அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

1/13/15

பொம்மை ......ஆபத்தான போலிகள்



பொம்மை ......ஆபத்தான போலி தயாரிப்புகள் ,   
தாலேட்ஸ் (Phthalates)நச்சு  

எனக்கு நினைவு தெரிந்து நான் வைத்திருந்த முதல் பொம்மை அமெரிக்காவில் உள்ள அம்மாவின் உறவினர் அனுப்பிய ஒரு குழந்தை பொம்மை.நீலநிற கண்களுடன் அழகிய தொப்பி அணிந்து குட்டி frock அம்மா தைத்து வைத்திருந்தாங்க ..எங்க பள்ளி ,ஆலய மற்றும் எந்த இடத்தில் நாடகம் நடை பெற்றாலும் அந்த பொம்மைதான் 
கைக்குழந்தை வேஷத்திற்கு உதவும்.
ஒன்றிரண்டு உறவினர்களே   அதை எடுத்து சென்று விட்டு மீண்டும் திருப்பி கொடுக்க யோசிப்பார்கள் ..அழகு  பொம்மை அது .பிளாஸ்டிக்கினால் ஆனது கடினமா இருக்கும் .இப்ப போல மொபைல் போன் ,cameras  அப்பெல்லாம் இல்லை ..அதனால் அப்பொம்மையின் அழியா நினைவுகள் மட்டும் பொக்கிஷமாய் என்னுடன் ..பொம்மைகள் குழந்தைகலுடன் ஒன்றி பிணைந்தவை ..முன்பு பழங்காலத்தில் மரப்பாச்சி பொம்மைகள்,பின்பு தஞ்சாவூர் பொம்மைகள் இப்போது பார்பி ,ஹான்னா மோன்டனா ,அமெரிக்கன் கேர்ல் ,cabbage patch பொம்மை என பற்பல தினுசு ..டெடி   bear உடன் தான் இக்கால பிள்ளைகளின் தூக்கம் துவங்கும்.




இவை பிரபல அமெரிக்கன் GIRL DOLLS .பார்க்க கொள்ளை அழகு :)என் மகளிடமும் இருந்தது ..வளர்ந்ததும் மைத்துனர் மகளுக்கு கொடுத்து விட்டாள் .எங்க மகள் கிட்ட  சுமார்  35 பார்பி கலெக்சன் இருந்தது இரண்டு  வயது துவங்கி 12 வயதுவரை சேர்த்தது ..அத்தனையும் நான் சாரிட்டிக்கு கொடுத்து விட்டேன் .இங்கு இது ஒரு வியாபார உத்தி .பாபா படத்தில் கத்தி மற்றும் பொருட்கள் விற்பனை ஆச்சே அதுபோல .டிஸ்னிகம்பெனி  படம் ஒன்றை எடுக்கும்போதே சைடில் அந்த கதாபாத்திரங்கள் பொம்மை தயாராகும் ..கிறிஸ்துமஸ் காலம்னா செம பிஸ்னஸ் ..இங்கே பாருங்க ..

ஸ்னோ ஒயிட் ,ரெட்ரைடிங் ஹுட் ,பீட்டர் பான் ,அலாடின் லிட்டில் மெர்மேயிட் என பொம்மைகள் ,அவற்றின் ஆக்ஸசரிஸ் எல்லாம் கிடைக்கும் ..அதுமட்டுமில்லை அந்த காரக்டர்ஸ் படம் பொறித்த பெட்ஷீட் தலையண உறை ,தட்டு கோப்பை பென்ஸில் என  எல்லாமும்  விற்பனைக்கு  தயாராகும் .

நம்ம இந்திய டேஸ்ட்டுக்கு ஷாருக் ,ஐஸ் ,காஜோல் ,ஹ்ரித்திக் கூட  வந்தாச்சி ..எல்லா பொம்மைகளும் 20 பவுண்ட் கிட்ட விலை  வரும் ..இப்பொ சமீபதில் FROZEN என்ற படமும் அதில்  வந்த LET IT GO பாட்டும் பிள்ளைங்க மத்தியில் வைரசாய் பரவி  விட்டது .


.காணொளியில் பாருங்க ..Frozen is the most popular animated film ever made and the fifth-highest-grossing film in box office history - with eye-watering takings of £723 million...




