அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/14/15

பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

நட்புக்கள் அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)
நாடோரம் காவல் காக்கும் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல்

நன்றி ....தம்பி சதீஷ் செல்லதுரை
நேற்று முக புத்தகத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட பதிவு..
https://www.facebook.com/photo.php?fbid=813537928681528&set=a.221711681197492.49445.100000759850786&type=1&permPage=1


என்ற வலைப்பூவில் எழுதிவரும் தம்பி சதீஷ் செல்லதுரையின் ஸ்டேடஸ் ..


இது எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களிடமிருந்து வரும் 
சிறிய கருத்து ஆகும்.தயவு செய்து இதனை சமூக வலை தளங்களில் பகிரவும்.படிப்பறிவில்லாத மக்களுக்கும் எடுத்து செல்லவும்.
ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில் நாடோரம் காவல் காக்கும் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் என் தமிழக மக்களுக்கு ..
நாட்டின் எல்லை பகுதியை காவல் காக்க அனுப்பி வைத்த நீங்கள் நாட்டையும் அதன் மண்ணையும் விற்றுக்கொல்வது (எழுத்துப் பிழை அல்ல) வேதனையை தருகிறது.
நமது உயிராதாரமான மண்ணை நிலத்தை தெரிந்தோ தெரியாமலோ நாமும் ,தெரிந்தே ஆளும் அரசாங்கங்களும் அழித்து வருகிறோம்.

மீத்தேன்,அணு உலை என்று அனைத்து ஆபத்துகளையும் பாகுபாடில்லாமால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் சேர்த்து கொண்டிருக்க நாமும் நமது பங்கிற்கு ரியல் எஸ்டேட் பேராசையில் நமது விளை நிலங்களை விற்று தவறு செய்கின்றோம்.
நாளைய நாட்களில் நமது வீடுகளில் சமைத்த அரிசியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் சாப்பிட வேண்டியதாக இருக்கும்.அந்த நிலையில் அவர்களை மீறி தெற்காசியாவின் மாபெரும் நாடான இந்தியா ஒரு துரும்பை கூட கிள்ள இயலாது.
ஆயிரம் சாப்ட்வேர் இஞ்சினியர்களை உருவாக்குவது எளிது.ஆனால் ஓரடி விளை நிலத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.நாம நமது அவசியத்துக்கு மீறி வாங்கி குவிக்கும் ஒவ்வொரு விளை நிலமும் நமது குழந்தைகளுக்கான சுடுகாடு என்பதை உணர்வோமா?
பன்னாட்டு கம்பெனிகளுக்கு உள் நாட்டில் நிலம் கொடுத்து ஆள வைக்கும் அரசுகள் ,கட்சிகள், மக்கள் அனைவருக்கும் எங்களின் சிறிய கேள்வி என்னவென்றால் அப்புறம் எதற்காக மண்ணை காப்பாற்ற எங்களை எல்லையில் நிற்க வைத்துள்ளீர்கள்?
இந்த பொங்கல் திரு நாளில் ஒரு சபதம் எடுப்போம் .....விளை நிலங்களை விற்க மாட்டோம் எனவும் வாங்க மாட்டோம் எனவும். நன்றி .வணக்கம்.
விற்பதற்க்கும் தொலைப்பதற்க்கும் விளை நிலங்கள் வெறும் பணமல்ல ...அது நமது வாழ்வாகும் . தயவு செய்து பகிர மறக்காதீர்கள் .விவாதியுங்கள்.விதையுங்கள்.


நன்றி ....தம்பி சதீஷ் செல்லதுரை

...................................................................................................................................................................

24 comments:

 1. பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா ..

  ReplyDelete
 2. விற்பதற்க்கும் தொலைப்பதற்க்கும் விளை நிலங்கள் வெறும் பணமல்ல..

  உண்மையே...

  நல்ல பகிர்வு.
  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. முக்கியச் செய்திகளும் பகிர்வும் அருமை. பாராட்டுக்கள்.

  அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. //ஓரடி விளை நிலத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.//
  உண்மை ஏஞ்சல்..பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 5. அருமையானதொரு பகிர்வு.
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அஞ்சு.

  ReplyDelete
 6. இந்த மண்ணைக் காக்கத்தானே அவர்கள் எல்லையில் நின்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். நேரடியான தாக்குதல் விடுத்து மறைமுகமாய் மண்ணைக் கைப்பற்ற முனையும் மாபாதகர்களிடமிருந்து மண்ணைக் காப்போம். இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. ஏஞ்சலின்,

  நல்லதொரு பகிர்வு.

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 9. அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 10. அருமையான பதிவை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோ.
  தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. மனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. அருமையான செய்தி அழகாக அமைத்த க்விலிங் வாழ்த்து அட்டை எனச் சிறப்பான பொங்கல் வாழ்த்துக் கண்டு உள்ளம் நிறைந்தேன் அஞ்சு!

  உங்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. அருமையான செய்தி! எப்படி மிஸ் ஆகிவிட்டது என்று தெரியவில்லை...,

  ஹை அழகான க்வில்லிங்க் வாழ்த்து அட்டை! சூப்பர் சகோதரி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. coolsquare this is a popular site for graphics

  ReplyDelete
 17. coolsquare you can to do designer for this site.we told you this site are the best and easy and more comfortable to us and also you.this is safe also like free website.

  ReplyDelete
 18. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

  ReplyDelete
 19. மீ ரொம்ப தாமதமாகிட்டேன்ன்.. வாழ்த்து அட்டை சூப்பர் அஞ்சு.

  ReplyDelete
 20. வாழ்த்து அட்டை சூப்பர். விளை நிலங்கள் வாழ்வாதாரம் விற்பது வருங்காலத்தில் தரப் போகும் துன்பங்களை எடுத்துரைக்கும் படியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்லதோர் பதிவு. பதிவுக்கு நன்றி !

  ReplyDelete
 21. நல்லதோர் வேண்டுகோள்
  நலம்தானே...
  வாழ்த்துக்களுக்கு நன்றி

  ReplyDelete