அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/26/15

Loud speaker 15...ஆட்டோகிராப் !மாஷா ., வீட்டுத்தோட்டம் .. காரட் வளர்த்தல்ஆட்டோகிராப் !
இங்கே இங்கிலாந்தில் பள்ளிமாணவ மாணவர்களுக்கு சிறு 
வயது முதல் புத்தகம் படிக்கும் ஆர்வம் வளர வேண்டுமென அனைவரையும் ஊக்குவிப்பார்கள் .
அதனால் ஒரு வயது பிள்ளை கூட ரைம் டைம்
என அம்மாவோடு லைப்ரரியில் வந்து அமர்ந்து பிற
பிள்ளைகளுடன்பழகி ரைம்ஸ் ஸ்டோரிஸ் எல்லாம் கேட்டு
செல்வார்கள் .மழலைகளுக்கும் லைப்ரரி கார்ட் உண்டு :)ஒரு பிள்ளை 20 புத்தகம் வரை லைப்ரரியில் இருந்து எடுத்து 
செல்லலாம் .அனைத்தும் இலவசம் .
என் மகளுக்கும் சிறு வயது முதல் இந்த வாசிக்கும் பழக்கம் உண்டு ..


Michael Morpurgo,hans christian andersen,ஆன் பிரான்க் ,
Anthony Browne,Jacqueline Wilson,,caroline lawrence இவர்களெல்லாம்


மகளின் விருப்ப எழுத்தாளர்கள் .


மகளின் புத்தக அலமாரி ..
மகள் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது இவளின் வகுப்பை
சேர்ந்த ஐந்து பேரை தேர்வு செய்து Anthony Browne என்ற 
எழுத்தாளரை சந்திக்க அழைத்து சென்றனர் .
இரவோடிரவாக அமர்ந்து ஒரு அழகிய படம் அவர் எழுதிய கதையின் (கொரில்லா காரக்டர் )வரைந்து அருகில்
அவரின் படத்தையும் வரைந்து ஒரு வாழ்த்து அட்டை செய்து எடுத்து
சென்றாள் ..


அவரை ஒரு பெரிய கால்பந்து ஸ்டேடியத்தில் வைத்து அனைத்து
பள்ளி மாணவர்களும் சந்தித்தனர்ஆசிரியை இவளுக்காக பெர்மிஷன்
கேட்டு அவரிடம் அழைத்து சென்று உள்ளார் .


மகள் தனது படத்தை கொடுத்து பின்பு நான் முன்யோசனையாக வாங்கி
அனுப்பிய ஆட்டோக்ராப் நோட்டில் அவரது கையொப்பத்தை பெற்றாள் .
அது இன்னும் பத்திரமாக இருக்கு ..
சில விஷயங்களை நாம் தான் சொல்லிகொடுக்க வேண்டும் .


அன்று சென்ற 200 பிள்ளைகளில் இவள் மட்டுமே ஆட்டோக்ராப்
வாங்கியிருக்கா .
மேலும் இவளுடன் சென்ற மற்ற ஐந்து பிள்ளைகளும் இவளிடம்
வாழ்த்து அட்டையை வாங்கி உன் பேர் மட்டும் இருந்தா நல்லா
இருக்காது எங்க ஐந்து பேரையும் நாங்களே எழுதறோம் அதில்னு எழுதியிருக்காங்க !!!!!!!!!!!!!!


ரெண்டாங்க்ளாசில் என்னா ஒரு அறிவு :)))))முன் யோசனை


(உடன் சென்றஐந்தும் பஞ்சாப் /குஜராத் /வங்காளி /ஒரு பிரிட்டிஷ் /
ஒரு பிரெஞ்ச் .)
பிறகு இவள் ஆட்டோக்கிராப் நோட்டில் இருந்து தங்களுக்கு சில
பக்கங்கள் வேண்டுமென கேட்டார்களாம் !
விவரமாத்தான் இருக்காங்க பிள்ளைங்க
இப்படி ruth eastham,henry winkler,adam isaac,caroline lawrence என
சிலரின் ஆட்டோக்ராப் என் மகள் வாங்கி வச்சிருக்கா .


இது நேற்று எங்க ஆலய 60 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு
வருகைதந்த ஆர்ச் பிஷப் ஜான் சென்டமூ அவர்களிடம் மகள் பெற்ற
ஆட்டோக்ராப் ..

................................................................................................................................................................


மாஷா ..இந்த பூனையின் பெயர் மாஷா ..ரஷ்யாவில் ஒரு அடுக்குமாடி
குடியிருப்பில்வசிப்போர் கொடுக்கும் மீதமான உணவை உண்டு
அங்கு வசிக்கிறது .