ஒரு ஒரிஜினல் பொம்மையின் விலை 29-35 பிரித்தானிய பவுண்ட்கள் ...அதில் டிஸ்னி லோகோ இருக்கும் .எதை செய்தாவது தங்களது வியாபாரத்தை நிலைநாட்டும் சீனா   விலை தரம் குறைந்த ஆபத்தான இரசாயனம் சேர்த்த  பொம்மைகளை சந்தடி வாக்கில் டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் சந்தையில் இறக்கியது ..விற்றும் தீர்ந்தன ..திடீரென வியாபார தரக் கட்டுப்பாட்டு  அலுவலர்கள் மேற்கொண்ட  நடவடிக்கையில் பல கிடங்குகளில் போலி பொம்மைகள்   கண்டு பிடிக்கப்பட்டன ...அவற்றை  பறிமுதல் செய்து விட்டார்கள் .





இந்த போலிகளில்   புற்று நோய் உண்டாக்கும் ஆபத்தான பொருட்கள் உள்ளனவாம் .  PHTHALATE /தலேட் ..தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் பிளாஸ்டிக் பொம்மை ,உபயோகபொருட்கள் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது.குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்கள் , ஸ்பூன்கள் அனைத்திலும் காணப்படும் முக்கியமான பிளாஸ்டிக் உட்பொருள்  Bisphenol A (BPA) என்ற ஒன்று. உடலில் சுரக்கும் Estrogen Hormone என்ற மிக முக்கியமான சுரப்பியை போன்றே இதுவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. அதாவது மிமிக்ரி செய்யும் .(Estrogen Hormone என்ற சுரப்பிகள் எலும்பு வளர்ச்சி, இதய ஆரோக்கியம், பாலியல் வளர்ச்சி, கருத்தறிப்பது முதற்கொண்ட பல வேலைகளை நம் உடலில் செய்கின்றன.)BPA எனப்படும் பிளாஸ்டிக் உட்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் போன பின் உடலோடு கலந்து எங்கெல்லாம் Estrogen Hormone செயல்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிக்கலை உண்டாக்குகின்றது. இதனால் உடலில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின்றன . மார்பகப் புற்றுநோய் ,ஆண்களில் prostate புற்றுநோய் பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறை,மலட்டுத்தன்மை .பிள்ளைகளில் ADHD (Attention-Deficit Hyperactivity Disorder)..தோல் நோய்கள் ..ஒவ்வாமை ....இப்படி எத்தனையோ பக்க விளைவுகள் ..குழந்தைகள் இயற்கையாவே பல் முளைக்கும் பருவத்தில் கையில் கிடைத்த பொருளை கடிப்பாங்க ..நச்சு தாலேட்ஸ் உமிழ் நீருடன் உடலில் கலக்கும் .சற்று பெரிய பிள்ளைகள் போலி பொம்மைகளுடன் விளையாடிட்டு தெரியாம வாயில் விரல வச்சாலும் நச்சு உடலுக்குள் போகும் .
ஐரோப்பிய  ஒன்றியம் குழந்தைகளுக்கானபொம்மைகளில்  தலேட் 
தடைசெய்துள்ளது .. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர்.
  • DBP (dibutyl phthalate)
  • DNOP (di-n-octyl phthalate)
  • DiNP (diisononyl phthalate)
  • DEP (diethyl phthalate)
  • BBzP (benzyl butyl phthalate)
  • DEHP (di 2-ethyl hexl phthalate)
  • DiDP (diisodecyl phthalate)
  • DnHP (di-n-hexyl phthalate)
  • DMP (dimethyl phthalate)
  • DnOP (di-n-octylphthalate)
  • Bisphenol A (BPA) is another plasticizer
இவை பொம்மை மற்றும் ப்ளாஸ்டிக் பொருள் பாக்கிங்கில் இருந்தால் தவிர்க்கவும் ..குழந்தைகளுடைய பயன்பாட்டு பொருட்களும் விளையாட்டுப் பொருட்களும் நச்சு  பத்தான     இரசாயன கலப்பின்றி செய்யப்படவேண்டுமென்பது  நியதி  ஆனால், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை ஏற்றுமதிசெய்யும் சீனா  போன்ற பெரும்பாலான  பணம்       மட்டும் பிரதானமாக    கொண்ட  நாடுகள், இந்தவிதியைக் கடை பிடிப்பதில்லை . 
அழகுசாதன, விளையாட்டுப் பொருட் களின் மீது, ‘Phthalates free’ என்று அச்சிடவேண்டும் என்பதும் பொதுவிதி. அதைக்கூட செய்ய முடியாத அவை, தாலேட்ஸ் (Phthalates) இன்  வேதிப்பொருள் பெயரையோ, அவற்றின் சுருக்க குறியீட்டையோ DBP (di-n-butyl phthalates), DEP(diethyl phthalates), DEHP, BzHP, DMP, என்று அச்சிடுகின்றனர் பூத கண்ணாடி கொண்டு பார்த்தாலும் . படித்தவர்களுக்கே புரியாத இப்பெயர்கள் சாமான்யருக்கு எப்படி தெரியும் ?




