அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/31/15

வருக வருக 2016 :)

விடை கொடு  2015   வருக வருக 2016 
=====================================ஒரு ஊரில் கடற்கரையோரம் ஒரு குள்ள நரி வசித்து வந்தது ..கரையோரம் வசித்ததால் அதற்க்கு ராஜபோக வாழ்க்கை ..தினந்தோறும் வயிறுபுடைக்க மீன் கருவாடு என நன்கு உண்டு கொழுத்து இருந்தது அந்த நரி ..உணவு தட்டுப்பாடே அதற்க்கு ஏற்பட்டதில்லை ஆனாலும் எப்பவும் நாலு கருவாட்டுதுண்டங்களை எடுத்து குழி தோண்டி புதைத்து வைக்குமாம் .பசித்த நேரம் உண்ணலாமே அதற்குதான் .இப்படியாக நாட்கள் வருடங்கள் ஓடியது .நரிக்கும் வயது கூடி மூப்படைந்து சாமிகிட்ட போய் சேர்ந்தது .சொர்க்கத்தின் வாசலில் கடவுளின் அசிஸ்டன்ட் நின்றுகொண்டு வருகை தருபவர்களை அன்போடு ஆரத்தழுவி வரவேற்றுகொண்டிருந்தார் .நரிக்கு முன் போனவம்களை உள்ளே அனுப்பிவிட்டு திரும்பினாராம் கடவுளின் அசிஸ்டன்ட்..அப்போ அவருக்கு வித்தியாசமான ஒரு மணம் நாசியை தீண்டியது ..என்னவென்று கண்டுபிடிக்க அதிக நேரமெடுக்கவில்லை அவருக்கு.
நரியை பார்த்து ..நரியாரே உங்களுடன் கொண்டு வந்த அந்த கருவாட்டு மூட்டையை வீசி விடுங்கள் அப்போதான் சொர்க்கம் செல்ல முடியும் இல்லைன்னா உள்ளே அனுப்ப முடியாது என்றார் .
அதற்கு நரி சொன்னதாம் ..அது எப்படி நான் வாழ்நாள் முழுதும் இதை சாப்பிட்டு பழகிட்டேன் என்கூட கொண்டு வருவேன் இந்த மூட்டையையும் என்றதாம் .கடவுளின் அசிஸ்டன்ட் இறுதிவரை உள்ளே விடவில்லை நரியை .உலகத்து குப்பை சொர்க்கத்தில் அனுமதியில்லை என்று திட்டவட்டமாக சொல்லி நரியை மட்டும் உள்ளே அனுப்பி வைத்தாராம் ..
இந்த கதையில் வரும் நரி போலதான் மனிதர்களாகிய நாமும் பொறாமை ,கோபம் வன்மம் ,புரணி ,துவேஷம் ,வெறுப்பு ,போட்டி ,சண்டை என பல அழுக்குகளை விட முடியாமல் சுமந்து திரிகிறோம் .இந்த வருட கோபதாபங்களை மற்றும் மேற்சொன்ன அழுக்குகளை 31 ஆம் தேதி இரவுடன் குப்பையில் கொட்டி எரிப்போம் எனக்கு மீள்சுழற்சி பிடிக்கும் ஆனால் இந்த விஷயத்தில் மட்டும் இவ்விஷயங்களுக்கு மீள் சுழற்சி வேண்டாம் smile emoticon ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசாபாசங்களுண்டு .இயன்றவரை பிறர் மனம் புண்படாமல் நடப்போம் .புத்தாண்டில் புதிதாய் பிறப்போம் ..நாம் பேசும் பேச்சும் சிந்தனைகளும் நல்ல விதைகளாய் நிலத்தில் விழுந்து பிறருக்கு பயன்தரும் கனிதரும் விருட்சங்களாகவோ அல்லது மணம் வீசும் மலர்களாகவோ வளரட்டுமே என கூறி எனது சிற்றுரையை முடித்துகொள்கிறேன் .
அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

நன்றி வணக்கம் .
அன்புடன் ஏஞ்சலின் .
12/23/15

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

நட்புக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் :)

இது மகளின் வயலின் டீச்சருக்கு செய்த வாழ்த்தட்டை ..
ஸ்கூல் படிக்கிற நாளிலேயே எங்க வீட்டுக்கும் , பெரியப்பா பேர பிள்ளைங்க அப்புறம் எங்க அக்கம்பக்கத்து வீட்டு குட்டீஸ்ங்களுக்கு நான் தான் nativity set / கிறிஸ்துமஸ் குடில் அமைத்து தரும் 
பிரபல ஆர்கிடெக்ட் எஞ்சினியர் !! எங்க தோட்டத்தில் தோண்டினா களிமண் வரும் கீழே விழுந்த பன்னாடை (தென்ன மரத்தில் இருந்து காய்ந்து விழுமே ) குச்சி /ஓட்டு சில்ல எல்லாம் வைத்து அந்த காலத்திலயே model வீடு கட்டியிருக்கேன் ..எங்க வீட்ல கோழி பூனை நாய் என்று எல்லாம் வளர்த்தோம் ..இந்த doggies மட்டும் நான் கட்டின வீட்டையோ அல்லது கிறிஸ்துமஸ் மரத்தையோ சட்டை பண்ணாதுகள் .
 மரம் வச்சி டெகரேஷன் செய்து குடிலும் பொம்மைகளும் அடுக்கி வச்சிட்டு சந்தோஷமா தூங்க போவோம் ..அடுத்த நாள் காலையில் பார்த்தா பேபி ஜீசஸ் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு முட்டை இருக்கும் :) அம்மாவின் சிட்டி (கருப்பு நாட்டுகோழி ) முட்டையை இட்டுட்டு போயிருப்பா :) ராஜா ,மேய்ப்பர்கள் மேரி ஜோசப் எல்லாம் ஆளுக்கொரு திசையில் இருப்பாங்க !
சரி இரவே கோழியை கூண்டில் மறக்காம அடைச்சி வச்சிட்டு தூங்கி எழும்பினா மீண்டும் அதே கோலம் :) ஆனா முட்டைக்கு பதிலா எங்க வீட்டு கொழுத்த பூனை வைக்கோல் மேலே சுருண்டு படுத்திருக்கும் ..இல்லைன்னா வேற கோழி மரத்தின் தடித்த கிளையில் தூங்கியிருக்கும் பகலிலும் ஒரு பிரச்சினை :) எங்க வீட்டு சண்டை சேவலுங்க அவங்க மனைவியரை முட்டையிட கூட்டிட்டு வருவாங்க நான் கட்டின குடிலில் கோழி இருக்கும் வெளியே அழகா இவனுங்க காவல் இருப்பாங்க ..இதெல்லாம் நான் திருமணமாகும் வரை சந்தோஷமா அனுபவிச்சேன் :)
அப்போ இந்த மொபைல் போன்  எல்லாம் இல்லை ..போட்டோ எடுக்க ..அழகிய நினைவுகள் அழியாமல் என்னுள் இருக்கு ..
இப்போ இங்கே எங்க வீட்டில் சின்ன மேன்ஜர் செட் வைப்போம் ..எங்க ஜெசிக்கு அதை தோண்டுவதில் அலாதி ஆனந்தம் ..அதேபோல கிறிஸ்துமஸ் மரத்தையும் விட்டு வைக்காது :) டெகரேஷன் எல்லாம் இப்பவே கீழும் மேலும் இருக்கு அவள் வேலைதான் :) நேற்று காணோம் என்று தேடினேன் பார்த்தா மரத்துக்கு கீழே  தூங்குது .

