அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

12/8/14

குடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு போதைப் பழக்கம்

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே  விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல்  தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று அரற்றுவதில் பயனென்ன?!!

குடும்ப உறுப்பினரின் நடவடிக்கையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனே எச்சரிக்கை ஆவது எத்தகைய அவசியம் என்பதை ஒரு பெண்ணின் பரிதாப வாழ்க்கை எனக்கு புரியவைத்துவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல குடும்பப் பெண்களிடமும் தாராளமாக இப்பழக்கம் இருக்கிறது என்பதும் அதனால் அவர்களின் குழந்தைகள் படும் துன்பங்கள் மிக கொடுமை என்பதையும் நேரில் கண்டு  அதிர்ந்தேன். அதை பிறருக்கு தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை.

அபாயகரமான ஒரு போதை பழக்கம் / inhalant addiction ..
சிறு பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.   

விலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான்  whitener அல்லது correction fluid எனப்படும் வெண்ணிற திரவம்

சில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.  

பொதுவாக தட்டச்சு எந்திரங்கள் யன்பாட்டில் ள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு  பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க  இந்த திரவத்தை நோட்டு ுத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை  மீண்டும் மீண்டும் அதையே நுகர  தூண்டியுள்ளது. அப்படித்தான்  ஆரம்பித்தது இந்த  போதை பழக்கம்.. 

அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் பிறந்த பிறகும் இப்பழக்கத்தை விடாமல் அதிகமாக நுகரத் தொடங்கினார். அதற்கு வசதியாக  சூழ்நிலைகளும் அமைந்தன. கணவர் இந்த பழக்கத்தை கண்டுப்பிடித்து கண்டிக்க ஆரம்பித்தார். சிறிது காலம் மறந்ததை போல இருந்துவிட்டு கணவர் வெளிநாடு சென்றதும் மீண்டும் ஆரம்பித்தாள். பாட்டில்களாக வாங்கி குவித்து இதுவரைக்கும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறாள் என்று அவளது தாய் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தைகள் இருவரும் பாட்டி, தாத்தா வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். போதை மயக்கத்தில் இருக்கும்போது அருகில் வரும் குழந்தைகளை அடிப்பதும், கண்டபடி திட்டுவது, பொருட்களை அவர்கள் மீது வீசி எறிவதுமாக இருந்திருக்கிறாள், பயந்து போன இவளது தாய் பேரக்குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

வசதிக்கு குறைவில்லாத வீடு, வேலைக்கு ஆட்கள், தனிமை எல்லாம் வாய்ப்பாக அமைய ஒரு நாளைக்கு நாலு, ஐந்து பாட்டில்கள் என காலியாயின. இவளது நடவடிக்கை மோசமாக செல்வதை புரிந்துக் கொண்ட கணவன் மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தைகளை மட்டும் பார்த்து விட்டு வெளிநாடு போய்விடுவானாம். ஆரம்பத்தில் இதில் என்ன இருக்கிறது என்ற இந்த பெண்ணின் ஆர்வம் இப்போது ஒரு மன நோயாளியாக்கி விட்டது. கணவனை, குழந்தைகளை பிரிந்தாள், ஆனால் தன்னால் தனது குடும்பமும் சிதறி போனது பிள்ளைகள் தவிப்பது என இவை  எதை பற்றியும் கவலையின்றி தனக்குள் சிரிக்கிறாள், பேசுகிறாள்...பேசிக்கொண்டே இருக்கிறாள் !!?


இவள் மட்டுமல்லஇவளை போல பலர் இன்று இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் கிடக்கிறார்கள். நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.   
ஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர்  போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச்  சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.


தற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.கேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitener முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .


பதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும்  நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் இருவரும் அடிமையாகி உள்ளனர்

இதன் தீமைகள்* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை  மட்டும் அழிப்பதில்லை !மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .


* மனநிலை பாதிப்பு ஏற்படும்.  இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.

* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன்  மற்றும் trichloroethane  நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு போதைத் தன்மை உண்டாக்கும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன. 

* தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது  தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .

* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.

* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.

* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்கள் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டுபிடிக்கலாம்

* அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம். 

* பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால்,  கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.

இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.

ஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே !!

என்ன செய்யப் போகிறோம் நாம் ??!! குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் !!


இந்த போதைப் பொருளைப்  பற்றி எழுதி இதுவரை தெரியாதவர்களுக்கு தெரியவைத்து விடுவோமோ என்ற தயக்கத்திலேயே கடந்த மூன்று வருடமாக எழுதாமல் இருந்தேன். ஆனால் வெகு தாராளமாக இன்று பள்ளி கல்லூரிகளில் நடமாடுகிறது என்பதை அறிந்த பின்பே இதன் தீமைகளை பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். தயவு செய்து இப்பதிவை படித்தவர்கள் பிறருக்கும் பகிர்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நன்றி.

கௌசல்யா ...and Angelin ..

whitener பற்றிய தகவலை பல செய்தித்தளங்களில் இருந்து  எடுத்தேன் ..
reference from these websites 

http://timesofindia.indiatimes.com/life-style/people/Whitener-addiction-on-the-rise-among-teens/articleshow/36496491.cms
http://www.childlineindia.org.in/children-affected-by-substance-abuse.htm
http://smprap1989.blogspot.co.uk/2013/07/whitener-ink-addiction-contributed-to.html
http://timesofindia.indiatimes.com/city/indore/Partial-ban-on-whitener-sale-over-addiction-fears/articleshow/23207436.cms
http://www.facenfacts.com/NewsDetails/20091/children-of-a-lesser-god...-on-kolkatas-streets.htm
http://emedicine.medscape.com/article/818939-overview
http://www.nhtsa.gov/people/injury/research/job185drugs/toluene.htm49 comments:

 1. அதிர்ச்சிகரமான செய்தி அஞ்சு இது... இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை.. மிகவும் வருத்தப்பட கூடிய விஷயம் இது. விழிப்புணர்வு தரக்கூடிய இந்த பகிர்வை தந்தமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

  இப்படியும் இருக்குமா என்ற ஆச்சர்யப்பட வைத்தது ஆரம்பத்தில் படிக்க ஆரம்பித்தபோது. ஆனால் படிக்க படிக்க இதன் போதை பழக்கத்தில் இருந்து மீள முடியாமல் தற்கொலை வரை போவோரின் நிலை பற்றி எழுதி இருப்பதை பார்க்கும்போது அதிர்ச்சியானது.

  இதைப்பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.

  நாங்களும் ஆபிசில் இந்த வைட்னர் உபயோகப்படுத்துவோம். ஆனால் அதிகமாக பயன்படுத்துவதில்லை. இதன் மணம் குமட்டிக்கொண்டு வரும்...

  நல்ல பகிர்வு அஞ்சு....

  ReplyDelete
  Replies
  1. நாங்க ஒரு வாரமா இந்த டாபிக்கை ஆலோசிசிடிருந்தோம் மஞ்சு ..இன்னிக்கு தமிழ் ஹிந்துவிலும் யாரோ எழுதியிருக்காங்க ..பின்னூட்டத்தில் லிங்க் பாருங்க ..வருகைக்கு நன்றிபா

   Delete
 2. படிக்கும் போதே மனம் கலங்குகின்றது..

  இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது.

  என்ன செய்யப் போகின்றோம் - நாம்!?...

  அவரவரும் திருந்த வேண்டும்..
  அது ஒன்றுதான் நிரந்தரத் தீர்வு!..

