அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/5/15

நியூட்டனின் மூன்றாம் விதி/களைக்கொல்லி Glyphosate herbicide

நியூட்டனின் மூன்றாம் விதி /Glyphosate herbicide எம்.ஐ.டி. பல்கலைகழக ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை :-

2025 ஆண்டுக்குள் பிறக்கும் குழந்தைகளில் பாதிபேருக்கு மேல் ஆட்டிசம் குறைபாடுடன் பிறக்க சாத்தியங்கள் உண்டு . 
மூல காரணம் Glyphosate .மான்ச
ான்டோ நிறுவனத்தின் அரும் கண்டுபிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி.
சற்று பின்னோக்கி செல்வோம் ..மனிதனின் பேராசை தான் இதற்கு முக்கிய காரணம் frown emoticon..
வயல் வெளிகளில் களை போன்ற செடிகள் வளருவது இயற்கை.அவற்றை கூலிக்கு ஆளமர்த்தி பிடுங்கி எடுப்பது ஆதிகாலமுதல் நமது வழக்கம் . அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள்.மொன்சாண்டோ Monsanto நிறுவனம் glyphosate (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள்.

மொள்ளமாரித்தனத்தின் மறு பெயர் மான்சாண்டோ: இயற்கை வளங்களை மாசு படுத்துதல்,
தன் உற்பத்தி பொருட்களால் மனிதர்களை ஊனம் மற்றும் மரணம் அடைய செய்தல்,
நம் நாட்டு விவசாயிகளின் தற்கொலை , அபாயகரமான 'டயாக்சின் ' போன்ற ரசாயனங்களை தீங்கு விளைவிக்காதவை என்று ஆய்வு அறிக்கைகளை மாற்றி எழுதுதல், அனுமதி அளிக்கும் அரசு பதவிகளைத் தன் நிறுவன ஆட்களால் நிரப்புதல், ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு தன் நிறுவனத்தில் உயர் பதவி அளித்தல், போலி விளம்பரங்கள் என்று பல புகழ்கள் இதற்குண்டு .இதன் 50 சதவீத பங்குதாரர் திருவாளர் Bill" Gates என்பதையும் மறவாதீர்கள்.
மலட்டு தன்மையை உருவாக்கும் கிளைபோசேட் (Glyphosate) என்னும் களைக்கொல்லி மருந்தை இந்த நிறுவனம் சந்தைப் படுத்தி வருகிறது.இந்த க்ளைபாசெட் களைகொல்லியை வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே? உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மாற்றி களை கொல்லி (Genetically modified for glyphosate resistance) எதிர்ப்பு சக்தியை கொண்டு வந்தார்கள்.
அதாவது, விவசாயிகள், கண்ணை மூடி கொண்டு glyphosate வயலில் தெளிக்கலாம். களை செடிகள் அழிந்து போகும். ஆனால் சோளம் செடிக்கு ஒன்றும் ஆகாது.
சமீபத்திய ஆய்வு படி பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் பண்ணைகள் அருகில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் இடையே மன இறுக்கம் உள்ளதாம் ஆகவே இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் 60% ஆட்டிசம் குறையுடன் பிறக்க சாத்தியமுண்டு என்ற பயம் அதிகரித்துள்ளது உள்ளது

இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் எதை செய்தாலும் இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு கொடுக்கும். சமீபத்தில் நடைபெற்ற GMO பயிர்கள் பற்றிய கருத்தரங்கில் Stephanie Seneff, PhD ..சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் முடிவுகள் ..

“At today’s rate, by 2025, one in two children will be autistic.” -

சமீப காலமாக அவர் அல்சைமர்,மன இறுக்கம் மற்றும் இதய நோய்கள், அதே போல் சத்துணவு குறைபாடுகள் மற்றும் மனித உடலும் நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் நச்சுகள் ,காரணிகள் தாக்கம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ,இரசாயன பூச்சி கொல்லிகள் ஆகியனபற்றி ஆய்வு செய்து வருகிறார் .
கிளைபாசெட்டின் நச்சு பக்க விளைவுகளும் ஆட்டிச குறைபாடும் ஒரே குணங்களை காட்டுவதாக கூறுகிறார் .
ரவுண்ட் அப் அதிகம் பயன்பாட்டில் உள்ள அமெரிக்க மாகாணத்தில் பிறந்த குழந்தைகளில் அதிகளவு காணப்பட்ட
ஆட்டிசம் குறை , மன இறுக்கம், குழந்தைகளுக்கு துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு,ஆகீயவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளார் .அந்த கருத்தரங்கில் இருந்த அனைவரூக்கும் இது பெரும் அதிர்ச்சி !

அதுமட்டுமன்றி
மெக்னீசியம், புளோரிட், குளோர்பைரிபோஸ், டெட்ராகுளோரோ எத்திலீன்

இந்த ரசாயனங்கள் எல்லாம் பூச்சி கொல்லி மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் டூத் பேஸ்ட் உள்பட பல பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம், கவனக் குறைபாடு, கற்றலில் குறைபாடு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகிறது என்று தெரிய வந்துள்ளது.இந்த ரசாயன பொருட்கள் குழந்தைகளின் அறிவு திறனை மங்க செய்து அவர்களுடைய நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க வளர்ந்து வரும் நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயன பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்து கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டியது அவசியம்.ஏனெனில் ரவுண்டப்பை தாங்கும் வல்லமையான களைகள் பெருகி விட்டன ..இப்போது க்ளைபாசெட்டை விட ஸ்ட்ராங் மருந்தை தயாரிப்பார்கள் :(
.கிளைப்பாசெட் விட இன்னும் அதிக பக்க விளைவை அது உண்டாக்கலாம் frown emoticon ....

நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது .பேராசையும் நவீன கண்டுபிடிப்புகளும் இயற்கைக்கு எதிராக ஒரு போரே ஆரம்பித்து விட்டது.மனிதன் செய்யும் மாற்றங்களை எதிர்க்கும் புது வகை களைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டுள்ள பூச்சிக்களுக்கும் இடையே போர்.
மேலும் மேலும் சக்தியும் பேரவல பக்க விளைவுகள் கொண்ட இப்படி பட்ட தொழிற்நுட்பம் தேவையா?

Source :-
http://www.anh-usa.org/half-of-all-children-will-be-autistic-by-2025-warns-senior-research-scientist-at-mit/

http://www.globalresearch.ca/autism-and-the-health-impacts-of-monsanto-glyphosate-roundup-on-children-research-scientist-at-mit/5421901
http://people.csail.mit.edu/seneff/

http://occupy-monsanto.com/tag/glyphosate/

14 comments:

 1. ஏஞ்சலின்,

  எனக்கு சின்ன வயசா இருக்குபோதே எங்கள் ஊர் நிலங்களில் புல்பூண்டு மட்டும் முளைக்காமல் இருக்க மருந்து அடித்தது எனக்குத் தெரியும். இதில் 'ஆள்கூலி'தான் பிரதானம். நாளாக நாளாகத்தானே தெரிகிறது இவற்றின் எதிரொலி !

  ReplyDelete
 2. பிறக்கும் போதே ஆட்டிசமா...? என்ன கொடுமை இது...

  ReplyDelete
 3. வணக்கம்
  நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. தான் உற்பத்தி செய்யும் ரசாயனப் பொருட்களால் - இயற்கையை மாசுபடுத்தி அதன் வளங்களை நாசப்படுத்தி மனிதர்களுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் ஊனம் மற்றும் மரணம் விளைவிக்கும் -

  நவீன அரக்கனான மான்சாண்டோவினை வேரோடு அழிக்கவும் ஒருவன் வருவான் அல்லவா!..

  நிச்சயம் வருவான்!..

  மான்சாண்டோ மண்ணோடு மண்ணாக நிச்சயம் அழியும்!..

  அதுவரையிலும் பிரார்த்திப்போம் -
  இயற்கையே எங்களைக் காப்பாற்று என்று!..

  ReplyDelete
 5. நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது .பேராசையும் நவீன கண்டுபிடிப்புகளும் இயற்கைக்கு எதிராக ஒரு போரே ஆரம்பித்து விட்டது..............வருத்தமான உண்மை....

  ReplyDelete
 6. இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் எதை செய்தாலும் இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு கொடுக்கும்.//
  உண்மை.அருமையான விழிப்புணர்வு கட்டுரை.

  ReplyDelete
 7. இப்போ எதை எடுத்தாலும் அதில் ஏதாவது இரசாயன கலவைதான். தரும் மருந்துகளில் பக்கவிளைவுதான் அதிகம்.ஆனாலும் என்ன செய்ய பாவிக்கத்தான் செய்கிறோம். இப்போ கூடுதலாக மக்களை bio product பாவிக்கும்படி இங்கு ஒரு தொலைக்காட்சியில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடாத்தியது. இந்த இரசாயனக்கலவையால் நன்மை செய்யும் உயிரினங்கள்,பறவைகள் கூட இல்லாமல் போகின்றன என்பது ஒன்று. இயற்கை வளங்களை அழிப்பதால், நாட்டுக்கு கேடு என்ற அடிப்படைக்கருத்தை வலியுறுத்துகிறார்கள். இதன் தாக்கம் வரவர கடுமையாக இருக்கும் போல!.

