அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

3/27/15

Loud Speaker 18..


இன்றைய ஒலிபெருக்கி செய்திகள் .கா .கா .கா :)

காக்கா பற்றிய சில தகவல் 


காதல் ஜோடியை காப்பாற்றிய காக்கா செல்லம் :)  ஸ்வெட்டர் போட்ட பென்குயின் குட்டீஸ் ..தொட்டியில் வெங்காய செடி வளர்த்தல் ...

தேவர் , இராமநாராயணன் அவர்களின் படங்களில நாய் ,ஆடு யானை பாம்பு போன்றவை சாக போறவங்கள காப்பாற்றும் காட்சியை நாம் நிறைய பார்த்திருப்போம்! 

அதுபோல இது சீக்கியர் வார இதழில் படித்த செய்தி ..கடந்த வாரம் ஒரு காதல் ஜோடி அகமதாபாத் சபர்மதி ஆற்றில் விழுந்து உயிரை மாய்த்து கொள்ள சென்றார்களாம் .அங்கு பாலம் அருகில் இருக்கும் போது இந்த விஷயத்தை கண்டவுடன்  ..அங்கு ரெகுலரா சுற்றும் .ஹீரோ காக்கா அங்குள்ள ரெஸ்க்யூ தீயணைப்பு நிலையம் அருகில் சென்று சத்தமிட்டிருக்கு அவர்கள் விரைந்து ஆற்றுக்கு கிட்ட வரும்போது அவசரகுடுக்கைகள் நீருக்குள் குதித்திருக்காங்க ..ஆனால் காக்கா உபயத்தால் தீயணைப்பு படையினர் உடனே அவர்களை காப்பாற்றி விட்டனர் .....பொது மக்கள் செய்தி தெரிவிக்குமுன் காக்கா   ரெஸ்க்யூ டீமை அலெர்ட் செய்கிறதாம் ..!
ரெஸ்க்யூ குழுவை சார்ந்த பாரத் மங்கலா சொல்கின்றார் இதுபோன்று பல நேரங்களில் காக்கா தீயணைப்பு படை ஆபீஸ் வாசல் வந்து கத்தி இருக்கு .அப்போதெல்லாம் இவர்கள் விரைந்து ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றியுள்ளார்கள் ..சிலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம் ஆனால் இந்த ஐந்தறிவுகளுக்கு அத்தகைய QUICK ACTION எடுக்கும் உள்ளுணர்வு உண்டு ..


காக்கா பற்றிய சில தகவல் (thanks கூகிள் )  
காக்கையை பற்றிய சில ஆராய்ச்சிக் குறிப்புகளை பார்ப்போம்
 “Teamwork” என்று சொல்லப்படும் குழுவாக சேர்ந்து பணியாற்றுவதை திறமையுடன் வெளிப்படுத்தும் கூட்டம் காக்கை தான். ஒரு காக்கை காயப்பட்டிருந்தால், மற்ற காக்கைகள் ஒன்று சேர்ந்து இருப்பிடம் வரை வந்து சேர உதவுமாம்.
ஒரு செயலை திறம்பட, எளிதாக செய்ய மனிதர்கள் கருவிகள் பயன்படுத்துவர். காகையினமும் அப்படிதான். தனக்கு கிடைக்கும் கம்பிகளை வளைத்து தானே கருவிகளை செய்து கொள்ளுமாம். இவற்றை பயன்படுத்தி எட்டா இடத்தில் இருக்கும் உணவை எடுக்குமாம்.
இனச்சேர்க்கையில் ஈடுபடும் காகங்களில் பல, வாழ்நாள் முழுவதையும்  ஒன்றாக கழிக்குமாம்.
மனிதர்களின் முகங்களை ஞாபகம் வைத்துகொள்ளும் அளவிற்கு புத்திசாலிகள். சிம்பான்சி குரங்கு அளவிற்கு காக்கைகளுக்கு மூளையின் செயற்பாடு இருக்கிறதாம்.
சில பழகிய காகங்கள் மனிதர்களின் உரையாடல்களைக் கூட புரிந்து கொள்ளுமாம்.
கடினமான கொட்டைகளை நசுக்க போக்குவரத்து மிகுந்த சாலைகளில் அவற்றை போட்டுவிட்டு, வாகனங்கள் நசுக்கிய பின் அவைகளை எடுத்து உண்ணுமாம்.

மனிதன் தான் வாழும் பகுதிக்கேற்ப மொழியை பேசுவது போல , ஒவ்வொரு பகுதியை சேர்ந்த காக்கைகள் ஒவ்வொரு பேச்சு வழக்கத்தை கொண்டுள்ளதாம்.


sally எனும் பூனை அதன் உரிமையாளரை தீ விபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளது    காணொளி பாருங்கள் ..இது ஒன்றில்லை நிறைய  சம்பவங்கள் இருக்கு ..

இதுவும் ஒரு பூனை gas leak  ஆவதை தனது உரிமையாளருக்கு உணர்த்திய சம்பவம் 

ஸ்வெட்டர் போட்ட பென்குயின் குட்டீஸ் ..

