அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/12/14

Loud Speaker ..13 ஆரம்ப் ஹெல்ப் டெஸ்க்,Christmas Crafts ,முனிக்கி சாம்பார்

இன்றைய லவுட் ஸ்பீக்கரில் ஆரம்ப் ஹெல்ப் டெஸ்க் ,மெரினா பீச்சில் கூடும் பறவைகள் பற்றிய சகோதரர் ஜாக்கி சேகரின் காணொளி ,
pomander ball ,மீள்சுழற்சி பாஸ்கட் மற்றும் ரசித்து ருசித்த முனிக்கி சாம்பார் :)


உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய நாடு நமது இந்தியா ..
ஆனால பல பிள்ளைகளுக்கு முறையான மேசை கூட பல கிராமப்புற பள்ளிகளில் இல்லையென்பது வேதனைக்குரிய விஷயம் .
மேசை,நாற்காலியில் அமர்ந்து பள்ளியில் படிப்பது எழுதுவது என்பது ஒரு வித வசதி மட்டுமின்றி அழுக்கான தரையில் அமர்ந்து முறையற்ற நிலையில் சாய்ந்து குனிந்து எழுதுவது ஒழுங்கற்ற மோசமான கையெழுத்துக்கு வழி வகுக்கும் .
Aarambh என்ற மும்பையை சேர்ந்த  தன்னார்வ தொண்டு நிறுவனம் 
இப்படிப்பட்ட அடிமட்ட குடும்பங்களை சார்ந்த கிராமப்புற பள்ளி பிள்ளைகளுக்கென ஹெல்ப் டெஸ்க் ஒன்றினை வடிவமைத்துள்ளார்கள் .

இவர்கள் தொழில் நிறுவனங்கள் பெரிய சூப்பர் மார்கெட்டுகள் மற்றும் பெரிய நிறுவனங்களில்  இருந்து பொருட்கள் சுற்றி வரும் அட்டை பெட்டிகளை சேமித்து அவற்றை மீள் சுழற்சி செய்து அதனை டூ இன் ஒன் பெட்டி மற்றும் தரையில் அமர்ந்து எழுதும் சிறு மேஜை போல வடிவமைத்து உள்ளார்கள் .பெட்டிக்குள் புத்தகத்தை உள்ளே வைத்து 
பள்ளிக்கு எடுத்து சென்று அங்கே அமரும்போது அதை சிறு மேஜையாக்கலாம் !. காணொளி பார்க்கவும் .
மகாராஷ்டிரா பகுதியிலுள்ள சில பள்ளிகளுக்கு ஆரம்ப் 
நிறுவனம் இலவசமாக இவற்றை விநியோகித்துள்ளார்கள் .
Kindness is not an act, it’s a lifestyle.
அடுத்து ஒரு காணொளி மற்றும் மனதுக்கு சந்தோஷம்  தரும் ஒரு விஷயம் `.நண்பர் ஜாக்கி சேகர் அவர்களின் பதிவில் பார்த்தது .
அவரே அழகாக விளக்குகிறார் பாருங்களேன் ..

                               https://www.youtube.com/watch?v=oPJ2AxQxVlg    

Pomander Ball ..


                                                                           


                                                                                   
இது கிறிஸ்மஸ் காலங்களில் இங்கே எல்லா வீடுகளிலும் 
செய்ய ஆரம்பிப்பாங்க ..ஆரஞ்சு பழங்களில் எல்லா இடத்திலும் பல் குத்தும் குச்சியால் துளையிட்டு அதில் கிராம்பை குத்தி வைக்கணும் .
பிறகு அதை ஒரு ரிப்பனில் கட்டி கிறிஸ்மஸ் மரத்தின் டெகரெஷன்சுடன்  கட்டி தொங்க விடனும் ..அதுவே காய்ந்து விடும் காய காய ஆரஞ்சு மற்றும் கிராம்பின் மணம் இல்லமெங்கும் நறுமணமாக வீசும் .
சிலர் கிராம்பு குத்தியபின்பு தூள் செய்த பட்டை மற்றும் கிராம்பு 
 தூளில் உருட்டியும் வைப்பார்கள் .இது நான் நார்த்தங்காய் என்று நினைச்சி வாங்கின எலுமிச்சை பழத்தில் செய்தது :)

                                                                                   

செய்முறை விளக்கம் இங்கே 
கிறிஸ்மஸ் என்றால் கார்ட்சும் முக்கியமான ஒன்று இங்கிலாந்தில் .

