அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/24/15

காதல் .....பதின்ம வயதில் ......(2)

பிறகு ஒரு நாள் எங்க ஏரியா கோவில் ஒன்றில் பார்த்தேன் அப்பையனுடன் நிறை மாத கர்ப்பிணியாய் ...ரம்யாவை ...நான் 12 வகுப்பு தேர்வு முடித்து ரிசல்டுக்கு காத்திருந்த நாட்கள் அது !   17 வயதுதான் எங்க மூவருக்கும் ..
...எனக்கு அவளை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை ..இப்போ ..நினைத்துபார்க்கிறேன் .எவ்வளவு கண்டிப்பு அவளது அம்மா ..ஒரு நாள் கெமிஸ்ட்ரி லாபில் சற்று தாமதமா வெளியே வந்தோம் //எங்கடி ஊர் மேஞ்சிட்டு வர //என்று அவ அம்மா கத்தினது இன்னும் காதில் ஒலிக்குது :
இன்னும் ரெண்டு மூணு வார்த்தை சேர்த்து வந்தது அதை பொதுவில் எழுத  முடியாது :(
ரம்யா தவறான பாதையில் சென்ற உடன் அன்பு காட்டி இன்னும் அரவணைப்பை தந்திருந்தா ஒரு வேளை அவசர முடிவு எடுத்திருக்க மாட்டாள் ..  
அன்பால் முடியாதது எதுவுமில்லை .....
.பல அவசர பதின்ம காதல்களுக்கு பெற்றோரின் பாராமுகம் ஒரு காரணம் ..நான் அவளது பெற்றோரை பற்றி கேள்விப்பட்டது மனதுக்கு துக்கமாக இருந்தது ,சிறு தவறுக்கும் வயது வந்த மகளை கைநீட்டி அடிப்பார்களாம் :(..

பெற்றோர் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டும் ..பிள்ளைகளுக்கு வெறுப்பு வந்தால் பெற்றோருக்கு பிடிக்காத விஷயத்தைதான் முதலில் செய்ய முற்படுவார்கள் ..
..


முந்தைய பதிவில் ப்ரியா சொல்லியிருந்தார்

 //சில பெற்றார்கள் பிள்ளைகள் சொல்ல வருவதை கேட்பதேயில்லை. அத்துடன் கொண்டாட்டங்கள் என வரும் போது பிள்ளைகளை அநேகம் வீட்டில் விட்டே வருகிறார்கள். இது தவறு என்றே நான் சொல்வேன். பிடிக்குதோ, பிடிக்கவில்லையோ அவர்களையும் அழைத்து வருதல் வேண்டும். //  100 % உண்மை எங்கள் நட்பு ஒருவர்  ஆலயத்துக்கு கூட பிள்ளைகளை அழைத்து வர மாட்டார் எந்நேரமும் பிள்ளைகள்  தனியா வீட்டில் கேம்ஸ் விளையாடும் ..தகப்பன் ஒரு நாள் கணினியை திறந்தா வயதுக்கு மீறிய விளையாட்டுக்கள் இருந்தனவாம் ..தகப்பன் அடித்த அடிக்கு பக்கத்து வீட்டினர்  போலிஸ் ஸ்டேஷனில் முறையிட்டு  பிள்ளைகளை காப்பகத்தில் சேர்த்து விட்டனர் .....

இன்னொரு தெரிந்த குடும்பம்..மனதுக்கு மிக பாரமானது அந்த பெண் பிள்ளை இப்போ  உயிருடன் இல்லை ..பெயர் தேவி :( என்னுடன் படித்தவள்தான் ..ஒருமுறை சொன்னாள் உங்க எல்லாருக்கும் நல்லபெற்றோரை கொடுத்திருக்கார் எனக்கு மட்டும் எதற்கு இப்படிப்பட்ட பெற்றோர் :(

