அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/12/14

Loud Speaker 9 ,வன தேவதை ..சூர்யமணி பகத்

Loud Speaker ...9...

சில உணவுகள்  சுவையூட்டிகளும் ,செயற்கை நிறமூட்டிய உணவுபொருட்களும் ..
                                                                             
இது எங்கள் ஆலயத்தில் ஒரு சிறுவனிடம் நான் நேரில் பார்த்ததை வைத்து எழுதுகின்றேன் . ஒரு சிறுவன் சுமார் 5 வயது இருக்கும் ..எப்பவும் பெற்றோருக்கு அடங்க மாட்டான் .ஆலயத்துள் நுழைந்தவுடன் எதோ வேறு உலகத்துக்குள் நுழைந்ததுபோல இருக்கும் அவனது செய்கைகள் தன்னை சுற்றி சுற்றி பேயைகண்டார் போல மிரளுவான் (அதுக்கு பயந்தே அவன் பக்கத்துல கூட நான் இருக்க மாட்டேன் )அனைவரும் ஜெப வேளையில் அமைதியாக இருக்கும் நேரம் ஓலமிட்டு அழுவான் . ஆமென் சொல்லும்போது இடி இடிக்கிறமாதிரி சிரிப்பான் !! eucharistic பிரேயர் செய்யும்போது பெல் அடிப்பாங்க அந்த நேரம் குண்டூசி விழும் சத்தம் கூட கேக்காது அந்த நேரத்தில் இவன் மட்டும் கத்துவான் ..எங்கள் அனைவருக்குமே தலையை பிய்த்துக்கொள்ளலாம் போலிருக்கும் .பொறுக்க முடியாமல் ஒரு நாள் ரெவரண்ட் அவனது பெற்றோரிடம் சொன்னார் ..அப்போ அவங்க சொன்னது இச்சிறுவன் நர்சரியிலும் இப்படித்தானாம் ..வீட்டிலும் இப்படித்தானாம் சூப்பர் மார்கெட் போனால் அங்கும் ரணகளம் .இவனுக்கு எதோ பிரச்சினை ..சைல்ட் ஸ்பெஷலிஸ்டிடம் காட்டுங்க என்று ரெவரண்ட் அட்வைஸ் செய்தார் ..அவர்களும் அவ்வாறே அவனை அழைத்து சென்றனர் ..

அங்கே மருத்துவர்கள்  பரிந்துரைத்தது ..இவனுக்கு ..இவனது உணவு பழக்கத்தில் சில மாற்றங்கள் செய்ய சொன்னாங்க Blue நிறம் No. 1 மற்றும் 2 Brilliant blue ,Also known as: Indigotineசேர்த்த உணவுபொருட்களை தவிர்க்க சொன்னார்கள் ..அச்சிறுவன் அடிக்கடி சாப்பிடும் m&m ஸ்வீட்சில் இது இருக்கும் மற்றும் இவன் தண்ணீர் குடிக்க மாட்டான் கோலா மட்டுமே அருந்துவான் அதற்கும் மற்றும் அனைத்து fizzy பானங்களுக்கும் தடா போட்டாச்சி ..இரண்டு மாதங்களுக்கு பிறகு இவன் மீண்டும் ஆலயத்துக்கு வந்தான் ..என் கண்களையே நம்மைப முடியவில்லை ..அப்படி ஒரு மாற்றம் ..அவனது சேஷ்டைகளுக்கு முக்கிய காரணமே அந்த செயற்கை நிறமூட்டிகள் ,fizzy உற்சாக பானங்கள் .இந்த உற்சாக பானங்களில் உள்ள அதிகப்படியான இனிப்பும் அமிலமும் பற்களின் எனாமலை அரித்து போக செய்கின்றன .
நீண்ட நாள் வைக்கவேண்டும் என்பதற்காக இந்த பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் சேர்கிறார்கள் இது நமது சிறுநீரகங்களில் கற்கள் உருவாக காரணமாகின்றன ..அளவுக்கதிகமாக சோடா போன்ற பானங்கள் அருந்துவதால் ..தற்கொலை எண்ணம் ,மனச்சோர்வு ,வன்முறை எண்ணம் ஆகியவை ஏற்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கிறன .
மார்பக புற்று ப்ராஸ்டேட் புற்று மற்றும் இன்னும் சில வகை புற்று நோய்களுக்கும் அதிக சோடா சேர்த்த பானங்கள் அருந்துவதற்கும் தொடர்புண்டு என ஆய்வுகள் தெரிவிக்கின்றன .
ஆகவே இத்தகைய கேடு விளைவிக்கும் பானங்களை தவிர்த்து பழரசம் நீர் மோர் போன்ற உடலுக்கு ஏற்புடைய பானங்களை குடிக்க உறுதி எடுப்போம் 

இந்த காணொளியை கொஞ்சம் பாருங்க ..
முட்டை ஓட்டுக்கே இந்நிலைமை என்றால் ..நம் பற்கள் ???

https://www.youtube.com/watch?v=oeA3IAVULZc

வீட்டுத்தோட்டம் காலத்தின் கட்டாயம் ..


6350293180 பில்லியன் கிலோகிராம் அளவு கழிவு ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படுகிறதாம் .கடல் மட்டுமின்றி ஆறு ஏரி குளங்கள் போன்ற அனைத்து நீர்நிலைகளிலும்  சாக்கடை நீர் ,முறையே சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலை கழிவு நீர் ,சாயப்பட்டறை ,தோல்பதனிடும் ஆலைகளின் கழிவு,இரசாயன கழிவு ,மிக கடுமையான பக்க விளைவுகளை உண்டாக்கும் மருந்துபொருட்களின் கழிவு,தடைசெய்யப்பட்ட இரசாயனபூச்சி கொல்லி மருந்துகள்  ஆகியன கலக்கின்றன .இப்படி பட்ட கழிவு  கலந்த நீர்நிலைகள்  மனிதர்கள் குடிக்கவோ இல்லை விவசாயத்துக்கு பயன்படுத்தவோ தகுதியற்றவை .கழிவு நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துவதால் அதில்  விளையும் பயிர் மற்றும் காய்கறிகள்    பல பக்க விளைவுகள் உண்டாகின்றன என அறிவியல் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன .
மேலும்  வாசிக்க  இங்கே  செல்லவும் 


வன தேவதை ..சூர்யமணி பகத் !!
ம்ம்ம் ஐஸ்வர்யா ராய் கேன்சுக்கு போனதையெல்லாம் படம் படமா போடும் பத்திரிகைகள் இவர் போன்றவர்களையும் சின்ன பெட்டி செய்தியிலாவது சுட்டி காட்டலாமே !!
                                                               


இந்தோனேஷியாவில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மகளிரும் காலநிலை மாற்றமும் பற்றிய உச்சி மாநாட்டில் பங்கு பெற்றவர்..இவர் பெயர் சூர்யமணி பகத்.காடுகளை பாதுகாப்பது இவரது பணி மற்றும் குறிக்கோள் .

வயது 34,அமைதியான தெய்வீக களை பொருந்திய முகம் ,பலவர்ண சேலை ,பிளாஸ்டிக் வளையல், நீண்ட கருங்கூந்தல் இவைதான் இவரது தோற்றம் 
மேலும் வாசிக்க  செல்லவும் ..

http://www.nalam.net/forest-activist-suryamani-bhagat/

நாடாப்புழு பாதிப்புக்கள் ..


"நம் நாட்டில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் நாடாப்புழு நீர்கட்டிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என இந்திய அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது .
எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் துரித உணவுகளின் தீமைகள் இவற்றை இங்கே சென்று வாசிக்கவும் 
https://www.facebook.com/nalam.net/posts/282101801985314

...மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம் ..

                                                                                       


51 comments:

 1. விழிப்புணர்வு பதிவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

   Delete
 2. நிறமூட்டப்பட்ட கோலா, மற்றும் இதர குளிர்பான வகைகள், இனிப்புகள் சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகக் கெடுதலானவை...!!!
  எங்கள் வீட்டில் இவர் நலமோடிருந்த காலத்திலிருந்தே பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தமையால் தடா... பின்னர் அதுவே இப்போது அனைவருக்கும் பழகிவிட்டது.
  அதனால் இத்தகைய கொடிய பழக்கவழக்கத்திற்கு நாங்கள் அடிமையாகவில்லை. அருமையான தகவல்கள்!.
  குடும்பத்தில் சிறு பிள்ளைகள் உள்ளவர்கள் அவசியம்
  கவனத்திற் கொள்ளவேண்டும்...!

  மற்றும் இங்கே சென்று படிக்கவும்... என நீங்கள் கூறிய விடயங்கள் சுருக்கமாக இங்கு தந்திருப்பதே அதிர்ச்சியூட்டும், ஆச்சரியமான, அவசியமான விடயங்களே!
  விரிவான அப்பதிவுகளைப் பார்க்கின்றேன்.
  நல்ல பகிர்வுகள் அஞ்சு! அருமை!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இளமதி ..நாங்க இந்த பானங்களை வீட்டில் அனுமதிப்பதேயில்லை
   நல்லது சிறு வயதிலேயே தடா போட்டா பின்னர் எல்லாருக்குமே நல்லது

   Delete
 3. கோக் போன்ற பானங்களை உலகம் முழுக்க தடை செய்ய வேண்டும். ஆனால் அது முடியாது,
  இந்த மாதிரி எத்தனை விழிப்புணர்வு பதிவுகளை போட்டாலும், குழந்தைகள் அதனை குடிக்காமல் இருப்பதில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் இந்த கேடு கெட்டபானங்களை குடிக்காமல் இருக்க கொஞ்சமாவது அக்கறை காட்ட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ !! எந்த கடைக்கு போனாலும் இவைதானே கண்ணுக்கு முனால் இருக்கு .நாம் விழிப்புடன் இருப்பது நல்லது

   Delete
 4. பல சுவாரஷ்யமான தகவல்களுடன் வந்திருக்கின்றீர்கள்.
  உணவுப்பொருளின் நிறத்துக்கும் மனிதன் மனநிலைக்கும் தொடர்பிருக்கு என்பது புதிது எனக்கு

  நன்றி சந்திப்போம்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தம்பி ..நிறைய விஷயங்கள் இந்த உற்பத்தியாளர்கள் அறிந்ததுதான் ஆனா பிசினஸ் போகுமே அதனால் பப்ளிசிட்டி தடை பண்றாங்க அப்படியும் மருத்துவர்கள் ஆலோசனையில் முதலில் சொல்வது இவற்றை தடை செய்ய

   Delete
 5. நம்மை நாம் தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்..
  இன்றைய இளைய தலைமுறைக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 6. நல்ல விழிப்புணர்வு பகிர்வு ஏஞ்சலின்.
  காணொளி தேவையான ஒன்று. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதியம்மா

   Delete
 7. கோலா,பெப்ஸி குடிக்காத பிள்ளைகளே இல்லை எனலாம்.கடந்த சனி ஒரு பங்க்‌ஷன்.அதில் ஒரு பெண்மணி தன் 1வயது குழந்தைக்கு கோலா கொடுக்கிறார். இதை என்னவென்று சொல்வது.பெற்றாரைத்தான் முதலில் கண்டிக்கவேண்டும்.
  பாராட்டுக்குரிய பெண்மணி வனதேவதை சூர்யமணிபகத்.
  மிகவும் அருமையான விழிப்புணர்வு பதிவுகள்.நன்றி அஞ்சு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ப்ரியா ..ம்ம் இப்போ ஜெர்மனியும் மாறிட்டாங்க போல யூகே மாதிரி /முன்பு அங்கே இப்படி செய்ய மாட்டாங்க பெற்றோர்

   Delete
 8. நல்ல விழிப்புணர்வு பதிவு... நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி உமையாள்

   Delete
 9. பொதுவாகவே குளிர்பானங்களை குழந்தைகள் விரும்பும். ஆனால் அவை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாகவே அமைகின்றது! நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ .இன்னும் நிறைய பகிர்கிறேன் .

   Delete
 10. அருமையான விழிப்புணர்வு பதிவு! பாராட்டுக்கள் ஏஞ்சலின்! அந்தக் காணொளி மனதை அப்படியே உறைய வைக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அக்கா. அந்த காணொளி இங்கே பள்ளிகளில் அடிக்கடி செய்முறை காட்டறாங்க .ஏனென்றால் obesity அதிகம் இவ்வுணவுகளால் .

   Delete
 11. கலக்கல் பதிவு.
  தொடர்க..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர் மது

   Delete
 12. முதல் செய்தி ஆச்சர்யப் படுத்துகிறது. இப்படி கூட ஒரு காரணம் இருக்குமா என்று.

  சூர்யமணி பகத்துக்குப் பாராட்டுகள். சுட்டி திறந்த இடத்தில் அவர் பற்றிய செய்தியைத் தனிகாத் தேட முடியவில்லை. பாஸிட்டிவ் செய்திக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று பார்த்தேன்!

  ReplyDelete
  Replies
  1. http://www.nalam.net/forest-activist-suryamani-bhagat/ ..intha link work aaguthaa paarunga @sriram

   Delete
  2. it was my fault i didn't recheck after publishing ..accidentally i've added a wrong link from my book marks :)

   Delete
  3. நன்றி. எடுத்துக் கொண்டேன். இந்த வர விகடனில் வெளி வந்திருக்கும் காடுகள் அழிப்புப் பற்றிய செய்தி கூட இப்போதுதான் படித்தேன். பதற வைக்கும் செய்தி அது.

   Delete
  4. ஆமாம்! காடுகள் அழிப்பு பற்றி படித்த போது சத்தியமாக ரொமப்வே மனது வதைத்தது!

   Delete
  5. link @ஸ்ரீராம் @ தில்லை சகோ .
   எனக்கு லிங்க் அனுப்ப இயலுமா ..நான் போன வருட இறுதியில் பசுமை விடியலில் இந்த காடுகள் பற்றி ஒரு போஸ்ட் எழுதினேன் ..இப்போ ஷேர் செய்ய தேடினாலும் எனக்கே கிடைக்க மாட்டேங்குது ..ஜங்கிள் புக்கில் வரும் காடுகள் பற்றிய போஸ்ட் .மீண்டும் எழுதணும் இங்கேயும்

   Delete
  6. @ஸ்ரீராம் சகோ .நானே நேரடியாக இப்படிப்பட்ட கலர் சாயங்களால் பாதிக்கபட்டிருக்கேன் ..காரட்டுக்கே அந்த நிறம் வர எதையோ சேர்க்கின்றனர் ..இதெல்லாம் எவ்ளோ கெட்டது ..டின் உணவுகளின் can உட்புறம் bpa கோட்டிங் இருக்கு அது புற்று நோய் காரணியாம்

   Delete
  7. நான் சொன்ன இந்தக் கட்டுரையை ஆனந்த விகடன் புத்தகத்தில் படித்தேன்.

   Delete
  8. ஓ !! எனக்கு புக் கிடைக்காதிங்கு ..பார்க்கிறேன் வேறு ஆசிய கடைகள் இருக்கு சில நேரம் கிடைக்கலாம்

   Delete
 13. விழிப்புணர்வு பதிவு..........

  நிறமூட்டப்பட்ட கோலா, மற்றும் இதர குளிர்பான வகைகளை தவிர்ப்பது மிகவும் அவசியம்...

  நாடாப்புழு பாதிப்புக்கள் ................மனதை மிகவும் பாதித்த செய்தி இதிலும் விழிப்புணர்வு மிகவும் முக்கியம் ...

  வன தேவதை ..சூர்யமணி பகத் !!..........பாராட்டதக்க செய்தி..

  பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனு ..எதுவுமே ஆரம்பத்தில தவிர்த்தா நல்லது .என் நண்பி ஒருவர் மூன்று பிள்ளைங்க இருக்காங்க இது வரை 10 வருடங்கள் எந்த குளிர்பானமும் தந்ததில்லை ..உணவு ஒன்லி வீட்டு சமையல்

   Delete
 14. அச்சச்சோ இந்த ஸ்பீக்கர் சத்தம் எப்பூடி என் காதுக்கு கேட்காமல் போச்சு....

  அதுசரி ஒரு குட்டிப் பிள்ளையை(அது நாந்தேன்:))இப்படியா பயமுறுத்துவீங்க அஞ்சு:).. பின்ன கலர் இனிப்பு , கடையில் வாங்கும் பானம் எண்டெல்லாம் சொல்றீங்க:).. மனதில போட்டு வச்சிட்டேன்ன்..

  ReplyDelete
  Replies
  1. முதல்லில் கண்ணாடி போடுங்க அப்போ காத்து கேக்கும் :)அதிஸ் ..சொல்லிட்டேன் இந்த மிட்டாய் சாப்பிடற பழக்கம் ஜன்க் உணவு எல்லாத்தையும் விடுங்க ..

   Delete
 15. ஊசிக்குறிப்பு: ஜெஷிக்கு நான் மாப்பிள்ளை பார்க்கட்டோ?:)

  ReplyDelete
  Replies
  1. ஓ ..பாருங்க வீட்டோட மாப்பிளை ஆனா ஒழுங்கா வேலைக்கு போகணும் உழைச்சி சம்பாதிக்கணும் ..பெனிபிட் பார்ட்டிஸ் வேண்டாம் ..கல்யாணத்துக்கு மாமி கூரை எனக்கு 20,000 இந்தியன் கரன்சிக்கு தரனும் .மாப்பிளை வீட்டூகு ஒரே பையனா இருக்கணும் ..இன்னும் நிறைய இருக்கு மெயில் பண்றேன் :))))))))

   Delete
 16. நல்ல விழிப்பூட்டும் பகிர்வு.இணைப்புகள் பார்க்கவில்லை,பொழுதிருக்கையில்.....................

  ReplyDelete
  Replies
  1. வாங்க யோகா அண்ணா ..முந்தைய பதிவிலும் பார்த்தேன் உங்களை .நலமா .
   ஆமாம் அண்ணா கவனமாக இருப்பது மிக நல்லது

   Delete
 17. மக்களுக்கு தெளிவு பிறக்க வேண்டி ஒரு கலர் இனிப்புக்கள் பற்றி அரிய தகவல்கள். பகிர்வு நன்றி.இனி கலர் இனிப்பில் கவணமாக இருக்கின்றேன்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நேசன் ..
   என் மருமகனுக்கு கலர் ஸ்வீட்ஸ் கொடுக்க கூடாது ..எல்லாமே organic பொருள்தான் கொடுக்கணும்
   ஒவ்வொரு பொருளும் லேபில் பார்த்தே வாங்குங்க

   Delete
 18. அருமையான விழிப்புணர்வுப் பதிவு ஏஞ்சல். நிச்சயம் படிப்பவர்களைச் சிந்திக்க வைக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க புனிதா ;) நீங்க எங்க இமா மாதிரியே பேசறீங்க :)

   நான் நிறைய செயற்கை பொருட்களை தவிர்த்து விட்டேன் ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..

   Delete
 19. ஏஞ்சலின்,

  ஆரோக்கியம் சார்ந்த பதிவு அருமை, கொஞ்சம் உஷாராத்தான் இருக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா ..நான் பல பொருட்களை தவிர்த்தாச்சு .வருகைக்கும்கருத்துக்கும் நன்றி

   Delete
 20. மிக நல்ல விழிப்புணர்வு கட்டுரை. அந்தப் பையநுக்குச் சொன்னது போன்று, ஆட்டிசம், ஏடிஎச் ப்ராப்ளம் உள்ள் குழந்தைகளுக்கும் இது போன்ற உணவுகளை தவிர்க்கச் சொல்லப்படுகின்றது. அதில் சிறு சிறு முன்னேற்றம் இருப்பதாகவும் பெற்றோர் சொல்கின்றனர். இவர்களுக்கு என்று இல்லை நாமும் இது போன்று வெளியில் வாங்கிச் சாப்பிடும் பழக்கத்திற்கு விடை கொடுக்கலாம்தான்.

  வீட்டுத் தோட்டம் மிகவும் அவசியம் சகோதரி! மார்க்கெட்டில் வாங்கவும் பயமாகத்தான் இருக்கின்றது. இயற்கை உரம் போட்டு வளர்ப்பதே நல்லது...

  சூர்யமணிக்கு பாரட்டுக்கள்....யாருக்கெல்லாமோ பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்படுகின்றது. ஆனால் இவர்களை உலகம் கண்டு கொள்ளாமல் போவது ஆச்சரியமாகத்தான் இருக்கின்றது. நல்ல பதிவு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..இப்படிப்பட்ட canned ,செயற்கை நிறமூட்டிகளால் நானும் நேரிடையாக பாதிகபட்டிருக்கேன் ..
   cherryade என்றொரு குளிர்பானம் இங்கே விற்கிறாங்க ..நானாக முதலில் ஜெர்மனில தான் வசித்தோம் அங்கே இந்த மாதிரி செயற்கை நிறமூட்டிகள் சேர்த்த ஜூஸ் எலாம் நான் பார்த்ததில்லை அங்கு கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் இம்பொர்ட்சும் .
   இந்த பானத்தை நானா குடித்த பத்து நிமிடத்தில் எனது கன்னம் கழுத்து எல்லாம் patch போல சிவப்பு பீட்ரூட் நிறமாகிவிடும் ...அறிக்கை ஆரம்பிக்கும் ..ஒரு செயற்கை நிரமிதான் இதன் காரணம் என்று மருத்துவர் சொன்னார் .நான் அத்துடன் நிறுத்தி விட்டேன் ..அதே போல தான் tin fish ..சாப்பிட்டதும் அல்லர்ஜி :( நான் canned fish சாப்பிட்டு ஒன்பது வருடங்கள் ஆகுது ..
   சூர்யமணி பற்றி யூனிசெப் தளத்தில்தான் படித்தேன் உடனே நலம் நெட்டில் எழுதி இங்கும் பகிர்ந்தேன்

   Delete
 21. கனவில் வந்த காந்தி

  மிக்க நன்றி!
  திரு பி.ஜம்புலிங்கம்
  திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

  புதுவைவேலு/யாதவன் நம்பி
  http://www.kuzhalinnisai.blogspot.fr

  ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

  ReplyDelete
 22. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete