அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

சமையல் பக்கம் வரவிருக்கும் பதிவுகள் மலர் வடாம் ,அரிசி கிள்ளு  வற்றல் ,ரசக்குணுக்கு , வரகரிசி வடாம் .இதெல்லாம் பார்த்து யாரேனும் மயங்கி விழுந்தால் கம்பெனி பொறுப்பேற்கமாட்டாது Have a Great Day Dear Friends :)

1/26/15

Loud speaker 15...ஆட்டோகிராப் !மாஷா ., வீட்டுத்தோட்டம் .. காரட் வளர்த்தல்ஆட்டோகிராப் !
இங்கே இங்கிலாந்தில் பள்ளிமாணவ மாணவர்களுக்கு சிறு 
வயது முதல் புத்தகம் படிக்கும் ஆர்வம் வளர வேண்டுமென அனைவரையும் ஊக்குவிப்பார்கள் .
அதனால் ஒரு வயது பிள்ளை கூட ரைம் டைம்
என அம்மாவோடு லைப்ரரியில் வந்து அமர்ந்து பிற
பிள்ளைகளுடன்பழகி ரைம்ஸ் ஸ்டோரிஸ் எல்லாம் கேட்டு
செல்வார்கள் .மழலைகளுக்கும் லைப்ரரி கார்ட் உண்டு :)ஒரு பிள்ளை 20 புத்தகம் வரை லைப்ரரியில் இருந்து எடுத்து 
செல்லலாம் .அனைத்தும் இலவசம் .
என் மகளுக்கும் சிறு வயது முதல் இந்த வாசிக்கும் பழக்கம் உண்டு ..


Michael Morpurgo,hans christian andersen,ஆன் பிரான்க் ,
Anthony Browne,Jacqueline Wilson,,caroline lawrence இவர்களெல்லாம்


மகளின் விருப்ப எழுத்தாளர்கள் .


மகளின் புத்தக அலமாரி ..
மகள் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது இவளின் வகுப்பை
சேர்ந்த ஐந்து பேரை தேர்வு செய்து Anthony Browne என்ற 
எழுத்தாளரை சந்திக்க அழைத்து சென்றனர் .
இரவோடிரவாக அமர்ந்து ஒரு அழகிய படம் அவர் எழுதிய கதையின் (கொரில்லா காரக்டர் )வரைந்து அருகில்
அவரின் படத்தையும் வரைந்து ஒரு வாழ்த்து அட்டை செய்து எடுத்து
சென்றாள் ..


அவரை ஒரு பெரிய கால்பந்து ஸ்டேடியத்தில் வைத்து அனைத்து
பள்ளி மாணவர்களும் சந்தித்தனர்ஆசிரியை இவளுக்காக பெர்மிஷன்
கேட்டு அவரிடம் அழைத்து சென்று உள்ளார் .


மகள் தனது படத்தை கொடுத்து பின்பு நான் முன்யோசனையாக வாங்கி
அனுப்பிய ஆட்டோக்ராப் நோட்டில் அவரது கையொப்பத்தை பெற்றாள் .
அது இன்னும் பத்திரமாக இருக்கு ..
சில விஷயங்களை நாம் தான் சொல்லிகொடுக்க வேண்டும் .


அன்று சென்ற 200 பிள்ளைகளில் இவள் மட்டுமே ஆட்டோக்ராப்
வாங்கியிருக்கா .
மேலும் இவளுடன் சென்ற மற்ற ஐந்து பிள்ளைகளும் இவளிடம்
வாழ்த்து அட்டையை வாங்கி உன் பேர் மட்டும் இருந்தா நல்லா
இருக்காது எங்க ஐந்து பேரையும் நாங்களே எழுதறோம் அதில்னு எழுதியிருக்காங்க !!!!!!!!!!!!!!


ரெண்டாங்க்ளாசில் என்னா ஒரு அறிவு :)))))முன் யோசனை


(உடன் சென்றஐந்தும் பஞ்சாப் /குஜராத் /வங்காளி /ஒரு பிரிட்டிஷ் /
ஒரு பிரெஞ்ச் .)
பிறகு இவள் ஆட்டோக்கிராப் நோட்டில் இருந்து தங்களுக்கு சில
பக்கங்கள் வேண்டுமென கேட்டார்களாம் !
விவரமாத்தான் இருக்காங்க பிள்ளைங்க
இப்படி ruth eastham,henry winkler,adam isaac,caroline lawrence என
சிலரின் ஆட்டோக்ராப் என் மகள் வாங்கி வச்சிருக்கா .