தாய் தன்னை மட்டுமே கவனிக்கும் :( ராட்சஸி 
அந்த பேயின் வாயில் சனியன் தரித்திரம் ,முண்டம் இவைதான் அந்த பெண்ணை அழைக்கும் பெயர்கள் என்ன காரணம் தெரியுமா இவள் பிறக்குமுன் கோடீஸ்வராராக இருந்த தந்தை இவள் பிறந்தபின் வியாபார நஷ்டத்தால் நொடிந்தாராம் ..சரியான உணவு கூட தர மாட்டார்கள் என்பாள் .
இப்படியெல்லாம் நடக்குமா என்று யாரும் நினைக்க வேண்டாம் ..நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்கள் நடக்குது ..புறக்கணிப்பு அதுவொன்றே 
இந்த பெண் வழிதவற காரணமாகியது ..இவள் மனது கலங்கிய நேரத்தில் ஆதரவு தர ஒரு தோள் தேவைபட்டிருக்கு ..18 வயதில் ..அவன் ஒரு சைக்கோ அவனுக்கு தேவை ஒரு அடிமை இவளை பாடாய் படுத்தியிருக்கான் ..தாங்கமுடியாமல் விஷமருந்தி செத்து போச்சு அந்த இளம் குருத்து ..
இதெல்லாம் இப்பவும் தொடருது ...என்ன ஒரு விஷயம் இப்போ அட்வான்ஸ்டா நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி  கணினி ,ஸ்கைப் ,கிக் ,வைபர் வாட்சாப் என்று முகமறியா நட்புக்களை ..பல அசிங்கங்களை அறியாமல் ஏற்கிறார்கள் பிள்ளைகள் .

இந்த இரண்டு பெண்களி ன் பெற்றோர் செய்த தவறு ..புறக்கணிப்பு ,எப்பவும் திட்டுவது ,அதுவும் நாலு பேர் முன்னிலையில் ,..
அன்பால் அரவணைத்திருந்தா இருவரும் ஒரு டாக்டராகவோ எஞ்சினியராகவோ ஆகியிருப்பாங்க :(

சென்ற பதிவில் சகோதரர் மதுரை தமிழனின் பின்னூட்டத்தை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்


 //
குழந்தைகளுக்கு நமது அரவணைப்போடு அவர்களுக்கு கட்டுபாடு அற்ற சுதந்திரத்தை தரும் போது அவர்கள் அதை அதை கட்டுபாடுகளுடன் நடைமுறைப்படுத்தி கொள்வார்கள். அதே நேரத்தில் கட்டுபாடுகளை நாம் விதித்தால் அதை தாண்டி செல்லதான் அவர்கள் மனம் விழையும் என்பது உண்மை//

                                                                                         


குழந்தைகள் குறிப்பா பதின்ம வயது குழந்தைகள் மனம் மலரினும் மெல்லியது ..அவர்களை அன்பினால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் ..அடித்தோ ,வன்முறையாலோ எதையும் சாதிக்க முடியாது இளம் பருவத்தினரிடம் .

காதல் தவறில்லை ஆனால் முறையற்ற இளவயதில் எதிர் பாலினத்தின் மீது 
இனக்கவர்ச்சியால் வருவதையெல்லாம் காதல் என்று பிள்ளைகள் நினைக்க கூடாது ..இதை எழுதி கொண்டிருக்கும்போது ..இங்கே இங்கிலாந்தில் சென்ற வாரம் ஜாஸ்மின் கோல்மன் எனும் 12 வயது பெண் முகபுத்தக நட்பொன்றுடன் வீட்டை விட்டு ஓடியிருக்கு ..அந்த நட்பு ஒரு வயதான மனிதன் ..ஆனா போலிஸ் கிட்ட பிடிபட்டுவிட்டனர் ..பெற்றோர் கவனிப்பு இல்லையென்றால் இதுதான் நிலை ..

காதல் என்பது அழகான ஒரு விஷயம் ..உண்மையான அன்புக்கு பொறாமை கொள்ளதெரியாது ,வீட்டை விட்டு ஓடிவா என்று சொல்லாது ,அடிமைப்படுத்த தெரியாது ,மிரட்டதெரியாது ,ஆசைக்கு இணங்க வைக்க செய்யாது ,மதம் மாறு என்று கட்டளை விதிக்க தெரியாது ,
ஆனா இதெல்லாம் பதின்ம வயதில் காதல் வயப்பட்டவர்களுக்கு சுத்தமா தெரியவே தெரியாது புரியவும் புரியாது ..அந்த வயது அந்த வயதிற்குரிய ஒரு அவசரம் இது மட்டுமே பதின்ம காதலில் இருக்கும் :(

இரண்டு வயதோ இல்லை 18வயதோ அது குழந்தை உள்ளம் அன்புக்கு ஏங்கும் பருவம் அதற்கு எங்கு அன்பு கிடைக்குதோ அங்கே தஞ்சம் புகும் ..அந்த குழந்தை மனதுக்கு நல்லது கெட்டது தெரியாது .பெற்றோர் நமது கடமை அன்பால் அவர்களை வழிநடத்துவது .

