அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/4/15

Loud speaker 16..மன அழுத்தம் /stress

இன்றைய ஒலிபெருக்கியில் மன அழுத்தம்  /stress , தொடர்பான சில செய்திகள் பார்ப்போம் ..
இப்போ எங்கே பார்த்தாலும் யோகா ,சிரிப்பு தெரப்பி ,நடை பயிற்சி மூச்சு பயிற்சி இன்னும் கேள்விப்படாத என்னென்னமோ சொல்றாங்க ..
நர்சரி போறதெல்லாம் கூட ஸ்ட்ரெஸ் பற்றி பேசுது எங்கே போகுது
உலகம் ?எங்கும் போட்டி எதிலும் முதலிடம் வேணும், ஈகோ ,தோல்வியை ஏற்றுகொள்ளாத மனப்பான்மை எக்ஸட்ரா எக்ஸட்ரா இவையும் மன அழுத்தத்துக்கு காரணங்கள்Kathy Gruver, Ph.D.இவர் இந்த துறையில் ஆராய்ச்சி செய்து சில விஷயங்களை 
பின்பற்றினால் மன அழுத்தம் ஏற்படாது என்கிறார் .

செய்யவேண்டியது .....மனசை மாத்தி யோசிக்க சொல்கிறார் .கடந்துபோன கெட்ட சம்பவங்களை நினைக்கவே கூடாதாம் ..கோபப்படவே கூடாதாம் !அதெல்லாம் எப்படி :)எங்களுக்கு எவ்ளோ கட்ட பஞ்சாயத்து இருக்கு யாராவது ஒரு புக் எழுதினா இல்லை என் மதத்தை பற்றி எழுதினா ,என் பிரிய நடிகரை அல்லது நடிகை அல்லது விளையாட்டு வீரரை பற்றி எழுதினா அதுக்கு போராடனும் ,வார்த்தையால் அடிதடி நடத்தணும் நாலு பேரை உசுப்பி விடனும் ..எவ்ளோ தைரியம் என் சமூகத்தை ,என் தெருவை என் வீட்டு ஜன்னலைஎன் இரத்தத்தின் ரத்தத்தை தலைவரை  பற்றி எழுதலாம் ,போராட்டம் கூப்பாடு !!ஹைய்யோ :)இதெல்லாம் ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன் ..யாரும் டென்ஷன் ஆகாதீங்க :) நாம் கொஞ்சமேனும் சிந்திக்கணும் இப்படி உணர்ச்சிவசப்படுவதால் நமக்கும் உடல்நலன் கேடு

எதிராளிக்கும் உடல் நலன் கேடு ..அறிந்தோ அறியாமலோ யார் மனதையும் நம் செயல்களால் துன்புறுத்த வேண்டாம் ..நாம கடைக்குபோறோம் அங்கே பல காய்கறிகள் இருக்கு நமக்கு எது தேவையோ அத மட்டும் தேர்வு செய்து வாங்கி வருவோம் வாங்காத பொருள் பற்றி ஆராய்ச்சி எதற்கு ?நமக்கு சரி என படுவது பிறருக்கு தவறாக இருக்கலாம் .நமது ஆசையை நமது விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பது தவறு.  fullllllll stop :)
அடுத்தது மன உளைச்சலை குறைக்க /வராமலிருக்க
அப்பப்போ மெடிடெஷனும் செய்ய வேண்டுமாம் ..
2,Scenario Thinking

                                                                            


இது எதிர்மறை எண்ணங்கள் ..அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பரீட்சையில் பாஸ் பண்ணுவோமா இல்லையா என்று  இப்பவே யோசிச்சு குழம்பி டிப்ரஷனில் வீழ்வது ..இது இங்கே பள்ளி கல்லூரிகளில் அதிகம் காணப்படும் ஒரு பிரச்சினை .டெர்ம் இறுதியில் அதிக அளவு மாணவர்கள் பல பல்கலை கழகங்களில் எப்படி காணப்பட்டார்கலாம் 
தெரியுமா ..சிலர் தலையை சுவற்றில் ,கணினி திரையில் ,மேசையில் முட்டி கொண்டார்களாம் ,சுயநினைவை இழந்த மறதி எனும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பயந்த நிறுவனங்கள் மாணவர்களுக்கு இலவச மசாஜ் ,யோகா ,சிறந்த உணவு என் பல வழிகளை பரிந்துரைத்தார்கள் 
ஆனாலும் பயன் இல்லை இறுதியில் //
Canine Assistants, an Alpharetta, Georgia-based nonprofit group, brings therapy dogs-in-training to help Emory University students with finals stress.//

பல்கலை கழக வளாகத்துக்கு தேர்வுக்கு முந்தைய வாரங்களில் தினமும் சில மணிநேரம் இந்த தெரப்பி நாலு கால் வாலர்கள் அழைத்து வரப்பட்டு 
மாணவர்களுடன் இருந்து சென்றார்கள் ..இதன் விளைவு மாணவர்கள் முகங்களை நீங்களே பாருங்கள் இப்புகைபடத்தில் :)

                                                                                     
                                                                                                     
ஒரு சிலர் தங்களது அழுத்தத்துக்கு தீர்வாக நினைப்பது எதை தெரியுமா 
பிறரை துன்புறுத்துவது ..இது மிக மோசமான குணம் .
சமீபத்தில் ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்தேன் THE HELP .எளிய கறுப்பின பணிப்பெண்களை வெள்ளை இனத்து பெண்கள் சிலர் மிக மோசமாக நடத்துவார்கள் ..படத்தை பார்க்க மனது வலித்தது 


தி ஹெல்ப் என்பது 2011-ஆம் ஆண்டில் வெளியான ஆங்கிலத் திரைப்படம். இது கேத்ரின் ஸ்டாக்கெட் எழுதிய தி ஹெல்ப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. அந்த நூலின் ஆசிரியையின் தோழராக இருந்த டேட் டெய்லர், இதன் இயக்குனர் .

ஸ்கீட்டர் பிலன் என்ற ஆங்கிலேயப் பெண்ணுக்கு, அவளுடனான இரண்டு ஆப்பிரிக்க வேலைக்காரப் பெண்களுக்குமான தொடர்பைப் பற்றிய கதை. அந்த இரு பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை கதையாக எழுத நினைக்கிறாள், ஊடகவியலாளராகிய வெள்ளைக்காரப் பெண்மணி.

இந்த கதை அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பியில் படமாக்கப்பட்டது. எம்மா ஸ்டோன், வியோலா டேவிஸ், ஆக்டேவியா ஸ்பென்சர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். சிறந்த துணை நடிகை, சிறந்த படப்பிடிப்பு, சிறந்த நடிகை ஆகிய விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றது. இது 2012 ஆம் ஆண்டிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதைப் பெற்றது

முழு படத்தின் லிங்க் கிடைக்கவில்லை ஒரு காட்சி பாருங்கள் இந்த கானொளியில் ..பணிப்பெண் ..எப்பவும் கறுப்பினத்தவரை கேவலமாக நடத்தும் வீட்டு எஜமானியை பார்த்து ஒரு கேள்வி கேட்பார்

/ain't you tired ???


நெட்டில் சில புகைப்படங்களை தேடினபோது மனதை பாதித்த படம் இது

A girl who grew up in a concentration camp draws a picture of “Home” while living in a residence for disturbed children. Poland, 1948.

                                                                                             


ABSTRACT ஆர்ட் என்பது பல விஷயங்களை சொல்லாமல் சொல்லும் ஒரு வகை படங்கள் வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவது.