இது நேற்று எங்க ஆலய 60 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு
வருகைதந்த ஆர்ச் பிஷப் ஜான் சென்டமூ அவர்களிடம் மகள் பெற்ற
ஆட்டோக்ராப் ..

................................................................................................................................................................


மாஷா ..இந்த பூனையின் பெயர் மாஷா ..ரஷ்யாவில் ஒரு அடுக்குமாடி
குடியிருப்பில்வசிப்போர் கொடுக்கும் மீதமான உணவை உண்டு
அங்கு வசிக்கிறது .


ஒரு நாள் ground floor படிக்கட்டு அருகில் ஒரு அட்டை பெட்டி  அருகிலிருந்து maasha  சத்தமிட்டபடி இருந்ததாம் .
குப்பை கொட்ட சென்ற இந்த பெண்மணி எட்டி பார்த்தபோது ஒரு
குழந்தை பெட்டியில் இருந்தாம் ..
அருகில் குளிர் தாக்காமல் குழந்தையை அரவணைத்தபடி இந்த பூனை !
.ஐந்தறிவு ஜீவனுக்கு Iஇருக்கும் தாய்மை உணர்வு கூட பெற்ற
தாய்க்கு இல்லை :(


http://www.bbc.co.uk/news/world-europe-30893297


--------------------------------------------------------------------------------------------------------------------------------------------


வீட்டுத்தோட்டம் ..


காரட் ..எங்க வீட்டு அறுவடை ...


.தொட்டியில் காரட் வளர்த்தல் ..


20 " ஆழம் அல்லது அதை விட ஆழமான தொட்டி அல்லது சதுர /செவ்வக வடிவ கலனில்முக்கால் பாகம் கம்போஸ்ட் உரமண் கலவையினால் நிரப்ப வேண்டும் .

கலப்பு உர மண் கலவை இலகுவாக நெகிழும் தன்மையுடன் இருக்கவேண்டும் .சிறு கற்கள் போன்றவற்றை தொட்டியில் இருந்து அப்புறப்படுத்தனும் ..இல்லையென்றால் ..அறுவடை செய்யும்போது குறை வளர்ச்சி /பல வடிவங்களில் கோணல் மாணலான காரட்கள் கிடைக்கும் ..உதாரணம் கொல்லாஜில் கடைசி படம் ..கல் ஒன்று வேர் கீழ் நோக்கி வளர தடை செய்ததால் அதன் வடிவம் பாருங்கள் :)


தொட்டியில் நிரப்பிய கம்போஸ்ட் மீது சிறிதளவு காரட் விதைகளை பெரிய கண் சல்லடை மீது வைத்து தூவலாம் காரட் விதை மிக சிறியவை .விதைகளுக்கிடையில் இடைவெளி மிக அவசியம் .


இதற்க்கு ஒரு கைப்பிடி மணலுடன் விதைகளை கலந்தும் தூவலாம் .இது அதிகப்படியான நீர் தொட்டியில் தேங்காமலிருக்க உதவும்.

பிறகு விதைகள் மீது சிறிது கம்போஸ்டால் மூட வேண்டும் .
நீர் மிக மெதுவா தெளிப்பானால் தெளிக்கணும் .தொட்டி கீழ் செங்கல் வைக்க வேண்டும் நீர் தேங்காமல் எளிதில் வெளியேற இது உதவும
காரட் செடி விதைகள் துளிர்க்க இரண்டு வாரங்களாகும் ..இடைவெளி இல்லாமல் முளைத்த சிறு நாற்று செடிகளை மெதுவா கத்திரித்து விடணும் .பிடுங்க கூடாது .


காலநிலை தட்ப வெப்பம் பொருத்து விளைச்சல் இருக்கும் .
60இலிருந்து 75 நாட்களில் அறுவடை செய்யலாம் .


காரட் கீரையை வீணாக்காதீங்க வெஜிடபிள் சூப் செய்யும்போதும் ,காரட் பொரியலிலும் சேர்த்து சமைக்கலாம் .
நட்புடன் ஏஞ்சல் .
1/14/15

பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)

நட்புக்கள் அனைவருக்கும் தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் :)
நாடோரம் காவல் காக்கும் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல்

நன்றி ....தம்பி சதீஷ் செல்லதுரை
நேற்று முக புத்தகத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட பதிவு..
https://www.facebook.com/photo.php?fbid=813537928681528&set=a.221711681197492.49445.100000759850786&type=1&permPage=1


என்ற வலைப்பூவில் எழுதிவரும் தம்பி சதீஷ் செல்லதுரையின் ஸ்டேடஸ் ..