முற்றும் .19 comments:

 1. //இரண்டு வயதோ இல்லை 18வயதோ அது குழந்தை உள்ளம் அன்புக்கு ஏங்கும் பருவம் அதற்கு எங்கு அன்பு கிடைக்குதோ அங்கே தஞ்சம் புகும் .. அந்த குழந்தை மனதுக்கு நல்லது கெட்டது தெரியாது .பெற்றோராகிய நமது கடமை அன்பால் அவர்களை வழிநடத்துவது .//

  முடிவுரை மிக அழகாக உள்ளது. பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா

   Delete
 2. //காதல் என்பது அழகான ஒரு விஷயம் ..உண்மையான அன்புக்கு பொறாமை கொள்ளதெரியாது ,வீட்டை விட்டு ஓடிவா என்று சொல்லாது ,அடிமைப்படுத்த தெரியாது ,மிரட்டதெரியாது ,ஆசைக்கு இணங்க வைக்க செய்யாது ,மதம் மாறு என்று கட்டளை விதிக்க தெரியாது ,
  ஆனா இதெல்லாம் பதின்ம வயதில் காதல் வயப்பட்டவர்களுக்கு சுத்தமா தெரியவே தெரியாது புரியவும் புரியாது ..அந்த வயது அந்த வயதிற்குரிய ஒரு அவசரம் இது மட்டுமே பதின்ம காதலில் இருக்கும். // சூப்பரா சொல்லியிருக்கிறீங்க அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா ..சில விஷயங்கள் சொல்லாம விட்டேன் இங்கே அவ்ளோ அட்ட்டகாசம் டீன்ஸ்

   Delete
 3. இவ்வயது பிள்ளைகளுடன் பெற்றார்களின் அணுகுமுறைகள் பிழையாகவும் சில இடங்களில் இருக்கிறது. ஆரம்பத்திலிருந்தே பிள்ளைகளை கண்டிப்பதிலும்,செல்லம் கொடுப்பதிலும் தவறிழைக்கின்றனர். ஒன்றில் ஓவரா செல்லம் கொடுப்பது அல்லது கண்டிப்பு. ஒருவர் கண்டித்தால் மற்றவர் அரவணைக்கவேண்டும். அதே நேரம் அப்பிள்ளை தவறிழைத்திருந்தால் அத்தவறை புரியவைக்கவேண்டும்.
  வெளிநாட்டில் மொழிப்பிரச்சனையும் முக்கியமாகிறது. ஈசியாக தவறுகள் ஏற்படுகிறது. சகோ. மதுரை தமிழன் கூறியபடி கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். கடிவாளத்தை நம் கைகளில் வைத்திருக்க வேண்டும். அவ்வப்பொழுது விட்டும், இழுத்தும் பிடிக்கவேண்டும். பதின்ம வயது பிள்ளைகளை சரியான முறையில் வழிநடத்துவது பெற்றோர்களின் கைகளிலே தங்கியிருக்கு. நன்றி அஞ்சு.

  ReplyDelete
 4. கட்டுப்பாடு கூடாது, சுதந்திரம் தரவேண்டும் என்றும் சொல்ல முடியாது. சுதந்திரம் கூடாது , கட்டுப்பாடு காட்ட வேண்டும் என்றும் சொல்ல முடியாது. இரண்டும் அளவாக இருக்க வேண்டும். ஆனால் ஒன்று, பதின்ம வயதுக் குழந்தைகள் மனதில் பெற்றோர் மீது நம்பிக்கை, அன்பு, நெருக்கம் இருக்கமீறு - அவை குறையாமல் நடந்துகொண்டால் போதும்.

  ReplyDelete
  Replies
  1. //இரண்டும் அளவாக இருக்க வேண்டும்// yes sago..
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 5. அன்பால் முடியாதது எதுவுமில்லை .....
  .பல அவசர பதின்ம காதல்களுக்கு பெற்றோரின் பாராமுகம் ஒரு காரணம் ..நான் அவளது பெற்றோரை பற்றி கேள்விப்பட்டது மனதுக்கு துக்கமாக இருந்தது ,சிறு தவறுக்கும் வயது வந்த மகளை கைநீட்டி அடிப்பார்களாம் :(..