இப்படத்தில் இந்த சிறுமியை ஹோம் /வீடு வரைய சொன்னபோது அவள் மனதில் இருந்த வீடு இதுவே .எனக்கு தெரிந்த நண்பியின் மகன். மிக நல்ல குடும்பம் ,அப்பிள்ளையும் நன்கு படிக்கும் ஒரு சிறுவன் .செகண்டரி ஸ்கூலில்
இவனை மிகவும் துன்புறுத்தி உள்ளார்கள் பிற மாணவர்கள் .இச்சிறுவன் மிக அமைதி ஆகவே அவனை GAY என்று கிண்டல் செய்துள்ளார்கள் .மகளும் அதே பள்ளியில் படிப்பதால் எனக்கு விவரம் வந்துவிட்டது .ஒரு நாள் அந்த தாயிடம் பேசினேன் ..தாய் சொன்னார் மகன் படிப்பதில்லை எந்நேரமும் கேம்ஸ் கணினி விளையாட்டு என தனித்திருக்க விருப்பம் பிறகு ஓவியமாக வரைகிறான் ஆனால் யாருக்கும் காட்டுவதில்லை ..நான் அவனுக்கு தெரியாமல் ஓவிய நோட்டை கொண்டு வர சொன்னேன் தாயிடம் ..பார்த்த எனக்கு அதிர்ச்சி ஒரு வட்டம் அதை சுற்றி வெறும் கீறல் சுற்றி சுற்றி  ..இது கூகிள் படம் ..


..அதிக குழப்ப மனதில் இருப்பவர்கள் கிறுக்கிகிருக்கி வைப்பார்கள் இப்படிதான் ..உடனே தாயை அவனது ஆசிரியருடன் தொடர்பு கொள்ள வைத்தேன் .ஆசிரியை சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்தார் .
BULLY எனும் ராகிங் பிரச்சினை தான் இம்மாணவனுக்கு ஏற்பட்டிருந்தது .
இப்போ யாரும் அவனை கேலி செய்வதில்லை .மாணவனும் நன்கு படிக்கிறானாம் ......
மன அழுத்தம் அனைவருக்குமே ஏற்படும் ஒன்று அதை வளர விடாமல் தடுக்கணும் தோட்டமிடல் இயற்கையை ரசித்தல் ,நல்லவற்றை மட்டும் நினைத்து பார்த்தல் என மனதை திசை திருப்பவேண்டும் ..
தோட்டம் போடுவதும் மிக நல்ல பயனுள்ள பொழுதுபோக்கு
தோழி கௌசல்யா இங்கே மிக அழகாக வீட்டு தோட்டம் அமைத்தல் பற்றி
கூறுகிறார் படித்து பயன் அடையுங்கள் .

http://www.kousalyaraj.com/2015/01/4.html#.VNI2CdKsWuI

மற்றும் சகோதரர் சிவாவின் பதிவும் உங்களுக்கு பிடிக்கும்

தோட்டத்துக்கு வரும் சிறு விருந்தாளிகளுக்கும் அன்பு பாராட்டுவது பெரிய விஷயம் ..இயன்றவரை நம்மாலான உதவிகளை சிற்றுயிர்களுக்கு செய்வோம் ..நானும் இம்முறை தோட்டத்தில் பறவை உணவு ,சூப்பர் மார்க்கட் பழங்கள் என தினமும் வைக்கிறேன் அணில்களுக்கும் பறவைகளுக்கும்
அதிகாலை அவை நேரே எங்க தோட்டத்தை தேடி வரும் காட்சி கண்கொள்ளா காட்சி .ராபின் பறவை ,மற்றும் நிறை பறவைகள் வந்து விருந்துண்டு செல்கின்றன ..மனதுக்கும் சந்தோஷம் ...மொபைல் போனில் என்னால் படமெடுக்க முடியவில்லை :) அவர்களை டிஸ்டர்ப் செய்ய விருப்பமுமில்லை .
ஆனால் தினமும் தோட்டத்துக்கு அவர்களின் வருகை மிக சந்தோஷமா இருக்கு எனக்கு ...


