அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

2/5/15

நியூட்டனின் மூன்றாம் விதி/களைக்கொல்லி Glyphosate herbicide

நியூட்டனின் மூன்றாம் விதி /Glyphosate herbicide எம்.ஐ.டி. பல்கலைகழக ஆராய்ச்சியாளரின் ஆய்வறிக்கை :-

2025 ஆண்டுக்குள் பிறக்கும் குழந்தைகளில் பாதிபேருக்கு மேல் ஆட்டிசம் குறைபாடுடன் பிறக்க சாத்தியங்கள் உண்டு . 
மூல காரணம் Glyphosate .மான்ச
ான்டோ நிறுவனத்தின் அரும் கண்டுபிடிப்பான க்ளைஃபோசேட் களைக்கொல்லி.
சற்று பின்னோக்கி செல்வோம் ..மனிதனின் பேராசை தான் இதற்கு முக்கிய காரணம் frown emoticon..
வயல் வெளிகளில் களை போன்ற செடிகள் வளருவது இயற்கை.அவற்றை கூலிக்கு ஆளமர்த்தி பிடுங்கி எடுப்பது ஆதிகாலமுதல் நமது வழக்கம் . அமெரிக்காவில், எல்லாம் இயந்திர மயமாகபட்ட விவசாயத்தில், இதற்கு ஒரு வழி தேடினார்கள்.மொன்சாண்டோ Monsanto நிறுவனம் glyphosate (Roundup) என்ற ஒரு களை கொல்லி கண்டு பிடித்தார்கள்.

மொள்ளமாரித்தனத்தின் மறு பெயர் மான்சாண்டோ: இயற்கை வளங்களை மாசு படுத்துதல்,
தன் உற்பத்தி பொருட்களால் மனிதர்களை ஊனம் மற்றும் மரணம் அடைய செய்தல்,
நம் நாட்டு விவசாயிகளின் தற்கொலை , அபாயகரமான 'டயாக்சின் ' போன்ற ரசாயனங்களை தீங்கு விளைவிக்காதவை என்று ஆய்வு அறிக்கைகளை மாற்றி எழுதுதல், அனுமதி அளிக்கும் அரசு பதவிகளைத் தன் நிறுவன ஆட்களால் நிரப்புதல், ஒய்வு பெற்ற அரசு அதிகாரிகளுக்கு தன் நிறுவனத்தில் உயர் பதவி அளித்தல், போலி விளம்பரங்கள் என்று பல புகழ்கள் இதற்குண்டு .இதன் 50 சதவீத பங்குதாரர் திருவாளர் Bill" Gates என்பதையும் மறவாதீர்கள்.
மலட்டு தன்மையை உருவாக்கும் கிளைபோசேட் (Glyphosate) என்னும் களைக்கொல்லி மருந்தை இந்த நிறுவனம் சந்தைப் படுத்தி வருகிறது.இந்த க்ளைபாசெட் களைகொல்லியை வயலில் தெளித்தால், வயலில் உள்ள சோளம், சோயா போன்ற செடிகளும் பாதிக்க படுமே? உடனே, சோளத்தில் உள்ள மரபணுவை மாற்றி களை கொல்லி (Genetically modified for glyphosate resistance) எதிர்ப்பு சக்தியை கொண்டு வந்தார்கள்.
அதாவது, விவசாயிகள், கண்ணை மூடி கொண்டு glyphosate வயலில் தெளிக்கலாம். களை செடிகள் அழிந்து போகும். ஆனால் சோளம் செடிக்கு ஒன்றும் ஆகாது.
சமீபத்திய ஆய்வு படி பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படும் பண்ணைகள் அருகில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள் இடையே மன இறுக்கம் உள்ளதாம் ஆகவே இவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் 60% ஆட்டிசம் குறையுடன் பிறக்க சாத்தியமுண்டு என்ற பயம் அதிகரித்துள்ளது உள்ளது

இயற்கை என்று ஒன்று இருப்பதை எல்லாரும் மறந்து விட்டார்கள். இயற்கைக்கு மாறாக எதாவது நாம் எதை செய்தாலும் இயற்கை மிகவும் பலமாக எதிர் தாக்கு கொடுக்கும். சமீபத்தில் நடைபெற்ற GMO பயிர்கள் பற்றிய கருத்தரங்கில் Stephanie Seneff, PhD ..சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் முடிவுகள் ..