இந்தியாவில் விற்பனையாகும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களில் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்ப்படுத்தும் இரசாயன பொருட்கள் இருக்கக்கூடுமென சுற்று சூழல் பாதுகாப்பு குழு அறிக்கை  தெரிவிக்கின்றது .இன்ன அளவு தாலெட் தான் பிளாஸ்டிக் பொருட்களில் இருக்க வேண்டுமென அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிளாஸ்டிக் ,PHTHALATE பயன்பாட்டுக்கு ஒரு வரைமுறை விகிதம் வைத்துள்ளன ..ஆனா நம்ம இந்தியாவில் அத்தகைய விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை .The Centre for Science and Environment (CSE)  குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளில் மேற்கொண்ட ஆய்வில் அதிக ஆபத்தான அளவுக்கும் அதிகமான  தலேட் இருப்பதை    கண்டு பிடித்துள்ளார்கள் ..  அவற்றில் பெரும்பாலான பொருட்கள் சீன ,தைவான் தாய்லாந்து மற்றும் இந்திய தயாரிப்புக்கள் ..இத்தகைய பொருட்களுக்கு இவ்வித பிணைப்பு கட்டுபாட்டு சட்டதிட்டங்களுமில்லை நம் நாட்டில் .இந்திய தயாரிப்புகளில்  Funskool India Limited  பொருட்களில் non – toxic என்று அச்சிடப்பட்ட பொம்மையினை ஆய்வுக்கு உட்படுத்தியதில், தாலேட் அளவு 162 மடங்கு அதிக அளவு  இருந்த தாகக் கண்டறியப்பட்டுள்ளது.  மூன்று முதல் பதினெட்டு மாதக்குழந்தைகளுக்கான அந்த பொம்மைகள், பெரும்பாதிப்பைத் தருவன என்று ஆய்வுமுடிவு தெரிவித்துள்ளது..சீனாவையோ தைவானையோ குறை சொல்லி பயனில்லை ..நாட்டு மக்களின் நலனை கவனிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை . எங்கள் நாட்டு தயாரிப்புக்களுக்கும் தரக்கட்டுப்பாடு தேவை. மலிவு இந்திய பொருட்களில் உள்ள DEHP , DBP போன்ற Phthalates குழந்தைகளின் நுரைஈரல் கல்லீரல்  ஆகியவற்றை  பாதிக்கின்றன என்று குழந்தைகள்  நல மருத்துவர் கூறுகின்றார்    .மேலும்  அடித்தட்டு மக்கள் விலை மலிவு விளையாட்டு  பொருட்களை உபயோகிக்கிறார்கள் அவற்றில் ஈயம்,காட்மியம் போன்றவை அதிகம்   உள்ளன .

Reference ..http://www.cseindia.org/node/935

பெங்களூரில் இந்த  மையத்தில் Child-friendly, simple wooden toys தயாரிக்கிறார்கள் 
http://www.mayaorganic.com/mo/

பெற்றோர்களே ,குழந்தைகளுக்கு  .இதுபோன்ற .பாதுகாப்பான  விளையாட்டு பொருட்களை  வாங்கி கொடுங்கள் ..
---------------------------------------------------------------------------------------


அனைவருக்கும் இனிய பொங்கல்  வாழ்த்துக்கள் ...

அன்புடன் angelin .







21 comments:

  1. இதிலும் புற்று நோய் ஆபத்தா...? ஐயோ...!

    ReplyDelete
    Replies
    1. எப்போ பிளாஸ்டிக் பயன்பாடு கூடுசோ அதோடு தீமையும் கூட்டி விட்டது உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

      Delete
  2. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. //சீனாவையோ தைவானையோ குறை சொல்லி பயனில்லை.. நாட்டு மக்களின் நலனை கவனிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை..//

    இந்திய அரசின் அலுவலர்கள் கவனிப்பார்கள் (!) என்கின்றீர்கள்?.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அவங்களாவது கவநிக்க்கிரதாவது ..நாம் விழிப்புடன் இருப்போம் .இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அய்யா

      Delete
  4. பயனுள்ள பதிவு அக்கா!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிம்மா மகி

      Delete
  5. மிக மிக அருமையான விழிப்புணர்வுக் கட்டுரை,தகவல். எந்த பொம்மையையுமே குழந்தைகள் வாயில் வைத்துச் சப்பாமல், பற்களால் கடிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

    கூடியவரை ப்ளாஸ்டிக் சாமாங்களைத் தவிர்ப்பது நல்லது. அது டப்பர் வேர், மைக்ரோவேவபிள் என்று சொல்லப்பட்டாலும்.

