அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/9/15

Loud speaker ...14...

அனைவருக்கும் வணக்கம் :)   

இன்றைய ஒலிபெருக்கி செய்திகள் ..Igor ,the bull dog,, பிக்பாக்கெட் அடிக்கும் நம்ம முன்னோர் :)..ஒரு தாயின் சேவை ,பிரித்தானிய கல்வி முறை ..

முதலில் Igor  ..இவர் பிரெஞ்ச் புல் dog .இவரது உரிமையாளர்கள் நோர்வே நாட்டினர் .இவர்கள் விடுமுறைக்கு தாய்லாந்து செல்ல தயாரானார்கள் .பெரும்பாலான வெளிநாடுகளில் வளர்ப்பு  பிராணிகளை அவற்றுக்கென உள்ளல pet ஹோம்சில் ஒரு தொகை  செலுத்தி விடுவார்கள் .பயணம் முடிந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வர் ..இந்த குடும்பம் ...இது வரை igor ஐ பிரிந்திருந்ததில்லை ..அதற்கும் பிரிவு வலி  தரும் என்பதை உணர்ந்த குடும்பத்தலைவன் என்ன செய்தார் என்பதை காணொளியில் பாருங்கள் !!

ஹாஆஹாஅ :)      இதை டெய்லி மெயிலில் பார்த்தேன் .பண ஆசை இவருக்கும் வந்துடுச்சா ?:)

அடுத்து ஒரு உண்மை சம்பவம் .மகள் படிக்கும் பள்ளியில் வாரம் ஒருவர் 
வெளியிடங்களில் இருந்து வருகை தந்து மாணவர்கள் முன் பேச வருவார்கள் .போதை பழக்கத்திலிருந்து மீண்ட ,முன்னாள் குற்றவாளிகள்,விபத்தில் அங்கஹீனமானோர் ,பிரபல விளையாட்டு ,இசை ,காவல்துறையினர் ,எங்க பகுதி  மேயர் கவுன்சிலர் என பலரும் வருவார்கள் . சில நாட்கள் முன்  ஒரு தாய் ஆப்பிரிக்க இனத்தவர் வந்து பிள்ளைகளுடன் கலந்துரையாடினாராம் ..

அவரது மகள் 2001 ஆம் ஆண்டு தனது 16வது பிறந்தநாளில் முதன்முறையாக நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார் அங்கு இருட்டு நேரம் gang fight இல் யாரோ அடையாளம் தெரியாமல் இப்பெண்ணை மற்றும் உடன் சென்ற ஐந்து பேரையும் சுட்டு கொன்றார்கலாம் .கொன்றவன் போலீசில் மாட்டிவிட்டான் .ஆனால் ஆறு இளம் உயிர்கள்:(...அந்த பெண்ணின் தாய் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று  மாணவர்களை இவ்வாறான களியாட்டங்களை தவிர்க்க சொல்லி வலியுறுத்தி வருகிறார் .

.....................................................................................................................................................................மகள் பள்ளியில் mock டெஸ்ட் நடைபெற்றது A * மற்றும் A பெரும்பாலான  பாடங்களில் எடுத்திருக்கா .பிஸிகல் எஜுகெஷன் மட்டும் c ..
விளையாட்டில் ஆர்வம் குறைவு ..
அவர்களின் பாடத்திட்டம் வித்யாசமானது .ability  grouping என்கிரார்கள் .

விவரம் இங்கே 
.எங்க மகள் அனைத்து பாடத்திலும் set 1 இல்  இருக்கா .
வகுப்பில் 5 செட் இருக்கும் அவரவர் கற்கும் திறனுக்கேற்ப ஒரே பாடத்தை சொல்லி தருவாங்க ஆறு செக்ஸன் இலுள்ள செட் ஒன்றில்  உள்ள மாணவர் ஒன்றாக கற்பிக்கபடுவர் ..11 ஆம் வகுப்பு இறுதியில் செட் 5 இலுள்ள மாணவ மாணவியும் A * எடுத்துள்ளார்களாம் ..
எங்க கிறிஸ்துமஸ் விடுமுறை  இம்முறை சந்தோஷமாக கழிந்தது .வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ..