ஒரு நாள் ground floor படிக்கட்டு அருகில் ஒரு அட்டை பெட்டி  அருகிலிருந்து maasha  சத்தமிட்டபடி இருந்ததாம் .
குப்பை கொட்ட சென்ற இந்த பெண்மணி எட்டி பார்த்தபோது ஒரு
குழந்தை பெட்டியில் இருந்தாம் ..
அருகில் குளிர் தாக்காமல் குழந்தையை அரவணைத்தபடி இந்த பூனை !
.ஐந்தறிவு ஜீவனுக்கு Iஇருக்கும் தாய்மை உணர்வு கூட பெற்ற
தாய்க்கு இல்லை :(


http://www.bbc.co.uk/news/world-europe-30893297


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வீட்டுத்தோட்டம் ..


காரட் ..எங்க வீட்டு அறுவடை ...


.தொட்டியில் காரட் வளர்த்தல் ..


20 " ஆழம் அல்லது அதை விட ஆழமான தொட்டி அல்லது சதுர /செவ்வக வடிவ கலனில்முக்கால் பாகம் கம்போஸ்ட் உரமண் கலவையினால் நிரப்ப வேண்டும் .

கலப்பு உர மண் கலவை இலகுவாக நெகிழும் தன்மையுடன் இருக்கவேண்டும் .சிறு கற்கள் போன்றவற்றை தொட்டியில் இருந்து அப்புறப்படுத்தனும் ..இல்லையென்றால் ..அறுவடை செய்யும்போது குறை வளர்ச்சி /பல வடிவங்களில் கோணல் மாணலான காரட்கள் கிடைக்கும் ..உதாரணம் கொல்லாஜில் கடைசி படம் ..கல் ஒன்று வேர் கீழ் நோக்கி வளர தடை செய்ததால் அதன் வடிவம் பாருங்கள் :)


தொட்டியில் நிரப்பிய கம்போஸ்ட் மீது சிறிதளவு காரட் விதைகளை பெரிய கண் சல்லடை மீது வைத்து தூவலாம் காரட் விதை மிக சிறியவை .விதைகளுக்கிடையில் இடைவெளி மிக அவசியம் .


இதற்க்கு ஒரு கைப்பிடி மணலுடன் விதைகளை கலந்தும் தூவலாம் .இது அதிகப்படியான நீர் தொட்டியில் தேங்காமலிருக்க உதவும்.

பிறகு விதைகள் மீது சிறிது கம்போஸ்டால் மூட வேண்டும் .
நீர் மிக மெதுவா தெளிப்பானால் தெளிக்கணும் .தொட்டி கீழ் செங்கல் வைக்க வேண்டும் நீர் தேங்காமல் எளிதில் வெளியேற இது உதவும
காரட் செடி விதைகள் துளிர்க்க இரண்டு வாரங்களாகும் ..இடைவெளி இல்லாமல் முளைத்த சிறு நாற்று செடிகளை மெதுவா கத்திரித்து விடணும் .பிடுங்க கூடாது .


காலநிலை தட்ப வெப்பம் பொருத்து விளைச்சல் இருக்கும் .
60இலிருந்து 75 நாட்களில் அறுவடை செய்யலாம் .


காரட் கீரையை வீணாக்காதீங்க வெஜிடபிள் சூப் செய்யும்போதும் ,காரட் பொரியலிலும் சேர்த்து சமைக்கலாம் .
நட்புடன் ஏஞ்சல் .
24 comments:

 1. வணக்கம்
  தங்களின் மகளின் முற்சிக்கு வாழ்த்துக்கள்
  வீட்டுத்தோட்டம் பற்றிமிக நேர்த்தியாக கருத்து சொல்லியுள்ளீர்கள்...பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ .மகளுக்கு வாசித்தல் ரொம்ப பிடிக்கும் ..எந்நேரமும் புக்கும் கையுமாக இருப்பாள்

   Delete
 2. தங்கள் மகளின் புத்தக அலமாரியும்... ஆட்டோகிராப்பும் அருமை...
  வீட்டுத் தோட்டம் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ .இன்னோர் ஷெல்ப் கூட இருக்கு .மகளுக்கு வாசித்தல் ரொம்ப பிடிக்கும் ..

   Delete
 3. உண்மைதான் அஞ்சு. இங்கு வாசிப்பு பழக்கத்தை சிறுவயது முதலே பழக்கிவிடுகிறார்கள். என் மகனும் நிறைய புக்ஸ் எடுத்து வருவார் லைப்ரரியிலிருந்து. 2013ல் அந்த ஆண்டுக்கான சிறுவர் வாசிப்பு பிரிவில் அதிக புத்தகங்கள் வாசித்தார் என பாராட்டி, புத்தங்களும் ,சான்றிதழும் கொடுத்தார்கள்.
  இக்கால பிள்ளைகள் பேச்சிலும், செயலிலும் நல்ல forward. ஷரோனுக்கு என் வாழ்த்துக்கள்.