இது எல்லைப்பாதுகாப்பு படை வீரர்களிடமிருந்து வரும் 
சிறிய கருத்து ஆகும்.தயவு செய்து இதனை சமூக வலை தளங்களில் பகிரவும்.படிப்பறிவில்லாத மக்களுக்கும் எடுத்து செல்லவும்.
ஊரெல்லாம் பொங்கல் பொங்கும் இத்தருணத்தில் நாடோரம் காவல் காக்கும் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்து ஒரு வேண்டுதல் என் தமிழக மக்களுக்கு ..
நாட்டின் எல்லை பகுதியை காவல் காக்க அனுப்பி வைத்த நீங்கள் நாட்டையும் அதன் மண்ணையும் விற்றுக்கொல்வது (எழுத்துப் பிழை அல்ல) வேதனையை தருகிறது.
நமது உயிராதாரமான மண்ணை நிலத்தை தெரிந்தோ தெரியாமலோ நாமும் ,தெரிந்தே ஆளும் அரசாங்கங்களும் அழித்து வருகிறோம்.

மீத்தேன்,அணு உலை என்று அனைத்து ஆபத்துகளையும் பாகுபாடில்லாமால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் சேர்த்து கொண்டிருக்க நாமும் நமது பங்கிற்கு ரியல் எஸ்டேட் பேராசையில் நமது விளை நிலங்களை விற்று தவறு செய்கின்றோம்.
நாளைய நாட்களில் நமது வீடுகளில் சமைத்த அரிசியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துதான் சாப்பிட வேண்டியதாக இருக்கும்.அந்த நிலையில் அவர்களை மீறி தெற்காசியாவின் மாபெரும் நாடான இந்தியா ஒரு துரும்பை கூட கிள்ள இயலாது.
ஆயிரம் சாப்ட்வேர் இஞ்சினியர்களை உருவாக்குவது எளிது.ஆனால் ஓரடி விளை நிலத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல.நாம நமது அவசியத்துக்கு மீறி வாங்கி குவிக்கும் ஒவ்வொரு விளை நிலமும் நமது குழந்தைகளுக்கான சுடுகாடு என்பதை உணர்வோமா?
பன்னாட்டு கம்பெனிகளுக்கு உள் நாட்டில் நிலம் கொடுத்து ஆள வைக்கும் அரசுகள் ,கட்சிகள், மக்கள் அனைவருக்கும் எங்களின் சிறிய கேள்வி என்னவென்றால் அப்புறம் எதற்காக மண்ணை காப்பாற்ற எங்களை எல்லையில் நிற்க வைத்துள்ளீர்கள்?
இந்த பொங்கல் திரு நாளில் ஒரு சபதம் எடுப்போம் .....விளை நிலங்களை விற்க மாட்டோம் எனவும் வாங்க மாட்டோம் எனவும். நன்றி .வணக்கம்.
விற்பதற்க்கும் தொலைப்பதற்க்கும் விளை நிலங்கள் வெறும் பணமல்ல ...அது நமது வாழ்வாகும் . தயவு செய்து பகிர மறக்காதீர்கள் .விவாதியுங்கள்.விதையுங்கள்.


நன்றி ....தம்பி சதீஷ் செல்லதுரை

...................................................................................................................................................................

1/13/15

பொம்மை ......ஆபத்தான போலிகள்பொம்மை ......ஆபத்தான போலி தயாரிப்புகள் ,   
தாலேட்ஸ் (Phthalates)நச்சு  

எனக்கு நினைவு தெரிந்து நான் வைத்திருந்த முதல் பொம்மை அமெரிக்காவில் உள்ள அம்மாவின் உறவினர் அனுப்பிய ஒரு குழந்தை பொம்மை.நீலநிற கண்களுடன் அழகிய தொப்பி அணிந்து குட்டி frock அம்மா தைத்து வைத்திருந்தாங்க ..எங்க பள்ளி ,ஆலய மற்றும் எந்த இடத்தில் நாடகம் நடை பெற்றாலும் அந்த பொம்மைதான் 
கைக்குழந்தை வேஷத்திற்கு உதவும்.
ஒன்றிரண்டு உறவினர்களே   அதை எடுத்து சென்று விட்டு மீண்டும் திருப்பி கொடுக்க யோசிப்பார்கள் ..அழகு  பொம்மை அது .பிளாஸ்டிக்கினால் ஆனது கடினமா இருக்கும் .இப்ப போல மொபைல் போன் ,cameras  அப்பெல்லாம் இல்லை ..அதனால் அப்பொம்மையின் அழியா நினைவுகள் மட்டும் பொக்கிஷமாய் என்னுடன் ..பொம்மைகள் குழந்தைகலுடன் ஒன்றி பிணைந்தவை ..முன்பு பழங்காலத்தில் மரப்பாச்சி பொம்மைகள்,பின்பு தஞ்சாவூர் பொம்மைகள் இப்போது பார்பி ,ஹான்னா மோன்டனா ,அமெரிக்கன் கேர்ல் ,cabbage patch பொம்மை என பற்பல தினுசு ..டெடி   bear உடன் தான் இக்கால பிள்ளைகளின் தூக்கம் துவங்கும்.
இவை பிரபல அமெரிக்கன் GIRL DOLLS .பார்க்க கொள்ளை அழகு :)என் மகளிடமும் இருந்தது ..வளர்ந்ததும் மைத்துனர் மகளுக்கு கொடுத்து விட்டாள் .எங்க மகள் கிட்ட  சுமார்  35 பார்பி கலெக்சன் இருந்தது இரண்டு  வயது துவங்கி 12 வயதுவரை சேர்த்தது ..அத்தனையும் நான் சாரிட்டிக்கு கொடுத்து விட்டேன் .இங்கு இது ஒரு வியாபார உத்தி .பாபா படத்தில் கத்தி மற்றும் பொருட்கள் விற்பனை ஆச்சே அதுபோல .டிஸ்னிகம்பெனி  படம் ஒன்றை எடுக்கும்போதே சைடில் அந்த கதாபாத்திரங்கள் பொம்மை தயாராகும் ..கிறிஸ்துமஸ் காலம்னா செம பிஸ்னஸ் ..இங்கே பாருங்க ..

ஸ்னோ ஒயிட் ,ரெட்ரைடிங் ஹுட் ,பீட்டர் பான் ,அலாடின் லிட்டில் மெர்மேயிட் என பொம்மைகள் ,அவற்றின் ஆக்ஸசரிஸ் எல்லாம் கிடைக்கும் ..அதுமட்டுமில்லை அந்த காரக்டர்ஸ் படம் பொறித்த பெட்ஷீட் தலையண உறை ,தட்டு கோப்பை பென்ஸில் என  எல்லாமும்  விற்பனைக்கு  தயாராகும் .

நம்ம இந்திய டேஸ்ட்டுக்கு ஷாருக் ,ஐஸ் ,காஜோல் ,ஹ்ரித்திக் கூட  வந்தாச்சி ..எல்லா பொம்மைகளும் 20 பவுண்ட் கிட்ட விலை  வரும் ..இப்பொ சமீபதில் FROZEN என்ற படமும் அதில்  வந்த LET IT GO பாட்டும் பிள்ளைங்க மத்தியில் வைரசாய் பரவி  விட்டது .


.காணொளியில் பாருங்க ..Frozen is the most popular animated film ever made and the fifth-highest-grossing film in box office history - with eye-watering takings of £723 million...
ஒரு ஒரிஜினல் பொம்மையின் விலை 29-35 பிரித்தானிய பவுண்ட்கள் ...அதில் டிஸ்னி லோகோ இருக்கும் .எதை செய்தாவது தங்களது வியாபாரத்தை நிலைநாட்டும் சீனா   விலை தரம் குறைந்த ஆபத்தான இரசாயனம் சேர்த்த  பொம்மைகளை சந்தடி வாக்கில் டிசம்பர் மாதம் இங்கிலாந்தில் சந்தையில் இறக்கியது ..விற்றும் தீர்ந்தன ..திடீரென வியாபார தரக் கட்டுப்பாட்டு  அலுவலர்கள் மேற்கொண்ட  நடவடிக்கையில் பல கிடங்குகளில் போலி பொம்மைகள்   கண்டு பிடிக்கப்பட்டன ...அவற்றை  பறிமுதல் செய்து விட்டார்கள் .

