அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை , வெந்தயக்கீரை சாம்பார் ...பஞ்சாபி சமோசா !!!!

மீண்டும் சந்திப்போம்................அடுத்து வரவிருக்கும் பதிவுகள் ...கினொவா தோசை,Ragada Patties ,தட்டு தோசை , வெந்தயக்கீரை சாம்பார் . . !!!!cheese பராத்தாஸ் அனியன் cheese பராத்தாஸ் ,காரட் லெமன் பருப்பு ..!!!

11/28/14

Loud Speaker ..12,.மிஸ்ஸி ..மற்றும் சேத்

Loud Speaker ..12,.மிஸ்ஸி ,சேத் 

மிஸ்ஸி எனும் ..கிங் (பென்குயின் )பெண்குயின் :)


                                                                              

                                                                     
இதுதான் அந்த பென்குயின் ..நாங்க cotswold பறவைகள் பூங்காவில் இவரை பார்த்தோம் .வலப்பக்கம் இருப்பது மிஸ்ஸி அதனருகில் 
இருப்பது சேத் (seth ).
இவை  captive முறையில் பரமரிக்கபட்டு இந்த பூங்காவில் வளர்கிறார்கள் .
இப்படி captive முறையில் வளருபவை அதிக நாட்கள் உயிர் வாழ்கின்றன 
என்கிறார்கள் !
                                                                                

மிஸ்சிக்கு இந்த வருடம் 37 வயசு பூர்த்தியாகியுள்ளது .அருகில் 
இருக்கும் அதன் பார்ட்னர் சேத் இதனுடன் 18 வருடகாலம் 
லிவிங் டு கெதர் ஆக இருக்கிறார்களாம் ..நம்ம நாட்டு பெங்குயினாக இருந்தா கணவன் மனைவின்னு சொல்லலாம் :) இங்கே ஒன்லி பார்ட்னர்ஸ் :)..இதில் முக்கியமான விஷயம் மிஸ்சிக்கு ஒரு கண் பார்வை இல்லை .என்னே !! ஒரு அன்பு பாசம் நேசம் காதல் இந்த ஜீவன்களிடமும் !!இருவரும் எப்பவும் ஒன்றாகத்தான் காணப்படுவார்கலாம் !!

நாங்க பார்க்குக்கு போனப்போ மிஸ்ஸியை  பார்த்தோம் ஆனா தனியாக  படமெடுக்க முடியவில்லை .நிறைய கூட்டம் 
.அப்போ அங்கே பிங்க் கலர் sash அணிந்து ஒரு பெண் ,பென்குயின் பராமரிப்பவருடன் வாலண்டியர் உதவி செய்து கொண்டிருந்தார் .
அந்த sash இல் bride to be என்று எழுதபட்டிருந்தது ..

                                                                                     

நம்ம ஊரில் திருமணத்துக்கு முந்தின நாள் நலங்கு ,கஸின்ஸ் கெட்  டு கெதர் மற்றும் பாச்சிலர்ஸ் பார்ட்டி தருவதுபோல இங்குள்ள பெண்கள் hen பார்ட்டின்னு கொடுப்பாங்க .அப்போ ஒரு சாட்டின் துணியை குறுக்கு மாலை போட்டாற்போல அணிந்து  போவாங்க பார்ட்டிக்கு .

இந்த பெண் அந்த சாஷ் அணிந்து பார்ட்டிக்கு போகுமுன் அங்கே வாலெண்டியர் வேலை செய்ய ஒரு காரணம்  சொன்னார் ........ 
//இந்த பென்குயின் காதலர்கள் போல எங்க வாழ்க்கையும் இணைபிரியாம இருக்கணும் அதனால் இன்னிக்கு இங்கே உதவி செய்ய வந்தேன் என்றார் ,//

அது உண்மைதான் மிஸ்ஸி யும் சேத்தும் நின்னுகிட்டிருந்தாங்க இன்னொரு பென்குயின் சேத்தை எதோ வந்து கோபத்துடன் தள்ளியது உடனே மிஸ்ஸி ஜான்சி ராணிபோல பாய்ந்து தனது பார்ட்னரை கொத்திய பென்குயினை கோபத்துடன் கொத்துச்சி :) 
(இந்த  seth ..batman படத்தில் கூட நடிச்சிருக்கே   !!
1992 film Batman Returns with Danny DeVito.)
வாயில்லா  ஜீவன்களிடமும் இத்தனை அன்பா !!
ஏற்கனவே நான் மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல !
என்று     இங்கே  தென் ஆப்பிரிக்கா டு croatia  இரு நாரைகளின்  உண்மை காதல் கதை பற்றி எழுதியுள்ளேன் ......
அதுபோல இவற்றை நேரில் கண்டபோது ஆச்சர்யமாக இருந்தது !!....

அது மட்டுமில்லை இங்கே பாருங்க இந்த பென்குயின்கள் சர் டேவிட் அட்டன்பரோவை சுற்றி நிற்பதை ..என்னத்தான் பேசியிருப்பார்களோ !
இது சென்ற வருடம் அவர் இங்கே வருகை தந்தபோது எடுத்த படமாம் .
ஒரு சில பென்குயின்கள் குஞ்சு பொரித்து உள்ளனவாம் இப்போ 
மேலும் படங்களுக்கு அவங்க முகபுத்தகம் சென்று பார்க்கவும் :)


                                                                         
அடுத்து ஒரு commercial break :)

 இந்த படத்தை பாருங்க ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா ??
எனது காலடித்தடங்கள் தான் இங்குள்ள  கடற்கரையில் 
எடுத்து அப்பவே   :) முகபுத்தகத்தில் போட்டேன் 
மாலை வீட்டுக்கு வந்தா அனைவரும் கேட்ட கேள்வி எப்படி அச்சு 
போலவந்தது !! நடந்தா குழிவாக தானே இருக்கும் !!
எனக்கே புரியவில்லை !!!!
                                                                           
இனிய வார இறுதி வாழ்த்துக்கள் :) 
                                                                               


                                                                                

28 comments:

 1. பென்குயின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் ஏனோ தெரியவில்லை...!!!

  உங்க பதிவும் பிடித்து இருக்கு ஏஞ்சலின்

  ReplyDelete
 2. வாங்க உமையாள் :) இப்போதான் முனிக்கி சாம்பார் ரெடி செய்றேன் :)
  உண்மைதான் ..இவற்றின் அன்பு பாசம் நம்மை மெய் சிலிர்க்க வைக்குது
  ரோடன் மலேனா என்னவொரு அன்பு ..அங்கும் உங்க பின்னூட்டம் பார்த்தேன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 3. இது மனிதர் உணர்ந்து கொள்ள, மனிதர் காதல் அல்ல!!! fact....fact...
  அதானே காலடி அச்சு எப்படி வந்தது!! Angelin னை follow பண்ணுங்கப்பா, நிறைய மேட்டர் கிடைக்குது:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மைதிலி :) அந்த நாரைகளின் ட்ரூ ஸ்டோரிக்கு அந்த வாசகம் பொருத்தம் தானே :)அந்த அச்சு !! நான் பார்க்கும்போது நல்லாகுழிய இருந்தது எனக்கே புதிர் !
   ஓ !! follow பண்ணுங்க :) என்ன ..நான் கீழே குழி இருந்தாலும் கண்ணு மூடிக்கிட்டேனடப்பேன் .:)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா

   Delete
 4. சுவாரஸ்யம்.

  அட்டன்பரோவைப் பார்த்தால் இந்தியன் தாத்தா சாயல் இல்லை? :)))

  காலடித் தடங்களின் படங்கள் :: குழியாகத் தெரிவதுதான் மேடாகத் தெரிவது போலப் பொய்த்தோற்றம் தருகிறதோ!

  ReplyDelete
  Replies
  1. :)ஆமாம் சகோ ஸ்ரீராம் அதே அதே !! நானும் யோசிச்சேன் எங்கேயோ பார்த்த முகம்னு :)
   அது LG மொபைல் போனில் எடுத்த படம் !!அதே இடத்தில எடுத்த மகள் காலடி நார்மலா இருக்கு :)

   Delete
 5. பெங்வின் என்றாலே எங்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்களும் எங்களைப் போல பறவைகள், விலங்குகள், இயற்கையை ரசிப்பவராக இருப்பதில் மிகமிக சந்தோஷம் அடைகின்றோம்.

  பெங்குவின் வாழ்க்கையே மனிதனுக்கு நல்ல பாடம். அதிலும் நீங்கள் இங்கு இந்தக் காதல் ஜோடியயைப் பற்றிச் சொல்லி இருப்பது ஆஹா....மனிதக் காதல் அல்ல...அல்ல...எக்கோ ஆகுதா!!!? அந்த அன்பும் பாசமும் மெய்யாகவே மெய் சிலிர்க்க வைக்கின்றது.. அழகு! அருமையான தகவல்கள்...ம்ம்பரவாயில்லை படத்திலும் நடிப்பு, விஐபி உடனும் படங்கள் வேறு எடுத்துக் கொண்டிருக்கின்றன...ம்ம்ம் நாம் அந்த பெங்க்வின்களையும் வாழ்த்துவோம்....அருமை அருமை...பார்த்துக் கொண்டே இருக்க்கின்றோம்.....

  ஹை உங்கள் கால் தடம் அழகு.....மண் லூசாக இல்லாமல் கெட்டியாக இருந்ததோ அதனால் தான் அந்தக் குழி விழவில்லை..தண்ணீர் வந்து அடித்து விட்டுச் சென்று சிறிது நேரம் ஆன பிறகு மணல் கெட்டியாகி விடுவதுண்டு....அப்படியாக இருக்கலாம்...

  சகோதரி மிகவும் அருமையான பதிவு மிக மிக ரசித்தோம்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ..போன வருடம் போயிருந்தா நாங்களும் டேவிட் சாரை பார்த்திருப்போம் !!கொடுத்து வைத்த பென்குவின்ஸ் :)இங்கே முன்கூட்டியே அறிவிப்பார்கள் இப்படி பிரபலங்கள் வருகை தருவதை பற்றி ..ஆனா அறிந்தும் இன்னொரு பிரபலத்தை சந்திக்க முடியாமல் போச்சி :( அவர் .JANE GOODALL ..எங்க ஏரியாவில் இருந்து ஒரு மணி தூரம் தொலைவில் ஒரு நேச்சர் பார்க்குக்கு வந்தாராம் போன மாதம் ....பறவைகளின் வாழ்வு முறை அதிசயிக்க வைக்குது .!
   அந்த நாரைகளின் LIFE பற்றி இங்கே அல்ஜசீரா டிவியில் பார்த்தேன் !! ..

   Delete
  2. இனியாவது மிஸ் பண்ணிவிடாதிர்கள் சகோதரி!

   நாரைகளின் லைஃப் ஓ! க்ரேட்!! ம்ம் தொடருங்கள் இது போன்ற பதிவுகளை...

   Delete
 6. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 7. உமையாள் காயத்ரி அவர்கள் சொல்வது போலவே - எனக்கும் அழகிய டால்பின்கள் மீதும் பென்குவின்களின் மீதும் விருப்பம் அதிகம்.

  அவற்றின் அன்பைப் பற்றிய மேலதிக செய்திகளைக் கண்டு மகிழ்ச்சி..

