அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/7/14

Loud speaker 8 .. மனிதர்களும் செல்லப்பிராணிகளும் ..Pet Therapy ,Thula ,Bob

மனிதர்களும் செல்லப்பிராணிகளும் ..Pet Therapy 
இன்றைய ஒலிபெருக்கியின் கதாநாயகி, நாயகர்கள் ..வளர்ப்பு பிராணிகள் துலா ,பாப் (Thula,Bob )
                                                                                 


சமீபத்தில் இங்கு தொலைகாட்சியில் பார்த்தது மனதை தொட்ட செய்தி 
ஆட்டிசம் எனும் குறைபாடு இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதித்து பிறருடன் கலவாமல் தங்களுக்கு என ஒரு ஒரு தனி உலகை உருவாக்கி அமைத்து அதில் 
மூழ்கி இருப்பார்கள் .அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதெல்லாம் புரியாத புதிர் !ஆனால் முறையான பயிற்சிகள் மற்றும் சில விஷயங்கள் அவர்களுக்கென அமைத்து கொடுப்பதன் மூலம் அவர்களையும் இயல்பான வாழ்க்கைக்கு கொண்டு வரலாம் .
                                                                                     

பெரும்பாலான இவ்வாறான பாதிக்கப்பட்டகுழந்தைகளின் பெற்றோர்கள் கூறுவது மனிதர்களின் அருகாமையை  விட வளர்ப்பு பிராணிகளிடம் இந்த குறைபாடுள்ள பிள்ளைகள் அதிக ஈடுபாட்டுடன்  பழகுகிறார்களாம் !!இங்கே நிறைய இடங்களில் கழுதைகள் சரணாலயம் உண்டு .
                                                                                   

"assisted therapy' என்று இங்கு வாராவாரம் இக்குறைபாடுள்ள பிள்ளைகள் 
அழைத்து வரப்பட்டு இங்குள்ள கழுதைகளுடன் அவற்றை தடவி மற்றும் சவாரி செய்ய அனுமதிக்கிறார்கள் ..இதனால் சிறந்த பலனுண்டு என்றும் கண்டுபிடித்துள்ளார்கள் ..மேலும் இங்குள்ள முதியோர் இல்லங்களுக்கு 
இந்த விலங்குகளை மாதமொருமுறை அழைத்து சென்று அந்த முதியோர் இவற்றுடன் தடவி பழக அனுமதிக்கிறார்கள் ..மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளை கூட சந்திக்க இந்த நாலுகால் அன்பர்களுக்கு ஸ்பெஷல் அனுமதி உண்டு .
                                                                                        
.இவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி கொடுத்து உள்ளார்கள் இதற்கென ..

                                                                                


நான் முகபுதகத்தில் பார்த்த ஒரு படம் ..இந்த சின்ன பிள்ளைக்கு ஐந்து வயது ,ஆட்டிசம் குறைபாடு உள்ள பிள்ளை பெயர் ஐரிஸ் கிரேஸ் .
இச்சிறுமிக்கு பேச வராது இவளின் பெற்றோர் குதிரை மற்றும் தெரப்பி நாய் இவற்றை இச்சிறுமியுடம் பழக விட்டு பார்த்தனர் அனால் அவற்றால் ஒரு மாற்றமும் கிடைக்கவில்லை பிறகு main coon வகை 
பூனை ஒன்றை இவளுக்கென எடுத்து வந்தனர் அந்த பூனை இவள் வாழ்வில் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது ..
அதுவரை தனது உடை கூட இவளுக்கு ஒழுங்காக நிலையாக இருக்காதாம் இப்போது அப்பூனை இவளுடன் எப்போவும் அருகில் இருக்கு .குறிபிடத்தக்க விஷயம் இப்பெண் ஒரு ஓவியர் அதற்கென ஒரு வெப்சைட்டும் உண்டு இங்கே பாருங்கள் ..
இச்சிறுபெண் வெளியே சென்றாலும் வீட்டில் இருந்தாலும் இந்த பூனைதான் துணை ..துலா வந்ததில் இருந்து இப்பெண்ணிடம்  அதிக புரிந்து கொள்ளல் மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ள  என பல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம் ..ஐரிஸ் ஏதேனும் குழப்ப மன நிலையில் இருந்தாலும் அல்லது பயந்த மன நிலையில் இருந்தாலும் இப்பூனை அவளை சாந்தப்படுத்துகிறது ..மேலும் நிறைய படங்கள் இவர் முக புத்தகத்தில் 
இருக்கு ..இங்கே https://www.facebook.com/pages/Iris-Grace-Painting/609967369017975?ref=br_t
                                                                                        