இந்த போலிகளில்   புற்று நோய் உண்டாக்கும் ஆபத்தான பொருட்கள் உள்ளனவாம் .  PHTHALATE /தலேட் ..தாலேட்ஸ் (Phthalates) இல்லாமல் பிளாஸ்டிக் பொம்மை ,உபயோகபொருட்கள் உருவாக்கப்படுவது இல்லை. தாலேட்ஸ்தான் பிளாஸ்டிக்கை மென்மையாக்கவும் வளைக்கவும் உதவுகிறது.குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் வாட்டர் பாட்டில்கள் , ஸ்பூன்கள் அனைத்திலும் காணப்படும் முக்கியமான பிளாஸ்டிக் உட்பொருள்  Bisphenol A (BPA) என்ற ஒன்று. உடலில் சுரக்கும் Estrogen Hormone என்ற மிக முக்கியமான சுரப்பியை போன்றே இதுவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. அதாவது மிமிக்ரி செய்யும் .(Estrogen Hormone என்ற சுரப்பிகள் எலும்பு வளர்ச்சி, இதய ஆரோக்கியம், பாலியல் வளர்ச்சி, கருத்தறிப்பது முதற்கொண்ட பல வேலைகளை நம் உடலில் செய்கின்றன.)BPA எனப்படும் பிளாஸ்டிக் உட்பொருள் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்குள் போன பின் உடலோடு கலந்து எங்கெல்லாம் Estrogen Hormone செயல்படுகின்றனவோ, அங்கெல்லாம் சிக்கலை உண்டாக்குகின்றது. இதனால் உடலில் புற்றுநோய் கட்டிகள் உண்டாகின்றன . மார்பகப் புற்றுநோய் ,ஆண்களில் prostate புற்றுநோய் பெண் பிள்ளைகள் பூப்பெய்தும் வயது உலகளாவிய ரீதியில் குறைந்து கொண்டு வருதல், விந்தணுக்களின் எண்ணிக்கை குறை,மலட்டுத்தன்மை .பிள்ளைகளில் ADHD (Attention-Deficit Hyperactivity Disorder)..தோல் நோய்கள் ..ஒவ்வாமை ....இப்படி எத்தனையோ பக்க விளைவுகள் ..குழந்தைகள் இயற்கையாவே பல் முளைக்கும் பருவத்தில் கையில் கிடைத்த பொருளை கடிப்பாங்க ..நச்சு தாலேட்ஸ் உமிழ் நீருடன் உடலில் கலக்கும் .சற்று பெரிய பிள்ளைகள் போலி பொம்மைகளுடன் விளையாடிட்டு தெரியாம வாயில் விரல வச்சாலும் நச்சு உடலுக்குள் போகும் .
ஐரோப்பிய  ஒன்றியம் குழந்தைகளுக்கானபொம்மைகளில்  தலேட் 
தடைசெய்துள்ளது .. சில உற்பத்தியாளர்கள் தாமாகவே முன்வந்து பாலிகார்பனேட் பாட்டில்களில் BPA ன் பயன்பாட்டை முற்றிலும் நீக்கிவிட்டனர்.
 • DBP (dibutyl phthalate)
 • DNOP (di-n-octyl phthalate)
 • DiNP (diisononyl phthalate)
 • DEP (diethyl phthalate)
 • BBzP (benzyl butyl phthalate)
 • DEHP (di 2-ethyl hexl phthalate)
 • DiDP (diisodecyl phthalate)
 • DnHP (di-n-hexyl phthalate)
 • DMP (dimethyl phthalate)
 • DnOP (di-n-octylphthalate)
 • Bisphenol A (BPA) is another plasticizer