.அந்த மேன்ஜர் செட் முன்னாடி உக்காந்திருக்கா :) நல்ல வேளை இந்த பொம்மைங்க லேசில் உடையாது ..காலையில் ஒவ்வொரு பொம்மையா கீழே இருக்கும் ..சின்ன பிள்ளைங்களை கூட சமாளிக்கலாம் ஆனா பூனைங்க ரொம்ப அட்டகாசம் :) .
...................................................................................................................................................................
இவை ஒரு ஆர்டருக்கு செய்த quilled tree decorations ..
அனைத்து நட்புக்களுக்கும் விழாக்கால நல்வாழ்த்துக்கள் :)
அன்புடன் ஏஞ்சல் 11/4/15

pro choice versus pro life மற்றும் இங்கிலாந்து பள்ளி கல்விமுறை

pro choice versus pro life இங்கிலாந்து பள்ளி கல்விமுறை ...

வன்புணர்வு   ,கர்ப்பம்.கருகலைப்பு........80-90 களில் பள்ளிகூடத்தில் படிக்கும்போது நாமெல்லாம் இதை பற்றி பேசக்கூட தயங்குவோம் !! அப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் 
15 வயது மாணவர்களின் பார்வையில் "!!

இங்குள்ள பள்ளிகள் மூன்று வகை COFE Church of England பள்ளிகள் ,கவுன்சில் பள்ளிகள் மற்றும் கத்தோலிக்க பள்ளிகள் 

மகள் படிப்பது Church of England பள்ளி இதில் மட்டுமே கிறிஸ்தவ சீக்கிய இஸ்லாமிய ஆகிய மும்மதங்களை பற்றி சொல்லித்தருவாங்க ..அட்மிஷன் வேண்டுமென்றால் ..ஆலயம் ,கோவில் மசூதி இவற்றுக்கு ரெகுலராக செல்பவர்கள் தங்கள் ஆயர் ,குருக்கள் ,இமாம் இவர்களிடமிருந்து கடிதம் பெற்று வர வேண்டும் .இவர்களுக்கே முன்னுரிமை ..ஆனால் இவ்வருடத்திலிருந்து இந்த முறை சற்று மாறியுள்ளது ..ஸ்பெஷல் நீட்ஸ் பிள்ளைகளுக்கு முதல் 60 இடங்கள் மற்ற இடங்கள் நான் சொன்ன ஹிந்து கிறிஸ்தவ இஸ்லாமிய பிள்ளைகளுக்கு .

கத்தொலிக்க பள்ளிக்கூடங்களில் கிறிஸ்தவம் மட்டும் அதுவும் ரோமன் கத்தொலிக்க வழிமுறைகள் மட்டும் கற்பிக்கப்படும் ,
கவுன்சில் பள்ளிகளில் எதுவுமே இல்லை .பெரும்பாலான பிரிட்டிஷார் கவுன்சில் பள்ளிகளையே  விரும்புகிறார்கள் காரணம் ..எவ்வித மத நம்பிக்கையையும் பிரதிபலிக்காத கல்விமுறை தான் தங்கள் பிள்ளைகளுக்கு உகந்தது என்பதால் ..

இங்கு இப்போது என் மகள் படிக்கும் cofe பள்ளியில்  சர்ச்சைக்குரிய பாடம் என்ற வரைமுறையில் வரும் சப்ஜெக்ட் சொல்லித்தரும் முன்பே பெற்றோருக்கு ஒரு கடிதமூலம் தெரிவித்து விடுவார்கள் ..
உதாரணத்துக்கு பாலியல் கல்வி பற்றி ஏழாம் வகுப்பிலேயே ஹையர் செகண்டரி போனவுடன் முதல் வகுப்பே  puberty ,preventing unwanted pregnancy ,preventing measures ..இதில் பாதுகாப்புக்கான பொருட்கள் மருந்துகள் பற்றிய விரிவான விளக்கங்களும் உண்டு ..
மேலும் எந்த டாபிக்காக இருந்தாலும் அது சம்பந்தமாக விரிவா விளக்கபடுத்தி அது குறித்த ஒரு திரைப்படத்தையும் சிடியில் வகுப்பில் காட்டுவார்கள் ..
வேர்ல்ட் war பற்றிய படங்கள் ,jewish camp பற்றிய படங்கள் பார்த்து மகள் மிகவும் வருத்தமடைந்தாள் .(boy in striped  pyjamas )மற்றும் my sister's keeper 
 மூத்த குழந்தைய காப்பாற்றவென ivf முறையில் இன்னொரு குழந்தை பெறும் பெற்றோர் .சகோதரிக்கு கிட்னி தர விரும்பாத அந்த குழந்தை  என பல வித்தியாசமான டாபிக்ஸ் ! 

நமது விருப்பமிலாமல்  எதையும் சொல்லிதர மாட்டார்கள் மகள் பள்ளியில் .
இங்கே அனைத்து மதங்களும் பிள்ளைகளுக்கு தெரிஞ்சாதான் நல்லது போன மாதம் மசூதி இன்று சீக்கிய கோவில் போனாங்க அடுத்த வாரம் ஹிஸ்டோரிகல் lincoln சர்ச் செல்கிறார்கள்  .சகிப்புத்தனமை மற்றும் அனைத்து நம்பிக்கைகளையும் including atheism,ஓரின சேர்க்கை தற்பாலினம் அனைத்து கொள்கைகளை பின்பற்றுவோரையும்  மதிக்கணும் என்று கற்பிக்கிறார்கள்.

pro choice versus pro lifepro choice...பெண்ணுக்கு தனது கருவை கலைக்க அல்லது வளர்க்க அல்லது பெற்று அடாப்ஷனுக்கு கொடுக்க முடிவெடுக்கும் உரிமையுண்டு 

 pro life..கருக்கலைப்பே தவறு அது பாவம் ஒரு நாள் கருவாக இருப்பினும் அது உயிரே ..இது பத்தாம் வகுப்பு மாணவர்களின் RE ..பாடத்தில் ஒரு பகுதி  .மாணவர்கள் அவர்கள் கருத்தை REASONS TO BE  PRO CHOICE அல்லது PRO  LIFE  என்பதனை பிரதிபலிக்கும் வண்ணம் படம் வரைந்து ஒரு பக்க அளவில் போஸ்டரும் கட்டுரையும் எழுத வேண்டும் ..அதற்க்கு PRO CHOICE சார்பாக மகள் வரைந்த படம் .அந்த இரண்டு க்ரூப்பை சேர்ந்தவங்க வந்து பிள்ளைங்க முன்னாடி பேசினாங்களாம் .
இதை பற்றிய விரிவான தகவல்கள் பல மாணவர்களின் சாட்டையடி கருத்துக்கள் படங்கள் அனைத்தும் பள்ளியில் இருந்தது ..

வன்புணர்வுகுள்ளான ஒரு மாணவி கன்சீவ் ஆகிட்டா என்ன முடிவை எடுக்கணும் என்பதை மற்றும் எதிர்பாரா சூழ்நிலையில் உருவான கருவை சுமப்பதா இல்லை அழிப்பதா என்பதை விளக்கும் ஒரு போஸ்டர்  வரைந்து ..அதை பற்றிய சில கருத்துக்களை எழுத வேண்டும் .
பல மாணவர்களின் சாட்டையடி கருத்துக்கள் அங்கிருந்தன ..
இது மகள் வரைந்த போஸ்டர் ...........அங்குள்ள பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த போஸ்டர் ஓவியங்கள் மற்றும் கட்டுரைகளை படம் எடுக்க இயலவில்லை .உள்ளே நுழையுமுன் கைப்பேசியை off செய்து விட வேண்டும் ..
பிள்ளைகளின் பெயர்களும் கட்டுரைகளில் மறைக்கபட்டிருந்தன ..

மகள் மற்றும் 80% பிள்ளைகள் pro choice சார்பாகவே தங்கள் கருத்தை தெரிவித்திருந்தார்கள் கட்டுரை வாயிலாக .

ஆசிரியர்கொடுத்த கேள்வி  .வன்புணர்வால் ஒரு பெண் கர்ப்பமடைந்தால் அந்த குழந்தையை என்ன செய்வீர்கள் 
.இளங்கன்று பயமறியாது என்று சும்மாவா சொன்னார்கள் !

ஒவ்வொரு பதிலும் பளார் பளார் ரகம் தான் ..