Knitted penguin jumpers பற்றி மகள் cbbc செய்தியில் பார்த்து எனக்கு சொன்னதை பகிர்கிறேன் ..ஆஸ்திரேலியாவில் உள்ள phillip island இல் ஏற்பட்ட எண்ணெய்  கசிவினால் பல பறவையினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன ..2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து ஒன்றில் கடற்கரையெல்லாம் எண்ணெய் கொட்டி பறவையினங்களை சாகடித்துள்ளது ..எண்ணையை நீக்க அலகால் பறவை முயலும்போது நச்சு உடலில் சேரும் சாப்பிட முடியாது ..அப்படியே மடியும் .இதில் அதிகம் பாதிக்கப்பட்டது பென்குயின் வகையில் அருகிய இனம் அதிலும் குட்டி பாப்பாஸ் ..இவை அலகால்  சுரண்டாதிருக்க்க வாலண்டியர்ஸ் இவற்றை பார்த்தவுடன் பிடித்து குட்டி ஸ்வெட்டர் மாட்டி விடுவார்களாம் ..பிறகு உடலில் உள்ள எண்ணையை நீக்குவார்கள் ..அதற்கென penguin-foundation  2013 இல்  சுற்று சூழல் ஆர்வலர்களிடம் சிறிய ஜம்பர்ஸ் தைத்து தர கேட்டுள்ளார்கள் ..நிறைய ஸ்வட்டர்ஸ் குவிந்தது ..

அதிலும் இவர் சேவை அளப்பரியது 109 வயது தாத்தா 109-year-old Australian Alfred Date has been knitting since the 1930s and his latest/most famous endeavor was making mini sweaters… for endangered penguins!

.............................................................................................................................................................

வீட்டுத்தோட்டம்

தொட்டியில் வெங்காயம் வளர்த்தல் ..

தொட்டியில் வெங்காய செடி வளர்த்தல் ...
தோட்டத்தில் பெரிய அளவு நிலப்பரப்பு இல்லாவிடினும் மண் ,பிளாஸ்டிக் தொட்டிகளில் மற்றும் உறை ,சாக்கு பைகளிலும் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயம் ,பூண்டு வளர்க்கலாம் .
1,வெங்காய விதைகள் தோட்ட மையத்தில் கிடைக்கும் அவற்றை வாங்கி seed starters என கடைகளில் விற்கும் சிறு சதுர வடிவ பெட்டிகள் அல்லது கம்போஸ்ட் தம்ளர்களில் விதை நட்டு வளர்க்கலாம் .நாற்று 5 இன்ச் உயரம் வளர்ந்ததும் தொட்டிகளுக்கு மாற்ற வேண்டும் .

2, onion sets ...இது அனைத்து தோட்ட மையங்களிலும் கிடைக்கும் ..விதைகளை நட்டு அவை முதிர்ச்சி அடையுமுன் சிறு பல்ப் அளவு இருக்கும்போதே எடுத்து பதப்படுத்துவார்கள் ..இவை பின்பு பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் .இதை நட வெங்காய செடி வளரும் .

3,வீட்டில் சில நேரம் சமையலுக்கு வாங்கிய வெங்காயம் முளைத்து துளிர் இலைகள் வளர ஆரம்பிக்கும் ..இதனை படத்தில் காட்டியுள்ளபடி கவனமுடன் வெட்டி பிரித்தெடுத்து தொட்டியில் நடலாம் .

தொட்டியில் நான் அவ்வாறு நட்ட வெங்காயம் நன்கு பிடித்து வளர்கிறது .

4,சிறிய வெங்காயமென்றால் (சாம்பார் ) ஒன்றினை தொட்டியில் நட்டால் போதுமானது அதிலிருந்து குறைந்தது 20 வெங்காயம் அறுவடை செய்யலாம் .

..ஒருவர் என்னிடம் துளிர் விட்ட முழு வெங்காயத்தை நிலத்திலோ தொட்டியிலோ நட்டால் செடி வளருமா என கேட்டிருந்தார் ..

ஆம் இலைகள் நன்கு செழித்து வளரும் .அந்த இலைகள் சூப் ,fried ரைஸ் மற்றும் பிற சமையலிலும் சேர்க்கலாம் .இம்முறையில் வெங்காயம் கிடைக்காது ஏனெனில் ஏற்கனவே முற்றிய வளர்ந்த வெங்காயத்தில் மீண்டும் வெங்காயம் உருவாகாது ..ஆனால் கொலாஜ் படத்தில் உள்ளவாறு வெட்டி நட்டால் வளரும் .

5,சிலர் வேர் தோன்றும் வெங்காய தலை பகுதியை மட்டும் வெட்டியும் வெங்காய அறுவடை செய்து வெற்றி கண்டுள்ளனர் (grow from scraps )..

தொட்டியில் வளர்க்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை .

தொட்டியின் /கன்டேய்னரின் ஆழம் 10-15 இன்ச் அளவு இருக்க வேண்டும் .
அகலம் எவ்வளவு இருந்தாலும் நல்லது ..ஆனால் வளரும் வெங்காயங்களுக்கு இடையில் குறைந்தது 4 இன்ச் இடைவெளி இருக்க வேண்டும் .

பிளாஸ்டிக் கண்டெய்னர் ,உறை ,சாக்கு பைகள் என்றால் கண்டிப்பாக அடிப்புறத்தில் துளைகள் நீர் வெளியேற வகை செய்ய வேண்டும் ..தொட்டி பைகளின் கீழ் நான்கு செங்கல் வைத்தால் நீர் வடிந்தோட வசதியாக இருக்கும் .
..
தொட்டிகளில் கம்போஸ்ட் தொழு உர மண் இட்டு நிரப்பி முற்றா வெங்காய பல்புகளை மேலாக நட்டு விட வேண்டும் குறைந்தது 7-8 மணிநேரம் சூரிய வெளிச்சம் தேவை .
தேங்காய் .கோகோ பீட் அதிக நீர் சேமிக்கும் குணமுள்ளது .

சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம் மட்டுமின்றி ..முளைத்த பூண்டு பற்களையும் தொட்டியில் நடலாம் ..பூண்டு இலைகளும் வெங்காய தாள்களை போல சமையலில் பயன்படுத்துகிறார்கள் .


அறுவடை ..வெங்காயம் நிலத்தில் இருந்து வெளியே தெரியுமாறு வளர்ந்து பெரிதாக இருக்கும் இலைகளும் காய துவங்கும் நேரம் அறுவடை செய்யலாம் .நல்ல தட்பவெப்பம் இருக்கும்போது 45 முதல் 60 நாளில் முற்றிய வெங்காயம் தயாராக இருக்கும் .

...................................................................................................................................................................


அன்புடன் ஏஞ்சலின் 


.

3/24/15

காதல் .....பதின்ம வயதில் ......(2)

பிறகு ஒரு நாள் எங்க ஏரியா கோவில் ஒன்றில் பார்த்தேன் அப்பையனுடன் நிறை மாத கர்ப்பிணியாய் ...ரம்யாவை ...நான் 12 வகுப்பு தேர்வு முடித்து ரிசல்டுக்கு காத்திருந்த நாட்கள் அது !   17 வயதுதான் எங்க மூவருக்கும் ..
...எனக்கு அவளை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை ..இப்போ ..நினைத்துபார்க்கிறேன் .எவ்வளவு கண்டிப்பு அவளது அம்மா ..ஒரு நாள் கெமிஸ்ட்ரி லாபில் சற்று தாமதமா வெளியே வந்தோம் //எங்கடி ஊர் மேஞ்சிட்டு வர //என்று அவ அம்மா கத்தினது இன்னும் காதில் ஒலிக்குது :
இன்னும் ரெண்டு மூணு வார்த்தை சேர்த்து வந்தது அதை பொதுவில் எழுத  முடியாது :(
ரம்யா தவறான பாதையில் சென்ற உடன் அன்பு காட்டி இன்னும் அரவணைப்பை தந்திருந்தா ஒரு வேளை அவசர முடிவு எடுத்திருக்க மாட்டாள் ..  
அன்பால் முடியாதது எதுவுமில்லை .....
.பல அவசர பதின்ம காதல்களுக்கு பெற்றோரின் பாராமுகம் ஒரு காரணம் ..நான் அவளது பெற்றோரை பற்றி கேள்விப்பட்டது மனதுக்கு துக்கமாக இருந்தது ,சிறு தவறுக்கும் வயது வந்த மகளை கைநீட்டி அடிப்பார்களாம் :(..

பெற்றோர் ஒரு விஷயம் கவனத்தில் கொள்ள வேண்டும் ..பிள்ளைகளுக்கு வெறுப்பு வந்தால் பெற்றோருக்கு பிடிக்காத விஷயத்தைதான் முதலில் செய்ய முற்படுவார்கள் ..
..


முந்தைய பதிவில் ப்ரியா சொல்லியிருந்தார்

 //சில பெற்றார்கள் பிள்ளைகள் சொல்ல வருவதை கேட்பதேயில்லை. அத்துடன் கொண்டாட்டங்கள் என வரும் போது பிள்ளைகளை அநேகம் வீட்டில் விட்டே வருகிறார்கள். இது தவறு என்றே நான் சொல்வேன். பிடிக்குதோ, பிடிக்கவில்லையோ அவர்களையும் அழைத்து வருதல் வேண்டும். //  100 % உண்மை எங்கள் நட்பு ஒருவர்  ஆலயத்துக்கு கூட பிள்ளைகளை அழைத்து வர மாட்டார் எந்நேரமும் பிள்ளைகள்  தனியா வீட்டில் கேம்ஸ் விளையாடும் ..தகப்பன் ஒரு நாள் கணினியை திறந்தா வயதுக்கு மீறிய விளையாட்டுக்கள் இருந்தனவாம் ..தகப்பன் அடித்த அடிக்கு பக்கத்து வீட்டினர்  போலிஸ் ஸ்டேஷனில் முறையிட்டு  பிள்ளைகளை காப்பகத்தில் சேர்த்து விட்டனர் .....

இன்னொரு தெரிந்த குடும்பம்..மனதுக்கு மிக பாரமானது அந்த பெண் பிள்ளை இப்போ  உயிருடன் இல்லை ..பெயர் தேவி :( என்னுடன் படித்தவள்தான் ..ஒருமுறை சொன்னாள் உங்க எல்லாருக்கும் நல்லபெற்றோரை கொடுத்திருக்கார் எனக்கு மட்டும் எதற்கு இப்படிப்பட்ட பெற்றோர் :(

தாய் தன்னை மட்டுமே கவனிக்கும் :( ராட்சஸி 
அந்த பேயின் வாயில் சனியன் தரித்திரம் ,முண்டம் இவைதான் அந்த பெண்ணை அழைக்கும் பெயர்கள் என்ன காரணம் தெரியுமா இவள் பிறக்குமுன் கோடீஸ்வராராக இருந்த தந்தை இவள் பிறந்தபின் வியாபார நஷ்டத்தால் நொடிந்தாராம் ..சரியான உணவு கூட தர மாட்டார்கள் என்பாள் .
இப்படியெல்லாம் நடக்குமா என்று யாரும் நினைக்க வேண்டாம் ..நமக்கு தெரியாத எத்தனையோ விஷயங்கள் நடக்குது ..புறக்கணிப்பு அதுவொன்றே 
இந்த பெண் வழிதவற காரணமாகியது ..இவள் மனது கலங்கிய நேரத்தில் ஆதரவு தர ஒரு தோள் தேவைபட்டிருக்கு ..18 வயதில் ..அவன் ஒரு சைக்கோ அவனுக்கு தேவை ஒரு அடிமை இவளை பாடாய் படுத்தியிருக்கான் ..தாங்கமுடியாமல் விஷமருந்தி செத்து போச்சு அந்த இளம் குருத்து ..
இதெல்லாம் இப்பவும் தொடருது ...என்ன ஒரு விஷயம் இப்போ அட்வான்ஸ்டா நிறைய தொழில்நுட்ப வளர்ச்சி  கணினி ,ஸ்கைப் ,கிக் ,வைபர் வாட்சாப் என்று முகமறியா நட்புக்களை ..பல அசிங்கங்களை அறியாமல் ஏற்கிறார்கள் பிள்ளைகள் .