அடுத்த பதிவுக்கான குறியீடு இதில் இருக்கு :)
gluten free ,gelatin free ,GMO free nut free jelly beans 

அன்புடன் ஏஞ்சல் ..

                                                                       

23 comments:

 1. நல்ல பதிவு கல்வி முறை குறித்து அறிந்தது மகிழ்வு ..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி ..இன்னும் விரிவா எழுதணும் பிரித்தானிய கல்வி முறை பற்றி ..எனக்கு ஒரு நினைவு வருது ..நான் அப்போ பயிற்சி ஆசிரியை . 1996 ரேபிஸ் /ஹைட்ரோ போபியா பற்றிய biology பாடம் ..அது 11 ஆம் வகுப்பு சொல்லி புரிய வைத்தேன் ...படிக்காதவன் பட டயலாக் வைத்து ...பிள்ளைங்களுக்கு அவ்ளோ சந்தோசம் :)

   Delete
 2. அந்த Igor கொடுத்துவைத்தது!!! என்ன அருமையான அரவணைப்பு. மிகவும் ரசித்தோம்...

  ஹஹஹஹ நல்ல குரங்குப்பா....பழக்கப்பட்ட குரங்காக இருக்குமோ..
  வெளியில் உள்ளோர் வந்து கலந்துரையாடல் அருமையான ஒரு விசயம். நிறைய கற்றுக்கொள்வார்கள். நல்ல ஒரு கல்வித்திட்டம். மேலை நாட்டுக் கல்வி முறைகளைப் பார்க்கும் போது ஏக்கம் வரத்தான் செய்கின்றது. தங்கள் மகளுக்கு வாழ்த்துக்கள்! அருமையான பதிவு!

  ReplyDelete
  Replies
  1. /பழக்கப்பட்ட குரங்காக இருக்குமோ?/

   ஹா ஹா இருக்கலாம் :) வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 3. அசத்தற் பதிவு அஞ்சு!..:)

  இரண்டு காளொளிகளும் அருமை!
  கல்வித்திட்டம் கவுன்ஸிலிங் உண்மையில் வரவேற்கத்தக்கது!
  மாணவர்களுக்கும் மிக அவசியமாது!

  சிறப்புச் சித்தி பெற்ற உங்கள் செல்லமகளுக்கும் உங்களுக்கும்
  இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி ..மாணவர்கள் அனைத்தையும் கற்றுக்கறாங்க ..இப்பவே வாரம் இரண்டு மணிநேரம் வாலன்டியர் வேலையும் ஸ்டார்ட் பண்ணனும் அவ .இன்னும் மெயின் பரீட்சைக்கு இரண்டு வருடம் இருக்கு ..அதிலும் நல்லதேர்ச்சி அடையணும்

   Delete
 4. ஆஹா.... அந்த நாலுகால் ஜீவனை மதித்த அந்தக் குடும்பத்தை என்ன சொல்லிப் பாராட்ட...

  குரங்காரின் இந்த வீடியோ போலவே வேறொன்றை சமீபத்தில் வாட்சப்பில் பெற்றேன்.

  ஆப்பிரிக்க இனத்துப் பெண்ணின் இழப்பு வேதனையானது. சேவை மகத்தானது.

  உங்கள் மகளுக்கு எங்கள் பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க . ஸ்ரீராம் .எனக்கு இப்படி காணொளிகள் ரொம்ப விருப்பம்.இங்கு பிள்ளைங்க ரொம்ப அட்வான்ஸ்ட் . அவங்க கேட்டு நாம் நோ சொன்னால் நமக்குத்தான் loss .ஆகவே 90 சதவிதம் லீனியன்டா விடறாங்க அதுவே பேராபத்தில் முடியுது மகள் மெயின் பரீட்சைக்கு இரண்டு வருடம் இருக்கு ..அதிலும் நல்லதேர்ச்சி அடையணும்