                                                                              
இப்படிப்பட்ட தெரப்பி போல நமக்கும் இவை உதவும் பல நேரங்களில் ஸ்ட்ரெஸ் ,மற்றும் சுகவீனமடையும்போது ஒரு சிறு தலை வலி என்றாலும் இந்த நாலு காலர்கள் அருகாமையில் இருந்தால் சிறந்த நிவாரணம் !!அனுபவத்தால் கண்டுணர்ந்தது ..எங்க ஜெஸ்ஸி நான் 
கொஞ்சம் டயர்டாக படுத்தாலும் உடனே வந்து நாவால் நக்கி அன்பை பொழியும் !!அன்றொரு நாள் குறட்டை :) போட்ட கணவர் நெஞ்சில் ஏறி அமர்ந்து மிக அன்பாக தலையால் முட்டி என்னவோ ஏதோவென்று கவனிக்குது எங்க ஜெஸ்ஸி :) 
                                                                                 Bob 
 போதை பழக்கத்துக்கு அடிமையான ஒரு மனிதனின் வாழ்வில் ஒரு பூனை எவ்வளவு மாற்றங்கள்செய்துள்ளது !!இதன் பெயர் Bob .
ஜேம்ஸ் இதுவரை மூன்று புத்தகங்கள் எழுதியுள்ளார் ..
bob இவர் வாழ்வில் நுழைந்ததில் இருந்து இவரது வாழ்க்கை முறை தலை கீழாக மாறிவிட்டதாம் .
இவர் எழுதிய முதல் புத்தகம் 700,000 பிரதிகளுக்கு மேலே 
விற்கப்பட்டுள்ளது !இவங்க முகபுத்தகம் ட்விட்டர் என மிக பிரபலம் !

https://www.facebook.com/StreetCatBob  ...

                                                                                

இந்த காணொளி பாருங்களேன் :)
https://www.youtube.com/watch?v=MePaWG7g5FA
bob என் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளான்
 என்கிறார் ஜேம்ஸ் !!
    http://www.bbc.co.uk/news/entertainment-arts-23117382.
சமீபத்தில் எங்க டவுனுக்கு இருவரும் மூன்றாம் புத்தகம் வெளியிட வந்திருக்காங்க ..எனக்கு தெரியாமல் போய் விட்டது 
தெரிஞ்சிருந்தா போய் ஒரு போட்டோவோடு வந்திருப்பேன் :)

இன்னிக்கு bow மியாவ்  சத்தம் அதிகம் கேக்குதா :)
வலைச்சரத்திலும்  நான் இந்த செல்லங்களை பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன் :) இங்கே சென்று பார்க்கவும் :) 

மீண்டும் ஒரு புதிய பதிவில் சந்திப்போம் :)

அன்புடன் ஏஞ்சல்                                                                             

                                                                                 

35 comments:

 1. நோயாளிகளிடமும் கருணை காட்டும் மிருகங்களின் அன்பு...கலப்படமில்லாதது!....மட்டுமல்ல! மனிதர்களும் பின்பற்றத்தக்கது!....பதிவுகளில் கூட ஜீவ நேசம் மிளிர்கிறது! வாழ்த்துகள் சகோ!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ராம் கணேஷ் ..பாருங்க அந்த போதை மருந்துக்கு அடிமையான ஒருவனின் வாழ்க்கையையே ஒரு பூனை திருத்தி அமைத்திருக்கு !!