இந்த இரண்டு பெண்களி ன் பெற்றோர் செய்த தவறு ..புறக்கணிப்பு ,எப்பவும் திட்டுவது ,அதுவும் நாலு பேர் முன்னிலையில் ,..
அன்பால் அரவணைத்திருந்தா இருவரும் ஒரு டாக்டராகவோ எஞ்சினியராகவோ ஆகியிருப்பாங்க :(

சென்ற பதிவில் சகோதரர் மதுரை தமிழனின் பின்னூட்டத்தை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும்


 //
குழந்தைகளுக்கு நமது அரவணைப்போடு அவர்களுக்கு கட்டுபாடு அற்ற சுதந்திரத்தை தரும் போது அவர்கள் அதை அதை கட்டுபாடுகளுடன் நடைமுறைப்படுத்தி கொள்வார்கள். அதே நேரத்தில் கட்டுபாடுகளை நாம் விதித்தால் அதை தாண்டி செல்லதான் அவர்கள் மனம் விழையும் என்பது உண்மை//

                                                                                         


குழந்தைகள் குறிப்பா பதின்ம வயது குழந்தைகள் மனம் மலரினும் மெல்லியது ..அவர்களை அன்பினால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் ..அடித்தோ ,வன்முறையாலோ எதையும் சாதிக்க முடியாது இளம் பருவத்தினரிடம் .

காதல் தவறில்லை ஆனால் முறையற்ற இளவயதில் எதிர் பாலினத்தின் மீது 
இனக்கவர்ச்சியால் வருவதையெல்லாம் காதல் என்று பிள்ளைகள் நினைக்க கூடாது ..இதை எழுதி கொண்டிருக்கும்போது ..இங்கே இங்கிலாந்தில் சென்ற வாரம் ஜாஸ்மின் கோல்மன் எனும் 12 வயது பெண் முகபுத்தக நட்பொன்றுடன் வீட்டை விட்டு ஓடியிருக்கு ..அந்த நட்பு ஒரு வயதான மனிதன் ..ஆனா போலிஸ் கிட்ட பிடிபட்டுவிட்டனர் ..பெற்றோர் கவனிப்பு இல்லையென்றால் இதுதான் நிலை ..

காதல் என்பது அழகான ஒரு விஷயம் ..உண்மையான அன்புக்கு பொறாமை கொள்ளதெரியாது ,வீட்டை விட்டு ஓடிவா என்று சொல்லாது ,அடிமைப்படுத்த தெரியாது ,மிரட்டதெரியாது ,ஆசைக்கு இணங்க வைக்க செய்யாது ,மதம் மாறு என்று கட்டளை விதிக்க தெரியாது ,
ஆனா இதெல்லாம் பதின்ம வயதில் காதல் வயப்பட்டவர்களுக்கு சுத்தமா தெரியவே தெரியாது புரியவும் புரியாது ..அந்த வயது அந்த வயதிற்குரிய ஒரு அவசரம் இது மட்டுமே பதின்ம காதலில் இருக்கும் :(

இரண்டு வயதோ இல்லை 18வயதோ அது குழந்தை உள்ளம் அன்புக்கு ஏங்கும் பருவம் அதற்கு எங்கு அன்பு கிடைக்குதோ அங்கே தஞ்சம் புகும் ..அந்த குழந்தை மனதுக்கு நல்லது கெட்டது தெரியாது .பெற்றோர் நமது கடமை அன்பால் அவர்களை வழிநடத்துவது .

முற்றும் .3/22/15

காதல் .....பதின்ம வயதில் தேவையா ?காதல் .....பதின்ம வயதில் தேவையா  ?


சகோதரர் துளசி ,மற்றும் கீதா அவர்களின் சமீபத்து பதிவில் படித்திருப்பீங்க ..
பரீட்சை கூட முடிவடையா நிலையில் அச்சிறுபெண்ணை காதலித்தவனுடன் ஓடவைத்தது எது ?
இயல்பாகவே 12 முதல் 20 வரை வாலிப வாசல் நுனியில்  நிற்கிற அவர்களுக்கு துணை என்கிற பெயரில் ஒருவர் அவசியம் என நினைக்கிறார்கள். அவர்கள் பார்க்கிற திரைப்படங்களும், அவர்களதுபிரிய சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கை முறையும் அதையே மேடை போட்டு காண்பிக்கின்றன..
இந்த இள  வயதில் வருவதுஜஸ்ட்infatuation ,இதெல்லாம் ஹார்மோன்களின் 
தூண்டலின் விளைவே தவிர வேறில்லை. இந்த உணர்வுகள் ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது  .ஆண்களுக்கு இந்தத் தூண்டுதல், எந்தவிதமான உணர்வுப் பிணைப்பும் இல்லாமல் செயல்படும்.ஆனால் வாலிப வயது பெண்களிடம் கொஞ்சம் இதன் சீற்றம் அதிகமாகவே இருக்கும் .....வயதுக்கு வந்ததும் தான் தனிமைபடுதத்தபட்டு விட்டதாகவும் ஒரு துணை! இன்றியமையாதது எனவும் சில பெண்குழந்தைகள் நினைக்கிறார்கள் ..பெற்றோர் அதிக நேரம் பதின்ம வயது பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட வேண்டும் ..இப்பெல்லாம் நம் நாட்டிலும் ,ஸ்மார்ட் போன் ,தனி ரூம் அதில் டிவி ,மினி FRIDGE என்ற  வாழ்க்கை முறை வந்தாச்சு ..உங்கள் மகனோ மகளோ யாருடன் நித்தம் உரையாடுகிறார்கள் என்பதை ..தாய்மாரே ..தொல்லைகாட்சி பெட்டியில் இருந்து வெளியே வந்து கவனியுங்கள் ..
அப்பாக்களே உங்கள் பிள்ளைகளுடன் குறைந்தது சிறிது தொலைவேனும் 
தினமும் வாக்கிங் செல்லுங்கள் ..உங்களுக்கு நிறைய புதிய விஷயங்களை பிள்ளைகள் அறியத்தருவார்கள் ..வெளிநாட்டில் வாழும் தகப்பனாக இருப்பின் ஸ்கைப்பில் தினமும் பிள்ளைகளுடன் உரையாடுங்கள் ..நாம் செய்ய வேண்டியவற்றை செய்வோம் அதையும் தாண்டி இனக்கவர்ச்சியால் தடம் மாறினால் /..........அன்புடன் பொறுமையாக எடுத்து கூறுங்கள் ,கல்வி வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை .காதல் எப்பவும் வரும் கல்வி முடித்து மன முதிர்ச்சிக்குபின் வருவதே நிலையான காதல் என்று விளக்குங்கள் .
மேலும் எல்லா சந்தேகமும் வரும் வயது டீனேஜ் ..அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தயங்காமல் பதில் கூறுங்கள் .including sex .
பிள்ளைகள் முன்பு கவனமுடன் இருங்கள் ..பெண் பிள்ளைகள் தாயுடன் உறங்க விரும்பினால் அவர்களுடன் உறங்குங்கள் ..பல வித உணர்சிகளின் குவியல் .அவர்கள் பயம் நீக்கி .பக்குவப்படுத்துங்கள் தன்னம்பிக்கையூட்டுங்கள் ..கலைகள் ,பொழுதுபோக்கு என பயனுள்ள விஷயங்களில் ஈடுபட வையுங்கள் ...தோட்டமிடல் ,மீன்வளர்த்தல் என சொல்லிகொடுங்கள் ..உங்க பிள்ளைகளின் நட்புக்களை மாதம் ஒரு முறை வீட்டிற்கு அழைத்து வர சொல்லுங்கள் ..நட்புக்களை அப்படியே மறைமுகமாக கண்காணிக்கவும் வசதியா இருக்கும் ..

இது போல வீட்டை விட்டு ஓடுவதெல்லாம் ஆங்காங்கு தினம் நடக்கும் நிகழ்வுதான் ..ஆனாலும் பெற்றோர் ஆகிய நாம் கொஞ்சம் கவனம் செலுத்தினா இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுக்கலாம் .......

நான் பத்தாம் வகுப்பு படித்தபோது ரம்யா  என்றொரு பெண் எங்க வகுப்பில் இருந்தாள் 6 முதல் 9 வகுப்பு வரை டாப் ரான்க் .10 ஆம் வகுப்பில் ஆரம்பித்தது இந்த காதல் ..பக்கத்து பள்ளி மாணவனுடன் ..படிப்பு அறிவு எல்லாம் இழந்தாள் .பணக்கார பெற்றோர் ..நகை கடை ஓனர் அவள் அப்பா ..இவள் விஷயம் அறிந்ததும் தினமும் அம்மா காலையும் மாலையும் பள்ளிக்கு உடன் எஸ்கார்ட் போல வருவார் ..அப்படியும் கண்ணில் மண் தூவி சந்தித்தார்கள் ..
உதவி அம்மாணவனின் தங்கை எங்கள் பள்ளியில் படிச்சா ..எதோ வேலையா வெளியே சென்ற ஒரு ஆசிரியை இக்காதலர்களை பார்க் ஒன்றில் பார்த்து தலைமை ஆசிரியை கிட்ட சொன்னதால் டிசி கொடுத்து அனுப்பிட்டாங்க .
அப்பெண்ணால் 12 ஆம் வகுப்பு பரீட்சை எழுத முடியல :( ...


பிறகு ஒரு நாள் எங்க ஏரியா கோவில் ஒன்றில் பார்த்தேன் அப்பையனுடன் நிறை மாத கர்ப்பிணியாய் ...ரம்யாவை ...நான் 12 வகுப்பு தேர்வு முடித்து ரிசல்டுக்கு காத்திருந்த நாட்கள் அது !   இன்னும் தொடரும் ..............
3/14/15

அன்னையர் தினம் !


தாயுள்ளம் கொண்ட அன்னையர் ,தந்தையர், மற்றும் அனைவருக்கும் குறிப்பாக ஐந்தறிவு செல்லங்களுக்கும் அன்னையர் தின நல்  வாழ்த்துக்கள் ..மார்ச் 15 ஐரோப்பாவில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது ..பூங் கொத்துக்களும் பரிசுகளும் பரபரப்பா விற்பனையாகும் .