  நாரைகளின் பிரியமான வாழ்க்கை முறையை - நேரில் கண்டிருக்கின்றேன்.. தவிரவும் அவற்றைப் பற்றிய தகவல் - பழந்தமிழ் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஐயா ..அந்த பெங்குவின்களும் டால்பின்களும் குழந்தைகள்போலதான் !உங்களுக்கும் பிடிக்குமா !! நம்ம வட்டத்தில் அனைவரும் இப்படி இருப்பது அதிக சந்தோஷத்தை தருது .நாரைகள் மான்கள் எல்லாம் நம் சங்க இலக்கியத்தில் வருபவைதான் !!இந்த ஜீவன்களிடம் இருந்து நாம் அதிகம் கற்கிறோம் என்பது உண்மையே .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 8. /இந்த பென்குயின் காதலர்கள் போல எங்க வாழ்க்கையும் இணைபிரியாம இருக்கணும் அதனால் இன்னிக்கு இங்கே உதவி செய்ய வந்தேன் என்றார் ,////
  அப்படியே இணைபிரியாமல் இருக்கட்டும். அன்பு வியக்க வைக்கிறது.

  மணலில் கால் தடங்கள் அச்சு போல வந்த காரணம் ,நீங்கள் மென் நடை நடந்து வந்து இருக்கிறீர்கள் ஏஞ்சலின். அருமையான பதிவு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கோமதியம்மா ! அமாம் இங்கே ஒவ்வொருவரும் ஏதாவது இப்படி புதிய விஷயங்களை சொல்லிபோறாங்க ..அந்த பொண்ணு காலை முதல் மாலை வரை அங்கு வாலண்டியரிங் செய்தார் .
   மென் நடை !! சொல்லிடறேன் என் கணவர்கிட்ட ..:) அவர் சொன்னார் நான் நடக்கவேயில்லை உக்காந்து அச்சு வச்சு எடுத்தேன் என்று :)
   இங்கே வெளிநாட்டில்நிறைய விஷயங்கள் அதிசயமாக இருக்கு !!
   Delete
 9. பென்குயின் இவ்வளவு ஆண்டுகள் வாழுமா. தெரியாத தகவல்.
  வாயில்லா ஜீவங்களுக்கு இவ்வளவு அன்பா - ஆச்சிரியமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ இவை CAPTIVE முறையில் வளருவதால் சாத்தியமாம் ..தனித்தனியே அவற்றுக்கு கவனிப்பாளர்கள் உண்டு அதிகபட்சம் 29 ஆண்டுகள் வேறொரு நாட்டில் ஒரு பென்குயின் இருந்திருக்கு ..ஆனால் இனபெருக்கம் கொஞ்சம் கடினம் இப்படி CAPTIVE முறையில் வளருவதால் .
   வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

   Delete
 10. வித்தியாசமான செய்திகள் அழகான படங்களுடன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ

   Delete
 11. பெ(ண்)ன்குயின் காதல் மிக அருமை!
  விலங்குகள் என்றாலும் என்ன அவைகளுக்குள்ளும்
  அற்புதமான இயல்புகள் செயல்கள் நிறையவே இருக்கின்றன..!

  காலடி அங்கும் கண்டேன்! தேவதை நடையே தனி அழகுதான்!..:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி :) இவர்களின் அன்பு வியக்கவைக்குது இல்லை நம்மை !!
   தேவதை நடந்ததா !! கவியரசி சொன்னா சரியாத்தான் இருக்கும் .வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

   Delete
 12. அருமையான தகவல் ..
  பின்னூட்டங்களோடு படிப்பது ஒரு தனி அனுபவம்..
  தொடர்க

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ! பின்னூட்டங்களோடு வாசிப்பது எனக்கும் பிடிக்கும் :)
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .
   மேலும் நிறைய விஷயங்களை மகள் சொல்லுவா அவற்றை இங்கே பகிர்கிறேன்

   Delete
 13. பென்குவினைப் பற்றிய பல புதிய செய்திகளைத் தெரிந்துகொண்டேன். புகைப்படங்கள் பதிவிற்கு அழகு சேர்க்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 14. பிங்கு ஸ்ரோறி அருமை.. புல்லரிக்க வைக்குது..

  ReplyDelete