    நல்ல கட்டுரை சகோதரி! எங்கள் ஆதரவும் உண்டு. பல வருடங்களாக....

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ ...டிஸ்னி போலி பொம்மைகள் பிடிப்பட்டது எங்க பகுதில .அதான் சுட சுட பகிர்ந்தேன் .முன்பு கண்ணாடி ஹார்லிக்ஸ் பாட்டில்தான் சாம்பார் ரசம் கொண்ண்டு செல்ல உபயோகிப்போம் ஆனா எப்ப்போ பிளாஸ்டிக் பயன்பாடு கூடுசோ அதோடு தீமையும் கூட்டி விட்டது

      Delete
  6. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும், மனமர்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்! உழவு செழித்து, இது போன்ற பூமிக்கும், மக்களுக்கும் கேடு விளைவிக்கும் பொருட்களைத் தவிர்த்து உழவு செழிக்கச் செய்வோம்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் கீதா குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் .நான் கார்ட்ஸ் செய்தாலும் தொட்டமிட்டாலும் இயற்கை கோ கிரீன் என்பதை கொள்கையா வச்சிருக்கேன் சகோ மீள்சுழற்சியில் ஆதிக்க ஆர்வமுண்டு

      Delete
  7. குழந்தைகளின் பொம்மையில் போலி ...கொடுமை

    நாம் தான் எ ச்சரிக்கையாக இருக்க வேண்டும் ...விழிப்புணர்வு செய்திகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றிம்மா அனு ..முந்தி காலத்தில் இதெல்லாமில்ல்லை கொடிய நோய் ,அல்லெர்ஜிசும் மில்லை இப்போ :(

      Delete
  8. விழிப்புணர்வு பதிவு அருமை சகோ. குழந்தைகள் விஷயத்திலும் எப்படி எல்லாம் நடக்குது. நன்றி

    ReplyDelete
    Replies
    1. உமையாள் எங்கே உங்களை பார்க்கலை கொஞ்ச நாளா ...வருகைக்கு நன்றிம்மா

      Delete
  9. இப்படி எத்தனை தெரியாத விடயங்களை நாம் கையாளுகின்றோம். இங்கு குழந்தைகளுக்கான பொருட்களுக்குதான் அதிக விலையையும் கொடுக்கவேண்டி இருக்கு.கூடவே ஆபத்துக்கும் சேர்த்து. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு அஞ்சு. நன்றி.

    ReplyDelete
  10. நல்ல விழிப்புணர்வு பதிவு.
    FROZEN வந்தாலும் வந்தது,எந்த ஒரு குழந்தைகளுக்கான ஒரு பொருளை எடுத்டாலும் இந்த FROZEN படம் போட்டிருக்கும். அந்த பொருளின் தரமோ மிக மட்டமாகவே இருக்கும். இருந்தாலும் குழந்தைகள் அந்த பொருள் தான் வேண்டும் என்று அடம் பிடிப்பார்கள். எல்லாம் வியாபார உத்தி என்ன செய்வது.

    ReplyDelete
  11. சீனா வெடிபொருட்கள் விஷயத்தில் இந்தியாவில் இதே போன்ற ஆபத்தான விளையாட்டில் ஈடுபட்டது. இங்கு பொம்மைகள் விஷயத்திலுமா? கொடுமையான விஷயம். தேநீர் சாப்பிடும் பிளாஸ்டிக் கப்புகளிலேலேயே உபயோகப்படுத்துவதால் வரும் ஆபத்து பற்றியும் இங்கு பேசுகிறார்கள்.

    எல்லாவற்றிலும் ஆபத்து இருக்கிறது. விழிப்புடன் இருப்பது அவசியம்.

    ReplyDelete
  12. எங்கும் போலிகள் உண்டு போல! பகிர்வுக்கு நன்றி! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. பயனுள்ள பதிவு.
    தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. இந்த வாரம் ஆ.வியில் இதைவைத்து ஒரு கதைத்துணுக்கு வந்திருகிறது அருமையாக இருக்கிறது ..

    ReplyDelete