அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

9/28/14

Loud ஸ்பீக்கர் ..3 !! :) க்வில்லிங் மற்றும் பீச் பக்கம்

ஸ்பீக்கர் ..3 !! :)
பள்ளி விடுமுறை விட்டதும்  பல இடங்களுக்கு சென்று வந்தோம் 
முதலில் brighton பகுதி பீச்சுக்கு சென்றோம் .அந்த கடற்கரை 
முழுதும் மணல் இல்லாமல் வெறுமனே கூழாங்கற்கள் நிறைந்து காணப்பட்டது .
அதுவும் ஒவ்வொன்றும் அடிச்சா மரண அடிதான் :)


                     இந்த ராட்டினத்தை கண்ணால் பார்த்ததற்கே இன்னும் 
                                            எனக்கு மயக்கம் தெளியலை :))
                                                                                        

                                                                                     
   அந்த கூழாங் கற்களில் என் கண்ணுக்கு பட்டு அங்கிருந்து 
எடுத்து வந்தேன் !!பாருங்கள் இவற்றை 
மனித முகம் வரைந்தார்போன்று இருக்கு ஒன்றில் 


                             மற்றும் ஒரு பெரிய மீன் அல்லது படகு வடிவம் 
அச்சில் வார்த்தார்போலவும் இருக்கு இன்னொன்றில் !
                                                                                

----------------------------------------------------
இது எங்க ஜெஸியின் வெட்னரி டாக்டருக்கு செய்த 
தாங்க்யூ கார்ட் ..

இங்குள்ள கால்நடை ,வெட்னரி மருத்துவர்கள் தங்கள் 
pet பேஷன்டுகளிடம் மிக மிக அன்பா நடந்துக்குவாங்க 1
ட்ரீட்மென்ட் கொண்டு போனா அதுங்களை கட்டி பிடிச்சி 
அரவணைத்து !!ஒரே முத்த மழை பாசமழைதான் :)
நமது மருத்துவர்கள் கவனிக்க வேண்டியது !!
பாசமழையை  மட்டும் தான் சொன்னேன் :))))
சமீபத்தில் ஜெஸ்ஸிக்கு நாங்க மைக்ரோ சிப்பிங் 
தகடு பொருத்தினோம் .microchipping என்பது ஒரு 
வளர்ப்புபிராணி காணாமல் போனால் அதை எளிதில் ட்ரேஸ் 
செய்து கண்டுபிடிக்க உதவும் மேலும் அவங்க கொடுக்கும் ஒரு 
சிறு டாலர் போன்ற பிளாஸ்டிக்கையும் பிராணிகளின் 
கழுத்துபட்டையில் இணைத்துவிட  வேண்டும் ..
நான் ஜெஸ்ஸி கலர் இருக்குமாறு ஒரு பூஸ் வாழ்த்து அட்டை 
செய்தேன் .வாழ்த்து அட்டையில் ஜெஸியின் கையொப்பம் 
போட்டாகணுமே :) அவளுக்குபதில் நான் போட முடியாது :)
எப்படி கையெழுத்தை வாங்குவதென்று யோசித்து 
செய்தது இது :)

இங்க் அல்லது ஸ்டாம்ப் எதுவுமே இரசாயனம் கலந்திருக்கும் 
அதனால் தோட்டத்துக்கு சென்று கீழே விழுந்திருந்த பல வண்ண 
மலர்களை எடுத்து ஒரு  தட்டில் வைத்து நசுக்கினேன் 
ஒரு கலவையாக அடர் சிவப்பு நிறம் கிடைத்தது .
ஜெஸ்ஸி மேடம் கிட்ட சைன்  பண்ண சொன்னா ரொம்ப பிகு பண்ணிக்கிட்டாங்க :) ஒரு மாதிரி காலை  புடிச்சி கால்நாட்டு வாங்கி விட்டேன் .
இந்த மலர் இதழ்களை இரண்டு காகிதங்கள் இடையில் வைத்து 
பூரி கட்டையில் உருட்டினாலும் அல்லது wax காதிதத்தின் இடையில் 
வைத்து அயர்ன் செய்தாலும் அழகிய அச்சு கிடைக்கும் 
செய்து பாருங்களேன் இந்த சுட்டியில் பார்த்து 
மற்றும் இங்கும் 
..............................
.

9/27/14

Loud ஸ்பீக்கர் :) ..2

 விழா போல எனக்கு வலையுலகில் நால்வரிடமிருந்து அவார்ட் கிடைச்சிருக்கு ..
:)))))))
கோமதியக்கா அவர்களும் எனக்கு அவார்ட்  கொடுத்தாங்க 
தூக்ககலக்கத்தில் நள்ளிரவு ஒரு மணி எழுதி போஸ்ட் பண்ணேன் .
மன்னிச்சு மன்னிச்சு :) அக்கா என் தலையில்  ஒரு செல்ல குட்டு 
குடுங்க .:) நல்ல வைர மோதிரம் அஞ்சு விரலிலும் போட்டுதான் 
குட்டணும் :)                        
                                                                         

முகபுத்தகம் பக்கமே சுற்றிகொண்டிருந்தாலும் அவ்வப்போது 
இந்த பிறந்த வீட்டையும் மறக்காமல் ஏதாவது எழுதி வருகிறேன் 
என்னை மறவாமல் நினைவு வைத்து எனக்கு விருதளித்த 
 அம்மா காமாட்சி மகாலிங்கம் ,சகோதரர் மதுரை தமிழன் ,
சகோதரி இளமதி ஆகிய மூவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
எங்க வீட்டில் மலர்ந்தmorning  glory .
நம்மை பற்றி எதாச்சும் சொல்லணுமாம் 
அவார்ட் விதிமுறைகள்படி :)..

அதான் உங்க எல்லாருக்குமே தெரியுமே நன்கு சமைக்கும் !

நிறைய பேருக்கு சமையல் கற்றுகொடுக்கப்போகும் அன்பான 
அமைதியான :)  ...சரி சரி விடுங்க அரசியலில் இதெல்லாம் சகஜம் 
என் நல்ல நேரமா என்னன்னு தெரியல்லை மேதகு அதிரா மியாவ் அவர்கள் 
கணினியில் வைரஸ் நாற்காலி போட்டு அமர்ந்திருக்காம் .இதெல்லாம் அவங்க கண்ணில் பட சான்சில்லை :))
...
ஆக்ஸ்போர்ட் எனும் இடத்தில ஒரு மாடல் கிராமத்தை உருவாகியுள்ளார்கள் 
இவை அங்கே சென்றபோது எடுத்த படம் .
http://www.themodelvillage.com/

சரி இப்போ எனக்கு கிடைச்ச விருதை நான்  ஐவருக்கு 
பகிரணும்    பெரும்பாலும் அனைவருக்கும் இவ்விருது 
சுற்றி சுற்றி வருகிறது :)என் வலையில் மாட்டியவர்கள் 


ஒரு  பகிர்வுடன் முடித்துக்கொள்கிறேன் .
நலம் வலைப்பூவில் பகிர்ந்தது 
இது வேறொன்றுமில்லை flax விதைதான் தமிழில் 
ஆளி  விதை எனப்படுகிறது .
ஒரு மீள்சுழற்சி :)
சித்ரா சுந்தர் மற்றும் மஹி இவர்களின் செய்தமாதிரியே 
நானும் கீரையை வெட்டி மீண்டும்தண்டு பகுதியை தொட்டியில் 
நட்டேன் ..துளிர்த்திருக்காங்க :)

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

9/24/14

Loud ஸ்பீக்கர் ...1 .தக்காளி செடி கண்டெய்னர் தோட்டம்


ஸ்பீக்கர் பூ :) 


                                                                            

இவை எங்கள் தோட்டத்தில் மலர்ந்த nasturtium எனும் மலர்கள் 
ஒரே செடியில் ஆரஞ்சு சிவப்பு மஞ்சள் கொஞ்சம் அழுக்கு வெண்மை கலந்த மஞ்சள் என மூவர்ணங்களில்  உள்ளன .