“At today’s rate, by 2025, one in two children will be autistic.” -

சமீப காலமாக அவர் அல்சைமர்,மன இறுக்கம் மற்றும் இதய நோய்கள், அதே போல் சத்துணவு குறைபாடுகள் மற்றும் மனித உடலும் நம்மை சுற்றியுள்ள சுற்றுச்சூழல் நச்சுகள் ,காரணிகள் தாக்கம் ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ,இரசாயன பூச்சி கொல்லிகள் ஆகியனபற்றி ஆய்வு செய்து வருகிறார் .
கிளைபாசெட்டின் நச்சு பக்க விளைவுகளும் ஆட்டிச குறைபாடும் ஒரே குணங்களை காட்டுவதாக கூறுகிறார் .
ரவுண்ட் அப் அதிகம் பயன்பாட்டில் உள்ள அமெரிக்க மாகாணத்தில் பிறந்த குழந்தைகளில் அதிகளவு காணப்பட்ட
ஆட்டிசம் குறை , மன இறுக்கம், குழந்தைகளுக்கு துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு,ஆகீயவற்றையும் மேற்கோள் காட்டியுள்ளார் .அந்த கருத்தரங்கில் இருந்த அனைவரூக்கும் இது பெரும் அதிர்ச்சி !

அதுமட்டுமன்றி
மெக்னீசியம், புளோரிட், குளோர்பைரிபோஸ், டெட்ராகுளோரோ எத்திலீன்

இந்த ரசாயனங்கள் எல்லாம் பூச்சி கொல்லி மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த பொருட்கள் டூத் பேஸ்ட் உள்பட பல பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றன. இதனால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம், கவனக் குறைபாடு, கற்றலில் குறைபாடு ஆகியவற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆறு குழந்தைகளில் ஒரு குழந்தை இதுபோன்ற பாதிப்புக்கு ஆளாகிறது என்று தெரிய வந்துள்ளது.இந்த ரசாயன பொருட்கள் குழந்தைகளின் அறிவு திறனை மங்க செய்து அவர்களுடைய நடத்தையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதை தடுக்க வளர்ந்து வரும் நாடுகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள ரசாயன பொருட்கள் அனைத்தையும் சோதனை செய்து கட்டுப்பாடுகள் கொண்டு வரவேண்டியது அவசியம்.ஏனெனில் ரவுண்டப்பை தாங்கும் வல்லமையான களைகள் பெருகி விட்டன ..இப்போது க்ளைபாசெட்டை விட ஸ்ட்ராங் மருந்தை தயாரிப்பார்கள் :(
.கிளைப்பாசெட் விட இன்னும் அதிக பக்க விளைவை அது உண்டாக்கலாம் frown emoticon ....

நியூட்டனின் மூன்றாவது விதியானது "ஒவ்வொரு வினைக்கும் (action) அதற்கு இணையான எதிர் வினை உண்டு." கூறுகின்றது .பேராசையும் நவீன கண்டுபிடிப்புகளும் இயற்கைக்கு எதிராக ஒரு போரே ஆரம்பித்து விட்டது.மனிதன் செய்யும் மாற்றங்களை எதிர்க்கும் புது வகை களைகளுக்கும் பூச்சி மருந்துகளுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டுள்ள பூச்சிக்களுக்கும் இடையே போர்.
மேலும் மேலும் சக்தியும் பேரவல பக்க விளைவுகள் கொண்ட இப்படி பட்ட தொழிற்நுட்பம் தேவையா?

Source :-
http://www.anh-usa.org/half-of-all-children-will-be-autistic-by-2025-warns-senior-research-scientist-at-mit/

http://www.globalresearch.ca/autism-and-the-health-impacts-of-monsanto-glyphosate-roundup-on-children-research-scientist-at-mit/5421901
http://people.csail.mit.edu/seneff/

http://occupy-monsanto.com/tag/glyphosate/

2/4/15

Loud speaker 16..மன அழுத்தம் /stress

இன்றைய ஒலிபெருக்கியில் மன அழுத்தம்  /stress , தொடர்பான சில செய்திகள் பார்ப்போம் ..
இப்போ எங்கே பார்த்தாலும் யோகா ,சிரிப்பு தெரப்பி ,நடை பயிற்சி மூச்சு பயிற்சி இன்னும் கேள்விப்படாத என்னென்னமோ சொல்றாங்க ..
நர்சரி போறதெல்லாம் கூட ஸ்ட்ரெஸ் பற்றி பேசுது எங்கே போகுது
உலகம் ?எங்கும் போட்டி எதிலும் முதலிடம் வேணும், ஈகோ ,தோல்வியை ஏற்றுகொள்ளாத மனப்பான்மை எக்ஸட்ரா எக்ஸட்ரா இவையும் மன அழுத்தத்துக்கு காரணங்கள்Kathy Gruver, Ph.D.இவர் இந்த துறையில் ஆராய்ச்சி செய்து சில விஷயங்களை 
பின்பற்றினால் மன அழுத்தம் ஏற்படாது என்கிறார் .

செய்யவேண்டியது .....மனசை மாத்தி யோசிக்க சொல்கிறார் .கடந்துபோன கெட்ட சம்பவங்களை நினைக்கவே கூடாதாம் ..கோபப்படவே கூடாதாம் !அதெல்லாம் எப்படி :)எங்களுக்கு எவ்ளோ கட்ட பஞ்சாயத்து இருக்கு யாராவது ஒரு புக் எழுதினா இல்லை என் மதத்தை பற்றி எழுதினா ,என் பிரிய நடிகரை அல்லது நடிகை அல்லது விளையாட்டு வீரரை பற்றி எழுதினா அதுக்கு போராடனும் ,வார்த்தையால் அடிதடி நடத்தணும் நாலு பேரை உசுப்பி விடனும் ..எவ்ளோ தைரியம் என் சமூகத்தை ,என் தெருவை என் வீட்டு ஜன்னலைஎன் இரத்தத்தின் ரத்தத்தை தலைவரை  பற்றி எழுதலாம் ,போராட்டம் கூப்பாடு !!ஹைய்யோ :)இதெல்லாம் ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன் ..யாரும் டென்ஷன் ஆகாதீங்க :) நாம் கொஞ்சமேனும் சிந்திக்கணும் இப்படி உணர்ச்சிவசப்படுவதால் நமக்கும் உடல்நலன் கேடு

எதிராளிக்கும் உடல் நலன் கேடு ..அறிந்தோ அறியாமலோ யார் மனதையும் நம் செயல்களால் துன்புறுத்த வேண்டாம் ..நாம கடைக்குபோறோம் அங்கே பல காய்கறிகள் இருக்கு நமக்கு எது தேவையோ அத மட்டும் தேர்வு செய்து வாங்கி வருவோம் வாங்காத பொருள் பற்றி ஆராய்ச்சி எதற்கு ?நமக்கு சரி என படுவது பிறருக்கு தவறாக இருக்கலாம் .நமது ஆசையை நமது விருப்பத்தை மற்றவர் மேல் திணிப்பது தவறு.  fullllllll stop :)
அடுத்தது மன உளைச்சலை குறைக்க /வராமலிருக்க
அப்பப்போ மெடிடெஷனும் செய்ய வேண்டுமாம் ..
2,Scenario Thinking

                                                                            


இது எதிர்மறை எண்ணங்கள் ..அடுத்த மாதம் நடக்கவிருக்கும் பரீட்சையில் பாஸ் பண்ணுவோமா இல்லையா என்று  இப்பவே யோசிச்சு குழம்பி டிப்ரஷனில் வீழ்வது ..இது இங்கே பள்ளி கல்லூரிகளில் அதிகம் காணப்படும் ஒரு பிரச்சினை .டெர்ம் இறுதியில் அதிக அளவு மாணவர்கள் பல பல்கலை கழகங்களில் எப்படி காணப்பட்டார்கலாம் 
தெரியுமா ..சிலர் தலையை சுவற்றில் ,கணினி திரையில் ,மேசையில் முட்டி கொண்டார்களாம் ,சுயநினைவை இழந்த மறதி எனும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என பயந்த நிறுவனங்கள் மாணவர்களுக்கு இலவச மசாஜ் ,யோகா ,சிறந்த உணவு என் பல வழிகளை பரிந்துரைத்தார்கள் 
ஆனாலும் பயன் இல்லை இறுதியில் //
Canine Assistants, an Alpharetta, Georgia-based nonprofit group, brings therapy dogs-in-training to help Emory University students with finals stress.//

பல்கலை கழக வளாகத்துக்கு தேர்வுக்கு முந்தைய வாரங்களில் தினமும் சில மணிநேரம் இந்த தெரப்பி நாலு கால் வாலர்கள் அழைத்து வரப்பட்டு 
மாணவர்களுடன் இருந்து சென்றார்கள் ..இதன் விளைவு மாணவர்கள் முகங்களை நீங்களே பாருங்கள் இப்புகைபடத்தில் :)

                                                                                     
                                                                                                     
ஒரு சிலர் தங்களது அழுத்தத்துக்கு தீர்வாக நினைப்பது எதை தெரியுமா 
பிறரை துன்புறுத்துவது ..இது மிக மோசமான குணம் .
சமீபத்தில் ஒரு ஆங்கில திரைப்படம் பார்த்தேன் THE HELP .எளிய கறுப்பின பணிப்பெண்களை வெள்ளை இனத்து பெண்கள் சிலர் மிக மோசமாக நடத்துவார்கள் ..படத்தை பார்க்க மனது வலித்தது 


தி ஹெல்ப் என்பது 2011-ஆம் ஆண்டில் வெளியான ஆங்கிலத் திரைப்படம். இது கேத்ரின் ஸ்டாக்கெட் எழுதிய தி ஹெல்ப் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டது. அந்த நூலின் ஆசிரியையின் தோழராக இருந்த டேட் டெய்லர், இதன் இயக்குனர் .

ஸ்கீட்டர் பிலன் என்ற ஆங்கிலேயப் பெண்ணுக்கு, அவளுடனான இரண்டு ஆப்பிரிக்க வேலைக்காரப் பெண்களுக்குமான தொடர்பைப் பற்றிய கதை. அந்த இரு பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை கதையாக எழுத நினைக்கிறாள், ஊடகவியலாளராகிய வெள்ளைக்காரப் பெண்மணி.

இந்த கதை அமெரிக்காவில் உள்ள மிசிசிப்பியில் படமாக்கப்பட்டது. எம்மா ஸ்டோன், வியோலா டேவிஸ், ஆக்டேவியா ஸ்பென்சர் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர். சிறந்த துணை நடிகை, சிறந்த படப்பிடிப்பு, சிறந்த நடிகை ஆகிய விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருதை பெற்றது. இது 2012 ஆம் ஆண்டிற்கான ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்டு விருதைப் பெற்றது

முழு படத்தின் லிங்க் கிடைக்கவில்லை ஒரு காட்சி பாருங்கள் இந்த கானொளியில் ..பணிப்பெண் ..எப்பவும் கறுப்பினத்தவரை கேவலமாக நடத்தும் வீட்டு எஜமானியை பார்த்து ஒரு கேள்வி கேட்பார்

/ain't you tired ???


நெட்டில் சில புகைப்படங்களை தேடினபோது மனதை பாதித்த படம் இது

A girl who grew up in a concentration camp draws a picture of “Home” while living in a residence for disturbed children. Poland, 1948.

                                                                                             


ABSTRACT ஆர்ட் என்பது பல விஷயங்களை சொல்லாமல் சொல்லும் ஒரு வகை படங்கள் வெளித் தோற்றத்துக்குப் புலப்படாத, உள்ளார்ந்த பண்புகளை ஓவியத்தில் கொண்டு வருவது.

இப்படத்தில் இந்த சிறுமியை ஹோம் /வீடு வரைய சொன்னபோது அவள் மனதில் இருந்த வீடு இதுவே .எனக்கு தெரிந்த நண்பியின் மகன். மிக நல்ல குடும்பம் ,அப்பிள்ளையும் நன்கு படிக்கும் ஒரு சிறுவன் .செகண்டரி ஸ்கூலில்
இவனை மிகவும் துன்புறுத்தி உள்ளார்கள் பிற மாணவர்கள் .இச்சிறுவன் மிக அமைதி ஆகவே அவனை GAY என்று கிண்டல் செய்துள்ளார்கள் .மகளும் அதே பள்ளியில் படிப்பதால் எனக்கு விவரம் வந்துவிட்டது .ஒரு நாள் அந்த தாயிடம் பேசினேன் ..தாய் சொன்னார் மகன் படிப்பதில்லை எந்நேரமும் கேம்ஸ் கணினி விளையாட்டு என தனித்திருக்க விருப்பம் பிறகு ஓவியமாக வரைகிறான் ஆனால் யாருக்கும் காட்டுவதில்லை ..நான் அவனுக்கு தெரியாமல் ஓவிய நோட்டை கொண்டு வர சொன்னேன் தாயிடம் ..பார்த்த எனக்கு அதிர்ச்சி ஒரு வட்டம் அதை சுற்றி வெறும் கீறல் சுற்றி சுற்றி  ..இது கூகிள் படம் ..


..அதிக குழப்ப மனதில் இருப்பவர்கள் கிறுக்கிகிருக்கி வைப்பார்கள் இப்படிதான் ..உடனே தாயை அவனது ஆசிரியருடன் தொடர்பு கொள்ள வைத்தேன் .ஆசிரியை சரியான நேரத்தில் தக்க நடவடிக்கை எடுத்தார் .
BULLY எனும் ராகிங் பிரச்சினை தான் இம்மாணவனுக்கு ஏற்பட்டிருந்தது .
இப்போ யாரும் அவனை கேலி செய்வதில்லை .மாணவனும் நன்கு படிக்கிறானாம் ......
மன அழுத்தம் அனைவருக்குமே ஏற்படும் ஒன்று அதை வளர விடாமல் தடுக்கணும் தோட்டமிடல் இயற்கையை ரசித்தல் ,நல்லவற்றை மட்டும் நினைத்து பார்த்தல் என மனதை திசை திருப்பவேண்டும் ..
தோட்டம் போடுவதும் மிக நல்ல பயனுள்ள பொழுதுபோக்கு
தோழி கௌசல்யா இங்கே மிக அழகாக வீட்டு தோட்டம் அமைத்தல் பற்றி
கூறுகிறார் படித்து பயன் அடையுங்கள் .

http://www.kousalyaraj.com/2015/01/4.html#.VNI2CdKsWuI

மற்றும் சகோதரர் சிவாவின் பதிவும் உங்களுக்கு பிடிக்கும்

தோட்டத்துக்கு வரும் சிறு விருந்தாளிகளுக்கும் அன்பு பாராட்டுவது பெரிய விஷயம் ..இயன்றவரை நம்மாலான உதவிகளை சிற்றுயிர்களுக்கு செய்வோம் ..நானும் இம்முறை தோட்டத்தில் பறவை உணவு ,சூப்பர் மார்க்கட் பழங்கள் என தினமும் வைக்கிறேன் அணில்களுக்கும் பறவைகளுக்கும்
அதிகாலை அவை நேரே எங்க தோட்டத்தை தேடி வரும் காட்சி கண்கொள்ளா காட்சி .ராபின் பறவை ,மற்றும் நிறை பறவைகள் வந்து விருந்துண்டு செல்கின்றன ..மனதுக்கும் சந்தோஷம் ...மொபைல் போனில் என்னால் படமெடுக்க முடியவில்லை :) அவர்களை டிஸ்டர்ப் செய்ய விருப்பமுமில்லை .
ஆனால் தினமும் தோட்டத்துக்கு அவர்களின் வருகை மிக சந்தோஷமா இருக்கு எனக்கு ...


(/மன அழுத்தம் பற்றி நான் எழுத முக்கிய காரணம் இந்த 
பதிவு http://tamilmottu.blogspot.com/2015/02/blog-post.html
மன அழுத்தம் ஏற்பட்டால் இவர்களது நிலை ?/)


அன்புடன் ஏஞ்சலின் ..