ஒரு பதில் ...வன்புணர்வு நிகழ வாய்ப்பேயில்லை ஏனென்றால் நான் எப்பொழுதும் அவதானமுடன் இருப்பேன் என்னை மீறி நடந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று அதற்க்கான தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வேன் ..

2, தன்னை விட வலிமை குறைந்த ஒரு பெண்ணை பலவந்தபடுத்தி இச்சையை தீர்க்கும் மிருகத்தின் கருவை நான் எக்காலத்திலும் சுமக்க மாட்டேன் உடனே கருகலைப்புதான் .


3, நான் எதற்கு எவனோ ஒருவனது அசிங்கத்தை சுமக்க வேண்டும் எனது வாழ்க்கைக்கு அந்த கரு ஒரு முட்டுக்கட்டையாக இருக்ககூடுமாயின் அது எனக்கு தேவையில்லை .
4,அந்த குழந்தையை பெற்றால்  ஒவ்வொருநாளும் எனக்கு நடந்த கொடுமையை அது நினைவூட்டும் அதை பார்த்து மனம் வெம்ப வேண்டுமா ? 

5,ஒரு பதில் ..கருவை கலைப்பேன் அல்லது கலைக்க முடியாத சூழ்நிலை என்றால் பெற்று உடனே பிள்ளை பேறு இல்லாத ஒரு தம்பதியருக்கு அதை கொடுத்து விடுவேன் !.

6,20 % .பிள்ளைகள் பரவாயில்லை அதுவும் உயிர்தானே பெற்று வளர்ப்பேன் என்று சொல்லியிருந்தனர் .(இந்த பதிலை கூறியோர் ஆண் பிள்ளைகளாம் ) :)


7, என் உடல் என் உரிமை எனது வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை pro choice எனக்குண்டு .

8 ,ஒரு பதில் எனை நிலைகுலைய வைத்தது ..

வன்புணர்வு என்பது இல்லாத பட்சத்திலும் எதிர்பாராத உயிருக்கு பங்கம் நேரிடும் சூழ்நிலையில் கருக்கலைப்பிற்கு நான் யெஸ் என்றே சொல்வேன் ..
முதல் காரணம் ..அயர்லாந்து நாட்டில் சவீதா மருத்துவர் 
http://www.bbc.co.uk/news/uk-northern-ireland-20321741
இன்றும் உயிரோடிருந்திருப்பார் அன்று அவருக்கு கருக்கலைப்பு சரியான நேரத்தில் செய்யப்பட்டிருந்தால் ..
 பல வருடங்கள் முன் (ectopic pregnancy  ) கருக்குழாயில் கர்ப்பமடைந்து அவரது உயிர் போகும் நேரத்தில் அந்த கருவினை கலைக்க ஒப்புதல் அளித்திராவிடில் இன்று உங்கள் முன் இந்த கட்டுரையும் நானும் இருந்திருக்க மாட்டேன் ..ஆகவே எந்த முடிவாக இருப்பினும் அந்த முடிவை எடுக்கும் உரிமையை பாதிக்கப்பட்டு பெண்களுக்கு தர வேண்டும் ....
...

இந்த pro life குழுக்கள் பைபிள் வசனம் ஒன்றை காட்டியுள்ளனர் ..எப்படியாவது அவர்களது கொள்கையை ஏற்க வைக்க !!
//"Before I formed you in the womb I knew you, And before you were born I consecrated you; //
அதற்க்கு ஒரு மாணவி சொன்னாளாம் .. வன்புணர்வு போன்ற கீழ்தர செயல்கள இறைவன் விரும்ப மாட்டார் ...

pro choice க்ரூப் Meant to be ,in to my arms , போன்ற படங்களை போட்டு காட்டியுள்ளனர் மேலும் இவர்கள் ஒரு பெண் கருகலைப்புக்கு செல்வதை அறிந்தால் அந்த ஆஸ்பத்திரி அறையின் முன் சென்று ஷேம் ஆன் யூ  என்று திட்டுவார்களாம் ..

=====================================================================================
ஏற்கனவே ஏழாம் வகுப்பிலேயே அனைத்து மாணவ மாணவியருக்கும் ரிலேஷன்ஷிப் குடும்ப வாழ்க்கை பாலியல் கல்வி என அனைத்தும் சொல்லி கொடுத்து விட்டார்கள் .

இது பற்றி எழுதும்போது கீதாவின் பதிவு நினைவுக்கு வந்தது இங்கே ..

ஆனால் அந்த செயற்கை பொம்மை முறை இங்கிலாந்தில் சிலரில் மட்டும் பாசிடிவ் விளைவு ஏற்படுத்தியது .பல டீனேஜ் மாணவிகள் இந்த பொம்மை பயன்பாட்டால் இன்னுமதிகமாக உந்தப்பட்டு இளவயதில் தாய்மையடைந்ததால் பல பள்ளிகளில் இம்முறை நிறுத்தப்பட்டது ..
பல பெற்றோர் வேண்டாம் பாலியல் கல்வி என போர்க்கொடி தூக்கினர் ..
பதின்ம வயது கர்ப்பம் /டீனேஜ் ப்ரெக்நன்சி விஷயத்தில் உலகில் இங்கிலாந்தே இரண்டாமிடத்தில் இருக்கு :( இதற்கு காரணம் சிங்கிள் மதர்சுக்கு அரசாங்கம் தரும் பல சலுகைகளே ..எத்தனை பிள்ளை பிறந்தாலும் அரசு தரும் பெனிபிட்ஸ் இலவசங்கள் சலுகைகள் பலரை தறிகெட்டு ஓட வைக்கின்றன ....
என்னை பொறுத்தவரை பிள்ளைகள் அறிய வேண்டியது சாதக பாதக உண்மை நிலைகளை அன்றி மொத்தமாக பாலியல் கல்வியே வேண்டாம் என்ற தடை அல்ல .

இங்குள்ள சில இந்திய பெற்றோர் சின்ன வயதிலேயே எவ்வித பாலியல் கல்வியும் வேண்டாமென பள்ளியில் கூறுகிறார்கள்.. சிலர் பயந்து இங்கிருந்தா கெட்டு போயிடுவாங்கன்னு நம்ம நாட்டை பார்த்து ஓடிவிட்டார்கள் :) அங்கே சின்னத்திரையும் பெரியதிரையும் இதைவிட விளக்கமா சொல்லிதருகிறார்களே அதற்கென்ன செய்வார்கள் ?
                                                        
                                                        ********************

மன்னிக்கவும் பதிவு கொஞ்சம் நீஈண்டு விட்டது :)
10/29/15

Confession ..!!