                                                                                

பார்வைக்கு ஸ்பீக்கர் போலவே உள்ளன :)
ஒவ்வொறு முறையும் பதிவு எழுதும்போது இந்த தலைப்பில் 
எனக்கு நிறைய குழப்பம் :)
                                                                               

அஞ்சறைப்பெட்டி ட்ரங்கு பெட்டி காக்டெயில் என்று 
நிறைய பேர் தலைப்பு தந்து எழுதுவது போல நான் இனி 
ஸ்பீக்கர் :)  என்றதலைப்பில் அனைத்து விஷயங்களையும் 
கலந்து எழுதலாம்னு நினைக்கிறேன் :) 
எல்லாம் ஸ்பீக்கர் பூ மகிமை !!

ஸ்பீக்கர் 1..   


                                                                                     கன்டெய்னர் தோட்டம் /தொட்டியில் தக்காளி செடி வளர்ப்பு .
நலம்.நெட் .தளத்தில் //தொட்டியில் தக்காளி வளர்ப்பு முறை 
// container gardening குறிப்புகளை பின்பற்றி பழைய big shopper  
பையில் மற்றும் இன்னொரு தொட்டியில் தக்காளி  செடி 
வளர்த்தேன் .
அதிக மழை மற்றும் வெயில் கொஞ்சம் குறைந்ததால்
 அறுவடை தாமதமாகியது .நம்மூர் காலநிலைக்கு 
உடனே நல்ல அறுவடை கிடைக்கும் .
இம்முறையில் பூச்சி மருந்துகள் எதுவும் பயன்படுத்தவில்லை .
அருகே ஒரு சாமந்தி செடி நட்டு வைத்தேன் அதுவே இயற்கையாக 
எந்த பூச்சியையும் நெருங்க விடவில்லை ..ஒரு அதிகப்ரசங்கி வேலையால் :)  எங்கே காற்றுக்கு விழுந்து விடுமோ என்ற 
பயத்தில் ஒரு சிறு பழைய நாற்காலியை தொட்டி அருகே 
அண்டை கொடுக்க .(பாரி முல்லைக்கு தேர் கொடுத்தார் 
ஏஞ்சல் தக்காளி செடிக்குசேர் /chair கொடுத்தார்னு வரலாற்றில் 
நம்ம பெயரும்  வரணும்ல :)எங்க ஏரியா அணில்களுக்கு 
மகா வசதி :) அதில் அமர்ந்து தக்காளிகளை ருசிக்க ஆரம்பித்து விட்டார்கள் !!!!
பையில் வளர்த்த செடிகளுக்கு சற்று நீண்ட குச்சியை 
தாங்கும் விதம் கட்டி வைக்க அதில் உள்ள தக்காளிகள் 
இவை  கொலாஜ் படத்தில் உள்ளவை .
இங்கே  கண்டெய்னர் தோட்டம் முறை பற்றி வாசிக்கவும்.

 அடுத்து ஒரு சமையல் குறிப்பு :)

ஒரு முறை தக்காளி செடி  கிளை ஒடிந்து விழுந்து விட்டது 
அதில் ஆறேழு பெரிய காய்கள் இருந்தன நெட்டில் தேடியதில் 
அதிலும் கூட்டு செய்யலாம்னு கண்டுபிடிச்சி என் முறையில் 
சற்று மாற்றி செய்தேன் :)
                                                                 


தக்காளி காய்களை சிறியதாக பொரியலுக்கு நறுக்குவது
போலநறுக்கி கொண்டு ,முட்டைகோஸ் கூட்டு பொரியல் 
செய்வதுபோல குக்கரில் வெங்காயம் ,மிளகாய்,தேங்காய் 
துருவல் மஞ்சள்தூள் சேர்த்து  தாளித்து மூன்று விசில் 
வந்ததும் இறக்கிவிடவேண்டும் .தண்ணீர் சேர்க்க வேண்டாம் .
ருசி அபாரம் !! 
                                                                         
தக்காளி பதிவு நீண்டு விட்டது அடுத்த பதிவில் எனக்கு 
கிடைத்த விருதுகள் வெளிவருமென தெரிவித்துக்கொள்கிறேன் 