 முகபுத்தகத்தில் பகிர்ந்தேன் இங்கே உங்களுக்கும் 
செய்முறையோடு ..
                                                                                  

           இது ஒரு மீள்சுழற்சி செய்யப்பட்ட கிரீட்டிங் கார்ட் பாஸ்கட் ..நம்ம நாட்டிலும் கிருஸ்மஸ் புத்தாண்டு திவாளி பொங்கல் ரம்ஜான் கார்ட்ஸ் பார்த்திருக்கேன் ..நாம் அனைவருக்கும் பண்டிகைக்கு முன்பே போஸ்ட் பண்ணிடுவோம் ..
ஜெர்மனில இருந்த வரைக்கும் சும்மா வாழ்த்திப்போம் அவ்வளவுதான் ..ஆனா இங்கே இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்மஸ் வர ஒரு மாதமிருக்குமுன்பே கார்ட்ஸ் கடைகள் களை கட்டும் ..இங்கு வந்த புதிதில் எங்களுக்கு தெரியாது ஆலயத்தில் கூட அனைவருக்கும் பெயரெழுதி கார்ட்ஸ் வச்சிருப்பாங்க !
அப்புறம் இப்போ ஒரு தெருவில் அனைவர் வீட்டு லெட்டர் பாக்ஸிலும் நாமே நேரில் போட்டு விடனும் கார்ட்சை ..பேரெல்லாம் தெரியாட்டியும் பரவாயில்லை வீட்டு இலக்கம் எழுதி போடுவோம் !
பண்டிகை முடிந்ததும் பார்த்தா !கூடை நிறைய அள்ளலாம் இந்த வாழ்த்து அட்டைகள் ..சில இடங்களில் recycle செய்வார்கள் .ஆனால் அங்கு எடுத்து செல்லனும் .எனக்கொரு பிரிட்டிஷ் நண்பி இப்படி பழைய கார்ட்சை வைத்து சிறு கூடை போல செய்ய சொல்லித்தந்தார் ..
இதில் கார்ட்ஸ் மட்டும் பயன்படுத்தணும் என்றில்லை பழைய சீனரிஸ் புகைப்படங்கள் கூட இருந்தால் பயன்படுத்தி செய்யலாம் 
இந்த சுட்டியில் பாஸ்கட்டுக்கு template செய்முறை எல்லாம் இருக்கு ..      

அடுத்தது ரசித்து ருசித்த சமையல் :) சகோதரி உமையாள் காயத்ரியின் 
பருப்பு முனிக்கி சாம்பார் ..

                                                                                        


                                                                                                                                                      தோசைக்கு மட்டுமில்லைங்க 
சாதத்திலும் ஊற்றி சாப்பிடலாம் சுவையோ சுவை ..செய்திட்டு காதை  கிட்ட வச்சி கேட்டேன் ..//நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி //
பாட்டு வருதான்னு :) வரல்லையே வரல்லையே அதுக்குப்பதில் வேற பாட்டு கேட்டது :)
என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் :)))

மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் ..அன்புடன் ஏஞ்சலின் :)                                                             

38 comments:

 1. படிப்பதற்கு எவ்வளவு உதவியாக இருக்கு அந்த help desk. உண்மையில் அந்த தொண்டு நிறுவனம் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும். சூப்பர்
  அமர்சந்த் அவர்களை பாராட்ட வார்த்தையில்லை. ஏழு வருடங்களாக இதனை செய்வது என்பது லேசான காரியமில்லை. மிகவும் அருமையான தகவல்கள் அஞ்சு.
  pomander ball, christmas cards crafts, முனிக்கி சாம்பார் அருமை. பகிர்விற்கு நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகைக்கு நன்றி ப்ரியா :) இந்தாங்க ஒரு தோசை வித் சாம்பார் :)
   ஜாக்கி சேகரின் வீடியோ மனசை கொள்ளை கொண்டது ..இன்னும் நிறைய விவரம் சேர்க்க எனக்கு கணினி தமிழ் fonts ஒத்துழைக்கவில்லை .ஒரு வாரமா புது soft ware இன்ஸ்டால் செய்ததில் ரொம்ப தொல்லை தருது

   Delete
 2. குழந்தைகள் படிப்பதற்கு எவ்வளவு அருமையாக அந்த நிறுவனம் செய்து கொடுத்து இருக்கு..பாராட்ட வேண்டிய விஷயம்.
  கிறிஸ்மஸ் அலங்காரம்...மணம் வீசுகிறது...
  என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் :)))// பாட்டும் கேட்டுச்சு...