நேற்று  ஆலயத்துக்கு எப்பொழுதும்போல  சென்றேன் ஒவ்வொரு புதனன்றும் ஒரு கம்யூனியன் சர்வீஸ் நடக்கும் ..9 டிகிரி ..கடும் குளிர் ..மழை வேறு தூவிக்கொண்டிருந்தது .வார நாட்களில் கதவை திறப்பது எனது வேலை .அங்கு வாசலில் கைக்குழந்தையுடன் ஒரு பெண்மணி அமர்ந்திருந்தார் ..களையான முகம் ஏதோ உலக பாரத்தை சுமப்பது போன்ற ஒரு துக்கம் அவர் முகத்தில் ..இந்த குளிரிலும் சல்வார் கமீஸ் ஜம்பர் மட்டும் அணிந்திருந்தார் மேலே .எனக்கு அவர் கையில் இருந்த பையை பார்த்ததும் புரிந்து விட்டது  ,போத்தீஸ் சென்னை பை ..நீங்க தமிழா என்றேன் ..திடுக்கிட்டார..அவர் பெயர் எலிசபெத் இலங்கை மலையகம் பகுதியில் இருந்து இந்தியா சென்று இங்கே வந்திருக்கிறார் ..தட்டுதடுமாறி ஆங்கிலம் பேசினார் ..நான் தமிழா என்று கேட்டு முடிக்குமுன் அவரிடமிருந்து 
ஒரே அழுகை :( சிஸ்டர் எனக்கு உதவி செய்யுங்க நான் பாவ மன்னிப்பு கேட்கணு ம் ஆயரிடம் ..நான் பாவம் செஞ்சிட்டேன் .பாவம் செஞ்சிட்டேன் ..நம்புங்கள் மக்களே அவர் குறைந்தது 10 தடவை விடாமல் அதையே சொன்னார் எனக்கு ஒன்றும் புரியவில்லை ,,அதற்குள் ஆலயத்தின் ஆயர் வந்துவிட்டார் ..அவரிடம் சொன்னேன் ..உடனே அடுத்து அவர் செய்த காரியம் ..//ஸ்டாப் க்ரையிங்// என்றார் அப்பெண்ணை பார்த்து ..அதட்டலுக்கு பயந்து அப்பெண் அழுகையை நிறுத்தினார் ..கிட்ட சென்று அப்பெண்ணை அணைத்து சொன்னார் உனக்கு தேவை அன்பும் ஆதரவுமன்றி பாவ மன்னிப்பில்லை ..யார் உன்னை பாவி பாவம் செய்தவள் என்று சொன்னது ?நோ ஒன் இஸ் பெர்பெக்ட் ...முதலில் உன்னை வருத்திகொள்வதை நிறுத்து ..உன் மனசாட்சியிடம் மட்டும் நீ  செய்த தவறுக்கு மன்னிப்பை கேட்டால் போதும் .இனி அத்தவறை செய்யாதே ...தவறு செய்ததாக நினைத்து வருந்தினாயெ அந்நொடியே உன் தவறுக்கு நீ மன்னிக்கப்பட்டாய் ..ஊரெல்லாம் நான் பாவி என்று அழுது புலம்ப வேண்டிய அவசியமில்லை என்றார் ..உன் பாவங்களு க்காக நீ வருந்திய நொடியே நீ சுத்த மனதுள்ளவளாகிவிட்டாய் ..மேலும் உனக்கு பண உதவி எதேனும் தேவைப்பட்டால் சொல் //என்றார் ....மேலும் 

தவறே செய்யாத மனிதர் ஒருவருண்டா? ..யார் மீதாவது அனாவசிய கோபம் காட்டினாலும் அதுவும் தவறுதானே என்றார் ..
அந்த பெண்மணி சந்தோஷமாக சென்றார் ...சிலரின் அரைகுறை உபதேசம்  இப்படிப்பட்ட கொஞ்சம் மன திடமற்றோரிடம் என்னவோ அவர்கள் பாவிகள் என்ற மனபோக்கை ஏற்படுத்துகிறது  ..என்னை பொறுத்தவரை நம் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தாலே போதும் வேண்டுமென்றால் நேரடியாக தனியறையில் அமர்ந்து இறைவனிடமே மன்னிப்பு கேட்கலாம் ..இடைத்தரகர்கள் தேவையில்லை யாருக்குமே .. ..

10/20/15

Loud Speaker ..29...ரசித்து ருசித்த குறிப்புக்கள்,மட்கும் விதை தட்டு,

ஒலிபெருக்கியில் இன்று ...ரசித்து ருசித்த குறிப்புக்கள் .. மற்றும் முக நூல் பதிவுகள் ,வீட்டுத்தோட்ட குறிப்புகள் ..


செய்தாச்சு இரண்டு முறை எங்கள் ப்ளாக் குறிப்பு தேங்காய் சாதம் :)மிக அருமையான சுவையுடன் இருந்தது ..அடுத்த குறிப்பு பூண்டுபொடியும் இங்கு விரைவில் வரும் :) 

இது வரகரிசி பொங்கல் நம்ம ஜலீலா  குறிப்பு பார்த்து செய்தது .அவங்க மஞ்சள் தூள் சேர்த்திருந்தாங்க நான் சேர்க்கவில்லை .

அப்புறம் பொங்கல் கூட இருக்கிற எலுமிச்சை ஊறுகாய்    மேனகா குறிப்பு பார்த்து செய்தது :) ..
எனக்கு இப்படி குறிப்புக்களை எளிய முறையில் செய்றமாதிரி தரும் சகோதர சகோதரிகளுக்கு மிக்க நன்றி ...

மட்கும் விதை தட்டு /biodegradable seed tray
=======================================

Avocado /butter fruit அல்லது சிறிய பப்பாளிபழம் வாங்கி குறுக்கு வாட்டில் வெட்டி சதை பகுதி எடுத்தபின் கிடைப்பது ஓர் bio degradable விதை தட்டு ..அவகாடோ கோப்பையில்  கொஞ்சம் முளைத்திருந்த சேப்பங்கிழங்கை வைத்து மண் மூடி தொட்டியில் நட்டேன் ...மற்றொரு அவொகடொ கோப்பை தோலில் பாகற்காய் விதை நட்டேன் .

இதோ கிழங்கு மற்றும் பாகற் செடி ..இதே போல் இந்த தோல் கிண்ணத்தை தக்காளி ,அவரை ,பட்டாணி விதை நட பயன்படுத்தலாம் ...
seed starters ஆக இத்தோல் கோப்பைகளை பயன்படுத்தலாம் .


கசட தபற யரல வழள ...
=======================எங்கள் மகளுக்கு இரண்டு வயதிருக்கும் போது நடந்த சம்பவம் .முதல் முறை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்து சென்றபோதே அவர் மிகவும் கண்டிப்பாக கூறினார் வீட்டில் தாய்மொழியிலேயே குழந்தையுடன் உரையாடுங்கள் .பாலர் பள்ளி சென்றதும் அவள் அங்கு தானாகவே ஜெர்மன் மொழியை கற்றுக்கொள்வாள் .தாய் மொழி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் முக்கியம் .ஆகவே நாங்கள் அவர் சொற்படியே நடந்தோம் .ஊரிலிருந்து அரிச்சுவடி புத்தகமெல்லாம் வரவழைத்து வீட்டிலேயே தமிழ் பாடம் ஆரம்பித்தாகி விட்டது .ஒவ்வொரு படத்தை காட்டி சொல்லி கொண்டே வந்தேன் .அம்மா ஆடு இலை ......அனைத்தும் சிறப்புற வந்தன மகளின் பவள செவ்வாயிலிருந்து   :) .

ஒரு புத்தகத்தில் மாம்பழம் ..மகளுக்கு மா-ம்-பழம் என்று சொல்லி கொடுத்தேன் அவள் மாம்பளம் என்று சொன்னாள் விடா முயற்சியுடன் பழம் ப. ழ .ம் என்று சொல்லி முடிக்க முன் பளம் என்று சொன்னாள் .எனக்கு மயக்கம் வராத குறை .மழை ,மளை, அழகு அளகு இப்படி எவ்வளவோ முயன்றும் ழ மட்டும் வரவில்லை எங்கள் சீமந்தபுத்திரிக்கு :)

தமிழில் இலக்கண பிழை இருந்தாலும் ழ ள ல போட வேண்டிய இடத்தில ஒழுங்கா உச்சரித்து எழுதுவேன் எப்படி இவளுக்கு ழ வரவில்லை ?.எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கும் இந்த பிரச்சினையே இல்லையே ஏ ஏ என்று காலசக்கரத்தை உருட்டி பின்னோக்கி சென்றபோது விடை கிடைத்தது .அது.....................
என் பொண்ணுக்கு ஏன் வரவில்லை என்று காலச்சக்கரத்தை உருட்டி இரண்டு கொசுவர்த்தியும் கொளுத்தி நிதானமாக யோசித்தேன் ..
இப்போது அனைவரும் புஷ்பக விமானத்தில் அமர்ந்துள்ளீர்கள் . இருக்கைப் பட்டி அணிந்துகொள்ளுங்கள் இல்லாவிடில் சில உச்சரிப்பு ஒலி சப்தத்திற்கு தடுமாறி விழ நேரிடும் .  :)
சில பல வருடங்கள் பின்னோக்கி செல்கிறோம் .ஒரு தேவாலயம் அங்கு ஒரு இளவரசிக்கும் ,இளவரசனுக்கும் திருமண சடங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது .அது ஆங்கிலிக்கன் protestant திருமண சடங்கு .அவர்கள் தமிழில் திருமண உறுதிமொழி எடுத்துக் கொன்டிருக்கிரார்கள் .

ஆங்கிலத்தில் உறுதிமொழி எடுப்பதில் பெண்ணின் தகப்பனாருக்கு உடன்பாடில்லை .தாய்மொழியில் தான் திருமண வைபவம் நடக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் .ஆகவே மாப்பிள்ளை பெண்ணிடம் ரகசியமாக ஆங்கிலதில் wedding vows சொல்வோமே என்று கேட்டுகொண்டாலும் மணமகள் தந்தையிடம் நாசுக்கா கெஞ்சியும் அவர்கள் முயற்சி பலனளிக்கவில்லை ....
இங்கே ஆங்கிலத்தில் இப்படி வரும் 
Groom: I,____, take thee,_____, to be my wedded Wife, to have and to hold from this day forward, for better for worse, for richer for poorer, in sickness and in health, to love and to cherish, till death us do part, according to God's holy ordinance; and thereto I plight thee my troth.
அதை தமிழில் மணமகன் முதலில் கூறுகின்றார் (அவர் கூறும்போது மணமகள் veil இற்குள் இருந்தவாறே சிரித்து விட்டார் )

இன்பத்திலும் துன்பத்திலும், ///வாள் விலும் தாள் விலும் //////உடல் நலத்திலும் நோயிலும் ஒருவருக்கொருவர் உறுதுணையாயிருந்து , வாள் நாளெல்லாம் நேசிக்கவும் மரண பரியந்தம் சாகும்வரை மதிக்கவும் உறுதியளிக்கிறேன் . 
..அந்த மணமகள் இந்த ழ உச்சரிப்பை கணவர் குடும்பத்தினர் அனைவரிடமும் பரிசோதித்துள்ளார் ..மணமகன் அண்ணன் தங்கை /கள்  ழ வை ள என்றே உச்சரிச்சதும்தான் இது பரம்பரை வளக்கு :) என்பதை அறிந்துக்கொண்டார் .
அந்த மணமகள் பெயர் ....ஏஞ்சல் :)


இப்போது தெரிந்திருக்குமே மகளுக்கு //ழ //உச்சரிப்பு வராத காரணம் :)))))))))))))))


10/19/15

சில மருந்துகளும் ஒவ்வாமையும் ..பகீர் விளைவுகளும் ,TENS, Toxic Epidermal Necrolysis Syndrome,

சில மருந்துகளும் ஒவ்வாமையும் ..பகீர் விளைவுகளும் 
Spontaneous Human Combustion (SHC)இப்படியெல்லாம் கூட நோய் இருக்கிறதா என்று எனக்கு இந்த தானாக பற்றி எரியும் மனிதர்கள் பற்றி கேள்விப் பட்டபோது தோன்றியது .உலகில் சுமார் 200 பேர்கள் இருக்கிறார்களாம் இப்படி தன்னிச்சையாக பற்றி  எரியும் தன்மையுடையோர் !..சில மாதங்கள் முன் நம்ம நாட்டில் ஒரு குழந்தை இப்படி தானாக பற்றிக்கொண்டது என்று செய்தி படித்தேன் ..அதன் விவரம் எனக்கு அப்புறம் தெரியவில்லை ..
இப்போ நேற்று நான் சந்தித்த ஒரு சிறு பெண்ணுக்கும் இதே விதமான ஒரு நோய் .முதலில் அந்நோய் பற்றிய சிறு குறிப்பு 
Epidermal Necrolysis Syndrome - இங்கிலாந்தில் பத்து இலட்சத்தில் ஒருவர் இந்த வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் .
கீழே உள்ள சுட்டியில் இந்த நோயின் விவரங்கள் உள்ளன 

a horrific condition which affects less than one in a million people in the UK

https://en.wikipedia.org/wiki/Toxic_epidermal_necrolysis

நேற்று ஆலயத்துக்கு ஒரு பஞ்சாபி கிறிஸ்தவ குடும்பத்தினர் வந்திருந்தனர் .அவர்களுக்கு 7 பிள்ளைகள் ..ஆறு மகன்கள் ஏழாவது 

ஒரே பெண் குழந்தை பெயர் லிடியா ..அந்த பிள்ளை மூக்கில் ஒரு டியூப் 
செருகப்பட்டிருந்தது .எனக்கு எந்த குழந்தையும் இப்படிப்பட்ட நிலையில் காண நேரிட்டால் மனம் வலிக்கும் .அழகாய் பூப்போல சிரித்தாள்  அப்பெண் ..பிறகு அப்பெண்ணின் தாய் ஆஷா தனது குழந்தையின் நோய் பற்றி அனைவர் முன்பும் பேசினார் ...
(image thanks http://www.expressandstar.com/)

அவர் கூறியது ..கடந்த வருடம் மே  மாதம் இந்த குழந்தை லிடியாவுக்கு காய்ச்சல் வந்துள்ளது temperature மிக அதிகமாக இருந்ததால் மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார்கள் .மருத்துவரும் காய்ச்சல் குறைய பெனிசில்லின் antibiotic கொடுத்திருக்கார் .குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கா  என்று கேட்டுள்ளார் ..அதை பற்றி தெரியாது என்று தாய் சொல்லியிருக்கார் ..ஆனா ஆஷா ..குழந்தையின் தாய்க்கு பெனிசில்லின் ஒவ்வாமை உண்டு என்பதை சொல்லியும் மருத்துவர் அதை பொருட்படுத்தவில்லை ..மூன்று டோசெஜ் பெற்றோர் அக்குழந்தைக்கு மருந்தை கொடுத்துள்ளனர் .திடீரென குழந்தை உடலில் வித்தியாசம் ஏற்ப்பட்டதாம் தோல் கன்றி சிவந்து கொப்புளங்களுடன் தீய்ந்த நிலை ஆகியிருக்கு ..உடனடியாக பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர் ..அங்குள்ள மருத்துவர்களுக்கே இந்நோய் கண்டுபிடிக்க முடியாமல் குழம்பிபோனார்களாம் .....உட்புறத்தில் இருந்து எரிந்து கொண்டு வருவது அவர்களுக்கே புதிராக இருந்திருக்கும் .பல்வேறு மருத்துவ நிபுணர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டு இறுதியில் கண்டுபித்தார்கள் இது 

Toxic Epidermal Necrolysis Syndrome, or TENS 

ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய புதிய மருந்துகள் சாப்பிடும்போது பத்து இலட்சத்தில் ஒருவருக்கு ஏற்படுமாம் இந்நோய் :(
பல மாதங்கள் மருத்துவமனை வாசம் ..ஒவ்வொர்நாலும் மருத்துவர்கள் சொல்வார்களாம் பெற்றோரிடம் ..எங்களால் உறுதி கூற முடியாது ..எதையும் ஏற்க தயாராய் இருங்கள் என்று.
பெற்றோரும் சரி பிள்ளையும் சரி தீவிர இறை  நம்பிக்கையுள்ளோர் .
.அதற்க்கு கூடவே அன்பான அனுசரனையான மருத்துவ சிகிச்சை கவனிப்பு ..அந்த பெண்ணின் மன உறுதி இறை நம்பிக்கை எல்லாமாய் சேர்ந்து இப்போ அந்த குட்டி பெண்ணை நடமாட வைத்துள்ளது .
இன்னும் டிஊப் வழியாகத்தான் உணவு செலுத்தப்படுகிறது ..உல் உறுப்புகள் இன்னும் காயம் ஆறவில்லை இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் ஆகலாம் .கழுத்தில் தோல் தீய்ந்து பொய் காணப்பட்டது நேற்று பார்த்தப்போ .98% தோல் எறிந்த பெண்ணா இது என்று எனக்கே வியப்பாக  இருந்தது ..வெளிநாட்டில் பல வசதிகள் இருந்ததால் பிழைத்தால் அப்பெண் .
ஹ்ம்ம்ம்ம்ம் ..இவ்வளவுக்கும் காரணம் அந்த மருத்துவர் கொஞ்சம் அச்சிறுமிக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்று தீர விசாரித்து மருந்தை பரிந்துரைத்திருந்தால் இவ்வளவு  கஷ்டம் ஏற்பட்டிருக்காதே :(..இன்னும் பூரண குணமாகவில்லை குளிர் காலத்திலும் சண் க்ரீம் போடணுமாம் .வெயில் படவே கூடாதாம் .