  ReplyDelete
 8. //நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது .பேராசையும் நவீன கண்டுபிடிப்புகளும் இயற்கைக்கு எதிராக ஒரு போரே ஆரம்பித்து விட்டது.//
  உண்மைதான் ஏஞ்சலின்.
  எதிர்காலத்தை நினைத்தால் கலக்கமாக இருக்கிறது.

  ReplyDelete
 9. மிக மிக அருமையான பதிவு சகோதரி! மனிதன் எப்போது இயற்கையோடு ஒத்து வாழாமல், எதிராக வாழத்தொடங்கினானோ அப்போதே இது போன்ற பிரச்சினைகள் தொடங்கிவிட்டன.

  2025 ஆண்டுக்குள் பிறக்கும் குழந்தைகளில் பாதிபேருக்கு மேல் ஆட்டிசம் குறைபாடுடன் பிறக்க சாத்தியங்கள் உண்டு . // ஆம் மிக மிகச் சரியே! இப்போதெ ஆட்டிசம் மட்டுமல்ல, பல குறைபாடுகள் உள்ள குழந்தைகள் பிறக்கத் தொடங்கிவிட்டன. பெரியவர்களுக்கும் அல்ஜிமர் நிறைய பாதிக்கின்றது. மனிதன் சுயநலவாதியாக, பேராசையுடன், பணம் ஈட்டும் முனைப்புடன் வாழத் தொடங்கிவிட்டதால் இது வும் பெருகத் தொடங்கிவிட்டது. பாருங்கள் ஒரு இயற்கைப் புரட்சி நடைபேரும். தனிமனிதர் மட்டுமின்றி அரசாங்கமும் முனைப்புடன் செயலாற்றினால் நிச்சயமாக மாற்றம் ஏற்படுத்தலாம். ஆனால் அந்த அரசாங்கமே மொள்ள மாரிகளால் உயிர் பறிக்கும் மனிதர்களால் சுயநலவாதிகளால் ஆனதாக இருந்தால் என்ன செய்ய முடியும்.....ரஷ்யப் புரட்சி போல் ஏதாவது வந்தால்தான் உண்டு.....கலவரமாகத்தான் இருக்கின்றது எதிர்கால சந்ததியினரை நினைத்தால்...

  ReplyDelete
 10. அதி பயங்கரமான விளைவுகள். அப்போதைய காரியம் நடந்தால் போதும். யார் எக்கேடு கேட்டால் என்ன என்று இந்த வேல வேலை செய்கிறார்களே. மிகப் பயனுள்ள பதிவு ஏஞ்சலின்.

  ReplyDelete
 11. களைக்கொல்லி என்பதே ஒரு விஷம் தான். இங்கே வீட்டில் இருக்கும் புல்லை நீக்கவே மருந்து அடிக்கும் சிலரை பார்த்திருக்கிறேன். சாதாரண மக்களே விஷம் என்று தெரிந்தும், இதனால் என்ன பெரிசா வந்திட போகுது, செத்தா போக போறோம் என்று ஒரு மனநிலையில் தான் இருக்கிறார்கள். இதில் நாம் சாத்தானிடம் என்ன எதிர் பார்க்க முடியும். :-(

  ReplyDelete
 12. உண்மையேதான்ன்....

  ///இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் எதை செய்தாலும் இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு கொடுக்கும்/// நல்ல பிள்ளை என நினைச்சிருந்தேன்ன்.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குதே என எண்ணினேன்ன்:) பொல்லாததா இருக்கும்போல இருக்கே இந்த இயற்கை...

  ReplyDelete
 13. எது செய்தாவது காசு பார்க்க வேண்டும். அவ்வளவுதான். இவர்களைத் தடுப்பாரும், தட்டிக் கேட்பாரும் இல்லை. வருங்காலத்தை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது.

  ஈ மெயில் சப்ஸ்க்ரைப் செய்திருந்தேன். ஃபீட் பர்னர் லீவா? உங்கள் பதிவுகள் எனக்கு வரவில்லையே!

  ReplyDelete
  Replies
  1. இந்த பதிவுக்கு அப்புறம் புது பதிவு போடல ..விரைவில் தொடர்வேன் ..

   Delete