோரும் சரி கலந்து பேசி இதற்கானத் தீர்வை இரு குழந்தைகளையும் கொண்டு ஆராய்ந்திருக்கலாம். பெண்ணின் அம்மா அவளுக்கு எஸ்கார்ட் செல்லுவது ஒரு புறம் இருந்தாலும் பையனையும், பெண்ணையும் வைத்து இருபெற்றோர்கள் பேசி சில தீர்மானங்கள் எடுத்திருக்கலாம்.

    (கீதா: னீங்கள் சொல்லி இருப்பது போல் பெண் பிள்ளைகள் தாயுடன் உறங்க விரும்பினால் அவர்களுடன் உறங்குங்கள் // யெஸ் யெஸ்....நாங்கள் எங்கள் பையன் ஏற்கனவே சிறிய கற்றல் குறைபாடுடன் வளர்ந்ததால், அவனுடன் தான் நான் உறங்குவேன்...அவனுக்கு பல நல்ல நல்ல கதைகள் சொல்லி...ஒரு நல்ல மனப் பக்குவம் உடையவனாக இப்போது இருக்கின்றான். கடவுளுக்கு நான் பல முறை நன்றி சொல்வதுண்டு. அவன் எங்களுக்கு உற்ற நண்பன்..அதுவும் என்னுடன் எல்லா விசயங்களையும் பகிர்ந்து கொள்வான். பருவ வயதில் வரும் ஒரு சில காதல்கள் மட்டுமே மிக மிக மனப்பக்குவத்துடன் பின்னர் தங்கள் வாழ்வை நன்றாக சீரமைத்துக் கொள்ளும் வகையிலும் நடக்கின்றது. மிகச் சில...பொதுவாக பெற்றோர்கள் கவனமாக இருப்பது நல்லது.)

    ஆசிரியர்களும், நன்றாகப் படிக்கும் மாணவ, மாணவிகள் படிப்பில் கவனம் குறையும் போது அதற்கான காரணங்களைக் கண்டறிந்து பெற்றோருடன் கலந்து பேசி தீர்வுகல் காணலாம். அவர்களுக்குப் புரியவைக்கவும் செய்யலாம். ஆசிரியர்களும், பெற்றொர்களும் சற்று முனைந்தால் குழந்தைகள் நல்ல முறையில் வளரும் சூழல்கள் ஏற்படும்..

    மிக மிக நல்ல பதிவு சகோதரி! பாராட்டுக்கள்! தொடருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. அது மிக மோசமானது சகோ அந்த பெண் வீட்டை விட்டூ ஓட அதீத கண்டிப்ப்பும் காரணம்
      ,,,நீங்க சொன்னாற்போல இருவரையும் அழைத்து பேசியிருந்தால் படித்து சொந்த காலில் நின்றபின் சந்தோஷமா திருமணம் செய்திருக்கலாம் :(

      Delete
    2. //நாங்களும் ஒரு தனி இடுகை இந்த அறியா வயதில் வரும் காதல் என்று சொல்லப்படும் இனக்கவர்ச்சி பற்றி எழுத வேண்டும் என்று, அதுவும்//கட்டாயம் நீங்க எழுதணும் ..தொடர்கிறேன்

      Delete
  8. குழந்தைகளுக்கு நமது அரவணைப்போடு அவர்களுக்கு கட்டுபாடு அற்ற சுதந்திரத்தை தரும் போது அவர்கள் அதை அதை கட்டுபாடுகளுடன் நடைமுறைப்படுத்தி கொள்வார்கள். அதே நேரத்தில் கட்டுபாடுகளை நாம் வித்தித்தால் அதை தாண்டி செல்லதான் அவர்கள் மனம் விழையும் என்பது உண்மை

    ReplyDelete
    Replies

    1. சூப்பர்ப் friend நீங்க சரியா சொன்னீங்க ..எங்க மகள் கிட்டட நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆனா அவங்கப்பாகிட்ட ஒளிவு மறைவில்லாம அனைத்தையும் சொல்லுவா ..

      பிள்ளைங்க நம்மிடம் எதிர்ப்பார்ப்பது நம்பிக்கை ..சில பெற்றோர் பேசும் பேச்சுக்கள் அப்பப்பா சொல்லி மாளாது ..
      குத்தி காட்டுவது மட்டுமே அவர்கள் குறிக்கோள் ..
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  9. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ mano

      Delete
  10. ஆண்,பெண் இருவருக்கும் நிச்சயம் பெற்றார்களின் அன்பும் அரவணைப்பு இந்த வயதில் கண்டிப்பா தேவை. நாங்கள் இத்தருணத்தில் நண்பர்கள் போல் மூவ் பண்ணினால் நல்ல பலன் கிடைக்கும். நாங்க வேலைசெய்யும்போது அவர்களையும் அழைத்து சின்னவேலைகளை கொடுத்து செய்யச்சொல்லலாம். ப்ரீ டைம் ல் சேர்ந்துவிளையாடலாம். தனிமையில் இருக்கும் நேரம் குறையும். சில பெற்றார்கள் பிள்ளைகள் சொல்ல வருவதை கேட்பதேயில்லை. அத்துடன் கொண்டாட்டங்கள் என வரும் போது பிள்ளைகளை அநேகம் வீட்டில் விட்டே வருகிறார்கள். இது தவறு என்றே நான் சொல்வேன். பிடிக்குதோ, பிடிக்கவில்லையோ அவர்களையும் அழைத்து வருதல் வேண்டும்.
    டீனேஜ் பிள்ளைகள் இருக்கும் பெற்றாருக்கேற்றபதிவு அஞ்சு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ப்ரியா ..மிக சரியா சொன்னீங்க ..உங்க பதிலின் சாராம்சம் அடுத்த பதிவில் மேற்கோள் காட்டுவேன் ..நாமெல்லாம் டீனேஜ் கடந்து வந்தவர்கள்தானே ..
      இப்போ டீனேஜ் பிள்ளைகளுக்கு பெற்றோர் ..இயன்றவரை நல்ல விஷயங்களை பகிர்வோம் யாரேனும் இதுவரை இப்படி நடந்துகொள்ளாவிடிலும் ..இனியாச்சும் திருத்திகொண்டால் நமக்கு அதுவே பெரும் வெற்றி

      Delete
  11. //பெற்றோர் அதிக நேரம் பதின்ம வயது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் ..இப்பெல்லாம் நம் நாட்டிலும் ,ஸ்மார்ட் போன் ,தனி ரூம் அதில் டிவி ,மினி FRIDGE என்ற வாழ்க்கை முறை வந்தாச்சு ..உங்கள் மகனோ மகளோ யாருடன் நித்தம் உரையாடுகிறார்கள் என்பதை ..தாய்மாரே ..தொல்லைகாட்சி பெட்டியில் இருந்து வெளியே வந்து கவனியுங்கள் ..//

    மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் ஏஞ்சலின்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மனோ அக்கா ...நான் அதிகமான சம்பவங்களை காண்கிறேன் மகளும் நிறைய பள்ளியில் நடக்கும் விஷயங்களை சொல்லுவா ..சில சம்பவங்களுக்கு பெற்றோர் கவனக்குறைவுதான் அக்கா காரணம் ..பணம் மட்டும் ஈட்டினால் போதும்னே நிறைய பேர் நினைக்கிறாங்க ..விளைவு..தடம் மாறும் பிள்ளைகள் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா

      Delete
  12. வணக்கம்
    மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பெற்றோர்கள் கவனம் செலுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்... தொடருங்கள் காத்திருக்கோம் அடுத்த பதிவுக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ரூபன்

      Delete
  13. சிந்திக்க வேண்டிய தருனத்தில் பல பெற்றோர்! அருமையான பகிர்வு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ நேசன்

      Delete
  14. அனைத்து பெற்றோரும் அறிய வேண்டிய தகவல் ............ தொடருங்கள் ..பகிற்விற்கு நன்றி...

    ReplyDelete
  15. பெற்றோர் பிள்ளைகளிடம் நண்பர்களாகிவிட்டால் இம்மாதிரியான பிரச்சனைகள் எல்லாம் வராது என்று நம்புபவன் நான்.

    அடாடா, இதுவும் ஒரு தொடர் கதையா!

    ReplyDelete
  16. அடிக்கடி பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய தகவல் பதிவு குழந்தைகளை வளர்க்க முதலில் பெற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் நல்ல அறிவுரைகள் வாழ்த்துக்கள்

    ReplyDelete