  மாஷாவின் செய்கை உண்மையில் நெகிழ வைத்துவிட்டது.

  வீட்டுத்தோட்டம் மிக பயனுள்ள தகவல் அஞ்சு. காரட் கீரை நானும் பொரியலாக(வறுப்பது) செய்வேன்.
  நல்லதொரு பகிர்வு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ப்ரியா ,,நான் இம்முறை க்ரோ பாகில் போட்டேன் காரட் நல்ல விளைச்சல் .மகனுக்கும் வாசிப்பு ஆர்வமா .நல்லது ..என்கரேஜ் பண்ணுறாங்க பிள்ளைகளை இங்கும் அப்படி .அந்த குழந்தை போட்டோ போட மனம் வரல ..என்ன மனிதர்களோ:(

   Delete
 4. புத்திசாலிப்பெண் ... சிறுவயதிலிருந்தே ... தங்கள் பெண்ணல்லவா ! சும்மாவா :)

  //காரட் ..எங்க வீட்டு அறுவடை ...//

  அருமை ... ருசியாகவே இருக்கும்.

  //ஐந்தறிவு ஜீவனுக்கு Iஇருக்கும் தாய்மை உணர்வு கூட பெற்ற
  தாய்க்கு இல்லை :(//

  படிக்கவே வருத்தமாக மனதுக்குக் கஷ்டமாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோபு அண்ணா :)
   ஹீ ஹி :) //தங்கள் பெண்ணல்லவா ! சும்மாவா :) ///அதிராவுக்கு கேக்கிறமாதிரி சத்தமா அண்ணா :)
   வீடு விளைச்சல் மனதுக்கும் மகிழ்ச்சி ..பாவம் அண்ணா 3 மாத குழந்தை .கேடு கேட்ட மனித மனம்

   Delete
 5. தங்களின் மகள் சிறப்பாக வருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை... வாழ்த்துக்கள் உங்களுக்கும்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ

   Delete
 6. வாசிப்பு பழக்கம் ....அவசியமான ஒன்று ....தங்களின் மகளுக்கு எனது வாழ்த்துக்கள் ....மேலும் மலர்ச்சியான காரட்... அருமை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு ..எவ்வளவு படிக்கறாங்களோ அத்தனை புத்தி கூர்மை என்பார்கள் இங்கு
   நீங்களும் காரட் தோட்டம் போடுங்க .தக்காளி போல

   Delete
 7. படிக்கும் பழக்கம் ரொம்ப நல்லது..ஷரன் புக் ஷெல்ஃப் சூப்பர்! :) ஹேப்பி டு ஸீ த ப்ரவ்ட் மாம் அக்கா! :)
  மாஷா பற்றி சில நாட்கள் முன்பே படித்தேன், வீடியோவும் பார்த்தேன். ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் பாசம் கூட மனிதர்களுக்கு இல்லாமல் போவதைப் பற்றி என்னத்தச் சொல்ல? ஹும்ம்ம்ம்...
  கேரட் விளைச்சல் பாத்தா என் மூளையில கொசுவர்த்தி சுத்துதே...ஏன் 3 கேரட் தான் இருக்கு...கொஞ்சமாதான் போட்டீங்களா??

  ReplyDelete
  Replies
  1. thanks mahi :)
   பாவம் மஹி அந்த குழந்தை:(
   கூகிளில் தொட்டியில் காரட் என்று செர்ச் செய்தா உங்க போஸ்ட் தான் முதலில் வருது :) இது நலம் போஸ்டுக்கு எடுத்த படம் .இடைவெளி விட்டு பறித்தேன் 20 காரட் கிடைத்தது .

   Delete
 8. பள்ளியில் வாரம் தோறும் இறுதி நாட்களில் புத்தகம் எடுத்துக் கொண்டு வந்து வாசித்து திங்கட்கிழமை அதற்கு விமர்சனம் எழுத வேண்டும். ஆங்கிலமும் உண்டு தமிழும் உண்டு. உங்கள் மகளின் வாசித்தல் அதை நினைவூட்டியது...அருமையான வாசிப்பு. தங்களைப் போன்று!!!!!!! (இருவரும் சேந்து எழுதினாலும் பள்ளி பற்றியது கீதாவின் அனுபவம்.)
  ஆட்டோக்ராஃபும் சூப்பர்!
  காரட் சூப்பர்! ஆம் இலைகளும் உபயோகம் உண்டு...பலர் அதை வீணாக்கிவிடுகின்றார்கள். அதே போன்று பீட்ரூட், முள்ளங்கி இலைகள் கூட...