   Delete
 5. பொழுதுபோக்காக நடக்கும் சில களியாட்டங்கள் இம்மாதிரி சோகத்தில் முடிவதும் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. ஆம் விச்சு ..உண்மைதான் .வருகைக்கு நன்றி

   Delete
 6. முன்னோர்கள் சேட்டை செம....!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா ..ஆனா அவர் என்ன செய்வார் பணத்தை வச்சி :) வருகைக்கு நன்றி

   Delete
 7. ஒரு தாயின் சேவை... நெகிழ்வு

  ReplyDelete
  Replies
  1. ஆம் அனு அந்த தாய் HSBC வங்கி வேலையை ரிஸைன் செய்திட்டு இப்போ முழு நேரம் இதை செய்றாராம்

   Delete
 8. வெளிநாட்டு வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள முடிந்தது! சுவையான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சகோ சுரேஷ் ..நான் னிறைய எழுத இருக்கேன் நிறை குறை இரண்டும்

   Delete
 9. "//...அந்த பெண்ணின் தாய் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களை இவ்வாறான களியாட்டங்களை தவிர்க்க சொல்லி வலியுறுத்தி வருகிறார் .//"

  தனக்கு ஏற்பட்ட சோகம் வேறு யாருக்கும் வரக்கூடாது என்கிற ஒரு நல்ல என்னத்தை பாராட்டி ஆக வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோ அந்த தாய் HSBC வங்கி வேலையை ரிஸைன் செய்திட்டு இப்போ முழு நேரம் இதை செய்றாராம் .மக ஸ்கூல இருந்து வந்த உடன் அங்கு நடந்த விஷயங்கள் சொல்வா ..எனக்கு ..வருகைக்கு நன்றி

   Delete
 10. //அனைவருக்கும் வணக்கம் :) /// வணக்கம் _()_

  ReplyDelete
  Replies
  1. நானில்லை :)இங்கே

   Delete
 11. டோக்கிப்பிள்ளை கொடுத்துத்தான் வச்சவர்:).

  Congrats and give my best wishes to Sharon.

  என்னாதூஊஊஊஊஊஊஊஊஊஊ அடுத்த வாரம் ஜெலி பீன்ஸ்ஸாஆஆ.. நோஓஓஓஓஓஓஓஓஒ:)

  ReplyDelete
 12. Sharon க்கு என் வாழ்த்துக்கள் அஞ்சு.
  இங்கு வளர்ப்பு பிராணிகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் உண்மையில் ஆச்சரியமே. நான் அருகில் இருக்கும் வீடுகளில் கூடுதலானோர் நாய் வளர்க்கிறார்கள். igor க்கு ஜாலிதான்.
  அவ்வ்வ்வ் குரங்கார்!!!
  நல்ல பகிர்வு அஞ்சு.

  ReplyDelete
 13. igor ரொம்ப லக்கி! :) இப்படி எல்லா வசதிகளும் ஒன்று சேர்ந்து அவருக்கு கிடைச்சிருக்கு. செல்லப் பிராணிகள் வளர்ப்பதில் இது ஒரு பெரிய கஷ்டம் அக்கா. ஊருக்குப் போகையில் ஜீனோவை நல்லபடியா வைச்சுக்க நாங்க டிரிப்பையே டிலே பண்ணினோம், உங்களுக்கே தெரியுமே..ஒரு பெட் ஸிட்டரை ஜீனோக்கு பிடிக்கலை, ஏதோ ஆண்டவன் கருணை மற்றும் நல்ல உள்ளங்களின் பிரார்த்தனைல ஒரு சூப்பர் டூப்பர் பெட் ஸிட்டர் ஜீனோவிற்கு கிடைத்தது எங்க அதிர்ஷ்டம்! ஹ்ம்ம்ம்...கமெண்ட் பெருசாகிரும், ஸோ இத்தோட நிறுத்திக்கறேன்.

  ஷரனுக்கு வாழ்த்துக்கள்..நல்ல தகவல்கள் நிறைந்த நல்ல பதிவு. தொடருங்கோ..

  ReplyDelete