(/மன அழுத்தம் பற்றி நான் எழுத முக்கிய காரணம் இந்த 
பதிவு http://tamilmottu.blogspot.com/2015/02/blog-post.html
மன அழுத்தம் ஏற்பட்டால் இவர்களது நிலை ?/)


அன்புடன் ஏஞ்சலின் ..


16 comments:

 1. நல்ல கருத்துக்கள்..

  இயற்கையோடு இணைந்திருந்த வரைக்கும் இதைப் போன்ற இன்னல்கள் ஏதும் இல்லை!..

  இயற்கையோடு இணைந்திருந்தால் இதைப்போல் இன்னல் வருவதற்கு வாய்ப்பும் இல்லை!..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அய்யா .மிக சரியா சொன்னீங்க ..முந்தய காலத்தில் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த நம்ம தாத்தா பாட்டிக்கு இந்த மன அழுத்தமெல்லாம் இல்லவேயில்லை

   Delete
 2. மன அழுத்தம் /stress பற்றி மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. அழகாக அனைத்தையும் சொல்லி, செய்திகளைத் திரட்டிக் கோர்வையாகக் கொடுத்துள்ளீர்கள். மனதைக் கலங்கச்செய்யும் காணொளி உள்பட அனைத்தும் அருமை. மனதை திசை திருப்ப கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளும் பயனுள்ளவைகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா :) நீங்க ஜன்னல் வழியே தினமும் கடவுளுடன் பேசறீங்க ..மலை பிள்ளையாரைதான் தான் சொன்னேன் எப்பவும் அனைவரையும் ஹாப்பியாகவே வைக்கறீங்க
   இதி போதும் அண்ணா உங்களுக்கெல்லாம் ஸ்ட்ரெஸ் வரவே வராது பிள்ளையார் உங்களை கண் சிமிட்டி பார்த்துகொண்டிருக்கும்போது என்ன கவலை ..
   அந்த படம் மனதை அழுத்தியது அண்ணா .கறுப்பின மக்கள் எவ்வளவு பாவம் .

   Delete
 3. அருமையான பதிவு. ஐந்தறிவு ஜீவன்கள் ஆறறிவின் குழப்ப மயக்கத்தை எப்படி ரிலீவ் செய்கின்றன என்பது அனுபவபூர்வமான உண்மை. சிலருக்குப் பாட்டு கேட்பது பிடிக்கும். சிலருக்குப் புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். சிலருக்கு தோட்ட வேலை, சிலருக்கு சமையல் வேலை..

  அவரவர்களின் வேலைப்பளுக்களுக்கு நடுவில் தங்களின் இஷ்டமான இந்த பொழுது போக்குகளுக்கு நேரம் ஒதுக்காமல் இருந்து விடுகிறார்கள். பிடித்த வேலைகளுக்கும் நேரம் ஒதுக்கி, குடும்ப உறுப்பினர்களுடன் மனம் விட்டுப் பேசி வந்தால் ஸ்ட்ரெஸ் ஓடிவிடாதா என்ன?

  ReplyDelete
  Replies
  1. மிக சரியாக சொன்னீங்க .நான் என் மகளுடன் அடிக்கடி வாக்கிங் செல்வேன் ..தானக மனதில் உள்ளவற்றை குழந்தை கொட்டிவிடுவாள் ..அப்படி கண்டுபிடித்ததுதான் இந்த பள்ளி சம்பவம் .
   எங்க வீட்ல ஜெஸ்ஸி ஸ்ட்ரெஸ் ரிலீவர் :) பூனைகள் நம் மடியில் அமர்ந்தால் ஸ்ட்ரெஸ் ஓடிபோகுமாம் ..நாலு கால் செல்லம்ஸ் எப்பவும் கிரேட்

   Delete
  2. எனது பெற்றோர் இருவரும் புற்றுநோயால் இறந்தபோது எனக்கு இங்கே HOSPICE இல் இருந்து சொன்ன அறிவுரை இதுதான் ..மனதை கிராப்ட் இல் செலுத்து பாடல் கேள் ..நல்லவற்றை மட்டுமே நினை

   Delete
 4. விழிப்புணர்வு செய்தி ....இப்பொழுது குழந்தைகள் STRESS ஆல் மிகவும் அதிகமாக பதிப்பு அடைகிறார்கள் ...நாம் தான் மிகவும் விழீப்போடு இருக்க வேண்டும் ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு ..பேரன்ட்ஸ் பிள்லைங்களுடன் தனியே நேரதை கழிக்கணும் என் மகள் என்னுடன் வாரம் ஒருமுறை வாக்கிங் செல்வாள் . ஸ்ட்ரெஸ் படிப்பு சூழல் என பல காரணங்களாலும் ஏற்படுது

   Delete
 5. இக்காலகட்டத்திற்கு தேவையான பதிவு. இவ்வார்த்தையை சொல்லாதவங்க மிகச்சிலரே. மாணவனுக்கு தக்க சமயத்தில் கண்டுபிடித்து தீர்வு கண்டதால் சரியாகிவிட்டது. இல்லாவிட்டால் விளைவு விபரீதமாகி இருக்கும். மன அழுத்தத்தால் சிலதுங்க உயிரையே விடுகிறார்கள். நல்ல தொகுப்பு. நல்ல தீர்வுகளை பகிர்ந்திருக்கிறீங்க அஞ்சு.
  எங்க வீட்டுக்கும் குருவிகள் வருகிறார்கள்.அதுவும் குளிர் நேரம்.உணவும் சரியான முறையில் கிடைக்காது. நானும் பார்த்து ரசிப்பதோடு சரி. படமெடுக்க முயற்சிக்கவில்லை. பகிர்வுக்கு நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ..இங்கே அதிகமான சம்பவங்கள் இப்படி நடக்குது ..இந்த பையன் குடும்பம் எனக்கு மிகவும் உதவி .ஸ்கூலில் அவனை எல்லாரும் ஷாரனின் தம்பியா என கேப்பாங்களாம் .
   இன்னொசன்ட் பிள்ளை .இப்போ நல்ல டாப் ரான்க் எடுக்கிறானாம் .
   அவன் குடும்பத்தில் அவன் முதல் ஆண்பிள்ளை அவனுடன் பிறந்த தங்கைகள் 4 அதனால் இவன் முரட்டுசுபாவமில்லாம வளர்ந்துவிட்டான்.

   Delete
 6. மிக மிக அருமையான பதிவு சகோதரி!

  நாம் கொஞ்சமேனும் சிந்திக்கணும் இப்படி உணர்ச்சிவசப்படுவதால் நமக்கும் உடல்நலன் கேடு
  எதிராளிக்கும் உடல் நலன் கேடு ..அறிந்தோ அறியாமலோ யார் மனதையும் நம் செயல்களால் துன்புறுத்த வேண்டாம் ..நாம கடைக்குபோறோம் அங்கே பல காய்கறிகள் இருக்கு நமக்கு எது தேவையோ அத மட்டும் தேர்வு செய்து வாங்கி வருவோம் வாங்காத பொருள் பற்றி ஆராய்ச்சி எதற்கு ?நமக்கு சரி என படுவது பிறருக்கு தவறாக இருக்கலாம் .நமது ஆசையை நமது விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பது தவறு.// மிக மிகச் சரியே! இது மிகவும் மன அழுத்தத்திற்குக் காரணமாகின்றது.

  மன அழுத்தத்தை ஒருவர் வரையும் படங்களிலிருந்து கண்டுபிடிக்கலாம். அதை பல சைக்காலஜிஸ்ட்ஸ் செய்கின்றார்கள். சைக்கியாட்ரிஸ்ட் சிலரே செய்கின்றனர். நீங்கள் தக்க சமயத்தில் அந்த மாணவனின் மனதை அறிந்து நடவடிக்கை எடுக்க வைத்ததற்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  ஆம் ஆறறிவை விட ஐந்தறிவு ஜீவன்கள் மன அழுத்தத்திற்கு மிக நல்ல டாக்டர்கள். ப்ளூக்ராஸ் இது போன்று நம் நான்கு கால் நண்பர்களை அனுப்புவதுண்டு. டாக்டர்ஸ் என்று பெயர் அவைகளுக்கு. தோட்டக்கலையும் மிகவும் நல்லது நீங்கள் சொல்லி இருப்பது. சிலருக்கு வரைதல், கேம்ஸ், பயணங்கள், நம்மை நமக்குப் பிடித்ததில் பிசியாக வைத்திருத்தல், தியானம், இறைவனிடம் பேசுவது போன்ற ஆழ்ந்த பிரார்த்தனை என்று ஏதோ ஒரு வகையில் மனதைத் திசை திருப்புவது மிக நல்லது.

  காணொளி மனதைக் கலக்கியது.

  தமிழ்மொட்டு அந்தக் கட்டுரையைப் படித்தோம் சகோதரி!

  மிக மிக நல்ல ஒரு பதிவு! மனமுவந்து பாராட்டுகின்றோம்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அண்ணா ./சகோதரி கீதா ..
   இந்த பள்ளி சம்பவங்கள் இங்கே ரொம்ப நடக்குது ..நம்ம நாட்டில் கல்லூர்ரிலதான் நடக்கும் இங்கே செகண்டரி பள்ளிகளில் ஆரம்பிக்கறாங்க இந்த அட்டகாசத்தை ..சென்ற வருடம் ஒரு ஏழாம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்துவிட்டான் ..அற்ப காரணம் ..முகத்தில் freckles இருந்ததென்று அவனுடன் பேருந்தில் வரும் சில வேறு பள்ளி மாணவர்கள் கேலி செய்தார்களாம்
   மன உளைச்சல் விஷயத்தில் .. எல்லாரும் பொறுமை அமைதியாய் இருந்தாலே பிரச்சினை வெடிக்காது ..இனிமேல் அவசரப்பட்டு ஒரு முடிவும் எடுக்ககூடாது என்று நினைத்திருக்கேன் நானும் .

   Delete
 7. மன அழுத்தம் இன்றைய காலகட்டத்தில் நிறைய பேரிடம் இருக்கிறது. வளர்ப்பு பிராணி இருக்கும் இடத்தில் ...மாற்றம் இருக்கத்தான் செய்கிறது,
  தக்க சமயத்தில் அக்குழந்தையின் தாயிடம் சொல்லி சரி செய்து இருக்கிறீர்கள்.
  நல்ல பதிவு. சகோ வாழ்த்துக்கள் எங்களுக்கு இப்படி நல்ல விஷயங்களை அறிய தந்து கொண்டு இருப்பதற்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள் .நிறைய சம்பவங்கள் மகளால் தான் தெரியவருகிறது .அதே போன்ற ஒரு BULLYING நிலை அவளுக்கும் கொஞ்சம் ஏற்பட்டு தக்க சமயத்தில் நான் கண்டுபிடித்து சரி செய்தேன் (எனக்கு இதைப்பற்றி ஒரு பாகிஸ்தானிய தோழி முன்பே சொல்லியுள்ளார் ஆகவே நான் விழிப்புடன் இருந்தேன் )அவள் செகண்டரி போன சமயத்தில் . இவளும் உடனே என்னிடம் அனைத்தையும் சொல்லிடுவாள் .

   Delete
 8. விருப்பத்தோடு செய்யப்படும் எந்தச் செயலும் சிறப்பே தரும்...

  ReplyDelete