  ஐந்தறிவு ஜீவிகள் எப்பவுமே டாப்தான். மாஷா மிகவும் கவர்ச்சிகரமாக அழகாக இருக்கின்றாள்! உங்கள் செய்தி அவளை இன்னும் அழகாகக்குகின்றது...பாருங்கள் அவளை அந்தக் கண்கள், புஷ்ஷி முடி...அருமை..ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு....

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி சார் இங்கும் ஆங்கில சப்ஜெக்டில் புக் மற்றும் மூவி ரிவ்யூ உண்டு .நிறைய எழுதியிருக்கா .அதை மற்றொரு பதிவில் ஸ்கான் செய்து போடுகிறேன்..மாஷா Maine Coons வகை என நினைக்கிறேன் they are known as the "gentle giants and possess above-average intelligence, making them relatively easy to train. They are known for being loyal to their family and cautious—but not mean—// இவை ஆட்டிசம் தெரப்பிக்கு உதவுகின்றன .

   இமா மற்றும் அதிரா சொன்னாங்க இலையை பயன்படுத்த ..நல்ல சுவை.

   Delete
 9. மகள் படிக்கும் புத்தக அலமாரியைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுவயதிலிருந்தே படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பழக்கம் பாராட்டுக்குரியது.

  மாஷா வாழ்க! சில நாலுகால் நண்பர்கள் இப்படி அன்புடனும் அறிவுடனும் திகழ்ந்து நம்மை மகிழ்விக்கிறார்கள்.

  மாடித் தோட்டத்தில் கொஞ்சகாலம் முன்பு ஆர்வம் இருந்தது. அப்புறம் மெனக்கெடப் பொறுமை இல்லாமல் போய்விட்டது!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி :) சகோ ..அவளிடம் என்ன வேண்டும் என்று கேட்டால் வரும் பதில் ...புக்ஸ் .அமேசானில் எல்லாத்தையும் செலக்ட் செய்து வைப்பா .
   உண்மைதான் மாஷா போன்ற நாலுகால் ஜீவன்கள் போற்றத்தக்கவை
   நீங்களும் மறுபடியும் ட்ரை பண்ணுங்க ..மீண்டும் சம்மருக்கு காத்திருக்கேன் நான் :)

   Delete
 10. தங்கள் மகளின் ஆட்டோகிராப் மிக அருமை சகோ.

  வெளிநாடுகளில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக, பாலர் வகுப்புகளிலேயே நூலகப் புத்தகத்தை கொடுத்து அனுப்புகிறார்கள்.
  தங்கள் மகளை நேரம் கிடைக்கும்போது, புத்தக விமர்சனங்களை எழுதச் சொல்லுங்கள் சகோ.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி :) ஆமாம் சகோ ..இங்கே சாரிட்டி புக் shops இருக்கு அதிலும்விலை மலிவான புக்ஸ் விக்கறாங்க .என் மகளுக்கு டிவிடி யில் பார்ப்பதை விட வாசிப்பு மிக பிடிக்கும் .அவர்கள் ஆங்கில சப்ஜெக்டில் புக் மற்றும் மூவி ரிவ்யூ உண்டு அதை மற்றொரு பதிவில் ஸ்கான் செய்து போடுகிறேன்

   Delete
 11. ஏஞ்சலின்,

  ஹூஊஊம்.... 6 வது புகைப்படத்தில் மூன்றாவதாக நிற்கும் பெண்ணை எங்கேயோ பார்த்த ஞாபகமாக உள்ளதே ! உங்க மகளுக்கு வாழ்த்துக்கள் !

  பிள்ளைகளை வாசிப்புக்குக் கொண்டுவர இங்குள்ள நூலகத்திலும் இதுமாதிரி உண்டு. நூலகத்தைப் பார்க்கும்போதெல்லாம் நான் நினைப்பதுண்டு, 'நம் ஊரில் இதுமாதிரியெல்லாம் இருந்தால் பிள்ளைகள் எங்கேயோ போயிருப்பார்களே' என்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா ..கண்டு பிடிச்சிடீங்க :) சர்ச் choir இல் இருக்கா

   Delete
 12. ஏஞ்சலின்,

  வழக்கம்போல நாலுகால் ஜீவனின் செயல் அசாத்தியமாகத்தான் உள்ளது !

  கேரட் அறுவடை கண்ணைப் பறிக்குது. இதன் கீரையை சமையலுக்குப் பயன்படுத்தலாமா? இதுநாள்வரை நான் தூக்கிப் போட்டுத்தான் வந்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. //இதன் கீரையை சமையலுக்குப் பயன்படுத்தலாமா? //

   நான் guarantee :) டேஸ்டி சைட் டிஷ்
   வெஜ் சூப்பிலும் சேர்க்கலாம்

   Delete