  ReplyDelete
  Replies
  1. எல்லா பழக்கமும் ஆர்வகோளாரில் ஆரம்பிக்குது :( ஐயா ..என்ன செய்வது இந்த பெயரை போட்டு கூகிளில் தேடினா மனசு வலிச்சி போனது எல்லாரும் 16 இக்கும் கீழ் உள்ளவர்கள்

   Delete
 3. மிக மோசமானது போதைப்பழக்கம்! அது இப்படிக்கும் எழுத்தை அழிக்கும் வொய்ட்னர் திரவத்தின் வடிவிலேயே கிடைப்பது துரதிருஷ்டமான ஒன்று. விரைவில் இது மாதிரியான வஸ்துக்களுக்கு தடை செய்ய வேண்டும்! நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்
   இதை பற்றி கட்டாயம் விழிப்புணர்வு தேவை மது பழக்கத்துக்கு அடுத்த போதை இதுதானாம்

   Delete
 4. இதுவரை அறியாத விஷயமாக இருக்கிறது ஏஞ்சல். ஒயிட்டனர் இவ்வளவு போதை தரும் விஷயம் என்று தெரியாதே. மிகப் பயங்கரமான நிலை. குழந்தைகள் பாடு என்னாவ்து.

  ReplyDelete
  Replies
  1. கூகிளில் தேடினா மனசு வலிச்சி போனது அம்மா எல்லாரும் 16 இக்கும் கீழ் உள்ளவர்கள் ..எங்கே போகுது நமது உலகம் :( அதுவும் திருமணமான அப்பெண்ணின் நிலை ..அது உண்மை சம்பவம் அம்மா .மற்றுமொரு விஷயம் பற்றியும் எழுதுவோம் விரைவில் நானும் கௌசல்யாவும்

   Delete
 5. ஆஹா....இப்பாடிக்கூடவா...தெரியாத விஷயம் ஏஞ்சலின்...பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி உமையாள் ..முதலில் நாங்க கேள்விப்பட்ட உண்மை சம்பவத்தை வைத்து டீடெயில்ஸ் தேடினோம் ..மனசுக்கு பாரமாகிபோனது ..எழுதியே தீரணும்னு எழுதிட்டோம் ..ஆச்சர்யம் பாருங்க இன்றைய ஹிண்டு பேப்பரிலும் அதை குறித்த பதிவு வந்திருக்கு

   Delete
 6. என்னது whitener ஒரு போதை பொருளா?? அப்போ இனி கிளாஸ் ரூம்ல ரொம்ப அலர்ட்டா இருக்கணுமே!! இப்போ ப்ராஜெக்ட் அது இதுன்னு என் கிளாஸ் பிள்ளைகளே நிறைய பேர் வைத்திருகிறார்கள். இதுவரை இங்கு அதுபோல் பார்க்கவில்லை என்றாலும் இனி கொஞ்சம் தீவிரமாக கவனிக்கவேண்டும் தோழி!! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/article6672093.ece?homepage=true&theme=true   நாங்க ஒரு வாரமா இந்த டாபிக்கை ஆலோசிசிடிருந்தோம் மைதிலி .
   இன்று ஹிந்து பேப்பரிலும் வந்திருக்கு இந்த விஷயம்

   Delete
  2. https://www.youtube.com/watch?v=G2V7Mtsu8Hw

   Delete
 7. //இந்த போதைப் பொருளைப் பற்றி எழுதி இதுவரை தெரியாதவர்களுக்கு தெரியவைத்து விடுவோமோ என்ற தயக்கத்திலேயே கடந்த மூன்று வருடமாக எழுதாமல் இருந்தேன். ////

  இது போன்ற விஷயங்களை எழுத தயக்கம் கூடாது.காரணம் இது போன்ற செயல்களில் தங்கள் குழந்தைகள் ஈடுபட்டிருக்கிறார்களா என்று அறிந்து அதற்கு ஏற்ற நடவடிக்கை எடுக்க பெற்றோர்களுக்கு உதவும்

  ReplyDelete
  Replies
  1. Thanks friend ..நான் எழுத நினைத்தது vapor சுவாசித்தல் போதை பற்றி .கௌசி சொன்னார் முதலில் இதை எழுதுவோம் .இறைவனை வேண்டிக்கறேன் நம்ம நாட்டுக்கு அதெல்லாம் கால் வைக்க கூடாதின்னு

   Delete
 8. நன்றி நண்பர்களே .மிகவும் தீவிரமாக யோசித்தே நானும் கௌசல்யாவும் இந்த விஷயத்தை எடுத்து எழுதினோம் .

  ReplyDelete
 9. http://www.facenfacts.com/NewsDetails/20091/children-of-a-lesser-god...-on-kolkatas-streets.htm
  my heart broke when i read this

  ReplyDelete
 10. http://www.bangaloremirror.com/bangalore/others/School-kids-getting-high-on-whitener-sniffing/articleshow/27691379.cms

  ReplyDelete
 11. அனைவருக்கும் வந்து பின்னூட்டமளிக்கிறேன்

  ReplyDelete
 12. அடப் பாவமே ,இப்படியுமா ஒரு போதை ?விநோதமாய் இருக்கிறதே !

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நண்பரே ..vyyoor கேரளாவில் ஒரு பள்ளிக்கு அருகில் உள்ள இடிந்த கட்டிடத்தில் 200 க்கும் மேற்பட்ட காலி வைட்னர் பாட்டில்கள் இருந்தனவாம் ..
   எல்லா பழக்கமும் ஆர்வகோளாரில் ஆரம்பிக்குது :(

   Delete
 13. முதலில் உங்களைத்துணிந்து பாராட்டவேண்டும் . இந்த விஷமத்தைப்பபற்றி நானே எழுதலாம் என்றிருந்தேன் . ஆனால் இவ்வளவு சிறப்பாக என்னால் எழுதமுடிந்திருக்குமா என் பது சந்தேகமே ! போதைப்பொருள்களைப்பற்றிய விழிப்புணர்வு பதிவு அவசியம் தேவை .

  என்னுடைய பதிவு ! நேரமிருப்பின் வாசிக்கவும்

  http://vimarsanaulagam.blogspot.in/2014/12/blog-post_5.html

  ReplyDelete
  Replies
  1. மிக அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு நண்பரே .வாசித்தேன் உங்கள் பக்கம் .
   வருகைக்கும் எங்களை ஊக்குவித்ததர்க்கும் நன்றிகள்

   Delete
  2. ்நம்மால் இயன்றவற்றை உலகிற்கு எடுத்துரைக்கவேண்டும் என்ற தங்களின் முயற்சிக்கு மனிதனாய் நாங்கள் ஊக்குவில்லையெனில் வேறுயார் ஊக்குவிப்பது . தொடரட்டும் தங்களின் சமூக அக்கறை !!

   நன்றியுடன்

   மெக்னேஷ் திருமுருகன் .

   Delete
 14. மிக அருமையான பதிவு. இதுக்கெதுக்கு அஞ்சு ஒரு வாரமா யோசிக்க வேண்டும்?.. விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்ல விஷயம்தானே.

  ReplyDelete
 15. சமீபத்தில்தான் , இல்லாமல் பெரிய பாடாக இருக்கே கரெக்‌ஷன் செய்வது என ஒரு செட் வாங்கி வந்தேன் வைட்னர்...:).. இப்போ வீட்டில் வைத்திருப்பதை நினைக்கவே பயமா இருக்கே..

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பத்தில் யோசித்தோம் பிறகு பார்த்தா இன்னிக்கு பேப்பரிலும் வந்திருக்கு .இனி வாங்க வேணாம்

   Delete
 16. இதைப்பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன்


  நீங்கள் சொல்லியுள்ள சம்பவம் மனதைக் கலக்குகிறது.

  ReplyDelete
  Replies
  1. தோழி கௌசல்யா இந்த விஷயத்தை மற்றும் உண்மை சம்பவம் பற்றி சொல்லும் வரை எனக்கும் தெரியாது ஸ்ரீராம் சகோ .நான் எழுத நினைத்தது வேறொன்று .இன்ன்கே வெளிநாட்டில் உள்ள ஒரு அடிக்சன் .கொஞ்ச காலம் கழித்து எழுதணும் அதையும் . பதிவில் கௌசல்யா அவரது பங்கு அதிகம் நான் சில தகவல்கள் மட்டுமே சேகரித்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 17. ஐயோ!.. மிகவும் கொடூரமாகவன்றோ இருக்கின்றது!

  எப்படி இதிலிருந்து மீட்சி கிடைக்கப் போகிறது???..

  நல்ல விழிப்புணர்வுப் பதிவு அஞ்சு! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

  தாமதமான வருகைக்கு வருந்துகிறேன்!!..
  எனது டாஷ்போர்டில் உங்கள் பதிவு காட்டவில்லை..:(

  ReplyDelete
  Replies
  1. நிறைய குறும்படன்கள் கூட வந்திருக்கு அதையும் இப்போதான் பார்க்கிறேன் இளமதி ..இதைப்பற்றி இன்ன்கே வெளிநாட்டில் உள்ள ஒரு அடிக்சன் .கொஞ்ச காலம் கழித்து எழுதணும்

   Delete
 18. ஏஞ்சலின்,

  எச்சரிக்கை பதிவு. ஏற்கனவே ஒரு குறும்படத்தில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பயந்துபோனேன், இப்படியெல்லாம் கூடவாயிருக்கும் என்று.

  அப்போதே நினைத்தேன், இது தெரியாதவங்களுக்கெல்லாம் தெரிய வரும்போது என்னாகும் என்று ? உங்க மனநிலையும் அப்படித்தான் இருந்திருக்கிறது. மாணவர்கள், வீட்டுப்பெண்கள் என அனைவருக்கும் தெரிந்திருக்கிற‌போது ....... ஒருவேளை நமக்குத்தான் தெரியலையோ ?

  எச்சரிக்கை மணியை அடிப்பதும் நமது கடமையில்லையா !

  ReplyDelete
  Replies
  1. தோழி கௌசல்யா இந்த விஷயத்தை மற்றும் உண்மை சம்பவம் பற்றி சொல்லும் வரை எனக்கும் தெரியாது சித்ரா இதை பற்றி .நாம் டூ லேட் .நான் எழுத நினைத்தது வேறொன்று .இன்ன்கே வெளிநாட்டில் உள்ள ஒரு அடிக்சன் .கொஞ்ச காலம் கழித்து எழுதணும் அதையும்

   Delete
 19. சற்று முன் தான் பகிர்ந்தேன்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் பகிர்ந்ததற்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 20. வீட்டில் அதிர்ந்து சொன்னார்கள் ...
  உண்மைதான் ..
  இதுகுறித்து சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் நக்கீரனில் என்று நினைவு தமிழகத்தில் குழந்தைகளை குட்டிச்சுவராக்கும் போதைப் பழக்கம் ... என்று எழுதியிருந்தார்கள் ..
  அப்புறம் இங்கே தமிழ்நாட்டில் எவன் இப்படி சின்னப் பிள்ளையாட்டம் வைட்னர் பக்கம் போறான். முக்குக்கு முக்கு டாஸ்மார்க் இருக்கு feeling ashamed

  ReplyDelete
  Replies
  1. தோழி கௌசல்யா இந்த விஷயத்தை மற்றும் உண்மை சம்பவம் பற்றி சொல்லும் வரை எனக்கும் தெரியாது இதை பற்றி .அவரது பங்கு அதிகம் நான் சில தகவல்கள் மட்டுமே சேகரித்தேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி எங்கே செல்கிறது உலகம் :( கேரளா பெங்களூர் மாணவர் பிடிபட்டுள்ளார்கள்.

   Delete
 21. இது ஒரு போதை பொருள் என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன் சகோ. கண்டிப்பாக இந்த மாதிரியான விழிப்புணர்வு விஷயங்களை எழுத வேண்டும் சகோ.
  பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தோழி கௌசல்யா இந்த விஷயத்தை மற்றும் உண்மை சம்பவம் பற்றி சொல்லும் வரை எனக்கும் தெரியாது இதை பற்றி .அவரது பங்கு அதிகம் நான் சில தகவல்கள் மட்டுமே சேகரித்தேன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 22. இது ஒரு புதிய அதிர்ச்சி தரும் விஷயம். கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு மிகவும் நன்றி ஏஞ்சலின். பொதுவாகவே குழந்தைகளுக்கு வாசனை அதிகமுள்ள அழிப்பான்களை வாங்கித் தருவதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள். தொடர்ந்து அந்த வாசனையை முகர்ந்துகொண்டிருந்தால் மூளை பாதிக்கும் என்று. ஆனால் இப்படி அடிமையாக்கும் என்று தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி ஏஞ்சலின்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா .புதையல் தோண்ட பூதம் வந்தார் போல நிறைய குறும்படன்கள் கூட வந்திருக்கு இதைப்பற்றி.i am highly sensitive to perfumes and chemicals எங்க வீட்ல் நான் இவற்றை சேர்பதில்ல

   Delete
 23. நீங்க எழுதியதை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. இவைகள் கடைகளில் விற்பனை செய்தானே செய்கிறார்கள்.
  இந்த மாதிரி விழிப்புணர்வுள்ள செய்திகள்,கட்டுரைகள் நிச்சயம் தேவை.தயங்காமல் அதை வெளியிடுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. நிறைய குறும்படன்கள் கூட வந்திருக்கு இதைப்பற்றி ப்ரியா ..எங்கே செல்கிறது உலகம் இயன்றவரையில் நம்மாலானதை செய்வோம் :(

   Delete
 24. இப்படி ஒரு போதைப் பொருளா.. அடக் கடவுளே. விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளீர்கள் ஏஞ்சல்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அக்கா .தோழி கௌசல்யா இந்த விஷயத்தை மற்றும் உண்மை சம்பவம் பற்றி சொல்லும் வரை எனக்கும் தெரியாது இதை பற்றி

   Delete
 25. னீங்கள் சொல்லி இருப்பது வசதி படைத்த குடும்பங்களில் இருந்து....நல்ல விழிப்புணர்வு கட்டுரை. பாராட்டுக்கள் சகோதரி!

  இதைப் பற்றி ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பே வாசித்திருக்கின்றோம். இந்த வைட்னெர் அப்போது இல்லை...அது இப்போது. அப்போது பெட்ரோல் மணம், ஒரு சிலவற்றின் மணம்...இது போன்ற...மணத்திற்கு அடிமையாகி மயங்கிக் கிடப்பது பெரும்பாலும் மும்பை வாழ் சேரிப்பகுதி குழந்தைகளிடம் ..காரணம் பசியை மறக்க. பெட்ரோல் பங்குகளில் சென்று அந்த மணத்தை நுகர்ந்து போதை ஏற்றிக் கொண்டு ரெயில்வே தண்டவாளங்களில் பயணிகள் போடும் மீத சாப்பாடுகளைப் பொறுக்கி உண்டு ..அதுவும் கிடைக்கவில்லை என்றால் இந்த போதை மயக்கத்தில் கிடப்பது.....மிகவும் கொடியது வறுமை....

  வறுமை மட்டுமல்ல நல்ல குடும்பங்களில் இருப்போருக்கும் இது போன்ற பழக்கங்கள் இருக்கின்றன....னெயில் பாலிஷும் இதில் அடக்கம்....

  சிறந்த பயனுள்ள கட்டுரை சகோதரி!

  ReplyDelete
 26. அன்பு தமிழ் உறவே!
  ஆருயிர் நல் வணக்கம்!

  இன்றைய வலைச் சரத்தின்,
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "வலை - வழி - கைகுலுக்கல் - 2"
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துகள்!

  வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
  உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
  உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
  தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
  (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

  ReplyDelete