இங்கே பேப்பர் தொலைகாட்சி எல்லாம் அப்பெண்ணை பற்றிய விவரங்கள்http://www.expressandstar.com/editors-picks/2014/10/28/miracle-child-returns-home-after-toxic-reaction-to-antibiotics/

..இந்த சுட்டிகளில் படங்களுடன் வெளியிட்டுளார்கள் 

http://www.mirror.co.uk/news/real-life-stories/miracle-girl-who-survived-horrific-4510884http://www.expressandstar.com/editors-picks/2014/10/28/miracle-child-returns-home-after-toxic-reaction-to-antibiotics/


அன்புடன் ஏஞ்சல் .
10/10/15

என் வீட்டு தோட்டத்தில் மணத்தக்காளி ,பச்சை தக்காளி அவியல் .முளைக்கீரை விதை

என் வீட்டு தோட்டத்தில் ...மணத்தக்காளி ,பச்சை தக்காளி அவியல் .முளைக்கீரை விதை .
தோட்டத்தில் இருந்து உணவு மேஜைக்கு :)

பச்சை தக்காளி அவியல் மற்றும் மணத்தக்காளி சாம்பார் !
படத்தில் நான் வற்றல் தூவி வளர்த்த மணத்தக்காளி செடிகள் ..
தரையோ தொட்டியோ அல்லது கண்டேய்னரோ மணத்தக்காளி செடி வளர்ந்து காய்கள்  பழுத்த நிலைவரும்போது ஒன்றிரண்டு பழங்களை பறித்து ஒரு டிஸ்யூ காகிதத்தில் சற்று அழுத்தி காய வைத்து பத்திரப்படுத்தி விட்டால் தேவையான நேரம் விதைகளை பயன்படுத்தலாம் .ஒன்றிரண்டை செடியில் விட்டு வைத்தால் அவை தரை /தொட்டியில் விழுந்து அடுத்த சீசனுக்கு மீண்டும் முளைக்கும் ..

மணத்தக்காளி தண்டுகளை நட்டு வைத்தாலும் வளரும் சித்ரா சொன்னாங்க . முயற்சித்து பாருங்களேன் நீங்களும் .

பச்சை தக்காளி அவியல்
========================
இம்முறை வெயில் ஸ்ட்ரைக் செய்வதால் தோட்டத்தில் இருந்து பழுக்க முன் அவியல் செய்தாச்சு :)
நன்றி மேனகா 
http://sashiga.blogspot.co.uk/2015/10/green-tomato-aviyal-thakkalikaai-aviyal.html


முளைக்கீரை ..அடித்தண்டை வெட்டி தொட்டியில் நட்டேன் துளிர்க்குது.கீரை வாங்கி சமையலுக்கு வெட்டும்போது நன்கு முற்றிய தண்டுகளை கணுக்களோடு வெட்டி தொட்டியில் நட்டால் சிலநாட்களில் இலை துளிர்த்து செடி வளரும் .இந்த கீரை இலை அவ்வளவு பெரிதாக வளராது ஆனால் பூக்கள் கொத்தாய் வளரும்.

இப்போ விதைகள் தெரியும் முற்றி மஞ்சள் நிறம் ஆகும்போது ஒரு நியூஸ் பேப்பரில் பரப்பி காய வைக்க வேண்டும் .விதைகள் 

அன்புடன் ஏஞ்சல் .10/5/15

Loud speaker :) 28

நீண்ட நாட்கள் கழித்து ஒலிபெருக்கி செய்தி சேவை மீண்டும் துவங்குகிறது :)தலைப்பு செய்தி முக்கிய செய்தி :))

வாசகர்க்கான விமரிசனப் போட்டி! யாவரும் கலந்துகொள்ளலாம்! 
பரிசு ரூ.10,000வலைபதிவர் சந்திப்பு வாசகருக்கான விமரிசன போட்டி  யில் நானும்  பங்கு பெற போகின்றேன் ..


சரி இந்த ஒலிபெருக்கியில் முதலில் ..அன்பு ,..இதை அனுபவித்து உணர்ந்தால் மட்டுமே நமக்கு அது புரியும் .இந்த காணொளி சேகர் என்பவர் பற்றியது .ஒரு சாதாரண கேமரா மெக்கானிக் தினமும் தனது சம்பாத்தியத்தில் 40%சிறிய உயிர்களுக்கு உணவிட செலவழிக்கின்றார் .ஏற்கனவே எங்கள் ப்ளாக் மற்றும் வெங்கட் சகோவின் வலையில் போட்டுட்டாங்களான்னு தெரியல்லை ஆனாலும் பரவாயில்லைஇன்னொரு முறை  நீங்களும் கண்டு ரசியுங்கள் .
அவரை தொடர்பு கொள்ள ..
Camera House, No. 242, Second Floor, Pycroft's Road or 94444-64967அடுத்த செய்தியும் அன்பு தான் :) இது எங்க ஊர் zoo வில் நடந்த சம்பவம் .

நிறை மாத கர்ப்பிணி மனைவியுடன் ஒருவர் zoo சென்றார் அங்குள்ள orangutan கண்ணாடி கூட்டின் அருகே சென்று பார்த்துக்கொண்டிருக்கும்போது ராஜாங் என்ற orangutan அந்த கர்ப்பிணியின் வயிற்று பகுதியை  அன்புடன் முத்தமிட்டதாம் :)
அப்பெண்ணின் கணவர் தனக்கும் முத்தமிடுகிறதா என டெஸ்ட் செய்ய தனது வயிறை கண்ணாடி மேல் அழுத்த :) ஓரங்குடன் முறைத்து பார்தததாம் ..


தாய்மை அன்பு parental care எல்லா உயிர்களுக்கும் பொதுவானது !அடுத்த செய்தியும் அன்புதான் ...Hanabiko "Koko" என்ற கொரில்லா அக்கா 
பற்றிய செய்தி ..அக்கா வயசில் என்னைவிட பெரியவ :)
இந்த கோகோ அக்காவுக்கு அமெரிக்கன் சைகை மொழி நன்கு தெரியும் .
கடந்த 43 ஆண்டுகளில் இந்த அக்கா 1000 சைகை மொழிகளை கற்றுள்ளது ! இது முதலில் செய்து காட்டிய சைகை //நான் அரசி // கைகளை குறுக்கு வாட்டில் மகராணி அணியும் sash போல செய்து காட்டியுள்ளது ..தனக்கான தனித்தன்மையை காட்டியதாம் !! இதற்கு பூனை குட்டிகள் மிகவும் பிடிக்குமாம் .
இந்த கோகோ அக்காவுக்கு ராபின் வில்லியம்ஸ் மிகவும் பிடிக்குமாம் .அவர் இதை விசிட் செய்த பொது எடுத்த காணொளி இங்கே 
அவர் இறந்த செய்தியை கேட்டு அன்று முழுதும் இந்த கோகோ துக்கத்துடன் இருந்துள்ளது ..

என் சமையல் :)
வரகாளி தோசை ! நான் சூட்டிய பெயர் :)வரகு அரிசி ..1 கப் 
இட்லி அரிசி.... 1 கப் 
உளுந்து .1/4 கப் 
ஆளி விதை ....ஒரு ஸ்பூன் 
வெந்தையம் 1 தேக்கரண்டி .
உளுந்து ஆளி ஒன்றாக ஊறவைத்து அரைக்க வேண்டும் .


ஆளி விதை பற்றிய எனது போஸ்ட் இங்கே 


...................................................................................................................................................................
10/4/15

என் வீட்டு தோட்டத்தில் .......

என் வீட்டு தோட்டத்தில்

சின்ன குழந்தைங்க கிட்ட நடக்கும்போது ரோட் கிராஸ் செய்யும்போது அப்பா/ அம்மா கை பிடிச்சிக்கோ என்று சொல்லி கொடுப்போம் ..

நேற்று இந்த பாகற்காய்  செடியின் கொடிச்சுருள் கொஞ்சமா நீண்டு அங்குமிங்கும் எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தது இன்னிக்கு காலை பார்த்தப்போ ! பக்கத்தில் உள்ள கோங்குரா செடியை சென்று சுத்தி இருக்கு :)
இத்துனூண்டு செடிக்கு எவ்ளோ அறிவு !அம்மா அப்பா இல்லாத தனியே வளரும் பாகற்க்காய் செடியும் அதிசயமே :)
................................................................................................................................

இந்த வீட்ட வாங்கும்போது வெறும் ரோஜா செடிகள் மட்டுமே இருந்தது ..ஒவ்வொன்றும் பல நிறங்கள் ..மிக வயதான செடிகள் ..முள் குத்தினா கத்தி போல கிழிக்கும் .அதனால் கணவர் நான் வீட்டில் இல்லாதப்போ weed க்ளீநிங்க்னு எல்லாத்தையும் தோண்டி எடுத்து விட்டார் ...முன் பக்கமிருந்த ரோஜா செடி மட்டும் தப்பித்து சம்மருக்கு பூத்து குலுங்கும் ..அதை கட்டிங் எடுத்து ஒரு கிளை ரோஜா உருளைகிழங்கில் குத்தி வைச்சி வேர் பிடிச்சு வளர ஸ்டோர் ரூமில் வைத்தேன் ..


.........................சிறு விளம்பர இடைவேளை 

..........................

இப்போ உருளை கிழங்கு செடி பசேல்னு வளருது ! ஆஆஆவ் 

///ஸ்டோர் ரூமில் வைத்தேன்// 

ஒரு 10 நாள் முன் தொட்டியில் நடுவதாக நினைச்சு மறந்து போய் தரையில் நட்டுட்டு வந்திருக்கேன் :)
இயற்கை பூச்சி விரட்டிகள் .
=========================வீட்டுதோட்டத்தில் பெரும் தொல்லையே அசுவினி பூச்சி மற்றும் சில வண்டுகள் மற்றும் இலைப்பேன் ஆகியன .

இவற்றை எளிதில் துரத்த தோட்டத்தில் செடிகளிடையே சாமந்தி (marigold ) ,பூண்டு வெங்காய செடிகளை நட்டு வையுங்க .

சாமந்தி (marigold )பூச்செடி தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. 
இது ஒரு சிறந்த கொசுவிரட்டி.

பூண்டானது எல்லாவித செடிகளில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் நூற்புழுவை எதிர்த்து திறமாக செயல்படக்கூடியது. அதை தனியாகவோ அல்லது வேம்பு பொருட்கள், மிளகாய், பெருங்காயம் மற்றவையோடு கலந்து பயன்படுத்தலாம்.

..............................................................................................................................

வீட்டுத்தோட்டம் ..சில பயன்தரும் குறிப்புகள்.

1.தொட்டி கண்டெயினரில் வளரும் செடிகளுக்கு மண்புழு உரம் +வெல்லம் சேர்த்த கம்போஸ்ட் டீ நீரில் கலந்து தெளிக்க வேண்டும் .
2.பூக்கள் வரும் பருவத்தில் சிறிது பெருங்காயமும் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
3.தக்காளி ,கத்திரி மற்றும் சில செடிகளில் பூக்கள் மலருமுன் விழுந்திடும்.பாஸ்பரஸ் குறைபாடே இதற்கு காரணம் .பாஸ்பரஸ் சத்து உள்ள சாம்பலை கரைத்து தெளிப்பது சிறந்தது.
4.பொட்டாசியம் சத்து குறைந்தா இலைகள் சுருண்டு நிறமிழக்கும் அதற்கு ஆரஞ்சு எலுமிச்சை பழ தோல்களை செடியினருகே மண்ணில் புதைப்பது உடனே பலன் தரும் .
வாழை பழதோலையும் புதைக்கலாம் .
5.நீரில் கரைத்த மோர் அல்லது வாழை தண்டு /பூக்கள் ஊறவைத்த மோர் நீர் இவற்றை வீணாக்காமல் செடிகளில் தெளித்தால் பூ காய் விளைச்சல் செழிப்புடன் இருக்கும்.
6.மீன் செதில்களை ஒரு மூடிய கண்டெய்னரில் நீர் ஊற்றி வைத்து 4 நாள் கழிச்சி அந்நீரை செடிகளுக்கு ஊற்றினால் நைட்ரஜன் குறைப்பாட்டை தவிர்க்கலாம் .
7,தக்காளி போன்ற செடிகள் வளர வளர நீரூற்றும்போது வேர்களை நீர் சென்றடைய செடிக்கு அருகில் பழைய பிளாஸ்டிக் பாட்டில் அடிப்புறம் வெட்டி நிலத்தில் குத்தி நட்டு
அதில் நீர் ஊற்றவும் . 
                                                   ..............................

இனி வலைப்பக்கம் அடிக்கடி வலம் வருவேன் :) autumn arrived 
angel ........9/28/15

புதுக்கோட்டையில் வலைப்பதிவர் விழா...

வணக்கம் நட்புக்களே :)
எல்லார் ஊரிலும் பானர் ஒட்டியாச்சு , இங்கிலாந்து சார்பா 
என் போஸ்டர் :)        இல்லை :) செய்திதாளில் விளம்பரம் கொடுத்தாச்சு :)
அன்புடன் ஏஞ்சல் :)

8/21/15

நலமா நட்புக்களே :)

நலமா நட்புக்களே :)
எங்களுக்கு இப்போ சம்மர் விடுமுறை .wild park ஒன்றுக்கு சென்றோம்.அங்கு எடுத்த படங்கள் இவை.

வெள்ளை மயில் :)

குட்டி Babes :)


அம்மா வாத்தும் குட்டி பாப்பாங்களும் :)
அம்மா அப்பா கூட நடந்துபோன கினி கோழி குட்டி 
பாப்பா 
அப்பா சைடில் இருந்தார் காமராவில் பிடிக்க முடியல 

முகத்தை நக்கி பாசத்தை பொழிந்த கோமாதாஸ் :)நம் permission இல்லாம படமெடுக்கராங்கனு 
யோசிக்கறாங்க :)Asian Short-clawed otter family


இவங்க விளையாட்டை சிறை பிடித்தேன் ..


இது தாய்லாந்து கத்திரிக்கா 
ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுமத்தில் பாருக் என்பவர் சமையல் குறிப்பு பார்த்து செய்தது 
இதை முகநூலில் பகிர்ந்தேன் .ரெசிப்பி இங்கே 

கல்லால் /பூரிக்கட்டையால் கத்திரிக்காயை ஓங்கி ஒரு போடு போட்டா பிளந்து விதைகள் சிதறி விடும் ..பிறகு குட்டி கத்திரி கப்ஸ் கிடைக்கும் அதை வெட்டி சமைக்கணும்.
அவர் செய்முறையில் maldives தூள் சேர்த்தார் .நான் அதற்க்கு பதில் வறுத்து அரைத்த ஆளி விதை பவுடர் (flax seed )சேர்த்தேன் ..
ஒரு சிறு விளம்பர இடைவேளை ..ஒரு பழைய நினைவு 
ஒன்றுமில்லை :):)
இதே கத்தரிக்கா ஜெர்மனில இருந்தப்போ இலங்கை தமிழ் கடையில் கணவர் வாங்கி வந்தார் ..நான் நாலா வெட்டி அதில் சா -ம் -பா -ர் செஞ்சேன் ................
கிக்க்கிக்கீஈஈஈஈ............எவ்ளோ கசப்பா இருந்திச்சோ !
ஒரு விஷயம் சொல்லியே ஆகணும் .நான் சமைக்கக் ஆரம்பிச்சப்போ ஒன்லி டெஸ்டிங் நோ டேஸ்டிங் .அந்த சாம்பார் நான் சாப்டிருந்தா கசப்பு தெரிஞ்சிருக்கும்!