   Delete
 2. ஆச்சர்யமான தகவல்கள் ...... அனைத்தும் அருமை.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணா ..இவை பற்றி இங்கே வெளிநாட்டில்தான் அதிகம் அறிந்து கொண்டேன் ..பார்வையற்றோர் ,மாற்றுதிரனாளிகள் முதியோர் என அனைவருக்கும் இவற்றால் பல நன்மைகள்
   !!

   Delete
  2. இன்னும் நிறைய படங்கள் ஆனால் பார்க்கும்போதே கண்கள் குளமாகின எனக்கு அதனால் அவற்றை இணைக்கவில்லை .
   இன்று கூட ஒரு முதிய வயது பெண்மணி 80 வயதிருக்கும் !!தனது இறுதி ஆசையாக மருத்துவமனையில் தனது வளர்ப்பு குதிரை 25 வருடம் அவரிடம் இருந்ததாம் அதனை பார்க்கனும்னு சொல்லி உள்ளார் அதை ஹாஸ்பிடளுக்கே அழைத்து வந்து அவரை முத்தமிட வைச்சிருக்காங்க ..!!

   Delete
 3. ஏஞ்சலின்,

  இந்த ஊருக்கு வந்த பிறகுதான் இப்படியெல்லாம் ஒன்று இருப்பதே தெரிய வந்தது. செல்லப் பிராணிகளின் உதவி மகத்தானதுதான். அதைப் பகிர்ந்துகொண்டதில் மகிழ்ச்சி.

  ஹும், செல்லப் பிராணிகளைப் பற்றி எல்லோரும் சொல்லும்போது ஒரு பொறாமை எட்டித்தான் பார்க்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா !! எனக்கும் இவற்றை பற்றி இங்கே வந்தபின் தான் அதிகம் தெரிந்தது .
   பூனை நாய் வளர்க்க முடியாவிட்டாலும் தோட்டத்தில் ஹெட்ஜ்ஹாக் அணில் மீன் இவர்களை வளர்க்கலாமே :)
   நான் ஒரு குட்டி பெர்ட் ஹவுஸ் போன வாரம் வைத்தேன் ரெண்டு பெர்ட்ஸ் அதை சுற்றி இன்னிக்குபறந்து வராங்க :)
   அப்புறம் ஜேம்ஸ் பாப் ரெண்டு பெரும் இப்போ அமெரிக்காவில் புக் சேல்ஸ் ப்ரோமொஷனுக்கு வந்திருக்காங்களாம் :)

   Delete
  2. ஏஞ்சல்,

   எங்க அப்பார்ட்மென்டில் பேர்ட் ஃபீடர் போன்றவைகூட‌ வைக்கக் கூடாது. இங்கு பெரும்பாலும் இப்படியான‌ அப்பார்ட்மென்டுகளாகத்தான் இருக்கும். தனி வீடாக இருந்தால் பிரச்சினையில்லை.

   எங்க பாப்புவுக்கு மட்டுமே செல்லப் பிராணிகள் மீது ஈர்ப்பு. வாங்கி வளர்க்கச் சொல்லுவாள். ஆனால் எங்கள் இவருக்கும் ரொ ம் ப தூரம்.

   Delete
  3. ஓ !! ஆமாம் நாங்க முன்பு ஜெர்மனில இருந்தப்போ இப்படிதான் ரொம்ப ரூல்ஸ் இருந்தது ..இங்கே இது லிட்டில் இந்தியா /பாகிஸ்தான் ஏரியா ..பெரிய கிளீன் இடம்னு சொல்ல முடியாது ..நிறைய மிக்ஸ்ட் ஆட்கள் வசிப்பதால் நோ கட்டுப்பாடு :)
   அவசரபட்டுதான் இந்த இடத்தை வாங்கினோம்....கொஞ்சம் யோசிச்சு டைம் எடுத்து நல்ல பெரிய தோட்டத்தோடு வாங்கியிருக்கலாம்னு இப்பவும் நினைப்போம் ....சிட்டி லிமிட்ல வருவதால் கோழி மட்டும் வளர்க்க கஷ்டம் ..