  பெற்றோர் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டும் ..பிள்ளைகளுக்கு வெறுப்பு வந்தால் பெற்றோருக்கு பிடிக்காத விஷயத்தைதான் முதலில் செய்ய முற்படுவார்கள் ..// அதே அதே! சரியான வார்த்தைகள்.

  இரண்டு வயதோ இல்லை 18வயதோ அது குழந்தை உள்ளம் அன்புக்கு ஏங்கும் பருவம் அதற்கு எங்கு அன்பு கிடைக்குதோ அங்கே தஞ்சம் புகும் ..அந்த குழந்தை மனதுக்கு நல்லது கெட்டது தெரியாது .பெற்றோர் நமது கடமை அன்பால் அவர்களை வழிநடத்துவது .//

  உண்மை. உண்மை. இந்த அன்பு 18 வயது மட்டுமல்ல சகோதரி 50 ல் கூடக்கிடைக்கவில்லை என்றாலும், இல்லை வாழ் நாளில் எந்த வயதில் நிராகரிக்கப்பட்டாலும், மனம் பக்குவப்பட்டிருந்தாலும் கூட இந்த அன்பு, ஆதரவு, அரவணைப்பு கிடைக்கவில்லை என்றால், பெண் ஆனாலும், ஆண் ஆனாலும் பாதிப்பு உண்டுதான். அதனால் தானே பல குடும்பங்களில் தற்போது 40/45 வயதிற்கு மேல் கணவன் மனைவிக்குள் ஒரு சிறு மனப் பிரச்சினைகள் ஏற்பட்டு, இந்த ஹார்மோன் களின் விளையாட்டினால், பிரிவு வரை செல்லுகின்றது. புள்ளியியல் அதைத்தான் சொல்லுகின்றது.

  எனவே நாம் கல்வி, வேலை, இலட்சியங்கள் என்று குழந்தைகளுக்கு ஊட்டும் போது, கூடவே எல்லோரையும் அன்பு செய்யச் சொல்லி, பிறரைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தையும், பிரச்சினைகளைக் கையாளும் திறனையும், நல்ல விதமான ஆளுமையையும் வளர்த்துக் கொள்ள உதவினால்...நலல்தே..இனி வரும் காலத்திற்கு மிகவும் தேவையான ஒன்று ஏனென்றால் கூட்டுக் குடும்பம் இல்லாதாகி வருவதால்....
  அருமையான பதிவு சகோதரி! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரிகீதா அண்ட் துளசி அண்ணா ..உங்க பதிவு பார்த்துதான் எனக்கு எழுத தோணிச்சு

   Delete
 6. ரொம்ப சரியாச் சொல்லியிருக்கீங்க என்னுடைய இந்த மாத தங்கமங்கை கட்டுரையில் இதைத்தான் எழுதியிருந்தேன் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ..உங்க ப்ளாகிலும் இருக்க அக்கட்டுரை ..வருகை தரேன்

   Delete
 7. கண்காணிப்பு எனும் கடிவாளம் இருக்க வேண்டும்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 8. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
  மண்ணில் பிறக்கையிலே..
  பின் நல்லவராவதும் தீயவராவதும்
  அன்னை வளர்ப்பதிலே.. அன்னை வளர்ப்பதிலே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ஜெய் ..பாடல் வரிகளில் உண்மை சுடுகிறது

   Delete
 9. அந்த கடைசி வரி உண்மை. உண்மை. உண்மை

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 10. ////இரண்டு வயதோ இல்லை 18வயதோ அது குழந்தை உள்ளம் அன்புக்கு ஏங்கும் பருவம் அதற்கு எங்கு அன்பு கிடைக்குதோ அங்கே தஞ்சம் புகும் ..அந்த குழந்தை மனதுக்கு நல்லது கெட்டது தெரியாது .பெற்றோர் நமது கடமை அன்பால் அவர்களை வழிநடத்துவது .///
  அருமை angel. நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மை. பெற்றோறின் அன்புதான் அவர்களை வழிநடத்தும். அருமை..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Rama...இங்கே வெளிநாட்டிலும் பணம் பிரதானம் என்று அலைந்து பெற்ற பிள்ளைகளை புறக்கணிக்கும் பெற்றோர் இருக்காங்க ..பாவம் பிள்ளைகள்

   Delete