அடுத்தது எங்கள் ப்ளாக் குறிப்பும் செய்தாச்சு 

சேனை மசாலா :)

அன்புடன் ஏஞ்சல் .


8/1/15

கொடைக்கானல் மெர்க்குரி நச்சுக்கழிவு

கொடைக்கானல் மெர்க்குரி  நச்சுக்கழிவு 

மெர்க்குரி இந்திய மருந்து ,அழகு சாதனபொருட்கள் சட்ட விதிகளின்படி 
தடை செய்யப்பட்ட ஒரு இரசாயன நச்சு பொருள் .
சிறுநீரக பாதிப்பு ,தோலில் அரிப்பு ,நிறம் மாறுபடுதல் ,தழும்புகள் 
இவையெல்லாம் ஏற்படக்காரணம் இந்த மெர்க்குரி /பாதரசம் .
இயற்கையாக நமது தோலின் மெலனின் எனும் நிறமியின் செயல்பாட்டை 
தடை செய்து தோலை வெளுப்பாக வைக்க இந்த பாதரசத்தை முக அழகு
 கிரீம்களில் பயன்படுத்துகிறார்கள் //
நான் கடந்த ஆண்டு எழுதிய பதிவு இங்கே http://kaagidhapookal.blogspot.co.uk/2014/03/blog-post_6.html


கொடைக்கானல் மலைப் பகுதியில் இந்துஸ்தான் லீவர் நிறுவனம்1983ம் ஆண்டுதெர்மாமீட்டர் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றினை துவங்கியது . அமெரிக்க நிறுவனத்துடன் கூட்டு (களவாணித்தனம் ) முயற்சியாம் :(

முழுக்கமுழுக்க அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவே இங்கு தெர்மாமீட்டர்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. ஒன்று கூட இந்தியாவில் விற்கப்படவில்லை.


அமெரிக்காவிலிருந்து மெர்க்குரி இந்தியாவுக்கு  கொண்டு வரப்பட்டது. இங்கு தெர்மாமீட்டர்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் அவைமீண்டும் அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டு வந்தன. அங்கிருந்து ஜெர்மனி ,இங்கிலாந்து ,கனடா ,ஆஸ்திரேலியா ,ஸ்பெயின் நாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன அமெரிக்காவில் இந்தத் தொழிற்சாலையை நடத்தினால் அந் நாட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் இந்தியா உள்பட மற்ற நாடுகளில்வைத்துத் தான் தெர்மமீட்டர் தயாரிப்பில் அமெரிக்கா ஈடுபட்டது. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் பாதரசநச்சுக்கழிவு கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது ..
2001 ஆம் ஆண்டில், கொடைக்கானல் வசிப்பவர்கள் தொழிற்சாலையில் இருந்து 7.4 டன் நொறுக்கிய நச்சு பாதரச கழிவு மற்றும் உடைந்த கண்ணாடி துண்டுகள் கோணி பைகளில் ஸ்க்ராப் /கழிவு கொட்டும் வெளி முற்றத்தில்  இருப்பதை கண்டு பிடித்தனர் .

மேலும் HUL இற்கு சொந்தமான இடத்திலுள்ள சோலைகாடுகளிலும் மெர்க்குரி கழிவுகள் இருப்பதை கண்டு பதைத்த அப்பகுதியினர் 14 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய போராட்டம் இப்போ உயிர் பெற்றுள்ளது  

THE SCRAPYARD AT Moonjikkal in Kodaikanal where the mercury-containing waste from the factory was dumped..இங்கிலாந்து இந்திய விஞ்ஜானிகள் சமீபத்தில் அப்பகுதியில் மெர்க்குரி பாதிப்பு பற்றிய ஆய்வொன்றினை மேற்கொண்டுள்ளார்கள் ..//Hindustan Unilever Ltd (HUL) is a subsidiary of the Anglo-Dutch multinational Unilever and is being held responsible for dumping toxic mercury close to human settlements, polluting the ecosystem and placing workers’ lives in danger.// 

பெரிஜம் ஏரி மற்றும் கொடைக்கானல் ஏரிப்பகுதியிலுள்ள  பச்சை பாசி யின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது அதிலும் மெர்க்குரியின் நச்சு சுவடுகள் இருந்தன .இந்த ஏரிகள் தொழிற்சாலையில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளவை 
..

1983லிருந்து 2001 வரை, இதுபற்றியான விழிப்புணர்வே இல்லாமல்  தொழிலாளர்கள் இறந்துள்ளனர். பல போராட்டங்களுக்குப் பிறகு ஆலை மூடப்பட்டு, தெர்மா மீட்டர் தயாரிப்பும் நிறுத்தப்பட்டது.

ஆனால், இன்று வரை 10,000 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானலில் அகற்றபடாமலேயே உள்ளது
முறையற்று சுற்றுசூழலில் வெளியேற்றப்படும்  மெர்குரி சிறுநீரகம், கல்லீரல் மற்றும் பிற முக்கிய உறுப்புகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தும்,தோல் நோய்கள்  ,கண்களை சேதப்படுத்தும். ,நரம்பு மண்டலத்தையும்பாதிக்கும் .குழந்தையின்மையும் ஏற்படும்.

மார்ச் 2015 இல், ஆலையின் முன்னாள் தொழிலாளர்கள்  போராட்டம் மேற்கொண்டு சில கோரிக்கைகளை முன்வைத்தனர் ..பாதிக்கப்பட்ட நபர்களுக்கு  இழப்பீடு ,மற்றும் தொழிற்சாலையில் இருந்து  மீதமுள்ள கழிவுகள் நீக்க மற்றும் அதற்கான கண்காணிப்பு மற்றும் சுகாதார சேவையை வழங்க மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் பொருட்கள் புறக்கணிக்கப்பட அழைப்பு விடுத்தனர் .
அழகிய மலைவாசஸ்தலத்தின் இயற்கை அழகை மேற்கத்திய நாடுகள் துஷ் பிரயோகபடுதியுள்ளன என்பது மிகையில்லை அவங்க நாடுகளில் குப்பை கொட்டமாட்டார்கள் அங்குள்ள குப்பையை கப்பலேற்றி நம் நாட்டில் கொட்டுவது கொடுமை :(..தொழிலாளர்களது உரிமைகள் , பாதுகாப்பு, சுகாதார தொடர்பாக குறைந்த தரநிலைகள்  இதெல்லாம் நம் நாட்டில் எளிதில் அமுக்கப்படும் ..

விந்தை என்னவென்றால் இத்தகைய பெரிய நிறுவ


ங்களில் //“ is a unique company with a proud history and a bright future. We have ambitious plans for sustainable growth and an intense sense of social purpose.”//
என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள் ..சமூக பொறுப்பு பாதுகாப்பு என்று பெரும் பள பளக்கும் விளம்பரம் எல்லாம் இருக்கும் பின்னணியில் ,ஏதோ ஒரு ஏழை நாட்டின் குடிமக்களின் அறியா தியாகமும் ,உயிரை கொடுத்த உழைப்பும் இருக்கும் :(மக்களாகிய நாம் செய்ய வேண்டியது இங்கே
http://www.jhatkaa.org/unilever/
சென்று பெட்டிஷனில் கையொப்பமிட்டு நீதி கிடைக்க தோள் கொடுப்போம் ..நம் தாய்நாடு மேற்கத்திய நாடுகளின் குப்பை தொட்டியில்லை என்பதை உணர வைப்போம் .
தகவல் இணையம் 
http://homegrown.co.in/unileverpollutes-a-protest-rap-song-from-india-seeks-to-end-14-years-of-injustice/

அன்புடன் ஏஞ்சல் .