   Delete
 4. ஆஹா.. இப்பத்தானே புரியுது அஞ்சு ஏன் பூஸ் வளர்க்கிறா என:).. எங்கிட்டயேவா.. கண்டுபிடிச்சிட்டமாக்கும்:)

  ReplyDelete
  Replies
  1. இப்போ இங்கே வீடு வங்கிட்டதால் அங்கே பூஸ் வீட்டுகிட்டே குடிபெயற முடியாது அதான் பூஸ் குட்டி வாங்கிட்டோம் :)

   Delete
 5. இங்கு எங்கள் பக்கத்து வீட்டிலும் 2 பிள்ளைகள் இருவருக்கும் ஓட்டிசம்... அவர்கள் இரு பெரிய நாய்கள் வளர்க்கிறார்கள்.. ஆனால் அதனாலதான் அவர்களின் பிள்ளைகள் இப்போ நிறைய முன்ன்னேறியிருக்கிறார்கள்... இதுபற்றி ஒரு புத்தகமும் வெளியிட்டிருக்கினம்... நாயால் எவ்வளாவு உதவி என..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அதிஸ் !! இந்த பெட்ஸ் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு சிறந்த துணையாம் ..மனிதரைவிட இவற்றிடம் ஆடிஸ்டிக் பிள்ளைங்க மிகுந்த பாசத்தோட இருக்காங்க

   Delete
 6. கடசிப் படம் களவெடுத்தமைக்காக:) நான் ஹைகோர்ட்டுக்குப் போகிறேன்ன்ன்.. அஞ்சுக்கு கைக்கு:) சங்கிலி வரப்போகுதூஊஊஊஊஊஊஊ:).

  ReplyDelete
  Replies
  1. :) :) இந்த இருவரின் படத்திலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் இதுதான் அதீஸ் :)

   சங்கிலி வரப்போகுதூஊஊஊஊஊஊஊ:).//உங்க வீட்டில்பாக்சில் வச்சிருக்கீங்களே அதுவா :))

   Delete
 7. கேள்விப் பட்டிருக்கிறேன். டால்பின்கள் இதில் செய்யும் உதவி மகத்தானது என்று படித்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ஸ்ரீராம் ! ஆமாம் நானும் படிச்சிருக்கேன் துருக்கியில் ஒரு இடத்தில டால்பின்கள் வைத்து மனிதர்களை அதாவது தன்னிலையற்ற நிலையில் உள்ளவங்களுக்கு ட்ரீட்மன்ட் தராங்களாம் அதி கெவின் ..ஒரு வயது இருக்கும்போது ஒரு விபத்தில் வெஜிடெடிவ் நிலைக்கு போன சிறுவனையே எழுப்பி இருக்காங்க ..எவ்வளவு பெரிய விஷயம் !
   he was in 6-stage arpalish Syndrome – persistant vegetative state –

   Delete
 8. நல்ல அருமையான பகிர்வு அஞ்சு. இங்கும் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் குதிரை,நாய்,முயல் என வைத்திருக்கிறார்கள் நான் முதல் நினைத்தேன் ஏன் இயலாத பிள்ளைகளோடு இவற்றையும் வளர்க்க கஷ்டமே என. பின் கணவர்தான் சொன்னார். உண்மைதான் இங்கு வந்தபின் தெரிந்த விடயங்கள் அதிகம்.
  நீங்க சொன்னமாதிரி செல்லப்பிராணி வளர்த்தால் மனதுக்கு ரிலாக்ஸ்தான். பிள்ளைகள் வளர்ந்து படிப்புக்காக,அல்லது திருமணமாகி போய்விட்டால் தனிமைக்கு இவர்கள் ஒரு வடிகால் பக்கத்துவீட்டு பெண்மணி கூறினார்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ப்ரியா .பொழுதுபோவதே தெரியாது !என்னை வீட்டில் காணோம்னா தேடும் முதல் ஜீவன் எங்க வீட்டு பூஸ்தான் :)
   நான் வெளியில் புரபடுவது தெரிஞ்சா வாசல் கிட்ட குறுக்கால் உக்காருவா :)
   சில முரட்டு குணமுள்ள பிள்ளைகள் கூட இவற்றின் வருகைக்குபின் ரொம்ப சாந்தமா மாறுகிராங்க.