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள் :) முனிக்கி சாம்பார் ருசியோ ருசி ..அந்த pomander செய்து வைங்க நீங்களும் அரை முழுதும் வாசனை வீசுது இங்கே :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிப்பா

   Delete
 3. நல்ல தகவல்களின் தொகுப்பு!..

  Christmas Cards - அருமை.. வாழ்த்துக்கள்!..

  இந்த முனிக்கி சாம்பார் - எங்க வீட்டில் வேறு பாட்டு அல்லவா பாடியது!..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா :) உங்க வீட்ல வேற பாட்டு கேட்டுச்சா :))) உலகமெங்கும் பரவுது உமையாள் கைமணம் :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐய்யா

   Delete
 4. Replies
  1. வாங்க மைதிலி வருகைக்கும் கருத்துக்கும் நன்றிமா

   Delete
 5. அனைத்து தகவல்களையும் லவுட் ஸ்பீக்கர் அழகாகச் சொல்லியுள்ளது! ஜக்கி சேகர் காணொளி ஆஹா போட வைத்தது. குழந்தைகளுக்காகச் அவர்களின் ந்லனுக்காகச் செய்த அந்த நிறுவனட்த்தைப் பாராட்டத்தான் வேண்டும்.
  ஹெல்ப் டெஸ்க் புதுமையாக உள்ளது.

  கிறித்துமஸ் வாழ்த்து அட்டைகளும் சூப்பர்! வாழ்த்துககள்! பாராட்டுக்கள்!. அந்த பால் ஆம் பார்த்திருக்கின்றோம்...சூப்பர்..


  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..ஹெல்ப் டெஸ்க் விலை பத்து rs பெறுமதிதானாம் ! அந்த அடித்தட்டு பிள்ளைகளுக்கு எவ்ளோ வசதியாக இருந்திருக்கும் !! நான் recycle பிரியை என்பதால் எனக்கு இது ரொம்ப பிடிச்சிருந்தது .ஜாக்கி சேகர் குறிப்பிட்ட அந்த அமர்சாந்த் போல நிறையபேர் இங்கே யூகேவிலும் இருக்காங்க ..காலை குளிரையும் பார்க்காமல் வயதான பஞ்சாபியர் பறவைகளுக்கு உணவிடுவாங்க .
   அவங்களுக்கு அது ஒரு சர்விஸ் போல வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி சகோ

   Delete
 6. அனைத்து பகிர்வுகளும் ரசிக்கவைத்தது.பாராட்டுக்கள்.

  ReplyDelete
 7. வணக்கம்
  நல்ல சிப்பியால் மட்டுமே நல்ல சிலையை செதுக்க முடியும் அதைப்போன்றுதான் நல்ல ஆசிரியர்கள்தான் நல்ல மாணாக்கனை உருவாக்க முடியும்... பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 8. அந்தப் பெட்டியை வாங்கிக் கொள்ளும் குழந்தைகள் முகத்தில்தான் எத்தனை சந்தோஷம்!

  கிறிஸ்துமஸ் கார்ட் விவரம் சுவாரஸ்யம்.

  சாம்பார்.... இதோ போகிறேன்...!

  ReplyDelete
 9. help desk அபாரம்...!

  சாம்பார் சூப்பர்...!

  ReplyDelete
 10. ஹெல்ப் டெஸ்க், கார்டு basket ,முனிக்கி சாம்பார் ... wow ..அருமையான பகிர்வு

  ReplyDelete
 11. இந்த கார்ட் குடை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது.
  இங்கு பள்ளிகளில்,ஓவியாவின் வகுப்புலேயே எல்லோரும் கிறிஸ்துமஸ் கார்ட் (தங்களுக்கு தெரிந்த வகையில் எழுதி) பரிமாறிக்கொண்டார்கள்.

  ReplyDelete
 12. அட.. அட.. எத்தனை விடயங்கள்!
  அத்தனையும் அருமை!
  குழந்தைகள் நலன் காக்கும் நிறுவனத்தின் செயற்பாடுகளும் அந்த ஹெல்ப் டெஸ்க்கும் மிகச் சிறப்பு!

  முனிக்கி சாம்பார் + கிஸ்மஸ் கார்ட் அசத்தல்!

  வாழ்த்துக்கள் அஞ்சு!

  ReplyDelete
 13. ஹெல்ப் டெஸ்க் அருமையாக இருக்கிறது! சுவையான செய்திபகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 14. ஒரே பதிவுல இவ்வளவு விசயத்தை போட்டு கலக்கிட்டீங்க. புத்தகப்பை மேஜை உண்மையில் நல்ல செய்தி. கிறிஸ்துமஸ் அட்டை,மற்றும் உமையாள் அவர்களின் சாம்பார் வாசம் இங்கு மணக்குது.

  ReplyDelete
 15. ஆஹா லைம் க்கு கராம்பு குத்தி வைப்பதோ.. நான் கேள்விப்படவில்லை நல்ல முறையாச்சே.. செய்திட்டால் போச்சு...

  ReplyDelete
 16. //அடுத்தது ரசித்து ருசித்த சமையல் :) /// நோஓஓஓஓஓஓஓஓஓஓ.. தெரியாமல் ஒரு வசனம் போட்டுட்டேன் ”சமையலில் கில்லி”:) என:) அதுக்காக இப்பூடியா:) விடுங்கோ விடுங்கோ... வெயா இஸ் மை தேம்ஸ்ஸ்ஸ்ஸ்??:)

  ReplyDelete
 17. ///என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன் :)))
  /// அவ்வ்வ்வ் எனக்கா சொன்னீங்க ஃபிஸ்ஸு:) ரொம்ப ரொம்ப ஷையா வருதெனக்கு:) இதைப் பார்த்ததும் தேம்ஸ்க்குப் போவதை வாபஸ் வாங்கிட்டேன்ன்ன்ன்ன்ன்:)).

  ReplyDelete
 18. ஏஞ்சலின்,

  கிராமப்புற மாணவர்களுக்கு உதவியவர்களுக்கு பாராட்டுக்கள்.

  கிராம்புகளை எல்லாம் முதலில் குட்டிகுட்டி சாக்லேட்டுகளோ என நெனச்சுட்டேன். பிறகு, எங்க ஊர் பக்கம் 'நெருஞ்சி முள்'ளுன்னு ஒன்னு குட்டிகுட்டியா இருக்கும். அதுவோன்னு ஒரு சந்தேகம். நல்ல ஐடியாதான்.

  ReplyDelete
 19. DEAR FRIENDS ...கிறிஸ்மஸ் /க்விலிங் கிளாஸ் என்று பிஸி .அனைவருக்கும் பின்னூட்டமிடுவேன் விரைவில்

  ReplyDelete
 20. அருமையான பகிர்வு,தங்கையே நன்றி!///இவ்வளவு நெருக்கடிக்குள்ளும்.........................சந்திப்போம்.

  ReplyDelete
 21. மும்பையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம்
  செய்யும் பணி பாராட்டத்தக்கது.

  ReplyDelete
 22. மெர்ரி கிருஸ்துமஸ் ...

  ReplyDelete
 23. தோழிக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 24. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரர் மது ,மைதிலி

   Delete
 25. தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மனம்நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரர் vichu

   Delete
 26. சகோதரி கிறித்துமஸ் புத்தாண்டு செலிப்ரேஷனில் பிசியா....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருகும் எங்கள் இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  அன்புடனும், நட்புடனும்

  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. 6 ஆம் தேதி முதல் மீண்டும் பதிவுகளுக்கு வருகை தருவேன்

   Delete
  2. மிக்க நன்றி,சகோதரர் துளசிதரன்அண்ட் கீதா

   Delete
 27. நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
  அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அய்யா

   Delete