அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/14/15

அன்னையர் தினம் !


தாயுள்ளம் கொண்ட அன்னையர் ,தந்தையர், மற்றும் அனைவருக்கும் குறிப்பாக ஐந்தறிவு செல்லங்களுக்கும் அன்னையர் தின நல்  வாழ்த்துக்கள் ..மார்ச் 15 ஐரோப்பாவில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது ..பூங் கொத்துக்களும் பரிசுகளும் பரபரப்பா விற்பனையாகும் .

ஒரு சம்பவம் எங்க வீட்டில் நான் ஸ்கூல் படிக்கும்போது நடந்தது .. ..எங்க வீடு பழங்கால திண்ணை ,தாழ்வார அமைப்பு ஒட்டு வீடு ..வெயில் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டில் கூடு கட்டும் ..அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் மின்விசிறி போட விடமாட்டாங்க ஸ்பெஷல் பெடஸ்டல் விசிறி மட்டுமே போடலாம்  ..இந்த கட்டுப்பாடு அவர்கள் சிறகு முளைத்து  பறந்து செல்லும்வரை நீடிக்கும் :)  ஒருநாள் இரவு உணவு சாப்பிட்டுகொண்டிருந்தோம் அம்மா சைகையால் அமைதியா இருக்க சொன்னாங்க ..மெதுவா திரும்பினால் இன்னோர் குடும்பம் :) தாய் எலி குட்டிகளை முதுகில் சுமந்து வெளியே கொண்டு போகுது !  எட்டுமுறை அது சென்று முடிக்கும் வரைக்கும் நாங்க அப்படியே இருந்தோம் :)  
இன்னொரு முறை சிறிய அணில் குட்டி கண் திறத்து கூட்டில் இருந்து விழுந்து விட்டது ..நாங்க விழுந்த குட்டியை எடுத்து ஒரு வெங்காய கூடையில் வைத்தோம் காலை முதல் அதன் தாய் உணவு சாப்பிடாம சன்னலருகே அலைந்தவாறு இருந்தது மாலை இருட்டினதும் கூடையை சன்னலருகில் திறந்து வச்சோம் ..வாயால் கவ்வி நன்றியுடன் பார்த்து சென்றது ..தாய்மை உணர்வு எல்லா உயிர் களுக்கும் சொந்தமானது !..

 ஒரு பாலகுமாரன் நாவல் தாயுமானவன் அதில் பரமு என்ற காரக்டர் வரும் ..மனைவி வேலைக்கு சென்ற நேரம் பள்ளியில் இருந்து அழைப்பு வரும் மகள் பூப்பெய்தி விட்டாலென தகப்பன் மகளை வீட்டுக்கு அழைத்து வருவார் அப்போ யோசிச்சேன் இதெல்லாம் சும்மா கற்பனை என்று பிறகு சில வருடமுன் நிஜத்தில் நிறைய பரமுக்கள் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன் ...குஜராத்தி நண்பி ஒருவர் ஊரில் பராலிசிஸ் ஆன அப்பாவை கவனிக்க வங்கி வேலையை விட்டு ஊரில் சென்று இருந்தார் ..அவர் தாய் முகம் இவர் கண்டதில்ல .தாயுமானவனாக தந்தை வளர்த்து வெளி நாட்டில் மணமுடித்து அனுப்பினாராம் ..திடீரென வலிப்பு வந்தவர் படுக்கையில் விழ மகள் 2!/2 வருடம் இந்தியா சென்று கவனித்துள்ளார் ..
பெண்ணா பிறந்தா பிரசவ வலி மட்டுமில்லை  எண்ணிலடங்கா வலிகள்  சாகும்வரை ஒரு தாய் அன்பை பொழியும் தெய்வம் அந்த தெய்வத்த போற்றி பாதுகாக்கணும் ..
http://samaiyalattakaasam.blogspot.com/2011/05/blog-post.html

அன்பு சகோதரி ஜலீலா அழகா சொல்றாங்க அவங்க பதிவ கண்டிப்பா வாசிங்க 


********************************************************************************

தலைபிரட்டைகளை காக்கும் தாயுமானவன் 
dedicated to chellams :)********************************************************************************

15 comments:

 1. //தாய் அன்பை பொழியும் தெய்வம் அந்த தெய்வத்த போற்றி பாதுகாக்கணும் ..// அருமை.
  அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. ஓ..ஐரோப்பாவில் மார்ச் 15-ஆ?! :)
  மிக நல்ல பகிர்வு அக்கா..//தாயுள்ளம் கொண்ட அன்னையர் ,தந்தையர், மற்றும் அனைவருக்கும் குறிப்பாக ஐந்தறிவு செல்லங்களுக்கும் அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் ..// மீ-யும் ரிப்பீட்டு! :)

  ReplyDelete
 3. காணொளிகள் வியக்க வைத்தது...

  அன்னையர் தினம் - என்றும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. வணக்கம்
  ஆறு அறிவுள்ள மனிதந்தான் அனையர் தினம் கொண்டாடுகிறார்கள் ஆனால் ஐதறிவு உள்ளவை அனையர் தினம் கொண்டாடுவது ஒரு விசித்திரம்.... ஜீவ காருணியம் வாழ்க..... சிறப்பாக பகிர்ந்தமைக்கு நன்றி
  .இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 5. happy mothers day ...எல்லா அம்மாக்களும் ரொம்ப அன்பானவங்க ...

  ReplyDelete
 6. அழகான பல செய்திகளுடன் அற்புதமான பகிர்வு. பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 7. கணொளிகள் அருமை. அதுவும் இரண்டாவது காணொளி சூப்பர் ! :)

  >>>>>

  ReplyDelete
 8. அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல் வாழ்த்துக்கள் ..

  ReplyDelete
 9. அன்னையர்தின வாழ்த்துக்கள் அஞ்சு.
  வீடியோ அருமை. ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் அறிவு ஆறறிவு மனிதனுக்கு இருந்தால், ஏன் முதியோர் இல்லம்??.

  ReplyDelete
 10. உங்கள் அம்மா எலிகளைக் கூட ஒன்றும் செய்யாமல் காத்தது ஆச்சர்யம். உங்கள் அம்மாவிடமிருந்துதான் இந்தக் கருணை மனம் உங்களுக்கும் வந்திருக்க வேண்டும்.

  அன்னையர் தின வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் எவ்வளவோ இருக்கு ..சொல்லிட்டே போலாம் ....நினைவுகள் பாரமாக்கும் ...அம்மா உயிருடனில்ல :( ப்ளூ க்ராஸ் life மெம்பர் ..இறக்குமுன் ,எப்பவும் நினைவு நாளுக்கு கட்டாயம் வாயில்லா ஜீவன்களுக்கு உணவிடனும்னு எங்களிடம் கேட்டுகொண்டாங்க

   Delete
 11. "அதானே, என் பிறந்த நாளை ஒட்டித்தானே அன்னையர் தினம் வரும். என்ன அஞ்சு மட்டும் முன்கூட்டியே கொண்டாடறாங்க ? " என நினைத்து ஓடி வந்தேன்.

  அன்னைக்கு நிகர் யாருமில்லை. அந்தத் தாய்மையுணர்வு இருக்கும் எல்லோருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 12. காணொளியில் தாயுள்ளம் கண்டு ரசித்தேன்.
  அன்னையர் தின வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. பின்னூட்டமிட்ட ரமாரவி ,அனு ,மஹி ,சித்ரா ,ப்ரியா சகோ .சொக்கன் ,ரூபன் ,கோபு அண்ணா ,ஸ்ரீராம் ,தனபாலன் அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 14. ஆஹா! சகோதரி! உங்கள் அம்மா எங்களைப் போன்று நீங்களும் எங்கள் லிஸ்டில்!!!!! நானும் மகனும் வீட்டில் எந்த ஒரு ஜீவராசியையும் அடிக்க மாட்டோம். பார்க்கப் போனால் எலிகள் மட்டுமல்ல, கரப்பான் பூச்சியைக் கூட ஹிட் போன்றவை அடிக்காமல் அவற்றை வரவிடாமல் செய்ய சில இயற்கை வழிமுறைகளைக் கையாண்டு, அவற்றைக் கொல்லாமல் செய்வதுண்டு. அதே போல எறும்புகளுக்கு என் மகன் தீனியே வைப்பான்...ஹஹ்ஹ பாவம் என்று...அதே போன்று எங்கள் வீட்டில் நோ குட் நைட்...ஹஹஹ ....
  -கீதா...

  எப்படி இந்தப் பதிவு மிஸ் ஆனது....


  காணொளிகள் அபாரம்.....அருமை! மிக மிக ரசித்தோம்!!!

  ReplyDelete