அன்புடன் ஸ்பீக்கர் :) ஏஞ்சல் 
9/15/14

தில்லு முல்லு ..மற்றும் ரசித்து ருசித்த சமையல்

/வீட்டிலிருந்து வேலை செய்யலாம் 

குடும்ப தலைவிகளுக்கு உகந்தது ..வீட்டில் தொலைக்காட்சி 

                                                                             பார்த்துக்கொண்டேகடித உறைகள் மீது முகவரி எழுதி ஸ்டாம்ப் 
ஒட்டி அனுப்ப வேண்டும் .
100 என்வலப்களுக்கு ..25 பவுண்ட் //
இப்படி ஒன்றில்லை ..ஆயிரம் விளம்பரம் இங்கே பத்திரிக்கைகளில் வரும்
 நாங்க அதை பார்த்து ஏமாறுவதில்லை 
என் மகளின் தோழியின் தாய் ஆந்திராவை சேர்ந்த பெண் இதை பார்த்து 
ஆசைப்பட்டு அந்த முகவரிக்கு தொடர்பு கொண்டாராம் .அவர்கள் 
இவரிடமே பத்து செகண்ட் கிளாஸ் ஸ்டாம்புகளை அனுப்ப 
சொல்லியிருக்காங்க அப்புறம் upfront cost 50 பவுண்டும் கேட்டிருக்காங்க ..
இது ஸ்டார்டர் பாக்குக்கு :)இந்த பெண்மணி செக் அனுப்பி வைச்சாராம் ..
ஒருவாரம் கழித்து ஒரு லெட்டர் வந்திருக்கு .
அதில் இவர் அனுப்பிய அதே செகண்ட் கிளாஸ் ஸ்டாம்ப் ஒட்டி வந்திருக்கு :)
உள்ளே ஒரு சீட்டில் அடுத்த கடிதத்தில் மற்ற விவரம் அனுப்புவதாக 
குறிப்பிட்டிருந்ததாம் 
பிறகு அடுத்த வாரம் இன்னொரு என்வலப் அதில் இவர் அனுப்பிய 
அதே ஸ்டாம்ப்  மற்றொரு சீட்டு மற்றும் நாலு செவ்வக வடிவ 
அட்டைகள் ..அந்த சீட்டில் கீழே இருந்த வாசகம் ..எழுதிருந்தது
//"Dear New Envelope Stuffer!

We are so happy that you have decided to join our team! To get started, simply place newspaper or magazine ads identical to the one you answered, in various publications. Soon, you will have HUNDREDS of people sending you £19.95. When the money arrives, you will stuff your envelopes with a copy of this letter and keep your profits!

~Best Wishes!"//
கடைசி வரைக்கும் இந்தம்மாவுக்கு என்வலப் வரவேயில்லை 
இப்படி இங்கே வெளிநாட்டிலும் நிறைய பேர் ஏமாத்தறாங்க 
இது புரியாம அந்த பொண்ணு 50 பவுண்டை ஏமாந்திருக்கு 
எனக்கு என்ன கவலைன்னா !! ஒரு வாரத்துக்கு ப்ரிட்ஜில் சமைச்சு 
வச்சு மிச்சம் பண்ணி சேர்த்த பணம் பாவம் ..
நான் சொன்னேன் இனிமே ஏதாச்சும் பிசினஸ் ஐடியா வேணும்னா 
என்கிட்டே கேளு  நான் ஒரு ஐடியாவுக்கு ஐந்து பவுண்ட் மட்டும்தான் 
வசூலிப்பேன் என்றேன் :))..

சில விஷயங்களை அரசாங்கத்தால் கண்காணிக்கவோ தடை 
செய்யவோ கஷ்டம் ..நாம்தான்  சூதானமா இருக்கணும் 
---------------------------------------------------------------------------------------------------------------

சகோதரி உமையாள் காயத்ரியின் குறிப்பு பார்த்து செய்தேன் :) அருமையான ருசி இனிப்பு சர்க்கரை வள்ளி கிழங்கு சிப்ஸ் .ரெசிப்பி 

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx