அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/4/15

மைக்ரோ பீட்ஸ் எனும் நுண்ணிய நெகிழி மணிகளும் சுற்று சூழலும்...

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் ,தேநீர் கோப்பைகள் ,மற்றும் பிளாஸ்டிக்கில் தயாரிப்புகள் அனைத்தும் முறையே குப்பைக்கோ  அல்லது மறு சுழற்சி மையதிற்க்கோ செல்கின்றனவா ?  இல்லையே அப்படி செய்யபட்டால் நீர் நிலைகள் கடல் எங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் இராதே  ..ஆண்டுதோறும் சுமார் //6.4 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கடலில் சேர்கிறதாம் ..   :( 






https://www.youtube.com/watch?v=XPrWV8D4joE






மைக்ரோ பீட்ஸ் எனும் நுண்ணிய plasticதுகள்கள் நமது சூழலைபெரும்பாதிப்புக்குள்ளாக்குகின்றன ..


இவற்றின் அளவு 10 um to 1000 um (0.5mm-1mm).நுண்ணோக்கியால் கூட பார்க்க முடியாது இவற்றை ..
இவை கழிவு நீர் சுத்திகரிக்கும் மையங்களிலுள்ள வடிகட்டிகளின் துளைகளை விட சிறியவை ஆகவே அங்கிருந்து வெளியேறி கடலை அடைகின்றன இந்த ஒரு துகள் உப்புஅளவே உள்ள நுண் நெகிழி மணிகள் .
நாம் அனு தினமும் பயன்படுத்தும் பற்பசை,முக அழகு சாதனபொருட்கள் போன்றவற்றில் இந்த மைக்ரோ மணிகள் அதிகம் உள்ளனவாம் ..கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் முக அழகு பொருட்களில் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் சேர்க்க தடை விதிக்க மனு கொடுத்துள்ளனர் சுற்று சூழல் ஆர்வலர்கள் .பின்னே ?பல் தேய்த்து முகம் கழுவிய அழுக்கு நீர் கழிவு நீர் சுத்திகரிப்புக்கு சென்று சல்லடை வழியே தப்பி கடலை அடைகிறதே !



உணவு சங்கிலி என்று ஒன்றுண்டு நீரிலுள்ள பிளாஸ்டிக் மணிகள் கடலுக்கு சென்று மீன் உணவின் வழியே நமது உணவு மேசைக்கே வருவதை தடுக்கவே இத்தடை .Procter & Gamble நிறுவன தயாரிப்பு crest பற்பசையில் மைக்ரோ பீட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது இந்த நுன்மணிகள் பல் துலக்கும்போது பல் இடுக்கு மற்றும் முரசுகளில் மாட்டிக்கொண்டு பல் இடுக்குகளில் தொற்று கிருமிகள் ஏற்பட வழி வகுக்கின்றன என்று பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள் ..
முகத்தின் துவாரங்களிலுள்ள அழுக்கை மற்றும் மடிந்த திசுக்களை சுத்தப்படுத்த ஸ்க்ரப் (SCRUB )பயன்படுத்துகிறார்கள் அதிலும் இந்த நுண் நெகிழி மணிகள் சேர்க்கப்பட்டுள்ளன .. .ஒரு ஆறுதலான விஷயம் Procter & Gamble ,unilever ,johnson & johnson போன்ற நிறுவனங்கள் 2019 ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மைக்ரோ பீட்சை அன்றாட பயன்பாட்டு அத்யாவசிய பொருட்களில் சேர்ப்பதை தவிர்க்க போவதாக செய்திகள் கூறுகின்றன ..
.ஏற்கனவே தலேட்ஸ் தீமைகள் பற்றி முன்பு பார்த்தோம்
PHTHALATE /தலேட் ..தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் பிளாஸ்டிக் ,உபயோகபொருட்கள் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது.குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்கள் , ஸ்பூன்கள் அனைத்திலும் காணப்படும் முக்கியமான பிளாஸ்டிக் உட்பொருள் Bisphenol A (BPA) என்ற ஒன்று. உடலில் சுரக்கும் Estrogen Hormone என்ற மிக முக்கியமான சுரப்பியை போன்றே இதுவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. அதாவது மிமிக்ரி செய்யும் .(Estrogen Hormone என்ற சுரப்பிகள் எலும்பு வளர்ச்சி, இதய ஆரோக்கியம், பாலியல் வளர்ச்சி, கருத்தறிப்பது முதற்கொண்ட பல வேலைகளை நம் உடலில் செய்கின்றன.)BPA எனப்படும் பிளாஸ்டிக் உட்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் போன பின் உடலோடு கலந்து எங்கெல்லாம் Estrogen Hormone செயல்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிக்கலை உண்டாக்குகின்றது. இதனால் உடலில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின்றன . மார்பகப் புற்றுநோய் ,ஆண்களில் prostate புற்றுநோய் பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறை,மலட்டுத்தன்மை...இப்படி பல கூறிக்கொண்டே போகலாம் !



ஒரு ஸ்மார்ட் போன் app வந்திருக்காம் 

//The International smartphone App// இதை தரவிறக்கி பொருட்களின் லேபிளை ஸ்கான் செய்தா காட்டுமாம் இப்படி

// Red: This product contains microbeads;
Orange: This product still contains microbeads, but the manufacturer has indicated it will replace in a given timeframe or adapt the product accordingly;

Green: This product is free from plastic microbeads///  

ஆகவே அன்றாடம் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை வாங்கும்போது லேபிளில் //microbeads," "polyethelene," or "polypropylene" //இருந்தால் தவிர்க்கவும் ..


படங்கள் கூகிள் 
தகவல் இணையம் ..

(இது பசுமை விடியலில் எழுதிய விழிப்புணர்வு பதிவு )


ஏஞ்சலின் ..






11 comments:

  1. இதுபோன்ற விவரங்கள் பயத்தைத்தான் தருகின்றன. நம் அன்றாட செயல்களிலேயே எந்த அளவு சுற்றுச் சூழலைக் கெடுக்கிறோம்? விழிப்புணர்வுப் பதிவு.

    ReplyDelete
  2. நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் இவ்வளவு நுண்ணிய விஷயங்கள் இருக்கிறதா?
    விழிப்புணர்வு தந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    ReplyDelete
  3. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

    நன்றிகள் பல...

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள சமுதாய விழிப்புணர்வுப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள், நன்றிகள்.

    ReplyDelete
  5. நவீன விஞ்ஞானம் நம்மை எங்கே கொண்டு நிறுத்துமோ!?..
    பயனுள்ள தகவல்.
    என்றாலும் கவலையாக இருக்கின்றது..

    ReplyDelete
  6. பல் தேய்க கூட பயமாக இருக்கே ??நல்லதொரு விழிப்புணர்பு பதிவு angelin.. நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
  7. வாசிக்க பயம்தான் வருகிறது.எத்தனை விடயங்கள் தெரியாமல் இருக்கு. இனி பொருட்களை வாங்கும்போது இதில் என்ன வில்லங்கம் இருக்கோ எனத்தோன்றும். நல்லதொரு விழிப்புணர்வு பதிவு அஞ்சு.-நன்றி.

    ReplyDelete
  8. அனைவரையும் பயமுறுத்தி விட்டேனோ ...ஆவ்வ்வ் சாரி ..

    பொதுவாகவே நான் பிளாஸ்டிக் பொருட்கள் செயற்கை அழகு சாதனா பொருட்கள் இவற்றை பயன்படுத்துவதில்லை ..அதனால்தான் இணையத்தில் படித்ததை பகிர்ந்து கொண்டேன் மகளுக்கும் கணவருக்கும் அலுமின்ய பாட்டில் தண்ணீர் ஜெஸ்ஸியின் தட்டு கூட பீங்கான்தான்

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்குத் தெரியாததல்ல..
      அலுமினியம் கூட சரியில்லை என்கின்றார்கள்..

      Delete
    2. ஆம் அய்யா ..கிளாஸ் பாட்டில் ஹெவி மகளுக்கு 100 % ஸ்டெயின்லெஸ் தான் பள்ளிக்கு அனுப்பறேன் ..இனி மாற்றனும் அதையும்

      Delete
  9. சகோதரி! நாங்களும் வீட்டில் ப்ளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதைத் தவிர்த்து பீங்கான், கண்ணாடி, எவர்சில்வர் போன்றவைதான் தண்ணீர் பாட்டில் உட்பட....ஆனால் கடைகளில் ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பதை நிறுத்த முடியுமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமோ? ஏனென்றால் பல் தேய்க்கும் ப்ரஷ், துணி தோய்க்கும் ப்ரஷ், பல மெஷின்கள் இப்படிப் பல இடங்களில் ப்ளாஸ்டிக் கலந்துதான் இருக்கின்றது. சரி அப்போ வுட்டன் திங்க்ஸ் போலாமா என்றால்....மரங்கள் அழிக்கப்படுமே! ...ம்ம்ம் இது மிகவும் கவனமாகக் கையாளப்படவேண்டிய ஒரு விஷயம்...

    (உங்களைப் போன்றுதான்....கீதா- நான் அழகு சாதனப் பொருட்கள் எதுவும் உபயோகிப்பது இல்லை. தலைக்கு டை கூட அடிப்பது கிடையாது!! )

    நல்ல பதிவு!!

    ReplyDelete