அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

5/30/14

கொஞ்சம் கைவினை கொஞ்சம் சமையல் :)

வணக்கம் நண்பர்களே :)
                                                                               


இது சணல் கயறு தோட்டத்தில் செடிகிளைகளை கட்ட பயன்படுத்தும் 
கயறினை வைத்து செய்த வாழ்த்து அட்டை

ஒரு சத்தான சமையல் குறிப்பு :)

பரட்டைக்கீரை கூட்டு ..

                                                                            
பேரைக்கேட்டாலே சும்மா அதிருதா :) 
இது KALE   பத்தி இங்கே சுட்டியில் தட்டி சென்று தெரிஞ்சுக்கோங்க .

KALE என்ற கீரையின் தமிழ்பெயர் பரட்டைக்கீரை .
குறைந்த கலோரி ,நிறைய நார்ச்சத்து ,பூச்சியம் அளவு கொழுப்பு 
சத்து நிறைந்தது இக்கீரை .
அதிக நார்ச்சத்து இருப்பதால் எளிதில் ஜீரண மாகும் உணவு .
இரும்புசத்து அதிகம் இருக்கு இந்த கீரையில் .
BEEF இல் இருப்பதை விட அதிகம் இரும்பு சத்து இதில் இருக்கு .
ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் இதில் நிறையவே இருக்கு 
ஈரல் ,புற்றுநோய் ,எலும்பு குறைபாடு ,ஆஸ்த்மா போன்ற பல 
நோய்கள் வராம தடுக்க கூடியது .
பார்வை தெளிவா இருக்க தினமும் கேல் உணவில் சேர்க்க வேண்டும் 
அன்றாடம் நமது உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி ,வைட்டமின் A..கால்சியம் எல்லாம் இந்த கீரையில் இருக்கு .
அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் இக்கீரை :)

நான் எப்பவும் கடைகளில் இதைபார்த்திருக்கேன் ஆனால் 
வாங்கியதில்லை .இதை ஜூஸ் செய்தெல்லாம் அருந்தலாம்னு 
கேள்விபட்டிருக்கேன் ஆனா முயற்சித்ததில்லை :)
இந்த முறை இந்த கீரை எப்படி எங்க வீட்டுக்கு வந்ததுன்னா :)

(எப்பவும்போல )என் கணவர் COLLARD GREENS என்று நினைத்து இதை 
தெரியாமல் வாங்கி வந்தார் ..என்ன செய்யன்னு தெரியாம சும்மா
 கீரை மாதிரி செய்தேன் ..முருங்கை கீரை சுவையில் மிக அருமையாக 
வந்தது .மற்ற கீரைகள் சமைத்த பின் அளவு சுருங்கும் !
ஆனா இது க்வான்டிடி அதே அளவு சமைத்த பின்னும் இருந்தது :)
                                                                        ...................
உங்களுக்காக வலையில் மாட்டிய செய்முறை இங்கே .              ம்ம்ம் Feeling happpppppppy:) and Blessed !!
                 (FB  mania LOL!!!)
                                                                     
வெள்ளிக்கிழமை மாலை நேரம் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன் 
பள்ளி முடிந்து வீடு திரும்பும் ஒரு சிறு பெண் காரை விட்டு இறங்கினாள் அவள் வீட்டு பக்கம் பார்க்காமல் அதைத்தாண்டி முன்புறமாக வேகமாக நடந்தாள் எங்கு செல்கிறாள் என்ற ஆவலுடன் எட்டி பார்த்தேன் ..அங்கே ஒரு மூன்று வீடு தள்ளி வசிக்கும் முதிய பாகிஸ்தானிய பெண்மணி ஒருவர் குப்பை வாளியை தூக்க சிரமப்பட்டு கொண்டிருந்தார் ..இந்த பெண் ஓடி சென்று அவருக்கு அதை நிமிர்த்தி வைக்க உதவுகிறாள் !! கொஞ்சம் நேரம் முன் சில பள்ளி மாணவர்கள் விளையாட்டாக இவரது குப்பை வாளியை கவிழ்த்தி போட்டு விட்டு சென்றுள்ளார்கள் பாவம் ..
அதுமட்டுமன்றி அவரை அணைத்து நலம் விசாரிச்சது !! அப்புறம் ..//Mrs ரெஹ்மான் ..தோட்டத்தில் களை பிடுங்கனும்னா சொல்லுங்க வந்து உதவுகின்றேன்// !!! ...என்று சொல்லி பிறகு நடந்து சென்று தனது(எங்க ) வீட்டு கதவை தட்டியது

Little deeds of kindness,
little words of love,
make our earth an Eden,
like the heaven above.
............................................................


பின்குறிப்பு  நான் இதுவரையில் என் மகளுக்கு இதை செய் என்று சொல்லி கொடுக்கவில்லை ஆனால் அவள் சிறு பிள்ளையாய் இருக்கும்போதே அவள் முன்னால் எப்போதோ ஓரிரு முறை சிலருக்கு உதவியிருக்கிறேன் அந்த செயல்கள் அவள் மனதில் ஆழமாக பதிந்து விட்டு இப்படி வெளிப்படுகின்றது!!
.....................................
இது தோட்டத்தில் மஞ்சள் பூவை தேனியோடு ரசிக்கும் ஜெஸ்ஸி :)

மீண்டும் சந்திப்போம் ...நண்பர்களே