இவை பொம்மை மற்றும் ப்ளாஸ்டிக் பொருள் பாக்கிங்கில் இருந்தால் தவிர்க்கவும் ..குழந்தைகளுடைய பயன்பாட்டு பொருட்களும் விளையாட்டுப் பொருட்களும் நச்சு  பத்தான     இரசாயன கலப்பின்றி செய்யப்படவேண்டுமென்பது  நியதி  ஆனால், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை ஏற்றுமதிசெய்யும் சீனா  போன்ற பெரும்பாலான  பணம்       மட்டும் பிரதானமாக    கொண்ட  நாடுகள், இந்தவிதியைக் கடை பிடிப்பதில்லை . 
அழகுசாதன, விளையாட்டுப் பொருட் களின் மீது, ‘Phthalates free’ என்று அச்சிடவேண்டும் என்பதும் பொதுவிதி. அதைக்கூட செய்ய முடியாத அவை, தாலேட்ஸ் (Phthalates) இன்  வேதிப்பொருள் பெயரையோ, அவற்றின் சுருக்க குறியீட்டையோ DBP (di-n-butyl phthalates), DEP(diethyl phthalates), DEHP, BzHP, DMP, என்று அச்சிடுகின்றனர் பூத கண்ணாடி கொண்டு பார்த்தாலும் . படித்தவர்களுக்கே புரியாத இப்பெயர்கள் சாமான்யருக்கு எப்படி தெரியும் ?
இந்தியாவில் விற்பனையாகும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களில் குழந்தைகளுக்கு தீங்கு ஏற்ப்படுத்தும் இரசாயன பொருட்கள் இருக்கக்கூடுமென சுற்று சூழல் பாதுகாப்பு குழு அறிக்கை  தெரிவிக்கின்றது .இன்ன அளவு தாலெட் தான் பிளாஸ்டிக் பொருட்களில் இருக்க வேண்டுமென அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பிளாஸ்டிக் ,PHTHALATE பயன்பாட்டுக்கு ஒரு வரைமுறை விகிதம் வைத்துள்ளன ..ஆனா நம்ம இந்தியாவில் அத்தகைய விதிமுறைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை .The Centre for Science and Environment (CSE)  குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளில் மேற்கொண்ட ஆய்வில் அதிக ஆபத்தான அளவுக்கும் அதிகமான  தலேட் இருப்பதை    கண்டு பிடித்துள்ளார்கள் ..  அவற்றில் பெரும்பாலான பொருட்கள் சீன ,தைவான் தாய்லாந்து மற்றும் இந்திய தயாரிப்புக்கள் ..இத்தகைய பொருட்களுக்கு இவ்வித பிணைப்பு கட்டுபாட்டு சட்டதிட்டங்களுமில்லை நம் நாட்டில் .இந்திய தயாரிப்புகளில்  Funskool India Limited  பொருட்களில் non – toxic என்று அச்சிடப்பட்ட பொம்மையினை ஆய்வுக்கு உட்படுத்தியதில், தாலேட் அளவு 162 மடங்கு அதிக அளவு  இருந்த தாகக் கண்டறியப்பட்டுள்ளது.  மூன்று முதல் பதினெட்டு மாதக்குழந்தைகளுக்கான அந்த பொம்மைகள், பெரும்பாதிப்பைத் தருவன என்று ஆய்வுமுடிவு தெரிவித்துள்ளது..சீனாவையோ தைவானையோ குறை சொல்லி பயனில்லை ..நாட்டு மக்களின் நலனை கவனிக்க வேண்டியது இந்திய அரசின் கடமை . எங்கள் நாட்டு தயாரிப்புக்களுக்கும் தரக்கட்டுப்பாடு தேவை. மலிவு இந்திய பொருட்களில் உள்ள DEHP , DBP போன்ற Phthalates குழந்தைகளின் நுரைஈரல் கல்லீரல்  ஆகியவற்றை  பாதிக்கின்றன என்று குழந்தைகள்  நல மருத்துவர் கூறுகின்றார்    .மேலும்  அடித்தட்டு மக்கள் விலை மலிவு விளையாட்டு  பொருட்களை உபயோகிக்கிறார்கள் அவற்றில் ஈயம்,காட்மியம் போன்றவை அதிகம்   உள்ளன .

Reference ..http://www.cseindia.org/node/935

பெங்களூரில் இந்த  மையத்தில் Child-friendly, simple wooden toys தயாரிக்கிறார்கள் 
http://www.mayaorganic.com/mo/

பெற்றோர்களே ,குழந்தைகளுக்கு  .இதுபோன்ற .பாதுகாப்பான  விளையாட்டு பொருட்களை  வாங்கி கொடுங்கள் ..
---------------------------------------------------------------------------------------


அனைவருக்கும் இனிய பொங்கல்  வாழ்த்துக்கள் ...

அன்புடன் angelin .1/9/15

Loud speaker ...14...

அனைவருக்கும் வணக்கம் :)   

இன்றைய ஒலிபெருக்கி செய்திகள் ..Igor ,the bull dog,, பிக்பாக்கெட் அடிக்கும் நம்ம முன்னோர் :)..ஒரு தாயின் சேவை ,பிரித்தானிய கல்வி முறை ..

முதலில் Igor  ..இவர் பிரெஞ்ச் புல் dog .இவரது உரிமையாளர்கள் நோர்வே நாட்டினர் .இவர்கள் விடுமுறைக்கு தாய்லாந்து செல்ல தயாரானார்கள் .பெரும்பாலான வெளிநாடுகளில் வளர்ப்பு  பிராணிகளை அவற்றுக்கென உள்ளல pet ஹோம்சில் ஒரு தொகை  செலுத்தி விடுவார்கள் .பயணம் முடிந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வர் ..இந்த குடும்பம் ...இது வரை igor ஐ பிரிந்திருந்ததில்லை ..அதற்கும் பிரிவு வலி  தரும் என்பதை உணர்ந்த குடும்பத்தலைவன் என்ன செய்தார் என்பதை காணொளியில் பாருங்கள் !!

ஹாஆஹாஅ :)      இதை டெய்லி மெயிலில் பார்த்தேன் .பண ஆசை இவருக்கும் வந்துடுச்சா ?:)

அடுத்து ஒரு உண்மை சம்பவம் .மகள் படிக்கும் பள்ளியில் வாரம் ஒருவர் 
வெளியிடங்களில் இருந்து வருகை தந்து மாணவர்கள் முன் பேச வருவார்கள் .போதை பழக்கத்திலிருந்து மீண்ட ,முன்னாள் குற்றவாளிகள்,விபத்தில் அங்கஹீனமானோர் ,பிரபல விளையாட்டு ,இசை ,காவல்துறையினர் ,எங்க பகுதி  மேயர் கவுன்சிலர் என பலரும் வருவார்கள் . சில நாட்கள் முன்  ஒரு தாய் ஆப்பிரிக்க இனத்தவர் வந்து பிள்ளைகளுடன் கலந்துரையாடினாராம் ..

அவரது மகள் 2001 ஆம் ஆண்டு தனது 16வது பிறந்தநாளில் முதன்முறையாக நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார் அங்கு இருட்டு நேரம் gang fight இல் யாரோ அடையாளம் தெரியாமல் இப்பெண்ணை மற்றும் உடன் சென்ற ஐந்து பேரையும் சுட்டு கொன்றார்கலாம் .கொன்றவன் போலீசில் மாட்டிவிட்டான் .ஆனால் ஆறு இளம் உயிர்கள்:(...அந்த பெண்ணின் தாய் அனைத்து பள்ளிகளுக்கும் சென்று  மாணவர்களை இவ்வாறான களியாட்டங்களை தவிர்க்க சொல்லி வலியுறுத்தி வருகிறார் .

.....................................................................................................................................................................மகள் பள்ளியில் mock டெஸ்ட் நடைபெற்றது A * மற்றும் A பெரும்பாலான  பாடங்களில் எடுத்திருக்கா .பிஸிகல் எஜுகெஷன் மட்டும் c ..
விளையாட்டில் ஆர்வம் குறைவு ..
அவர்களின் பாடத்திட்டம் வித்யாசமானது .ability  grouping என்கிரார்கள் .

விவரம் இங்கே 
.எங்க மகள் அனைத்து பாடத்திலும் set 1 இல்  இருக்கா .
வகுப்பில் 5 செட் இருக்கும் அவரவர் கற்கும் திறனுக்கேற்ப ஒரே பாடத்தை சொல்லி தருவாங்க ஆறு செக்ஸன் இலுள்ள செட் ஒன்றில்  உள்ள மாணவர் ஒன்றாக கற்பிக்கபடுவர் ..11 ஆம் வகுப்பு இறுதியில் செட் 5 இலுள்ள மாணவ மாணவியும் A * எடுத்துள்ளார்களாம் ..
எங்க கிறிஸ்துமஸ் விடுமுறை  இம்முறை சந்தோஷமாக கழிந்தது .வாழ்த்திய அனைவருக்கும் நன்றி ..


அடுத்த பதிவுக்கான குறியீடு இதில் இருக்கு :)
gluten free ,gelatin free ,GMO free nut free jelly beans 

அன்புடன் ஏஞ்சல் ..

                                                                       

1/1/15

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:) HAPPY NEW YEAR 2015 /QUILLING,

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர்கள் அனைவருக்கும் :)அன்புடன் ஏஞ்சலின் .