   Delete
 9. அருமையான செய்திகள்...ஆச்சரியமாக இருக்கிறது. எவ்வளவு விஷயங்கள் நம்மைச் சுற்றி இருக்கின்றன. நன்றி பதிவிற்கு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள் ..இங்கே பெட் ஷாப்ஸ் நிறையா இருக்கு கடைக்குள்ளா வாங்க வரவங்களை விட வற்றை காட்ட வரும் பெற்றோர் அதிகம் ..ஆடிசத்துக்கு ஊட இவர்களின் உதவி தேவைபடுகிறது பாருங்க ..ஏனென்றால் அன்கண்டிஷனல் லவ் தருவது இந்த நாலுகால் ஜீவன்கள்தான்

   Delete
 10. அருமையான தகவல்கள் அடங்கிய அற்புதமான படைப்பு...
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ குமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ..இங்கே அன்றாடம் நாலைந்த தெரப்பி animalsபார்ப்பேன் அதான் பகிர்ந்தேன்

   Delete
 11. ஆச்சர்யமான தகவல்கள் அநேகம் பேர் இப்பொழுது எல்லாம் வளர்க்க தொடங்கிவிட்டார்கள் இங்கெல்லாம் நம்மவர்கள் அதிகம் பேர் பூனை அல்லது நாயோடு தான் நடந்து திரிவார்கள். மிகவும் மகிழ்ச்சியாக. என் பிள்ளைகளும் ஆசை பட்டு கேட்பார்கள். இப்பொழுது சிந்திக்க வேண்டித் தான் உள்ளது. நன்றி பதிவுக்கு வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இனியா ..பிள்ளைங்க கேட்டா வாங்கி கொடுத்துடுங்க ..என்ன ஊருக்கெல்லாம் போக கொஞ்சம் கடினம் ..நண்பர்கள் அல்லது pet ஹோம்சில் விடனும் ..ஆனா பிள்ளைங்க சந்தோஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமில்லை :)

   Delete
 12. ஆட்டிச குழந்தைகளை டால்பின் அருகே போகச் செய்தால் அவர்களின் மூளைத் திறன் கூடுவதைப் பற்றி ஒரு செய்தி வந்தது அது நினைவில் வந்தது ...
  தொடர்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோதரர் மது ..ஆமாம் டால்பின்ஸ் மிக நெருக்கமான மிருகங்கள் ஐந்தரை அறிவு பெற்றவைன்னும் சொல்லலாம் !அதுங்க முகத்தை பார்க்கும்போதே நம்மை பார்த்து சிரிப்பது ஸ்மைலி லுக்குடன் போலிருக்கும் :)
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 13. மிருகம் தானே என்று நினைக்கும் இவைகளிடம் தான் இருக்கும் அன்பை என்னவென்று சொல்வது.
  அறியாத தகவல்கள். நன்றி

  ReplyDelete
  Replies
  1. விலங்குகளும் நாமும் ஒன்றோடு அன்பால் பிணைந்தவர்கள் தான் சகோ ..ஒரு பதிவு எங்க வீட்டுக்கு வந்த ஹனுமார் பற்றி போட்டேன் முன்பு அவர் படம் எங்கோ காணாம போச்சி இப்போ எடுத்திருக்கேன் விரைவில் பகிர்கிறேன்

   Delete
 14. அடுத்த வரவிருக்கும் பகிர்வுகளுக்காக வெயிட்டிங்.:) !

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆசியா :) அது ஒரு ஆர்வகோளாரில் சமையல் போட நினைச்சேன் :) விரைவில் போடறேன் ..அப்போ செய்த குறிப்புகளின் படங்கள் எல்லாமே வைரஸ் அட்டாக்கில் போய் விட்டது :)மீண்டும் சமைக்கணும்

   Delete
 15. அருமையான பதிவு.
  வளர்ப்பு செல்லங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டாலும் நேசம் எல்லோருக்கும் ஒன்றே!
  அவை தரும் ஆறுதலும் அன்பும் எங்கும் எவரிடமும் கிடைக்காத ஒன்று. பழகும் வகையில் பழகி பார்த்தால் அனைத்து உயிர்களும் அன்பானவை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் கோமதியம்மா ..அதுவும் இந்த bob பாருங்க ! வாழ்வில் எந்த குறிகோளும் இல்லாத ஒரு போதை மருந்துக்கு அடிமையான ஹோம்லஸ் மனிதனையே மாற்றியிருக்கே !!விலங்குகளும் நாமும் ஒன்றோடு அன்பால் பிணைந்தவர்கள் தான் ஊரில் மாட்டுக்கு தண்ணி வைப்பதில் இருந்து அன்பு துவங்குது :) ரெண்டு நாள் குளிருன்னு வெளியில் போகலை ! magpie விண்டோஸை வந்து கொத்தி பாக்குது ..நான் தினமும் கொஞ்சம் வேர்கடலை போடுவேன் :)

   Delete
 16. அருமை அ;ருமை அருமை அருமை அருமை இன்ஃபினைட்.....ஓகேவா?!!!! எத்தனை அருமை போட்டாலும் முடிவில்லை. ஏன்? நாங்களும் இது போன்று செல்லங்களின் ஆதரவாளர்கள்! இங்கும் ப்ளூ க்ராஸ் நாய்களை முதியோர்களுக்கும், குறைப்பாடு உள்ள குழந்தைகளுக்கும் தெரபி க்காக அனுப்புவதாகச் சொல்லப்படுகின்ரது என்ராலும் மேலை நாடுகளைப் போல் இல்லை. நாங்கள் இது குறித்து ஒரு இடுகை எழுதுவதாக இருந்தோம்.

  (எங்களில்) கீதாவின் மகன் சிறிது கற்றல் குறைபாடு இருந்தவன். ப்ரொலான்ட் லேபர் அண்ட் குழந்தை பிறந்ததும் அழவில்லை. ஆனாலும் கீதா அவனுக்கு விலங்குகளின் மீது இருந்த னேசத்தை கையில் எடுத்து அதைச் சொல்லியே அவனை இன்று கால்நடை மருத்துவராக்கியது இது போன்ற செயல்கள்தான்....கராத்தே மற்றும், வீணை இசை பயிற்றுவித்து....இப்படிப் பல...அதனால்தான் இதைப் பற்றி எழுத ஆசை. ம்ம்ம் பார்ப்போம்...எழுத...

  ReplyDelete
  Replies
  1. //எத்தனை அருமை போட்டாலும் முடிவில்லை. ஏன்? நாங்களும் இது போன்று செல்லங்களின் ஆதரவாளர்கள்! /
   கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு !!கீதா அவர்கள் பாராட்ட வார்த்தை வரவில்லை .
   எவ்வளவு அற்புதமான ஒரு தாய் ..அவர் மகன் மிகவும் கொடுத்து வைத்தவர் ..எனது மகளுக்கும் வருங்காலத்தில் கால்நடை மருத்துவராக விருப்பம் ..
   எங்கள் வீட்டில் நாங்கள் அனைவருமே pet லவர்ஸ் :)
   ..இதில் சொலியிருன்தேனே அந்த பிள்ளை ஐரிஸ் முதலில் பேசவே மாட்டாளாம் இப்போ ஐந்து வயதில் துலா பூனைக்குட்டியின் வரவிர்க்குபின் வார்த்தைகளை கோர்த்து பேசுகிறாள் என அவள் fb பக்கத்தில் தாய் சொல்லியிருக்கார் !!
   இந்த நாலுகால் ஜீவன்கள் இன்ஸ்டன்ட் ஸ்ட்ரெஸ் ரிலீவர்ஸ் தான்:)
   இங்கே நிறைய படங்கள் இணைக்கவில்லை .இணையத்தில் நிறைய இருக்கு .

   நீங்களும் எழுதுங்கள் சகோ ஏதேனும் விவரம் சுட்டிகள் வேணும்னா சொல்லுங்க நானும் தேடி தருகின்றேன் .

   Delete