ஒரு சம்பவம் எங்க வீட்டில் நான் ஸ்கூல் படிக்கும்போது நடந்தது .. ..எங்க வீடு பழங்கால திண்ணை ,தாழ்வார அமைப்பு ஒட்டு வீடு ..வெயில் காலத்தில் சிட்டுக்குருவிகள் வீட்டில் கூடு கட்டும் ..அம்மா ரொம்ப ஸ்ட்ரிக்ட் மின்விசிறி போட விடமாட்டாங்க ஸ்பெஷல் பெடஸ்டல் விசிறி மட்டுமே போடலாம்  ..இந்த கட்டுப்பாடு அவர்கள் சிறகு முளைத்து  பறந்து செல்லும்வரை நீடிக்கும் :)  ஒருநாள் இரவு உணவு சாப்பிட்டுகொண்டிருந்தோம் அம்மா சைகையால் அமைதியா இருக்க சொன்னாங்க ..மெதுவா திரும்பினால் இன்னோர் குடும்பம் :) தாய் எலி குட்டிகளை முதுகில் சுமந்து வெளியே கொண்டு போகுது !  எட்டுமுறை அது சென்று முடிக்கும் வரைக்கும் நாங்க அப்படியே இருந்தோம் :)  
இன்னொரு முறை சிறிய அணில் குட்டி கண் திறத்து கூட்டில் இருந்து விழுந்து விட்டது ..நாங்க விழுந்த குட்டியை எடுத்து ஒரு வெங்காய கூடையில் வைத்தோம் காலை முதல் அதன் தாய் உணவு சாப்பிடாம சன்னலருகே அலைந்தவாறு இருந்தது மாலை இருட்டினதும் கூடையை சன்னலருகில் திறந்து வச்சோம் ..வாயால் கவ்வி நன்றியுடன் பார்த்து சென்றது ..தாய்மை உணர்வு எல்லா உயிர் களுக்கும் சொந்தமானது !..

 ஒரு பாலகுமாரன் நாவல் தாயுமானவன் அதில் பரமு என்ற காரக்டர் வரும் ..மனைவி வேலைக்கு சென்ற நேரம் பள்ளியில் இருந்து அழைப்பு வரும் மகள் பூப்பெய்தி விட்டாலென தகப்பன் மகளை வீட்டுக்கு அழைத்து வருவார் அப்போ யோசிச்சேன் இதெல்லாம் சும்மா கற்பனை என்று பிறகு சில வருடமுன் நிஜத்தில் நிறைய பரமுக்கள் இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன் ...குஜராத்தி நண்பி ஒருவர் ஊரில் பராலிசிஸ் ஆன அப்பாவை கவனிக்க வங்கி வேலையை விட்டு ஊரில் சென்று இருந்தார் ..அவர் தாய் முகம் இவர் கண்டதில்ல .தாயுமானவனாக தந்தை வளர்த்து வெளி நாட்டில் மணமுடித்து அனுப்பினாராம் ..திடீரென வலிப்பு வந்தவர் படுக்கையில் விழ மகள் 2!/2 வருடம் இந்தியா சென்று கவனித்துள்ளார் ..
பெண்ணா பிறந்தா பிரசவ வலி மட்டுமில்லை  எண்ணிலடங்கா வலிகள்  சாகும்வரை ஒரு தாய் அன்பை பொழியும் தெய்வம் அந்த தெய்வத்த போற்றி பாதுகாக்கணும் ..
http://samaiyalattakaasam.blogspot.com/2011/05/blog-post.html

அன்பு சகோதரி ஜலீலா அழகா சொல்றாங்க அவங்க பதிவ கண்டிப்பா வாசிங்க 


********************************************************************************

தலைபிரட்டைகளை காக்கும் தாயுமானவன் 
dedicated to chellams :)********************************************************************************

3/4/15

மைக்ரோ பீட்ஸ் எனும் நுண்ணிய நெகிழி மணிகளும் சுற்று சூழலும்...

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் ,தேநீர் கோப்பைகள் ,மற்றும் பிளாஸ்டிக்கில் தயாரிப்புகள் அனைத்தும் முறையே குப்பைக்கோ  அல்லது மறு சுழற்சி மையதிற்க்கோ செல்கின்றனவா ?  இல்லையே அப்படி செய்யபட்டால் நீர் நிலைகள் கடல் எங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் இராதே  ..ஆண்டுதோறும் சுமார் //6.4 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கடலில் சேர்கிறதாம் ..   :( 


https://www.youtube.com/watch?v=XPrWV8D4joE


மைக்ரோ பீட்ஸ் எனும் நுண்ணிய plasticதுகள்கள் நமது சூழலைபெரும்பாதிப்புக்குள்ளாக்குகின்றன ..


இவற்றின் அளவு 10 um to 1000 um (0.5mm-1mm).நுண்ணோக்கியால் கூட பார்க்க முடியாது இவற்றை ..
இவை கழிவு நீர் சுத்திகரிக்கும் மையங்களிலுள்ள வடிகட்டிகளின் துளைகளை விட சிறியவை ஆகவே அங்கிருந்து வெளியேறி கடலை அடைகின்றன இந்த ஒரு துகள் உப்புஅளவே உள்ள நுண் நெகிழி மணிகள் .
நாம் அனு தினமும் பயன்படுத்தும் பற்பசை,முக அழகு சாதனபொருட்கள் போன்றவற்றில் இந்த மைக்ரோ மணிகள் அதிகம் உள்ளனவாம் ..கலிபோர்னியா மாநில நீதிமன்றத்தில் முக அழகு பொருட்களில் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் சேர்க்க தடை விதிக்க மனு கொடுத்துள்ளனர் சுற்று சூழல் ஆர்வலர்கள் .பின்னே ?பல் தேய்த்து முகம் கழுவிய அழுக்கு நீர் கழிவு நீர் சுத்திகரிப்புக்கு சென்று சல்லடை வழியே தப்பி கடலை அடைகிறதே !உணவு சங்கிலி என்று ஒன்றுண்டு நீரிலுள்ள பிளாஸ்டிக் மணிகள் கடலுக்கு சென்று மீன் உணவின் வழியே நமது உணவு மேசைக்கே வருவதை தடுக்கவே இத்தடை .Procter & Gamble நிறுவன தயாரிப்பு crest பற்பசையில் மைக்ரோ பீட்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது இந்த நுன்மணிகள் பல் துலக்கும்போது பல் இடுக்கு மற்றும் முரசுகளில் மாட்டிக்கொண்டு பல் இடுக்குகளில் தொற்று கிருமிகள் ஏற்பட வழி வகுக்கின்றன என்று பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள் ..
முகத்தின் துவாரங்களிலுள்ள அழுக்கை மற்றும் மடிந்த திசுக்களை சுத்தப்படுத்த ஸ்க்ரப் (SCRUB )பயன்படுத்துகிறார்கள் அதிலும் இந்த நுண் நெகிழி மணிகள் சேர்க்கப்பட்டுள்ளன .. .ஒரு ஆறுதலான விஷயம் Procter & Gamble ,unilever ,johnson & johnson போன்ற நிறுவனங்கள் 2019 ஆண்டுக்குள் பிளாஸ்டிக் மைக்ரோ பீட்சை அன்றாட பயன்பாட்டு அத்யாவசிய பொருட்களில் சேர்ப்பதை தவிர்க்க போவதாக செய்திகள் கூறுகின்றன ..
.ஏற்கனவே தலேட்ஸ் தீமைகள் பற்றி முன்பு பார்த்தோம்
PHTHALATE /தலேட் ..தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் பிளாஸ்டிக் ,உபயோகபொருட்கள் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது.குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்கள் , ஸ்பூன்கள் அனைத்திலும் காணப்படும் முக்கியமான பிளாஸ்டிக் உட்பொருள் Bisphenol A (BPA) என்ற ஒன்று. உடலில் சுரக்கும் Estrogen Hormone என்ற மிக முக்கியமான சுரப்பியை போன்றே இதுவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. அதாவது மிமிக்ரி செய்யும் .(Estrogen Hormone என்ற சுரப்பிகள் எலும்பு வளர்ச்சி, இதய ஆரோக்கியம், பாலியல் வளர்ச்சி, கருத்தறிப்பது முதற்கொண்ட பல வேலைகளை நம் உடலில் செய்கின்றன.)BPA எனப்படும் பிளாஸ்டிக் உட்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் போன பின் உடலோடு கலந்து எங்கெல்லாம் Estrogen Hormone செயல்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிக்கலை உண்டாக்குகின்றது. இதனால் உடலில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின்றன . மார்பகப் புற்றுநோய் ,ஆண்களில் prostate புற்றுநோய் பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறை,மலட்டுத்தன்மை...இப்படி பல கூறிக்கொண்டே போகலாம் !ஒரு ஸ்மார்ட் போன் app வந்திருக்காம் 

//The International smartphone App// இதை தரவிறக்கி பொருட்களின் லேபிளை ஸ்கான் செய்தா காட்டுமாம் இப்படி

// Red: This product contains microbeads;
Orange: This product still contains microbeads, but the manufacturer has indicated it will replace in a given timeframe or adapt the product accordingly;

Green: This product is free from plastic microbeads///  

ஆகவே அன்றாடம் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை வாங்கும்போது லேபிளில் //microbeads," "polyethelene," or "polypropylene" //இருந்தால் தவிர்க்கவும் ..


படங்கள் கூகிள் 
தகவல் இணையம் ..

(இது பசுமை விடியலில் எழுதிய விழிப்புணர்வு பதிவு )


ஏஞ்சலின் ..


3/2/15

Loud speaker ...17

வணக்கம் நட்புக்களே 
இன்றைய ஒலிபெருக்கியில் ,மருத்துவமனைக்கு விஜயம் புரிந்த 
சூப்பர் ஹீரோஸ் :) மற்றும் சர்வீஸ் dog ஜார்ஜ் ,ஓநாயும் கழுதையும் ,
bubby everson ,மற்றும் க்வில்லிங் ...


சூப்பர் ஹீரோஸ் !!


இவர்கள் சினிமா நடிகர்களில்லை ..ஆனால் ஒருநாள் ஹீரோக்களாக இருந்தாலும் இவர்களது மனசுக்கு கையெடுத்து கும்பிடனும் .
அமெரிக்காவில் mayo மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல்களை அன்றாடம் துடைத்து துப்புரவு செய்யும் பணியாளர்கள் மூவர் மருத்துவமனையின் சிறுவர் பகுதி நோயாளிகள் பிரிவிற்கு ஒரு நாள் batman ,சூப்பர்மேன் மற்றும் ஸ்பைடர் மேன்களாக தங்களை மாற்றி அங்குள்ள குழந்தைகளை சந்தோஷப்படுத்தி உள்ளார்கள் .பத்து வயதுக்கு கீழுள்ள பிள்ளைகளுக்கு இந்த கார்ட்டூன் காரக்டர்ஸ் ஆஸ்தான ஹீரோஸ் :) 
அன்றைய நாளில் மிகவும் சுகவீனமாக இருந்த சிறு பிள்ளை கூட மிகவும் சந்தோஷமாக இருந்ததாம் .

பின்னே நிஜ ஸ்பைடர்மேன் போல கயிறு கட்டி தொங்கி சுவறேரும்சாகசத்தை நேரில் காண்பது இச்சிருவர் சிறுமியருக்கு ஆனந்தம்தானே :)
அன்று நிஜ ஸ்பைடர் மேன் என்று நினைத்து தங்கள் நோய் விவரமெல்லாம் சொல்லி ஆட்டோகிராப்பும் வாங்கியுள்ளார்கள் குழந்தைகள்.!


http://www.myfoxboston.com/clip/11179838/dog-helps-child-with-rare-disease-walkஅடுத்த செய்தி இதுவும் அமெரிக்க செய்தி 
அபூர்வ நோய்கள் !!எனப்படும் rare disease நாளன்று தொலைகாட்சியில் ஒளிபரப்பினார்கள் Morquio Type A எனும் ஒரு வகை நோயினால் 
பாதிக்கப்பட்டுள்ள பெல்லா என்ற பத்து வயது சிறுமிக்கு உதவும் ஜார்ஜ் என்ற கிரேட்டேன் வகை செர்வீஸ் செல்லம் :)
கிரேட் டேன் வகை நாலுகாலார்கள்  மிக உயரமானவை கன்றுகுட்டி அளவுக்கு உயரம் அதேபோன்ற பாசமான குணமுடையவை ..
சாரு கூட கூட்டிக்கிட்டு வாக் போவாரே அந்த வகை தான் கிரேட் டேன் .
..


Morquio Type A வகை நோய் ஒரு அபூர்வமான நோய் உலகம் முழுதும் சுமார் 3000
பேர்கள் இந்நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார்கள் .இன்னும் முறையான சிகிச்சை இதற்க்கு கண்டுபிடிக்கவில்லை ஆனால் ஒரு மருந்து நோயின் தீவிரத்தை குறைக்க மட்டும் இப்போ பயன்பாட்டில் உள்ளதாம் .
உடலில் ஒரு குறிப்பிட்டவகை என்சைம் குறைபாட்டினால் இநோய் ஏற்படுகிறதாம் ..பிறக்கும்போது பிற குழந்தைகளைப்போல இருக்கும் பிள்ளைகள் நாளாக இரண்டு வயது அடையும்போது நோய் தீவிரமடையும் 
எலும்பு வளர்ச்சியின்மை ,உடலில் வலிகள் பார்வை குறைவு ,நடக்க முடியாத தன்மை .இவர்கள் பெரும்பாலும் சக்கர நாற்காலியில் இருப்பார்கள் .
பெல்லாவுக்கு பிற பிள்ளைகளைப்போல  நடக்க ஆசை .அவளுக்கு இந்த சர்வீஸ் செல்லம் சில வாரங்கள் முன்பு அளிக்கப்பட்டதாம் ,இச்சிறுமி விழுந்தாலும் உடனே தாங்க துணை புரிகிறதாம் ஜார்ஜ் .

நான் சமீபத்தில் செய்த இரண்டு quilled வாழ்த்து அட்டைகள் முகபுத்தகத்தில் மருத்துவமனையில் உள்ள பிள்ளைகளுக்கு அனுப்ப சொல்லி நட்பு ஒருவர் கேட்டிருந்தார் இருவரும் இரண்டு வயது பிள்ளைகள் 
வாழ்க்கை முழுதும் மருத்துவமனை ..அவர்கள் பிரியமான கார்ட்டூன் காரக்டர் இந்த dave எனும் கார்ட்டூன் மற்றும் பச்சை கார் .செய்து அனுப்பி விட்டேன் .
one of the most funny characters of Despicable Me 

Dave the Minion :)
மனிதன் குணம் மட்டும் (சில மனிதரின் )மாறவே மாறாதோ !
சந்தர்ப்பம் எதிர்பார்த்து காலை வாரும் சுயநலமனிதர் மத்தியில் இந்த இரண்டு ஐந்தறிவு ஜீவன்களை பாருங்கள் ..இது அல்பானியா நாட்டில் .
பெட்டிஷன்கள் எழுதுவதால் அரசுக்கு கடிதம் எழுதுவதால் பயனில்லை என்று முடங்க வேண்டாம் சிலரின் பெட்டிஷனால் விளைந்த நன்மை பற்றிய சம்பவம் இது .//autism, cerebral palsy, epilepsy, deafness, vision impairment and has the mental ability of a child half his age//இந்த சிறுவனது பிறந்தநாள் ஆசை .தனது பிறந்தநாளுக்கு அனைவரும் தனக்கு லெட்டர்ஸ் கார்ட்ஸ் அனுப்பனும்னு கேட்டிருக்கான் .
யாஹூ வில் பார்த்ததும் இருந்த ஒரு கார்ட் மற்றும் சில ஸ்டிக்கர்களை போட்டு அனுப்பி விட்டேன் ..சிறு சந்தோசம் கிட்டட்டும் அக்குழந்தைக்கு .
உலகெங்குமிருந்து இவன் ஆசைபட்டமாதிரி கணக்கிலடங்கா வாழ்த்து அட்டைகள் குவிந்ததாம் பப்பிக்கு ..
இன்னும் மனிதம் வாழ்கிறது ..
மீண்டும் சந்திப்போம் ..
அன்புடன் ஏஞ்சல் ..